Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலை என்ற சொல்லுக்கு சரியான ஒத்தசொற்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

main-qimg-5b04e6027e6548a1e4a78be801b33502

 

'மல்’ என்றால் வலிமை எனப்பொருள். வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி மலை எனப்பட்டது.

 

  • மலையையும் மலை சார்ந்த இடத்தையும் குறிக்குங் திணை-குறிஞ்சித் திணை
  1. மிக உயர்ந்த மலை - மிசை/ விண்டு - very high mountain
    1. விண்டு - விண்ணளாவிய மலை
  2. நாட்டின் குறுக்காக உள்ள மலை - விலங்கல் - blocking mountain
  3. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காகப் பாறைகள் அமைந்திருக்கும் மலை - அடுக்கல்- mountain as stratified.
  4. மூங்கிற்காடுகள் உள்ள மலை -வரை
  5. மிக நீண்ட மலைத்தொடர் - நெடுவரை (இங்கு வரை என்றால் பொதுமலை)
  6. காடுகள் அடர்ந்த மலை - இறும்பு - foothill
  7. மரங்கள் அற்ற, ஓரளவு சிறிய புதர்களைக் கொண்ட மலை - பிறங்கல்
  8. பனியால்(dew) மூடப்பட்டிருக்கும் மலை- பனிமலை
  9. சிந்துவால(snow) உறைந்து மூடப்பட்டிருக்கும் மலை - சிந்துமலை , இமமலை.
  10. நீரிடைப்பட்ட மலை - கூபிகை
  11. மணல் குன்று - தேரி
  12. நெருப்பைக் கக்கும் மலை- எரிமலை -volcano
  13. கதிரவன் உதிக்கும் திசையில் உள்ள மலை- உதயகிரி
  14. பெரும் பாறைகளாலான மலை - கன்மலை - rocky mountain
  15. காரீயம் நிறைந்த மலை - கடுமலை -graphite mountain
  16. zinc ஐக் கொண்ட மலை - மாசற்றமலை/ நாகமலை

என மலைகளை வகைப்படுத்திய அறிவியல் சிறப்பு, உலகில் இன்று கூட வேறு எங்கும் இல்லை என நாம் பெருமையாகக் கூறலாம்.


மலை என்ற சொல்லுக்கான ஒத்தசொற்கள் : →

  1. அகமம்
  2. அத்தி
  3. அரி
  4. இரவி
  5. இலும்பு
  6. இறும்பூது
  7. ஓதி
  8. கந்தரம்
  9. கல்லகம்
  10. கவடு
  11. காண்டம்
  12. கிரி
  13. குதரம்
  14. குத்திரம்
  15. குறிஞ்சி
  16. கோ
  17. கோட்டை
  18. கோத்திரை
  19. சக்கரம்
  20. சிகி
  21. சிலை
  22. சேலம்
  23. தடம்
  24. தணி
  25. தரணி
  26. தாரணி
  27. தரம்
  28. தராதரம்
  29. தானி
  30. துங்கம்
  31. துடரி
  32. திகிரி
  33. நகம்
  34. நவிரம்
  35. நாகம்
  36. பதலை
  37. பளகம்
  38. பாதவம்
  39. பீலி
  40. புறவிடன்
  41. பொகுட்டு
  42. பொங்கர்
  43. போதி
  44. மன்
  45. மாதிரம்
  46. மேகலை
  47. மேதரம்
  48. வல்லரண்
  49. வாரி
  50. விடம்
  51. விடரகம்
  52. விடரி
  53. வீரம்/வேரம்

 


  • மலை செறிந்தவூர் - கேடம், கேடகம்
    • மலையும் ஆறும் சூழ்ந்தவூர் - கருவடம்

 

 

மேலும் பார்க்க :

உசாத்துணை:

தொகுப்பு & வெளியீடு :

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

மலை என்னும் சொல்லுக்கு எதற்காக இத்தனை ஒத்த சொற்கள்??????

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மலை என்னும் சொல்லுக்கு எதற்காக இத்தனை ஒத்த சொற்கள்??????

சரிஞ்சாலும் முட்டு குடுக்கத்தான். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மலை என்னும் சொல்லுக்கு எதற்காக இத்தனை ஒத்த சொற்கள்??????

அகராதிகள் இருக்கிறது...
மேலும் இவற்றிற்கென்று விதப்பான பொருள்களும் இருந்திருக்கும்(மலையின் குறிப்பிட்டப்பகுதியினையோ அல்லது மலையின் ஒரு வகையினையோ!). ஆனால் அவை வழக்கொழிந்து இன்று இவை மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

மலை என்பதற்கு "அசலை"  அல்லது "அசலம்" என்றும் பெயர் உண்டு என அறிந்திருக்கிறேன் உண்மையா?  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vanangaamudi said:

மலை என்பதற்கு "அசலை"  அல்லது "அசலம்" என்றும் பெயர் உண்டு என அறிந்திருக்கிறேன் உண்மையா?  

என்றுதான் கூகிள் சேர்ச் இல் சொல்லுது. 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
13 hours ago, vanangaamudi said:

மலை என்பதற்கு "அசலை"  அல்லது "அசலம்" என்றும் பெயர் உண்டு என அறிந்திருக்கிறேன் உண்மையா?  

ஓம். ஆனால் அந்த அ என்ற முன்னொட்டு தமிழில் இருந்து சமற்கிருதம் சென்றது என நல்லூர் ஞானப்பிரகாச அடிகளார் நிறுவியுள்ளார். 

அல் --> அ

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சிறு வயதில் தமிழ் ஆசிரியர் பாட நேரத்தில் சொன்ன ஒரு விடயம் நினைவுக்கு வந்தது அதனால் கேட்டேன்.
இந்திய தமிழ் அறிஞர் வேதாசலம் என்று பேற்றோர் இட்ட தனது இயற்பெயரை மறைமலை (வேதம்=மறை, அசலம் = மலை)என மாற்றி வைத்துக்கொண்டார்.
பிற்காலத்தில் மறைமலை அடிகளார் என அறியப்பட்ட இவர் வடமொழியும் ஆங்கிலமும் நன்கு கற்றவர். தமிழை வேற்று மொழிக்கலப்பின்றி எழுதவும் கற்கவும் மக்களை ஊக்கிவித்தவர். இவரும் நல்லூர் ஞானபிரகாச அடிகளாரும் சமகாலத்தினரே.

  • கருத்துக்கள உறவுகள்

சலம் = நீர் ....அசைவது ........அசலம் = அசையாமல் அப்படியே இருப்பது........! 

அருணாசலம் = அருணம் என்றால் சிகப்பு.....அசலம் என்றால் மலை.......!

அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை - Arunachaleswarar Temple,  Thiruvannamalai

அருணாசலேஸ்வரர் கோவில். திருவண்ணாமலை.......!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.