Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்

spacer.png

புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் கொண்ட கே.வி.ஆனந்த், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று(ஏப்ரல் 30) அதிகாலை 3மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.அவருக்கு வயது 54. கே.வி.ஆனந்த் 90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, திருடா திருடா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார்.

பின்னர் 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கே.வி.ஆனந்துக்கு கிடைத்தது.

 

பிறகு 1996ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்படம் நல்ல வரவேற்பை பெறவே பின்னர் தொடர்ந்து நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குநராக அறிமுகமானர். வணிகரீதியாக படம் வெற்றியடையவில்லை என்றாலும் படைப்புரீதியாக பாராட்டப்பட்ட படம் இது. 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஆனந்த் இயக்கிய ‘அயன்’ படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து 2011ஆம் வெளியான ‘கோ’ படத்தின் வெற்றி கே.வி.ஆனந்தை தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக முன்னிறுத்தியது.இறுதியாக 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘காப்பான்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

https://minnambalam.com/entertainment/2021/04/30/26/director-cameraman-k-v-anandh-expired

  • கருத்துக்கள உறவுகள்

பிடுங்கப்பட்ட கேமரா... முதல் படத்திலேயே தேசிய விருது... கே.வி.ஆனந்த் எனும் மகா கலைஞன்!

ஒளிப்பதிவில் புதுப்புது விஷயங்களைச் செய்தவர், இயக்குநராக சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர், விவசாயியாக மாறியவர் எனப் பன்முகம் கொண்ட, கே.வி.ஆனந்த்தின் முகத்தை இனி காணமுடியாது.

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட, கே.வி.ஆனந்தின் அப்பா வங்கி மேலாளர். புகைப்படக் கலை மீது ஆர்வமிருந்த அதே சமயம், விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் ஆர்வமாக இருந்திருக்கிறார் கே.வி.ஆனந்த். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை படிக்க நினைத்து விண்ணப்பித்தவருக்கு சீட் கிடைக்கவில்லை. பிறகு, இயற்பியல் துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதன்பின், ஃப்ரீலான்ஸ் போட்டோகிராஃபராக பத்திரிகைகளில் பணியாற்றி இருக்கிறார். பிறகு, 'நாயகன்' படம்பார்த்து ஒளிப்பதிவு மீது ஈடுபாடு வந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக 'கோபுர வாசலிலே', 'அமரன்', 'தேவர் மகன்' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

கே.வி. ஆனந்த்
 
கே.வி. ஆனந்த்

இயக்குநர் ப்ரியதர்ஷன் 'தென்மாவின் கொம்பத்து' படத்திற்காக ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமை கேட்டபோது, அவர் பிஸியாக இருந்ததால் கே.வி.ஆனந்த்தை அந்தப் படத்திற்கு பரிந்துரைத்திருக்கிறார். மோகன்லால்தான் இந்தப் படத்தின் நாயகன். தான் ஒளிப்பதிவு செய்த முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்றார். 'மின்னாரம்', 'சந்திரலேகா', 'டோலி சாஜா கே ரஹ்னா' எனத் தொடர்ந்து இயக்குநர் ப்ரியதர்ஷனுடன் பணியாற்றி வந்தார். இந்தப் படம் 'காதலுக்கு மரியாதை' இந்தி ரீமேக். ஜோதிகாவின் கரியரில் முதல் படம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு இவர் பெயரை பாலிவுட்டில் பேசவைத்தது.

 

இதனைத் தொடர்ந்து, 'காதல் தேசம்' படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இவரின் ஒளிப்பதிவு மிகவும் பாராட்டப்பட்டது. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றாலும் தமிழில் 'காதல் தேசம்' படத்திற்குப் பிறகுதான், அனைத்து இயக்குநர்கரின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக மாறினார் கே.வி.ஆனந்த். 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'இந்தியன்' எனத் தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் ஜீவாவுடன் பணியாற்றி வந்த இயக்குநர் ஷங்கர், 'முதல்வன்' படத்திலிருந்து கே.வி.ஆனந்துடன் பணியாற்றத் தொடங்கினார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பெரிதும் பேசப்பட்டது.

