Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் அரிப்பிற்கு உள்ளாகும் மன்னார் அல்லிராணி கோட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் சொல்வதற்கு மேலாக, இன்னொரு காரணமும் உண்டு. 

பிரிட்டிஷ் இந்தியா.

பெரும் நாடு ஒன்றினை கட்டி எழுப்பிய பின்னர், அங்கே படை திரட்டிய பிரித்தானியர்களுக்கு எதிராக, புதுசேரியில் மட்டுமே இருந்த பிரான்ஸ் மோதி வெல்ல முடியாது என்ற நிதர்சனமும் இருந்தது. அதனாலே, ஐரோப்பிய கள நிலவரம் உடனடியாக தெரிய முடியாத ஒரு காலப்பகுதியில், பல டச்சு கவனர்கள், பிரிட்டிஷ் பக்கம் சாய்ந்தார்கள். 

இது இன்னுமொரு காரணம்தான். ஆனால் அப்போது இந்தியா முழுமையும் பிரிடிஸ் கையிலும் இல்லை. சென்னை, கல்கத்தா போன்ற துறைமுக பட்டினம்க்களை வைத்திருந்தார்கள்.

பிரானஸ், காரைக்கால், புதுவை, கேரளாவில் மாஹே, ஆந்திராவில் யானம் ஆகிய இடங்களிலும், மடகஸ்காரிலும், ரியூனியன் தீவிலும், மொரிசியசிலும், சீசெல்ஸ், சாகோஸ் தீவுகள் என பல இடங்களில் காலனிகளை வைத்திருந்தார்கள். இதில யானம் ஒல்லாந்தரிடம் இருந்து பிரான்சிடம் போனது.

இந்து சமுத்திரத்தில் நிகழ்ந்த கடற்போரில் பிரான்ஸ் கணிசமான வெற்றியும் அடைந்திருந்தது.

ஆகவே அந்த காலத்தில் இந்தியாவை சுழ உள்ள பகுதியில் பிரான்ஸ் பிரிட்டனின் பலம் 50:50. 

அதனால்தானோ என்னமோ, தூர கிழக்கு (இந்தோ-சைனா) ஒல்லாந்த குடியேற்றங்கள் யுத்தமின்றி சரணடைய, இலங்கையில் குறிப்பாக திருமலையில் யுத்தம் நிகழ்ந்தது.

ஆனால் மிக முக்கியமான காரணம் தமது சொந்த நாட்டில் இளவரசர் வெல்வாரா, கலக அரசு வெல்லுமா என ஒரு முடிவெடுக்க முடியாமல் ஒல்லாந்து கவர்னர்கள் திண்டாடியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இது இன்னுமொரு காரணம்தான். ஆனால் அப்போது இந்தியா முழுமையும் பிரிடிஸ் கையிலும் இல்லை. சென்னை, கல்கத்தா போன்ற துறைமுக பட்டினம்க்களை வைத்திருந்தார்கள்.

அப்படி இல்லை என்று நினைக்கிறேன்.

ஆற்காடு யுத்தம், திப்பு சுல்தான் வீழ்ச்சி, கட்ட பொம்மன் என்று தென் இந்தியா அனைத்துமே பிரிட்டிஷ் கைகளுள் 1790 அளவில் வீழ்ந்து விட்டன. பர்மா, வங்கம் அனைத்துமே வீழ்ந்து விட்டன.

மறுபக்கம், பம்பாயில் இருந்து, கிளம்பிய படையணி, ஆங்கில - மராத்தி யுத்தம் என்று புனே, குஜராத் என்று விழுங்கி இருந்தது. Anglo-Maratha War (First, second and third) 

கிளைவ் ராபர்ட் இன் இந்திய வெற்றிக் குவிப்புகளினால், அவரை அமெரிக்க யுத்த களத்துக்கு (1775 1783) போகுமாறு, பிரிட்டிஷ் அரசு கோரியது. அவர் மறுத்து விட்டார்.

