Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா!?

Featured Replies

நிலா அக்கா உங்க பொலிசி நல்லா இருக்கு கீப் இட் அப்..

குட்..கீப் இற் அப்! :P

கலாச்சாரம் தேவைதான். ஆனாலும் ஆக கூடிய கட்டுப்பாடுகள் தேவையில்லல

நான் நினைக்குறன் நாங்க (வாதாடிய சிலர்) நினைக்குறது ஒரு விடயத்தையே..

ஆனால் சொல்ல்லும் விதமும்.உதாரணமும் வேறு என்றூ.

அதனால சொன்னதையே திருப்பி சொல்லிக்கிட்டு இருக்கோம்.. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பெண்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர்களுக்குத் தங்களின் சுதந்திரத்தின் எல்லை எதுவென்று தெரியவில்லை.. சிலவேளைகளில் எல்லாம் நன்றாகவே இருக்கின்றது என்று நினைப்பார்கள். சிலவேளைகளில் எல்லாம் பிழையாக இருக்கென்று நினைப்பார்கள்.. இப்படிப் பெண்கள் சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்காத நிலையை நன்கு உணர்ந்துதான், ஆதி காலத்தில் இருந்து ஆண்கள் மிகவும் கடினமாகச் சிந்தித்து பெண்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று பல நெறிமுறைகளையும், நியதிகளையும் வழிவகுத்துள்ளார்கள்.. ஆண்கள் வகுத்த வழிமுறைகளைப் பின்பற்றி ஒழுகுவதன் மூலம் பெண்கள் சீரும் சிறப்பாகவும் வாழலாம்..அத்தோடு ஆண்களை விட பெண்கள்தான் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க முனைப்பாகச் செயற்படவேண்டும்.. "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்பதில் இருந்து நாம் அறியவேண்டிய பலவிடயங்கள் உள்ளன.. ஆண்களால் உருவாக்கப்பட்ட கலாச்சார, பண்பாட்டுச் சட்ட திட்டங்களைப் பெண்கள் உள்வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுவதன் மூலம் ஆண்குழந்தைகளை புதுப் புதுச் சட்டங்களை உருவாக்கப் புடம் போடுகின்றனர். பெண் குழந்தைகளை சட்டத்தின்படி ஒழுகி நடக்க அறிவுறுத்துகின்றனர். தாயின் சொல்லைத் தட்டி நடக்கும் ஆண்கள் ஊதாரிகளாகவும், தட்டி நடக்கும் பெண்கள் சமூகக் கட்டுப்பாடுகளை மதிக்காத அடங்காப்பிடாரிகளாகவும் உருவெடுக்கின்றனர். இப்படியானவர்களை அதிகரிக்காமல் பார்க்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் ஆண் மகனுக்கும் உண்டு!பாரதியை விட பாரதிதாசனைத்தான் தற்போது பிடிக்கின்றது.

எங்கட கிருபனண்ணா சொன்னாரெண்டால் அதுக்கு நெடுக்காலயும் குறுக்காலயும் அர்த்தமிருக்கும்............................ :P :P
குழம்பக் கூடாது.. மற்றவர்களையும் குழப்பக் கூடாது.. நாம குறுக்கால சிந்திப்பதில்லை.. எப்பவும் நெடுக்காலதான்.. B)

சகி முதலில உங்கட விவாதத்துக்கு வருவம்....

கலாச்சாரமும், பண்பாடும் பெண்ணுக்கு மட்டுமில்லை! ஆணுக்கும் தான் உண்டு என்று திரும்பவும் சொல்லுறீங்கள். இஞ்ச நீங்கள் ஆண்களுக்குரிய கலாச்சாரம், பண்பாடு என்று எவற்றை சொல்லுறீங்கள்? அவற்றை உதாரணங்களுடன் இங்கே பட்டியலிட்டு தரமுடியுமா? பெண்கள் கலாச்சாரம், பண்பாடு என்று பார்க்கும் போது, நீங்கள் நினைப்பது போல் தாலி, புடவை, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, நீளமான தலைமயிர், தலையை குனிந்துகொண்டு வியாதிக்காரர் மாதிரி நடத்தல், மற்றும் பொட்டு மட்டருகளை விட அடிப்படையில் முக்கியமான பல விசயங்களை பற்றி நான் ஏற்கனவே கூறியுள்ளேன். முதலில் முக்கியம் என்று ஏற்கனவே கூறிய அடிப்படை விசயங்கள் பெண்களால் கட்டிக் காக்கப்படுகின்றனவா? இல்லையே! நீங்கள் சொல்வது எப்படி இருக்கின்றது என்றால் வீட்டின் அத்திவாரத்தை அரையும், குறையுமாக பிழையான முறையில் கட்டிவிட்டு, அதன் வெளித்தோற்றம் - சுவரின் நிறம், கதவுகள், பதிக்கின்ற மாபிள் கற்கள், அழகுபடுத்தும் பூந்தோட்டம் இவற்றில் அதிக அக்கறை செலுத்துவது போல் இருக்கிறது.

வேட்டி கட்டுதல், பெண்களைக் கண்டால் தலையைக் குனிந்தபடி நடத்தல், திருமணம் செய்த பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருத்தல் (சரி குங்குமப் பொட்டு வைத்திருந்தால் அவள் திருமணம் செய்துள்ளதை அறிய முடியும், அவள் ஒரு வெள்ளைக்காரியாக இருந்தால் எப்படி அறிந்துகொள்வது?), சீதனம் வாங்கி கலியாணம் கட்டுதல் (நான் சொல்லவில்லை, தலைப்பு சொல்கிறது..), காதில் கடுக்கன் போடுதல், கோவணம் கட்டுதல், இவற்றையா ஆண்களுக்குரிய கலாச்சாரம், பண்பாடு என்று கூறுகின்றீர்கள்?

