Jump to content

தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைக் கிளைகள் & பிரிவுகள் | திரட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் படைதுறைக் கிளையானது உலகின் அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருக்கும் மரபுவழிப்படை போன்று முப்படைகளையும் கொண்டிருந்ததது. அம்முப்படைகளுடன் சேர்த்து முற்றிலும் புதிதாக ஓர் படையையும் கொண்டிருந்தனர். அதுதான் தற்கொடைப்படை, அதாவது கரும்புலிகள் என்று அவர்கள் மொழியில். இவைதான் அவர்களிடம் இருந்த தமிழர்களின் புதுமைக்கால நாற்படைகள் ஆகும். அவை மொத்தமாக,

  1. தரைப்புலிகள்
  2. வான்புலிகள்
  3. கடற்புலிகள்
  4. கரும்புலிகள்

இத்துடன் வேவுப்புலிகள் என்னும் ஐந்தாம் படையையும் அவர்கள் வைத்திருந்தனர் . இவர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடல்லாமல் நடைமுறையரசாக(de-facto) செயற்பட்டதால் 'படைவீரர்கள்' எனாமல் போராளிகள் எனப்பட்டனர்.

  • எண்ணிக்கை: 
    • 2008 திசம்பர்: 14 ஆ சொச்சம் (மக்கள்படை நீங்கலாக) - சிறப்பு அறிக்கைப்பகுதி போராளியின் வாக்குமூலம்
    • 2009 மே முதற்கிழமை: 10 ஆ சொச்சம் (மக்கள்படை நீங்கலாக) - சிறப்பு அறிக்கைப்பகுதி போராளியின் வாக்குமூலம்
  • வீரச்சாவு = ~26,500 (2009 மே-18 வரை களமாடி மடிந்தோர்… )
  • காயமடைந்தோர்: 
    • 2009 சனவரி - மே முதற்கிழமை: ~4000 ஆ (மக்கள்படை நீங்கலாக) - சிறப்பு அறிக்கைப்பகுதி போராளியின் வாக்குமூலம்
  • ஆயுதம் மௌனித்து சிங்களத்திடம் சென்றபிறகு அங்கு சரணடைந்த தவிபு உறுப்பினர்கள் : 11,644 

இவ்வியக்கத்தினரின்,

  • பழைய பெயர்: புதிய தமிழ்ப் புலிகள் (1972 இல் 'மாமனிதர்' இராசரத்தினம் அவர்களால் முன்மொழியப்பட்ட ஆலோசனையான "தாமிரபரணி புதிய புலிகள்" என்ற பெயரிலிருந்து எடுக்கப்பட்டு சூட்டப்பட்டது)
  • புதிய பெயர்: தமிழீழ விடுதலைப் புலிகள்- தவிபு - (5-5-1976 இல் இருந்து)
    • புலிகள் - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்ற பன்மையால் பலரால் தொடர்ந்து சுட்டப்படுகின்றனர்.
  • பட்டப்பெயர்கள்:
    • இயக்கம் - இப்பெயர் கூலிப்படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கங்கள் ஒழிக்கப்பட்ட பின்னர் மக்களால் புலிகளைக் குறிக்கப் பயன்பட்டது ஆகும்.
    • கொம்பனி - படையின் ஒரு அலகான கொம்பனியை, Company என்று ஆங்கிலத்தில் புலிகள் அழைத்தனர். அதனால் புலிகளிற்கும் இதுவே பெயரானது. சிங்களப் படையினருக்கு புரியாது இருக்க புலிகளின் புலனாய்வுத்துறையினரும் மக்களுக்கு தங்களை அடையாளம் காட்ட இந்தப் பெயரை பயன்படுத்தினர். ஆகையால் இது மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. 
    • புலிப்படை - வீரத்தின் பெயரால் ஒட்டுமொத்த தமிழர் சேனையையும் குறிக்க அமைந்த பெயர்.
  • பயத்தால் பட்டப்பெயர்:
    • பீரங்கி - இது 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தில் 'கட்டாய ஆட்சேர்ப்பு' காரணமாக இளைஞர்களால் புலிகளை சுட்டப் பயன்பட்டது ஆகும்.. (அவர்களின் ஓர் குறும்படத்தில் இருந்து இப் பற்றியத்தை எடுத்தேன்)
  • செல்லப்பெயர்:
    • பெடியள்- புலிகள் இயக்கத்தின் தொடக்க காலத்தில் ஆண்களே இருந்ததால் மக்களால் பெடியள் என்று அழைக்கப்பட்டு அதுவே இவர்களை இறுதி வரையும் சுட்டலாயிற்று.
  • உலகத்தால் வழங்கப்பட்ட அடைமொழி:
    • Tamil Tigers - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்பதன் ஒருமையான 'புலி' என்பதையும், அவர்தம் இனம் தமிழர்களாகவும் இருந்ததால் இரண்டையும் ஒன்றிணைத்து 'தமிழ்ப்புலி' என்று அழைக்கப்படலாயினர். இவ்வாறு ஈழத்தினில் வழங்கப்பட்டது மிக அரிதாகும்.

 

சரி இனி ஒவ்வொரு கிளையிலுமிருந்த பிரிவுகளைப் பார்ப்போம். இப்புலனங்களை சில கட்டுரைகள் மூலமாகவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பெற்ற ஒரு சில புத்தகங்களின் துணைகொண்டும் தேடியெடுத்து தொகுத்து பதிவிட்டிருக்கிறேன். வாசித்து அறிந்து கொள்ளவும்…

நிரந்தரப்படை (ஆ & பெ):

தரைப்புலிகள் (தரைப்படை):-

  • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (இதுவே முதலாவது மரபுவழிப் படையணியாகும். இதில் வட தமிழீழத்தைச் சேர்ந்த போராளிகள் இடம்பெற்றிருந்தனர் | உருவாக்கப்பட்டது: 1991.04.10 | தரிப்பிடம்: வட தமிழீழம். தேவைக்கேற்ப சில கொம்பனிகள் தென் தமிழீழத்தை நோக்கியும் நகர்த்தப்பட்டது| எண்ணிக்கை: 1000–2000 (2008)
    • வான்காப்பு அணி 
    • கனவகை ஆயுதப்பிரிவு 
    • சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு 
    • சாள்ஸ் அன்ரனி வேவு அணி 
    • பாலா மோட்டார் அணி
    • இராகசீலம் இசைக்குழு
  • ஜெயந்தன் படையணி (இதில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் போராளிகள் இடம்பெற்றிருந்தனர்.) உருவாக்கப்பட்டது: 1993.05.03 தரிப்பிடம்: மட்டு-அம்பாறை. சில கொம்பனிகள் வட தமிழீழத்திற்கும் அனுப்பப்படும். | எண்ணிக்கை: 500-1000 (2008)
    • கனவகை ஆயுதப் பிரிவு
  • பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி (இது இயந்திர சுடுகலன்களுக்கான அணியாகும். எல்லாப் படையணிகள் கீழும் இது இயங்கியது)
  • விசாலகன் சிறப்புப் படையணி | உருவாக்கப்பட்டது: 1991-1994 | தரிப்பிடம்: வாகரைக் கோட்டம் 
  • வினோதன் படையணி | உருவாக்கப்பட்டது: ~1996 | தரிப்பிடம்: குடும்பிமலைக் கோட்டம்
  • மாலதி படையணி | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500-750 | உருவாக்கப்பட்டது: சூரியக்கதிர் -1 எதிர்ச்சமரின் முடிவில். மாலதி படையணியானது அதற்கு முன்னர் மகளிர் படையணி என்னும் பெயரில் செயல்பட்டு வந்தது.
    • கனவகை ஆயுதப்பிரிவு
    • சிறப்பு அதிரடிப்படை
    • சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு
    • ஸப்தமி கலைக்கூடம் (ஒலிப்பதிவுக் கூடம்)
  • அன்பரசி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750 | உருவாக்கப்பட்டது: சூரியக்கதிர் -1 எதிர்ச்சமரின் முடிவில்அன்பரசி படையணியானது அதற்கு முன்னர் மட்டு-அம்பாறை மகளிர் படையணி என்னும் பெயரில் செயற்பட்டு வந்தது.
    • வான்காப்பு அணி
    • கனவகை ஆயுதப்பிரிவு
  • சோதியா படையணி | உருவாக்கப்பட்டது : 14.07.1996 | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500 - 750
    • கனவகை ஆயுதப்பிரிவு
  • மதனா படையணி | உருவாக்கப்பட்டது: 1997 | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750
    • கனவகை ஆயுதப்பிரிவு
  • திலகா படையணி | தரிப்பிடம்: திருகோணமலை
  • இளங்கோ படையணி  | தரிப்பிடம்: திருகோணமலை . இதன் கட்டளையாளர் 'விமல்' என்பவர் ஆவார். 
  • பூநகரி படையணி (2007 - 2008 இறுதிவரை) (ஆ&பெ)
    • சிறப்பு அதிரடிப்படை
    • வேவு அணி
  • கிட்டு பீரங்கிப் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது : 1995
    • முன்னிலை நோக்குநர் அணி 
  • ஜோன்சன் மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
    • முன்னிலை நோக்குநர் அணி
  • குட்டிசிறி மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: வட தமிழீழம்
    • முன்னிலை நோக்குநர் அணி
  • பசீலன் மோட்டார் பிரிவு (தமிழீழத்தில் பெயர் சூட்டப்பட்ட முதலாவது சேணேவி(artillery) படைத்துறை பிரிவு)
  • மாருதியன் படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
  • ரிம் 1.5 விசேட படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
    • இப்படையணியின் போராளிகள், இதன் கட்டளையாளரும் 2004இல் வஞ்சகனாய் மாறியவனுமான 'றொபேட்' ஆல் நேரடியாகவே பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் 'ரிம் 1.5 சொந்த விசேட படையணி' என்றும், இதன் தாக்குதல் திறனால் "அமெரிக்கன் படை" என்றும் மட்டக்களப்பைச் சார்ந்தோரால் அழைக்கப்படுவதுண்டு.
  • கிழக்கில் தரித்திருந்த ஓர் உந்துகணை செலுத்திப் படையணி.
    • இப்படையணி தனக்கென இலச்சினை எல்லாம் கொண்டிருந்தது. ஆனால் இதன் பெயரை அறிய முடியவில்லை!
  • வண்ணாளன் உந்துருளி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
  • 4.1 படையணி (ஆ&பெ) (மீளச் சேர்ந்தோருக்கானது)
  • 2.3 படையணி
  • 1.9 படையணி
  • சந்தோசம் படையணி (மூன்றாம் ஈழப்போரில் மட்டுமே இயங்கியது)
  • ராதா வான்காப்புப் படையணி | (2000/11 ஆம் ஆண்டு வரை இவர்கள் இம்ரான் - பாண்டியனின் ஓர் உறுப்பாக 'ராதா விமான எதிர்ப்பு அணி' என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர். 2002 இல் தனிப் படையணியாக உதயம் கண்டது. இதன் கீழ் 18 பிரிவுகள் செயற்பட்டன)
    • ஜேசுதாஸ் தாக்குதல் அணி (தலைவரின் மெய்க்காவலர்கள். இதன் கீழ் பல்வேறு தேவைகளுக்கென பல நிர்வாகப் பிரிவுகள் இருந்தன. யேசு அணி என்றும் அழைக்கப்படுவதுண்டு)
    • ராதா புலனாய்வு அணி
    • கௌதமன் புலனாய்வு அணி
    • சிறப்பு அணி (கனவகை படைக்கலன் இயக்குனர்கள்)
    • வான் எதிர்ப்பு ஏவுகணை அணி
    • வான் கண்காணிப்பு அணி
    • உள்ளகப் படப்பிடிப்பு
    • படைக்கல பாதுகாப்பு அணி
  • இம்ரான்-பாண்டியன் படையணி (1–10–1992ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.கட்டைக்காட்டு தாக்குதலின் போதுதான் இவர்களின் பெயர் அலுவல்சாராக அறிவிக்கப்பட்டது. இதன் கீழ் 9 பிரிவுகள் செயற்பட்டன. படையணியாகத் தொடங்கப்படு முன் சைவர் {0} பிரிவு என்ற பெயரில் இயங்கியது. ) 
    • சூரன் கவச அணி
    • பதுங்கித் தாக்குதல் அணிகள்
    • சங்கர் ஆழ ஊடுருவித்தாக்கும் அணி
    • படைக்காவலர் அணி
    • செம்பியன் வேவு அணி
    • சிறப்பு உந்துருளி படையணி | எண்ணிக்கை: 150>
      • அதிவேக உந்துருளி சிறப்பு அணி
    • குறிசூட்டுப்பிரிவு (ஆ&பெ)
      • மயூரன் குறிசூட்டுப்பிரிவு
      • செண்பகம் குறிசூட்டுப்பிரிவு - (செண்பகம் என்ற குறிசூட்டுத் துமுக்கியைப் பயன்படுத்துவோர்)
    • விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி (1997 இன் முற்பாதியில் உருவாக்கப்பட்டது. இப்படையணியின் உந்துகணை சூட்டாளரிற்கு RPG Commando என்னும் அடைமொழி வழங்கப்பட்டிருந்தது. இப்படையணியின் வீரர்கள் 1997 இற்கு முன்னர் ராங்கி எதிர்ப்பு அணி என்ற 04- 1992 இல் உருவாக்கப்பட்ட அணியில் பணியாற்றியோர் ஆவர்.) (ஆ&பெ)
  • பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு (பெ) | 1999.04.28 இல் உருவாக்கப்பட்டது
  • சிறப்பு கண்ணிவெடிப்பிரிவு
  • நீலன் துணைப்படை(ஆ)
  • தமிழீழ தேசிய துணைப்படை (ஆ&பெ) | இவர்கள் 1991 வைகாசியில் இருந்து ஆடி 1992 வரை 'எல்லைக் கிராமப்  பாதுகாப்புப் படை' என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்.
    • உந்துகணை செலுத்தி பிரிவு
    • பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி

என தரைப்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் மிடுக்குடன் நடந்தன. இவற்றில் 1-9, 4.1, 2.3 ஆகிய படையணிகள் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டு அதன் பின் கலைக்கப்பட்டவையாகும்.

