Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் யூலை எழுச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் ஜீலை எழுச்சி தினம் இன்று நடைபெற்றது இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள் மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்,இங்கு முக்கியமான பல விடயங்கள் நடைபெற்றன.

1)மெல்பனில் அண்மையில் கைது செய்யபட்ட இரு தமிழ் தேசிய ஆதரளவாளர்களுக்காக வாதாடும் சட்டதரணி ஒருவர் வந்து உரையாற்றினார்.அவர் சில சட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்,நீங்கள் தாயகத்து நிதி சேகரித்து மனிதாபிமான நடவடிக்கையில் கூட்டமாக அல்லது தனி நபராக பங்கு கொள்ளளாம்.இவர்களை பிணையில் விட தாங்கள் தொடர்ந்து வாதாடுவதாகவும் கூறினார்கள்.

இவ்வழக்கறிஞர் பேசும் போது தமிழ் ஈழம் என்ற சொல்லை பல தடவை உச்சரித்தார்,சிறிலங்கா என்ற சொல்லை உச்சரித்தது மிக குறைவு இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

2)இந்த நிகழ்ச்சியை முன்னுக்கு நின்று நடத்தியவர்கள் சிட்னியில் பிறந்து வளர்ந்த இளைய சமூகத்தினர் இதில் பேசிய ஒரு யுவதி கூறினா இந்தியன் என்று அவுஸ்ரெலியர்கள் கூறுவதை விடுத்து தமிழர்கள் என்று எங்களை அவர்கள் கூறும்படி எமது இனத்தின் அடையாளத்தை வளர்க்க வேண்டும் அதாவது தமிழன் என்ற ரீதியில்,இது ஒரு நல்ல சிந்தனை,இதை இசை கச்சேரிகள் நடத்தும் முதியோர்கள் பின்பற்றினால் சிறந்தது.

3)இளைஞர்களும்,யுவதிகளும் தமிழீழ எழுச்சி பாடல்களை அழகாக பாடினார்க,இசை வழங்கியோரும் தமது பங்கிற்கு நன்றாகவே இசை வழங்கினார்கள்,இவர்கள் யாவரும் இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளைகள்.

பல மேடை நிகழ்ச்சிகள் நடந்து இருகிறது இது ஒரு அருமையான நிகழ்ச்சி ,முக்கியமாக திறம்பட நடந்ததிற்கு காரணம்,இதை இங்கு வளர்ந்த இளைஞர்கள் முன்நின்று நடத்தியமையே ஆகும்.இதில் முக்கியமா நான் கண்டது நேரதிற்கு தொடங்கி நேரதிற்கு முடிந்தது இது தான் முதல் நிகழ்ச்சி சிட்னியில் நேரம் சரியாக கணித்து நடைபெற்ற நிகழ்ச்சி.

"தன்னுயிரை துச்சமாக மதித்து எம் இன விடுதலைக்காக மரணதித்த கருபுலி விரர்களுக்கு சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள்............................."

சிட்னி இளையசமூகத்தின் எழுச்சி இன்னும் தொடர வேண்டும் என்பது ஒரு வித அவா........... B)

இங்கே வந்த அவுஸ்ரெலிய சட்டதரணி மிகவும் நன்றாக உரையாற்றினார் அதில் அவர் ஒரு விடயத்தை தெளிவாக கூறினார்..........நீங்கள் பயப்பிடாம நிதி மற்றும் இதர உதவிகளை செய்யலாம்...........பொலிஸ் உங்கள் வீட்டுக்கு விசாரிக்க வந்தால்.................எது வித பதில்களையும் கூற வேண்டாம்..............அவர்களுக்கு நான் சட்டதரணி மூலம் வாக்குமூலம் தருகிறேன் என்று சொல்லும்படி குறிப்பாக சொல்லி இருந்தார்,இதை இங்குள்ளவர்கள் கவனத்தில் எடுத்து கொண்டா நல்லது.....................

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நடைபெறும் பல நிகழ்வுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அதில் தென்னிந்திய கலைஞர்களின் திரை இசை நிகழ்ச்சிகளும் அடங்கும். ஆனால் அன்னிகழ்சிக்களில் ஏற்படாத திருப்தி இந்த சிட்னி யூலை எழுச்சியில் ஏற்பட்டது. இன்னிகழ்ச்சிக்கு வராமல் இருந்தவர்கள் உண்மையில் கொடுத்துவைக்காதவர்கள் தான். பொதுவாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றால், அன்னிகழ்ச்சி முடியமுன்பு பலர் வீடு செல்வார்கள். ஆனால் இன்னிகழ்ச்சி முடியும் வரை மக்களில் பலர் மண்டபத்தில் அமைதியாக இருந்து கேட்டது இன்னிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிகளில் ஒன்று.

