Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜுலை 20-இல் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜுலை 20-இல் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகம்

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்து ஜுலை 20ஆம் நாளன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.

சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரிகோணமலையில் பேசிய சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச, விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தால் ஒழிய இலங்கையில் அமைதி திரும்பாது என்று கூறியிருக்கிறார். பல நாடுகள் ராணுவ நடவடிக்கை மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வு தான் ஒரே வழி என்று சொன்னதை ராஜபக்ச கேட்க தயாரில்லை. ஓர் இறுதிப் போராட்டத்துக்கு சிறிலங்கா ராணுவமும் புலிகளும் தயாராகி வருகின்றனர். நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறதே, தடுத்து நிறுத்த முன்வரவேண்டாமா?

இந்திய அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? இதனை மத்தியில் ஆளும் கூட்டணியாக உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் மனதில் கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி 20-ஆம் நாளன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் சிறிலங்கா அரசினை இந்தியா அரசு உள்பட பன்னாட்டு அரசுகளும் தடுத்து நிறுத்தி மனித நேயப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்திட திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் எனது தலைமையில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் வீரமணி தெரிவித்துள்ளார்.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிடக் கழகத்துக்கு இருக்கின்ற உணர்வு கூட எங்கட சில சனத்திற்கு இல்லை.

இந்த நேரத்தில் எங்களுக்காக குரல் கொடுக்கின்ற திராவிடர் கழகத்திற்கு மிக்க நன்றிகள். என்றும் ஒரே உணர்வு, ஒரே இனம் எண்ட கோட்பாட்டில் எப்பவும் இருப்பம்

Edited by mathanarasa

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைத் தலையிடக் கோரியும்,ஈழத்தமிழரின் வாழ்வுரிமைப் போரட்டத்தை ஆதரிக்கக் கோரியும் நடைபெறும் போராட்டம் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா?

ஈழத்தமிழரின் வாழ்வுரிமைப் போரட்டத்தை அங்கிகரிக்க வேண்டுமெனக்கோரி எதிர்வரும் 20ஆம் நாள் மாபெரும் போராட்டம் ஒன்றைத் திராவிடகழகம் நடத்தவுள்ளதாக கி.வீரமணி அறிவித்துள்ளார்.

கிழக்கில் இராணுவத்தாக்குதலை நாடாத்தி அப்பாவித் தமிழர்களை அடித்து விரட்டியுள்ளது சிங்கள இராணுவம். அவர்கள் அகதிகளாக உறைவிடம் இன்றி அடிப்படை வசதிகளின்றி அலைகிறார்கள். இதன் மூலம் தமிழ மக்களை அச்சுறுத்தி அவர்களது வாழ்வுரிமைப் போராட்டத்தை நசுக்க முனைகிறது சிங்கள அரசு . எனவே தான் இந்தியா இனியும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கக் முடியாது. அந்த மக்களின் எஞ்சியுள்ள வாழ்விடம் அழிக்கப்படும் முன் இந்தியா தலையிட வேண்டும். சிங்களத்திற்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும எனத் திராவிடக்கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி தெரிவித்தார்.

இப்போது சிங்கள இராணுவம் வடக்குக்கிழக்குப் பகுதிகளில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது குறித்து இந்தியா மௌனம் சாதிப்பது வேதனைக்குறிய விடையமாகும்.

அமைதி முயற்சிகளைச் சீர் குலைத்து இராணுவ ரீதியாகத் தமிழர்களை தோற்கடிப்பதை தனது குறிக்கோளாகக் கொண்டு சிங்கள அரசு செயல்படுகிறது. இதற்கு உதவுவது போல இந்திய ராஜதந்திரிகள் கருத்தும் நிலவுகிறது. இவை கண்டிக்கப்பட வேண்டியவை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சிறிலங்கா கேட்கும் ஆயுதங்களை வழங்குவோம் எனக் குறிப்பிட்டிருந்தார். இவையெல்லாம் ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவையாகவே இருக்கின்றன.

எனவே நாங்கள் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக நாம் போராடுவோம். அந்த வகையில் ஈழத்தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஆதரித்தும், இதில் இநதியா தலையிட்டு இவர்களது உரிமைப்பபோராட்டம் வெல்ல பன்முக உதவிகளை வழக்க வேண்டுமென கி.வீரமணி தெரிவித்தார்.

வீரமணி கூறிய கருத்துக்கள் வரவேற்கக் கூடியவையே நீண்ட காலமாகத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்கிவருபவர். எனவே அவரது கருத்துக்கள் பலமிக்கவைதான்.

