Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிறிஸ்துமஸ் இரவில் துப்பாக்கிச் சூடு, 4 காவற்துறையினர் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்துமஸ் இரவில் துப்பாக்கிச் சூடு, 4 காவற்துறையினர் பலி!

December 25, 2021
 

spacer.png

அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு காவற்துறையினர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (24.12.21) இரவு நடைபெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்துப்பாக்கிச் சூட்டினை நடத்திய காவற்துறை உத்தியோகத்தர் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவற்துறை சார்ஜன் ஒருவர் வீடு செல்வதற்கு காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு விடுமுறை வழங்கததால் ஆத்திரமடைந்த காவற்துறை சார்ஜன் சம்பவதினமான நேற்று (24) இரவு 11.30 மணியளவில் காவல் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது காவற்தறை சார்ஜன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட காவற்துறையினர் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 காவற்துறையினர் உயிரிழந்ததுடன் படுகாயமடைந்த காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மேலும், காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://globaltamilnews.net/2021/170992

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை திருக்கோவில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி: என்ன நடந்தது அங்கே?

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
25 டிசம்பர் 2021, 06:32 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

தாக்குதலில் இறந்த போலீஸ்காரர் காதர் அணிந்திருந்த சீருடை.

 

படக்குறிப்பு,

தாக்குதலில் இறந்த போலீஸ்காரர் காதர் அணிந்திருந்த சீருடை.

இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீசார் உயிரிழந்தனர்.

 

குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த - போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

 

நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

 

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் போலீசார் மூவர் உயிரிழந்தனர். காயமுற்று வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரு போலீஸ் உத்தியோகத்தர் பின்னர் உயிரிழந்தார்.

இதேவேளை, திருக்கோவில் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம மற்றும் போலீஸ் உத்தியோகத்தர் இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

என்ன நடந்தது?

 

திருக்கோவில் போலீஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றி வந்த சார்ஜன்ட் தரத்திலுள்ள குமார எனும் போலீஸ் உத்தியோகத்தரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பிபிசி தமிழிடம் அங்குள்ள போலீசார் தெரிவித்தனர்.

 

போலீஸ் வண்டி

நேற்று இரவு சம்பவம் நடந்தபோது போலீஸ் நிலையத்தில் சிலரே கடமையில் இருந்ததாகவும், சார்ஜன்ட் குமார என்பவர் - போலீஸ் நிலையத்தில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியதாகவும் அங்குள்ள போலீஸ் உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர்.

 

துப்பாக்கிச் சூடு நடந்தபோது நிலையப் பொறுப்பதிகாரி அங்கு இருக்கவில்லை என்றும், இவ்வாறான ஒரு தாக்குதல் நடப்பதை அறிந்து கொண்ட அவர், தனது ஜீப் வண்டியில் ஓட்டுநருடன் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது, அவர் பயணித்த வண்டியின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிசிசியிடம் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

 

உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர்

 

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் மூவர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது. போலீஸ் உத்தியோகத்தர்களான பிரபுத்த, நவீணன் ஆகியோரும் போலீஸ் ஓட்டுநர் துஷார என்பவரும் இவ்வாறு பலியாகினர்.

 

பின்னர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட காதர் எனும் போலீஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்தார்.

 

உள் நுழையத் தடை

இதேவேளை போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம, போலீஸ் ஓட்டுநர் குமார் மற்றும் சார்ஜன்ட் கந்தசாமி ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிசிக்சை பெற்ற வருகின்றனர்.

 

சூடு நடத்தியவர் தப்பினார்

 

மேற்படி தாக்குதலை நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர், இந்தத் தாக்குதலை நடத்திய பின்னர், போலீஸ் நிலையத்திலிருந்த இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 19 துப்பாக்கி ரவைக் கூடுகளை எடுத்துக் கொண்டு, தனது சொந்த வண்டியில் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தப்பித்தவர் மொனராகல மாவட்டதிலுள்ள எதிமல பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். எதிமல அவரின் சொந்த ஊர் என்றும், அங்குதான் அவரின் வீடு அமைந்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

 

ரி56 துப்பாக்கிகள் இரண்டு, தோட்டா ரவைக் கூடுகள் 19 - ஆகியவற்றுடன் மேற்படி நபர் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கான காரணம் என்ன?