வெளிநாடோ அல்லது நம்ம ஊரோ எங்கும் ஆண்களையும் சமூகம் (தமிழ் சமூகம்?) தவறான கண்ணோடு நோக்கும் சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கு என சொன்னீங்கள். நீங்கள் சொல்வது சரிதான். எப்படி என்றால்... ஒரு பெண்ணை காதலிக்க வெளிக்கிட்டால் மூளை சுகம் இல்லை என்று சொல்வது, பெண்களுடன் சிரித்து கதைத்தால் "பெட்டைக் கள்ளன்" என்று சொல்வது, பெண்களிற்கு உதவிகள் செய்தால் "வழிகின்றார்" என்று சொல்வது, கோயிலுக்கு அடிக்கடி போய் வந்தால் "சாமிப்போக்கு/பண்**ம்" என்று சொல்வது... இன்னும் நிறைய இருக்கு... "ஆண்களுக்கும் கலாச்சாரம் இருக்கு.. அதனால அவர்களுக்கும் பாதிப்பிருக்கு" என்று கூறுவதை விட "எங்கட சமூகத்தில நிறைய குறைபாடுகள் இருக்கு... அதனால ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிறைய பாதிப்பிருக்கு... " என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஒல்லாந்தர் உலகை ஆண்டது கலாச்சாரத்தை கொண்டா? இல்லை படை பலத்தைக்கொண்டா? இப்படி ஒரு கேள்வி!.. படைபலம் என்பது என்ன? மன பலம் + உடல்பலம் + ஆயுத பலம் இவை மூன்றும் சேர்ந்தது படைபலம் என்று சொல்லலாமோ? எப்படியான மன பலம் + உடல் பலம் உருவாக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் எவை? இந்த காரணிகளில் மிகவும் முக்கியமானவையாக பண்பாடு, கலாச்சாரம் கொள்ளப்பட முடியும் தானே?

இப்ப கிருபன் அண்ணை சொல்வதை பார்ப்பம்...

ஆண்கள் வகுத்த வழிமுறைகளைப் பின்பற்றி ஒழுகுவதன் மூலம் இதுவரை காலமும் (பூமி தோன்றிய காலத்தில் இருந்து சுமார் 1900 ம் ஆண்டுவரை என்று வைத்துக்கொள்வோம்) தமிழ் பெண்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்று சொல்வது சரிதானே? அப்படியென்றால், இந்தக் காலத்தில் தமிழ்ப் பெண்கள் சீரும் சிறப்பாகவும் வாழ்ந்துள்ளார்கள் என்று சொல்கின்றீர்களா? உடன்கட்டை ஏற்றுதல், விபச்சாரியாக பாவித்தல் என்று எத்தனையாயிரம் கொடுமைகள் இந்தக் காலத்தில் தமிழ்ப் பெண்கள் மீது கட்டவிழித்துவிடப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாதோ? தமிழ்ப் பெண்கள் இந்தக் காலத்தில் சந்தோசமாக வாழ்ந்தாக வாய் கூசாமல் பொய் சொல்கின்றீர்களே? நெடுக்காகச் சிந்திப்பது என்பது இதைத்தானா?

ஓகோ, பெண்களிற்கு சுதந்திரத்தின் எல்லை எது என்று தெரியவில்லையோ? ஏன் ஆண்களுக்கு மட்டும் அது ஞானக்கண் மூலம் தெரிந்துள்ளதோ? யாரோ கவிஞன் வானமே எல்லை என்று பாடுறான்... இன்னொருவன் நீ விண்வெளிக்கும் போகலாம் உனக்கு எல்லையே இல்லை என்று சொல்லுறான். ஆண்கள் கூடத்தான் சிலவேளைகளில் அல்ல பலவேளைகளில் எல்லாம் பிழையாக இருக்கென்று நினைப்பார்கள். இது மனித மனத்தின் இயல்பு. இதற்கேன் ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பார்க்கின்றீர்கள்?

என்னது பெண்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கமாட்டார்களா? அவர்கள் எவ்வாறான முடிவு எடுக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? நீங்கள் விரும்பாத அல்லது நீங்கள் எதிர்பார்க்காத ஒரு முடிவை பெண்கள் எடுத்தால் அவர்களை சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் என்று கூறுவீர்களோ?

"அத்தோடு ஆண்களை விட பெண்கள்தான் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க முனைப்பாகச் செயற்படவேண்டும்..." எண்டுறீங்கள். இங்கே ஒருவருக்கும் கலாச்சாரம் என்றாலே என்ன என்ற தெளிவான விளக்கம் இல்லை. இந்தக்கேவலத்தில் அதை கட்டிக்காக்க முனைப்புடன் செயற்பட வேண்டுமா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். சுவர் எங்கே இருக்கின்றது என்பது தெரியாதபோது சித்திரத்தை எங்கே கொண்டுபோய் வரைவது?

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!"

அண்ணே உந்த வசனம் எங்க எழுதப்பட்டிருக்கு என்று சொல்ல முடியுமோ? பைபிள் வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கோ? இல்லாட்டி திருக்குறளில் இருக்கோ? இல்லாட்டி சிவபெருமான் இப்படி உமாதேவியாருக்கு சொன்னவர் என்று யாராவது உங்களுக்கு சொன்னவேளோ? உதை எழுதியவர் என்ன கடவுளின் தூதுவனோ? உத எழுதியது எங்கள மாதிரி ஒரு மனுசன் தான் அண்ணை. அதே ஆள் தற்செயலாக இப்படி எழுதி இருந்தால் இதையும் கேட்டு இருப்பீங்களோ?

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பதிலே!"