இன்னும் சொல்வதானால், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே வரும், வரதராஜபெருமாள், வெளியே வந்திருந்த சமயமே, கிளைவ் ராபர்ட் ஆற்காடு யுத்தத்துக்கு போனாராம். படைக்கு ஆட்கள் மிக குறைவான நிலையில், ஆற்காடு நவாபின் பெரும் படையொன்றை எதிர்க்க, வரதராஜருக்கு நேர்த்தி ஒன்றை வைத்து சென்றதாயும், பின்னர் அதனை நிறைவு செய்ததாகவும் கதையும் உண்டு.

மழை இருட்டு இரவில், தமிழகம் அறியா சீனத்து வான வேடிக்கைகளை போட்டு பயமுறுத்த, நவாபின் படைகள், வெள்ளைகள் புது ஆயுதங்கள் உடன் வந்து இருக்கிறார்கள் என்று ஓட்டம் பிடிக்க, ஆற்காடு வீழ்ந்தது.

ஆகவே, இலங்கை தீவுக்கு போகும் போது, இந்தியாவில் மிக தீர்க்கமான ஒரு நிலையில் இருந்தது, கிழக்கிந்திய கொம்பனி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

large.6AB838C6-6F3D-4CE1-976D-3F75A7E334A5.jpeg.293f2d817e80ab734c3e8733e12a2296.jpeg

இது வரலாற்று ஆவணம் இல்லை ஆனால் இதில் உள்ள திகதிகள் சரி என்றே நினைக்கிறேன். திப்பு 1799 இல் கொல்லபடுகிறார். டெல்லி 1803 இல்தான் வீழ்கிறது. 1806 இல் வேலூர் சிப்பாய்கள் கலகம்.  இப்படி இந்தியாவில் பிரிட்டன் மாட்டுப்பட்டு கிடக்க, அதிக யுத்தம் இன்றி அந்த பிராத்தியத்தில் சற்றே சுதந்திரமாக இருந்தது பிரான்ஸ்.

நிச்சயமாக இந்தியாவை அண்டிய இந்து சமுத்திர பிரிடிஸ் பிரசன்னம், பிரான்ஸ் பிரசன்னம் என்பன ஏறக்குறைய சமனாகவே இருந்த காலம் அது என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

large.E92FFBDC-6A25-4D39-81ED-DB5C48C05B46.jpeg.3a87c0b6f04abdecdd65394db43e0187.jpeg

தெளிவான படம்.

பட ஆதாரம்: Inglorious Empire by Shashi Tharoor

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

large.E92FFBDC-6A25-4D39-81ED-DB5C48C05B46.jpeg.3a87c0b6f04abdecdd65394db43e0187.jpeg

தெளிவான படம்.

பட ஆதாரம்: Inglorious Empire by Shashi Tharoor

In 1779, the British captured the French-controlled port of Mahé that was supporting the Tippu sultan.

டெல்லி விழுந்தது, 1857ல். அதன் பின்னர் தான், இந்தியாவின் தலைநகர், கல்கத்தாவில் இருந்து, டெல்லிக்கு மாறியது.

இந்தியாவில், கொல்கத்தா (battle of palsy) முதல், திப்பு சுல்தானின் ராஜ்யம், ஆற்காடு எல்லா இடத்திலும், பிரிட்டனுக்கு எதிராக உள்ளூர் படைகளுடன் சேர்ந்து போரிட்டது பிரான்ஸ். அனைத்திலுமே தோல்வி. இறுதியாக பாண்டிசேரியில் இருந்தும் வெளியே அனுப்பப்பட்டது. The British took control of the area again in 1793 at the Siege of Pondicherry amid the Wars of the French Revolution.

திருகோணமலை உள்பட கடலில், வாழ்வா, சாவா என்பதாகவே பிரெஞ்சுக்காரர்கள் போராடினார்கள்.

Pondiseri returned it to France in 1814 after an agreement between France and the UK.

உங்களுடன் விவாதிப்பதால், நானும் பல விசயங்கள் மீளவும் பார்க்கிறேன். 🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பல விஷயங்களை அறிந்து கொள்கிறேன்.. மிக்க நன்றி..

கொலம்பஸ் முதலில் கால்பதித்தது மேற்கிந்திய தீவுகளில் என்பதா உண்மை? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நானும் பல விஷயங்களை அறிந்து கொள்கிறேன்.. மிக்க நன்றி..