எனவே கி.வீரமணியின் கருத்துருவாக்கத்திற்கு வலுச்சேர்க்க வேண்டியது தமிழகத்தலைகவர்களின் தார்மீகப் பொறுப்பாகும். தமிழக அரசிற்கும்,தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் மிக நெருங்கியவராகக் காணப்படுகிறார் க.வீரமணி. எனவே தமிழக அசிற்கு இடித்துச் சொல்ல அவரால் முடியும்.கருணாநிதி இந்திய மத்திய அரசிற்கும்,சோனியா காந்திக்கும் நெருக்கமானவர். எனவே ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து தார்மீக ஆதரவை வழங்க இந்திய நடுவன் அரசை வற்புறுத்த கருணாநிதியால் முடியும்.

எனவே மிக நெருக்கடியான போர்ச்சூழலில் ஈழத்தமிழர் சிக்குண்டுள்ளதால் இது குறித்து கவனம் செலுத்துவது தமிழக அரசின் கடமையாகும். இந்த நேரத்தில் திராவிடக்கழகம் நடாத்தும் போராட்டமும் முக்கியத்துவம் பெறுகிறது.

- சங்கதி

தமிழீழம் அமைப்பதாக இருந்தாலும் இந்தியாவின் ஆதரவு இல்லாவிடில் பல சிக்கல்களை ஏற்படும்.

எமக்காகக் குரல் கொடுக்கும் இந்திய உறவுகளுக்கு எமது நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

ஜப்பானுக்கும், பிரிட்டனுக்கும், நார்வேயுக்கும் உள்ள அக்கறை இந்தியாவுக்கு இல்லையென்றால், அது தலைக்குனிவே!

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரி ஜூலை 20 இல் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

அனைத்துத் தமிழர்களும் ஆதரவு தாரீர்!

ஈழத் தமிழர் வாழ்வுரிமை கோரி ஜூலை 20 இல் திராவிடர் கழகம் நடத்த உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கை அதிபராக உள்ள ராஜபக்சே போன்ற ஒரு மோசமான இரட்டை வேடதாரியை உலகின் அரசியல் அரங்கு இதுவரை கண்டதே இல்லை!

சிங்கள வெறித்தனத்தின் மறு உருவாகக் காட்சி அளிக்கும் அதிபர் ராஜபக்சே, எத்தகைய கோரத் தாண்டவத்தை

(சுநபைn டிக கூநசசடிச) கட்டவிழ்த்து விடுகிறார் என்பதற்கு அண்மைக் காலத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்த தமிழர்களை - (அவர்களில் பலரும் அங்கேயே பிறந்து அங்கேயே வாழ்ந்து வரும் குடியுரிமை உள்ள குடிமக்கள்) இராணுவத்தை ஏவிவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றிடும் வெறித்தன நடவடிக்கையில் வெட்கம் சிறிதுமின்றி ஈடுபட்டதே சரியான சாட்சியமாகும்.

இலங்கை உச்சநீதிமன்றமும், அந்நாட்டு நாடாளுமன்றமும் (சிங்களர்களையே பெரிதும் கொண்ட அமைப்புகள்) `இது சட்ட விரோதம், நியாய விரோதம், மனித உரிமைப் பறிப்பு, வாழும் உரிமை தமிழர்களுக்கு உண்டு’ என்று ஓங்கி மண்டையில் அடித்த பிறகுதான், அவர்களில் சிலரை வரவழைத்தது ராஜபக்சே அரசு! இதுகுறித்து பன்னாட்டு அரசுகளும்கூட கவலை தெரிவித்த தோடு, கண்டிக்கவும் தவறவில்லை! இவருடைய தம்பி ஒருவர் தமிழர்களை அழித்தொழிப்பதே தனது ஒரே பணி என்று ``சங்கநாதம்’’ செய்திடத் தவறவில்லை!

ராஜபக்சேயின் ``ஒழிப்பு’’ ஆவேசம்!

நேற்று திரிகோணமலை நகரில் பேசிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தால் ஒழிய, இலங்கையில் அமைதி திரும்பாது என்றும், அதற்காக சூளுரைப்பதாகவும் பேசியுள்ளார். அதேநேரத்தில், நார்வே போன்ற நாடுகளும் விடுதலைப்புலி களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; இப்பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச நாடுகள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் மற்றொரு குரலில் பேசிடவும் கூச்சப்படவில்லை! விடுதலைப்புலிகளுக்கு எதிரான முழக்கம் அல்ல அது. மாறாக, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எதிரான பிரகடனம் அது என்றே விவரமறிந்த எவரும் கருதுவர்!

விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு இல்லையாயின் தமிழினத்தின் நிலை என்ன?