இவற்றோடு மகளிர் படையணிகள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு 'மகளிர் பேரவை' என்ற அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. பெண் போராளிகளின் பரிணமிப்பு:

  • 1984ல் "சுதந்திரப் பறவைகள்
  • பின் "மகளிர் அமைப்பு"
  • பின் 1990ல் "மகளிர் படையணி & மட்டு-அம்பாறை மகளிர் படையணி
  • பேந்து 'சூரியகதிர்' ஒன்றின் முடிவில் "மாலதி படையணி" மற்றும் "அன்பரசி படையணி" களாக பரிணமித்து பின் பற்பல சண்டை உருவாக்கங்களாகி வீறுநடை போட்டனர்.

மேலும், புலிகள் தாங்களாக தங்கள் நிருவாகப் பகுதிகளுக்குள் உருவாக்கியிருந்த துறைகளில் ஒவ்வொரு துறையும் தத்தம் பணியாளர்களைத் தனித்தனி தாக்குதலணியாக உருவாக்கி களமுனைகளிற்கு சுழற்சி முறையில் பணிக்கனுப்பியது:

அத்தாக்குதலணிகள் ஆவன,

  • அரசியல்துறை தாக்குதலணி
  • புலனாய்வுத்துறை தாக்குதலணி
  • நிதித்துறை தாக்குதலணி
  • காவல்துறை தாக்குதலணி

சிறுத்தைப்படை (அதிரடிப்படை):-

1992 நடுப்பகுதியில் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகால பயிற்சியை முடித்து 1994இல் முதல் பாட்டம் (batch) வெளியேறியது. இப்படை 2005 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு, பெண் போராளிகள் மாலதி படையணி, சோதியா படையணி மற்றும் மருத்துவப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அதேவேளையில் ஆண் போராளிகள் இம்ரான்-பாண்டியன் படையணியுடன் இணைக்கப்பட்டார்கள். 2006இல் மீண்டும் இம்ரான்-பாண்டியன் படையணியின் கீழ் உருவாக்கப்பட்ட்டு தொழிற்பட்டது.

  • தரைச்சிறுத்தை அணி  (ஆ&பெ)
  • காட்டுச்சிறுத்தை அணி (ஆ&பெ)
  • கடற்சிறுத்தை அணி (ஆ&பெ)

வேவுப்புலிகள் (வேவுப் பிரிவு):-

இவ்வேவுப் பணியில் சில வேளைகளில் கரும்புலிகளும் ஈடுபடுத்தப்படுவதுண்டு. இது படையப் புலனாய்வுப் பிரிவின் கீழ் தொழிற்பட்டது.

  • முகிலன் நீண்டதூர விசேட வேவு அணி (LRRP)
    • வரைபடப்பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி , தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் விளைவிக்கும் அணி)

 

 

விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் :-

கடற்புறா “ என்ற சிறு அணி இந்திய-தமிழீழ கடல்வழி நகர்வுகளைக்காக உருவாக்கப்பட்டது. அது பின்பு தமிழீழக் கடற்பரப்புகளின் பாதுகாப்புக்காகவும் அவற்றில் நடவடிக்கைகளுக்குமாக 1990 ஆம் ஆண்டு மரபுவழிப் படைத்துறைக் கிளைகளில் ஒன்றான கடற்படையாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. அதுவே கடற்புலிகள் என்றானது. இக்கிளையை 2005 முதல் "தமிழீழக் கடற்படை" என்றும் அழைக்கத் தொடங்கினர்.| எண்ணிக்கை: 750 - 1500

  • ஆசிர் சிறப்புத் தாக்குதலணி
    • (இதுதான் முதலாவது சிறப்புக் கடற்றாக்குதல் அணி ஆகும். இது மேஜர் ஆசிர் நினைவாக கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 1992 ல் ஆரம்பிக்கப்பட்டது ஆகும். பின்னாளில் வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்.)
  • சாள்ஸ் சிறப்புக் கடற்தாக்குதல் அணி(ஆ) (உருவாக்கப்பட்டது : 11-11-1993.
    • நடவடிக்கை அணி
    • தாக்குதலணி
      • (இது முதலில் "சிறப்புக் கடற்படையணி" என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்)
  • நளாயினி சிறப்புக் கடற்தாக்குதல் அணி(பெ)
    • நடவடிக்கை அணி
    • தாக்குதலணி
      • (இது முதலில் "சிறப்புக் கடற்படையணி " என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்)
  • பாக்கியன் ஆழ்கடல் தாக்குதல் அணி (ஆ & பெ)
  • வசந்தன் படையணி (உருவாக்கப்பட்டது : 1994. பின்னாளில்(~2000) வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்)
  • சங்கர் படையணி
  • நரேஸ் படையணி (2000 ஆம் ஆண்டு வரை)
  • மாதவி படையணி
  • டேவிட் படையணி
  • எழிற்கண்ணன் படையணி
  • கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி
    • புனிதா தரைத்தாக்குதல் அணி(பெ)
    • சுகன்யா தரைத்தாக்குதல் அணி(பெ)
    • சூட்டி தரைத்தாக்குதல் அணி(ஆ) (1995 மண்டைத்தீவுத் தாக்குதலிற்குப் பின்னர் "அருச்சுனா படையணி"யின் பெயர் சூட்டி தரைத்தாக்குதல் அணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.) உருவாக்கப்பட்டது: 5.7.1995
  • சிறப்புப் படையணி
    • கப்பல் பிரிவு (இதில் பணியாற்றியவர்கள் ஆழ்கடலோடிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களிடம் சொந்தமாக 20–25 கப்பல்கள் இருந்தன. அவற்றுள் 15 போரின் போது மூழ்கடிக்கப்பட்டு விட்டது)
    • சிறப்புப் பணிப்பிரிவு
  • நீரடி நீச்சல் பிரிவு
    • கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994) ()
      • (சுலோயன் என்று இருந்த இதன் பெயர் 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது)
    • அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ஆம் மாதத்திற்குப் பின்னர்) (பெ),
  • சிறப்பு சுற்றுக்காவல் அணி
  • கடல் வேவு அணி
  • வானூர்தி எதிர்ப்பு அணி
  • கடற் கண்காணிப்புப்பிரிவு (radar monitoring)
  • சதீஸ் இயந்திரவியல் பிரிவு
    • உள்ளிணைப்பு இயந்திரப்பிரிவு
    • வெளியிணைப்பு இயந்திரப்பிரிவு
    • டீசல் இயந்திரப்பிரிவு
  • வழங்கல் பிரிவு
  • படகுக் கட்டுமானப் பகுதி
    • மங்கை படகுக் கட்டுமானப்பிரிவு & டேவிட்(சண்முகம்) படகு கட்டுமானப்பிரிவு
      • ஆடியிழை கட்டுத்துறை (Fibreglass yard )
      • மாதிரி கட்டுத்துறை(Model yard) 
        • வரைபடப்பிரிவு
  • மலரவன் வெடிமருந்துப் பிரிவு
  • தமிழீழக் கடற் துணைப்படை(ஆ):-
    • தமிழீழக் கரையோரக் காவல் துணைப்படை:-
      • மறவன் துணைப்படை
      • திருவடி துணைப்படை
      • நவரசன் துணைப்படை
      • ஜோன்சன் துணைப்படை
    • ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்புத் துணைப்படை அணி - இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும்

கனவகை கடற்றாக்குதல் ஆய்தங்கள் தேவைப்படும் இடங்களில் கடற்புலிகளின் கடற்படையணிகளும் தாக்குதலணிகளும் களமிறக்கப்பட்டிருந்தன. மேலும் கடற்புலிகளின் ஆளுகை வசதிக்காக,

  • நிருவாகச் செயலகம்
  • அரசியல்துறை (1991 இல் தொட.)
  • புலனாய்வுத்துறை
  • பொறியியல்துறை
  • மருத்துவப்பகுதி

என்பனவும் உருவாக்கப்பட்டிருந்தன.

ஈரூடகப்படை (Marines)-

இது கடற்புலிகளின் கீழ் இயங்கியது.

  • சேரன் ஈரூடகத் தாக்குதலணி

 

 

விடுதலைப்புலிகளின் வான்புலிகள்:-

இக்கிளையை 2007 முதல் "தமிழீழ வான்படை" என்றும் அழைக்கத் தொடங்கினர்.

  • வானூர்தி தாக்குதலணி
    • வானோடிகள் அணி
  • வானூர்தி தொழில்நுட்பப்பிரிவு
  • வானூர்தி ஓடுதளப் பாதுகாப்புப்பிரிவு
  • வான் கண்காணிப்புப்பிரிவு
  • சிறப்புத் தாக்குதலணி

 

 

கரும்புலிகள் (சிறப்புப்படை & தற்கொடைப்படை)

கரும்புலிகள் பொத்தாம் பொதுவாக 'தடைநீக்கிகள்' என்று அழைக்கப்பட்டனர்.

  • மறைமுகக் கரும்புலிகள் (புலனாய்வுத்துறையின் விசேட செயற்பாட்டுப் பிரிவின் கீழ் இயங்கியது)
  • தரைக்கரும்புலிகள் (இவர்கள் தேசத்தின் புயல்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் கரும்புலிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டனர்; இ.பா. படையணியின் கீழ் இயங்கியது.)
  • வான்கரும்புலிகள் (வான்புலிகளின் கீழ் இயங்கியது)
  • கடற்கரும்புலிகள் (இவர்கள் உயிராயுதங்கள் என்றும் அழைக்கப்பட்டனர்; கடற்புலிகளின் கீழ் இயங்கியது.)
    • நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் (இவர்கள் 'இடியர்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் கடற்கரும்புலிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டனர்.)
      • செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி
      • புகழரசன் கடற்கரும்புலிகள் அணி
    • நீரடி நீச்சல் கரும்புலிகள்
      • கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு (இது முதலில் "சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவு" என்ற பெயரால் அழைக்கப்பட்டு 2008இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. உருவாக்கப்பட்டது: 1994) ()
      • அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ம் மாதத்திற்கு பின்னர்) (பெ)

 

என சண்டை உருவாக்கங்கள் நிமிர்ந்து நின்றன.

 


 

புலனாய்வுத்துறை (ஐந்தாம்படை)

→ 1990களுக்கு முன்னர் இதன் பெயர்: புலி இயக்கப் பாதுகாப்புப் புலனாய்வுச் சேவை [Tiger Organization Security Intelligence Service] - TOSIS

  • புலனாய்வுத்துறை தாக்குதலணி
  • பன்னாட்டுப் புலனாய்வு அணி
  • தேசிய புலனாய்வுப்பிரிவு
    • தகவல் சேகரிப்புப்பிரிவு
    • ஆய்வு மற்றும் வெளியீட்டுப்பிரிவு
    • பயிற்சி மற்றும் தொழில்நுட்பப்பிரிவு
    • நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு
    • விசேட செயற்பாட்டுப் பிரிவு
  • படையப் புலனாய்வுப்பிரிவு
    • தரைப்படை தகவல் சேகரிப்புப்பிரிவு
    • கடற்படை தகவல் சேகரிப்புப்பிரிவு
    • வான்படை தகவல் சேகரிப்புப்பிரிவு
    • நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு
  • உள்ளகப் புலனாய்வுப்பிரிவு
  • வெளியகப் புலனாய்வுப்பிரிவு
  • நிருவாகப் புலனாய்வுப்பிரிவு
  • நிதிப் புலனாய்வுப்பிரிவு
  • உளவியல் செயற்பாட்டுப்பிரிவு
  • முகவர்கள்
  • மறைமுக உறுப்பினர்கள்
  • இரகசிய நடவடிக்கை அணிகள்
    • கபிற்றல் ஹீரோஸ் - கொழும்பு (1990 களின் தொடக்கம்)
    • எல்லாளன் படை - தென்னிலங்கை (ஈழப்போர் முடியும் மட்டும்)
    • சங்கிலியன் படை - யாழ்ப்பாணம் (1996 - 2001) 
    • சீறும் படை - மட்டு-அம்பாறை (2008)
    • பொங்கி எழும் மக்கள் படை - யாழ்ப்பாணம் & மட்டு - அம்பாறை (2005 - 2007)
    • குளக்கோட்டன் படை - திருகோணமலை (2001)
    • பண்டாரவன்னியன் படை - வவுனியா & மன்னார் (2000 & 2001)
    • புதிய வன்னியன் படை - வவுனியா (சமாதான காலத்தில்)
    • தேசிய மண் மீட்புப் படை மட்டக்களப்பு (2006) 
  • ஊடுருவல் முறியடிப்புப்பிரிவு
  • புலனாய்வு பயிற்சி மையம்
  • கல்விக்குழு
  • தமிழீழப் போக்குவரவுக் கண்காணிப்புப்பிரிவு 
    • நுழைவிசைவு வழங்கும் பகுதி