கொலம்பஸ் முதலில் கால்பதித்தது மேற்கிந்திய தீவுகளில் என்பதா உண்மை? 

இல்லை, கரிபியன் தீவுகள். ஆனால் இந்தியா என்று நினைத்தார். அங்குள்ள பூர்வகுடி மக்களை சிவப்பு இந்தியர்கள் என்றும் அழைத்தார்.

அதனாலே பின்னாளில், மேற்கு இந்தியா என்று பெயரும் வந்தது. செவ்இந்தியர்கள் (சிவப்பு இந்தியர்கள்) என்ற பெயரும் நிலைத்து உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

In 1779, the British captured the French-controlled port of Mahé that was supporting the Tippu sultan.

டெல்லி விழுந்தது, 1857ல். அதன் பின்னர் தான், இந்தியாவின் தலைநகர், கல்கத்தாவில் இருந்து, டெல்லிக்கு மாறியது.

இல்லை நாதம் 1803 இல் டெல்லி மராத்தர்களின் கையில் இருந்தது, 2ம் ஆங்கிலோ-மராத்தா போரில், யமுனை ஆற்றங்கரையில் வைத்து டெல்லி சமர் நடந்து அதில் பிரிடிசார் வென்று டெல்லி பிரிடிடிஸிடம் வீழ்ந்து விட்டது.

ஆனால் அப்போ பொலிவிழந்து கிடந்த டெல்லியில் அன்றி அருகில் உள்ள மீரட்டில் பிரிடிஸ் முகாம் அமைகிறது. டெல்லியில் பேருக்கு சிலர் மட்டும் உள்ளார்கள்.

மீரட்டில் 1857ல் நடந்த சிப்பாய் கலகம் டெல்லிக்கும் பரவி, டெல்லி சிப்பாய்களிடம் போய், முகலாய பாதுர்சாவும் உள்ளே வந்தாலும் - அந்த கலகத்தை அடக்கிய பிரிடிசார் மீள தம்மை நிலை நிறுத்தியதே 1857ல் நடந்தது. ஆனால் டெல்லி பிரிடிசாரிடம் 1803இல் வீழ்ந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

திருகோணமலை உள்பட கடலில், வாழ்வா, சாவா என்பதாகவே பிரெஞ்சுக்காரர்கள் போராடினார்கள்

இதை உங்கள் வரலாற்றின் மீதான வியாக்கியானம்/ அல்லது கருத்து என்ற அளவில் என்னால் மறுக்க முடியாது. ஆதே போல் மேலே நான் கூறியதும் எனது கருத்தே என்பதையும் கோடிட்டுள்ளேன்.

என்னை பொறுத்தவரை, நீங்கள் benefit of hindsight உடன் வரலாற்றை பார்ப்பதாகபடுகிறது.

அதாவது ஈற்றில் பிரிட்டன் கையே ஓங்கியது, ஆகவே பிரான்ஸ் அப்போ தோற்கும் தறுவாயில் இருந்தது எனும் பார்வை.

எனது பார்வை யாதெனில், இந்திய பெருநிலத்தில் சகல வாளங்களையும் முடக்கி, ஒவ்வொரு சுதேச அரசுடனும் பிரித்தானியா போர் செய்தது. இந்த போர்களை பின்னால் இருந்து சுதேசிகளுடன் சேர்ந்து பிரான்ஸ் இயங்கியது. கடலிலும், கடற் பிராந்தியத்திலும் பிரான்ஸ் சம ஆதிக்கம் கொண்டு இருந்தது.

அமெரிக்காவில் குடியேறிகளுடம் சேர்ந்து பிரிட்டனை வெற்றி கொண்டது போல் இந்தியாவிலும் செய்யும் திட்டம் பிரான்சுக்கு இருந்தது. அந்த திட்டம் வெற்றி பெறவும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றங்கள், வரலாற்றின் போக்கை பிரித்தானியாவுக்கு சாதகமாக்கின.

என்னை பொறுத்தவரை இலங்கை கைமாறிய காலத்தில் ஒட்டுமொத்த இந்து சமுத்திர ஆதிக்கமும் பிரான்ஸ் பிரிட்டன் இடையே it was hanging in the balance என்றே சொல்வேன். 

