Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Muscular Dystrophy treatment in tamil | தசை சிதைவு நோய் கட்டுப்படுத்த சித்த மருத்துவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Muscular dystrophy நோயாளிகள் குறிப்பாக எண்ணெய் போட்டு massage பண்ணகூடாது, இருப்பதையும் பலவீனப்படுத்திவிடுமாம்.
பல ஆயுள்வேத மருத்துவர்கள் தவறாக எனக்கு சிகிச்சை அளித்துள்ளார்கள். உடலில் அழுத்தம் கொடுக்காது மெதுவாக பூசிவிடும் ஒருவகை எண்ணெய் தசைகளை பலப்படுத்தும் என்று கூறுகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு Muscular dystrophy பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவர் சமைக்கும்போது எடுத்தது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தசை சிதைவு நோய் | Treatment for Muscular Dystrophy | Dr Vidhya 

ஹோமியோபதி மருத்துவம் சிறிது உதவுவதாக மருத்துவர் வித்தியா தெரிவிக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றம் அறக்கட்டளை | Yetram Trust Erode for muscular dystrophy

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோக்களைநான் இன்னும் பார்க்கவில்லை.நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன். இணைப்பிற்குநன்றி ஏராளன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Muscular dystrophy சார்ந்த பதிவுகளை இத்திரியில் தொடரலாம் என்று எண்ணுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தம்பிியள்.👋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தசைவளக்கேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
 
Jump to navigationJump to search
தசைவளக்கேடு / தசையழிவு / தசை அழிவு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு நரம்பியல், pediatrics, medical genetics
ஐ.சி.டி.-10 G71.0
ஐ.சி.டி.-9 359.0-359.1
MedlinePlus 001190
ஈமெடிசின் orthoped/418
MeSH D009136

தசை வளக்கேடு / தசையழிவு / தசை அழிவு (Muscular Dystrophy) என்பது உடலை அசைக்க உதவும் தசைகளை பலவீனமடையச் செய்யும், சந்ததிகளூடாக கடத்தப்படக்கூடிய பல தசை நோய்களை உள்ளடக்கி கூட்டாக குறிக்கும் ஒரு சொல்லாகும்[1][2]. இவ்வகையான நோய்களில் எலும்புத்தசை பலவீனம், தசை புரதங்களில் குறைபாடுகள் காணப்பட்டு, அவை தீவிரமடையும்போது தசைக் கலங்களும், தசை இழையங்களும் இறப்புக்குள்ளாகும்[3]. Duchenne, Becker, Limb girdle, Congenital, Facioscapulohumeral, Myotonic, Oculopharyngeal, Distal, Emery-Dreifuss ஆகிய 9 நோய்கள் தசை வளக்கேட்டு நோய்களாக பாகுபடுத்தப்பட்டிருப்பினும்[4] நூற்றுக்கு மேற்பட்ட நோய்கள் இவ்வகையான தசை வளக்கேட்டை ஒத்திருக்கின்றன. இதனால் இதயம், இரையகக்குடல் (gastrointestinal), நரம்புத் தொகுதி, அகச்சுரப்பிகள், தோல், கண்கள், மூளை போன்றவற்றிலும் குறைபாடுகள் ஏற்படும். இதனால் மனநிலை மாற்றங்கள் (mood swings), கற்றலில் சிக்கல்களும் தோன்றலாம்[4].