கே.வி. ஆனந்த்
 
கே.வி. ஆனந்த்

இந்தப் படம் ப்ளாக்பஸ்டர் ஆனதைத் தொடர்ந்து, இதன் இந்தி வெர்ஷன் 'நாயக்', அதற்கும் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவுதான். இந்தப் படம் அவருக்கு ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்று தந்தது. ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் 'தி லெஜெண்ட் ஆஃப் பகத் சிங்', 'காக்கி' என இரு படங்களில் பணியாற்றினார். ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் 'பாய்ஸ்', 'சிவாஜி' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். 'சிவாஜி' திரைப்படத்தின் ஒளிப்பதிவு அதன் பிரமாண்டத்தைப் பற்றி தனியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. குறிப்பாக, வாஜி வாஜி, ஒரு கூடை சன்லைட் பாடல்கள் மிகப்பெரிய டிரெண்ட்செட்டர்கள்!

 

'கனா கண்டேன்' படத்தின் மூலம் திடீரென்று இயக்குநர் அவதாரம் எடுத்தார். அடுத்தது, 'அயன்'. கமர்ஷியல் என்டர்டெய்னராக ஹிட் அடித்த 'அயன்', சூர்யாவுக்கும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது மட்டுமல்லாது கே.வி.ஆனந்த்தை முன்னணி இயக்குநராக அனைவருக்கும் அடையாளம் காட்டியது. இதனைத் தொடர்ந்து, 'கோ'. பத்திரிகைத்துறையில் இருந்ததால் அவர் சந்தித்த சில சுவாரஸ்யமான சம்பவங்களையும் உள்ளடக்கி இந்தப் படத்தை இயக்கினார். இவர் புகைப்பட பத்திரிகைக்காரராக இருந்தபோது, ஒரு கட்சியினர் ஹைவேயில் வரம்பை மீறி கட்டடம் கட்டியிருக்கிறார்கள் என்ற செய்தியை சேகரிக்கச் சென்றிருக்கின்றார். அந்த கட்டடத்தை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த அந்தக் கட்சியினர், ஆனந்தை மிரட்டி கேமராவை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர். அவர்கள் இவரைப் பார்த்தது தெரிந்தவுடன், உடனே கையிலிருந்த கேமராவை பையில் வைத்து பையில் இருந்த இன்னொரு கேமராவை எடுத்து கையில் வைத்திருக்கிறார். அந்தச் சூழலில் சாதுர்யமாக யோசித்து, இவ்வாறு செய்துதான் எடுத்த புகைப்படங்களை காப்பாற்றி இருக்கிறார். இந்த நிகழ்வைத்தான் 'கோ' படத்தில் ஜீவா கேரக்டருக்கு வைத்திருக்கிறார்.

கே.வி. ஆனந்த்
 
கே.வி. ஆனந்த் பா. காளிமுத்து

அடுத்ததாக, 'மாற்றான்'. எதிர்பார்த்தபடி படம் போகவில்லை என்றாலும் கே.வி.ஆனந்த் தன் மனதுக்கு பிடித்த படம் என்று பலமுறை இதைச் சொல்லியிருக்கிறார். 'காப்பான்' திரைப்படத்தை தவிர, இவர் இயக்கிய எல்லா படங்களிலும் எழுத்தாளர்கள் சுபா கதை, திரைக்கதையில் பணியாற்றினர். நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களை, சமூக பிரச்னைகளை போகிற போக்கில் தன் படத்திற்குள் கொண்டு வருவது இவரின் வழக்கம். 'அயன்', 'கோ' படங்களை ரீமேக் செய்யும் ஆஃபர்கள் வந்தும் அதில் உடன்பாடு இல்லாமல் 'நோ' சொன்னவர். இது குறித்து ஒரு பேட்டியில், "எது சொதப்பினாலும் புதுசா சொதப்பணும்" என்று வேடிக்கையாகச் சொல்லியிருந்தார்.

