Jump to content

வான்புலிகளின் வானூர்திகள் | ஆவணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளிடம் இருந்த வானூர்திகளைப் பற்றியே. இங்கு நான் எழுதும் அனைத்தும் இறுதிப்போரில் சிங்களப்படைகள் வெளியிட்ட படங்கள், மற்றும் ஓர் நெடும்தொடராக வெளிவந்த கட்டுரை ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதுகிறேன். இற்றைய தேதிவரை உலகில் இருந்த இருந்துள்ள அனைத்து அமைப்புகளிலும் நடைமுறையரசுகளிலும் தமிழீழ நிழலரசை நடாத்திய த.வி.பு. மட்டுமே சொந்தமாக வானூர்தி கட்டுமான திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தவர்கள், அதுவும் அந்தக்காலத்திலேயே!

.

  • புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (உறுதிப்படுத்தப்பட்டவை): 11
  1. கொச்சு இலகு கீழிதைகள் (micro light gliders) - 2
  2. தற்சுழல் பறனை(Gyroplane) - 2
  3. சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5
    1. செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2
  4. வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft)- 2

.

  • புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (பூதியல் சான்றுகளோடு உறுதிப்படுத்தப்பட்டவை): 7
  1. கொச்சு இலகு கீழிதைகள் (Micro light gliders) - 1
  2. தற்சுழல் பறனை(Gyroplane) - 2
  3. செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2
  4. வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (Radio controlled model aircraft)- 2

.

  • கடலில் வைத்து அழிக்கப்பட்டதாகக் கருதப்படும் புலிகளின் வகை அறியில்லா வானூர்திகள் - 3
  1. நான்காம் ஈழப்போரில், 7 ஒக்டோபர் 2007 அன்று சிங்கள சிறீலங்காக் கடற்படையால் தாட்டப்பட்ட(sunk) விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவிற்குச் சொந்தமான படையேற்பாடு(logistics) கப்பலான எம்.வி.மற்சுசிமா இல் இலகு வானூர்திகள் இருந்த உளவுத் தகவல்கள் தமக்கு கிடைத்திருந்ததாக சிறீலங்கா கடற்படையின் முன்னாள் சேர்ப்பன்(Admiral) 'சயந்த கொலம்பக' செவ்வி ஒன்றின் போது தெரிவித்துள்ளார். அந்த வானூர்திகளின் எண்ணிக்கை மொத்தம் மூன்று என்று சிங்கள புலனாய்வாளர் 'ரொகான் குணரத்ன' தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவிட்டுள்ளார். ஆனால் இவை எதற்கும் பூதியல்(Physical) ஆதாரங்கள் இல்லை. அனைத்தும் வாய்மொழியே!

→ஆதாரம்:Rohan_Gunarathne.pd

(கப்பலுக்குள் இருந்ததோ இல்லையோ... எது எப்படி பார்த்தாலும் வான்கரும்புலி வானூர்தியாக போனவற்றைத் தவிர மேலும் மூன்று இருந்துள்ளது.)

 

  • புலிகளால் வானூர்திக்கென ஆக்கப்பட்ட மாதிரி
  1. விதமறியா கொச்சு இலகு வானூர்தி மாதிரி (unknown type micro light aircraft's model )- 1

 

  • 87 களில் வெள்ளோட்டம் விடப்பட்ட வானூர்தி (தோல்வி)
  1. உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்திகள் - 2

 


 

  • புலிகளின் வானூர்தி கட்டுப்பாட்டு அறை:

main-qimg-97e1081a354cd93b9819c2f744825f79

main-qimg-52f693f24c01a7f5a1a0fd01243437bb

 

 


87 இருந்தே நான் கணக்கைத் தொடங்குகிறேன்..

 

1) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்தி

  • உருவாக்கியவர்: லெப். கேணல் அப்பையா
  • இருப்பு எண்ணிகை - 2

புலிகளின் முதல் விமானம் -(இக்கட்டுரையானது புலிகள் காலத்தில் எழுதப்பட்டமையால் நம்பத் தகுந்தது . எனவே வாசித்துப் பாருங்கள்.. )

இவ்வானூர்தியானது 1987 'லிபரேசன் நடவடிக்கை'யின் போது வல்வெட்டித்துறையில் இருந்த புலிகளின் படைத்தளத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. இதுவே அக்காலத்தில் ஆதாரத்தோடு வெளிவந்த புலிகளின் முதல் வானூர்தி. இதே போன்று மற்றுமொரு வானூர்தியும் அங்கிருந்ததாகவும் மேற்சுட்டியுள்ள கொழுவியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

main-qimg-57af8a544be088569c3e6a16f8a9d41a

'படிமப்புரவு: ஈழ ஆதரவு வலைத்தளம் ஒன்றில் இருந்து'

இந்த வானூர்தியின் தோற்றமானது பார்ப்பதற்கு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வானூர்தி போன்றுள்ளது. இது புலிகளின் உள்நாட்டு மானுறுத்தமாகவும் (indigenous manufacture) அறியப்படுகிறது. படத்தின் பின்னணியில் தெரிவது அழிந்துபோன ஓர் கட்டடம். அவ்வலைத்தளத்திலும் ஓர் தொழிற்சாலையில் வானூர்திகள் தரித்து நின்றபோதுதான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.. இது கொழுவியின் தகவல்களை உறுதிப்படுத்துவதுடன் இரண்டும் ஒன்றிசைவாகிறதல்லவா. இது என் துணிபு!

