Jump to content

விநாயகரை பிள்ளையார் என்றும் கணபதி என்றும் ஆனை முகத்தோன் என்றும் ஐங்கரன் என்றும் பலவித நாமம் கொண்டு துதிப்பதுண்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

விநாயகருக்கு உகந்த நாள் விநாயக சதூர்த்தியாகும். ஆவணி மாதத்தில் வளர் பிறையில் வருகின்ற சதூத்தி மிக சிறந்த நாளாகும். விநாயகரை அறுகம் புல்லும் வெள்ளெருக்கம் பூவும் கொண்டு பூஐpத்தால் அவரது அருளை பெற முடியும் என்பதே நம்பிக்கை.

விநாயகரை பிள்ளையார் என்றும் கணபதி என்றும் ஆனை முகத்தோன் என்றும் ஐங்கரன் என்றும் பலவித நாமம் கொண்டு துதிப்பதுண்டு

இவருக்கு பிடித்தமான நிவேதனங்கள் மோதகமும் பருப்பு நெய் சாதமும் அப்ளம் கரும்பு இவைகளாகும்

இப் பொருட்களை நெய் வேத்திய பொருளாக வைத்து அவரை வழி படுதல் அவசியமாகும் இதனை ஒரு பாடல் நமக்கு விளக்குகிறது.

'கைதல நிறை கன்னி

அப்ப மொடவல் பொரி

கப்பிய கரி முகன் அடிபேணி"


அதனாலே விநாயகருக்கு நெய்வேத்தியம் விருப்பமான ஒன்று என்பதை நாம் அறிவோமாக விநாயகர் துதி பாடி பூசை முடித்த பின் அந்த நெய்வேத்தியத்தை ஒரு ஏழைக்கு முதலில் உண்ண கொடுத்து அவனது பசி ஆறிய பின்னர் தான் நாம் உண்ண வேண்டும் என்பது பூசையின் வழி பாட்டு முறையாகும்.

விநாயகர் பூசையை விநாயகசதூர்த்தி நாளிலும் வெள்ளி கிழமைகளிலும் கோயிலில் ஆவது வீட்டு பூசை அறையிலாவது

செய்வதன் முலம் நல்ல அருளை பெற முடியும் என விநாயகர் வழி பாட்டு முறை கூறுகிறது

எந்த கடவுளையும் வழி படும் முன்பும் விநாயகரை வழி பட்டு அதன் பிறகுதான் மற்றய தெய்வங்களை வழி பட வேணும் என்பது இந்து மத கோட்பாடாகும்

இதனாலேயே பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து தான் எல்லா நல்ல காரியம் கூட இந்துக்கள் ஆரம்பிப்பது உண்டு

ஏதாவது எழுதும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது

விநாயகரை மதித்து வழி பட்டால் தான் மற்ற தெய்வங்களின் அநுக்கிரகமும் கிட்டும் என இந்து மதத்தில் நம்பப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, அன்புத்தம்பி said:

விநாயகரை பிள்ளையார் என்றும் கணபதி என்றும் ஆனை முகத்தோன் என்றும் ஐங்கரன் என்றும் பலவித நாமம் கொண்டு துதிப்பதுண்டு

ஆமாம் அன்புத்தம்பி, இங்குள்ள அனைத்து நாமங்களையும் சொல்லி அழைத்தால் விநாயகரின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.:100_pray:

1 கணேசன் 2 ஏகதந்தன் 3 கணபதி 4 ஏரம்பன் 5 விநாயகன் 6 கணநாதன் 7 கங்கைபெற்றோன் 8 அங்குசதாரி 9 டுண்டிராஜன் 10 பிள்ளையார் 11 ஒற்றைக்கொம்பன் 12 கயமுகன் 13 மயூரேசன் 14 பரசுபாணி 15 கசானனன் 16 லம்போதரன் 17 அங்குசபாசதரன் 18 கஜானனன் 19 ஒற்றைமருப்பினன் 20 ஹேரம்பன் 21 பாசாங்குசதரன் 22 அங்குசபாணி 23 வக்ர துண்டன் 24 அத்திமுகத்தோன் 25 ஜேஷ்டராஜன் 26 நிஜஸ்திதி 27 முறக்கன்னன் 28 அம்பிகைதனயன் 29 ஆசாபூரன் 30 ஆகுயர்த்தோன் 31 கணாதிபன் 32 வரதன் 33 ஆகீசன் 34 விகடராஜன் 35 வல்லவைமன் 36 முன்னோன் 37 மகா வித்யா கணபதி 38 விக்கினநாயகன் 39 நிதி கணபதி 40 சித்தி புத்தி விநாயகர் 41 மகோதரன் 42 சயன கணபதி 43 வத்திரதுண்டன் 44 சந்தான லட்சுமி கணபதி 45 க்ஷிப்ர ப்ரஸாத கணபதி 46 தரணிதரன் 47 விக்கினராசன் 48 சித்திகணபதி 49 சித்தி - புத்தி பதி 50 விகடசக்கரன் 51 பிரும்மணஸ்தபதி 52 ஆனைமுகத்தோன் 53 வேழமுகத்தான் 54 ருணஹரள கணபதி 55 மோதகப்பிரியன் 56 தும்பிக்கை ஆழ்வார் 57 நர்த்தன கணபதி 58 மாங்கல்யேசர் 59 லக்ஷ்மி கணபதி 60 விக்கினேசுவரன் 61 பார்ப்பதிபுதல்வன் 62 கௌரிமைந்தன் 63 திரியம்பகன் 64 மகா கணபதி 65 மூத்தோன் 66 சர்வ பூஜ்யர் 67 வினைதீர்த்தான் 68 அரிமருகன் 69 விக்கினேசன் 70 விக்னராஜன் 71 ப்ரம்மண கணபதி 72 குரு கணபதி 73 வாமன கணபதி 74 சங்கடஹர கணபதி 75 குமார கணபதி 76 ஊர்த்துவ கணபதி 77 அர்க கணபதி 78 சக்தி கணபதி 79 உத்தண்ட கணபதி 80 ஹரித்ரா கணபதி 81 உச்சிட்ட கணபதி 82 சிங்க கணபதி 83 மும்முக கணபதி 84 சிருஷ்டி கணபதி 85 துவிமுக கணபதி 86 யோக கணபதி 87 துர்க்கா கணபதி 88 வீரகணபதி 89 புஷ்ப கணபதி 90 ரணமோசன கணபதி 91 ஆலம்பட்டா 92 அனந்தசித்ரூபயமம் 93 வெயிலுக்குகந்த விநாயகர் 94 சர்வ சக்தி கணபதி 95 பிரளயங்காத்த விநாயகர் 96 படிக்காசு விநாயகர் 97 பொள்ளாப்பிள்ளையார் 98 விகடசக்கர விநாயகர் 99 மணக்குள விநாயகர் 100 ஐங்கரன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் எட்டு நாமங்கள் சொல்லி 108 ஆக்கலாமே.....!

101  --  கொண்டலடிப் பிள்ளையார்.

102  --  நீராவிடிப் பிள்ளையார்.

103  -- உச்சிப் பிள்ளையார்.

104  --  தான்தோன்றிப் பிள்ளையார்.

105  --  சிற்றம்பலப் பிள்ளையார்.

106  --  கள்ளவாரணப் பிள்ளையார்.

107  -- பொன்னம்பலப் பிள்ளையார்.

108  --  கைலாச விநாயகர்........!   🌹

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, suvy said:

இன்னும் எட்டு நாமங்கள் சொல்லி 108 ஆக்கலாமே.....!

101  --  கொண்டலடிப் பிள்ளையார்.

102  --  நீராவிடிப் பிள்ளையார்.

103  -- உச்சிப் பிள்ளையார்.

104  --  தான்தோன்றிப் பிள்ளையார்.

105  --  சிற்றம்பலப் பிள்ளையார்.

106  --  கள்ளவாரணப் பிள்ளையார்.

107  -- பொன்னம்பலப் பிள்ளையார்.