 


 

நிரந்தரப்படை தவிர்த்து மக்களுக்கும் படைத்துறைப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி என பல்வகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்றோர் அனைவரும் மக்கள் படையென நிமிர்ந்தனர். அம்மக்கள் படையானது

  • மக்கள்படை:-
    • எல்லைப்படை(ஆ&பெ) - இவர்கள் 'எல்லைப்புலிகள் ' எனவும் அழைக்கப்பட்டனர் | இவர்கள் கடற்புலிகளுக்கும் தரைப்புலிகளுக்கும் இருந்தனர், 1999ம் ஆண்டு முதல்.
    • சிறப்பு எல்லைப்படை (ஆ&பெ) (1998-2009)
    • ஊரகத் தொண்டர் படை(ஆ)
      • பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி
      • உந்துகணை செலுத்திப் பிரிவு
      • ஆசிரியர் தொண்டர் படை
    • போருதவிப்படை(ஆ)
    • கிராமியப்படை(ஆ&பெ) - இதை 'ஈழப்படை' என்றும் மக்கள் அழைப்பர் 
      • கிராமிய விசேட படையணி
    • உள்ளகப் பாதுகாப்புப் படை (ஆ&பெ)
      • நிஸ்மியா உள்ளக மகளீர் பாதுகாப்பு அணி(பெ)
      • தமிழ்ப்பாண்டி உள்ளகப் பாதுகாப்பு அணி
      • சங்கர் அணி
      • அன்பு அணி
    • மாணவர் படை
    • தமிழீழத் தேசிய இராணுவம்

 

என மக்கள்படைக் கட்டமைப்புகளாக செயலுருப்பெற்றன. மேற்கண்ட மக்கள்படைக் கட்டமைப்பை 'தமிழீழ தேசிய எழுச்சிப் பேரவை' ஆளுவப்படுத்தியது.

 


 

இவ் படையப் பிரிவுகளின் வழங்கல்களுக்காகவும் ஆளுகைக்காகவும் கீழ்க்கண்டவை உருவாக்கப்பட்டிருந்தன.

  1. தலைமைச் செயலகம்
    • காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
    • செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
    • தலைவருக்கான தனிச்செயலகம்
    • நிர்வாகச் செயலகம்
    • மணாளன் தலைமைச் செயலகப் பாதுகாப்பு அணி
    • போராளிகள் தொடர்புப்பகுதி
    • மக்கள் தொடர்பகம்
    • வெடிபொருள் களஞ்சியம்
    • வெடிபொருள் விநியோகம்
    • ஆயுத களஞ்சியம்
    • ஆயுத பராமரிப்பு
    • ஆயுத விநியோகம்
    • சிறப்பு ஆளணி அறிக்கைப்பகுதி 
    • அறிக்கைப்பகுதி
      • ஆளணி அறிக்கைப்பகுதி
      • ஆயுத அறிக்கைப்பகுதி
    • தேசிய உட்கட்டுமானப் பாதுகாப்புப்பிரிவு
  2. முரண்பாடு ஆய்வு நிறுவகம்
  3. ஒற்றாடல் பிரிவு (பல்வித படைத்துறை நகர்வுகளை பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு விழிப்புவிக்கும் பிரிவு)
  4. நளன் வானொலி தொலைத்தொடர்புப் பிரிவு
  5. போர்க்கருவி தொழிலகம்
  6. ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவு
  7. மலரவன் வெடிமருந்து பிரிவு
  8. சமராய்வு மையம்
  9. செய்தித் தகவல் மையம்
  10. களமுனை ஆய்வுப்பிரிவு
  11. கள விசாரணைப்பகுதி
  12. வழங்கல் பிரிவு
  13. படையத் தொழிநுட்பப்பிரிவு
  14. சமர் நூலாக்கப் பிரிவு- இவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன. இவர்கள் MOD என்னும் ஓர் தமிழ் படைத்துறை அகராதியையும் உருவாக்கியிருந்தார்கள்.
  15. வாகனப்பகுதி
  16. கண்ணிவெடி உற்பத்தித் தொழிற்சாலை
  17. கைக்குண்டு உற்பத்தித் தொழிற்சாலை
  18. மிதிவெடி உற்பத்தித் தொழிற்சாலை
  19. எறிகணை உற்பத்தித் தொழிற்சாலை
  20. கடற்புலிகளின் படகு வடிவமைப்புத் தொழிற்சாலை
  21. பல பயிற்சிப் பாசறைகள்
  22. சுஜி கணினிப் பிரிவு (மட்-அம்)
  23. ராயு படைய அறிவியல் தொழினுட்ப ஆய்வு நிறுவனம் (கணினிப் பிரிவு) 
  • மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
  • வன்தொழினுட்பப் பிரிவு
  • மென்தொழினுட்பப் பிரிவு- 
    •  தாரக மந்திரம்: "கூடி முயல்வோம், வெற்றி பெறுவோம்"
  • படைய தொழினுட்பவியல் கல்லூரி
  • மென்பொருள் கட்டுமானப்பகுதி
  • தொழில்நுட்பக் கல்லூரிகள்
  • கொள்வனவுப்பகுதி
  • சிறப்புத் தாக்குதலணி
  • திட்டமியல் செயலகம்
  • கடற்புலிகள்


இவற்றோடு தங்களின் படைத்துறை போராளிகளுக்கு படைத்துறை தொடர்பான பயிற்சிகள் வழங்கி நெறிப்படுத்துவதற்காக பல்வேறு கல்லூரிகளையும் திறந்து வைத்திருந்தனர். அவையாவன,

  1. தமிழீழ படைத்துறைப்பள்ளி (ஆ&பெ)
  2. படையத் தொடக்கப் பயிற்சிக்கல்லூரி
  3. அன்னக்கிளி பயிற்சிக்கல்லூரி (குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே தொழிற்பட்டது)
  4. சிறப்புப் பயிற்சிக்கல்லூரி
  5. திலீபன் அரசியல் கல்லூரி
  6. போர்ப்பயிற்சி ஆசிரியர் கல்லூரி
  7. G 10 போர் பயிற்சிக்கல்லூரி
  8. பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி- (மட்டு)
  9. பசிலன் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி
  10. அப்பையா வெடிபொருள் பயிற்சிக்கல்லூரி
  11. ஜொனி அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி
  12. ராஜன் படைத்துறை பயிற்சிக்கல்லூரி
  13. புலேந்திரன் சிறப்புப்படை பயிற்சிக்கல்லூரி
  14. -->சிங்கள மொழி கலாச்சார கல்வி நிலையம் - (புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கானது)
  15. -->ராயன் அறிவுக்கூடம் (சிறப்புப்படைக்கானது)
  16. சதீஸ் இயந்திரவியல் கல்லூரி
  17. மகளீர் அடிப்படை பயிற்சிக்கல்லூரி
  18. மகளீர் படைத்துறை பயிற்சிக்கல்லூரி
  19. றோய் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி 
  20. கடற்புலிகளின் கடற்படை படைத்துறைப்பள்ளி 
  21. நிரோயன் ஆரம்பக் கடற்படை பயிற்சிக்கல்லூரி
  22. ஆசிர் கடற்படை பயிற்சிக்கல்லூரி (1992 இல் )
  23. நரேஸ் தொழினுட்பக் கல்லூரி
  24. பெத்தா அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி
  25. கப்பல் கல்லூரி (பன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆழ்கடலோடிகளுக்கு)
  26. கடற்புலிகளின் அரசியற் பயிற்சிப்பள்ளி
  • மொழியாக்கப்பிரிவு

 

படப்பிடிப்புகளுக்கு மூன்றாம் ஈழப்போர் வரை நிதர்சனத்தின் களப்படப்பிடிப்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நான்காம் ஈழப்போரில்

  • நடராசன் ஒளிப்பதிவுப்பிரிவு
    • உள்ளகப் படப்பிடிப்பு
    • களப் படப்பிடிப்பு

 

அடிபாட்டாளர்களின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இதன் கட்டமைப்பு பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. கிடைத்த பற்றியத்தை ஏலுமானவரை கோர்வையாக்கியுள்ளேன். அதில் ஒவ்வொரு சண்டை உருவாக்கத்திற்குமென தனித்தனி மருத்துவப்பிரிவுகளும் இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவு:

  • தமிழீழ மருத்துவக் கல்லூரி
  • தமிழீழ தாதியர் பயிற்சிக்கல்லூரி
  • கள மருத்துவக் கல்லூரி
  • மருந்துக் களஞ்சியம்
  • கள மருத்துவப்பிரிவு (முன்மாதிரி மருத்துவ நிலைகள்) --> துணை மருத்துவ நிலைகள் --> முதன்மை மருத்துவ நிலைகள் --> தள மருத்துவமனைகள் --> படையணிப்பிரிவு மருத்துவமனைகள்
  • தள மருத்துவமனை (படைய மருத்துவமனைகள்) 
    • அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை
    • சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை
    • எஸ்தர் மருத்துவமனை
    • யாழ்வேள் மருத்துவமனை
    • கீர்த்திகா மருத்துவமனை
    • திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை
    • லக்ஸ்மன் மருத்துவமனை (மட்டக்களப்பு)
    • முல்லை மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)
    • நெய்தல் மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)

மற்றும் பல அலகுகள்


 

ஒரு பக்கம் பார்த்தால் எப்படி மறுபக்கம் பார்க்க வேண்டாமா?



 

உசாத்துணை :

முன்னிலை நோக்குநர் அணி | புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (இவர்கள் முன்களத்தில் நிற்பார்கள், ஆனால் சமரில் ஈடுபடாமல் தமது உயிரை பணயம் வைத்து சமர்க் களத்தில் தம்மையும் பாதுகாத்துக்கொண்டு பின்களத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் ஏவப்படும் எறிகணைகளுக்கு ஏற்றக்கோண வேறுபாடு பார்த்து தெரிவிப்பார்கள்.)

(இவையெல்லாம் தமிழில் எழுதப்பட்ட உசாத்துணைகள்தான். ஆதலால் ஒரு சரிபார்ப்பாகவாவது இவற்றைக் கொள்ளவும்.)

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1990-2001 ஆம் ஆண்டு காலத்திலிருந்த மாவட்ட பெயரிலான சில படையணிகள்

 

இப்படையணிகள் யாவும் மேற்குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பிற்காலத்திலுமாக பெயர் சூட்டப்பட்ட படையணிகளாக விரிந்து நிமிர்ந்தன. சிலது இறுதிவரை அப்பெயரிலே செயற்பட்டன.

அவையாவன,

  1. மட்டக்களப்பு-அம்பாறை படையணி -  1993 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு கப்டன் ஜெயந்தன் படையணி, லெப்.கேணல் விசாலகன் சிறப்புப் படையணி என புதிய படையணிகள் உருவாக்கப்பட்டு இதன் போராளிகள் அனைவரும் இவற்றிற்குள் உள்வாங்கப்பட்டனர்.
  2. மன்னார் படையணி - 2001 ஆம் ஆண்டுவரை அதே பெயரில் செயற்பட்டதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளது(விடுதலைப்புலிகள் மாத இதழ்: ஐப்பசி-கார்த்திகை 1999). அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
  3. மணலாறு படையணி - நீர்சிந்து – 1 நடவடிக்கை நடந்து சிலநாட்களின் பின்னர் என்று நினைக்கிறேன், சில தேவைகள் கருதி இந்த மணலாறு மாவட்டப்படையணி கலைக்கப்பட்டு அக்கட்டமைப்பிலிருந்த போராளிகள் ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் பிரித்து விடப்பட்டனர்.
  4.  வடமராட்சி தாக்குதல் படைப்பிரிவு, தென்மராட்சி தாக்குதல் படைப்பிரிவு, வலிகாமம் தாக்குதல் படைப்பிரிவு இவை 1990 இல் தொடங்கப்பட்டன. ஆனால் எப்போது கலைக்கப்பட்டது என்பது பற்றித் தெரியவில்லை. மூன்றாம் ஈழப்போரில் 'யாழ் செல்லும் படையணி' என பெயர் மாற்றம் அடைந்து 2008 இறுதி வரை செயற்பட்டது.
  5. வன்னி படையணி/1.9 படையணி - 1995 இற்குப் பின்னர் கலைக்கப்பட்டு வேறு பல படையணிகளுடன் இதன் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
  6. திருமலை படையணி/தலைநகர் படையணி - 2001 ஆம் ஆண்டுவரை அதே பெயரில் செயற்பட்டதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளது(எரிமலை ஓகஸ்ட், 2000). அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
  7. மகளிர் படையணி (வட தமி.)- 1997 ஆம் ஆண்டில் 2ம் லெப் மாலதி படையணி, மேஜர் சோதியா படையணி என இரண்டாகப் பிரிக்கப்பட்டு, விரிந்தது.
Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகள் விரிப்பு(விபரம்) - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • நிரந்தரப்படை  - 16/17+ வயது நிரம்பிய ஆண்கள் பெண்கள் போர்ப்பயிற்சி பெற்று நிரந்தரப்படையில் இணைந்தனர். ஏனைய மக்கள் படையினர் இவர்களுக்கு உதவியாக ஏனைய படைகளாக மாறி களத்தில் இவர்களுக்கு உதவி புரிந்தனர் .


