Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானின் பிரதேசவாதம் ! கிழக்கின் வரமா? சாபமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பிள்ளையானின் பிரதேசவாதம் ! கிழக்கின் வரமா? சாபமா?

  • May 30, 2021

20210530_130709-300x165.jpg?6bfec1&6bfec

இக்கட்டுரை சுகபோகங்களுக்காக ஆளும் அரசுடன் கைகோர்த்து நிற்கும் முன்னால் போராளி அரசியல்பவாதிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது! *

அது 1998 அல்லது 99 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். அப்பா என்னையும் தம்பியையும் அழைத்துக் கொண்டு திருமலை வீதியில் இந்துக் கல்லூரி மைதான நுழைவாயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் சிறிய சலூன் கடைக்கு முடி வெட்டக் கூட்டிச் சென்றிருந்தார்.

 

அப்போது அங்கே ஒரு முதியவர் கம்பீரமாக அமர்ந்திருந்து முடிவெட்டிக் கொண்டிருந்தார்.

 

இவர் மட்/ மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும், அதிபராகவும் கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆசிரியர் சேவையில் பணியாற்றி 1986 ஓய்வு பெற்றவர்.

பின்பு 1989 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ENDLF, EPRLF, TELO, TULF கூட்டனியின் வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1989 – 1994 வரை பதவி வகித்தவர்.

இது தவிர அம்ஸ்டர்டாமில் நடைபெற்ற அம்னாஸ்டி இன்டர்நேஷனலின் ( amnesty international) உலக மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக கலந்து கொண்டு மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்தவர். அவர் வேறுயாருமல்ல, முன்னால் மத்திய கல்லூரி அதிபர் திரு. பிறின்ஸ் காசிநாதர் அவர்களே!

(இதே amnesty international என்ற அமைப்பே பிள்ளையான் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கிலிருந்து விடுபட்டபோது இலங்கையில் நீதி தோற்றுவிட்டது என்று தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது!)

(சலூனில்) அவர் சிறிது நேரத்தில் முடிவெட்டிமுடிந்ததும் பணத்தை கொடுத்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றுவிட்டார்.

இவர் சென்றதும் சலூன்கடை அண்ணன் தனது ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டித் தீர்த்தார்.
இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது தான் பல தடவைகள் தனது உறவுக்கார பிள்ளையை அழைத்துக் கொண்டு வேலை விடையமாக சந்திக்கச் சென்றதாகவும், ஆனால் அதற்கு தனது அதிகாரத்தை பிரயோகித்து வேலைவாய்ப்பு பெற்றுத்தரமுடியாது என்று கண்டிப்பாக கூறியதாகவும், அதன்பின்னர் பலதடவைகள் அவரை சந்திக்க முயர்ச்சித்தும் அவரை சந்திக்க முடியவில்லை. அவர் வீட்டில் இருக்க மாட்டார், வீட்டில் இருந்தால் வேலையாக இருப்பார், என்று கூறி ஆதங்கப்பட்டார். இது அவர்பக்க நியாயமாகக்கூட இருக்கலாம்.

பதவி இருக்கும்வரைதான் எல்லாம், அது போனதும் அவரே என்னைத் தேடிவரும் நிலையில் உள்ளார் , அதுவும் எந்தவித பாதுகாப்பும் இன்றி என்று கூறினார்.

அன்று அவர் இதை யதார்த்தமாக கூறினாலும் அவர் கூறியதை இன்று தற்காலத்து அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இங்கு சிறந்தது.

ஒரு காலத்தில் வலம்வந்த தமிழ் அரசியல்வாதிகளை பார்த்தால் அரசியலில் ஈடுபடமுன் அதிபராகவோ, ஆசிரியர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ, அல்லது வேறு ஒரு அரச பணியிலிருந்து வந்தவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள்.

ஆனால் தற்போதுள்ள அரசியலவாதிகளில் சிலர் ஆயுத போராட்டத்தில் பங்குபற்றி பின்னர் ஜனநாயக வழிக்கு திரும்பியவர்களாக இருப்பதைக் காணக்கூடியதாய் இருப்பதுடன், பெரும்பாலானோர் மக்கள் மனதில் இடம்பிடித்த மக்கள் சேவகனாக வலம்வருகிறார்கள். ஆனால் ஒருசிலர் கூடவே அரசியல் பிரவேசத்திற்கு முந்திய காலத்தில் அவர்கள் செய்த குற்றச் செயல்களும்( குற்றச்செயல் புரிந்திருப்பின்?) அவர்களைச் சுற்றி வலம்வந்து கொண்டிருப்தை காணக்கூடியதாக உள்ளதை பார்க்கிறோம்.