எங்க பார்த்தாலும் மடியில பாரம் என்றால் மனிசிகளின்ற தலையில எல்லாத்தையும் இறக்கிப்போட்டு பல புருசன்மார் ஓட்டம் பிடிக்கின்றார்கள். அதாவது பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் பிரச்சனையில் இருந்து விலகி ஓடுகின்றார்கள் என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம்!

ஆக மொத்ததில் நீங்கள் சொல்லிற தத்தவத்தின் சாரம்சத்தை பார்த்தால் இப்படி இருக்கு.. புருசன் விதையை விதைப்பாராம்! மனுசி உரம் போட்டு, நீர் ஊற்றி கஸ்டப்பட்டு மரத்தை வளர்ப்பாவாம்! பிறகு புருசன் வளர்ந்த மரத்தில காய்க்கின்ற பழங்களை புடுங்கி சாப்பிடுவாராம்! ஆகா.. இதைக் கேக்க ஆம்பளையா இருக்கிற எனக்க மனதுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு! அப்ப நானும் கெதியில ஒரு கலியாணம் கட்டி பார்க்கவேணும்...

நன்றி! வணக்கம்! :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கென ஒரு தனிப்பண்பாடு

இருக்கிறதா?

மு.பொன்னம்பலம்

இலங்கையைச் சார்ந்த மு.பொன்னம்பலம் கவிஞர், விமர்சகர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாசிரியர்.

தனக்கென ஒரு தத்துவத்தை வரித்து அதன் வழி இலக்கியம் படைத்தவர். தத்துவ தளத்தில் இவரது முன்னோடி மு. தளையசிங்கம். இருவரும் சகோதரர்கள்.

தமிழர்களுக்கென ஒரு தனிப்பண்பாடு இருக்கிறதா?'' என்று என் நண்பன் கேட்டான்.

''அப்படி இருப்பதாகத்தானே சொல்லப்படுகிறது. உதாரணமாக சுமங்கலியான தமிழ்பெண் குங்குமப் பொட்டிடுகிறாள். தாரமிழந்தவள் அப்படிச் செய்வதில்லை. அவள் வெள்ளைச் சேலை கட்டுகிறாள். இன்னும் தமிழர் தமது பெண்கள் பூப்பெய்தியதும் பூப்புனித நீராட்டு விழாச் செய்கிறார்கள். இவையெல்லாம் தமிழர் பண்பாடு என்றுதானே சொல்லப்படுகிறது.'' நான் கூறினேன்.

ஆம். நீங்கள் சொல்வது சரி. ஆனால் இவற்றை தமிழ்ப்பண்பாடு என்று கூறலாமா? நான் இவற்றைத் தமிழ்ப் பண்பாடு என்று இன்று கூறமாட்டேன்.''

''ஏன்?''

''இன்று எம்மால் தமிழர் பண்பாடு என்று எடுத்து ஓம்பப்படுவன எவ்வளவு தூரம் இன்றைய காலத்துக்கும் அது போற்றும் அறிவு வளர்ச்சிக்கும் மனித நாகரிகத்துக்கும் தேவையாய் உள்ளன என்பதைப் பொறுத்தே நமது பண்பாடென்பது மதிக்கப்படும். அதே நேரத்தில் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியும் அதன் அடிப்படையில் நிறுவப்படும் புறவளர்ச்சியும் மனித நாகரிகத்தை தீர்மானிக்கிறது என்றும் சொல்லமாட்டேன்.''

''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''

இந்த விஞ்ஞானத்தின் புறவளர்ச்சியை பிரயோகித்துத்தான் ஹிட்லர் போன்ற, லட்சக்கணக்கான மக்களை கொலை செய்த அராஜகர்கள் உருவானார்கள். ஆகவே, மனித நாகரிகம் என்பது மனிதனின் அகப் பண்பாட்டிலிருந்தே தோன்றுவதாகும். இந்நிலையில் தமிழரிடம் உள்ள பண்பாடு அல்லது கலாசாரம் என்பது மனித அகப்பண்பாட்டை வளர்ப்பதாக உள்ளதா?'' என்று கூறிய நான், ''தமிழர் பண்பாட்டை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்'' என்றேன்.

''அவை எவையெனச் சொல்லுங்கள்''

''முதலாவது சமயம் சாராத (secular) நடைமுறைகளோடு சம்பந்தமுடையன. இந்த நடைமுறைகள் 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே வந்துள்ள நமது சங்க இலக்கிய, இலக்கண நூல்களில் காணலாம். இன்னும் இதைப் பின்தள்ளி, ஆரியர் வருகைக்கு முன்பிருந்த, சிந்துவெளி நாகரிக காலத்தில் கண்டெடுக்கப்பட்ட ''தியான மனிதனின்'' (சிவன்?) யோக முறைகள் பயிலப்பட்டு வந்த அகப்பண்பாடு வரை இதைக் கோடி காட்டலாம். நமது சங்க இலக்கியம் போற்றிய காதல் வீரம், கற்பு என்பது நமது பண்பாடாகக் கொள்ளப்பட்டன. ஆயினும், புலால் உண்ணுதல் கள்ளருந்துதல் இவற்றுக்குத் தடையாக ஒதுக்கப்படவில்லை. அதே நேரம், இக் காலத்திலேயே ''யாதும் ஊரே யாவரும் கேளீர். தீதும் நன்றும் பிறர் தரவாரா'' என்ற உச்சமான உலகனைத்தையும் தம்மூராகவும் உலகமக்கள் அனைவரையும் தம் நண்பர்களாகவும் பார்க்கும் எக்காலத்துக்கும் உரியதாக விரியும் தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளையும் பார்க்கிறோம். அடுத்தது,அதாவது இரண்டாவது ஆரியர் வருகைக்குப் பின் நிகழ்ந்த, சமயம், இறை நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட (Religious) ஒழுக்க முறைகளாகும்.

