Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கும்பமேளா திருவிழா' இந்தியாவில் கொரோனாவை அதிகம் பரப்பிய சூப்பர் ஸ்பிரெட்டரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கீதா பாண்டே
  • பிபிசி செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக அதிகமாக பரவத் தொடங்கிய வேளையில், இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஹரித்துவார் நகரில் லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் கும்பமேளா திருவிழாவுக்காக கூடினார்கள். அப்போது, அந்த திருவிழா இந்தியாவில் கொரோனா வைரஸை அதிகம் பரப்பி விடுமோ என பலரும் அச்சப்பட்டனர்.

அந்த அச்சம் தற்போது உண்மையாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்தவர்களில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டு இருக்கலாம் எனவும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் அறிக்கைகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

கடந்த மார்ச் 15ஆம் தேதி மஹந்த் சங்கர் தாஸ் என்பவர் ஹரித்வார் நகரத்தில் கும்பமேளா பெருவிழாவில் பங்கேற்க வந்த போது, இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

கும்பமேளா திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கி நான்கு நாட்களில் அதாவது, கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி 80 வயதான இந்த இந்து பூசாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரை ஒரு கொட்டகையில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தார்கள்.

ஆனால் அந்த முதியவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, தன் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ரயிலைப் பிடித்து சுமார் 1,000 கிலோமீட்டர் பயணித்து வாரணாசி நகரை அடைந்தார்.

அவரது மகன் நாகேந்திர பதக் அவரை ரயில் நிலையத்தில் சந்தித்தார். அவர்கள் இருவரும் ஒரு டாக்ஸியை பகிர்ந்து கொண்டு 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தங்கள் கிராமத்துக்கு சென்றனர்.

கும்பமேளா திருவிழா

பட மூலாதாரம்,REUTERS

ஹரித்வாரில் இருந்து திரும்பிய மஹந்த் தாஸ் தற்போது நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகவும், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தொலைபேசியில் என்னிடம் கூறினார்.

தான் யாருக்கும் கொரோனா வைரஸை பரப்ப வில்லை எனவும் குறிப்பிட்டார். ஆனால் அவர் கிராமத்திற்கு சென்று சேர்ந்த சில நாட்களுக்குள்ளேயே அவரது மகன் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா அறிகுறிகள் அதிகரிக்கத் தொடங்கியது.

தங்கள் கிராமத்தில் கடந்த இரண்டு வார காலத்தில் 13 பேர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக உயிரிழந்ததாக மஹந்த் தாஸின் மகன் நாகேந்திரா கூறுகிறார்.

அந்த கிராமத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் அதிகமானதற்கு மஹந்த் தாஸ் காரணமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம், ஆனால் அவர் ரயில் பயணம் மேற்கொண்டது டாக்ஸியில் பயணித்தது போன்றவை பொறுப்பற்ற நடவடிக்கைகள் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு அவர் வழிநெடுக பலருக்கும் கொரோனா வைரஸை பரப்பி இருக்கலாம் என்கின்றனர்.

"கூட்டமாக முக கவசம் எதையும் அணியாமல் கங்கை நதிக்கரை ஓரத்தில் பக்தர்கள் அமர்ந்து கங்கையின் புகழ் பாடுவது கொரோனா வைரஸ் பரவுவதற்கான உகந்த சூழல்" என்கிறார் தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் லலித் காந்த். "கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் வாயைத் திறந்து கூட்டமாக பாடுவது கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஏதுவான சூழல் என்பதை நாம் அறிவோம்"

ஹரித்வார் நகரத்தில் 12 முக்கிய இந்து மத தலைவர்கள் உட்பட 2,642 பக்தர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா, அரசி கோமல் ஷா ஆகியோர் கும்பமேளா திருவிழாவில் இருந்து திரும்பி வந்த பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் கும்பமேளா திருவிழாவில் இருந்து திரும்பி வந்த பிறகு மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரு குழுவைச் சேர்ந்த 9 இந்து பெரியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பி வந்தவர்கள் தற்போது கொரோனாவை பரப்பத் தொடங்கலாம் என்கிற பயத்தில் பல மாநில அரசுகள், கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்தவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கின்றன. அதோடு தங்களின் பயண விவரங்களை மறைப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருக்கின்றன.

சில மாநில அரசுகள் கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்தவர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை கட்டாயமாக்கி இருக்கின்றன. வேறுசில மாநிலங்களோ பயணம் மேற்கொண்டவர்களின் விவரங்களை கையில் வைத்திருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் எந்த ஒரு மாநில அரசிடமும் தங்கள் மாநில எல்லைகளுக்குள் நுழையும் மக்களை பரிசோதனை செய்வது மற்றும் தடம் அறிதல் தொடர்பாக ஒரு வலுவான திட்டம் இல்லை.