 

இதற்கு, வடக்கில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தொடக்கம் கிழக்கில் கருணா, பிள்ளையான் வரை விதிவிலக்கல்ல.

இவர்கள் அனைவரும் தற்போது வரை ஆளும் அரசின் பங்காளிக் கட்சியாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இன்று வரை அவர்களால் ஆளும் அரசை எதிர்த்து அரசியல் செய்ய முடியாதவர்களாகத் இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் அவர்களைச் சுற்றி அன்று காத்திருந்த புலியெனும் பேராபத்தேயாகும்.

இவர்கள் உயிர்வாழும் வரை தமது பாதுகாப்பின் நிமிர்த்தமாக அல்லது பதவிநிமிர்த்தமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதைப் பிடித்துத் தொங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அவர்களுக்கு அதைவிட வேற தெரிவு இருப்பதாகத் தெரியவில்லை.

சிலர் தற்போது தேர்தலில் வெற்றியடையாவிட்டாலும் ஆளும் அரசின் கட்சி சார்ந்த ஏதோ ஒரு பதவியில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

அன்று மட்டக்களப்பை பிரதிநிதித்துவப் படுத்திய காலங்சென்ற திரு. பிறின்ஸ் காசிநாதர் முதல் தற்போதுள்ள ராஜதுரை ஐயா மற்றும் சில தமிழரசுக் கட்சி முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வரை தமது வயோதிபக் காலத்தில் எந்த ஆயுத பாதுகாப்புமின்றி வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போது அரசை ஆதரித்துச் செயற்படும் முன்னாள் போராளி அரசியல்வாதிகளால் தாம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத பட்சத்தில் சுதந்திரமாக இவ்வாறு வலம்வர முடியுமா என்பது கேள்விக்குறியே! ஏனெனில் அவர்கள் முன்னால் பெரும்பாலான குற்றச்சாட்டுக்களை மக்கள் இன்றுவரை முன்வைத்து விமர்சித்து வருகிறார்கள்.

இப்போதைக்கு உயிரை பாதுகாத்தால் போதும் என்ட ரீதியில் இந்த முன்னாள் போராளிகள் அரசியலில் காய் நகர்த்துவதை இன்று காணக்கூடியதாய் இருக்கிறது. அதற்கு ஒரேவழி அரசுக்கு ஆதரவளித்து இயங்குவதே. அதனையே வடக்கில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும், கிழக்கில் பிள்ளையான் அவர்களும் செய்துவருகின்றனர்.

இதன் அடிப்படையிலேயே திரு.பிள்ளையான் அவர்களும் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளிக் கட்சியாக தமது கட்சியை அறிவித்து நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து வருகிறார்.
அதற்கு கைமாறாக ஆளும்அரசு ஆட்சியில் இருக்கும் வரை பிள்ளையான் அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும். ஒருசில அபிவிருத்திகள், மாவட்டமட்டத்தில் ஏதும்ஒரு பதவி… அவ்வளவுதான்,

தவிர பிள்ளையான் அவர்களால் மகிந்த அரசிற்கு தமது பலத்தை காட்டவோ, அல்லது தமது ஆரதரவிற்கு முன்நிபந்தனை விதிக்கவோ முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசை எதித்து வாக்களித்தாலோ, பேசினாலோ பிள்ளையான் அவர்கள் ஆளும் அரசினால் ஓரங்கட்டப்படுவதுடன், பாதுகாப்பிலும் அரசு கைவைக்கும் என்பதை பிள்ளையானும் நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார்.

கடந்த 2004 ல் திரு. பிள்ளையான் அவர்கள் கருணாவோடு விடுதலைப் புலிகள் அமைப்புலிருந்து பிரிந்ததிலிருந்து அவர்களை மகிந்த அரசு பலத்த பாதுப்பளித்து காதுகாத்துவந்திருக்கிறது.

பொதுவாக ஒரு போராளி விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துவந்தால் ,

ஒன்று,
உடனடியாக வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்லவேண்டும்.