''இதை சிறிது விளக்குவாயா?''

''சமயம், இறைநம்பிக்கை சார்ந்த நமது பண்பாட்டு முறைகளை கோயில் திருவிழாவோடு ஒட்டியவற்றில் காணலாம். இன்னும் சிவராத்திரி, நவராத்திரி பூஜைகள், கந்தசஷ்டி விரதம், கெளரி விரதம், மரக்கறி உணவு, சைவத்தீட்சை பெறுதல் என்று மேலும் நீளும். இவற்றின் வழிவரும் பிராமணச் சடங்குகள், கலியாண வீட்டில், மரணவீட்டில், பூப்புனித நீராடல் வீட்டில் என்று நீளும். அவைப் போலவே, கோயில் திருவிழாக்களின் போது பிரதட்ஷனை, அடியழித்தல், காவடியாட்டம், பறவைக்காவடி, தேரிழுத்தல் என்று வருபவையும் தமிழர் பண்பாடாகவே கொள்ளப்படும்.''

''நீ சொல்வதிலிருந்து, சமயம் சாராத, சமயம் சார்ந்த இருவகைப் பண்பாட்டுக் கோலங்கள் தமிழ்ச் சமூகத்தை அணி செய்கின்றன என்பதை அறியலாம். இவற்றில் எவை எவை தமிழ்ப் பண்பாடாக கொள்ள வேண்டும்? எவை எவை தமிழ்ப்பண்பாட்டு போலிகளாகத் தள்ள வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?''

''சங்க காலத்துப் புலவர் அவாவிய 'யாதும் ஊரே யாவரும் கேளீர், தீதும் நன்றும் பிறர்தரவாரா' என்பது தமிழர் பண்பாட்டின் உச்சமான பார்வையாகக் கொள்ளலாம். சகல ஊர்மக்களையும் நண்பர்களாகப் பார்க்கும் பார்வையோடு 'தீதும் நன்றும் பிறர்தரவாரா' என்று சொல்லும் போது, ஒருவனுக்கு ஏற்படும் துன்பம், இன்பம் அனைத்தும் அவன் நடத்தையாலேயே வருகின்றன. ஆகவே, அவனே தன் நடத்தை ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்னும் போது முன் வைக்கப்படும் ஒழுக்கவிதி, இன்றய இருப்பு வாதிகளினது பார்வைபோல் உயர்ந்த மனப்பண்பாட்டைக் கோருகிறது. இதன் அடிப்படையிலேயே அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம். வீடு பேறெய்தலை தன்னை அறிதலாக உணர்ந்து, சிந்துவெளி நாகரிக்க கால 'தியான மனிதனின்' வழிவந்த யோகக் கலையை வாழ்க்கை முழுமையினதும், ஆதாரமாகக் கொள்ளும் போது தமிழர் பண்பாடு சகல இன மக்களுக்கும் வழிகாட்டும் ஒரு பண்பாட்டை கொண்டிருப்பதை உணரலாம். இது கடவுள், தெய்வீகம் என்று அலட்டிக் கொள்ளாது. வெற்றுச் சடங்குகளின் சுமையில் நசுங்குண்ணாது மனிதன் தன் இயல்பின் ஆழத்தில் நின்று வாழ்தலைத் தூண்டுவதாகும்.''

''பண்பாடு அல்லது கலாசாரம் என்பது சில அடையாளங்கள். சடங்குகளோடு ஒட்டியிருப்பதைக் காணலாம், உதாரணமாக நான் ஆரம்பித்தில் கூறியதுபோல் விவாகமான பெண்கள் குங்குமப்பொட்டிடுதல், இளம் பெண்கள் கறுத்தப் பொட்டிடுதல், விதவைகள் நெற்றியை வெறுமையாக விடுதல் போன்று இன்னும் பலவற்றைக் கூறலாம். மங்கள அடையாளங்கள் அமங்கல அடையாளங்கள் என்று பெரும் பட்டியலே போடலாம். இவை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

''இவற்றைத்தான் நான் சமயஞ்சார்ந்த இரண்டாவது வகைக்குள் அடக்குவேன். இவை ஆரம்ப தமிழ்ப்பண்பாட்டில் இருக்கவில்லை. ஆரியர் வருகைக்குப் பின் தமிழர் பண்பாட்டில் புரிந்த அனைத்து சடங்குகளும் தத்துவ விளக்கங்களும் சமயஞ் சபந்தப்பட்டவை. இதில் நல்லவையும் உண்டு. இன்று தேவையற்ற தீமையும் உண்டு.

நல்லவை எவை?

''வேதத்தின் இறுதியாகக் கொள்ளப்படும் வேதாந்தம் (உபநிஷத்துக்கள்) எல்லாச் சடங்குகளையும் ஏன் வேதத்தையே தூக்கி எறியச் சொல்லி தன்னை அறிதலையே அழுத்துகிறது. இது அடிப்படைவாதத்திற்கு எதிரான எல்லாச் சமயங்களினதும் உண்மையை அழுத்தம் Huxly கூறிய Perennial Philosophy யாக நிற்கிறது. இது ஆதித் தமிழர் வாழ்ந்த, நான் ஏற்கெனவே கூறிய வாழ்வோடு ஒத்துவருவதாக நிற்கிறது.

''கூடாதவை எவையெனச் சொல்லுவீர்கள்?''

''கோயில் வழிபாடுகளும் அதனோடு சம்பந்தப்பட்ட வர்ணாச்சிரம முறைச்சடங்குகள், மூடநம்பிக்கைகள் என்று பல..

''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? இதுகாலவரை மக்கள் நம்பிவந்தவற்றை எதன் அடிப்படையில் தூக்கி எறிகிறீர்கள்?''