கடந்த இரண்டு வாரங்களில் கும்பமேளா திருவிழாவில் இருந்து திரும்ப வந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிக்கைகள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

1. ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பாக அதன் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதற்கு, கும்பமேளா விழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்த பக்தர்களே காரணம் என அம்மாநில அரசு அதிகாரிகள் குறை கூறுகிறார்கள்.

2. ஒடிசா மாநிலத்தில் கும்பமேளா திருவிழாவில் கலந்துகொண்டு திரும்ப வந்த பக்தர்களில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

3. குஜராத் மாநிலத்தில் ஒரே அறையில் கும்பமேளா திருவிழாவில் கலந்துகொண்டு திரும்ப வந்த 313 பயணிகளில் குறைந்தபட்சம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

4. மத்திய பிரதேசத்தில் கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்த 61 பேரில் 60 பேர் அதாவது 99 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

"இது பேரழிவை தரக்கூடியது" என்கிறார் மருத்துவர் காந்த். "இந்த எண்ணிக்கைகள் எல்லாம் உண்மையான எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதிதான். நெரிசலான ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணித்த பக்தர்கள் கூட்டம் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையில் ஒரு பெருக்கல் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கும்பமேளா ஒரு மிக முக்கிய காரணம் என எந்தவித தயக்கமுமின்றி என்னால் கூற முடியும்" என்கிறார் மருத்துவர் லலித் காந்த்.

இந்தியாவில் மிகக் கடுமையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும்போது, நோயாளிகளுக்கு போதுமான மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் கிடைக்காதபோது கும்பமேளா திருவிழாவை ரத்து செய்திருக்கலாமே என மஹந்த் தாஸிடம் கேட்டபோது கடுமையாக பதிலளிக்கிறார்.

"அப்படி என்றால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில் அரசு தேர்தல் நடத்துவது, தேர்தல் பேரணிகளை நடத்துவது மட்டும் சரியா? ஏன் இந்து பக்தர்களாகிய நாங்கள் மட்டும் கூடுவது தவறு என கூறப்படுகிறது? என கேள்வி எழுப்புகிறார்.

கும்பமேளா திருவிழா

பட மூலாதாரம்,REUTERS

பிரதமர் நரேந்திர மோதி, கும்பமேளா திருவிழாவில் மக்கள் கூடுவதை ரத்து செய்ய தயக்கம் காட்டியதற்கு, மஹந்த் தாஸ் போன்ற இந்து தலைவர்களிடமிருந்து எதிர்வினைகள் கிளம்பலாம் என்பதே காரணம் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். கோவில் பூசாரிகள், மதப் பெரியவர்கள், சந்நியாசிகள் போன்றவர்கள்தான் பாரதிய ஜனதா கட்சியின் மிகப்பெரிய ஆதரவாளர்கள். தேர்தலின்போது இந்து மக்கள் ஒட்டுக்களை பாஜகவின் பக்கம் திரும்புவதற்கு இவர்கள் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் பாவங்கள் கழுவப்பட்டு முக்தி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், கங்கையில் புனித நீராடினார்கள். இந்தியாவில் ஒரே நாளில் 1.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். பிரேசில் நாட்டை பின்னுக்குத்தள்ளி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது இந்தியா.

கும்பமேளா திருவிழாவை முன்னெடுக்கும் முக்கியமான தலைமை சந்நியாசிகளில் ஒருவர் இறந்த பிறகு திருவிழா நாட்கள் குறைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி கும்பமேளா திருவிழாவை ஒரு குறியீட்டு நிகழ்ச்சியாக நடத்துமாறு இந்துமத பெரியவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால் அதற்குள் கும்பமேளா திருவிழாவால் ஏற்பட வேண்டிய அனைத்து சேதாரங்களும் ஏற்பட்டு விட்டன.

கும்பமேளா திருவிழா நிகழ்வு ஏற்பாடு செய்தவர்கள் திருவிழாவில் சுமார் 9 கோடியே 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக, அதாவது ஹரித்துவார் நகரத்திற்கு வந்ததாக கடந்த வாரம் குறிப்பிட்டார்கள். அதிகரித்து வரும் பெரும் தொற்று நோய்க்கு மத்தியில் கும்பமேளா திருவிழாவிற்கு அனுமதி கொடுத்து, உத்தராகண்ட் மாநிலத்தைப் பார்த்து மற்றவர்கள் எள்ளி நகையாடும் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என அம்மாநிலத்தின் உயர் நீதிமன்றம் கூறியது.