அங்கு விடுதலைப்புலிகளின் பாது காப்பு இல்லாதிருக்குமானால், இந் நேரம் தமிழர்கள் வாழ்ந்த அந்த மண்ணில் தமிழினம் அழிந்து அந்த பூமியில் புல் பூண்டுகள் முளைத்தி ருக்குமே! இந்தியா உள்பட அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், நார்வே, தாய்லாந்து போன்ற பற்பல நாடுகளும் இராணுவ நடவடிக்கை மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது; அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்று சொன்ன அறிவுரையை ராஜபக்சே கேட்கவே தயாரில்லை என்பதுதானே அவரது திரி கோணமலை ``முழக்கத்தின்’’ மூலம் வெட்ட வெளிச்சமாகிறது - இல்லையா?

“The pledge by Mr. Rajapakse is clear indication that there is little scope for either negotiations or peace at the current juncture. As analysts believe that the military and the tigers are geared up for a major showdown in the North in the coming days and weeks”

-The Hindu

தற்போதைய நிலையில் பேச்சுவார்த்தைக்கோ அல்லது சமாதானத்திற்கோ சிறிதும் இடமில்லை என்பதையே ராஜபக்சேயின் முழக்கம் தெளிவாகக் காட்டுகிறது. ஆய்வாளர்கள் கருதுகிறபடி, ஓர் இறுதிப் போராட்டத்துக்கு இலங்கை ராணு வமும் புலிகளும் தயாராகி வருகின்றனர். நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறதே! தடுத்து நிறுத்த முன்வரவேண்டாமா? இந்திய அரசு வேடிக்கை பார்க்கலாமா?

இந்திய அரசு இதனை கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? அப்படி இருந்தாலோ அல்லது இலங்கை சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளுக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ உதவினாலோ அது தமிழின அழிப்புக்குத் துணை போனதாக ஆகிவிடாதா?

சரித்திரப் பழி இந்திய அரசு மீது விழாதா? இந்திய அரசு என்பது தற்போது தமிழ்நாட்டுக் கட்சிகளின் பெருத்த ஆதரவினால் உள்ள அரசு என்பதால் தி.மு.க., காங்கிரசு உள்பட பல கட்சிகளும் அந்தப் பழியை பங்கிட்டுக் கொள்ளவேண்டிய தேவையற்ற ஒரு நிலைக்கு ஆளாகவேண்டியிருக்கும். இது தேவையா?

ஒரு நார்வேக்கும், ஒரு பிரிட்டனுக்கும், ஒரு ஜப்பானுக்கும் இருக்கும் மனிதநேயக் கடமை உணர்வு பிறர் துன்பம் கண்டு இரங்கும் (நுஅயீயவால) உணர்வு இந்தியத் திருநாட்டிற்கு இல்லை என்றால், அதைவிட வெட்கக்கேடு வேறு ஏது? அது நமக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தாதா?

ஜூலை 20 இல் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

அங்கே நடப்பது வெறும் கொரில்லா யுத்தம் அல்ல; வான்வழி, தரைவழி, கடல் வழி நடக்கும் தமிழர் தம் வாழ்வுரிமைக்கான தமிழர் தன்னாட்சி உரிமைப் போர்! இந்த சுவர் எழுத்தைக் காண மறுத்து தலையைத் திருப்பிக் கொண்டால் பிரச்சினைக்குத் தீர்வு வந்துவிடுமா? இதை மத்தியில் ஆளும் கூட்டணியாக உள்ள அத்துணைக் கட்சித் தலைவர்களும் மனதில் கொள்ளவேண்டும். இதனை வலியுறுத்தி, வரும் 20 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் - மாவட்டத் தலைநகர்களில் ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் இலங்கை அரசினை இந்திய அரசு உள்பட பன்னாட்டு அரசுகளும் தடுத்து நிறுத்தி, மனிதநேயப் பணியில் ஈடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்திட திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தாரீர்! அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும், தமிழ் இன உணர்வாளர்களும் இதில் பங்கேற்கத் தவறக்கூடாது. சென்னையில் எனது (கி. வீரமணி) தலைமையில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்டங்களில் இதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் இவ்வார்ப்பாட்டம் நடைபெறும்.

வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பிறந்தவர்களை மட்டுமல்ல; உலகெங்கும் உள்ள மனிதாபிமானிகளைப் பார்த்துத்தான் கேட்கிறோம்.

தமிழ்நாட்டின் கடற்கரையிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது? அறிவியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மனிதத்தின் மதிப்பீடுகளைப்பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உலகெங்கும் மனித உரிமை அமைப்புகள் இருக்கின்றன. அய்.நா.,வின் பிரகடனங்கள் எல்லாம் பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றன.

