Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரியைப் பரியாக்கிய ஆவுடையார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சிற்ப வேலைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் சிறப்புப் பெற்று விளங்குகிறது. இக் கோயில் அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் ஆவுடையார் என்றும், ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுவதால் அவ்வூர் ஆவுடையார் கோயில் என்றே வழங்கலாயிற்று. இவ்வூரைத் தமிழ் இலக்கியங்கள் திருப்பெருந்துறை என்றே குறிப்பிடுகின்றன.

மாணிக்கவாசகரான வாதவூரர்

நரியைப் பரியாக்கிய ஆவுடையார் Mar31-10


இக் கோயிலின் வரலாறு மிகவும் சிறப்புடையதாகும். மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த இரண்டாம் வரகுண பாண்டிய மன்னனிடம் தமிழ் இதிகாசங்கள் கூறுகின்ற நாயன்மார்களில் ஒருவரான வாதவூரர் அமைச்சராக இருந்தபோது மன்னனுக்குக் குதிரை வாங்கக் கீழைக் கடற்கரையை நோக்கித் திருப்பெருந்துறை வழியாகச் சென்று கொண்டிருந்தார். கீழைக் கடற்கரையில் அராபியர்கள் ஏராளமான குதிரைகளைக் கப்பலில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த நேரத்தில் குருந்தமரத்தடியில் குரு ஒருவர் சீடனுக்கு உபதேசம் செய்யும் ஒலி கேட்டு அதில் மயங்கி அங்கு சென்றார். இறைவனே குரு வடிவில் வாதவூரருக்கு உபதேசம் செய்ய வந்த வேலையை முற்றிலும் மறந்து இறைவனுக்கு அடிமையாகிப் போனார். குதிரை வாங்கக் கொண்டு வந்த பணத்தில் இக் கோயிலைக் கட்டி ஆவுடையார் என்று பெயரிட்டாராம். இதனால் மன்னனின் கோபத்திற்கு ஆளான வாதவூரரைக் காப்பாற்ற இறைவன் நரியைப் பரியாக (குதிரை) மாற்றி அளித்தார். பரியான நரிகள் இரவு நேரத்தில் மீண்டும் நரிகளாகி ஊளையிட மன்னன் வாதவூரரைத் தண்டித்தான். ஆனால் அதிலிருந்தெல்லாம் அவர் மீண்டு வரவே மன்னன் அவரது அற்புத சக்திகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் கதை உண்டு.

வாதவூரர் மணி மணியாக இறைவன் மேல் பாடல் புனைந்து பாடியதைக் கண்ட இறைவனே, மாணிக்கம் போல் அவ் வாசகங்கள் இருக்கவே மாணிக்கவாசகன் என வழங்கினார் என்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

மாணிக்கவாசகருக்கென்று தனியாக சன்னிதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆவுடையார் கோயிலில் மாணிக்கவாசகருக்கே முதலிடம் தரப்படுகிறது. கோயிலில் உற்சவமும் அவருக்குதான். மாணிக்கவாசகர் சன்னிதியைச் சுற்றிலும் ஏராளமான சுவரோவியங்கள் உள்ளன. அவற்றில் பல ஓவியங்கள் உதிர்ந்து சிதைந்து போயிருந்தாலும் இரண்டு ஓவியங்கள் மட்டும் தெளிவாக இருக்கின்றன.

 

நரியைப் பரியாக்கிய ஆவுடையார் Mar31-12

உருவமில்லா ஆத்மலிங்கம்

மற்ற கோயில்களைப் போலக் கிழக்கு திசையைப் பார்த்தபடி இல்லாமல் தெற்குமுகமாக உள்ளது. இங்குள்ள இறைவனுக்கு ஆத்மநாதர் என்று பெயர். ஆத்மாவுக்கு உருவம் கிடையாது என்பதால் இங்கு உருவ வழிபாடின்றி அருவ வழிபாடே நடைபெறுகிறது. கர்ப்பக்கிரகத்தில் சிலைகள் ஏதுமில்லை.கருவறை மேடையில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு குவளை மட்டும் இருக்கிறது. அது இருக்கும் மேடை ஆவுடையாராகக் கொள்ளப்படுகிறது.லிங்கம் இல்லாமல் ஆவுடையார் மட்டும் இருப்பதால் இது ஆவுடையார் கோயிலாயிற்று. இக் கோயிலில் சோதியில் மாணிக்கவாசகர் கலந்துள்ளார் என்பதனால் தீப ஆராதனையைத் தொட்டு வணங்க பக்தர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை.