கும்பமேளா திருவிழா தொடங்கப்படுவதற்கு முன்பிலிருந்தே அது தொடர்பான பிரச்சனைகள் நிலவிக் கொண்டிருந்தன.

"இந்தியாவில் புதிய மற்றும் அதிவேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸின் புதிய தீரிபு" பரவி வருவதாக கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே சுகாதார நிபுணர்கள் அரசை எச்சரித்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் லட்சக்கணக்கான முகக்கவசம் ஏதும் அணியாத பக்தர்கள் திருவிழா என்கிற பெயரில் ஒன்று கூடுவது அத்தனை நல்லதல்ல என சுகாதார நிபுணர்கள் எச்சரித்தார்கள்.

"கும்பமேளா திருவிழா சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு ஒரு குறியீட்டு நிகழ்ச்சியாகவே நடத்தப்படும்" என உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் தொடக்கத்திலேயே என்னிடம் கூறினார். "கொரோனா பெருந்தொற்று இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வராது" என நிபுணர்கள் தன்னிடம் கூறியதாகவும் பகிர்ந்து கொண்டார்.

"இந்த திருவிழா இந்தியாவில் இருக்கும் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். நல்ல உடல் நலத்தோடு இருப்பவர்கள் கூட ஹரித்துவார் நகரத்திற்கு வந்து கொரோனா தொற்று ஏற்பட்டு மற்றவர்களுக்கும் தொற்றை ஏற்படுத்தி விடுவார்களோ என நான் கவலையில் இருக்கிறேன்" எனக் கூறினார்.

கும்பமேளா திருவிழா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கும்பமேளா திருவிழா தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன், தீரத் சிங் ராவத் உத்தராகண்ட் மாநிலத்தின் முதல்வராக அமர்த்தப்பட்டார்.

"கங்கை நதியின் ஆசீர்வாதத்தில் கொரோனா வைரஸ் இருக்காது" என கூறியவர் இந்த முதல்வர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

"யாரும் தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள்". கும்பமேளா திருவிழாவில் கலந்துகள்ள கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் இல்லை. கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை பின்பற்றினாலே போதுமானது என கூறினார் உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வர்.

பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஹரித்வார் நகரத்திற்கு வந்தபோது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த அதிகாரிகள் திணறினர்.

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்த பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை எடுத்து வரவில்லை என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. நம்பிக்கையில் அத்தனை தூரம் பயணித்து வந்தவர்களை திருப்பி அனுப்பவும் முடியவில்லை என என்னிடம் கூறினார் ஹரித்வார் நகரத்தின் முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் ஷம்பு குமார் ஜா.

"ஒரு மதம் சார்ந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக விரும்பும் மக்களை உங்களால் திருப்பி அனுப்ப முடியுமா என்ன? என கேள்வி எழுப்புகிறார்.

"மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் இருந்தன. எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்தினோம்" என்கிறார்.

"பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது ஆகிவிட்டது. அவைகள் காகிதங்களில் பார்ப்பதற்கு மிக நன்றாக இருந்தன, ஆனால் எதார்த்தத்தில் அவைகளை செயல்படுத்த முடியவில்லை" என உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுப் நாடியால் பிபிசியிடம் கூறினார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் முதன் முதலாக கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டதிலிருந்து, (கடந்த 15 மார்ச் 2020 முதல்) சுகாதார அமைச்சகத்தின் தரவுகளை சேகரித்து வருகிறார் அனுப். கடந்த மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை உத்தராகண்ட் மாநிலத்தில் 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இது கும்பமேளா திருவிழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் வரத் தொடங்கிய காலம். கடந்த ஏப்ரல் 25 முதல் மே 1ஆம் வரையிலான வாரத்தில் உத்தராகண்ட் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,581 பேராக அதிகரித்திருக்கிறது. இது கும்பமேளா திருவிழாவின் கடைசி வார காலம் என்கிறார் அனுப்.

"கும்பமேளா திருவிழாவால்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது எனக் கூறுவது தவறு. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் கும்பமேளா திருவிழாவின் காலகட்டமும் எதேர்ச்சையாக ஒரே காலகட்டத்தில் ஒத்துப்போகிறது" என கூறுகிறார் அனுப்.

கும்பமேளா திருவிழாவில் மக்கள் ஒன்றுகூட அனுமதித்ததால் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி சய்ய இந்தியா வேறு ஏதாவது செய்யமுடியுமா? என மருத்துவர் காந்திடம் நான் கேட்டேன்.