அல்லது இலங்கை இராணுவத்திடம் சரணடைய வேண்டும். இராணுவத்திடம் சரணடைந்தால் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.
இதைத்தான் இவர்களும் செய்திருந்தனர்.

இந்தவகையில் திரு. பிள்ளையார் அவர்களும் வெளிநாடு செல்ல சில முகவர்களை அணுகியதாகவும் அவர்கள் பெருமளவு பணம் கேட்டதால் சாத்தியப்படவில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். கருணா அவர்கள் லண்டன் சென்று நாடுகடத்தப்பட்டவர்.

அதனால் கருணா , பிள்ளையான் ஆகியோரின் இரண்டாம் தெரிவே இந்த அரசியல் பிரவேசம். தவிர தற்போது அவர்கள் மேடைகளில் பிரச்சாரம் செய்வதுபோல வெருகல் ஆற்றில் ஞானம் பெற்று யாரும் கிழக்கு மக்களை யாழ் மேலாதிக்கவாதிகளிடமிருந்து மீட்க வரவில்லை என்பதே உண்மை.

பிள்ளையானைப் பொறுத்தவரை கிழக்கின் அபிவிருத்தி என்ற ஒன்றை கையில் ஆயுதமாக எடுத்து அரசியல் நாடகம் நடாத்திவருகிறார்.
கையோடு யாழ் மேலாதிக்கவாதிகளின் கட்சியே தமிழ் தேசியக் கூட்டமைபு என்பதைக்கூறி , கூட்டமைப்பின் வாக்கை தன் பக்கம் ஈர்க்க நினைக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது, யாழ் மேட்டுக்குடி அல்லது யாழ் மோலாதிக்கவாதிகளின் கட்சி என்ற சொல்ப்பதம் , சில கிராமப் புறமக்களிடையே மேலாதிக்கம் பழுங்கடிக்கப்பட்டு, அல்லது சரியாக புரிந்துகொள்ள முடியாமல் போகின்றது. எனவே மட்டக்களப்பு மாவட்ட கிராமப்புற பாமர மக்களைப் பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பானது “ யாழ்ப்பாணக் கட்சி, அல்லது அது புலியினால் உருவாக்கப்பட்ட கட்சி அதற்கு வாக்குப் போடாதீர்கள் “ என்பதாகவே விளங்கிக் கொள்ளப்படுகின்றது. ஏற்கனவே புலிகளால் பாதிக்கப்பட்டவர், அடிப்படையில் சரியான புரிதல் இல்லாமல் யாழ்ப்பணத்தவர் மீது வெறுப்புக் கொண்டவர்கள் பிள்ளையானின் சொல்கேட்க அதிக சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.

மக்களின் இந்த யாழ் வெறுப்புணர்வு மனநிலையே பிள்ளையானின் வாக்கு அதிகரிப்புக்கு காரணம் என்று எடுத்துக் கொள்ளலாம். இது பிள்ளையானுக்கும் நன்றாகத் தெரியும்.

எனவே மட்டக்களப்பு வாழ் மக்களிடையே ஒரு பிரதேச (யாழ்) மக்கள்மீதான வெறுப்பை ஏற்படுத்தி வாக்கைப் பெற நினைப்பது பிரதேசவாத அரசியல் அன்றி வேறெதுவுமில்லை.
முன்னாள் அமைச்சர் திரு.ராஜதுரை அவர்கள் கூட தனது கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஆளும் கட்சிப் பக்கமாகவே சென்றாரே தவிர, வடக்கான்-கிழக்கான் என்று பிரதேசவாதம் பேசி ஒரு தனிக் கட்சியை ஆரம்பிக்க எண்ணவில்லை. தமிழர்களின் ஒற்றுமையில் பங்கம் ஏற்படும் என்ற தூரநோக்கு சிந்தனையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் பிள்ளையான், கருணா போன்றவர்கள் வடக்கிலிருந்து கிழக்கை பிரதேசவாதம் பேசி தனிமைப்படுத்தி தங்கள் சுயநலத்திற்காக தனிக்கட்சி ஆரம்பித்து வரலாற்றுத் தவறை இழைத்துவிட்டனர்.