இவற்றையெல்லாம் கேலி செய்யும் வகையில் இலங்கையில் ஒரு பாசிச ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறதே, இதற்குப் பதில் என்ன? இதற்கொரு முடிவுதான் என்ன?

பன்னாட்டு உதவிக் குழுவினர் 17 பேர்கள் இலங்கை இராணு வத்தால் படுகொலை செய்யப்பட்டனரே, அப்பொழுதாவது உலகம் விழித்துக் கொண்டு இருக்கவேண்டாமா? இலங்கை அரசுக்குப் பொருளாதார நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டாமா?

1983 இல் தொடங்கி 2007 ஆம் ஆண்டுவரையிலான இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனரே, இது சர்வதேசப் பிரச்சினையின் கீழ்வராதா? தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவைப் பறிகொடுத்துவிட்டு சிங்களவர்களிடம் உதைபடுவதுதான் தமிழக மீனவர்களின் கதியா?

யாழ் வளைகுடாவுக்குச் செல்லும் முக்கிய சாலையான ஏ-9 பாதை இழுத்து மூடப்பட்டதே, இதன் காரணமாக அங்கு வாழும் தமிழர்கள் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடிக் கொண்டு இருக்கின்றனரே, உயிர் காக்கும் மருந்துகளைக் கூடப் பெற முடியாத துயரக் கடலில் தள்ளப்பட்டுள்ளனரே, இது மனித உரிமைப் பிரகடனங்களுக்கு முரணானது அல்லவா? யாழ் பகுதியில் உண்மையான நிலைமை என்ன?

ஒரு மூட்டை சர்க்கரையின் விலை ரூ.10 ஆயிரமாம்; ஒரு கிலோ அரிசியின் விலை ரூபாய் நூற்றைம்பதாம்!

2005 நவம்பர் 18 இல் மகிந்தா ராஜபக்சே இலங்கையின் அதிபராக வந்த பிறகு இந்த இருபது மாதங்களில் மட்டும் நான்காயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு மூன்று லட்சம் தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாகியுள்ள னர். சொந்த நாட்டிலேயே அகதிகள் என்ற கொடுமை ஈழத் தமிழர்களைத் தவிர வேறு யாருக்கு ஏற்பட்டுள்ளது?

1987 இல் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் சுக்கு நூறாகக் கிழித்தெறியப்பட்டு விட்டது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணம் என்பது தமிழர்களுக்கே உரித்தான மரபு வழிப்பட்ட மண்ணாகும். அந்த இணைப்பை ராஜீவ் காந்தி -ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உறுதி செய்தது. ஆனால், இன்றைய அதிபர் என்ன செய்கிறார்? நீதி மன்றத்தின் மூலமாக அந்த இணைப்பை சட்ட விரோதம் என்று ஆக்கிவிட்டார்.

இதற்குப் பிறகும்கூட இந்தியா `தீயவற்றைப் பார்க்காதே!’ என்று காந்தியார் குறிப்பிட்ட குரங்குபோல கண்களை மூடிக்கொண்டு கிடக்கிறது. மனிதப் படுகொலை செய்வதற்கு சீனாவும், பாகி°தானும் இலங்கை சிங்கள அரசுக்கு ஆயுதங்களைக் கொடுக்கிறது என்றால், இந்தியாவோ தன் பங்குக்கு இந்தியப் போர்க் கப்பலை நன்கொடையாக வழங்குகிறது. இலங்கை இராணுவத்துக்கு இந்திய மண்ணில் போர்ப் பயிற்சியும் தருகிறது.

செஞ்சோலையில் மழலைகளைச் சுட்டுப் பொசுக்கியது. தமிழின மாணவர்களின் கல்வி என்பது முற்றிலும் துடைத்து எறியப்பட்டு விட்டது. ஒரு பல்கலைக் கழகத் துணைவேந்தரே கடத்தப்பட்டு விட்டார். பேராசிரியர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களின் பல்கலைக் கழகத்தை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இணைத்து சிங்கள மயமாக்கிவிட்டனர்.

உலக நாடுகளின் கண்கள் கொஞ்சம் திறக்க ஆரம்பித்தன. வாகரையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடுத்ததற்காக இலங்கை அரசை அய்.நா., மன்றம் கண்டித்துள்ளது.

வாசிங்டனில் கூடிய இலங்கை சமாதானத்துக்கான பன்னாட்டுக் குழு யாழ்குடாவைத் துண்டிக்கும் ஏ--9 பாதையைத் திறக்கவேண்டும் என்று கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண இணைப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நிராகரித்துள்ளது. இலங்கை இராணுவத்தில் சிறுவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்று அய்.நா.,வின் சிறப்புப் பிரதிநிதி ஆலன் ராக் அம்பலப்படுத்தி விட்டார்.

