Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணத்தில் கடும் சண்டை - பாதுகாப்பு அமைச்சு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5021
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:10
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 4
/1/2023

யாழ்ப்பாணத்தில் அரியாலை மற்றும் தனங்கிளப்பில் வலுவெதிர்ப்பில் இருந்த ஆளிட்டிருந்த சிறிலங்காத் தரைப்படையினர் மீது விடுதலைப் புலிகள் "பாரியளவிலான சேணேவி மற்றும் கணையெக்கிகளைப்" பயன்படுத்தி "பெரிய தாக்குதலை" புதன்கிழமை நடத்தியதாக சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"அரியாலையிலுள்ள தரைப்படையின் வலுவெதிர்ப்பில் சில இடைவெளிகளை பயங்கரவாதிகளால் ஊடறுக்க முடிந்தது," என்று பாதுகாப்பு அமைச்சுக் கூறியதோடு சிறிலங்காத் தரைப்படையினர் "தனங்கிளப்புப் பரப்பை வைத்திருக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்" என்று மேலும் சேர்த்தது.

"தரைப்படையினரின் கூற்றுப்படி, தீவிரமான சண்டையின் காரணமாக படையினரும் கனமான இழப்புகளை சந்தித்துள்ளனர், அதே நேரத்தில் பயங்கரவாதிகள் மிக அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளனர்," என்று அந்த கூற்றுரையில் கூறப்பட்டுள்ளது.

"தற்போது அரியாலை வட்டக்கூறில் தீவிரமான சண்டை தொடர்கிறது," என்று பாதுகாப்பு அமைச்சுக் கூறியது.

 

 


 

 

கேந்திரப் பாலம் பிடிக்கப்பட்டது - தவிபு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5022
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:45
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 6
/1/2023

ஏ9 நெடுஞ்சாலையை துண்டிக்கும் விதமாக, கேந்திரமான நாவற்குளி பாலத்தின் ஒரு பகுதியை தங்களது அதிரடிப்படைப் பிரிவுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக விடுதலைப் புலிகள் புதன்கிழமை தெரிவித்தனர். அப்பரப்பில் தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்று வருவதாக, விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இலண்டன் அலுவலகத்திலிருந்து வெளியிட்ட கூற்றுரையில் தெரிவித்துள்ளது.

கூற்றுரையின் உரை பின்வருமாறு:

"தமிழீழ விடுதலைப் புலிகளின் (தவிபு) அதிரடிப்படைப் பிரிவுகள் வியத்தகு வலிதாக்குதலின் மூலம், யாழ்ப்பாண நகரத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கேந்திர நாவற்குளி பாலத்தின் ஒரு பகுதியை இன்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அந்த வட்டக்கூறில் ஏ9 நெடுஞ்சாலையை (கண்டி வீதி) துண்டித்தனர். 

"யாழ்ப்பாண நகரின் சுற்றுப்புறத்தில் இன்று அதிகாலையில் தமிழ்ப் புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் மூன்று முனைகளிலும் பாரிய வலிதாக்குதல்களை நடத்தியபோது கடுமையான சண்டை மூண்டது. புலிகளின் சண்டைப் பிரிவுகள் கனமான சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைவீச்சைத் தொடங்கியதால் தனங்கிளப்பு, அரியாலை மற்றும் நாவற்குளி ஆகிய இடங்களிலுள்ள சிறிலங்கா தரைப்படைத் தளங்கள் செறிவான சூட்டுக்குள்ளாகின. களமுனைகளிலிருந்து கிடைத்த நம்பத்தகுந்த தகவலின்படி, சிறிலங்காப் படையினர் பாரிய உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர். இந்த வட்டக்கூறுகளில் முரட்டுத்தனமான சண்டை தொடர்கிறது.

"விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த முன்மொழிவை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணித்ததைத் தொடர்ந்து, 'ஓயாத அலைகள் 3' என குறியீட்டுப் பெயரிடப்பட்ட வலிதாக்குதல் நடவடிக்கை இன்று மீளத்தொடங்கியது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிக்கியுள்ள சிறிலங்காப் படையினரை ஓம்பலாக வெளியேற்றுவதற்கு வசதியாக புலிகள் வைரக அறவுளியை விருப்பறிவிப்பாக்கினர். அரசாங்கம் அமைதி முன்மொழிவை உளவியல் போர்முறையின் உத்தியெனப் புறக்கணித்தது.