மக்கள் படைகளான

  • கிராமியப்படை - உணவு வழங்கல், அரத்தம் வழங்கல், பின்களப்பணி (1999-2009)
  •     --> கிராமிய விசேட  படையணி - கிராமியப்படையில் சுடுகலப் பயிற்சி பெற்றோர் - (2005-2009) 
  • எல்லைப்படை - சமர்க்களத்தில் பணி புரிதல் - (1999-2009)
  • சிறப்பு எல்லைப்படை - ஒரு துணைப்படை போன்று சண்டைப்பயிற்சி பெற்று எதிரியுடன் நேரடியாக சமராடுதல் - (1998-2009) 
  • போருதவிப்படை - சமர்க்களத்தில் போராளிகளுக்கு வேண்டிய பதுங்குகுழி அகழ்தல், காப்பரண் அமைத்தல் போன்ற உதவிகளை செய்து கொடுப்போர். - (2005-2009)
  • ஊரகத் தொண்டர் சிறப்புப்படை - கன வகை ஆயுதப் பயிற்சி முதல் சண்டை பயிற்சி வரை எடுத்தோர். - (2005-2009)
  • உள்ளகப் பாதுகாப்புப் படை - திருநகர், பூநகரி என்று ஒவ்வொரு வட்டங்களுக்கும் இருந்தது.

ஆகியன தமக்கென இடப்பட்ட பணிகளை போர்ர்க்காலத்தில் மேற்கொண்டன. இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் பணி புரிந்தனர்.

 

இவை அனைத்தும் ஒருங்கிணைத்து கிராமியமட்ட, வலயமட்ட, வட்டமட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட 'போர் எழுச்சிக் குழுக்கள்' செயற்பட்டன.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இனி இப் படைத்துறை பிரிவுகளுக்கான இலச்சினைகளைப் பற்றிப் பார்ப்போம்

 

 

விடுதலைப்புலிகள் அமைப்பின் படைத்துறை இலச்சினை:

main-qimg-27dca4e1cf907826f0ef8e91e4f55886.png

 

 

 

  • சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு:

Logo of Special RPG Unit of LTT.jpg

 

  •  பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி:

pothu nookku iyanthira ani.jpg

 

  • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

main-qimg-649195bd25f29467d8798916f9f46db6.jpg

 

  • ஜெயந்தன் படையணி

main-qimg-9a1cb492c946ee29de9f9bd723f98f61.jpg

'நீலத்திற்குப் பின்புலத்தில் போராளிகள் படமில்லாமல் 'பச்சை-நீலம்-மண்ணிறம்' என்ற நிரல் வரிசை ஒழுங்கு முறையில் மூன்றாகப் பிரிந்த நிறங்கள் வர வேண்டும்.'

 

  • குட்டிசிறி மோட்டார் படையணி

முழக்கம்:
"புதிய மூச்சாய் பிறந்தோம்
புதிய வரலாற்றைப் படைப்போம்"

main-qimg-0014a4d3f5fe7f1dc3e9be48bb430541.jpg

 

  • விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி

main-qimg-1639b8e61d07cd3a145c33a3778ddfc0.jpg

 

  • சோதியா படையணி

main-qimg-2afd05cb7a978e87fa79d2135e700276.jpg

 

  • இம்ரான் - பாண்டியன் படையணி

முழக்கம்:
"தலைவன் நினைவைச் செயலில் செய்வோம்
தலைகள் கொடுத்தும் தடைகள் வெல்வோம்"

main-qimg-b10b1d3b350611d277a66047e7f46099.jpg

 

  • தேசிய மண்மீட்புப் படை

முழக்கம்:
"உடல் தேசத்துக்கு, உயிர் விடுதலைக்கு"

தேசிய மண் மீட்புப் படை முழக்கம்- உடல் தேசத்திற்கு உயிர் விடுதலைக்கு.jpg

 

  • திலகா படையணி

main-qimg-af01b9743d304bb69801914d2e2d560d.jpg

 

  • அன்பரசி படையணி

main-qimg-824b212d6edfef14ca0003a838e7ab53.jpg

 

  • வினோதன் சிறப்புப் படையணி

கீழே நீங்கள் காண்பதை ஒத்த சின்னமே வினோதன் சிறப்புப் படையணியினது ஆகும். மெய்யான சின்னம் கிடைக்கப்பெறவில்லை.

main-qimg-df8e94245db9d66e20ab7e395ec2045b.jpg

 

  • மாலதி படையணி

முழக்கம்:
"எட்டும்வரை மாய்வோம்
கிட்டும்வரை ஓயோம்"

main-qimg-67b8c6e75e0cd206d3b8320d4bc0e788.jpg

 

  • பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு:

ponnammaan.jpg

 

  • கிட்டு பீரங்கிப் படையணி:

முழக்கம்:
"பீரங்கி கொண்டு தமிழீழம் மீட்போம்"

கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் இலச்சினை - Logo of Col. Kittu Artillery Brigade.jpg

 

main-qimg-76d1852ebe2a2a185ca88d172a8eb52f.jpg

'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்.'

இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது.

 

  • தமிழீழத் தேசியத் துணைப்படை

main-qimg-92974104cb9c24def9465187c1ae1ca6.jpg

 

 

on malathy 15.png

'2002-10-10 ஆம் ஆண்டு 'மாலதி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில் நிகராளிகள்(Representatives) வலமிருந்து: அன்பரசி படையணி, மாலதி படையணி, திலகா படையணி, சோதியா படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறுத்தைப்படை, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி, பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவு, கடற் படையணி | இதில் இவர்கள் கொண்டுள்ள கொடியின் நிறங்களே படையணிக் கொடிகளின் செந்தரமான நிறங்களாகும்'

 

  • இங்குதெரியும் கொடி எந்தப் படையணிக் கொடி என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை

main-qimg-669650d709ccdec8f0f43e55c512fa11.jpg

 

  • இது எந்தப் படையணிச் சின்னம்மென்று தெரியவில்லை

main-qimg-bfea7da564bf626ac639902e54066125.jpg

 

 

  • மட்டக்களப்பில் தரித்து நின்ற படையணிகளில் சின்னம் அறியப்படாதவை:

→ மட்டக்களப்பில் இருந்த படையணிகளின் மொத்த சின்னங்கள்:

இங்கிருப்பவை கருணா துரோகியாகும் வரை தவிபுவின் தலைவரின் தலைமையையேற்று புலிகளின் சிந்தாந்தத்தின் கீழ் மட்டக்களப்பில் தரிபெற்ற படையணிகளின் இலச்சினைகளாகும். இவை எவற்றினதும் விவரம் எனக்குத் தெரியவில்லை. யாரேனும் அறிந்தால் எனக்கு வரலாற்றை எழுத கொடுத்துதவுங்கள்.

main-qimg-751a45ba2545bd7cc2df7d3ea6411f5b.png

''இது மதனா படையணி"

 

main-qimg-b46cce39edf90c04c086c3680c9f2fd8.jpg

''கருணாவிற்குப் பின்னால் இருக்கும் அந்த மேடையில் ஐந்து சின்னங்கள் தெரிகின்றன''

மேலுள்ள படிமத்தில் தெரியும் இலச்சினைகளில் இடமிருந்து மூன்றாவதாக உள்ள மதனா படையணிக்கு அடுத்துள்ள இரண்டும் கீழுள்ள படிமத்தில் இருப்பதோடு அடுத்தடுத்து மேலும் இருவேறு இலச்சினைகளும் உள்ளன. மொத்தம் ஏழு படையணிகளின் இலச்சினைகள இங்குள்ளன.

main-qimg-b9193c08803b0cbf8aa9d75df13e5929.png

 

மேலுள்ள படிமத்தின் இடது பக்கத்தில் இருக்கும் இரு இலச்சினைகளினதும் அண்மையாக்கப்பட்ட படங்கள்:

main-qimg-61547b8632029ed56a7e9272a7dc83e2.png

 

main-qimg-928349954f0660a89b23237f0cfd9873.jpg

'தேனகம் - கரடியனாறு, மட்டக்களப்பு, தெந்தமிழீழம் | பறக்கும் கொடிகளில் இனங்காணப்பட்டவை: (இடமிருந்து வலமாக) மதனா, தெரியவில்லை, தெரியவில்லை, தெரியவில்லை'

 

main-qimg-3650cb748b3c765a1c31f66d093a6da2.jpg

'இங்குதெரியும் கொடி எந்தப் படையணிக் கொடி என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை.'

 

main-qimg-6832b02a2f2940f4fecf17c0031b3409.jpg

மேற்கண்ட படத்தில் இரு மேல் மூலைகளிலும் இரு சின்னங்கள் தெரிகின்றன. அவையாவும் எந்தப் படையணியினது என்று எனக்குத் தெரியவில்லை!

 

----------------------------------------------------------------------

 

இது 2007 ஆம் ஆண்டு வன்னியில் பயிற்சி முடித்து வெளியேறின படையணி. இதனது புய வில்லையினை நோக்கவும். இதன் பெயர் அறிந்தோர் கூறவும்.

Unknown regiment of LTTE, unleashed on the first half of 2008.jpg

 

 

 


  • கடற்புலிகள் :

main-qimg-da0cf1ad2539f58b441c072d3ed1b2ce.jpg

 

  • கடற்புலிகளின் கடற்படையணிக் கொடிகள்

main-qimg-45c61515846505fa830cb666be544b1d.jpg

 

  • தமிழீழக் கடற் துணைப்படை

Untitled.jpg

வால் மேன்னோக்கி நின்றபடி இடது புறம் நோக்கி பாயும் சிறுத்தை. (எனது தன்விரிப்புப் படத்தில்(Profile picture) இருக்கும் புலியினை ஒத்த சின்னம். இச்சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்புறம் ஒரு விதமான நீல நிறம். நீல நிற விதப் பெயர் எனக்குத் தெரியவில்லை). சின்னத்திற்குக் கீழே 'தமிழீழக் கடற் துணைப்படை' என எழுதப்பட்டிருக்கும், அரை வட்ட வடிவத்தில்.

sea_tiger_garlanded_12_03_03_01.jpg

'தென் பிராந்திய கட்டளையாளர் கேணல் சிறிராம் அவர்கள் லெப். கேணல் ஒஸ்கார்(ஆதிமான்) அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார். அவரின் பின்னால் உள்ள முந்நிறக் கொடியே தமிழீழத் துணைப்படையின் கொடியாகும்.'

 


  • வான்புலிகள்:

main-qimg-fa50f764479b9c7424f9137a240878bc.jpg

 

 

 


  • தரைக்கரும்புலிகள்:

main-qimg-1d5884ded4b3165b580b5cd1b4040e3b.jpg

 

 

Tamil Eelam Land Black Tigers Logo - LTTE.jpg

'இவர்கள் தங்கள் உடையில் இச்சின்னத்தைப் பொறிக்கும் போது இவ்வாறு இருக்கும்'

 

  • கடற்கரும்புலிகள் (முந்தைய சின்னம்)

main-qimg-48eac31264d7ecfcf14c7bd797ca2299.png

 

  • கடற்கரும்புலிகள் (பிந்தைய சின்னம்)

main-qimg-5507e0e68b167bad26d326901d509f0e.jpg

 

  • மறைமுகக் கரும்புலிகள்:

முழக்கம்: 
"எம் தேசத்திற்காய் 
எங்கெங்கும்"

main-qimg-2c20642eb2c42ea1fde404a712a02a91.png

 

 

 


  • மக்கள்படை:-

 LTTE's Civil Force' Internal Security Force Logo.jpg main-qimg-661f753b453bea68aa94a5cdc52adc49.png

''இரு இலச்சினைகளும் ஒன்றுதான். மக்கள் படையின் இலச்சினைகளில் புலியின் கால்களுக்கு இடையில் 'தமிழீழ மக்கள்படை' என எழுதப்பட்டிருக்கும். அதன் மேற்பக்கத்தில் விதப்பாக அதனது உட்பிரிவின் பெயர் எழுதப்பட்டிருக்கும். எ.கா: வலது பக்க இலச்சினையை நோக்குக. அதன் மேற்பக்கத்தில் 'உள்ளகப் பாதுகாப்புப் படை' என எழுதப்பட்டிருக்கிறது.''

 

 

 


  • சிறுத்தைப்படை:

முழக்கம்:
"எந்த நேரத்திலும்
எந்தச் சூழ்நிலையிலும்"

main-qimg-b777bb2f4c0bfc32422a518152a7428f.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • புலேந்திரன் சிறப்புப்படைப் பயிற்சிக்கல்லூரி:

 

Pulenthiran Special Force Training College.jpg

 

சிங்கள மொழி கலாச்சார கல்வி நிலையம் (புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கான)

இங்கு பகைப்புலம் செல்லும் மறைமுகக் கரும்புலிகள் மற்றும் புலனாய்வுத்துறை போராளிகளுக்கு சிங்கள மொழி மற்றும் பண்பாடு பற்றிய கல்வி போதிக்கப்படும். 