இலங்கை அரசுக்கு ஒரு பன்னாட்டு நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தியா நியாயமாக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்குமேயானால், நல்லதோர் விளைவுகள் ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு.

இந்தக் கருத்தோட்டத்தின் அடிப்படையில், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை முன்னிறுத்தி திராவிடர் கழகம் ஜூலை 20 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தை நடத்திட உள்ளது. தமிழர்கள் கட்சிகளை மறந்து ஆதரவுக் கரங்களை உயர்த்துவார்களாக!

சிங்களர் கொடுமைகள்: அல்லல்படும் ஈழத் தமிழர்கள்

- ஒரு கண்ணோட்டம்

சிறீலங்கா எனப்படும் இலங்கைத் தீவில் இரு மொழி பேசும் இரண்டு இனங்கள் உண்டு - ஒன்று சிங்களம் பேசும் சிங்கள இனம்; இன்னொன்று தமிழ் பேசும் தமிழ் இனம். சிங்களவர் பெரும்பாலும் பவுத்தர் கள்; கிறித்தவரும், இசுலாமியரும் சிலர் உண்டு. தமிழர்களில் சைவர், இசுலாமியர், கிறித்தவர் ஆகியோர் இருக்கின்றனர்.

வட-கிழக்குப் பகுதி

சிங்கள மொழியும் பவுத்தமும் மேலா திக்கம் செலுத்த வேண்டும் என 1948 முதல் திட்டமிட்டுச் செயலாற்றும் சிங்கள இனம் இலங்கையில் பெரும்பான்மை யாகும். அந் நாட்டு அரசாங்கத்தின் அறிவிப்புப்படி தமிழர்கள் 26 விழுக்காடு உள்ளனர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் இலங்கைத் தீவின் தொன்மைக் குடிகள் ஆவர்.

வாழிடம் பறிப்பு

இலங்கை 1948 இல் விடுதலை அடைந்த பின்பு தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களப் பெரும்பான்மை அரசு, திட்ட மிட்டு, அரசாங்க உதவியுடன் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற் றுகிறது. எடுத்துக் காட்டாக அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு முதலிய பகுதிகளில் பல இடங்கள் சிங்களக் குடியேற்றத்தால் பெரும்பான்மையாக அவர்கள் வாழும் இடங்கள் ஆகிவிட்டன. தங்களுடைய தாயகமான வட - கிழக்கு இலங்கையிலேயே தமிழர்களின் வாழிடம் இவ்வாறு பறிக்கப்படுகிறது.

மொழி ஆதிக்கம்

சிங்கள மொழியை ஆதிக்க மொழி யாக்கி, அரசு அலுவல்கள், மற்றும் நிர் வாகத்தில் சிங்களவர் மேலாதிக்கம் செலுத் தும் வகையில், சாலமன் பண்டாரநாயகா பிரதமராக இருந்த பொழுது 1956 இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டம் நிறைவேறியது.

நிறத்தைக் கொண்டு தென் ஆப்பிரிக் காவில் இனவேற்றுமை ஆட்சி நடந்தது போல், மொழியை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களைச் சொந்த நாட்டி லேயே இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக் கும் போக்கிற்குத் தமிழர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துக் கிளர்ச்சிகள் செய்தனர். அடக்கு முறையாலும் வன் முறையாலும் சிங்களவர்கள் தமிழரின் அறக் கிளர்ச்சியை ஒடுக்க முற்பட்ட பொழுது அது மேலும் தீவிரம் அடைந்தது.

செல்லாத ஒப்பந்தங்கள்

விடுதலை பெற்ற நாட்டில், தாயக உரிமை, மற்றும் மொழி உரிமை இழந்து, இரண்டாந்தர நிலைக்குத் தள்ளப்பட்டு, காலப் போக்கில் அடிமைகளாவதை இலங்கைத் தமிழர்கள் எந்த விலை கொடுத்தேனும் தடுக்க முடிவு செய்தனர்.

இந் நிலையில் 1957 இல் பண்டார நாயகே - செல்வநாயகம் ஒப்பந்தம் ஏற்பட் டது. ஆனால் அது நடை முறைக்கு வர வில்லை. எதிர்க் கட்சியினர் சிங்கள வெறியுணர்வைக் காட்டி அதைத் தடுத்து விட்டனர். அதை அடுத்து, தமிழர் நலனுக்குச் சிறிதளவேனும் உதவக்கூடியே அனைத்து ஒப்பந்தங்களையும் சிங்கள வெறியர்கள் முறியடித்தனர், செல்லாதவை ஆக்கினர், கேலிக் கூத்து ஆக்கினர்.