கடவுள் ஒன்றின் இருப்பையும், அதை நோக்கிய வழிபாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்தியவர்களதும், அம்முறைகளை காலத்துக்கு காலம் மாற்றி வந்தவர்களும் ரிஷிகளும் ஞானிகளுமே. ஆதியில் கடவுளை நோக்கிய வழிபாட்டு முறையாக யாகங்கள் நடந்தன. அதை ரிஷிகள் தான் செய்தனர். அதன்பின் அவை கைவிடப்பட்டு கோயில் கட்டி கடவுளை மூர்த்தம் செய்து வழிப்படும் முறையை அவர்களே (பிராமணர் - பிரம்மத்தை உணர்ந்தவர்) கொண்டு வந்தனர். இன்று இவை பணச் சடங்காக, புது வியாபாரமாக கோயில்களில் இடம்பெறத் தொடங்கிய பின் அதே ஞானிகளே இவற்றை ஒதுக்கினர்.''

''எப்படி?''

இக்கால ஞானிகளான ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், மகாயோகி அரவிந்தர், ரமணமகரிஷி, சுவாமி ராமதாஸ், மகாத்மா காந்தி என்று மிக அண்மையில் வாழ்ந்த எவரும் கோயில் கட்டவோ, அங்கு விழாக்களை எடுக்கவோ அத்தகைய சடங்குகளில் தமது சீடர்களை ஈடுபடுத்தவோ விடவில்லை. மாறாக ஏழைகளுக்கு கல்வி புகட்டல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் தானம் செய்தல் போன்றவற்றிலேயே ஈடுபட்டனர். இவர்கள்'' படமாடும் தெய்வத்துக்கு பாலும் சோறும் ஊட்டுவதைவிட நடமாடும் தெய்வங்களுக்கு (ஏழைகளுக்கு) பாலும் சோறும் ஊட்டுதல் சிறப்பு'' என்று மனிதநேயத்தை அழுத்தினர். இதுவே இன்று வழிபாட்டு முறை வேறாக மாறி விட்டதென்பதைக் காட்டும்.''

நீங்கள் சொல்வதிலிருந்து பார்த்தால் கோயில் கட்டுதல், தேர்கட்டுதல் என்று வரும் திருப்பணி வேலைகள், திருவிழாக்கள் எடுத்தல் எல்லாம் இல்லாமல் போய்விடுகின்றன. அதனால் திருமண வீடுகளில் அத்தகைய சமய ஆசார வழிவந்த சடங்குகளைப் புகுத்துதல், பூப்புனித நீராட்டு விழாச்செய்தல், மரணச்சடங்குகளில் சாதியத்தை அழுத்தும் கர்மாதிச் சடங்குகள் என்கின்ற கலாசாரப் போலிகள் எல்லாம் தூக்கியெறியப்படுன்றன. திருமணம், மரணச் சடங்கு போன்றவற்றில் எளியமுறையில் சடங்குகள் இடம்பெறலாம். தைப்பொங்கலைத் தமிழர்கள் கொண்டாடுகின்ற எளிய அர்த்த புஷ்டியுள்ள முறையில் என்று சொல்லலாமா?''

''நிச்சயமாக இந்தப் பார்வையில் தமிழர்களின் சமயவிழாக்கள் எப்படி அமையலாம்? அறிவான வேலைகளில் ஈடுபடுதல், கல்வியை ஏழைகளுக்கு புகட்டுதல், அதற்கான நிறுவனங்களை அமைத்தல், நோயாளிகளுக்கு சேவை செய்யும் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய அனைத்தும் விநாயகனின் திருவிழாவாகக் கொள்ளலாம். தொழிற்சாலைகள் நிறுவுவதல், ஆக்கப்பணிகளில் ஈடுபடுதல் சக்கியின் - அம்மனின் திருவிழாவாக கொள்ளலாம். வீரம் மிக்க தியாக வேளைகளில் ஈடுபடுதல், தீமைகளுக்கு எதிராகப் போராடுதல் ஆகியவை அனைத்தம் கந்தன் ஊர்வலமாக சூரன் போராகக் கொள்ளலாம்.''

''கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இவற்றின் பின்னணியில் இன்றைய காலமாற்றங்களுக்கேற்ப தமிழர் பண்பாடு என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க வேண்டாமா? என்றான் அவன்.

''நிச்சயமாகப் பார்க்கவேண்டும். இன்று முன்னிற்கும் பண்பாட்டுப் பிரச்சினைகள் என்ன?''

பெண்ணியவாதிகள் முன்வைக்கும் சகல விதமான சுதந்திரம் பற்றி தமிழ்ப்பண்பாடு என்ன கூறுகிறது. குறிப்பாக 'கற்பு' பற்றியும் குடும்ப ஒப்பந்தம் பற்றியும்?

''பழைய இலக்கியங்கள் கூறிய 'கற்பு' இன்று அழுத்தப்பட முடியாது. அப்படி அழுத்தப்பட்டால் விதவை மணம் முடிப்பதுகூட தவறாகிவிடும் இல்லையா? இன்னும் குடும்ப ஒப்பந்தங்கள் என்று எழுத்தில் போடுவதன் மூலம் குடும்ப ஐக்கியம் ஏற்பட்டுவிடாது. இந்த எழுத்து விவகாரம் பெண்ணின் பாதுகாப்பிற்காகவே ஏற்பட்டது. ஆனால் குடும்ப ஐக்கியம் பிள்ளைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு அவசியம் என்றே மேற்குலகம் அழுத்துகிறது.

''ஆனால் கட்டற்ற சுதந்திரத்தை வேண்டும் ஆண்களும், பெண்களும் இதை ஏற்கப்போவதில்லை.''