இது சிறப்புப்படைப் பயிற்சிக் கல்லூரியின் ஒரு அங்கமாக இருந்தது.

(2009 மார்ச் கால சிங்கள நிகழ்படம் ஒன்டில இருந்து திரைப்பிடிப்புச் செஞ்சனான்.)

main-qimg-33c90a00c7c3d35bf8e9e980d7f49c0e.png

 

 

  • சமராய்வு மையம்:

முழக்கம்: 
"மெய்ப்பொருள் காண்பதறிவு"

main-qimg-93b9aaee987205c32a2367add12e4b51.png

 

 

  • விடுதலைப்புலிகள் மருத்துவப் பிரிவின் சின்னம்:

large.ThiyakaTheepamThileepanMedicalUnit

இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகள் விரிப்பு - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மக்கள்படையின் உறுதியுரை

 

“எமது தாயகமாம் தமிழீழத்தை 
வன்வளைப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து 
இழந்துவிட்ட எம் இறைமையையும்
இனத்தின் நன்மதிப்பையும் நிலைநாட்ட 
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவரிகளின் தலைமையின் கீழ் அணிதிரண்டு 
இறுதிவரை தேசத்தின் விடுதலைக்காகவும் 
அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் 
உண்மையுடன் நின்று உழைப்பேன் என்று 
இத்தால் உறுதியெடுத்துக்கொள்கின்றேன்."

 

--> தவிபு மக்கள் படை பற்றிய நிகழ்படத்திலிருந்து

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நிரந்தரப்படையின் உறுதியுரை

 

போராளிகள் பொதுவாகக் கூறுவது: (1993இற்கு முன்னர் வரை) 

‘‘எமது புரட்சி இயக்கத்தின்
புனித லட்சியமாம்
சுதந்திர சமதர்ம தமிழீழம் காண
எனது உயிர், உடல், ஆன்மா அனைத்தையும் அர்பணித்துப் போராடுவேன் என்றும்,
எமது இயக்கத்தின் தலைவர் திரு. வே. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்
வழிநடத்தலை பரிபூரணமாக ஏற்று,
அவருக்கென்றென்றும் உண்மையாகவும், நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் நடப்பேன் என்றும்,
இத்தால் சத்தியப் பிரமாணம் செய்து 
எனது இன்றைய பணியை ஆரம்பிக்கின்றேன்."

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

மூலம்: காற்று வெளி திரைப்படத்திலிருந்து

 

 

---------------------------------

 

போராளிகள் கூறுவது: (1993இற்கு பின்னரிருந்து) 

‘‘எமது புரட்சி இயக்கத்தின்
மேன்மை மிகு குறிக்கோளாம்
சமவுடமைத் தன்னாட்சித் தமிழீழ விடுதலைக்காக
எனது உள்ளம், உயிர், உடல், உடமை அனைத்தையும் ஈந்து 
உறுதியோடு போராடுவேன் என்றும்,
எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்
வழிநடத்தலை உளமாற ஏற்று,
அவருக்கென்றும் உண்மையாகவும், நம்பிக்கையாகவும் செயற்படுவேன் என்றும்,
இதனால் உறுதி கூறுகின்றேன்."

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

மூலம்: புயல் புகுந்த பூக்கள் திரைப்படத்திலிருந்து

 

https://eelam.tv/watch/எமத-ப-ரட-ச-இயக-கத-த-ன-தம-ழ-ழ-வ-ட-தல-ப-ப-ல-கள-ன-உற-த-ய-ர-emathu-puratchi-iyakkaththin_RUppawjfTll9fIk.html

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைக் கிளைகள் & பிரிவுகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளின் நிரந்தரப்படை அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பு

 

அறிமுகவுரை:

எதிர்கால தமிழர் தலைமுறைகள் புலிகளின் மெய்யான வரலாற்றை அறியவேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் தான் புலிகளின் நிரந்தரப்படை அடிபாட்டு உருவாக்கங்களின் கட்டமைப்பை என்னால் முடிந்தளவு தொகுத்துள்ளேன்.

இதற்குள் ஈழப்போரில் புலிகளின் படைத்துறை அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பையும் அதில் போராளிகளாகயிருந்தோரின் பதவிகள் மற்றும் தரநிலைகளையும் ஆவணப்படுத்தியுள்ளேன். இதனை தவிபு அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த போராளிகளின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் திரைப்படங்கள், குறும்படங்கள் மூலம் நானறிந்து கொண்டவற்றை அடிப்படையாகக் கொண்டு எனது அறிவிற்கிட்டியவரை எழுதியுள்ளேன்.

தேவைப்படின் இதையொரு முதனிலை அறிக்கையாகக் கூட கருதலாம்.

 

முன்னுரை:

ஒற்றை கைச்சுடுகலனுடன் தொடக்கப்பட்டு, ஒரு சிறு குழுவென எழுந்து, கரந்தடிப்படையாக உருவாகி, பின்னர் மரபுவழி படைத்துறையென வளர்ச்சி கண்டது தான் தமிழீழ விடுதலைப் புலிகள் (த.வி.பு.) என்ற நவீன கால ஈழத்தமிழரின் படைத்துறையாகும். 

இதன் படைத்துறைக் கிளைகளானவை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருப்பதைப் போன்று தரைப்படை, வான்படை, கடற்படை என முப்படைகளையும் கொண்டிருந்தன. இவை மட்டுமன்றி ஒரு விடுதலைப்படையாக இருப்பதால் முற்றிலும் புதிதான ஒரு சிறப்புப்படையாக தற்கொடைப்படையையும் (அதாவது கரும்புலிகள்) நான்காவது படையாகக் கொண்டிருந்தனர். 

இந்தப் படைத்துறைக் கிளைகளின் கட்டமைப்பானது ஒவ்வொரு ஈழப்போரின் காலங்களிலும் அப்போரின் தேவைக்கேற்ப மெள்ள மெள்ள வளர்ச்சி கண்டது. 

முதலாம் ஈழப்போர்க் காலத்தில் "கடற்புறா" என்ற பெயரோடு விளங்கிய தமிழீழ-இந்திய கடல்சார் போக்குவரத்திற்கான அணி இரண்டாம் ஈழப்போரில் 1992 செப்டெம்பர் 19ம் திகதி முதற்கொண்டு "விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்" என்ற பெயரோடு கடல்சார் தாக்குதல் படைத்துறைக் கிளையாக பரிணாம வளர்ச்சி கண்டது. 

மூன்றாம் ஈழப்போரில் நீண்ட தொலைவு வீச்சுக்கொண்ட சேணேவிகள் கைப்பற்றப்பட்டன. இச் சேணேவிகளின் வரவும் ஈழப்போரில் தமிழரின் அடிபாட்டியலை புதிய பரிணாமத்திற்குள் இட்டுச் சென்றது. 

நான்காம் ஈழப்போரின் போது வான்புலிகளோடும் (மூன்றாம் ஈழப்போரின் போது இலகு வான்கலங்கள் இருந்திருப்பினும் நான்காம் ஈழப்போரில் தான் குண்டுவீச்சு வானூர்திகள் கொண்ட் தமிழீழ வான்படையாக பரிணாம வளர்ச்சி கண்டது) சேரன் ஈரூடகத் தாக்குதலணியோடும் (மூன்றாம் ஈழப்போரின் போது வலிதாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பினும் முறையாக நான்காம் ஈழப்போரில் தான் அறிமுகமானது) எழுந்து முற்றான மரபுவழிப்படையாக நிமிர்ந்தது. இந்நான்காம் ஈழப்போரில் தான் புலிகள் தமது வழிகாட்டப்படாத உந்துகணைகளையும் [Rockets (எ.கா: பண்டிதர் 1550, சண்டியன்)] போரில் அறிமுகப்படுத்தி பாவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தரநிலையும் பதவிகளும் ஒரு கண்ணோட்டம்:

புலிகள் மெள்ள மெள்ளமான வளர்ச்சிகளைக் குறுகிய காலத்தில் கண்டிருப்பினும் படைத்துறைக்கென்ற ஒழுக்கமும் கட்டுப்பாடும் கண்ணியமும் தோற்றம் முதலே கடுமையாக பின்பற்றப்பட்டது. பிற்காலத்தில் புலிகள் இந்த ஒழுக்கத்திற்கு பெயர் போனது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்த ஒழுக்கம் போன்றே தான் புலிகளின் படைத்துறை தரநிலையும் 1984 நவம்பரில் இருந்து புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று தொட்டு படைத்துறைக் கிளைகள் விரிவடைய விரிவடைய இதுவும் செம்மைப்படுத்தப்பட்டு வந்தது.

புலிகள் கால ஈழத்தமிழரின் படைத்துறை தரநிலைகள் (2009 மே>):

  • பிரிகேடியர் > கேணல் > லெப். கேணல் > மேஜர் > கப்டன் > லெப்டினன்ட் > 2ம் லெப்டினன்ட் > வீரவேங்கை

இவற்றில் குறைந்த தரநிலையான "வீரவேங்கை" தவிர ஏனைய அனைத்தும் ஆங்கிலச் சொற்களின் தற்பவங்களே ஆகும். இந்த வீரவேங்கை என்பதுவே புலிகளின் அடிப்படைத் தரநிலையாகும். இயக்கத்தில் ஒராள் இணைந்து பயிற்சிப் பாசறைக்குள் நுழையும் போது இதைப் பெறுகிறார். 

இரண்டாம் ஈழப்போர்க் காலம் தொட்டு படையணிகள் உருவாக்கப்பட்ட போது அதற்கேற்றாற்போல தரநிலைகளும் பதவிகளும் வகுக்கப்பட்டன.

பின்னர் நான்காம் ஈழப்போர்க் காலத்தில் கட்டளைப் பணியகங்கள் உருவாக்கப்பட்ட போது அதற்கேற்பவும் தரநிலைகள் மற்றும் பதவிகள் உருவாக்கப்பட்டன.

தமிழீழ நடைமுறையரசின் படைத்துறைப் பதவிகள் மற்றும் தரநிலைகளுக்கு பன்னாட்டு படைத்துறைகளில் இருப்பது போன்ற தேர்வு எழுதி ஒரு பதவிக்கு வருவதோ இல்லை பரிந்துரை மூலமாக உயர் பதவிகளுக்கு வருவதோ இருக்கவில்லை. மாறாக ஒவ்வொருவருக்குமான பதவி உயர்வு அவர்களின்

  • சமர்க்களச் செயற்பாடுகள்
  • சமர்க்களப் பட்டறிவு
  • சமர்க்கள வினைத்திறன்
  • ஆளுமை தகைமை

போன்றவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது. இதுவே உள்ளூர் ஆளுகை பதவிகளுக்கும் பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு சில தளர்வுகள் இருந்தன.

மூன்றாம் ஈழப்போர் முடிவு வரை கட்டளையாளர்கள் தவிர்த்து பிறருக்கு வாழ்நிலைத் தரநிலைகள் வழங்கப்படவில்லை என்பது நானறிந்த தகவலாகும். நான்காம் ஈழப்போர்க் காலத்தில் வாழ்நிலை தரநிலைகள் - பொதுவாக இருந்த வீரச்சாவிற்குப் பின்னரான தரநிலை வழங்கும் முறைக்கு மாறாக வாழும் போதே வழங்கப்பட்ட தரநிலைகள் (குறிப்பாக கணினிப் பிரிவில் இவை வழக்கத்தில் இருந்தன) - போராளிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன. 

புலிகளிடம் முப்படைகளும் இருந்திருப்பினும் பன்னாட்டு முப்படைகளில் பாவிக்கப்படும் தனித்தனித் தரநிலைகளை தமது முப்படைகளுக்குப் பாவித்திருக்கவில்லை. அவர்கள் தரைப்படையின் தரநிலைகளையே கடற்புலிகளுக்கும் வான்புலிகளுக்கும் பாவித்திருந்தனர். இந்த முரண்பாடான நிலை குறித்து தமது அலுவல்சார் மாதயேடான "விடுதலைப்புலிகள்" இல் 1992 ஆம் ஆண்டு ஐப்பசியில் விளக்கமொன்றை அளிக்கையில், தமது தற்போதைய கடற்புலிகள் எதிர்காலத்தில் முழுமையான ஒரு கடற்படையாக வளர்ந்த பின்னர் கடற்படைக்கே உரித்தான தரநிலைகள் அளிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

ஒரு விரும்பத்தக்க விடையம் என்னவெனில், 1991 முதல் 1996 வரையான காலகட்டத்தில் புலிகள் மாவீரர் படங்களை வெளியிட்ட போது அவர்களில் கட்டளையாளர்கள் மற்றும் கரும்புலிகள் தோள் மணைகள் (Shoulder Boards) அணிந்து அதில் தத்தமது தரநிலைகளைக் குறிக்கும் குறியீடுகளைக் குத்தியிருந்தனர் என்பது ஆகும். இது தொடர்பில் நான் எழுதியுள்ள ஆவணம்:

 

ஆளணிப் பற்றாக்குறை:

ஒவ்வொரு நாடும் தத்தமது ஆளணி எண்ணிக்கையிற்கு ஏற்ப படைத்துறை உட்பிரிவுகளை வகுத்திருக்கும். அதைப் போலவே தான் தமிழீழ படைத்துறை ஆளணி எண்ணிக்கையும் வகுக்கப்பட்டிருந்தது. எனினும் தவிபு இன் குறைந்த ஆளணி எண்ணிக்கை வேறுபாட்டால் பாரிய ஆளணி எண்ணிக்கை கொண்ட படைத்துறையில் இருக்கும் அனைத்து அடிபாட்டு உருவாக்கங்களுமோ அல்லது ஒரு அடிபாட்டு உருவாக்கத்தினுள் இருக்கும் அனைத்து உட்கட்டமைப்புகளுமோ தவிபு இடம் இருந்திருக்கவில்லை. தமிழரின் சிறிய படைத்துறை ஆளணி எண்ணிக்கையிற்கு ஏற்பவே எமது படைத்துறையும் வகுக்கப்பட்டிருந்தது.