1987 இல் இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம் என்பதை ராஜீவ் காந்தி - ஜெயவர்தனெ ஆகியோர் செய்தனர். அதில் தமிழுக்கு உரிய இடத்தை, அதற்குப் பின்பு வந்த எந்த அரசும் இதுவரை தரவில்லை.

அத்துடன், அந்த ஒப்பந்தப்படி, வடக்கு-கிழக்குப் பகதிகள் ஒரே மாநிலமாகி, தமி ழர்களின் தாயகம் ஒன்றாக இருப்பதையும், மகிந்தா ராஜபக்செ அரசு புறக்கணித்து விட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல் படுத்துவதாகக் கூறி வடக்கு மாநிலத்தையும், கிழக்கு மாநிலத்தையும் பிரித்து விட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து, தகுந்த சட்டம் ஒன்றை இயற்றி, இந்தியா வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற சிங்கள அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப் பொழுது வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு விட்டன; இடையில் உள்ள திரிகோண மலையைச் சிங்களப் பெரும்பான்மைப் பகுதியாக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தனிநாடு ஏன்?

தமிழ் இன உரிமையைக் காப்பாற்றக் கூடிய கூட்டாட்சி முறை மறுக்கப்பட் டது; அதற்கான அறக்கிளர்ச்சி வன்முறை யால் ஒடுக்கப்பட்டது. இந் நிலையில்தான் தந்தை செல்வாவின் தலைமையில், தனி நாடு ஒன்றுதான் தமிழர் பாதுகாப்புக்கான ஒரே மாற்று என்ற முடிவுக்கு வர நேரிட் டது.

இனக் கொலை

சிங்களவரின் இனக்கொலை நடவடிக் கைகள் 1983 ஜூலையில் உச்ச கட்டத்தை எட்டியது என்பது, உலகு அறிந்த ஒரு கொடிய நிகழ்வு. உயிருக்கும், உடைமைக் கும் பாதுகாப்பு இல்லை. சிங்களப் படையும் காவலர்களும் எந்த நிலையிலும் தமிழ்க் குடியிருப்புகளைத் தாக்குவது தொடர்கிறது. பெண்களின் உடல் உரி மையைப் பறித்துச் சித்தரவதை செய்வதும், குடியிருக்கும் மக்களை வன்முறையால் விரட்டுவதும் சிங்கள வெறியர்களுக்குக் குறியாக இருக்கிறது.

போராளிகள்

இவ்வாறெல்லாம் வாழ்வுரிமையை இழந்து தவிக்கும் தமிழின மக்களுக்குப் பாதுகாப்பாகத்தான் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் இலங்கையில் போராடிக் கொண்டிருக்கின்றனர். போராட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 60 ஆயிரம் மக்க ளுக்கு மேல் உயிரிழந்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் போராட்டம் அதிகாரத்தைப் பற்ற வேண்டும், அதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நடப்பது அல்ல. ஈழத் தமிழினத்தின் தாயக உரிமை, மொழிஉரிமை, தன்னாட்சி, ஆகியவற்றைப் பெற்று, உயிருக்கும் உடை மைக்கும் மானத்திற்கும் பாதுகாப்புப் பெறுவதற்கான ஒரு தேசிய இனப்

போராட்டம் ஆகும்.

இந்திய அரசு

இந்த நியாயமான போராட்டத்தில், இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு அர ணாக நிற்காமை வருத்தத்திற்கு உரியது. இந்திய அரசு அதிகாரிகள், வெளியுறவு முறையிலும் சரி, ராணுவ முறையிலும் சரி, சிங்களவரின் தமிழ் விரோதப் போக்கிற்குத் துணை போவதைக் காண வேதனைப் படுகிறோம்.

சமாதான முயற்சி

ஆகையால்தான், 2002 இல் நார்வே நாட்டின் முயற்சியால் போர்நிறுத்த ஒப் பந்தம் ஒன்று ஏற்பட்டு, சமாதானப் பேச்சுகள் மூலம் அரசியல் தீர்வுக்கான காரி யங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது, சிங்கள வெறியர்கள் எப்பொழுதும் போல் அதையும் கெடுக்கத் துணிந்து அதில் வெற்றியும் பெற்றனர்.

ராஜபக்செ ஆட்சியில்...