ஆனால் இது என் வியாக்கியானம் மட்டும்தான். 

வரலாற்றின் தரவுகளில்தான் சரி பிழை சொல்லலாம். வியாக்கியானம் - அவரவர் பார்வையை பொறுத்தது.

1 hour ago, Nathamuni said:

உங்களுடன் விவாதிப்பதால், நானும் பல விசயங்கள் மீளவும் பார்க்கிறேன். 🙏

எனக்கும் அப்படியே.🙏🏾

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நானும் பல விஷயங்களை அறிந்து கொள்கிறேன்.. மிக்க நன்றி..

கொலம்பஸ் முதலில் கால்பதித்தது மேற்கிந்திய தீவுகளில் என்பதா உண்மை? 

கரிபியன் தீவுகளும், மேற்கிந்திய தீவுகள் என்பதும் ஒன்றுதானே?

இதே போல் இந்தோனேசிய/பிலிபைன்ஸ் தீவுகளை ஈஸ்ட் இண்டீஸ் என்பார்கள்.

கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் இறங்கினார் என நினைகிறேன்.

55 minutes ago, Nathamuni said:

இல்லை, கரிபியன் தீவுகள். ஆனால் இந்தியா என்று நினைத்தார். அங்குள்ள பூர்வகுடி மக்களை சிவப்பு இந்தியர்கள் என்றும் அழைத்தார்.

அதனாலே பின்னாளில், மேற்கு இந்தியா என்று பெயரும் வந்தது. செவ்இந்தியர்கள் (சிவப்பு இந்தியர்கள்) என்ற பெயரும் நிலைத்து உள்ளது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கொலம்பஸ் தான் இந்தியாவை/ஈஸ்ட் இண்டீசை அடைந்ததாகவே கருதினார். 

இந்த புதிய நிலப்பரப்பு ஆசியாவின் பாகம் இல்லை இது ஒரு முற்றிலும் புதிய கண்டம் என சொன்னவர் அமெரிக்கோ வெஸ்பூசி எனும் இத்தாலிய மாலுமி. அதனால்தான் அமெரிக்கா என்ற பெயர்.

ஆனால் இவர்களுக்கு முன்பே வைகிங்சும், அதற்கு முன்பே பனி உருகி நிலத்தொடர்பு அறும் முன்பே ஆதி மனிதனும் அமெரிக்காவை போய் சேர்ந்ததாக இப்போ நம்பபடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

ஆனால் இவர்களுக்கு முன்பே வைகிங்சும், அதற்கு முன்பே பனி உருகி நிலத்தொடர்பு அறும் முன்பே ஆதி மனிதனும் அமெரிக்காவை போய் சேர்ந்ததாக இப்போ நம்பபடுகிறது.

Vikings - new found land (Canada) but still North America

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லை நாதம் 1803 இல் டெல்லி மராத்தர்களின் கையில் இருந்தது, 2ம் ஆங்கிலோ-மராத்தா போரில், யமுனை ஆற்றங்கரையில் வைத்து டெல்லி சமர் நடந்து அதில் பிரிடிசார் வென்று டெல்லி பிரிடிடிஸிடம் வீழ்ந்து விட்டது.

ஆனால் அப்போ பொலிவிழந்து கிடந்த டெல்லியில் அன்றி அருகில் உள்ள மீரட்டில் பிரிடிஸ் முகாம் அமைகிறது. டெல்லியில் பேருக்கு சிலர் மட்டும் உள்ளார்கள்.

மீரட்டில் 1857ல் நடந்த சிப்பாய் கலகம் டெல்லிக்கும் பரவி, டெல்லி சிப்பாய்களிடம் போய், முகலாய பாதுர்சாவும் உள்ளே வந்தாலும் - அந்த கலகத்தை அடக்கிய பிரிடிசார் மீள தம்மை நிலை நிறுத்தியதே 1857ல் நடந்தது. ஆனால் டெல்லி பிரிடிசாரிடம் 1803இல் வீழ்ந்து விட்டது.

1803ம் ஆண்டு நடந்தது ஆங்கில - மராத்திய போர். அந்த போரில், மொகலாய அரசருக்கு சார்பாக, மராத்தியர்களை எதிர்த்து போரிட்டார்கள், ஜெனரல் லேக் தலைமையிலான கம்பெனி படையினர். 