அற்புத வடிவெடுத்திருக்கும் கொடுங்கை

இக்கோயில் மண்டபத் தாழ்வாரம் கல்லிலேயே தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து, அதன் குறுக்கில் நான்கு பட்டை, ஆறு பட்டை, குமிழ் ஆணிகள் அறைந்தது போலவும், அதன் மேல் மெல்லிய ஓடுகள் வேய்ந்திருப்பது போலவும் சிற்பக் கலையின் அபரிமிதமான ஓர் அழகை அங்கு காண முடிகிறது. ஒரு கல்லும் மற்றொரு கல்லும் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் கூட கண்டுகொள்ள முடியாத அளவிற்கு அமைத்துள்ள இத் தாழ்வாரம் 'கொடுங்கை' கூரை எனப்படுகிறது. இதில் உள்ள கல் 131/2 அடி நீளமும், 5 அடி அகலமும், 21/2 அடி கனமுடையதாகவும் உள்ளது. இந்த 21/2 அடியும் தாழ்வாரத்திற்கு வரும்போது 1 அங்குல கனமுள்ளதாக சன்னமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் தற்காலத்தில் சிற்ப வேலை செய்பவர்களை வேலைக்கு அழைக்கும்போது ஆவுடையார் கோயில் 'கொடுங்கை' நீங்கலாக என்று ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

ஆவியே ஆண்டவனுக்குக் காணிக்கை



கருவறைக்கு முன்பு உள்ள படையல் திட்டுக்கல்லில் ஆறு கால பூசைக்கான புழுங்கல் அரிசியாலான அமுதினை வடித்துக் கொட்டுகிறார்கள். அமுதின் ஆவி மட்டுமே ஆண்டவனுக்குக் காணிக்கையாம். புழுங்கல் அரிசியாலான அமுதுடன் பாகற்காயும் கீரையும் சேர்த்துப் படையல் செய்யப்படுவது இந்தக் கோயிலுக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும். ஆனால் இங்கு அன்றன்றைக்குப் புதிதாக அடுப்புப் பற்ற வைப்பதில்லை என்பதும் மிகப் பெரிய ஆச்சரியமாகும். இதற்குக் காரணம் ஆறு காலமும் பூஜை நடைபெறுவதால் அடுப்பில் தீக்கங்குகள் அணையாமல் இருந்து கொண்டே இருப்பதுதான். இக் கோயிலின் தல விருட்சம் குருந்த மரமாகும். குருந்த மரத்தடியில் இறைவனால் மாணிக்கவாசகர் உபதேசிக்கப்பட்டதால் குருந்தமரம் சிற்ப வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

சிற்பச் சிறப்பு

வாயில் முகப்பிலிருந்து 6 மண்டபங்கள் உள்ளன. முன் மண்டபத்தில் ஒரே கல்லில் 12 அடி உயரமுள்ள அகோர வீர பத்ரர், ரணவீரபத்ரர் ஆகிய சிற்பங்கள் இங்குள்ள சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.



சிவபெருமான் நரியைப் பரியாக்கியது இக் கோயிலுடன் தொடர்புடைய தகவல் என்பதால் ராவுத்தர் மண்டபம் எனப்படும் மண்டபத்தில் சிவபெருமான் குதிரை மீது அமர்ந்து வருவது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. குதிரைச் சிற்பம் அசலான ஒரு குதிரையைக் கண் முன் நிறுத்தியது போவே உள்ளது. அடுத்த உள் மண்டபத்தில் அமைச்சராக கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் மாணிக்கவாசகரையும், ஆண்டியான பின் அமைதி தவழும் முகத்துடம் தோன்றும் மாணிக்கவாசகரையும் வித்தியாசமான இரு தோற்றங்களில் செதுக்கியிருக்கிறார்கள்.

பலரும் உருவாக்கிய கோயில்

கோயில் மண்டபங்கள் ஆனந்த சபை, தேவசபை, சிற்ப சபை, நடன சபை, பஞ்சாட்சாரம் என்று அழைக்கப்படுகின்றன. கோயிலின் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து பிற்காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள், புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள், பாளையவனம் ஜமீன்தார்கள், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் போன்றவர்கள் அவ்வப்போது கட்டிய ஆறு மண்டபங்களும் இணைந்தே தற்போது எளிய கோயிலாகக் காட்சியளிக்கிறது. கி.பி. 1891 ஆம் ஆண்டு முதலில் இக் கோயிலில் குடமுழுக்கு விழா நடந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு 1990 ஆம் ஆண்டில்தான் குடகுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது இக் கோயிலின் நிர்வாகம் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.https://eegarai.darkbb.com/t4472-topic

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தம்பி......!  🐴  👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.