அய்க்கிய மக்களின் சுதந்திர அணி (யு.பி.எஃப்.ஏ.) என்ற ஒன்றைத் தன்னுடைய சிறீலங்கா சுதந்திராக் கட்சியின் தலைமை யில் உருவாக்கி, 2005 நவம்பரில், மகிந்தா ராஜபக்செ ஆட்சிக்கு வந்த பின்பு தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் மிகுதியாகிவிட்டன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து சுமார் மூன்று லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள் நாட்டிலேயே ஏதிலிகளாக வாழ்கிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் இலங்கைத் தமிழர்கள், இராமேசுவரம் வழியாக 19,445 பேர் தமிழ் நாட்டிற்கு ஏதிலிகளாக (அகதிகளாக) வந்துள்ளனர்.

உலகில் எங்கும் இல்லாத வகையில், சொந்த நாட்டு மக்களையே வானத்தில் இருந்து குண்டுகள் வீசி சிங்கள விமானப் படை கொல்கிறது. செஞ்சோலை அனா தைப் பள்ளியில் பயின்ற அறுபதுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கொல் லப்பட்டது அக் கொடுமையின் உச்ச கட்டமாகும்.

தமிழர்களின் உணவுப் பொருள் போக்கு வரத்திற்கு உயிர் நிலையாகத் திகழும் ஏ-9 நெடுஞ்சாலையைத் திறக்கச் சிங்கள அரசு தொடர்ந்து மறுப்பதால், அத்தியாவசியத் தேவைப் பொருள்களைப் பெறுவதற்குத் தமிழர்கள் அல்லல் படுகிறார்கள்.

நோயுற்றும் காயம் அடைந்தும் அவதி யுறும் ஈழ மக்களுக்குத் தமிழகத்தில் இருந்து மருந்து உதவி அனுப்ப முடியாத அவலம் நீடிக்கிறது. இரக்கமற்ற இந்நிலை தொடர்வது குறித்து இந்திய அரசு ஏன் பாராமுகமாக இருக்கிறது எனத் தெரிய வில்லை.

மனித உரிமை மீறல்களைச் சிங்கள அரசு தொடர்ந்து செய்கிறது. அதை அய்க்கிய நாட்டுச் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனால் அதற்கு 2007 ஜூன் 12 இல் பதில் அளித்த, சிறீலங்கா அதிபரின் தம்பியும், பாதுகாப்புச் செயலாளருமான, கோட பாய ராஜபக்செ, அய்.நா. அமைப்பில் விடுதலைப் புலிகள் ஊடுருவியதால்தான், அது சிங்கள அரசின் மீது குறை காண் கிறது என்ற பொய்யைக் கூசாமல் கூறினார். அதற்கு மறுநாளே, சிறீலங்காவில் மனித நேயப் பணிகளை ஒருங்கிணைக்கும் அய்.நா. அலுவலர் ஃபிரடெரிக் லையான்° அதை முற்றிலும் மறுத்தார். கோடபாய ராஜபக்செயின் கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறினார்.

இவ்வளவிற்கும் பின்பு இலங்கையின் தலைநகரமான கொழும்பில் வேலை தேடுவதற்காகவும் சிகிச்சை பெறுவதற் காகவும் தங்கியிருந்த தமிழர்களைக் கட்டாயப் படுத்தி வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குச் சிங்கள அரசு கடத்திக் கொண்டு சென்றது. அந் நாட்டின் உச்ச நீதி மன்றமே அதைக் கண்டித்துத் தீர்ப்புக் கூறியது. இருப்பினும், சிங்கள அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

கூட்டாட்சி, தன்னாட்சி, தமிழர் தாயகம் ஆகியனவற்றைப் புறக்கணித்து, ஒற்றை ஆட்சி முறையையே இன்னும் சிங்கள வெறியர்கள் வற்புறுத்துகிறார்கள். அவர்களுக்குத் துணை போகும் ராஜபக்செ யின் ஆட்சியை இந்திய அரசு தட்டிக் கேட் காதது ஏன்? தமிழர்களின் நியாயத்தை ஆதரிக்காதது ஏன்? அவர்களின் வாழ்வுரி மைக்குப் பாதுகாப்புத் தர முன் வராதது ஏன்? இந்த “ஏன்” என்பவைகளுக்கு விடை காணவே ஜூலை 20 இல் ஆர்ப்பாட்டம்!

http://www.tamilnadutalk.com/portal/index....mp;#entry147494

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

1. பறிக்காதே, பறிக்காதே!

சிங்கள அரசே, சிங்கள அரசே!

பறிக்காதே, பறிக்காதே!

வாழ்வுரிமையைப் பறிக்காதே - தமிழர்

வாழ்வுரிமையைப் பறிக்காதே!

2. விரட்டாதே விரட்டாதே

சிங்கள அரசே சிங்கள அரசே!

விரட்டாதே, விரட்டாதே!