 


 

கொச்சு இலகு கீழிதை (micro light glider) :

→கொச்சு- சேர நாட்டு வழக்கு (எ.கா: கொச்சு வள்ளம்.. இருப்பதிலேயே சிறிய வள்ளம்)

இதே போல் புலிகளிடம் மொத்தம் இரண்டு வானூர்திகள் இருந்ததாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

  • இருப்பு எண்ணிகை - 2

→ கீழிதை - 1

main-qimg-06f4cc3c5d71d1510496435c89775cb4

'இடது புறத்தில் நிற்பவர் கேணல் சங்கர் ஆவார். இவர்தான் வரலாற்றுக் காலத்தில் தமிழர் வான்படையின் முதல் கட்டளையாளர் என அறியப்படுபவர் ஆவார்..'

main-qimg-0ab30d600c338d322087d23c8a6e2db5

'கீழிதையின் உடல்'

main-qimg-bc899a366741bb50d61550368ce823fa

'கீழிதையின் பின்பக்கம். வெள்ளை நிறத்தில் தெரிவதுதான் அதன் சுழலி'

main-qimg-ce78e40c81a57831ff81b849b186b65d

'கீழிதையின் பக்கவாடு. '

→ கீழிதை - 2

இரண்டாவது கீழிதை ஒன்று புலிகளிடம் இருந்ததாக சிங்களம் தான் கூறுகிறது.. ஆனால் இருந்தமைக்கான பூதியல் ஆதாரம் எதையும் இன்று வரை சிங்களம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

தற்சுழல் உலங்கூர்தி/தற்சுழல் பறனை (Gyrocopter/Gyroplane)

  • இருப்பு எண்ணிகை - 2

 

1) பக்கப்பக்க இருக்கைகள் கொண்ட தற்சுழல் பறனை

main-qimg-fc8dbb8b42dbc6271a3196477ead6423

'தற்சுழல் பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருந்துவதைக் காட்டும் படம்'

main-qimg-dd88daeeae935cce26704f0e871b50cb

'மூலைப் பார்வை'

main-qimg-56971861090f297175d93addb5cb1fdf

'முன்பக்க பார்வை'

main-qimg-dbaddec7411f4d95cbafa3eccc407ded

'தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.'

மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் லெப்.கேணல் முல்லைச்செல்வன்(குசந்தன் என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும்.  அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

main-qimg-c55510cf376a9f21ff4e672d00a1645c

'தற்சுழல் பறனையின் வால்பகுதி'

main-qimg-406159ccf5c2b90069ae15572e57c1dd

'தற்சுழல் பறனையின் பின்பக்கச் சுழலி'

 

முன்-பின் இருக்கைகள் கொண்ட தற்சுழல் பறனை

Tamileelam Air Force pilots - Achchuthan and one more.jpg

'தமிழீழ வானோடிகள் இருவர் (அச்சுதன் மற்றும் இன்னொருவர்) வானூர்தியோடு நின்று நிழற்படத்திற்கு பொதிக்கின்றனர்'

 

Tamileelam Air Force pilot.jpg

'தமிழீழ வானோடி ஒருவர் நிழற்படத்திற்கு பொதிக்கின்றார்'

 


 

 புலிகளின் வான்படை வானூர்தியொன்றின் பொறி.. எதனது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மேலுள்ளவற்றினது மட்டும் இல்லை என்று உறுதியாத் தெரிவித்துக்கொள்கிறேன். இது சிறிய வகை இலகு வானூர்திகளிற்கான பொறியாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

பொறி: 80 குதிரைவலு எஃவ்-30 காற்றால் குளிராகும் பொறி (80 HP F-30 air cooled engine)

main-qimg-83f8540e322d67478c051dbabf4055a0

'பின்பக்கத் தோற்றம்'

main-qimg-64c176fcda704ab83a6f27ffce137e94

'பக்க வாட்டுத் தோற்றம்'

 


சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5

  • செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2

இதுதான் புலிகளின் குண்டுதாரி வானூர்தி. இது செக் குடியரசின் உண்டாக்கல்(made) ஆகும். இவற்றில் களத்தில் 2 உம், தருவிக்கப்பட்டு புலத்தில் (ஓர் ஐரோப்பிய நாட்டில்) தரித்த நிலையில் மூன்றும் இருந்தன. இந்த ஐந்து வானூர்திகளும் புலிகளிடம் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுஇதைப் புலிகளே உறுதிப்படுத்தும் விதமாக வான்கரும்புலித் தாக்குதல் முடிந்த பின்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தம்மிடம் மேலும் மூன்று வானூர்திகள் இருப்பதாக கூறியிருந்தனர் என்பது இங்கு நினைவுகூரத் தக்கது. ஆனால் புலத்தில் இருந்த மூன்றிற்குமான பூதியல் ஆதாரங்கள் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. 