1860 ஆம் ஆண்டுகளில், வலுவின்மை காரணமாகவும், நடக்கும் திறனை இழந்தும், மற்றும் இளம் வயதிலே இறந்து போகும் சிறுவர்களைப் பற்றிய செய்திகள் மருத்துவ நாளேடுகளில் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், பிரான்சு நாட்டைச் சார்ந்த நரம்பியல் நிபுணரான குய்லாவ்மே டக்சென்னி என்பவர் 13 சிறுவர்களைக் கொண்டு பொதுவான, தீவிரமான இந்த நோயின் பல்வேறு தோற்றத்தினை விளக்கினார். அதனால் தற்போது அந்த நோயானது டக்சென்னி தசைவளக்கேடு என்று அவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகின்றது. அந்த நோயானது பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கிறது என்பதற்கு டக்சென்னியின் விளக்கங்கள் மிகப்பெரிய சான்றாக அமைந்தன என்பதுடன், அந்நோய் அனைத்து தரப்பு வயதிலான ஆண்களை பாதித்தது[சான்று தேவை]

. இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும் இந்த நோய், பெரும்பாலும் ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடியது. இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணரமுடியும்.[சான்று தேவை]

பொருளடக்கம்

மரபியல் காரணம்[தொகு]

இந்தத் தன்மைகள் அனைத்தும் மரபினை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், பல்வேறு தசைவளக்கேடுகள் அனைத்தும் வெவ்வேறு மரபியல் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. நன்கறிந்த வகையான, டக்சென்னி தசைவளக்கேடு (டிஎம்டி) எக்ஸ் தொடர்பிலான மரபியல் மாதிரியைச் சார்ந்தது, இதன் அர்த்தம் யாதெனில் இந்நோய்க்கு காரணமான மரபணு மொத்தமுள்ள இரண்டு பாலியல் நிறமிகளில் எக்ஸ் என்ற நிறமியில் காணப்படுகிறது, ஆகவே இந்நோயானது பாலியல் தொடர்பை அடிப்படையாகக் கொண்டதாகவும் கருத இயலும். ஆண்களின் (ஒரே ஒரு எக்ஸ் நிறமியை மட்டும் உடையவர்கள்), ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள மரபணுக்களின் இரண்டில் ஒரு மாதிரியே இந்நோயை உருவாக்க காரணமாகிறது. பெண்களில் (இரண்டு எக்ஸ் நிறமிகளை உடையவர்கள்), ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள மரபணுக்களின் இரண்டு மாதிரிகளும் இந்நோயை உருவாக்க காரணமாகிறது. விதிவிலக்காகவும், சில சமயங்களில் X தொழிற்படாத்தன்மை ஈடுசெய்வதிலும் ஏற்படும். மொத்தத்தில் ஆண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

நோய் அறிகுறிகளும் உணர்குறிகளும்[தொகு]

சில அறிகுறிகள், மருத்துவப் பரிசோதனைகள் மூலம்தான், இந்நோயைப் பற்றி அறியமுடியும் எனத் தெரிவிக்கும் மேலைநாட்டு மருத்துவர்கள் மற்றும் மரபணு ஆராய்ச்சியாளர்கள், இந்நோய்க்கான மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நோயின் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

  • தசைத் திசுக்களின் தொடர்ச்சியான அழிவு
  • சமநிலைப்படுத்திக் கொள்ள இயலாமை
  • தொடர்ந்த நிலை தடுமாற்றம்
  • நடப்பதில் சிரமம்
  • மெதுவான நடை
  • கொண்டைக்கால் சதை ஒழுங்கின்றி காணப்படுவது
  • குறிப்பிட்ட அளவிலான இயக்கம்
  • சுவாச சம்பந்தமான பிரச்சினைகள்
  • வலிமையிழந்த கண்ணிமைகள்
  • பாலுறுப்புச் சுரப்பியின்மை
  • சிறுநீர்ப்பை கோளாறு
  • பக்க விளைவுகள் (முதுகெலும்பு மற்றும் பின்புறம் வளைந்து காணப்படுதல்)
  • நடக்க இயலாமை

இந்த நோயை அறுதியிடுவதற்கு முன்பாக மேற்கூறிய சில அறிகுறிகள் தென்படலாம் அல்லது தென்படாமலும் போகலாம். தசைவளக்கேட்டின் சில பிரிவுகள் இதயத்தை பாதிக்க வாய்ப்புள்ளது என்பதுடன், இதயத் தசைநோய் அல்லது குருதி ஊட்டக்குறை[சான்று தேவை] போன்றவற்றை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைகிறது.