108  --  கைலாச விநாயகர்........!   🌹

ஆமாம் சுவி, பிள்ளையார் இல்லாமல் சிங்களப் புத்தர்களுக்கு வெசாக் பண்டிகை இல்லை. அவர்களும் பிள்ளையாரைப் போற்றும் 108 போற்றிகளைச் சொல்லி அருளைப் பெறட்டும். அப்பனே பிள்ளையாரே! :100_pray:

1. ஓம் அத்தி முகனே போற்றி 

2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி 

3. ஓம் அம்மையே அப்பா போற்றி 

4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி 

5. ஓம் அமரர்கள்  கோனே போற்றி 

6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி 

7. ஓம் அங்குச பாஸா போற்றி 

8. ஓம் அரு உருவானாய் போற்றி 

9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி 

10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி 

11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி 

12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி 

13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி 

14. ஓம் ஆதி மூலமே போற்றி 

15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி 

16. ஓம் ஆரா அமுதா போற்றி 

17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி 

18. ஓம் இடையூறு களைவாய் போற்றி 

19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி 

20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி 

21. ஓம் ஈசனார் மகனே போற்றி 

22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி 

23. ஓம் உத்தமக் குணாளா போற்றி 

24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி 

25. ஓம் உண்மை நெறியாளா போற்றி 

26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி 

27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி 

28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி 

29. ஓம் என்றுமே  திகழ்வாய் போற்றி 

30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி 

31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி 

32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி 

33. ஓம் எண்குண சீலா போற்றி 

34. ஓம் எழு பிறப்பறுப்பாய்  போற்றி 

35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி 

36. ஓம் ஏக நாயகனே போற்றி 

37. ஓம் எழில் மிகு தேவே போற்றி 

38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி 

39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி 

40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி 

41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி 

42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி 

43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி 

44. ஓம் முழு முதற் பொருளே போற்றி 

45. ஓம் ஒளி மிகு தேவே  போற்றி 

46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி 

47. ஓம் கணத்து நாயகனே போற்றி 

48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி 

49. ஓம் கலைஞானக் குருவே போற்றி 

50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி 

51. ஓம் கற்பக களிறே போற்றி 

52. ஓம் கண்கண்ட தேவே போற்றி 

53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி 

54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி 

55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி 

56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி 

57. ஓம் சர்வ லோகேசா போற்றி 

58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி 

59. ஓம் சுருதியின் முடிவே போற்றி 

60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி 

61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி 

62. ஓம் நாதனே ,கீதா போற்றி 

63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி 

64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி 

65. ஓம் தரும குணாளா போற்றி 

66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி 

67. ஓம் தூயவர் துணைவா போற்றி 

68. ஓம் துறவிகள் பொருளே போற்றி 

69. ஓம் நித்தனே ,நிமலா போற்றி 

70. ஓம் நீதி சால் துரையே போற்றி 

71. ஒம் நீல மேனியனே போற்றி 

72. ஓம் நிர்மலி வேனியா போற்றி 

73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி 

74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி 

75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி 

76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி 

77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி 

78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி 

79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி 

80. ஓம் முத்தியை தருவாய் போற்றி 

81. ஓம் வேழ முகத்தாய் போற்றி 

82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி 

83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி 

84. ஓம் வேதாந்த விமலா போற்றி 

85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி 

86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி 

87. ஓம் செல்வம் தருவாய் போற்றி 

88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி 

89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி 

90. ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி 

91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி 

92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி 

93. ஓம் ஒளவியம்  அகற்றுவாய் போற்றி 

94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி 

95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி 

96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி 

97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி 

98. ஓம் அமிர்த கணேசா போற்றி 

99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி 

100 ஓம் வலம்புரி விநாயகா போற்றி

101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி 

102. ஓம் சித்தி விநாயகா போற்றி 

101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி 

104. ஓம் சுந்தர  விநாயகா போற்றி 

105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி 

106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி 

107. ஓம் ஆபத் சகாயா போற்றி 

108. ஓம் அமிர்த கணேசா போற்றி. 😌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

page109-728px-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.pdf.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
    • 22 DEC, 2024 | 09:49 PM   இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கெடுபிடிகளற்று இடம்பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/201905
    • ஆளணிப்பற்றாக்குறையே சுகாதாரத் தொண்டர்கள், தொண்டராசிரியர்கள் ஆகியோருக்கு வாய்ப்பாக அமைகிறது. தற்போது தொண்டராசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலுள்ள திரியிலும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெளிவாக நிலைமைகளை எடுத்துச் சொல்கிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.