புலிகளின் வானூர்திகளின் செங்குத்து நிலைப்படுத்திகளில்(vertical stabilizer) இரண்டு தொடரிலக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. முறையே: 905, 906

main-qimg-4226e92dc347c69e3f1bb9917aac1ba6

'தாக்குதல் வானூர்தியாய் மாற்றும் முன்னர் எடுக்கப்பட்ட நிழற்படம்'

main-qimg-95898eb71d09da6a807a76902cc67249

'தாக்குதல் வானூர்தியாய் மாற்றிய பின்னர் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட(edited) நிழற்படம்'

main-qimg-7db746b9837455dfb9b2138f77787770

(விதப்பங்கள்- specifications, பெருமம்- maximum, சில்லுத் தடம் - wheel track, நெடுக்கம் - range, ஏறோட்டம்- Take-off run, இறங்கோட்டம்- Landing run)

 

main-qimg-d7149e82a5a255c810d871701652aa05

'சிலின் 143-இன் கொடிஞ்சி (cockpit)'

 

main-qimg-af473c904589b418902a66b0b306748e

(மானுறுத்தம் - manufacture)

main-qimg-f6dad9a7a8a75ff399afe7a3dad3db60

'வான்புலிகளின் வானூர்தித் தீக்குடுக்கை'

இது போன்ற குண்டுகளை அந்தக் காலத்தில் தீக்குடுக்கை என்று சொல்வார்கள். இதுவே மிகவும் பொருத்தமானச் சொல். ஆனால் இது இன்று வழக்கொழிந்துவிட்டது.

  • குண்டின் நீளம் : 114cm-127cm
  • குண்டின் விட்டம்: 10-12"
  • குண்டின் மொத்த எடை : 66 கி.கி.
  • வெடிபொருள் நிறை : 55 கி.கி,
  • வெடிபொருள் வகை : C-4 குண்டுச்(ball) சிதறல்களுடன் .

main-qimg-e0c6cd7391166f598b84bd6301677b60

'குண்டுச்(ball) சிதறல்கள் கோர்வையாய்  | தீக்குடுக்கையின் முன்பகுதி '

 

main-qimg-1f757abdba9deaa39f59fcd804228555

'குண்டுச்(ball) சிதறல்கள் ஒற்றையாய்'

 

main-qimg-aeea4029eaddae3bbe7c9dfb1a3818f0

'வான்புலிகளின் வான்கலவர்களால்(airmen) சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில்(electric bomb track) வழிகாட்டப்படாத குண்டுகள் (unguided bombs) பொருத்தப்படுகின்றன.'

 

main-qimg-391c2eb673c2f4e6b1e7820a98769513

main-qimg-e625ff8079bc83a9e9f7c8996953da1f

'சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில் ஆற்றப்படாத குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.'

 

main-qimg-6ef67416607a2c262ad3d04969028820

'சிலின் குண்டுதாரியின் அடிப்பக்கம்'

 

main-qimg-c014ad55024042de977b5251c9317015

"வன்னியில் இருந்த ஓர் வான்பொல்லத்தில் (air strip) இருந்து சிலின் மேலெழும்புவதற்காக இரவு நேரத்தில் ஓடுதளத்தில் ஓடியபோது"

→ கடைசியாய் வான்கரும்புலித் தாக்குதலிற்குச் சென்ற வான்கரும்புலி வானோடி லெப்.கேணல் சிரித்திரன் அண்ணாவிற்கு கையிலும் நெஞ்சிலும் வெடி விழுந்ததாகவும், அதனால்தான் இவரால் மேற்கொண்டு ஓட்ட முடியாமல்போய் விழுந்தார் என்றும், நான் இரணப்பாலையில் இருந்தபோது (தாக்குதல் நடந்த 2 ஆம் நாள் - அப்போது எனக்கு 9 வயது) எனக்கு ஒருவர்(அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை) தெரிவித்தார்.