சிம்பு வெளியிட்ட அறிக்கையில், அவருக்குக் கதை சொல்லியிருப்பதாகவும் தினமும் அது குறித்து இருவரும் பேசியதாகவும் கூறியிருந்தார். இயற்கை விவசாயம் மீது அதீத ஆர்வம் கொண்டு, திருவள்ளூர் அருகே 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். ஒளிப்பதிவில் புதுப்புது விஷயங்களைச் செய்தவர், இயக்குநராக சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர், விவசாயியாக மாறியவர் எனப் பன்முகம் கொண்ட, கே.வி.ஆனந்த்தின் முகத்தை இனி காணமுடியாது. நம் கண்களுக்கு கலர்ஃபுல்லான விஷுவல்களை கொடுத்த அவரது கண்கள் இனி திறக்காது.

அவருக்கு கனத்த இதயத்துடன் விகடனும் அஞ்சலி செலுத்துகிறான்!

பிடுங்கப்பட்ட கேமரா... முதல் படத்திலேயே தேசிய விருது... கே.வி.ஆனந்த் எனும் மகா கலைஞன்! | A short biography article on late cinematographer and director KV Anand - Vikatan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1AE2D9BE-A500-4EC3-96CD-80DCD21A5F88.png
 
4A29D218-2520-491B-9CB6-E236B375E853.png
 
9744BF27-D2B0-472C-9195-2E81A6504FB2.png
 

 

கே.வி ஆனந்த் சற்று மிகைப்படுத்தப்பட்ட ஆனால் அழகானதுலக்கமான சித்திரங்களை தமிழ் சினிமாவுக்குஅறிமுகப்படுத்தினார் - அவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள்கூட துண்டுத் துண்டு சித்திரங்களாகவே என் மனத்தில்பதிந்துள்ளன. அவருடைய இயக்கத்தில் வந்த படங்களில் கூடஅப்படித்தான். அதுவும் பாடல்களில் வரும் மொண்டாஜ் பாணிஅவ்வளவு அழகாக இருக்கும்.

 

 பி.ஸி ஶ்ரீரம் மிக மென்மையான ஒளியில் சன்னமானவண்னங்களுடன், ஒளி-நிழல் பின்னல்களுடன் காட்சிகளைஉருவாக்க விரும்பினார் என்றால், அந்த காட்சிகள்கதையமைப்புடன் பொருந்தி படத்தின் செய்தியைஉள்மனத்துக்கு உணர்த்த வேண்டும் என நினைத்தார் என்றால், அவருடைய சீடரான கே.வி ஆனந்த் ஒரு மீ-எதார்த்த கனவுலகபாணி ஒளியமைப்பை கொண்டு வந்தார். 96இல் என்பதின்வயதில் காதல் தேசம் வந்த போது எப்படிஇப்படியெல்லாம் எடுக்கிறார்கள்?” என பார்த்து பார்த்துஏங்கியது நினைவுள்ளது. “என்னைக் காணவில்லையேநேற்றோடு பாடலில் அந்த நீல நீர் அப்படி கனவில் காண்பதுபோல - எட்டித் தொடலாம் - என்பது போல இருக்கும். ஆனால்இதே மாதிரி நீல வண்ணம் கலக்கப்பட்ட கடல்நீர் குட்டையைஒரு தெய்வம் தந்த பூவே பாடலில் ரவி கே. சந்திரன்-மணிரத்னம் கூட்டணி அவ்வளவு கவித்துவமாக பாடலின்கருவுக்கு பொருத்தமாக அமைத்திருப்பார்கள். இந்தவித்தியாசம், கதையை மீறி நிற்கும் துடுக்குத்தனம் தான் கே.விஆனந்தின் தனித்துவம். இதுதான் அவர் தமிழ் சினிமாவுக்குஅளித்த கொடை - pop art என சொல்கிறோமே, அல்லதுanime, அனிமேஷன் படங்களில் வருகிற பாணியிலான ஒருவண்ணத் தேர்வை அவர் எதார்த்த சினிமாவுக்கு, வணிக தமிழ்சினிமாவுக்கு கொண்டு வந்தார். அதை அவ்வளவு சிலாக்கியமாகசெய்தார்