இன்னிகழ்வில் கடைசியாக தாயகப்பாடல்கள் பாடப் பெற்றது. இவ்வளவு திறமை மிக்கவர்களா என்று ஆச்சரியப்படுத்துமளவு பாடகர்கள் பாட, அதற்கு ஏற்றவாறு அழகாக இசை அமைத்தார்கள் இசைக் கலைஞர்கள். இவர்களில் பெரும்பாலோர் புலத்தில் பிறந்தவர்கள். இன்னிகழ்ச்சியை அழகிய தமிழில் தொகுத்து தந்தவர்களும் புலத்தில் பிறந்தவர்களே. ஒளி முகம் தோறும் புலிமுகம் என்ற இறுவெட்டில் உள்ள பாடலான 'அம்மா உன் பிள்ளை' என்ற பாடலை ஒரு இளைஞன் பாடியவீதம் பலரைக் கவர்ந்தது. இறுவெட்டில் உள்ளதை விட சிறப்பாக மேலதிக இசையினை வழங்கிய இசை அமைப்பாளார்களின் திறமையை மக்கள் மெய் மறந்து ரசித்தார்கள். இவ்விறு வெட்டில் இருந்த 'அன்னை இழந்தோம், தந்தை இழந்தோம்' என்ற கடினமான படலையும் இலகுவாக பாடகர்கள் பாடினார்கள். 'இந்த மண் எங்களின் சொந்த மண்' என்ற இறுட்டில் உள்ள 'என் இனமே என் சனமே' என்ற பாடலும் மக்களை மிகவும் கவர வைத்தது. மொத்தத்தில் எல்லாப்பாடல்களும் ரசிக்கும் படியாக பாடகர்கள் நன்றாகப் பாடினார்கள். வருடாவருடம் சிட்னியில் கண காசு குடுத்து தென்னிந்திய கலைஞர்களைக் கூப்பிடுவார்கள், ஆனால் அந்நிகழ்ச்சிகளில் ஏற்படாத திருப்தி இந்தத் தாயகப் பாடல்கள் கேக்கும் போது பலருக்கு ஏற்பட்டது இன்னிகழ்வின் மற்றுமொரு வெற்றியாகும்.

புத்தர் மீண்டும் செத்தார் என்ற நாடகமும் நன்றாக இருந்தது. குறிப்பாக அதில் நடித்த கலைஞர்களின் தேர்வு மிகவும் சிறப்பாகும். மகாத்மா காந்தியின் வேடப் பொருத்தம் நன்றாக இருந்தது. ஒவ்வொரு சம்பவத்திலும் புத்தர் இறந்ததினை அழகாக பாடகர் ஒருவர் பாடிக் காட்டினார். இந்நாடகத்தில் கிருசாந்தி கொலை, மூதூர் படுகொலை, செஞ்சோலை படுகொலை, வங்காலை, அல்லைப்பிட்டி என பல படுகொலைகளை பெளத்தர்கள் செய்யும் போது புத்தர் ஒவ்வொரு முறையும் இறந்ததை அழகாக சொல்லி காட்டப்பட்டிருந்தது. சிங்களக் கொடியவர்களினால் பெற்றோரை இழந்த சிறுவனாக சிட்னியில் பிறந்த சிறுவன் ஒருவன் அழகாக மிகவும் திறமையாக நடித்தார்.

மெல்பேர்ணில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்காக வாதிடும் சட்டத்தரணிகளின் அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர், நாங்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாதவை என்பவற்றையும் அழகாக விளங்கப்படுத்தினார். இன்னிகழ்வில் பேசிய மற்றைய பேச்சாளர்களின் பேச்சுக்களையும் மக்கள் மெய் மறந்து கேட்டார்கள்.

83 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் ஒளிவடிவில் காண்பிக்கப்பட்டது. மிக நன்றாக ஆங்கிலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஓளிவடிவத்தினைப் பார்க்கும் போது பலரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

இன்னிகழ்வுக்கு செல்லாதவர்கள் உண்மையில் கொடுத்து வைக்காதவர்கள் தான்.