 

திருக்கோவில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூடு நடத்திய குமார என்பவர், தனக்கு விடுமுறை வழங்குமாறு நிலையப் பொறுப்பதிகாரியிடம் கோரியதாகவும் அதனை பொறுப்பதிகாரி மறுத்து விட்டதாகவும் - அதனால் அத்திரமடைந்து அவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்றும், திருக்கோவில் போலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் போலீஸ் உத்தியேகாத்தர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.தாக்குதலை மேற்கொண்டவர் ஏற்கனவே விபத்தொன்றில் பாதிக்கப்பட்டவர் என்பதால், மருத்துவ ரீதியாக அவருக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அதற்கிணங்க கடமை நேரத்தில் சீருடை அணியாமலிருப்பதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது."நேற்றிரவு குமாரவுக்கு பணி இல்லை. பிரதான வாயிற் கதவடியில் போலீஸ் சார்ஜன்ட் கந்தசாமி கடமையில் இருந்தார். இதன்போது அங்கு வந்த குமார, கடமையிலிருந்த சார்ஜன்ட் கந்தசாமியை தள்ளிவிட்டு, அவரின் துப்பாக்கியைப் பறித்தெடுத்து, அந்தத் துப்பாக்கியால்தான் தாக்குதலை நடத்தியுள்ளார்" எனவும் அந்த போலீஸ் உத்தியோகத்தர் பிபிசியிடம் கூறினார்."அவர் மதுபானம் பாவிப்பதில்லை. ஆனால் உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர் போலதான் காணப்படுவார்" என்றும் மேற்படி போலீஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் துப்பாப்பிக் சூட்டுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்!

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்திமலை பொலிஸ் நிலையத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சரணடைந்ததை தொடர்ந்து, அவர் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் இன்று மாலை ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் இருவரும் சாரதி கான்ஸ்டபிள் ஒருவருமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர், டி-52 ரக துப்பாக்கிகள் இரண்டையும் அவற்றுக்கான 19 ரவைகளையும் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு அங்கு சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

http://www.samakalam.com/திருக்கோவில்-துப்பாப்பி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரை வணங்கி, ஆசீர்வாதம் பெற்ற திருக்கோவில் பொலிஸ் துப்பாக்கிதாரி

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர், துப்பாக்கி பிரயோகம் நடத்தியதன் பின்னர் எத்திமலை பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு சென்று பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளதாக அவரது தாய் கூறுகின்றார்.

துப்பாக்கி பிரயோகம் நடத்தியமை தொடர்பில் இதன்போது தனது பெற்றோருக்கு அவர் கூறியதாகவும் அவரது தாய் குறிப்பிடுகின்றார்.

காலில் நடத்தப்பட்டிருந்த சத்திர சிகிச்சை காரணமாக, அவருக்கு விசேட சலுகைகளுடன் கடமைகளுக்கு சமூகமளிக்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கடந்த 8 வருடங்களாக குறித்த உத்தியோகத்தருக்கு பொலிஸ் நிலையங்களில் அநீதி இழைக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், தனது மகன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த நிலையிலேயே, இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தனது மகன் துப்பாக்கி பிரயோகம் நடத்திய பின்னர், தனது சொந்த கெப் ரக வாகனத்தின் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் இடைநடுவில் கெப் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாகவும் அவர் தாய் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தப்பித்து, வீட்டிற்கு வருகைத் தந்த தனது மகன், பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாக சந்தேகநபரின் தாய் கூறுகின்றார்.

தான் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் சரணடைய போவதாக சந்தேகநபர் பெற்றோரிடம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றால், இடைநடுவில் பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்த முடியும் எனவும், எத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடையுமாறும் அவரது தந்தை கூறியுள்ளார்.

இதையடுத்தே, தனது மகன் எத்திமலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று, அனைத்து பொருட்களையும் ஒப்படைத்து சரணடைந்துள்ளதாக அவரது தாய் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு சரணடைந்த சந்தேகநபரை, எத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்து, அம்பாறை பொலிஸ் தலைமையக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

https://www.meenagam.com/பெற்றோரை-வணங்கி-ஆசீர்வா/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் சம்பவம் – உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

 

பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மிகவும் துரதிஷ்டவசமான முறையில் உயிரிழந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவ்வாறு உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளான
ஏ.நவிநாத், கே.எல்.எம். அப்துல் காதர், டி.பி.கே.பி. குணசேகர மற்றும் டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகியவர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

 

https://www.meenagam.com/திருக்கோவில்-சம்பவம்-உய/

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களுக்கு… பதவி உயர்வு வழங்குவதன் மூலம், என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இறந்தவர்களுக்கு… பதவி உயர்வு வழங்குவதன் மூலம், என்ன பயன்?