→ அறியில்லா இரண்டு வான்புலிகளின் துணைவி/மனைவி-களின் மனை திருவையாறு(கிளி.) SSLR மிதிவண்டி கடைக்கு('SSLR சைக்கிள் கடை' என்றால் எல்லோருக்கும் தெரியும்) இடது பக்கமாக போகும் ஒழுங்கையில் 2008 வரை இருந்தது. இருவரும் சிங்களத்திதான். அந்த வீடு ஒருமாடி கட்டடம் ஆகும். 

மூன்றாவது வானூர்தியிற்கான பாகங்கள் தமிழீழத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால் சிறீலங்கா படையினரால் சிலினிற்கான உதிரிப்பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வான்கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டிலும் இன்னொன்று இருந்தமைக்கான மற்றொரு ஆதாரமாக நான் வைப்பது யாதெனில் மே 13, 2009 அன்று சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு பிலிறுந்தியே (Propeller) ஆகும்.

இதோ உங்களின் பார்வைக்காக…

main-qimg-32120c9b88b3f5efd05751d70e587d08

'புதைகுழியில் இருந்து பிலிறுந்தி வெளியில் கொண்டுவரப்படுகிறது'

main-qimg-c463b9ae8be58c976eb7a9ff57e10d11

'இரண்டு படத்திலும் உள்ள பிலிறுந்தியும் ஒன்றே. இரண்டாவது படத்தில் பிலிறுந்தியின் நடு மூடி திறந்து வைக்கப்பட்டுள்ளது'

இந்த பிலிறுந்தி உதிரிப் பாகமாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு.

அதேநாளில் சிங்களப் படைகள் இன்னுமொன்றைக் கண்டெடுத்தன. அதுதான் கீழுள்ள சில்லாகும். இது ஒரு இலகு வானூர்திக்கான சில்லாகும். ஆகவே இது புலிகளிடம் இருந்த அந்த சிலினிற்கானதாகவும் இருந்திருக்கலாம், அல்லாமல் உதிரிப் பாகமாகவும் இருந்திருக்கலாம்.

Zlin Z 143 wheel, captured on may13, 2009 by Sri lankan state terrorists.jpg

'சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட முன்பக்க ஒற்றைச் சில்லு'

 


 

வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft )

இவ்வானூர்திகளைப் புலிகள், தமது உளவு சேவைக்காகவோ அல்லது புலிகளின் வலவனில்லா வானூர்திகளின் முன்மாதிரி வானூர்தியாகவோ இருப்பதற்கு தருவித்திருக்கலாம் என்பது என் துணிபு.

  • → (1)

இந்த வண்டு கடந்த 2007 ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் கடற்புலிகளின் வழங்கல் அணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும்.

  • உடல் நீளம்: 5.5அடி
  • இறக்கை நீட்டம்(wing span): 13 அடி (தோராயமாக)

main-qimg-4086366700bc238fd558c1752ec32a77

அதற்கான வானலை கட்டுப்படுத்தி(radio controller)

main-qimg-61933bd9e6419da5f410a691f9799d47

  • செசுனா N739RF (Cessna N739RF)

இது சீகல் மாதிரியைச்(seagull model) சேர்ந்த KIT விதமான வானூர்தியாகும்.

உடல் பகுதிகள் உதிரிகளாக:

main-qimg-c05d57a9ec2ee2bff08fa460d15494b9

 

main-qimg-93b3d53801c69bb50b5c5002aa9146ef

 

அதற்கான வானலை கட்டுப்படுத்தி (radio controller):-

main-qimg-7716faf8855d067643b6d42103fcd8f3

 

அதை ஒன்று சேர்ப்பதற்கான கையேடு:

main-qimg-9f4e608e6c2d2afa7949febd08205ef8

 


  • மாதிரி கொச்சு இலகுவானூர்தி (Model micro light aircraft)

இவ்வானூர்தி மாதிரி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும், அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களினுள் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் இருந்தன. இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் அங்கிருந்தன.

main-qimg-89f0d771d36d9a3d2e8de4cc60415eb2

'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்'

 

main-qimg-8083eedaa5f3a3ec3db83c8295e7c4b8

'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்'

main-qimg-b420f5804c10ec4ce20599f469777663

'எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் மையப்பகுதி'

 

main-qimg-8e6d8717a89055b77618f807927a6f87

'வானூர்தி மாதிரிப்படம்'

 

main-qimg-6dc8ee66bb73990608008af3e4c57f82

'வானூர்தி மாதிரிப்படம்'

மேற்கண்ட வானூர்தி பற்றிய செய்திகள் இந்நிகழ்படத்தில்(video) உண்டு. மேலும் நான் மேற்கூறியிருந்த அந்த வானூர்திப் பட்டறையையும் புத்தகங்களையையும் இதில் காணலாம்.