நோய் கண்டறிதல்[தொகு]

தசை உயிரகச்செதுக்கு மற்றும் அதிகப்படுத்தப்பட்ட creatine kinase (CK) ஆகியவற்றின் முடிவுகளின் அடிப்படையில் தசைவளக்கேடு நோய் கண்டறியப்படுகிறது. சில நேரங்களில், டி.என்.ஏ இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வது அவசியமாகிறது.

உடற் பரிசோதனை மற்றும் நோயாளியின் மருத்துவ விவரம் உள்ளிட்டவை தசைவளக்கேட்டின் வகையைக் கண்டறிய மருத்துவருக்கு உதவியாக இருக்கும். குறிப்பிட்ட தசைக் குழுக்கள் பல்வேறு வகையான தசைவளக்கேட்டினால் பாதிக்கப்படுகிறது.

கொழுப்பு மற்றும் தசையைப் பெரிதாக்கும் திசுக்களின் உருவாக்கத்திற்கு குறிப்பிட்ட வகையான தசைவளக்கேடு காரணமாக இருப்பதால், அடிக்கடி ஏற்படும் அதிகப்படியான தசை இழப்பைத் (திசு அழிவுறுதல்) தடுப்பது அவசியமாகிறது. இதுவே கெண்டைக் கால் தசை அதிகரிப்பு என்றழைக்கப்படுகிறது.

நோய் முன்கணிப்பு[தொகு]

தசைவளக்கேடு பிரச்சினையுள்ள மக்களை இனம் கண்டறிவது நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. தசைக் குறைபாடுகள், செயல்பட இயலாமை மற்றும் நடக்க இயலாமை போன்ற பல்வேறு குறைபாடுகளை தசைவளக்கேடு ஏற்படுத்தி வரும் நிலையில், குறிப்பிட்ட தசைவளக்கேட்டு வகைகள் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துவதில்லை. தசைவளக்கேடு காரணமாக சில குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்துவிடுகின்றன, இருப்பினும் பெரும்பாலான குழந்தைகள் பலவீனத்துடன் வாலிபப் பருவம் வரை உயிருடன் இருக்கின்றன. தசைகளின் பாதி்ப்பு சூழ்நிலைக்கேற்றார் போல மாறுபடும், இருப்பினும் இடுப்பெலும்பு, தோள், முகம் அல்லது வேறு இடங்களில் அந்நோயின் பாதிப்பு பெருமளவில் காணப்படுகிறது. தசைவளக்கேடு வயது வந்தோரை பாதிக்கும், இருப்பினும் அந்நோயின் பல்வேறு செயல்பாடுகள் குழந்தைப் பருவத்திற்கு முன்பாகவே பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை.

சிகிச்சை[தொகு]

தசைவளக்கேட்டை குணப்படுத்தும் சிகிச்சை முறை எதுவும் இல்லை. செயலற்ற தன்மை (படுக்கை ஓய்வு மற்றும் நீண்ட காலமாக உட்கார்ந்து கொண்டிருத்தல்) அந்நோயை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. நலமீட்பு உடற்பயிற்சி ஊட்ட உணவு சிகிச்சை, தொழில்வழி சிகிச்சை, இயல்பான அணுகுமுறை, பேச்சு பிறழ்வு சிகிச்சை மற்றும் எலும்பியல் சம்பந்தமான உபகரணங்கள் (உதாரணமாக , சக்கர நாற்காலி, நிற்க உதவும் சட்டங்கள்) ஆகியவை இந்நோயைத் தீர்க்க உதவியாக இருக்கும்.