சொந்த மண்ணிலிருந்து தமிழர்களை

விரட்டாதே, விரட்டாதே!

3. அகதிகளா, அகதிகளா?

தமிழர்கள் அகதிகளா?

சொந்த மண்ணிலேயே

அகதிகளா, அகதிகளா?

ஈழத் தமிழர்கள் அகதிகளா?

4. சிங்கள அரசே, சிங்கள அரசே

திறந்து விடு, திறந்து விடு!

யாழ்ப்பாணத்தின் பாதையைத்

திறந்து விடு, திறந்து விடு!

சாகடிக்காதே, சாகடிக்காதே

தமிழர்களை சாகடிக்காதே, சாகடிக்காதே!

பட்டினிப் போட்டு, பட்டினிப் போட்டு

சாகடிக்காதே, சாகடிக்காதே!

5. சிங்கள அரசே சிங்கள அரசே

விரட்டாதே விரட்டாதே

தமிழர்களை விரட்டாதே!

காடுகளுக்கு விரட்டாதே!

காட்டுவிலங்காண்டியாய்

நடக்காதே, நடக்காதே!

6. பறிக்காதே பறிக்காதே

தமிழர் உடைமைகளைப் பறிக்காதே!

குடியேற்றாதே குடியேற்றாதே

சிங்களவர்களைக் குடியேற்றாதே குடியேற்றாதே

தமிழர் வாழும் பூமியில்

குடியேற்றாதே, குடியேற்றாதே

சிங்களவர்களைக் குடியேற்றாதே!

7. கொல்லாதே, கொல்லாதே

ஈழத் தமிழர்களைக் கொல்லாதே!

சிங்கள அரசே, சிங்கள அரசே

கொல்லாதே, கொல்லாதே

ஈழத் தமிழர்களைக் கொல்லாதே!

8. தடுத்திடு, தடுத்திடு

மத்திய அரசே தடுத்திடு!

ஈழத் தமிழர் படுகொலையைத்

தடுத்திடு! தடுத்திடு!!

இந்திய அரசே இந்திய அரசே

தலையிடு, தலையிடு!

உடனடியாகத் தலையிடு!

9. குண்டு வீச்சா, குண்டு வீச்சா?

அகதி முகாம்களிலும் குண்டு வீச்சா?

சின்னஞ் சிறார்கள் மீதும் குண்டு வீச்சா?

குரல் கொடு, குரல் கொடு

மத்திய அரசே, குரல் கொடு!

மனிதாபிமானத்தோடு குரல் கொடு!

10. இந்திய - இலங்கை ஒப்பந்தம்

என்னாச்சு, என்னாச்சு?

இணைப்பு ஒப்பந்தம் ரத்தாச்சு!

இந்திய அரசே இந்திய அரசே

என்ன செய்கிறாய், என்ன செய்கிறாய்?

11. தன்னாட்சி உரிமை என்னாச்சு?

தன்னாட்சி உரிமை என்னாச்சு?

ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை

என்னாச்சு, என்னாச்சு?

இந்திய அரசே, இந்திய அரசே

குரல் கொடு! குரல் கொடு!!

12. தமிழக அரசே, தமிழக அரசே

வற்புறுத்து வற்புறுத்து!

இந்திய அரசை வற்புறுத்து!

ஈழத் தமிழர் வாழ்வுரிமை காக்க

வற்புறுத்து, வற்புறுத்து

இந்திய அரசை வற்புறுத்து!

13. தமிழா தமிழா ஒன்றுபடு

தமிழர் பகையை வென்றுவிடு!

14. குரல் கொடுப்போம் குரல் கொடுப்போம்

ஈழத் தமிழருக்காகக்

குரல் கொடுப்போம்; குரல் கொடுப்போம்!

15. தமிழா தமிழா இனவுணர்வு கொள்!

தமிழா தமிழா தமிழனாக இரு!

16. போராடுவோம், போராடுவோம்!

வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!

17. ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம்

தமிழினம் காக்க ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம்!

18. போராடுவோம், போராடுவோம்

மனித உரிமைக்காக மனித உரிமைக்காகப்

போராடுவோம், போராடுவோம்

போராடுவோம், போராடுவோம்!

மனித நேயத்துக்காக, மனித நேயத்துக்காகப்

போராடுவோம், போராடுவோம்!

போராடுவோம், போராடுவோம்

இனவுரிமைக்காக, இனவுரிமைக்காகப்

போராடுவோம், போராடுவோம்!

வெற்றி கிட்டும்வரை, வெற்றி கிட்டும்வரை

போராடுவோம், போராடுவோம்!

திராவிடர் கழகம் - ஜூலை 20, 2007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.