 

 


  • புலிகளின் வான்படை அணியங்கள்(accessories)

தேவிபுரத்தில், 'தெறுவைக்குளம்' என்ற சிற்றூரில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்களப் படைகளால் தோண்டியெடுக்கப்பட்ட புலிகளின் வான்படை அணியங்கள்(accessories):-

main-qimg-df41d8c102def05dfc7c15bdf18e85d0

'பயிற்சி பாவனையாக்கி (training simulator)'

main-qimg-968f1dcd44817e4316cf7e6c3b3c4f5b

'பறப்பு பாவனையாக்கி (flying simulator)'

main-qimg-20495e89509e121a66e4f982f1db3c29

'ஓடுதள மின்சூழ்கள்'

main-qimg-967460dbf47f8cec182df8f86e5af9b0

'நீல நிறத்தில் தெரிவது  சிறிலங்கா படைத்துறையால் செய்து வைக்கப்பட்ட போலி பறனை உடுப்பு ஆகும். இது புலிகளினது அல்ல.'

main-qimg-e98240f7b054f07e56305a41d143878c

 

main-qimg-207a3ff3518e95bb2e4257bba6c21830

'வட்டைகள்(tires) மற்றும் ஒருசில கோப்புகள்'

main-qimg-47e06dc71347b212688c930f3e5fb653

'ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளது தொடர்பாடல் கரணங்கள் (communication device) என்று நினைக்கின்றேன். மற்றையது கதிவீ காட்சியக கரணமாக (RADAR display device) இருக்கலாம் என்று நினைக்கின்றேன், சரியாகத் தெரியவில்லை.'

main-qimg-8db6662f21753873a073d046233b2e12

main-qimg-fd0a33904c880c79f5ccdbdd38895307

main-qimg-2efdeedf1d13fc78a9e95c5c4a00743f

main-qimg-24948a56444d7334759d37c3937ea5c5

main-qimg-1a4fedcb0a891e09eed75fde0ca2ec5a

main-qimg-59e9b95f601f8512314b12caeb962231

main-qimg-e40cfeedc5431a4903b37a23727fa9ef

 

சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 12 வானூர்தி வட்டைகள்:

videoplayback_Moment.jpg

vhj.jpg

 

2 முதன்மைச் சில்லுகள்:

biuh.jpg

 


உசாத்துணை:

படிமப்புரவு:

தொகுப்பு & வெளியீடு

நன்னிச்சோழன்

Edited by நன்னிச் சோழன்
.
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நிகழ்படங்கள்

 

 

 

 

இவற்றை பதிவிறக்க இந்த கொழுவியை பயன்படுத்தவும்: https://getfvideo.com/

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • இவர்தான் நான் மேற்குறிப்பிட்ட தெய்வீகன் என்ற பெயருடையவர். .. இவர் உண்மையிலேயே ஒரு வானோடிதான். மேலே நான் இணைத்துள்ள படிமங்களில் லெப். கேணல் சிரித்திரனுக்கு பக்கத்தில் நிற்பவர் இவர்தான். 
  • வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்த போது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் தாய்நாடு சென்று உயிர்பிழைக்கலாம் என்று எண்ணி திரும்பியபோது சிங்களவர்களால் கைதுசெய்யப்பட்டு ஒரு காட்டில் வைத்துக் கொல்லப்பட்டார்.  

 

  •               அதற்கு எமது எலும்புத்துண்டு ஊடகங்களும் புலிப்பூச்சாண்டி ஊடகங்களும் 'விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க வந்தவர்கள் என்று சிங்களவன் சொன்னதையே சத்தி எடுத்து' இவர்களை கொச்சைப் படுத்தியது வேதனையான தகவல்.

 

theviyan1.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • உயிரோடு உள்ள தமிழீழ வானோடிகள்:

 

kusanthan alias mullaichchelvan.jpg

'இள பேரரையர்(லெப். கேணல்) முல்லைச்செல்வன் (குசந்தன் என்றால் பலருக்கும் தெரியும்) | படிமப்புரவு: CID | சொறிலங்காக்காரர் இந்த படிமத்தை அந்த தற்சுழல்பறனை நிகழ்படத்தில்(video) இருந்தே வெட்டி எடுத்தவங்கள்.'

இவர் 2014 ஆம் ஆண்டு சிங்கள புலனாய்வுத் துறையால் மலேசியாவில் வைத்து சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் பல கடுமையான உசாவலுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் இவர் வவுனியாவில் பொறியியலாளராக வேலை பார்த்து வந்தவர். 

இவர் வான்புலிகளின் முதலாவது கட்டளையாளரும் தமிழீழத்தின் முதலாவது வானோடியுமான பேரரையர்(கேணல்) சங்கர் அவர்களின் மனைவியான குகா(மதி அவர்களோடு இருந்து இறந்தவர். இவரது சடலத்தை வைத்து இவரது இறப்பை வெளிநாடு ஒன்றில் உள்ள இவரது மகள் உறுதி செய்தார்) அவர்களின் சொந்தக்காரப் பெண்ணோ இல்லை அவர்களின் மகளையோ திருமணம் முடித்தவர். சரியாகத் தெரியவில்லை.