வென்றபின் மொகலாய Bahadur Shah II என்பவரை ஒரு பொம்மையாக வைத்து தமது ஆட்சியினை நடத்தினர். 1857ல் கம்பெனி நடவடிக்கையில் அதிருப்தி கொண்டு, நடந்த ஒரு சிப்பாய் கலகம் மூலம், Bahadur Shah II டெல்லியின் பாதுஷா என அறிவிக்க, அவரும், கொம்பனியரை வெளியேற உத்தரவு இட, இரண்டாவது டெல்லி யுத்தம் ஆரம்பமாகி, கம்பெனி நேரடி ஆட்சி தொடங்கியது.

Bahadur Shah II, பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கேயே இறந்தார். அவருடன் நாடு கடத்தப்பட கொண்டு செல்லப்பட்ட அவரது இரு மகன்கள் எதிர்காலத்தில், வாரிசு தொல்லை தரலாம் என்று கருதிய கம்பெனி படையின், ஆண்டர்சன் எனும் படை தலைவர், அவர்களை இறக்கி, சாப்பிட கூப்பிட்டு, அருகில் இருந்த மரத்தின் அருகே, சுட்டுக் கொலை செய்தான்.

கடைசியில் இதுதானா மிஞ்சியது, அல்லாவே என்று வேதனையில், வயது போன நிலையில் Bahadur Shah II எழுதிய புகழ் மிக்க கவிதை ஒன்றும் உள்ளது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

1803ம் ஆண்டு நடந்தது ஆங்கில - மராத்திய போர். அந்த போரில், மொகலாய அரசருக்கு சார்பாக, மராத்தியர்களை எதிர்த்து போரிட்டார்கள், ஜெனரல் லேக் தலைமையிலான கம்பெனி படையினர். 

வென்றபின் மொகலாய Bahadur Shah II என்பவரை ஒரு பொம்மையாக வைத்து தமது ஆட்சியினை நடத்தினர். 1857ல் கம்பெனி நடவடிக்கையில் அதிருப்தி கொண்டு, நடந்த ஒரு சிப்பாய் கலகம் மூலம், Bahadur Shah II இந்தியாவின் பாதுஷா என அறிவிக்க, அவரும், கொம்பனியரை வெளியேற உத்தரவு இட, இரண்டாவது டெல்லி யுத்தம் ஆரம்பமாகி, கம்பெனி நேரடி ஆட்சி தொடங்கியது.

Bahadur Shah II, பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கேயே இறந்தார். அவருடன் நாடு கடத்தப்பட கொண்டு செல்லப்பட்ட அவரது இரு மகன்கள் எதிர்காலத்தில், வாரிசு தொல்லை தரலாம் என்று கருதிய கம்பெனி படையின், ஆண்டர்சன் எனும் படை தலைவர், அவர்களை இறக்கி, சாப்பிட கூப்பிட்டு, அருகில் இருந்த மரத்தின் அருகே, சுட்டுக் கொலை செய்தான்.

கடைசியில் இதுதானா மிஞ்சியது, அல்லாவே என்று வேதனையில், வயது போன நிலையில் Bahadur Shah II எழுதிய புகழ் மிக்க கவிதை ஒன்றும் உள்ளது. 

ஆகவே டெல்லி 1803 இல் ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது என்று நான் சொன்னது சரிதானே?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஆகவே டெல்லி 1803 இல் ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது என்று நான் சொன்னது சரிதானே?

பிரபாகரன், பகதூர் ஷா, விக்கிரமராசசிங்கன் எல்லோரும் தமது ஆளுமை பிடியை விடமுடியாமல் சண்டை செய்து  போனார்கள். 🤗

ஹைதராபாத் நவாப, திருவிதாங்கோர் மகாராஜா,   பிழைக்க தெரிந்தவர்கள் போல உள்ளது.  👌

நம்ம இம்சை அரசன் 23ம் புலிகேசியும் கூட 😄

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

ராசன் வேற லெவல்....😁

என் தம்பியல்லே???😜

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஆகவே டெல்லி 1803 இல் ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது என்று நான் சொன்னது சரிதானே?