மட்டக்களப்பை பொறுத்தவரையில், கடந்த காலங்களில் தப்பு செய்து புலிகளால் தண்டிக்கப்பட்டவர்கள், புலிகளால் நிகழ்தப்பட்ட சகோதர இயங்கம் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள், மற்றும் வெருகல் யுத்தத்தில் இறந்தவர்களின் குடும்பங்கள், கூடவே கருணாவோடு பிரிந்த 6,000 போராளிகளின் குடும்பங்களில் சிலரென சேர்த்துப் பார்த்தால் 54,000 வாக்குகள் என்ற அடைவு நிலையை த.ம.வி.பு கட்சி எட்டியிருக்கும்.

பிள்ளையான் அவர்கள் P2P தொடர்பாக பேசும்போது கூட, “ யாழ்ப்பாணி கட்டித்து காணமல் போயிடுவான் “ என்றே கூறினாரே தவிர யாழ் மேட்டுக்குடி என்றோ, யாழ் மோலாதிக்கம் என்ற சொல்லையோ அவர் பிரயோகிக்கவில்லை. எனவே பிள்ளையானின் அரசியல் மூலதனம் ஒட்டுமொத்த யாழ் மக்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டுவதே, தவிர யாழ் மேலாதிக்கம் என்பது கற்றவர்கள் மட்டும் புரிந்துகொள்ளும் சொற்பதமாகவே இருக்கின்றது.
என்னைப் பொறுத்தவரையில் பிள்ளையான் அவர்களின் வாக்குவங்கி யாழ்ப்பாணத்தவர் மீதான மக்களின் வெறுப்பை பொறுத்தே இனிமேல் தீர்மானிக்கப்படும். தவிர அவரால் ஆங்காங்கே செய்யப்படும் சிறுசிறு அபிவிருத்திகள் பெற்றுத்தரும் வாக்கு மிக சொற்பமாகவே இருக்கும்.

அத்துடன் அரசின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின்படி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை தங்களின் கட்சியினால் செய்யப்படுவதாக கிராமப்புற மக்களை ஏமாற்றி வருகிறீர்கள். இவை அரசின் நேரடி ஒதுக்கீட்டின்படி நடைபெறுகிறது. அதற்கு ஏன் உங்கள் கட்சியின் சாயத்தை பூச முற்படுகிறீர்கள்?

நான் யாழ்பாணிக்கு எதிரானவன் என்ற எண்ணம் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் இலகுவில் பதியப்பட அதிக சந்தர்ப்பம் இருப்பதை நாடிபிடித்துப் பார்த்து காய் நகர்த்திவருகிறார். இந்த யாழ் மேலாதிக்கம் எப்போதும் கிழக்கை தனக்கு கீழான ஒன்றாகவே நோக்கி நடாத்தி வருவதாக கிழக்கில் சிலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதனால் யாழ்மேலாதிக்க கருத்தியலின் அரசியல் வடிவமே இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் அதனை கிழக்குவாழ் மக்கள் தேர்தலில் நிராகரிக் வேண்டும் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

கிழக்கு மண்ணைப் பொறுத்தவரையில் பலவருட யுத்தத்தினால் ஏராளமான இழப்புகளை சந்தித்த வரலாறு உண்டு. இவையனைத்தும் காலத்திற்கு காலம் ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்களினால் நிகழ்த்தப் பட்டவை. பிள்ளையான் என்னதான் கூவிக்கூவி அபிவிருத்தி பற்றி பேசினாலும் , யாழ் மக்கள் மீதான வெறுப்பை விதைக்க நினைத்தாலும் அடிப்படையில் தமிழ் உணர்வாளர்களும், யுத்தவடுக்களை சுமந்து வாழ்பவர்களும், தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அத்தனை அநீதிகளையும் மறந்து தன்சுயநலத்திற்காக சிங்களப் பெளத்த அரசுடன் கைகோர்த்து நடைபோடும் பிள்ளையானை ஏற்றுக்கொள்ளவதாக இல்லை. சில கல்விமான்களும், புத்திஜீவிகளும் இன்றுவரை பிள்ளையானை நிராகரிக்க இதுவே காரணம்.

