Jump to content

ஒரு பக்கம்


Recommended Posts

பதியப்பட்டது

யேர்மனி பிறேமன் தமிழ்க்கலை மன்றத்தினால் இ.த. இராஜனின் (யாழ்கள மணிதாசனின்) நெறியாள்கையில் பொங்கல் விழா (தை 2007) அன்று மேடையேற்றப்பட்ட நாடகம். இது ஒரு சற் கதையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.

இங்கே இணைத்து உங்களது கருத்துக்களை இதுபறற்றி அறிவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.ன்.

http://tamilamutham.net/amutham/index.php?...3&Itemid=30

Posted

சோழியன் அங்கிள்,

நாடகத்தை பொறுமையாக 45 நிமிடங்கள் இருந்து பார்த்தேன். சூப்பராக உள்ளது. அதில் நடித்த அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளார்கள். கடைசிப்பிள்ளையாக குமுதன் பாத்திரத்தில் நடித்த சிறுவன் மிகநன்றாக நடித்துள்ளான்.

இந்த நாடகத்தை நெறியாள்கை செய்த மணிதாசன் தானா நாடக கடைசியில் வந்து கதைப்பவர்? இதுவா அவரின் புரபைல்? சரியாகத் தெரியவில்லை, எனவேதான் கேட்கிறேன்...

http://www.yarl.com/forum3/index.php?showuser=12

நாடகம் ஆரம்பத்தில் இருந்து இறுதிக்கு சற்றுமுன்வரை பகிடியாக சுவாரசியமாகப் போனது. கருப்பொருள் நன்றாக உள்ளது, ஆனால் அக்காவும், தம்பியும் ஆளையாள் முகம் தெரியாமையால் இண்டர்நெட்டில் காதலர்களாக சந்திப்பது யதார்த்தமாக அமையவில்லை. இதை சற்று மாற்றி இருக்கலாம்.

அழகிய பாடல் ஒன்றும் நாடகத்தில் வந்துள்ளது. நாங்கள் நித்திரையால் எழும்பியதும் முளிப்பதும், படுக்கும்போது கடைசியாக விடைபெறுவதும் கணணியில் தான்! நவீன உலகில் இது தவிர்க்க முடியாதது. இது எனது தனிப்பட்ட கருத்து. இதை பிழை என்று சொல்ல மாட்டேன். நான் பாங்கிங் தொடக்கம் விமானசீட்டு, மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதெல்லாம் கணணியூடாகத்தான். எம்.எஸ்.என் சட் மூலம் பல பிரயோசனமான அலுவல்களைப் பார்த்துள்ளேன். இதனால், எனது தனிப்பட்ட அனுபவத்தை வைத்து பார்க்கும்போது கருப்பொருள் அவ்வளவு பிடிபடவில்லை. கத்தியை வைத்து காய்கறியும் வெட்ட முடியும், கையையும் வெட்ட முடியும், இங்கு கையை அறுப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

எனினும், நாடகத்தில் காட்டப்படும் சில சிக்கல்கள் வருவது என்னமோ உண்மைதான். அதாவது கணணியில் அலுவலாக இருக்கும்போது ஒன்றுக்கு - சலம் வந்தாலும், எழும்ப மனம் வராது. "பால் முடிஞ்சு போச்சு கடையில போய் ஒரு பால் பக்கட் வாங்கிக்கொண்டு வா!" என்று அம்மா சொன்னால் சரியான கோபம் வரும்... இப்படி, பிள்ளைகள் கணணியில் ஆர்வத்துடன் ஊறி விடும்போது வீட்டில் அவசரத்துக்கு உதவிகள் செய்யும் தன்மை குறைந்துவிடுகின்றது. மேலும், பிள்ளைகளின் மற்றைய சில ஆற்றல்கள், உதாரணமாக வெளியில் விளையாட்டுக்களில் ஈடுபடுதல், மற்றும் கலையார்வம் போன்றன மழுங்கிவிடுகின்றது என்பதும் உண்மைதான்.

இங்கு குறிப்பாக சுமார் 17 வயதுவரை பிள்ளைகள் நிச்சயம் பெற்றோரினால் கணணியில் என்ன செய்கின்றார்கள் என்று கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். தாய், தகப்பன் பிள்ளை நல்லா படிக்கும் என்று நினைத்து மிகவும் விலையுயர்ந்த கணணியை வாங்கிக்கொடுக்க பிள்ளை அதில் இருந்து வேறு ஏதோ செய்ய முயற்சிக்கின்றது. இதனாலேயே, பெரும்பாலும் இணையங்களில் வயதுக்கட்டுப்பாட்டு விதியை ஆகக்குறைந்த வயது எல்லையாக 18 ஐ வைத்து இருக்கின்றார்கள் (கொள்கை அளவில்).

நாடகத்தில் மிகச்சிறப்பாக நடித்த அனைத்து கலைஞர்களிற்கும், பாடலை எழுதியவருக்கும், மேலும் எங்கள் யாழ்கள மணிதாசனுக்கும் ஒரு போடலாம்! பாராட்டுக்கள்! :(

Posted

கலைஞன்.. நீங்கள் குறிப்பிட்டு விசாரித்தவர்தான் மணிதாசன். அவர்தான் வில்லிசைக்கலைஞர் நாச்சிமார்கோயிலடி இராஜன். கணனிப் பிரச்சினைகள் காரணமாக யாழ் களத்துக்கு வரமுடியாமல் உள்ளார் என்பதுதான் உண்மை.

இந்த நாடகத்திலே, அக்கா தம்பி சற் பண்ணும் சம்பவம்.. ரீரீஎன் படலைக்குப் படலை சுதன்ராஜின் சிறுகதை ஒன்று. அதை வேறு சில பாத்திரங்களுடன் நாடகமாக்கியுள்ளார். மற்றும்... நாடகத்தின் தலைப்பு ஒரு பக்கம்.. அதாவது சற் உலகில் ஏற்படும் விளைவின் ஒரு பக்கத்தை காட்டுவதுதான் இந்த நாடகத்தின் முக்கிய கருவாக உள்ளது.

Posted

இணைப்பிற்கு நன்றி சோழியன் அண்ணா

மணிதாசன் அண்ணாவின் வில்லிசை கேட்டிருக்கின்றேன்.; .இப்போது மேடை நாடகம் வாழ்த்துக்கள்

இணைய சற் வைத்துத்தானே நீங்கள் ஒரு சிறுகதை எழுதினீர்கள் ஜஸ்கிறீம் சிலையே நீதானோ ?

நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்கள் ஆக்கங்கள் பார்த்து

விரைவில் உங்கள் ஆக்கங்களை காணலாம் என்ற நம்பிக்கையில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலத்திற்கேற்ற அருமையான நாடகத்தை அரங்கேற்றிய பிறீமன் தமிழ் கலை மன்றத்தினருக்கு வாழ்த்துக்கள்.அத்துடன் யாழ் இணையத்தில் இணைத்த சோழியானுக்கும் ரொம்ப நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.