தேசிய தலைவர் அவர்கள் கரும்புலிவீரர்களுக்கு அகவணக்கம்..................(தமிழர் தாயகத்தில்)

தேசிய தலைவர் கரும்புலி வீரர்களுக்கு அகவணக்கம்..............

piraba2007karumpulikalnic2.jpg

piraba2007karumpulikalnmw6.jpg

piraba2007karumpulikalnmw6.jpg

piraba2007karumpulikalnyv3.jpg

"தமிழர் தாகம் தமீழிழ தாயகம்"

Edited by Jamuna

கரும்புலிகள் நாள்: தேசியத் தலைவர் அகவணக்கம்

கரும்புலிகள் நாள்: நூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் அகவணக்கம் செலுத்தினார் தமிழீழத் தேசியத் தலைவர்

பல நூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் நினைவுச்சுடரேற்றி கரும்புலி மாவீரர்களை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

தமிழீழத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட கரும்புலிகள் நினைவாலயத்தில் பல நூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் முதற்கரும்புலி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நேரமான இரவு 7.05 மணிக்கு நினைவுச்சுடரினை தமிழீழத் தேசியத் தலைவர் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நிறைவடைந்ததும் முதற்கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர்இ கரும்புலிகள் மத்தியில் உரையாற்றினார். இதில் தளபதிகள்இ பொறுப்பாளர்கள்இ போராளிகள் கலந்துகொண்டு கரும்புலி மாவீரர்களை நினைவுகூர்ந்தார்.

வடமராட்சி நெல்லியடியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா இராணுவ முகாம் மீது 1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் நாள் கப்டன் மில்லர் நடத்திய கரும்புலித் தாக்குதலே விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலித் தாக்குதலாகும். தாயக விடுதலைக்காக கரும்புலிகள் தங்களது பயணத்தின் 20 ஆம் ஆண்டை நிறைவு நிறைவு செய்திருக்கிறார்கள்.

இதுவரை மொத்தம் 322 கரும்புலி மாவீரர்கள் உயிராயுதங்களாக தங்களைத் தற்கொடையாக்கியுள்ளனர்.

இவர்களில்

81 பேர் தரைக்கரும்புலி மாவீரர்கள் ஆவர்.

241 பேர் கடற்கரும்புலி மாவீரர்கள் ஆவர்.

ஆனையிறவுச் சமரின் போது சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறித் தளங்களை தாக்கி அழித்தனர் கரும்புலிகள்.

2001 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் நாள் கொழும்பு கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள்இ பயணிகள் வானூர்திகள் ஆகியவற்றை தாக்கியழித்தனர் கரும்புலிகள். அத்தாக்குதலுக்குப் பின்னர்தான் சிறிலங்கா அரசாங்கம் அமைதிப் பேச்சுக்களுக்கு திரும்பியது.

நன்றி -தகவலை தந்த நண்பர் இணைப்பு தெரியாது..

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணம்....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபம் நிறைந்த நிகழ்வாக இந்த நிகழச்சி நடைபெற்றதை காண கூடியதாக இருந்தது சிட்னி தமிழர்கள் மத்தியிலும் ஒரு பாரிய எழுச்சி தோன்றி இருப்பதையும் காணகூடியதாக இருந்தது...வந்திருந்த அவுஸ்திரேலியாவின் மிக பிரபல வழக்கறிஞர்களுக்கும் இது ஒரு உற்சாகத்தை தந்து இருக்கும் இவ்வளவு ஜனத்திரளயும் கண்டவுட்ன வேதiனாயன விடயம் என்னவென்றால் இப்படியான கைதுகள் ழூலம் தான் அமக்குள் இருக்கின்ற எழுச்சி உணர்வை காணகூடியாதாக உள்ளது....வழக்கறிஞர் சொன்து போல தோல்விகள் வரும் ஆனால் வெற்றி இறுதியில் எமக்கே.......

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் ஜீலை எழுச்சி தினம் பற்றி அழகாய் விமர்சனம் செய்திருக்கிறீங்க.

இவ்வழக்கறிஞர் பேசும் போது தமிழ் ஈழம் என்ற சொல்லை பல தடவை உச்சரித்தார். சிறிலங்கா என்ற சொல்லை உச்சரித்தது மிக குறைவு இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

கேட்கவே சந்தோசமாக இருக்கிறது.

3)இளைஞர்களும்,யுவதிகளும் தமிழீழ எழுச்சி பாடல்களை அழகாக பாடினார்க,இசை வழங்கியோரும் தமது பங்கிற்கு நன்றாகவே இசை வழங்கினார்கள்,இவர்கள் யாவரும் இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளைகள்.

பல மேடை நிகழ்ச்சிகள் நடந்து இருகிறது இது ஒரு அருமையான நிகழ்ச்சி ,முக்கியமாக திறம்பட நடந்ததிற்கு காரணம்,இதை இங்கு வளர்ந்த இளைஞர்கள் முன்நின்று நடத்தியமையே ஆகும்.இதில் முக்கியமா நான் கண்டது நேரதிற்கு தொடங்கி நேரதிற்கு முடிந்தது இது தான் முதல் நிகழ்ச்சி சிட்னியில் நேரம் சரியாக கணித்து நடைபெற்ற நிகழ்ச்சி.

பாராட்ட வேண்டிய விசயம். இளையோர் கைகள் இன்னும் பலவழிகளிலும் பலம் சேர்க்கட்டும். வாழ்த்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.