7aam-arivu-pressmeet_13208100648.jpg

'திருமண 'விழா'வின் போது'

 

 

 

achchuthan alias suresh.jpg

'(நிலை தெரியாது) சுரேஸ் எ அச்சுதன் | படிமப்புரவு: CID'

42560438_2465144060170069_779436543025610752_n.jpg

'சுரேஸ் எ அச்சுதன் அவர்களும் பேரரையர்(கேணல்) சங்கர் அவர்களும் | கவனி: அச்சுதன் அவர்கள் பறனை உடுப்பு(Flight suit) அணிந்திருக்கிறார்' 

 

unnamed (6).jpg

'இள பேரரையர்(லெப். கேணல்) முல்லைச்செல்வன், பேரரையர்(கேணல்) சங்கர், அச்சுதன் எ சுரேஸ் ஆகியோர் ஒன்றாக நிற்கின்றனர் | இதுவும் அந்த தற்சுழல்பறனை நிகழ்படத்தில் இருந்துதான் எடுத்தவங்கள்'

  • குறிப்பு: நானும் அந்த நிகழ்படத்தில் இருந்துதான் நிறைய வெட்டி எடுத்தனான்.😜

(இவர்களைத் தவிர வேறு யாரேனும் உள்ளார்களோ என்பதைப் பற்றி நானறியேன்)

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  •   வான்புலிகளின் படிமங்கள்(Images) - நான் சேகரித்தவை & உருவாக்கினவை

 

 

  • புலிகளாலையே எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்ட இலகு வானூர்தி ஒன்றினது எச்சம்:-  http://www.airforce.lk/news.php?news=443

 

 

 

  • வான்புலிகளின் வான்பொல்லங்கள்(Airstrips) இருந்த இடங்கள் (ஆவணம்):-

 

 

 

  • வான்புலிகளின் அலுவல்சாரல்லாத பறப்புகள்:

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்னிச்சோழன் வணக்கம், உங்களுடைய இந்த முயற்சி மிகவும் பெறுமதி வாய்ந்தது.. ஆனாலும் ஒரு விஷயம் மனதை உறுத்துவதால் கூறுகிறேன்..

முன்பு புலிகளின் படையில் இருந்தவர்கள், 
இப்பொழுது இராணுவதில் பிடிபட்டும், சரணடைந்தும், காணாமலும், கண்கானிப்புடனும், பல விதமான மனவுளைச்சல்களுக்கும், கெடுபிடிகளுக்கும் ஆளாகி,  இலங்கையில் வாழ்கிறார்கள் என்பதனால் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் பெயர்களையோ, புகைப்படங்களையோ போடுவது சரியா?

 

On 3/6/2021 at 01:23, நன்னிச் சோழன் said:

              அதற்கு எமது எலும்புத்துண்டு ஊடகங்களும் புலிப்பூச்சாண்டி ஊடகங்களும் 'விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க வந்தவர்கள் என்று சிங்களவன் சொன்னதையே சத்தி எடுத்து' இவர்களை கொச்சைப் படுத்தியது வேதனையான தகவல்.

👆🏽நீங்களே ஒரு உதாரணத்தையும் கூறியிருக்கிறீர்கள் என்பதால் பெயர்களை/படங்களை இணைக்கும் பொழுது கொஞ்சம் கவனத்தில் எடுப்பது நல்லது என நினைக்கிறேன்.. 

பி.கு:
பிரபா என்ற பெயர் தனியே ஆண்களுக்கு மட்டும் உரித்தானதில்லைதானே 😊!
நன்றி. 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்னிச்சோழன் வணக்கம், உங்களுடைய இந்த முயற்சி மிகவும் பெறுமதி வாய்ந்தது.. ஆனாலும் ஒரு விஷயம் மனதை உறுத்துவதால் கூறுகிறேன்..

முன்பு புலிகளின் படையில் இருந்தவர்கள், 
இப்பொழுது இராணுவதில் பிடிபட்டும், சரணடைந்தும், காணாமலும், கண்கானிப்புடனும், பல விதமான மனவுளைச்சல்களுக்கும், கெடுபிடிகளுக்கும் ஆளாகி,  இலங்கையில் வாழ்கிறார்கள் என்பதனால் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் பெயர்களையோ, புகைப்படங்களையோ போடுவது சரியா?

 

👆🏽நீங்களே ஒரு உதாரணத்தையும் கூறியிருக்கிறீர்கள் என்பதால் பெயர்களை/படங்களை இணைக்கும் பொழுது கொஞ்சம் கவனத்தில் எடுப்பது நல்லது என நினைக்கிறேன்.. 