தசைவளக்கேட்டை குணப்படுத்துவதற்கான குறிப்பிட்ட சிகிச்சை முறை என்று எதுவும் இல்லை. நலமீட்பு உடற்பயிற்சி ஊட்ட உணவு சிகிச்சை முறையானது சுருக்கங்களைத் தடுக்கவும் மற்றும் தசை இறுக்கத்தைப் பராமரிப்பதற்கும் பயன்படுகிறது, மேலும் நேர்த்தியான (எலும்பியல் உபகரணங்களின் ஆதரவு) மற்றும் சரிசெய்யப்பட்ட எலும்பியல் அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவை நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவைப்படுகின்றன.

Emery-Dreifuss, myotonic ஆகிய தசைவளக்கேடு வகைகளுக்கு செயற்கை இதயமுடுக்கி தேவைப்படலாம். Myotonic தசைவளக்கேட்டில் கடினமான தசைச்சுருக்கத்தத் தொடர்ந்து, தாமதமாக தசை தளர்வு வரும் நிலையைக் குறிக்கும் myotonia வுக்கான சிகிச்சையாக quinine, phenytoin, mexiletine போன்றன பயன்படுத்தப்படும். ஆனால் நீண்டகால சிகிச்சை எதுவும் அறியப்பட்டிருக்கவில்லை.

எம்டியுடன் உள்ள ஒருவர் தினந்தோறும் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு (தானே உண்பது, தன்னைத் தானே காத்துக்கொள்ளுதல் மற்றும் பல) தொழில்வழி சிகிச்சை முறை உதவியளிக்கிறது என்பதுடன், ஓய்வு நேரத்தின்போதான நடவடிக்கைகளுக்கும் உதவி புரிகிறது. இந்த முறையானது உபகரணங்கள் அல்லது ஆற்றல் பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறைவேற்றப்படுகிறது. வீட்டிலோ அல்லது அலுவலகங்களிலோ ஒருவரின் செயல்பாடுகள் மற்றும் அணுகும் தன்மையை உயர்த்துவதற்கு, தொழில்வழி சிகிச்சை முறை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. தொழில்வழி சிகிச்சை முறை வல்லுநர்கள் தசைவளக்கேட்டில் ஏற்படக்கூடிய உளவியல் மாற்றங்களையும், புலன் உணர்வில் ஏற்படும் வீழ்ச்சியையும் கவனிப்பதுடன், இந்நோயுள்ளவர்களின் குடும்பத்துக்குத் தேவையான அறிவையும், ஆதரவையும் வழங்குவர்[5].

அமெரிக்காவில் ஆராய்ச்சி[தொகு]

அமெரி்க்காவிலுள்ள National Institute of Neurological Disorders and Stroke (NINDS), National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases (NIAMS), National Institute of Child Health and Human Development (NICHD) ஆகிய நிதியளிக்கும் மூன்று அமைப்புகள் கூட்டாக இணைந்து தசைவளக்கேட்டில் கவனம் செலுத்தி வருகின்றன.[4]

1966 ஆம் ஆண்டில், தசைவளக்கேடு அமைப்பு ஆண்டுதோறும் Jerry Lewis MDA Telethon என்ற நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கியது என்பதுடன், அந்நிகழ்ச்சியானது மற்ற அனைத்து நிகழ்ச்சிகளைக் காட்டிலும் குறிப்பிடத் தகுந்த முறையில் தசைவளக்கேடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி, பல்வேறு வகையான தசைநார்த் தேய்வைக் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக, MD Care Act சட்டத்தின் கீழ், பொது நலச் சேவை சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. முரண்பாடற்ற ஆய்வு உத்திகளின் மூலம் தசைvaLakkeedu ஆராய்ச்சியின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில், இந்தச் சட்டம் தசைவளக்கேடு ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கியது.[6][7]

மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள விக்கிபீடியா இணைப்பினை அழுத்துங்கள்.

https://ta.wikipedia.org/wiki/தசைவளக்கேடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!