அடுத்த பதவி நிலைக்குரிய கொடுபனவுகள், ஓய்வூதியம் அவர்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். 

அத்தோடு இறந்தவர்களின் சேவையை மதிக்கும் ஒரு கெளரவமுமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

அடுத்த பதவி நிலைக்குரிய கொடுபனவுகள், ஓய்வூதியம் அவர்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். 

அத்தோடு இறந்தவர்களின் சேவையை மதிக்கும் ஒரு கெளரவமுமாகும்.

நன்றி கோசான். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ.ஜ.சி.விடுமுறையில் செல்ல அனுமதி மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டேன்– பொலிசார் 4 பேரை சுட்டு கொலை செய்த பொலிஸ்உத்தியோகத்தர் — (திருக்கோவில் நிருபர்

 (திருக்கோவில் நிருபர்)
தான் விடுமுறையில் வீடு செல்ல திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி மறுத்தனால் ஏற்பட்ட கோபம் காரணமாக துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளதாக பொலிசார் 4 பேரை சுட்டு கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
ரவீந்து குமாரவிடம் பொலிசார் மேற்கொண்டவிசாரணையின் போது இது தெரியவந்துள்ளது.
கடந்த 24 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிசார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 4 பொலிசார் உயிரிழந்த சம்பவம் பொலிசாரை மட்டுமல்லபொதுமக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பொலிசாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸ் நிலையங்கள் மட்டுமல்ல பாதுகாப்பு துறையில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் இவ்வாறு தன்னுடன் கடமையாற்றி வந்த சகநண்பர்களான 4 பொலிசாரை பொலிஸ்; ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ளமை இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்மையான ஒரு துயரமான சம்பவமாகும் இதுவாகும்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் 54 பொலிசார் கடமையாற்றிவருகின்றனர் இந்த நிலையில் பொலிஸ் சேவையில் 22 வருட கால சேவையாற்றிவரும் சியம்பலாண்டுவ அத்திமலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த வனநிங்க மதியன்சலாகே ரவீந்து குமார என்ற பொலிஸ் உத்தியோகத்தர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றி வருகின்றார்.
இவர் தான் விடுமுறையில் வீடு போவதற்கு அப்போது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக இருந்த அதிகாரியிடம் அனுமதி கோரியுள்ளர் அதற்கு அந்த அதிகாரி பொலிஸ் பொறுப்பதிகாரி தற்சமயம் விடுமுறையில் உள்ளதுடன் உனது பிரிவான போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியிடம் அனுமதி பெற்றுவருமாறு கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் சாஜன் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியிடம் விடுமுறைக்காக அனுமதி கோரிய நிலையில் குறித்த பிரிவில் கடமையாற்றிவரும் பொலிசார் விடுமுறையில் சென்றுள்ளதாகவும் அவர்கள் கடமைக்கு திரும்பியதும் விடுமுறையில் செல்லமுடியும் என்றுள்ளார்.
IMG_7036-300x169.jpgIMG_7057-300x169.jpg
அதேவேளை 23 ம் திகதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுமுறையில் இருந்து கடமைக்கு திரும்பிய நிலையில் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த அதிகாரி விடுமுறையில் வீடு சென்றுள்ளார். இவ்வாறான நிலையில் கடந்த 35 நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் வீடு சென்றதுடன் 3 வது கொரோன தடுப்பூசி ஏற்றிய பின்னரும் விடுமுறையில் வீட்டிற்கு சென்று வந்த பொலிஸ் சாஜன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறையில் செல்ல அனுமதி கோரியுள்ளார் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவதினமான 24 ம் திகதி வெள்ளிக்கிழமை பகல் கடமையில் ஈடுபட்ட பொலிசார் தமது கடமைகள் மாலை 6 மணிக்கு முடிந்த பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில் இரவு கடமையினை பெறுப்பேற்ற பொலிசார் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தேவாலயங்களுக்கு பாதுகாப்பு கடமைக்காக சென்றுள்ளதுடன் பொலிஸ் நிலைய கரியாலயத்தில் கடமையாற்றும் சுமார் 5 பொலிசார் மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் பொலிசார் இருந்துள்ளனர்.
அதேவேளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவரது ஜீப் வண்டியில் சாரதியுடன் தேவாலயங்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருபவர்களை பார்ப்பதற்காக ரவுன் போயிருந்த நிலையில் அப்போது அவருக்கு காஞ்சரம் குடா பகுதியில் சட்டவிரோதமாக முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றுக் கமைய ஜீப்வண்டியை விட்டு இறங்கி சாரதியை ஜீப்வண்டியுடன் பொலிஸ் நிலையத்துக்கு போகுமாறு தெரிவித்துவிட்டு மோட்டர்சைக்கிளில் சென்ற அடுத்த பொலிஸ் சாரதி உட்பட இரு பொலிசாருடன் இரு மோட்டர் சைக்கிளில் காஞ்சரம்குடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இரவு 11 மணியளவில் பகல் கடமையை முடித்துவிட்டு இருந்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர் குமார திடீரென பொலிஸ் நிலைய வாசலில் கடமையில் இருந்த பொலிஸ் ஒருவரின் துப்பாக்கியை பறித்து முதலில் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதார்.
அதனை தொடர்ந்து அவரைநோக்கி சுட்டவேளை அவர் தனது உயிரை காப்பாற்ற அங்கிருந்து காயத்துடன் தப்பி ஓடி ஒளிந்து கொண்டார்.
இதன் போது பொலிஸ் நிலையத்துக்குள் கடமையில் இருந்தவர்கள் மீது பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பொலிஸ் சாஜன் காதர் மற்றும் பொலிஸ் கான்ஸடபிள் புரபுத்த படுகாய மடைந்தார்.
இதனை தொடர்ந்து பொலிஸ் நிலைய கட்டிடத்தில் காரியாலயத்தில் ஆயுத களஞ்சியம் மற்றும் றிசேவ் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாகி வெடிச் சத்தம்கேட்டு கட்டித்தை விட்டு வெளியே வந்தபோது அவரை நோக்கி துப்பாகிதாரி துப்பாகி பிரயோகம் செய்ததையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் காரியால அறையினுள் சென்று மறைந்தபோது அங்கு துரத்தி சென்ற துப்பாக்கிதாரி அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு துப்பாக்கியால் ஆயுத களஞ்சியசாலை பூட்டை துப்பாக்கியால் வெடிவைத்து உடைத்து அங்கிருந்து சுமார் 30 மேற்பட்ட ரி 56 ரக துப்பாகியின் ரவைகள் கொண்ட மகசீனை ஏடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி பொலிஸ் நிலைய பகுதியில் இருந்துள்ளார்.
இந்த நேரத்தில் இங்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியாத நிலையில் பொலிஸ் நிலையத்துக்குள் பொலிஸ் சாரதி துஸரா ஜீப்வண்டியுடன் உள்நுழைந்துள்ள நிலையில் ஜீப் வண்டி மீது துப்பாகிதாரி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து சாரதி படுகாயமடைந்ததையடுத்து ஜீப் வண்டி தடுமாறி அங்கிருந்த கட்டடத்துடன் மோதி நின்றுள்ளது.
இவ்வாறன நிலையில் மோட்டர் சைக்கிளில் காஞ்சரம்குடாவை நோக்கி சென்று கொண்டிருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சத்தம் கேட்பதாக தகவல் ஒன்று வந்ததையடுத்து அவர் உடனடியாக அவருடன் சென்ற பொலிசாரை திரும்புமாறு தெரிவித்து கொண்டு அவர் மோட்டர்சைக்கிளை திருப்பிக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்குள் சென்றனர்.
அப்போது அவர்களுக்கு இங்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியாத நிலையில் உட்சென்ற போது அங்கு ஜீப்வண்டி கட்டிடத்துடன் மோதிய நிலையில் ஜீப்வண்டியின் லைற் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அங்கு சென்ற போது துஸரா துப்பாக்கி சூட்டில் இரத்த வெள்ளத்தில் இருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்து அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டும் என அவருடன் சென்ற பொலிசாருக்கு தெரிவித்துக் கொண்ட நிலையில் மீண்டும் பொலிஸ் பொறுப்பதிகாரியை நோக்கி துப்பாக்கிதாரி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்ததுடன் உடனடியாக அனைவரும் கீழே வீழ்ந்து படுத்துக் கொண்டனர்.