சிறிய படைத்துறை ஆளணியிற்கான முக்கியமான காரணங்களில்

  1. முதன்மையானது யாதெனில் தமிழீழ மக்களில் பெரும்பாலானோர் சமருக்கு அஞ்சி ஒடுங்கியதாகும்.
  2. இரண்டாவது, 2009இற்கு முன்னரே அரை மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளிற்குத் தப்பியோடியதாகும். இவ்வாறாக சென்றோரில் பெரும்பான்மையானோர் இளையோரே ஆவர். அதிலும் இவர்கள் தமிழீழம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலிருந்தே சென்றிருந்தனர். இதனால் இலகுவாக ஆட்சேர்க்கக்கூடிய இடங்களில் இருந்ததான ஆட்சேர்ப்பு குறைவாகவே இருந்தது.
  3. மூன்றாவது, ஈ.பி.டி.பி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற தேசவிரோத கும்பல்களின் ஆதரவாளர்கள் புலிகளுடன் விடுதலைப் போரிற்கு சேர மறுத்து சிங்களவருக்கு துணையாக ஒட்டுக்குழுக்களாக செயற்பட்டமையாகும்; இவர்கள் கருத்தில் கொள்ளத்தகாத சிறு தொகையினராவர்.

எனவே இருந்த மக்களைக் கொண்டுதான் தமிழரின் படைத்துறையைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தமிழரின் இக்கோழைத்தனத்தை எண்ணி வெட்கிய தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் இது தொடர்பில் 1989ம் ஆண்டு வெளியான தன்னுடைய "களத்தில் மலர்ந்தவை பாகம் - 1" என்ற கவிதைத் தொகுப்பில் இல் இவ்வாறு சினத்துடன் தூற்றுகிறார்:

"...........
மண்ணை மீட்டிடும் எங்களின் தம்பியர் மண்டைதீவினை நோக்கி விளித்தனர்.
கண்ணயர்ந்திடா சிற்சிலர் கோட்டையைக் காத்து வேர்த்தனர்.
மற்றவர் யாவரும் 
பொன் அணிந்தனர், பட்டுகள் சூடினர், போய்க் கடையிலே ஐஸ்பழம் சூப்பினர்.
விண் இடிந்துமே வீழ்ந்திடும் போதிலும் வீடியோவிலே படங்களைப் பார்த்தனர்!

" 'எங்கள் பூமியை மீளவே பெற்றிடல்.' என்ற லட்சியம் ஏறிய வேங்கைகள் தங்கள் உயிரினைச் சாவுக்கு அளித்தனர்; தாவிவரும் பகையோடு பொருதினர் - இங்கு
மற்றவர் பேசிக் கழித்தனர்,
ஈழம் எரிகையில் ஓடிப் பறந்தனர்,
சங்கமாடிய தமிழென்று பேசிய தம்பிமாரெல்லாம் கடலைக் கடந்தனர்!

"பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல
தாயகம் தீயில் எரிகையில் விட்டு விமானத்தில் ஏறிப் பறந்தவர்; 
வீரமிலாதவர், நாயிலும் கீழவர்!
சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்; 
சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால் விட்டுப் பறந்த கோழைகள்,
நாளையே வீடு திரும்பினால் காறியே துப்புவோம்!

"கப்பல் ஏறி ஜேமன், விரான்ஸுடன் கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்!
அப்பு ஆச்சியைக் கவனம் கவனமென்று அங்கிருந்துமே கடிதம் எழுதினர்!
தப்பிப் பறந்தவர் தம்பியும் வாவென தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்!
துப்புக் கெட்டவர்!
அகதி லேபலில் தூசி தட்டியே காசு உழைப்பவர்!

"ஓடியவர் ஓடட்டும், 
கூழைச் சதையர் எல்லாம் பேடியர்கள், ஓடட்டும்!
போனவர்கள் போகட்டும்,
பாய் விரித்தால் போதும் படுத்துறங்கும் இவர்கள் எல்லாம் "நாய்ச் சாதி". 
ஓடி நக்கிப் பிழைக்கட்டும்.

"தப்பிப் பறந்து 'தமிழன்' என்று சொல்ல வெக்கி கப்பலிலே ஏறி கனடாவில் நக்கட்டும்.
................"

இவ்வாறான தமிழரின் நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிகழ்விற்கு எடுத்துக்காட்டொன்றைக் காட்ட விரும்புகிறேன்.

மூன்றாம் ஈழப்போர் காலத்தில், புலிகளின் கருத்துப்படி, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 8 இலட்சம் மக்கள் இருந்தனராம். இருந்தபோதிலும் 1995ம் ஆண்டு சூரியகதிர் - 1 என்று பெயர் சூட்டி சிங்களவர் படையெடுத்த போது அதை முறியடிக்க யாழ் மக்களில் 5,000 பேரை படைத்துறையில் வந்து சேருமாறு புலிகள் அழைப்பு விடுத்தனர். எனினும் வந்து சேர்ந்தோர் தொகையோ 2,000 இற்கும் குறைவானதாகும்! இது தமிழரின் படு கோழைத்தனமான செயலாகும் (குடாநாட்டை சிங்களம் கைப்பற்றிய போது 812 தமிழர்களை காணாமலாக்கினர் என்பது அரத்தம் தோய்ந்த வரலாறு!).

பின்னர், புலிகள் யாழை விட்டு வெளியேறிய போது அவர்களுடன் ஐந்து இலட்சம் மக்களும் வெளியேறினர். எனினும் வன்னி வந்த மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் இதுவே தருணமென நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். சிலர் யாழிற்கே திரும்பிச் சென்றனர். இவையெல்லாம் எமது விடுதலைப் போராட்டத்தின் மிகவும் மோசமான கோழைத்தனமான நிகழ்வுகளாக வரலாற்றில் பதிவாகியுள்ளன.

இவ்வாறான செயல்களால் குறைவான ஆளணி எண்ணிக்கையே இருந்தபோதிலும் தலைவர் சிங்களத்திற்கு எதிரான தமிழரின் விடுதலைப்போரை வீரியத்துடன் தொடுத்தார்.

இந்தக் குறைவான ஆளணி எண்ணிக்கையால் புலிகள் பல பின்னடைவுகளைச் சந்தித்தனர். பல ஆட்புலங்களை தக்க வைக்க முடியாமலும் (எ.கா: யாழ்) சில இடங்களை பிடிக்க வாய்ப்புகள் கிட்டியும் அதனை செயற்படுத்தமுடியாமலும் போயினர். மேலும் இப்பற்றாக்குறையால் வேறுவழியின்றி சிறுவர்களையும் (18 வயதிற்குட்பட்டோர்) போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்; இச்செயலானது எமது போராட்டத்திற்கு அரசியல் சார்பான வலுத்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

நான்காம் ஈழப்போரில் புலிகளின் பாரிய நிலப்பரப்பினை தக்கவைப்பதற்கான வலுவெதிர்ப்புச் சமருக்கு (defensive battle) ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டது. பற்றாக்குறையைப் போக்க, 2007ல் இருந்து வீட்டிற்கு ஒருவர் நாட்டிற்காக என்ற முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வேறுவழியின்றி கட்டாய ஆட்சேர்க்கை நடைபெற்றது. இது சில கசப்பான நிகழ்வுகளை மக்களுக்கும் இயக்கத்திற்கும் இடையில் தோற்றுவித்திருந்தது.

(இப் பகுதி குறைந்த ஆளணி எண்ணிக்கைக்கான காரணத்தை மேலோட்டமாக தொட்டுச் செல்கிறது. தப்பியோடியோர் பற்றி அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

 

அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பு:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சமர்க்கள உறுப்பினர்கள் யாவரும் போராளிகள் எனப்பட்டனர். 

எமது படைத்துறையின் ஒவ்வொரு அடிபாட்டு உருவாக்கத்திற்குள்ளும் பொதுவான படைத்துறைக் கட்டமைப்புக்குள் இருப்பது போன்று பல உட்கட்டமைப்புகள் இருந்தன.

  • தரைப்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பு

தரைப்புலிகளின் படைத்துறைக் கட்டுமானத்தில் படைத்தொகுதி, படையணி, படை, அணி, பிரிவு, தொகுதி என்பன வெவ்வேறு அடிபட்டு உருவாக்கங்களைக் குறித்த சொற்கள் ஆகும். 

  • படைத்தொகுதி (Brigade) 

படைத்தொகுதி என்ற சொல்லானது ஓயாத அலைகள் மூன்றின் போது மட்டும் ஒன்றாக்கப்பட்ட வெவ்வேறு அடிபாட்டு உருவாக்கங்களைக் குறிக்க விடுதலைப் புலிகளால் அவர்களின் அலுவல்சார் மாதயேடான "விடுதலைப்புலிகள்"இல் பாவிக்கப்பட்டது. இது அவர்களின் படைத்துறை பதிவேடுகளில் பாவிக்கப்பட்டதா என்பதை நான்னறியேன். இவ்வாறு ஒன்றாக்கப்பட்டவை தேவைக்கேற்றாற் போல பிரிக்கப்பட்டு பற்பல படைத்தொகுதிகள் உருவாக்கப்பட்டன. நிலையாக பெயரிடப்பட்ட படைத்தொகுதி என்று எதுவும் இருந்திருக்கவில்லை. ஓயாத அலைகள் மூன்றின் போது இதன் முதல்வராக ஒரு லெப். கேணல் அல்லது கேணல் தரநிலை கொண்ட கட்டளையாளர் பணியாற்றினார்.

ஓயாத அலைகள் மூன்றின் பின்னர் இச்சொல்லின் பயன்பாட்டை எந்தவொரு நாளேடுகளிலும் நான் காணவில்லை. புலிகளாலும் பாவிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

  • படையணி (Regiment) 

இதுதான் நிரந்தரப்படையின் மிகப்பெரிய அடிபாட்டு உருவாக்கமாகும்.

இதனது உட்கட்டமைப்பிற்கு ஆங்கிலச் சொற்களே பாவிக்கப்பட்டன. தமிழ்ச்சொற்கள் பாவிக்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை.

இதன் ஆளணி எண்ணிக்கையானது ஒவ்வொறு படையணிக்கும் வேறுபட்டது. நிரந்தரமாக படையணிக்கு என்று வரையறுக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கையென்று இருந்திருக்கவில்லை. சில நேரங்களில் சில படையணிகளின் ஆளணி எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட்ட போது - சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு இவ்வாறு நடந்திருக்கிறது - வேறு பிரிவுகளிலிருந்து ஆட்கள் இதற்குள் உள்வாங்கப்பட்டனராம். 

ஒவ்வொரு படையணிகளின் ஆளுவத்திற்காக ஒரு "சிறப்புத் தளபதி", ஒரு "தளபதி" மற்றும் ஒரு "துணைத் தளபதி" ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவை சேணேவி படையணிகளுக்கென வரும்போது மேற்கண்ட பதவிகளுடன் கூடுதல் பதவியாக "பீரங்கி ஒருங்கிணைப்புத் தளபதி" அ "மோட்டார் ஒருங்கிணைப்புத் தளபதி" என்ற பதவியும் இருந்தது. இதைத் தவிர வேறேதும் இருந்ததா என்பது அறியில்லை.

இத் "தளபதி"களின் தரநிலைகள் காலத்திற்குக் காலம் மேற்குறிப்பிட்டுள்ள கூறுகளைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்தரநிலைகள் லெப். கேணல், கேணல் மற்றும் பிரிகேடியர் என்ற மூன்றிற்குள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. நிரந்தரத் தரநிலை என்று இருந்திருக்கவில்லை, போர் முடியும் மட்டும். 

இவற்றைத் தவிர வலிதாக்குதல் நடவடிக்கைகள் & எதிர்ச்சமர்களின் போதும் கட்டளையாளர்களுக்கு சில பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. குறிப்பாக சமர்க்களுக்கெல்லாம் தாய்ச்சமரான வெற்றியுறுதி (ஜெயசிக்குறு) எதிர்ச்சமரின் போது அதன் "நடவடிக்கைத் தளபதி"யாக பின்னாளில் துரோகியான கருணா நியமிக்கப்பட்டிருந்தார். "துணைத் தளபதி"யாக பிரிகேடியர் தீபன் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். 