பிரீமியம் ஸ்டோரி

சை சிதைவு நோய் (muscular dystrophy)  ஒரு கொடிய நோய் என்று பலர் சொன்னாலும்  தன்னம்பிக்கை, முயற்சி என இந்த நோயின் தாக்கத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு, தம்மைப்போன்று இதே நோயால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் உதவ தயாராக இருப்பதாக நம்பிக்கை தெறிக்க பேசுகிறார் வானவன் மாதேவி.

"ஆரம்பத்தில் நடக்கத் தடை போடும் இந்த நோய், அடுத்தடுத்து தன் வேலைகளை காட்டும். கால்களை முடக்கிய பின்கைகளுக்குத் தாவி கைகளையும் செயலிழக்கச் செய்யும். படிப்படியாக ஒரே இடத்தில் படுக்கச் செய்து அதன் உக்கிரத்தை காட்டும். உடல் அசைவற்று எதுவுமே செய்ய முடியாமல் போய்விடும்" என்பதுதான் பொதுவான மருத்துவ வட்டார கூற்று. 

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!
 

இத்தகைய கொடிய நோய், ஒரே வீட்டில் உள்ள அக்கா, தங்கை என இருவரையும் தாக்குகிறது. அப்பாவும், அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு அலைந்து அலைந்து, ஒரு கட்டத்திற்கு மேல் அலுத்து போய்விட்டார்கள்.   சேலத்தைச் சேர்ந்த வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி, 30களை கடந்த இந்த இரு  சகோதரிகள்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள். பள்ளிப்பருவத்திலயே இந்த நோயால் பாதிக்கப்பட்ட இவர்கள் கடந்து வந்த பாதையை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது.  இப்போது, 'ஆதவ் டிரஸ்ட்' என்கிற பெயரில் தசை சிதைவு  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி கொண்டிருக்கிறார்கள்.

"இந்த நோய் குணப்படுத்த முடியாத நோய்தான். ஆனால், இதை மேலும் வளரவிடாமல் தடுக்க முடியும்!"- வானவன் மாதேவியிடமிருந்து நம்பிக்கை நிரம்பிய வார்த்தைகள் தெறிக்கிறது.

 ''அப்ப நான் ஆறாம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தேன். ஒரு நாள் ஸ்கூலுக்கு போகும்போது நடக்க முடியாம திடீர்னு கீழே விழுந்துட்டேன். என்னால கொஞ்ச தூரத்துக்கு மேல எழுந்து நடக்கவே முடியல. லோக்கல்ல ஒரு டாக்டர்கிட்ட போய் காட்டினோம். நடக்க சொல்லி பாத்துட்டு, எங்க அப்பாகிட்ட,  'உங்க பொண்ணுக்கு சை சிதைவு நோய். இதுக்கு ட்ரீட்மெண்டே கிடையாது'னு சொல்லிட்டார்.

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!
 

கொஞ்ச தூரம் நடக்குறது, கீழ விழுறதுனு ஒருவருஷம் அப்படியே ஓடுச்சி. சென்னை போய் பாக்கலாம்னு சென்னை ஜி.ஹெச்க்கு போனோம். அங்க நான் அட்மிட் ஆகியிருந்தப்பதான், தங்கச்சியும் நடக்க முடியாம கீழ விழுந்துட்டானு வீட்ல இருந்து ஃபோன் வந்துச்சு. இந்த நோய் மரபியல் காரணங்களால்தான் வருது. அதனால உங்க வீட்ல வேறு யாருக்காவது தாக்கலாம்னு டாக்டர் ஏற்கனவே செல்லியிருந்தார். இதை கேட்டவுடனயே எல்லோரும் துடிச்சிப் போயிட்டோம். நானும், என் தங்கச்சியும் நடக்க முடியாம சிரமப்பட்டோம். எனக்கு நம்ம வாழ்க்கை என்னனு தெரிஞ்சு போச்சு. அதனால படிக்கணும்னு மட்டும்தான் ஆசைப்பட்டேன். நானும், என் தங்கச்சியும் பத்தாவது வரைக்கும் படிச்சோம். ஆட்டோலதான் போவோம். ஸ்கூல் பேக் கூட தூக்க முடியாது. நாங்க சிரமப்படுறத பாத்துட்டு இதுக்கு மேல படிக்க வேண்டாம்னு நிறுத்திட்டாங்க.