இதில் வேடிக்கை என்னவென்றால், பகதூர் சா தம்முடன் செய்த ஒப்பந்தத்தை மீறினார் என்று, கொம்பனி அமைத்த நீதிமன்றில், விசாரணை செய்தே, பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

கொம்பனி குறித்து, பிபிசி டாக்குமெண்டரியில் சொல்லும் போது, தாம் அடிப்படையில் ஒரு வியாபார நிறுவனம் என்பதை மறந்து, ஆட்டம் போட்டு, அதுக்கு அடுத்த வருடம், 1858, கொம்பனியே கலைக்கப்பட்டு பிரிட்டிஷ் முடியின் நேரடி ஆட்சி ஆரம்பமாகியது.

எல்லோருக்கும், கொம்பனி தொப்பி போட, பிரிட்டிஷ் பாராளுமன்றம், கொம்பனிக்கு, பெரிய குல்லாவே போட்டு கதையை முடித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

பிரபாகரன், பகதூர் ஷா, விக்கிரமராசசிங்கன் எல்லோரும் தமது ஆளுமை பிடியை விடமுடியாமல் சண்டை செய்து  போனார்கள். 🤗

உந்த லிஸ்டில் பகதூர் ஷாவை சேர்க்க முடியுமோ தெரியாது. நல்ல கவி. மத சுதந்திரத்தை மதித்தார். சூபி மார்க்க அறிஞர் ஆனால் முதலில் பிரிட்டிசாருடன் டீலுக்கு போனார்.

பின்னர் அவர்களுக்கு எதிரான சிப்பாய் கலகத்தின் தலைவராக வெறும் பெயரளவில் இருக்க ஒப்பு கொண்டார். 

என்னை பொறுத்தவரை அதிகம் துணிவில்லாத, பிரிடிஸ் அதிகாரிகள், சிப்பாய்கலக தலைவர்களின் கைப்பாவையாக இருந்த ஒருவர் என்றே இவரை பார்க்கிறேன். 

51 minutes ago, Nathamuni said:

Vikings - new found land (Canada) but still North America

https://www.bbc.co.uk/programmes/b01ms4sh

இதுவரை பார்க்காவிட்டால் இந்த சீரிசை பார்க்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

https://www.bbc.co.uk/programmes/b01ms4sh

இதுவரை பார்க்காவிட்டால் இந்த சீரிசை பார்க்கவும். 

உந்த வைக்கிங்ஸ் எங்கட பக்கம் வந்திருந்த கதை தெரியுமோ? 😄

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

உந்த வைக்கிங்ஸ் எங்கட பக்கம் வந்திருந்த கதை தெரியுமோ? 😄

ஒரு அருளுரை போடட்டே🤣.

ஆனால் ரஸ்யா என்ற பெயரில் உள்ள ரஸ் என்பதே படகுகாரார் என்ற வைகிங்கை குறிக்கும் சொல் என்கிறது இந்த சீரிஸ். 

கூடவே துருக்கி வரைக்கும் இவர்களின் பிரசன்னம் இருந்ததாயும், ஸ்கெண்டிநேவியாவில் உள்ள ஒரு இடத்தில் Osberg Buddha Bucket என்ற வைகிங் புதையலில் பெளத்த சின்னங்கள் கண்டெடுக்க பட்டதாயும் கூறப்படுகிறது.

ஆகவே ரோமுடன், கிரீசுடன் தொடர்பு வைத்த எம்மையும் அவர்கள் தொடர்பு கொண்டிருக்க கூடும்.

5 minutes ago, goshan_che said:

கூடவே துருக்கி வரைக்கும் இவர்களின் பிரசன்னம் இருந்ததாயும், ஸ்கெண்டிநேவியாவில் உள்ள ஒரு இடத்தில் Osberg Buddha Bucket என்ற வைகிங் புதையலில் பெளத்த சின்னங்கள் கண்டெடுக்க பட்டதாயும் கூறப்படுகிறது.

இதை தயவு செய்து எங்கட சங்கைகுரியவர்களிடம் சொல்லி விடவேண்டாம். 