"கும்பமேளா திருவிழாவில் பங்கெடுத்த பக்தர்கள் கொரோனா வைரஸை பிரசாதம் போல் எடுத்துக்கொண்டு அனைவருக்கும் பரப்பி விடுவார்கள் என யாரோ கூறினார்கள். பக்தர்கள் கொரோனா வைரஸ் எல்லா இடங்களிலும் எடுத்துச் சென்றது மிகவும் வருத்தத்துக்குரியது" எனக் கூறுகிறார் மருத்துவர் காந்த்.

"தற்போதைய சூழலை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என எனக்கு எதுவும் தோன்றவில்லை. நாம் அதிக தூரம் கடந்து விட்டோம். நாம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல முடியாது. இது மிகவும் வருத்தத்துக்குரியது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படாமல் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்திக்க மட்டுமே முடியும்" என்கிறார் மருத்துவர் லலித் காந்த்.

'கும்பமேளா திருவிழா' இந்தியாவில் கொரோனாவை அதிகம் பரப்பிய சூப்பர் ஸ்பிரெட்டரா? - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

சமய நடவடிக்கைகள் மட்டுமல்ல அரசியல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாகும். 

இந்திய வல்லரசுக் கனவு கனவாகவே முடியும் பொல ....😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kapithan said:

சமய நடவடிக்கைகள் மட்டுமல்ல அரசியல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாகும். 

இந்திய வல்லரசுக் கனவு கனவாகவே முடியும் பொல ....😂

மேலைத்தேயவர்கள் அரசியல் இனம் மதம் பொருளாதாரம் என்பவற்றை ஒரே கோட்பாட்டில் வைத்து திறம்பட கையாண்டு வெற்றி பெறுகின்றார்கள். இந்தியா இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அந்த திறமை அறவே இல்லை. வெள்ளையனே வெளியேறு என்று விட்டு கேடுகெட்ட அரசியல் சாக்கடையில் நீந்துகின்றார்கள்:)

ஆங்கிலேயர் மீண்டும்  படையெடுத்தால் சில அற்புதங்கள் நிகழலாம்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சமய நடவடிக்கைகள் மட்டுமல்ல அரசியல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாகும். 

இந்திய வல்லரசுக் கனவு கனவாகவே முடியும் பொல ....😂

கும்ப மேளாவும் மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும் தான் இந்தியாவில் கொரோனா எகிறியதன் அடிப்படைக் காரணங்கள். மோடி அரசு மக்களின் நலனைவிடக் கட்சியின் நலனையே இந்தக் கொரோனாக் காலத்திலும் முன்னிறுத்துகின்றது

 

45 minutes ago, குமாரசாமி said:

இந்தியா இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அந்த திறமை அறவே இல்லை

இலங்கை அரசு இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயற்படுவது கண்கூடாகத் தெரிகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, வாத்தியார் said:

இலங்கை அரசு இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயற்படுவது கண்கூடாகத் தெரிகின்றது

வாத்தியார்! எதை வைத்து சொல்கின்றீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

வாத்தியார்! எதை வைத்து சொல்கின்றீர்கள்? 

இறப்பு  என்பது தான் கொரோனாவின் எல்லை.
 கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது
இறப்பு விகிதம் இலங்கையில் குறைவாக உள்ளது

(அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்
இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி
என நான் நினைக்கின்றேன்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மேலைத்தேயவர்கள் அரசியல் இனம் மதம் பொருளாதாரம் என்பவற்றை ஒரே கோட்பாட்டில் வைத்து திறம்பட கையாண்டு வெற்றி பெறுகின்றார்கள். இந்தியா இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அந்த திறமை அறவே இல்லை. வெள்ளையனே வெளியேறு என்று விட்டு கேடுகெட்ட அரசியல் சாக்கடையில் நீந்துகின்றார்கள்:)

ஆங்கிலேயர் மீண்டும்  படையெடுத்தால் சில அற்புதங்கள் நிகழலாம்.  🤣

தற்போது கோவிற்-19 ஆல் இறந்தவர்களின் உடலங்கள் கங்கை ஆற்றில் பரவலாக எறியப்பட்டு மிதந்து வருகின்றன. 

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Kapithan said:

தற்போது கோவிற்-19 ஆல் இறந்தவர்களின் உடலங்கள் கங்கை ஆற்றில் பரவலாக எறியப்பட்டு மிதந்து வருகின்றன. 

☹️

சுத்தம்.
இனித்தான் இந்தியா வல்லரசு கண்டியளோ:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.