அத்துடன் மட்டக்களப்பு மக்களின் பிரச்சணைகளை பாராளுமன்றம்வரை அல்லது உயர் மட்டம்வரை கொண்டுசெல்வதில் பிள்ளையான் அவர்களுக்குள்ள பங்கையும் இங்கு நோக்குவது அவசியமாகின்றது. என்னதான் ஆளும்அரசுக்கு ஆதரவுதெரிவிக்கும் கட்சியாக இருந்தாலும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளையே பிள்ளையானால் மட்டக்களப்பு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமே தவிர மட்டக்களப்பு மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்ய முடியாத மக்கள் பிரதிநிதியாகவே பிள்ளையான் உள்ளார். இதற்கு உதாரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்திற்கென பரிந்துரைக்கப்பட்ட இருதயவியல் பிரிவிற்கான இயந்திரம் களுத்துறை மாவட்டத்திற்கு அரசினால் கைமாற்றிவிடும்போது பிள்ளையான் அவர்களால் பாராளுமன்றத்தில் எழுந்துநின்று ஒருவார்த்தை கூட அரசை எதிர்ந்து கேள்விகேட்ட முடியாதவராகவே காணப்பட்டார். அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களுக்காக குரல் கொடுத்து அரசை பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார்.

வாய்மூடி ஏதும்பேசாமல் அரசுக்கு ஆதவுயெனும் பெயரில் தன்மானத்தை அடகு வைப்பதைவிட, தேவையானவற்றிற்கு ஆதவும், தமிழருக்கெதிரான விடயங்களுக்கு எதிப்புக் காட்டும் அரசியலை பற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாகவுள்ளது. விடுதலைப்புலிகள் என்ற ஒன்று தற்பொழுது இல்லாதநிலையில் நீங்கள் தொடர்தும் உயிர்ப்பயம் கருதி அடமான அரசியல் செய்யவேண்டியதேவை இல்லாத நிலையே காணப்படுகிறது. அரசை எதிர்த்து பேசுவதால் கூட்டமைப்பு எதனை சாதித்துவிட்டது என்று நீங்கள் கேட்கலாம். இன்று பாராளுமன்றத்தில் தமிழர்கள் எதிர் நோக்கும் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றி சாணக்கியன் பேசுவதால்தான் உங்கள் வீட்டு முச்சந்தியிலுள்ள அரசமரத்தடி பிள்ளையார் கோயில் புத்தர் விகாரையாக மாற்றப்படாமலுள்ளது. நீங்கள் வாழும் தமிழர் பிரசேசங்களில் தமிழ் தேசிய திரைச்சீலை தொங்குவதால் தான் அதை அகற்றி பெளத்த கொடியை அரசு ஏற்ற சற்று தயக்கம் காட்டுகிறது.

தமிழருக்கு இலங்கைத்தீவில் சுதந்திரமில்லை என்பதற்கத்தானே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராடினீர்கள். உங்கள் 14 வருட போராட்டம்மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? கட்சியமைத்து அரசியலில் ஈடுபட்டு முன்னாள் முதலமைச்சராக இருந்ததிலிருந்தும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதிலிருந்தும் காலத்திற்குக் காலம் ஆட்சிபீடமேறும் சிங்களபேரினவாத அரசுபற்றி நீங்கள் புரிந்துகொண்டதென்ன? அரசு தமிழர்களுக்கு உரிமையொன்றை வழங்கும் மனநிலையில் உள்ளதா? அதுபற்றி எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா?

முதலில் அபிவிருத்தி அதன்பின்பே அரசியல்தீர்வு என்பீர்களாயின், நீங்கள் நடாத்துவது உங்கள் ஆதாயம் சார்ந்த அரசியல். கிழக்கை சிங்கப்பூராக மாற்றியபின்பே அரசியல் தீர்வுபற்றி பேசுவேன் என்றால் அது நடக்கவாய்ப்பேயில்லை. கிழக்கில் மாற்று அரசியல் கட்சி உருவாகுவதையோ, அல்லது வளர்வதையோ யாரும் இங்கு தடுக்க முற்படவில்லை! மாறாக நீங்கள் உருவாக்கும் மாற்று அரசியல் உங்கள் பாதுபாப்பு சார்ந்ததாகவும், ஆளும் அரசில் பதவிசார்ந்ததாகவும் முன்னெடுத்திச் செல்வதையே இங்கு எதிர்க்கிறோம். அரசின், தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உட்படுவதை எதிர்க்கின்றோம். இவ்வாறு செயற்படுவதால் உங்களால் கிழக்கிக்கு எதிர்காலத்தில் எந்தத் தீர்வையும் பெற்றுக்கொடுக்க முடியாது.

தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள் அல்லது அதுபற்றி விமர்சனங்கள் இங்கு முன்வைப்பவர்கள் அதற்கு மாற்றிடாக த.ம.வி.பு கட்சியை பரிந்துரை செய்கிறீர்களா? உங்கள் விடை ஆம் என்றால் சிங்களப் பேரினவாத அரசு தேடிக்கொண்டிருப்பது உங்களைப் போன்றவர்களையே ! தமிழ் தேசிய எதிர்பாளர்களிடம் ஒரேயொரு வினாவை கேட்க விரும்புகிறேன். கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒரு தீவில் தவிக்கவிடப் பட்டிருக்கிறார்கள். அவர்களை நோக்கி இரண்டு படகுகள் மீட்க வந்துகொண்டிருக்கின்றது. அனைவரும் ஏதாவதொரு படகில் ஏறவேண்டும். ஒன்று சிங்களப் பேரினவாத கொடியுடன் வரும் படகு. இதில் அமர்ந்திருப்பவர் தற்போதைய அரச தலைவர்களுடன் பிள்ளையான். அவரின் படகில் ஏறினால் சிங்கள பெளத்த அரசின் கொள்ளை சார்ந்து உங்களை அழைத்திச் செல்லும். மற்றது தமிழ் தேசியப் படகு. அதில் சம்பந்தன் ஐயா தலைமையில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள். அதில் ஏறினால் உங்களை தமிழர்களின் உரிமை சார்ந்து அழைத்துச் செல்லும். இவ்விரண்டு படகில் எதில் ஏறுவது தமிழர்களின் எதிர்காலத்திற்கு உகந்தது என்று கூறுங்கள்?

பிள்ளையான் அவர்கள் இரண்டும் சாராத ஒரு நடுநிலையான மூன்றாவது படகில் கிழக்கு மக்களை காப்பாற்ற வந்தால் ஒருவேளை நானும் அப்படகில் ஏறுவதுபற்றி யோசித்திருப்பேன். உங்களால் ஏன் முடியாமல் போனது?

பிள்ளையான் அவர்களே தற்போது நீங்கள் 46 வயதில் உள்ளீர்கள். யாழ் வெறுப்புணர்வை வைத்து இன்னும் 5 தடவைகள் பாராளுமன்றத் தேர்தலில் ஒருவேளை வெற்றிபெற்றால் போதும். அப்போது உங்கள் வயது 75 ,76யை கடந்திருக்கும். வெற்றிகரமாக சிங்கள பெளத்த அரசிலை ஆதரித்த தமிழ் தலைவர் என்ற பெருமையை பெற்றிருப்பீர்கள். அரசியலிருந்து ஓய்வுபெற்றவராய் உங்கள் வயோதிக காலத்தில் முடிதிருத்துவதற்காக உங்கள் பாதுகாப்பிற்காக இருவர் துனையுடன் ஒரு சலூனுக்குச் செல்வீர்கள். அப்போது நீங்கள் செல்லும் வீதிகளின் பெயர்கள் சிங்கள மற்றும் சீன மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். பஸ்களில் சீன மொழியில் ஊர் பெயர் எழுதியிருக்கும். திருமலை வீதியில் பிறின்ஸ் காசிநாதர் ஐயா முடி வெட்டிய இடத்தில் ஒரு சீன வம்சாவளியைச் சேர்ந்த இலங்கையில் பிறந்த ஒரு இளம்பெண் சலூன் நடாத்திக் கொண்டிருப்பாள். அவளிடம் நீங்கள் தட்டுத் தடுமாறி தெரிந்த சீன மொழியில் பேச முற்படுவீர்கள். உங்கள் ஆட்சி தொடர்ந்தால் மட்டக்களப்பின் எதிர்காலம் இனிமேல் இப்படித்தான்….

நன்றி: அடங்கமறு தமிழா.

 

 

https://www.meenagam.com/பிள்ளையானின்-பிரதேசவாதம/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுய நலனுக்காக பிரதேசவாதத்தை தூக்குபவர்களால் தான் பெரும் ஆபத்துக்கள் உள்ளது. இவர்கள் இனவாத சிங்களத்தை விட ஆபத்தானவர்கள். தேவைப்பட்டால்  கிழக்கு-வடக்கு என ஒரு கலவரத்தையே உருவாக்க கூடியவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.