"யாழ்ப்பாண நகருக்கு அருகிலுள்ள நாவற்குளி பாலத்தின் வீழ்ச்சியாலும் ஏ9 நெடுஞ்சாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டமையினாலும் தென்மராட்சி வட்டக்கூறை வல்வளைத்துள்ள சிறிலங்காப் படையினர் இடர்செறிந்த நிலையில் உள்ளனர்."

 

 


 

 

யாழ்ப்பாணத்தில் புதிய முன்னகர்வுகள் - தவிபு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5023
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 1:08 
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 13
/2/2023

சிறிலங்கா தரைப்படையுடன் கடுமையான சண்டையைத் தொடர்ந்து, யாழ்ப்பாண நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள நாவற்குளி, அரியாலை மற்றும் தனங்கிளப்புப் பகுதிகளுக்கு முன்னகர்ந்து வருவதாக விடுதலைப் புலிகள் புதன்கிழமை தெரிவித்தனர். ஏ9 நெடுஞ்சாலையின் 2 கிலோமீற்றர் நீளம், நாவற்குளி பாலம் உட்பட புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக அந்த இயக்கம் புதன்கிழமை இரவு தனது இலண்டன் அலுவலகத்திலிருந்து ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் படையினர் தனங்கிளப்பு பகுதிக்குள் 2 கிலோமீற்றர் முன்னகர்ந்து அரியாலைப் பகுதியிலுள்ள மணியந்தோட்டனை கைப்பற்றியுள்ளனர்.

கூற்றுரையின் முழு உரை பின்வருமாறு:

"மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்ட மின்னலடி வலிதாக்குதல் நடவடிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் இன்று யாழ்ப்பாண நகருக்கு அருகாமையிலுள்ள முக்கிய உயிர்ப்பான கேந்திர இடங்களை கைப்பற்றி குடாநாட்டை வல்வளைத்துள்ள சிறிலங்கா அரச படையினருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

"யாழ்ப்பாண நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள நாவற்குளி, அரியாலை மற்றும் தனங்கிளப்பு ஆகிய ஊர்களிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்பு நிலைகளுக்குள் தமிழ்ப்புலிகளின் அதிரடிப்படைப் பிரிவுகள் அதிகாலையில் பல்முனை வலிதாக்குதல் மடுத்தலில் புயலெனப் புகுந்து பகைப்படைகளுக்கு வலுத்த உயிர்சேதத்தை ஏற்படுத்தின.

"கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாவற்குளி பாலத்தை உள்ளடக்கிய ஏ9 நெடுஞ்சாலையின் (கண்டி வீதி) இரண்டு கிலோமீற்றர் நீளம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

"தனங்கிளப்பில், புலிகளின் சண்டைப் பிரிவுகள் 2 கிலோமீட்டர் உள்பகுதியில் முன்னேறி, கோவில்கண்டி சந்தியில் உள்ள சிறிலங்காவின் முதன்மைப் படைத்தளத்தின் மீது பாரிய தாக்குதலை நடத்தியுள்ளனர். அரியாலையிலிருந்த பிரிதளத்தில் நிலைகொண்டிருந்த அரச படையினரை விரட்டியடித்து, முன்னேறிச் சென்ற புலிப் படையினர் மணியந்தோட்டத்தினை கைப்பற்றியுள்ளனர்.

"மூன்று வட்டக்கூறுகளிலும் அதிகாலையில் வெடித்த சண்டை நேற்று இரவும் தொடர்ந்தது. நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டும் காயமுமடைந்துள்ளனர். கனமான சண்டையில் ஒரு தகரி அழிக்கப்பட்டதோடு கவசவூர்திகளும் சேதமடைந்தன.

"சம நேரத்தில், சமர் பரப்புகளுக்கு அருகில் வசிக்கும் தமிழ் மக்களை ஓம்பலான பரப்புகளுக்குச் செல்லுமாறு புலிகள் அழைப்பு விடுத்துள்ளதுடன், மக்களும் அதற்கு செவிசாய்த்து வருகின்றனர்.