பி.கு:
பிரபா என்ற பெயர் தனியே ஆண்களுக்கு மட்டும் உரித்தானதில்லைதானே 😊!
நன்றி. 

 

தங்கள் ஆலோசனையினை நான் ஏற்கிறேன் ஐயை(Madam/Miss). இத்துடன் என்னிடம் மட்டுமே உள்ள 
 தரைப்புலிகளின் படிமங்கள் இணைப்பதை நிறுத்துகிறேன்.  

ஆனால், ஈழ வரலாறுகளை வெளியிடும் வலைத்தளங்களிலும் ஜெட்டி போன்ற பன்னாட்டு வலைத்தளங்களில் உள்ள படிமங்களையும் நான் யாழில் இணைக்கலாம் என்று எண்ணுகிறேன். தங்கள் கருத்து என்ன ஐயை? ....  ஏற்கனவே வெளிட்டவற்றை மீண்டும் வெளியிடலாம் என்பது என்னுடைய கருத்தாகும்.

மேலும் நான் இணைத்த அந்த 50+ கடற்புலிகளின் அணிநடை படிமங்கள் யாவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டவையே.. (2004 ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட வலைத்தளத்தில் இருந்தே எடுத்தேன்)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, நன்னிச் சோழன் said:

 

தங்கள் ஆலோசனையினை நான் ஏற்கிறேன் ஐயை(Madam/Miss). இத்துடன் என்னிடம் மட்டுமே உள்ள 
 தரைப்புலிகளின் படிமங்கள் இணைப்பதை நிறுத்துகிறேன்.  

ஆனால், ஈழ வரலாறுகளை வெளியிடும் வலைத்தளங்களிலும் ஜெட்டி போன்ற பன்னாட்டு வலைத்தளங்களில் உள்ள படிமங்களையும் நான் யாழில் இணைக்கலாம் என்று எண்ணுகிறேன். தங்கள் கருத்து என்ன ஐயை? ....  ஏற்கனவே வெளிட்டவற்றை மீண்டும் வெளியிடலாம் என்பது என்னுடைய கருத்தாகும்.

மேலும் நான் இணைத்த அந்த 50+ கடற்புலிகளின் அணிநடை படிமங்கள் யாவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டவையே.. (2004 ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட வலைத்தளத்தில் இருந்தே எடுத்தேன்)

 

 

நன்னிச்சோழன், நீங்கள் கட்டாயம் தொடர்ந்து உங்களிடம் இருக்கும் படிமங்களை இணையுங்கள் ஏனெனில் அவை பெறுமதிமிக்கவை.. ஆனால் இப்பொழுது இருப்பவர்களின் சாதனைகளையோ, செயல்களையோ இணைக்கும் பொழுது அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தகூடாது என்பதே எனது கவலை.. அதனால்தான் தனிநபர்களின் விஷயங்களை இணைக்கும் பொழுது கொஞ்சம் கவனம் எடுங்கள் என கூறினேன் மற்றப்படி உங்களது இந்த முயற்சி மிகவும் தேவையான ஒன்று..இவைகளை பாதுகாக்கவேண்டியதும் ஒரு கடமையாகும்

இரண்டாவது.. நீங்கள் எதை இணைக்கவேண்டும், எதை இணைக்ககூடாது என்பது உங்களது தனிப்பட்ட விஷயம்.. ஆனால் ஒரு முன்னாள் புலிவீரர் இலங்கையில் ஏதோ ஒரு இடத்தில் வாழ்கிறார் என தெரிந்தால், எனது செயலால் அவருக்கு ஏதும் இடையூறு வரும் சந்தர்ப்பங்கள் இருக்குமாயின் அதைப்பற்றி மீண்டும் ஒரு முறை யோசித்தே செய்வேன்.. ஏற்கனவே இணையத்தளங்களில் உள்ளதுதானே என்பதற்காக நாங்களும் அப்படி செய்யவேண்டும் என எந்த விதிமுறையும் இல்லை.. 

நீங்கள் படிமங்களை இணையுங்கள் ஆனால் ஒன்றில் அவர்களுடைய முகத்தை மறைத்தோ அல்லது பெயர்களை விடுத்தோ இணையுங்கள்.. 

உங்களது மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்..

 

பி.கு: என்னை நீங்கள் ஒன்றில் சகோதரி என அழைத்து எழுதுங்கள் அல்லது பிரபா என அழைத்து எழுதுங்கள்..  