ஆனா நாங்க விடல, எங்க அப்பாவை தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தோம். டுடோரியல் ஆசிரியர்களை வீட்டுக்கே வரழைச்சு படிக்க வச்சாங்க. பன்னிரெண்டாவது பாஸ் பண்ணோம். டி.டி.பி., டி.சி.ஏ.னு கோர்ஸ்களும் படிச்சி முடிச்சோம். படிக்கும்போதே நாம சீக்கிரமே இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செஞ்சிடணும்னு தோணுச்சி. எந்த ட்ரீட்மெண்டுமே பலனளிக்கல. அப்பதான் ஒரு டாக்டர் மூலமா பிஸியோ தெரபி அறிமுகமாச்சு. தொடர்ந்து பிஸியோ தெரபி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டோம். இந்த நோயோட தாக்கம், இந்நேரம் எங்களுடைய கைகளை பாதிச்சி எங்களை முடக்கியிருக்கணும். ஆறு வருஷத்துக்கு மேலாக கால் பாதிப்போட நிறுத்தி வச்சிருக்கோம்னா, அதுக்கு பிஸியோ தெரபிதான் காரணம்.

தசை சிதைவு நோய்: உதவ காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சகோதரிகள்!
 

எங்களால வீட்ல உட்கார்ந்து மூணு வேளையும் சாப்பிட்டுட்டு, தூங்குறது பிடிக்கல. கொஞ்ச நாள் வீட்ல இருந்தபடியே டி.டி.பி. ஒர்க் செஞ்சு கொடுத்தோம். ஆனா, அது சக்சஸா போகல. நாங்க இப்படி இருக்குறது ஒரு கட்டத்துக்கு மேல அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பழகிடுச்சி. கண்டுக்கவே மாட்டாங்க. எங்ககிட்ட கோபமா நடந்துக்கவும் ஆரம்பிச்சாங்க. டி.வி. பாக்கணும்னா கூட ரிமோட்டை எடுத்து கீழ வச்சிட்டு போய்டுவாங்க. எங்களால இறங்கி எடுக்க முடியாது. இப்படி பல விஷயங்கள் நடக்கும். எனக்கு படிக்கணும்னு மட்டும்தான் ஆசை.  ஆனா என் தங்கச்சி எல்லார் மாதிரியும் இருக்கணும்னு ஆசைப்படுவா. ஆனா அது முடியாதுல்ல, அதான் ரெண்டு பேருமே எல்லாரைவிடவும் வித்தியாசமா இருக்கலாம்னு முடிவு பண்ணோம்.

சமூகத்துக்கு கூட பொறுமையா செஞ்சுக்கலாம், முதல்ல நம்மள மாதிரி இந்த நோய்ல பாதிக்கப்பட்டு கஷ்டப்படுறவங்களுக்கு எதாவது செய்யணும்னு தோணுச்சி. அதுக்கு அப்பாவும், அம்மாவும் ஒத்துழைச்சாங்க. தெரிஞ்சவங்க, நண்பர்கள் மூலமா ஆலோசனை கேட்டு 2009ல் 'ஆதவ் டிரஸ்ட்' ஆரம்பிச்சோம். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு போய் சை சிதைவு நோயால பாதிக்கப்பட்டவங்க லிஸ்டை வாங்கி, அவங்களுக்கு வீல் சேர், கட்டில்னு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தோம். அது பத்தாதுனு தோணுச்சி. வாரா வாரம்  ஞாயிற்றுக்கிழமை கேம்ப் போட்டோம்.