''இருக்கலாம்.ஆனால் இன்று ஆண்கள் தமது கட்டற்ற 'சுதந்திர' த்தையும் துஷ்பிரயோகிக்கிறார்கள். ஒரு தந்தை தன் மகளோடு உடலுறவு கொள்கிறான். சகோதரன் சகோதரியோடு உறவு கொள்கிறான். இது இன்று நடைபெறும் விஷயங்கள். இவ்வாறே மேற்குலக பெண்களின் சுதந்திரம் கட்டற்று போகிறது. இதை நியாயப்படுத்தி பெணியவாதிகள் கதைகள், கவிதைகள் எழுதுகின்றனர். இந்த INCESTIONS RELATIONSHIP - ஐ மேற்கே அனுமதிப்பதில்லை. இவ்வாறு போனால் நமது மனிதப்பண்பாடு என்பது மனித நாகரிகம் தனது குழந்தைப்பருவ காலத்தில் இருந்த தாய் மகனைப் புணர்ந்த, சகோதரன் சகோதரியைப் புணர்ந்த - காலத்திற்குப்போவது சரியா என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

''ஓரினச் சேர்க்கை பற்றி தமிழ்பண்பாடு என்ன சொல்லப்போகிறது?''

மேற்கில் இவை சட்ட அனுமதி பெற்றுள்ளன என்பதால் அவை இங்கும் அனுமதிக்கப்பட வேண்டுமா? இவைபோன்ற உறவுகள் சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனப்பிறழ்வுகளின் வெளிப்பாடுகள் என்ற வாதப் பிரதிவாதங்கள் இன்னும் ஓய்வுக்கு வரவில்லை. ஆனால் அவையாவும் தமிழ்ப்பண்பாடு பற்றிச் சிந்திப்போர் கவனத்தில் எடுக்க வேண்டியவை ஆகும்.

http://www.aaraamthinai.com/guest/ponnambalam.asp

பொன்னரின் கட்டுரையின் ஆரம்பம் பிழையாக இருக்கு - "விஞ்ஞானத்தின் புறவளர்ச்சியை பிரயோகித்துத்தான் ஹிட்லர் போன்ற, லட்சக்கணக்கான மக்களை கொலை செய்த அராஜகர்கள் உருவானார்கள். ஆகவே, மனித நாகரிகம் என்பது மனிதனின் அகப் பண்பாட்டிலிருந்தே தோன்றுவதாகும்... " இப்படி சொல்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியவில்லை. விஞ்ஞானத்தின் மூலம் பெறப்படுகின்ற பயன்களை கூறாமல் அதன் ஓரிரண்டு எதிர்மறையான தன்மைகளை எடுத்துக்காட்டிவிட்டு அதை முற்றிலும் புறந்தள்ளுவது மிகவும் தவறானது. இன்றைக்கு மனுசன் உயிரோடு இருப்பதற்கும், வெற்றிகரமாக இந்தப் பூமிப்பந்தில் கோலோச்சுவதற்கும் விஞ்ஞானம் எப்படி கைகொடுக்கிது என்று நான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒருவன் கத்தியை பாவிச்சு கையை வெட்டிப்போட்டான் என்பதற்காக, கத்தியை பாவிச்சு கத்தரிக்காயை வெட்ட முடியாது என்று கூறுவது முட்டாள்தனம்.

ஆனால், கட்டுரையில் தொடர்ந்து கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் சூப்பரோ சூப்பர்... இவற்றுக்கு ஒரு ஓ போடலாம். ஓஓஓஓஓ... :P இந்தக்கருத்துக்களில் எனக்கு எதுவித எதிர்ப்பும் இல்லை. மிகச்சிறப்பான முறையில் அக்கா வெண்ணிலா ஒட்டிய கலாச்சாரம், பண்பாடு பற்றிய கேள்விகளிற்கு இங்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது...

அக்காமாரே, இதைத்தான் நான் ஆரம்பத்திலேயே கூறினேன். நீங்கள் கேட்கவில்லை. அடம்பிடித்தீர்கள்... கிருபன் அண்ணை ஒட்டிய இந்தக் கட்டுரையை வாசித்ததும் உங்களில் பலருக்கு தெளிவு ஏற்படும் என்று நினைக்கின்றன்.

அது சரி, ஆனால், இந்தக் கட்டுரையை ஒட்டிய கிருபன் அண்ணை ஏன் முன்பு அப்படி ஏற்றுக்கொள்ள முடியாத, இப்போது ஒட்டிய கட்டுரைக்கு பொருத்தமில்லாத இரண்டு கருத்துக்களை எழுதினார்? மல்டி பேர்சனாலிட்டி பிரச்சனையா? அண்ணாவுக்குள் ஒரு அந்நியன் இருக்கிறானா? ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... :)

நன்றி! வணக்கம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கிருபன் அண்ணை சொல்வதை பார்ப்பம்...

ஆண்கள் வகுத்த வழிமுறைகளைப் பின்பற்றி ஒழுகுவதன் மூலம் இதுவரை காலமும் (பூமி தோன்றிய காலத்தில் இருந்து சுமார் 1900 ம் ஆண்டுவரை என்று வைத்துக்கொள்வோம்) தமிழ் பெண்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்று சொல்வது சரிதானே? அப்படியென்றால், இந்தக் காலத்தில் தமிழ்ப் பெண்கள் சீரும் சிறப்பாகவும் வாழ்ந்துள்ளார்கள் என்று சொல்கின்றீர்களா? உடன்கட்டை ஏற்றுதல், விபச்சாரியாக பாவித்தல் என்று எத்தனையாயிரம் கொடுமைகள் இந்தக் காலத்தில் தமிழ்ப் பெண்கள் மீது கட்டவிழித்துவிடப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாதோ? தமிழ்ப் பெண்கள் இந்தக் காலத்தில் சந்தோசமாக வாழ்ந்தாக வாய் கூசாமல் பொய் சொல்கின்றீர்களே? நெடுக்காகச் சிந்திப்பது என்பது இதைத்தானா?