 

சில திருமணங்கள் ஒரே கலவரமாக, கச்சாமுச்சாவென நடந்துமுடியும், ஆனால் புகைப்படக் கலைஞர் அதனுள் அழகானகவித்துவமான தருணங்களை கண்டடைந்து ஆல்பமாக்கிஅளிக்கும் போது அதைப் பார்க்கும் கணவன், மனைவிக்கு ஒருநொடி இது நாம் அல்லவென்று லஜ்ஜையாகவும், அட நாம் தானாஎன பெருமையாகவும் இருக்கும். கே.வி ஆனந்த் தான்ஒளிப்பதிவு செய்த குப்பை படங்களைக் கூட அப்படிஉருமாற்றினார் என நினைக்கிறேன். அவர் முதலில் ஒளிப்பதிவுசெய்த ப்ரியதர்ஷனின் தேன்மாவின் கொம்பத்து பாருங்கள் - காட்சிகள் ஏதோ காமிக்ஸ் கதையில் நிகழ்வன போலத்தோன்றும்; பளிச்சென்று, சட்டகத்தில் பாத்திரங்கள் இருந்துஎழுந்து நம்மை நோக்கி வருவதைப் போல, இது நம் தேசத்திலேநடக்கிற கதை அல்ல என்பது போல. “காதல் தேசம் பார்த்துவிட்டு நகரங்களில் இளம் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்போல, ஒரு ஏழைப்பையனின் மொட்டை மாடி அறை இவ்வளவுஸ்டைலாக இருக்கும் போல என நான் என் கிராமத்து வீட்டில்இருந்து யோசித்து ஏமாந்திருக்கிறேன். அந்த பூக்கள் இரைந்துகிடக்கும் சாலையில் இளம்பெண்களின் கால்கள் மிதித்துஅழகாக நசுக்கி வரும் காட்சி இருக்கிறதே! இன்னொரு பக்கம்இந்த வகையான கற்பனாவாதம் - தபு சங்கரை நூறாயிரம்மடங்கு பெருக்கி உருவாக்கப்பட்ட மிகை அழகியல் - பெண்களைப் பற்றி ஒரு தவறான சித்திரத்தை அந்த காலத்தில்எனக்கு ஏற்படுத்தியது.

 

இந்த கற்பனாவாத ஒளியமைப்பு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஆண்-பெண் உறவு குறித்து ஒருஅவநம்பிக்கையான எண்ணமே கே.வி ஆனந்துக்கு இருந்ததெனகருதுகிறேன்: அவர் எழுதிய காதல் படிக்கட்டுகள் தொடர்என்று தான் நினைக்கிறேன்; அதில் தன் நண்பனின் காதலி ஒருஇரவு விருந்தின் போது அவள் போதையாகி விட்டு தன்னிடம்பாலியல் விருப்பம் தெரிவித்ததாக எழுதியிருப்பார். மானுடக்காதல் எல்லாம் அந்தந்த சூழலுடன் முடிந்து போவது தான் எனும்தொனி அதில் இருக்கும்.

 அவருடைய பெரும்பாலான படங்களில் எந்த இளம்பெண்ணுமே தேவதையாக இருக்க மாட்டாள். எதிர்மறையானஒரு சந்தர்பத்தில் இருந்து, தவறான பின்னணியில் இருந்துதோன்றுவார்கள். ஒரு துரோகியான நண்பனின் தங்கை(“அயன்”), துரோகியின் தோழி (“மாற்றான்”) என சூழ்நிலைமாறினால் சட்டென காதலனை தவறாக புரிந்து கொண்டுவெறுத்தொதுக்குவார்கள் (“அயன்”). காதலன்களும் அப்படியே - தான் உண்மையில் யாரென்பதை, ஏன் வில்லனுக்கு உதவுகிறான்என்பதை காதலிக்கு சொல்லாமல் ஏமாற்றுவார்கள் (“கோ”) அல்லது ஒரு படப்பிடிப்பின் போது சகநடிகையை காதலிபார்த்திருக்கும் போதே அணைந்து உளம் மயங்குவார்கள்(“கவண்”). 