அந்த கேம்ப்புக்கு ஆட்டோ வச்சி எல்லோரையும் அழைச்சிட்டு வந்து, ஒரு நாள் சாப்பாடு போட்டு, பிஸியோதெரபி ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். ஆனா, அதுவும் பத்தாதுனு தோணுச்சி. தங்க வச்சி ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்னு முடிவு பண்ணோம். அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சு ,ஏழு குழந்தைகளை தங்க வச்சி ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். ட்ரீட்மெண்ட், மருந்து, சாப்பாடு எல்லாமே இலவசம்தான். சில இடங்கள்ல காசு வாங்குறாங்க. ஆனா இங்க அப்படி இல்ல. ஏழு பேர்ல அஞ்சுபேர் வீட்டுக்கு போய்ட்டாங்க. இப்போ கார்த்திகேயன், துஷிந்த் என ரெண்டு பசங்கதான் இருக்காங்க. இங்க இன்னும் ஐந்து பேர் தங்கி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம். ஆனா, இந்த நோயால பாதிக்கப்பட்டவங்களை தேடி பிடிக்க முடியல.

அடுத்து, 20 பேர் தங்கி சிகிச்சை எடுத்துக்கிறதுக்கான ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்கு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவங்க எங்களை தைரியமா அணுகலாம். அவங்களுக்கு உதவ நாங்க காத்துகிட்டு இருக்கோம். ஏன்னா, இந்த நோயோட பாதிப்பை எங்களால மட்டும்தான் முழுசா உணர முடியும்" என்றார் மனம் தளராமல் வானவன் மாதேவி.

வானம் தொடும் வரத்தை வாங்கி வந்தவன் நீ
உன்னை பிடிக்காத சிலர்
உன்னை பிடிக்க வலை விரிக்கலாம்
உன்னை ஒழிக்க அம்பை எய்யலாம்
உன்னை முடக்க சிறகை நறுக்கலாம்
ஆனாலும், ஒன்றை உணர்,
பறக்கப் பிறந்தவன் நீ...
என்ற வாசகத்தை எழுதி தங்கள் எதிரில் ஒட்டி வைத்திருக்கிறார்கள் இந்த சகோதரிகள்!

-எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: பா.காளிமுத்து

https://www.vikatan.com/government-and-politics/politics/50951-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள இந்த சிகிச்சை நிலையத்திற்கு எனது தம்பி சென்று வந்தவர். கட்டு சிகிச்சை என ஏமாற்றுகிறார்கள். எப்படியாவது நோயை மாற்ற முயல்வோரின் மனநிலையை பாவித்து ஏமாற்றுகிறார்கள். தயவு செய்து அந்த இடத்திற்கு சென்றுவிடாதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அளவான உடற்பயிற்சி போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2021 at 05:46, ஏராளன் said:

தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள இந்த சிகிச்சை நிலையத்திற்கு எனது தம்பி சென்று வந்தவர். கட்டு சிகிச்சை என ஏமாற்றுகிறார்கள். எப்படியாவது நோயை மாற்ற முயல்வோரின் மனநிலையை பாவித்து ஏமாற்றுகிறார்கள். தயவு செய்து அந்த இடத்திற்கு சென்றுவிடாதீர்கள்.

கனடாவில் இந்ந கட்டு சிகிச்சை கை,கால் முறிவு ஏற்படும் போது பொதுவாக முதல் தரம் கட்டுவார்கள்.அடுத்து மற்ற,மற்ற முறைகளுகக மாற்றி விடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

கனடாவில் இந்ந கட்டு சிகிச்சை கை,கால் முறிவு ஏற்படும் போது பொதுவாக முதல் தரம் கட்டுவார்கள்.அடுத்து மற்ற,மற்ற முறைகளுகக மாற்றி விடுவார்கள்.

அது மாவுக்கட்டு(plaster of paris) என்று நினைக்கிறேன்.

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.