இந்தத் "தளபதி" என்ற சொல்லில் உள்ள "தளம்" என்பது தமிழாகும், "பதி" என்பது சமற்கிருதமாகும். (இதனால்தான் என்னுடைய கட்டுரைகளில் கட்டளையாளர் என்ற தனித்தமிழ்ச் சொல்லைக் கையாள்கிறேன்.)

தவிபு இன் படையணி உட்கட்டமைப்பில் "கொம்பனி"யே உச்ச உட்பிரிவாக இருந்தது. "பட்டாலியன்" என்பது இல்லை. 

எனக்கு முதலாம் & இரண்டாம் ஈழப்போர்களில் புலிகளிடமிருந்த அடிபாட்டு உருவாக்கங்கள் பற்றியும் அதனது முதல்வர்களும் தொடர்பாக எதுவும் தெரியாது. ஆதலால் நான் மூன்றாம் மற்றும் நான்காம் ஈழப்போரின் போதைய தகவல்களை மட்டும் கீழே கொடுக்கிறேன்.

படையணியின் உட்கட்டமைப்பு உருவாக்கங்கள் பெரிதிலிருந்து சிறியதுவாக இறங்குவரிசையில்:

  • கொம்பனி (Company): 
    • காலத்திற்கேற்பவும் ஒவ்வொரு படையணியின் ஆளணி எண்ணிக்கையிற்கும் ஏற்ப இருந்தன. மூன்றாம் ஈழப்போரின் ஜெயசிக்குறு காலத்தில் பெரும்பாலான படையணிகளுக்கு 150 பேர் வரை இருந்தனர். ஜெயசிக்குறுவின் பின்னர் அவ்வெண்ணிக்கை குறைந்தது. பின்னர் மீளவும் ஆளணி சேர்க்கப்பட்டு நிரப்பட்டது. பின்னர் மீண்டும் நான்காம் ஈழப்போரின் போது சில சமர்களின் பின்னர் அவ்வெண்ணிக்கை குறையக் குறைய தொடர்ந்து நிரப்பப்பட்டு வந்தது. 2006ம் ஆண்டு காலத்தில் இதன் ஆளணி எண்ணிக்கை ஏறக்குறைய 150 பேர் என்று பொதுவாக வன்னிவாழ் மக்கள் நடுவணில் அறியப்படுகிறது. இது மொத்தம் இரண்டு அல்லது மூன்று பிளாட்டூன்களைக் கொண்டதாகும் என்பது நானறிந்த தகவல். கொம்பனி முதல்வர் ஆக (Company Leader) ஒரு "லெப். கேணல்" தரநிலையிலான அதிகாரி கடைமையாற்றினார். இந்த 150 பேருள் கொம்பனி ஆளுகைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் போராளிகள் நியமிக்கப்பட்டிருப்பர். எ.கா: கொம்பனி மேலாளர் (Company Officer/ Company Manager), பதில் முதல்வர், வானலை தொலைத்தொடர்பாளர், நிலைமை அறிவிப்பாளர், கொம்பனி முதல்வர் உதவியாளர், கனவகை ஆயுதப் பிரிவினர், வேவுப்புலிகள் (வலிதாக்குதல்களின் போது மட்டும் வழிகாட்டிகளாக), கள மருத்துவர் (தேவைப்படின்) எனப் பலர் இருப்பர்.
  • பிளாட்டூன் (Platoon):
    • மூன்றாம் ஈழப்போரின் ஜெயசிக்குறு காலத்தில் சில கொம்பனிகளிற்கு எண்ணிக்கை 5 செக்சன்கள் (ஏறக்குறைய 45-60 பேர்) ஆகும். பிளாட்டூன் முதல்வர் ஆக ஒரு "மேஜர்" தரநிலையிலான அதிகாரி கடைமையாற்றினார். இந்த 60 பேருள் பிளாட்டூன் ஆளுகைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் போராளிகள் நியமிக்கப்பட்டிருப்பர். எ.கா: பதில் முதல்வர் (ஒரு "கப்டன்" தரநிலை அதிகாரி), முன்னிலை நோக்குநர் (தேவைப்படின்) என்போர் இருப்பர். அதே நேரம் இந்த 60 பேருள் ஆர்பிஜி கொமாண்டோக்கள், டொங்கான்காரர் மற்றும் இலகு இயந்திரச் சுடுகலன் குழுக்கள் ஆகியோர் எப்போழுதும் தேவைக்கேற்ப செக்சன்களோடு இணைக்கப்பட்டிருப்பர்.
  • செக்சன் (Section):
    • இதன் ஆளணி எண்ணிக்கை 3 குழுக்கள் (9 பேர்) ஆகும். செக்சன் முதல்வர் ஆக ஒரு "கப்டன்" தரநிலையிலான அதிகாரி கடைமையாற்றினார்.இந்த ஒன்பது பேருள் ஒருவர் நடைபேசி கொண்ட தொலைத்தொடர்ப்பாளராக இருப்பர். இதன் எண்ணிக்கையானது தாக்குதலின் தேவைக்கேற்ப சில வேளைகளில் கூட்டிக்குறைக்கப்படுவதுண்டு. 
    • இதை "பகுதி" என்ற தமிழ்ச்சொல்லால் புலிகள் அடையாளப்படுத்தியதாக நானறிகிறேன். இருப்பினும் உறுதியாகத் தெரியவில்லை.
  • குழு (Crew):
    • இதன் ஆளணி எண்ணிக்கை மூன்று பேராகும். இதன் முதல்வர் தரநிலை பற்றி தெரியவில்லை. புலிகளின் தரநிலை அடுக்கமைவைக் கொண்டு ஊகிக்கும் போது இது "லெப்டினன்ட்" தரநிலையிலான அதிகாரியால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்று துணிபுகிறேன்.
    • இம்ரான் பாண்டியன் படையணியின் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் ஆர்பிஜி கொமாண்டோக்களில் ஒரு 'உந்துகணை சூட்டாளர்' மற்றும் ஒரு 'துணைவர் (T-56/ Ak LMG யோடு மேலும் மூன்று உந்துகணைகளுடன்)' ஆகிய இருவரையும் "குழு"வென்று சொல்வதாம் என்பது கேள்வி. 
    • கனவகை ஆயுதப் பிரிவில் உள்ள ஒவ்வொரு விதமான சுடுகலன்களை இயக்கத் தேவைப்படும் போராளிகள் குழுவாக இயங்குவார்கள். இதன் முதல்வரின் தரநிலையோ இதனுள்ளிருந்த போரளிகளின் தரநிலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நானறிந்த சிலதுகள் :
      • "பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி"யின் (FN MAG, PK LMG, AK LMG, RPK, RPD) வீரர்கள் இருவர் கொண்ட குழுவாக செயற்படுவர்; இயந்திரச் சுடுகலனுடன் ஒருவர் மற்றும் சன்னக்கூட்டுத் தொகுதியுடன் ஒருவர். தேவைப்படுகையில் தனி ஒருவராகக் கூட இயக்கப்படுவதுண்டு.
      • ஓட்டோ டொங்கான் (எம்.கே. 19, ஏ.ஜி.எஸ்-17) - சுடுகலன் காவுதற்கு இருவர், சன்னப்பெட்டி காவுதற்கு ஒருவர், மற்றும் தொலைத்தொடர்பாளராக ஒருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்) என மொத்தம் நால்வர்.
      • large.842202072_CharlesAntonySpecialRegi
      • 50 கலிபர் (W85, T-85) - சுடுகலன் காவுதற்கு இருவர், இரு சன்னப்பெட்டிகளைக் காவுதற்கு இருவர், மற்றும் தொலைத்தொடர்பாளராக ஒருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்) என மொத்தம் ஐவர் கொண்ட குழு.
      • large.148995_331684360232535_1114535101_
      • 50 கலிபர் (M2 பிரௌனிங்) - சுடுகலன் காவுதற்கு இருவர், இரு சன்னப்பெட்டிகளைக் காவுதற்கு இருவர், மற்றும் தொலைத்தொடர்பாளராக ஒருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்), துணைக்கு இன்னுமொருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்) என மொத்தம் அறுவர் கொண்ட குழு.
      • large.1545710674_march98.png.80298b5ae3c
      • சாரை (இரட்டைச் சில்லுக் காவியுடன் சி.பி.யு-1) - சன்னப்பெட்டி பூட்டப்பட்ட சுடுகலனை இழுத்துச் செல்ல மூவர், கூடுதல் சன்னப்பெட்டி காவுவதற்கு ஒருவர், மற்றும் தொலைத்தொடர்பாளராக ஒருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்), துணைக்கு இன்னுமொருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்) என மொத்தம் அறுவர் கொண்ட குழு.
      • எம்.கே. 11 மல்யுக்தா, எஃவ்.ஜி.எம். 172, ஆர்.பி.ஜி 29, முக்காலி கொண்ட பின்னுதைப்பற்ற சுடுகலன்கள் போன்றவற்றை இயக்கியவர்கள் எண்ணிக்கை தொடர்பாக எனக்குத் தெரியாது.

  • அணிகள் (Team) மற்றும் பிரிவுகள் (Unit)

அணிகள் மற்றும் பிரிவுகள் என்பன படையணிகளினுள் இருந்த குறித்த அப்படையணியின் அடிபாட்டுத் தேவைக்காகவோ (சா.அ.சி. படையணியினுள் இருந்த பாலா மோட்டார் அணி, கனவகை ஆயுதப்பிரிவு) அல்லது பொது அடிபாட்டுத் தேவைக்காக (இ.பா. படையணியினுள் இருந்த சங்கர் ஆழ ஊடுருவித்தாக்கும் அணி, குறிசூட்டுப் பிரிவு) உருவாக்கப்பட்ட சிறு அடிப்பாட்டு உருவாக்கங்கள் ஆகும். இதனின் உட்பிரிவுகள் பற்றி நானறியேன். சில அடிபாட்டு உருவாக்கங்களின் கட்டமைப்பைக் குறித்தும் இவை வழங்கப்பட்டன (பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு).

  • தொகுதி (Battery)

தொகுதி என்பது விடுதலைப்புலிகளின் சேணேவி அடிபாட்டு உருவாக்கங்களின் (Artillery Comabt Formations) ஒரு உட்கட்டமைப்பினை குறித்த சொல்லாகும். சேணேவியின் சூழமைவில், ஆங்கிலத்தின் "Battery" என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் இதுவாகும். இதில் ஒரு தொகுதியில் இருந்த கணையெக்கிகள் (Mortar) மற்றும் தெறோச்சிகளின் (Howitzer) எண்ணிக்கையினை நானறியேன். ஆனால் அவை விடுதலைப்புலிகளிடம் இருப்பில் இருந்த சுடுகலன்களுக்கு (Guns) ஏற்ப பிரிக்கப்பட்டிருந்தன. 

இந்த சேணேவி அடிபாட்டு உருவாக்கங்களின் பிற உட்கட்டமைப்கள் பற்றி நானறியேன்.

மேலும், பல்குழல் உந்துகணை செலுத்திகள் (MBRL), கணையெக்கிகள் (Mortar), தெறோச்சிகள் (Howitzer) போன்றவற்றை இயக்குவதற்கு புலிகள் ஆளிட்டிருந்தோரின் எண்ணிக்கையும் நானறியேன்,

  • படை (Force)

இந்த படை என்பது "சிறுத்தைப்படை, தமிழீழத் தேசியத் துணைப்படை"யை மட்டும் குறித்து வழங்கப்பட்டது. சிறுத்தைப்படையின் முப்பிரிவுகளும் அணி என்று வழங்கப்பட்டன (கடற்சிறுத்தை அணி, காட்டுச்சிறுத்தை அணி, தரைச்சிறுத்தை அணி) என்று அறிகிறேன். தமிழீழத் தேசியத் துணைப்படையின் உட்கட்டமைப்புகள் பற்றி நானறியேன். 

இப்படை என்ற சொல்லானது ம் 1.5 விசேட படையணியின் பட்டப்பெயரான "அமெரிக்கன் படை" என்பதிலும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வுருவாக்கங்களோடு களமுனையில் சமராடும் புலிவீரர்களுக்கு உதவியாக காயப்பட்டோரைக் காவிச் செல்ல "காவும் குழு" (இவர்கள் புதிதாகப் பயிற்சி முடித்த போராளிகள் ஆவர். சமர்க்களத்திற்கு அனுப்ப முன்னர் அதன் பட்டறிவு பெறுவதற்கு இவ்வேலையில் ஈடுபடுத்தப்படுவர்.), இதர வேலைகளுக்கென "உதவிக் குழு" போன்று பல குழுக்களும் செயற்பட்டன.

  • கட்டளைப் பணியகங்களின் உட்கட்டமைப்பு

நான்காம் ஈழப்போரில் பரந்து பட்ட ஆட்புலத்தை (தமிழீழம் என்று கோரப்பட்டதில் கிட்டத்தட்ட 50 வீதமான நிலப்பரப்பு புலிகளின் நேரடி ஆளுகையின் கீழ் இருந்தது) கொண்டிருந்த புலிகள் சமர்க்கள வசதியிற்காக சமர்க்களங்களை கட்டளைப் பணியகங்களாக பிரித்திருந்தனர், மாவட்ட அடிப்படையில். இக்கட்டளைப் பணியகங்களில் பணிபுரிந்தோரும் பதவிகள் வகித்து அவர்களுக்கும் தரநிலைகள் வழங்கப்பட்டன, வீரச்சாவடைந்த போது.