சிங்கனுகள் நாளைகே பிக்கான், மம்பட்டி அரச மரக்கன்றோட கிளம்பிடுவாங்கள்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Nathamuni said:

இல்லை, கரிபியன் தீவுகள். ஆனால் இந்தியா என்று நினைத்தார். அங்குள்ள பூர்வகுடி மக்களை சிவப்பு இந்தியர்கள் என்றும் அழைத்தார்.

அதனாலே பின்னாளில், மேற்கு இந்தியா என்று பெயரும் வந்தது. செவ்இந்தியர்கள் (சிவப்பு இந்தியர்கள்) என்ற பெயரும் நிலைத்து உள்ளது.

நாதர்! இதெல்லாம் அஞ்சாம் வகுப்பிலை படிச்சது.
என்னெண்டு இப்பவும் ஞாபகம் வைச்சிருக்கிறியள்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நாதர்! இதெல்லாம் அஞ்சாம் வகுப்பிலை படிச்சது.
என்னெண்டு இப்பவும் ஞாபகம் வைச்சிருக்கிறியள்? 😁

எல்லாம் நம்ம குருஜி ஆசீர்வாதம் தானே.... 🙏 😁

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

இல்லை, கரிபியன் தீவுகள். ஆனால் இந்தியா என்று நினைத்தார். அங்குள்ள பூர்வகுடி மக்களை சிவப்பு இந்தியர்கள் என்றும் அழைத்தார்.

அதனாலே பின்னாளில், மேற்கு இந்தியா என்று பெயரும் வந்தது. செவ்இந்தியர்கள் (சிவப்பு இந்தியர்கள்) என்ற பெயரும் நிலைத்து உள்ளது.

மிக்க நன்றி… எனது கருத்தை எழுதிய போது கரிபியன்/மேற்கிந்திய தீவுகள் என எழுதியிருந்திருக்கவேண்டும்.. 

20 hours ago, goshan_che said:

கரிபியன் தீவுகளும், மேற்கிந்திய தீவுகள் என்பதும் ஒன்றுதானே?

இதே போல் இந்தோனேசிய/பிலிபைன்ஸ் தீவுகளை ஈஸ்ட் இண்டீஸ் என்பார்கள்.

கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் இறங்கினார் என நினைகிறேன்

இன்று மேலோட்டமாக சில இணையங்களில் வாசித்தபொழுது பஹாமாஸில்தான் இறங்கினார் என எழுதியிருந்தது.. 

கொலம்பஸ் காலடி பதித்த நாளைத்தானே “கொலம்பஸ் நாள்” என்று இப்பொழுதும் கொண்டுகிறார்கள்.. அதனால்தான் அமெரிக்காவை கண்டுபிடித்தது அவர் என நினைத்திருந்தேன்.. கடைசியில் பார்த்தால் Vikingsதான் அமெரிக்காவை கண்டுபிடித்தது என கூறுகிறார்கள்.. 

நாங்கள் ஏன் இப்பொழுது இந்த அல்லிராணியை விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு போகவேண்டும்? 

19 hours ago, goshan_che said:

https://www.bbc.co.uk/programmes/b01ms4sh

இதுவரை பார்க்காவிட்டால் இந்த சீரிசை பார்க்கவும். 

இந்த linkற்கு போனால் “ This content is not available in your location “ என வருகிறதே?

Anyway, உங்கள் இருவருடைய கருத்துபரிமாற்றங்களிலிருந்து பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.. அதற்கு மிக்க நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நாங்கள் ஏன் இப்பொழுது இந்த அல்லிராணியை விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு போகவேண்டும்? 

🤣 மன்னாரில் தொடங்கி, ஆற்காடு வழியாக டெல்லி போய், அங்கிருந்து, துருக்கி, பிரான்ஸ் போய், ரஸ்யாவில் இருந்து வைகிங் கப்பலில் ஏறி நியூ பவுண்டலாண்ட் போய், பஹாமாசில் இறங்காவிட்டால்…..

அது யாழ்கள உரையாடல் அல்ல🤣.

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த linkற்கு போனால் “ This content is not available in your location “ என வருகிறதே?

பிபிசி உள்ளூரில் மட்டும் இலவசமாக காட்டுகிறது போலும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.