ஓகோ, பெண்களிற்கு சுதந்திரத்தின் எல்லை எது என்று தெரியவில்லையோ? ஏன் ஆண்களுக்கு மட்டும் அது ஞானக்கண் மூலம் தெரிந்துள்ளதோ? யாரோ கவிஞன் வானமே எல்லை என்று பாடுறான்... இன்னொருவன் நீ விண்வெளிக்கும் போகலாம் உனக்கு எல்லையே இல்லை என்று சொல்லுறான். ஆண்கள் கூடத்தான் சிலவேளைகளில் அல்ல பலவேளைகளில் எல்லாம் பிழையாக இருக்கென்று நினைப்பார்கள். இது மனித மனத்தின் இயல்பு. இதற்கேன் ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பார்க்கின்றீர்கள்?

என்னது பெண்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கமாட்டார்களா? அவர்கள் எவ்வாறான முடிவு எடுக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? நீங்கள் விரும்பாத அல்லது நீங்கள் எதிர்பார்க்காத ஒரு முடிவை பெண்கள் எடுத்தால் அவர்களை சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் என்று கூறுவீர்களோ?

"அத்தோடு ஆண்களை விட பெண்கள்தான் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க முனைப்பாகச் செயற்படவேண்டும்..." எண்டுறீங்கள். இங்கே ஒருவருக்கும் கலாச்சாரம் என்றாலே என்ன என்ற தெளிவான விளக்கம் இல்லை. இந்தக்கேவலத்தில் அதை கட்டிக்காக்க முனைப்புடன் செயற்பட வேண்டுமா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். சுவர் எங்கே இருக்கின்றது என்பது தெரியாதபோது சித்திரத்தை எங்கே கொண்டுபோய் வரைவது?

ஆதிகாலத்தில் இருந்து தற்போதைய காலம் வரை ஆண்கள்தான் உலகில் கோலோச்சுகின்றார்கள்.. சட்ட திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளார்கள்.. பெண் சனத்தொகையில் பாதியாய் இருந்தாலும் பெண்ணிடம் கலந்தாலோசனை செய்யப்பட்டுச் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. விருத்தியடைந்த நாடுகளில் கூட பெண்களுக்கு வாக்களிக்கும் சுதந்திரம் உடனடியாகக் கொடுக்கப்படவில்லை. இப்படியெல்லாம் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தபோதிலும், பெண்கள் தற்போதும் மனித சனத்தொகையில் பாதியாய்த்தான் உள்ளனர்; அழிந்துபோய்விடவில்லை. எனவே ஆண்களின் சட்டங்கள் பெண்களைப் பாதுகாக்கவே செய்கின்றன (என்ன பெண்கள் ஆண்கள் அனுபவிக்கும் அதிகாரத்தையெல்லாம் கொண்டிருக்கவில்லை அவ்வளவுதான்,, பெண்கள் அதிகாரம் வேண்டும் என்றும் அடம்பிடிக்கவில்லை என்றும் கொள்ளலாம்). இதிலிருந்து பெண்களுக்குப் பாரிய பிரச்சினைகள் இல்லயென்றே கொள்ளலாம்.

மேலும், உடன்கட்டை ஏறுதல், விபச்சாரிகளாகச் சிலரைப் வைத்திருத்தல் எல்லாம் சமூக நலன் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. உடன்கட்டை ஏற்றுவதன் மூலம் கணவனை இழந்த பெண் ஒழுக்கவிதிகளை மீறச் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. உயிரோடிருந்தால் சிலவேளை ஒழுக்கங்களை மீறக்கூடும், எனவே பத்தினியாகவே பரலோகம் அனுப்பி வைப்பதனால் சமூகத்தின் தூய்மை பேணப்பட்டது. விபச்சாரிகள் இருந்ததனால் ஒழுக்கமுள்ள குடும்பப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, வன்முறை பெருமளவு குறைக்கப்பட்டன். இல்லாவிட்டல் மனநிலை பிழன்றவர்கள் யாரென்றும் பார்க்காமல் தங்கள் காரியங்களைச் சாதிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு வடிகாலாகத்தான் விபச்சாரிகளை வைத்திருந்தனர். விபச்சாரிகளைத் தாங்கள் செய்வது சமூகத் தொண்டு/தெய்வத் தொண்டு என்று நம்பவைக்க தேவதாசி என்று அழைத்தனர். எனவே பெண்களை சந்தோசமாக வைத்திருக்க ஆண்கள் பலவகையிலும் பாடுபட்டனர் என்றே கொள்ளவேண்டும்.. பெண்கள் துன்பங்களில் உழன்றாலும், அவர்களின் துன்பங்கள் எல்லாம் சமூகத்தின் நன்மைக்கு என்று கருத்துக்கள் புகட்டப்பட்டு அவர்கள் துன்பத்தை இன்பமாக்கப் பலவழிகள் சொல்லப்பட்டன.

இப்படி எல்லா வழிகளிலும் பெண்களுக்காக ஆண்கள் எப்போதுமே தீர்மானங்கள் எடுத்துக்கொண்டேயிருந்தனர்/ இருக்கின்றனர். இவையெல்லால் பெண்கள் தங்களின் தேவை என்னவென்று தெரியாததால் ஏற்பட்டதாகும். இவ்வாறு பல்வேறு வகைகளில் உதவும் ஆண்களுக்கு உதவியாக பெண்கள் சமூகக் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பேணிப்பாதுகாக்க உதவுவதைப் பெருமையாகக் கொள்ளவேண்டும்..

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!"