இருந்தபோதும் சரமாரியான துப்பாக்கி பிரயோகத்தை துப்பாக்கிதாரிமேற்கொண்டதால் அவனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு இவர்களிடம் ஒரு துப்பாக்கிகூட கையில் இல்லாத நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்ற பொலிஸ் உத்தியோகத்தரிடம் மின்சாரத்தை அனைக்குமாறு தெரிவித்த போது அதனை அனைப்பதற்கு பொலிஸ் சாரதியான குமார தலைக்கவத்துடன் எழுந்தபோது அவர் மீது மேற்கொண்ட துப்பாகி பிரயோகம் அவரின் தலைக்கவத்தை ஊடறுத்து சென்றதுடன் அவருக்கு தலையில் எதுவித பாதிப்பும் ஏற்படாத நிலையில் அவரும் படுகாயமடைந்ததுடன் அவர் மின்சாரத்தை துண்டித்ததையடுத்து அங்கு இருட்டான நிலை ஏற்பட்டது
இனை தொடர்ந்து அங்கிருந்து கைதுப்பாக்கி ஒன்றை எடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி துப்பாகி பிரயோகம் மேற்கொண்டுவரும் துப்பாகிதாரி பக்கம் துப்பாக்கி சூடு நடாத்தினார் அப்போது அதற்கு பதிலாக துப்பாக்கிதாரியும் அவர்களை நோக்கி சுட்டான் இவ்வாறு சுமார் 10 நிமிட துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி துப்பாக்கி சூட்டை நிறுத்திவிட்டு உயர் அதிகாரி மற்றும் அக்கரைப்பற்று பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.
இதனையடுத்து அங்கு சுமார் 20 நிமிடத்தில் அக்கரைப்பற்று பொலிசார் சென்று அங்கு படுகாயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்த நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சாஜன் தனது சொந்தமான ஜீப்வண்டியை ஏற்கனவே பொலிஸ் நிலையத்துக்கு வெளியே உள்ள வீதி ஒன்றில் நிறுத்தி வைத்துவிட்டு இந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு
அங்கிருந்து தனது உடைகளுடனான பாக்கையும் துப்பாக்கி ரவைகள் கொண்ட சுமார் 19 மகசீன்களுடன் இரு துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி தனது வீடான அத்திமலைக்கு சென்று தாயாரிடம் தனக்கு லீவு தராததால் இவ்வாறு செய்ததாக தெரிவித்து விட்டு அத்திமலை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிகளுடன் சரணடைந்துள்ள துப்பாக்கிதாரியான பொலிஸ் சாஜன் தான் வீடு செல்ல விடுமுறை கோரியபோது அதiனை அனுமதிக்காத காரணத்தினால் பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி மீது அதிக கோபத்துடன் இருந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த சூட்டு சம்பவத்தில் பொலிஸ் சாரதியான சியம்பலாண்டுவையைச் சேர்ந்த திஸநாயக்க முதியன்சாலாக துஸரா பொலிஸ் கான்ஸ்டபிள்களான கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த அழகுரத்தினம் நவீன் பிபிலையைச் சேர்ந்த சலகா பண்டாரநாயக்க இஸரா புபுத்த, ஒலுவிலைச் சேர்ந்த 53 வயதுடைய பொலிஸ் சாஜன் கலந்தர் லெப்பை அப்துல் காதர் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்
படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 பேரில் இருவர் சிகிச்சை பெற்று வைத்திசாலையில் இருந்து வெளியேறியதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இடது தோள்பட்டை ஊடாக குண்டு பாய்ந்ததில் அவரின் கை இயங்காத நிலையடைந்துள்ளதுடன் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்
இதேவேளை திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் மா அதிபர் விஜயம் ஒன்றை 26 திகதி மேற்கொண்டு சம்பவம் தொடர்பாக ஆராயந்ததுடன் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரனைகளை மேற்கொண்டு; 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் கட்டளையிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/158538

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.