நன்றி. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்னிச்சோழன், நீங்கள் கட்டாயம் தொடர்ந்து உங்களிடம் இருக்கும் படிமங்களை இணையுங்கள் ஏனெனில் அவை பெறுமதிமிக்கவை.. ஆனால் இப்பொழுது இருப்பவர்களின் சாதனைகளையோ, செயல்களையோ இணைக்கும் பொழுது அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தகூடாது என்பதே எனது கவலை.. அதனால்தான் தனிநபர்களின் விஷயங்களை இணைக்கும் பொழுது கொஞ்சம் கவனம் எடுங்கள் என கூறினேன் மற்றப்படி உங்களது இந்த முயற்சி மிகவும் தேவையான ஒன்று..இவைகளை பாதுகாக்கவேண்டியதும் ஒரு கடமையாகும்

இரண்டாவது.. நீங்கள் எதை இணைக்கவேண்டும், எதை இணைக்ககூடாது என்பது உங்களது தனிப்பட்ட விஷயம்.. ஆனால் ஒரு முன்னாள் புலிவீரர் இலங்கையில் ஏதோ ஒரு இடத்தில் வாழ்கிறார் என தெரிந்தால், எனது செயலால் அவருக்கு ஏதும் இடையூறு வரும் சந்தர்ப்பங்கள் இருக்குமாயின் அதைப்பற்றி மீண்டும் ஒரு முறை யோசித்தே செய்வேன்.. ஏற்கனவே இணையத்தளங்களில் உள்ளதுதானே என்பதற்காக நாங்களும் அப்படி செய்யவேண்டும் என எந்த விதிமுறையும் இல்லை.. 

நீங்கள் படிமங்களை இணையுங்கள் ஆனால் ஒன்றில் அவர்களுடைய முகத்தை மறைத்தோ அல்லது பெயர்களை விடுத்தோ இணையுங்கள்.. 

உங்களது மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்..

 

பி.கு: என்னை நீங்கள் ஒன்றில் சகோதரி என அழைத்து எழுதுங்கள் அல்லது பிரபா என அழைத்து எழுதுங்கள்..  

நன்றி. 

பிரபா அவர்களே,


தங்கள் ஆலோசனையினை ஏற்றேன்.... இனி வெளியிடுபவற்றில் முகம் மறைத்தே வெளியிடுகிறேன். குறிப்பாக கிட்டு படையணியில் மறைத்துவிடுகிறேன்.

மேலும், எங்கேனும் தவறுகள் கண்டால் சுட்டிக்காட்டுங்கள்... 

குறிப்பு: நான் உங்களை விட வயதில் சிறியவன்... மன்னிப்பெல்லாம் வேண்டாம்.😊


நன்றி.

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/6/2021 at 02:57, பிரபா சிதம்பரநாதன் said:

நன்னிச்சோழன் வணக்கம், உங்களுடைய இந்த முயற்சி மிகவும் பெறுமதி வாய்ந்தது.. ஆனாலும் ஒரு விஷயம் மனதை உறுத்துவதால் கூறுகிறேன்..

முன்பு புலிகளின் படையில் இருந்தவர்கள், 
இப்பொழுது இராணுவதில் பிடிபட்டும், சரணடைந்தும், காணாமலும், கண்கானிப்புடனும், பல விதமான மனவுளைச்சல்களுக்கும், கெடுபிடிகளுக்கும் ஆளாகி,  இலங்கையில் வாழ்கிறார்கள் என்பதனால் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் பெயர்களையோ, புகைப்படங்களையோ போடுவது சரியா?

 

👆🏽நீங்களே ஒரு உதாரணத்தையும் கூறியிருக்கிறீர்கள் என்பதால் பெயர்களை/படங்களை இணைக்கும் பொழுது கொஞ்சம் கவனத்தில் எடுப்பது நல்லது என நினைக்கிறேன்.. 

பி.கு:
பிரபா என்ற பெயர் தனியே ஆண்களுக்கு மட்டும் உரித்தானதில்லைதானே 😊!
நன்றி. 

உங்க‌ளின் ஆத‌ங்க‌ம் புரியுது உற‌வே..........

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வான்குண்டு வீசுவதற்கென மாற்றியமைக்கப்பட்டுள்ள வான்புலிகளின் மேம்படுத்தப்பட்ட குண்டுதாரி வானூர்தியில் உள்ள கட்டுறல்கள்(Controls) - ARM

 

Control panels inside the Czech Zlin-143 improvised bombers of Sky Tigers. Note the 'Arming' sign. The craft was improvised to carry aerial bombs by the TAF.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளின் வானூர்தியின் செங்குத்து நிலைப்படுத்திகளில் தொடரிலக்கம் எழுதப்பட்டிருப்பதைக் காண்க: 905

 

அதன் வால் பகுதியில் 'SKY TIGERS' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

 

Back Part of LTTE bomber.jpg

'நீலப்புலி' வான்கரும்புலி லெப் கேணல் சிரித்திரன் செலுத்திய வானூர்தி

Edited by நன்னிச் சோழன்
  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இது போன்ற மேலும் பல ஆவணங்களைக் காண இங்கே சொடுக்கவும்:

 

 

 

 

******

Edited by நன்னிச் சோழன்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.