 

ஒரு இயக்குநராக அவருடைய முதல் படம் (“கனா கண்டேன்”) வியப்பையும் நம்பிக்கையையும் தந்தது; ஆனால் அதன் பிறகுஅவர் முழுமசாலா படங்களில் இறங்கி விட்டார். இதிலும் ஒருசுவாரஸ்யம் அவர் சங்கரைப் போன்றே சிந்தித்தார் என்பது; அவர்இறுதி வரை மனதளவில் சங்கரின் மாற்றான் தான். ஒரு நடக்கவாய்ப்பில்லாத ஒற்றை வரியை (what if?) எடுத்துக் கொண்டுஅதை ஒரு எதார்த்த சூழலில் பொருத்தி விடுவார். கடல் நீரைகுடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை ஒருவர் கண்டுபிடித்தால், அதை சாத்தியமாக்குவதில் அவருக்கு பல சவால்கள், தடைகள்வந்தால்? (“கனா கண்டேன்”) [Catch Me If You Can பாணியில்] ஒரு கடத்தல்காரன் கஸ்டம்ஸுடன் சேர்ந்து கடத்தல்காரர்களைஒழிக்க நினைத்தால்? அரசியல் சூழலை மாற்றும் நோக்கில்தேர்தலில் ஈடுபட்டு வென்று ஆட்சி அமைக்கும் இளைஞர்களின்தலைவன் ஒரு துரோகி, தன் அதிகாரத்துக்காக யாரையும்ஏமாற்ற, ஒழிக்க தயங்காத ஒரு மனிதாபிமானமற்ற வில்லன் எனபின்னர் நாயகனுக்கு தெரிய வந்தால்? (“கோ”) தான்ஒட்டிப்பிறந்த இரட்டையனாக தன் தந்தையின் பேராசையேகாரணம் என ஒருவனுக்குத் தெரிய வந்தால்? (“மாற்றான்”) இப்படி அவருடைய ஒவ்வொரு படத்தையும் what if கேள்வியாகநாம் வகுத்திட முடியும். இந்த ஒருவேளை இப்படி நடந்தால்?” கருத்துருவை அவரால் எதார்த்தமாக நிறுவி நியாயப்படுத்தமுடிந்தால் அப்படம் சிறப்பாக அமைந்து விடும். “அயனைப் போல. சில படங்களில் அது நம்பும்படியாக இருக்காது. அவைபடுத்து விடும். ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒரு சிறியவியப்பில்லாமல் அவருடைய ஒளிப்பதிவாக்கிய காட்சிகளையோஇயக்கிய படங்களையோ நாம் பார்க்க முடியாது - ஒருவேளைஅப்படித்தான் அவர் தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் எனவிரும்பி இருக்கலாம்

 

போய் வாருங்கள் கே.வி ஆனந்த் - நீங்கள் விடைபெறும் போதுஎன் பதின் காலமும் கூடவே விடைபெறுவதாகத் தோன்றுகிறது

 

http://thiruttusavi.blogspot.com/2021/04/blog-post_30.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆழந்த அனுதாபங்கள் 

இவரின்  படங்கள் எனக்கு பிடித்தமானவை தற்போது பிடித்தமானவர்களின் இறப்பு தொடர்து கொண்டே இருக்கிறது விவேக் உட்பட விவேக் மட்டக்கள்ப்புக்கு வந்து போது கூட்டம் அலை மோதியது உங்களையெல்லாம் கட்டி அணைக்கவேண்டுமென சொன்னார்  உலகத்தில் கடைசி தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும் எனவும்  சொன்னவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.