அண்ணே உந்த வசனம் எங்க எழுதப்பட்டிருக்கு என்று சொல்ல முடியுமோ? பைபிள் வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கோ? இல்லாட்டி திருக்குறளில் இருக்கோ? இல்லாட்டி சிவபெருமான் இப்படி உமாதேவியாருக்கு சொன்னவர் என்று யாராவது உங்களுக்கு சொன்னவேளோ? உதை எழுதியவர் என்ன கடவுளின் தூதுவனோ? உத எழுதியது எங்கள மாதிரி ஒரு மனுசன் தான் அண்ணை. அதே ஆள் தற்செயலாக இப்படி எழுதி இருந்தால் இதையும் கேட்டு இருப்பீங்களோ?

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பதிலே!"

எங்க பார்த்தாலும் மடியில பாரம் என்றால் மனிசிகளின்ற தலையில எல்லாத்தையும் இறக்கிப்போட்டு பல புருசன்மார் ஓட்டம் பிடிக்கின்றார்கள். அதாவது பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் பிரச்சனையில் இருந்து விலகி ஓடுகின்றார்கள் என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம்!

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பதிலே!" என்று இயல்பாக வாய்விட்டுப் பாடக் கூட முடியவில்லை.. பெண்ணானவள் குடும்பத்தைக் கொண்டு நடத்துவதில் தனது காலத்தைக் கழிகின்றாள். இதற்குள் குழந்தை வளர்ப்பு முக்கியமானது. அத்துடன் உழைத்துக் களைத்து வரும் ஆணுக்குக் குழந்தையையும் பார்த்துக் கொள் என்று சொல்லுவது முற்றிலும் நியாயமற்றது. ஆண் பிரச்சினைகளில் இருந்து தப்பி ஓடவில்லை.. பிரச்சினைகளைக் குறைக்க தன்னால் இயன்றவரை வியர்வை சிந்தித் சம்பாதிக்கவே ஓடுகின்றான். எனவே

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!" என்பதுதான் சரியாகும்.

ஆக மொத்ததில் நீங்கள் சொல்லிற தத்தவத்தின் சாரம்சத்தை பார்த்தால் இப்படி இருக்கு.. புருசன் விதையை விதைப்பாராம்! மனுசி உரம் போட்டு, நீர் ஊற்றி கஸ்டப்பட்டு மரத்தை வளர்ப்பாவாம்! பிறகு புருசன் வளர்ந்த மரத்தில காய்க்கின்ற பழங்களை புடுங்கி சாப்பிடுவாராம்! ஆகா.. இதைக் கேக்க ஆம்பளையா இருக்கிற எனக்க மனதுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு! அப்ப நானும் கெதியில ஒரு கலியாணம் கட்டி பார்க்கவேணும்...

ஒரு தோட்டக்காரன் தனது பணத்தைச் செலவழித்து விதையை மரமாக்குகின்றான். அதற்காக வேலையாளையும் வைத்திருக்கின்றான். வேலையாள் மண்கொத்தி, உரம் போடுவான். எனினும் அவனுக்குப் பழம் சாப்பிட உரிமை இருக்கின்றது சொல்லவா போகின்றான்.. அந்த உரிமை எப்போதுமே தோட்டக்காரனிடம்தான்.

அது சரி, ஆனால், இந்தக் கட்டுரையை ஒட்டிய கிருபன் அண்ணை ஏன் முன்பு அப்படி ஏற்றுக்கொள்ள முடியாத, இப்போது ஒட்டிய கட்டுரைக்கு பொருத்தமில்லாத இரண்டு கருத்துக்களை எழுதினார்? மல்டி பேர்சனாலிட்டி பிரச்சனையா? அண்ணாவுக்குள் ஒரு அந்நியன் இருக்கிறானா? ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... :D

கட்டுரை மு.பொ. வினது.. ஒட்டியதற்காக நான் அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது!

சிலரின் சப்பாத்துக்குள் காலை நுழைத்து ஓடலாம் என்று பார்த்தால் நடக்கக் கூட முடியவில்லை!

Edited by kirubans

  • தொடங்கியவர்

சிலரின் சப்பாத்துக்குள் காலை நுழைத்து ஓடலாம் என்று பார்த்தால் நடக்கக் கூட முடியவில்லை!

ஹீஹீ. சுப்பர் வசனம்.

கிருபண் அண்ணை!

டைம் இஸ் ஓவர்! இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன். தொடர்ந்து உங்களுடன் விதண்டாவாதம் பேசுவதில் பயனில்லை. யாராவது உங்கள் வாதத்திற்கு தொடர்ந்து பதில் கூறுகின்றார்களா பார்ப்பம்... ஆனாலும்.. இப்படியான கொள்கை (?) கொண்ட நீங்கள் பொன்னரின் கட்டுரையை இங்கு இணைத்ததற்கு மிக்க நன்றி!

எனது கருத்துக்களை பொறுமையாக வாசித்த மற்றும் என்னுடன் வாதத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்! :)

கடைசியாக ஒரு கேள்வி, இந்த சப்பாத்து விசயம்...

சிலரின் சப்பாத்துக்குள் காலை நுழைத்து ஓடலாம் என்று பார்த்தால் நடக்கக் கூட முடியவில்லை! என்று இரகசியமாக ஏதோ எழுதி இருக்கிறீங்கள்... இரகசியமாக எழுதபட்டதை வாசிப்பது முதலில் தவறு... (இது உங்கள் அந்தரங்க விசயமாக இருக்கலாம்...)

ஆனால் ஒரு விசயம்... சப்பாத்தில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8.... இப்படி நிறைய சைஸ் இருக்கு. உங்கள் காலுக்கு பொருத்தமான சப்பாத்தை போட்டால்தான் நீங்கள் நடக்கவோ அல்லது ஓடவோ முடியும். எல்லா சைஸ் சப்பாத்தும் உங்கள் காலுக்கு பொருந்தாது

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் பதிவுக்கு நன்றி......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.