உருவாக்கப்பட்டிருந்த கட்டளைப் பணியகங்களாவன:

  • வடபோர்முனை கட்டளைப் பணியகம்
  • மன்னார் கட்டளைப் பணியகம்
  • மணலாறு கட்டளைப் பணியகம்
  • வவுனியா கட்டளைப் பணியகம்
  • மட்டக்களப்பு கட்டளைப் பணியகம்
  • அம்பாறை கட்டளைப் பணியகம்
  • திருமலை கட்டளைப் பணியகம்
  • கிளிநொச்சிக் கட்டளைப் பணியகம் (கிளிநொச்சியை சமர் நெருங்கிய போது உருவானது)

கட்டளைப் பணியகம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் "கட்டளைப் பணியகத் தளபதி", "கட்டளைப் பணியகத் துணைத் தளபதி" என்பன போன்ற பதவிகளும் உருவாக்கப்பட்டிருந்தன. கட்டளைப் பணியகம் தொடர்பான ஏனைய பதவிகள் பற்றி எனக்குத் தெரியவில்லை. கட்டளைப் பணியகங்களின் கீழ் முறியடிப்பு அணிகள் தொழிற்பட்டன. 

களமுனையிலும் களநிலையிலும் நடப்பவை மற்றும் அதிலிருந்த கட்டுமானங்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் கட்டளையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பொதுவாகவே சமர்க்களத்தில் தேவைக்கேற்ப முன்னணி காப்பரண் அவதானிப்பாளர், குறிப்பிட்டளவு காவலரண்களுக்கு பொறுப்பாளராக "xxxx-பகுதி பொறுப்பாளர்", வழங்கல் பொறுப்பாளர் போன்ற பல பதவிகள் இருந்தன. இவற்றை வகித்தவர்களுக்கும் தரநிலைகள் உண்டு. அவை பற்றி நானறியேன்.

இதே போன்று மருத்துவப் பிரிவில் இருந்தோரின் பதவிகள் மற்றியும் நானறியேன்.

நான்காம் ஈழப்போரின் போது 'படைத்துறைச் செயலர்' என்ற பதவி நிலை உருவாக்கப்பட்டது. இதை கேணல் தமிழேந்தி (ஏனோ தெரியவில்லை, இவருக்கு வெளிநாடுகளில் பிரிகேடியர் என்ற தவறான தரநிலையினை வழங்குகின்றனர்) அவர்கள் வகித்து வந்தார். 2009 மார்ச் அவரது வீரச்சாவிற்குப் பின்னர் அப்பதவி நீக்கம் செய்யப்பட்டது.

  • கடற்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பு

கடற்புலிகளிடத்திலும் படையணி, அணி போன்ற அடிபாட்டுக் கட்டமைப்புகளும் சமர்க்களத்தில் கடற்கலங்கள் தொகுதியாகவும் பிரிக்கப்பட்டு இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றின் உட்கட்டமைப்பு எப்படி இருந்தது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. 

கடற்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கங்களைக் குறித்த சொற்களான படையணி,  அணி, படை ஆகியவற்றின் உட்கட்டமைப்பு பற்றி எனக்குத் தெரியாது.

  • தொகுதி (Flotilla)

தொகுதி என்பது விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் கடற்சமர் உருவாக்கங்களில் ஒன்றான Flotilla என்பதற்கான தமிழ்ச் சொல்லாகும். ஒரு கலத்தொகுதியில் எத்தனை படகுகள் இருந்தன, அவற்றின் வகுப்புகள் யாது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.

(நான் மூன்று படகுகள் கொண்டது ஒரு கலத்தொகுதி என்று கேள்விப்பட்டுள்ளேன். எனினும் இத்தகவல் என்னுடைய கேள்விஞானமாதலால் ஒரு வரலாற்றுத் தகவலாகக் கருத வேண்டாம்)

  • கரும்புலிகள் & வான்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பு

இவை பற்றி எதுவும் அறியேன்.

 

நேரடியாக அடிபாட்டியலோடு தொடர்பற்ற துறைகளின் படைத்துறை உட்கட்டமைப்பு:

தமிழீழ அரசியல்துறை, தமிழீழ நிதித்துறை மற்றும் தமிழீழ நீதி-நிர்வாகத்துறை ஆகியவற்றில் சம்பளத்திற்கு வேலை செய்த ஆயுதம் தரியாதோர் பணியாளர்கள் எனப்பட்டனர்.

இம்மூன்று துறைகளிலும் பணிபுரிவோருக்கு துறைசார் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு துறையின் தேவைகளுக்கும் ஏற்ப பிரிக்கப்பட்டிருந்த உட்பிரிவுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவை ஒவ்வொரு துறையின் செயற்பாடுகளின் அடிப்படையில் துறைசார் பணிமனை (எ.கா: பணிமுதல்வர், பணிப்பாளர்) வகையில், ஆட்புல வகையில் (எ.கா: ஆஅ கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர், ஆஆ வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்) எனப் பிரிக்கப்பட்டிருந்தன. இவை பற்றி மேலதிகமாக நானறியேன்.

இப் பணியாளர்கள் தேவைப்படும் போது படைத்துறைக்குள் உள்வாங்கப்பட்டு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டு சமர்க்களம் அனுப்பப்பட்டனர். இவர்கள் ஆறுமாத கால சுழற்சிமுறையில் சமர்க்களம் சென்று வந்தனர். இவ்வாறு சென்றோரைக் கொண்டு துறைசார் தாக்குதலணிகள் உருவாக்கப்பட்டிருந்தன (எ.கா: வருவாய்த்துறை தாக்குதலணி, அரசியல்துறை தாக்குதலணி). இவற்றின் உட்கட்டமைப்புப் பற்றியும் நானறியேன்.

 

முடிவுரை:

இத்தொகுப்பை முழுமையாகச் செய்ய தமிழீழச் சமர்க்களத்தின் நேரடிப் பட்டறிவு எனக்கில்லாததால் போராளிகளாக இருந்தோரின் உதவியுமின்றி என்னால் முற்றாக முடிக்க முடியாது என்பதை நன்கறிவேன். ஆயினும் என்னால் இயன்றதை நான் அடுத்த தலைமுறைக்கு கடத்த முயல்கிறேன். முயல்வேன்.

எமது சம காலத்தில் உருவாகி அழிக்கப்பட்ட தவிபு படைத்துறை கட்டமைப்பானது வரலாற்றுச் சுவடில்லாமல் போவதை நான் கிஞ்சித்தும் விரும்பவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெருமைமிகு உரோமப் பேரரசின் படைத்துறை உட்கட்டமைப்பானது அம்மக்களால் ஆவணப்படுத்தப்பட்டதால் இன்றுவரை அது அறியப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெருமைமிகு சோழப் பேரரசின் படைத்துறை உட்கட்டமைப்பு பற்றி ஒரு மண்ணும் இன்று எமக்குத் தெரியாது. ஏனெனில் அவர்கள் தமது படைத்துறை பற்றி சிறு தடயத்தைக் கூட எதிர்காலத்திற்கென விட்டுச் செல்லவில்லை! அதே கதிக்கும் தவிபுக்கும் உள்ளாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன்.

எனவே புலிகளின் வரலாற்றினை எழுத அவர்களான தமிழீழ ஆயுதவழி விடுதலை வீரர்களே காட்டும் தயக்கமானது எனக்கு மிகுந்த வருத்தத்தையும் எதிர்காலத்தில் எமது வரலாறுகள் திரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. இன்றே பலர் வேண்டுமென்று தவிபுவின் வரலாற்றை திரிப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இன்று இயக்கக் கமுக்கங்கள் என்று வரலாறு தெரிந்த இயக்க அண்ணாக்கள்/அக்காக்கள் வகுப்பித்துள்ளவை அ நினைத்து வைத்துள்ளவை யாவும் சிங்களம் அறியாதவையன்று. சிங்களம் தாம் அறிந்தவற்றை வெளிப்படுத்தவில்லை. சில வேளைகளில் தாம் இவ்வாறு செய்யாமல் இருந்தால் புலிகளும் அச்சத்தால் எழுதாமல் விடுவார்கள், எனவே எதிர்கால தமிழர் தலைமுறைகள் வரலாற்றை இழந்து வரலாற்றில் இருந்தே தவிபு விடுபடும் என்று எண்ணியிருக்கக்கூடுமோ என்னவோ. ஆதலால் பகை நினைத்துள்ள எண்ணத்தை நாம் நடந்தேற விடாமல் எமது வரலாற்றை எழுதிட வேண்டும். இவ்வரலாற்றுக் கடமையைச் செய்யத் தவறுவீர்களேயானால் எம் எதிர்கால தலைமுறைகள் சிதைந்த வரலாற்றோடு திரிவுகளுக்கும் முகம் கொடுத்து தம் இறந்தகாலத்தவரான எம்மை நோகும் என்பதை மறந்திட வேண்டாம்.

ஆகவே யாரேனும் இயக்க அண்ணாக்கள்/அக்காக்கள் இவற்றை முற்றாக முறையாக ஆவணப்படுத்துமாறோ அல்லது நீங்கள் விரும்பின் எனக்கு உதவுமாறோ தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

 

  • உசாத்துணை:

சில தனிப்பட்ட தகவல்கள்

திரைப்படம்: 

  1. காற்றுவெளி (50:00 - 1:05:00)

குறும்படம்:

  1. நிகழ்காலம் (34:00 - 37:00)

ஆவணப்படம்:

  1. புதுக்குடியிருப்பு ஊடறுப்புத் தாக்குதல் (01/02/2009)
  2. ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர் ஓராண்டு நிறைவு விழா (முழுது)

வாழ்க்கை வரலாறு:

  1. கேணல் கோபித்
  2. கேணல் தமிழேந்தி
  3. கேணல் ரமணன்
  4. லெப். கேணல் ஈழப்பிரியன்
  5. லெப். கேணல் தர்சன்
  6. மேஜர் துளசி
  7. மேஜர் சேரலாதன்

படையணி சிறு குறிப்பு:

  1. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறு குறிப்பு

புத்தகம்:

  1. விழுதாகி வேருமாகி - 2ம் லெப். மாலதி படையணி (பக்.: 353- 360)

ஒலி நாடா:

  1. களத்தில் மலர்ந்தவை பாகம் - 1

செய்தித்தாள்:

  1. விடுதலைப்புலிகள் ஆடி, 1995

தொடர் கட்டுரை:

  1. உள்ளிருந்து ஒரு குரல் (மலைமகள்)
  2. உள்ளிருந்து ஒரு குரல் (உலகமங்கை) 

வலைத்தளம்:

  1. tchr.net: 50_year_arrest_kill.htm

 

Edited by நன்னிச் சோழன்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்! அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கனவாகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையினான பயண நேரத்தை 1 மணிநேரமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு  விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. . இதற்கு முன்பு இது போன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார். ஆனால் தற்போது அவருக்கு சொந்தமான போரிங் கம்பெனி சுரங்கப்பாதை அமைப்பதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளதால் தனது கனவை நனவாக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413381
    • ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்! ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் (Magdeburg) நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஒன்பது வயது மற்றும் நான்கு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (20) மாலை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தது 41 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலையடுத்து வெள்ளிக்கிழமை அந் நாட்டு நேரப்படி இரவு 07:00 மணிக்குப் பின்னர் சுமார் 100 பொலிஸார், வைத்தியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாகவும் அருகிலுள்ள நகரமொன்றில் வைத்தியராக பணியாற்றி வருவதாகவும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஒரு மனநல மருத்துவர் ஆவார், அவர் மாக்டேபர்க்கிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பர்க்கில் வசித்து வந்தார். 2006 இல் ஜெர்மனிக்கு வருதை கதந்த அவர் 2016 இல் அகதியாக அங்கீகரிக்கப்பட்டார். மேலும், ஜேர்மன் அதிகாரிகளின் கூற்றுப்படி சந்தேக நபர் தனியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். எனினும், தாக்குதலின் பின்னணியில் உள்ள சாத்தியமான நோக்கம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும், அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர் கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1413409
    • செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எனினும், அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அந்த நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானிகள் மேற்கொண்ட பணி என்ன என்பதை விவரிக்கவில்லை. 1200 பேரைக் கொன்று 250 பேரை பயணக் கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்குப் பின்னர் 2023 ஒக்டோபரில் காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100 வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுத்திகள் குறிவைத்துள்ளனர். காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைப்பதாக ஹவுத்திகள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஹவுத்திகளை குறிவைத்து அமெரிக்கா செங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனது வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1413449
    • "சிந்தை சிதறுதடி" [1] "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி  உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி!  நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா  கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!"  "தீந்தை விழியால் என்னை மயக்கியவள்  சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே!  வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள்   சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • மாறாது ..வடக்கு கிழக்கு ஜெ.வி.பி தவ்வல்கள் படிக்க கணக்க இருக்கு ....
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.