"யாழ் குடாநாட்டின் தென்மராட்சிப் பிரிவை வல்வளைத்துள்ள ஆயிரக்கணக்கான சிறிலங்காப் படையினருக்கு நாவற்குளி பாலத்தின் வீழ்ச்சியும் ஏ9 நெடுஞ்சாலையின் இணைப்புத் துண்டிப்பும் கடுமையான தளவாடச் சிக்கல்களை உருவாக்கியுள்ளன. தரைப்படை வலுவூட்டல்களை நகர்த்தியுள்ளதோடு அந்தப் பரப்பில் இன்னும் சீற்றமான சண்டை நடந்து வருகிறது."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 198
  • Views 50.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

நகர மையத்திற்கு நெருக்கமாக புலிகள் தள்ளுகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5025
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:43
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 17
/2/2023

யாழ்ப்பாண நகரின் கரையோரப் புறநகருக்குள்ளும் விடுதலைப் புலிகள் செல்லத் தொடங்கியுள்ளதாக வட குடாநாட்டில் வெளியாகும் நாளிதழ் ஒன்றின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் இன்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். மணியந்தோட்டம், அரியாலை மற்றும் கொழும்புத்துறை ஆகிய இடங்களிலுள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகள் காலியாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கச்சேரியை அண்மித்த புங்கன்குளத்திலுள்ள சிறிலங்கா தரைப்படை நிலை மீது இன்று மதியம் முன்னகர்ந்து வரும் புலிப் படையினர் தாக்குதல் நடத்தியதுடன், இங்கும் படையினர் புய்த்து வருவதாக ஊடகவியலாளர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் நேற்று வெளியிட்ட அறிவிப்பை அடுத்து கடலோரப் புறநகர் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறினர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் வாழும் பொதுமக்களை வலிகாமம் வட்டக்கூறிலுள்ள ஓம்பலான பரப்புகளுக்கு செல்லுமாறு புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேணேவி மற்றும் கணையெக்கி நிலைகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை ஓம்பமான இடங்களுக்கு வெளியேறுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 


 

 

யாழ் நகரில் புதிய முன்னகர்வுகள் - தவிபு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5027
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:52
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 13
/2/2023

வட குடாநாட்டில் தமது வலிதாக்குதல் தொடர்வதால் யாழ்ப்பாண நகர மையத்திற்கு அருகில் முன்னகர்ந்துள்ளதாக விடுதலைப்புலிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். புலிகள் கோவிலாக்கண்டி மற்றும் தனங்கிளப்பு ஆகிய இரண்டு முக்கிய சிறிலங்கா படைத் தளங்களையும் தங்கள் நடவடிக்கையின் மற்றொரு முனையில் பரம்பியுள்ளனர் என்று அந்த அமைப்பு அதன் இலண்டன் அலுவலகத்திலிருந்து வெளியிட்ட ஒரு கூற்றுரையில் தெரிவித்துள்ளது.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை வருமாறு:

“தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிபாட்டுப் பிரிவுகள் யாழ்ப்பாணச் சமரில் இன்று யாழ்ப்பாண மாநகரப் பரப்பின் நகர மையத்திற்கு அருகில் முன்னகர்ந்து சாவகச்சேரி வட்டக்கூறிலுள்ள இரண்டு முக்கிய படைத்தளங்களை கைப்பற்றிய போது காட்சிப்பகட்டான படைய ஆதாயங்களைப் பெற்றன.

"யாழ். மாநகர சபைக்கு அண்மித்த பரப்புகளில் அதிகாலை முதல் இன்று இரவு வரை நீடித்த கனமான சண்டையின் பின்னர், அரியாலை வட்டாரம் மற்றும் கொழும்புத்துறை இறங்குதுறை முழுவதையும் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தமிழ்ப் புலிகளின் முன்னகரும் அடிபாட்டு உருவாக்கங்கள் அந்த வட்டக்கூறில் பல படைமுகாம்களை அழித்து தற்போது நகரின் நிருவாக மையமான யாழ்ப்பாணக் கச்சேரியிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

"சாவகச்சேரி வட்டக்கூறில் கோவிலாக்கண்டி மற்றும் தனங்கிளப்பு ஆகிய இடங்களிலுள்ள இரண்டு பாரிய படைத்தளங்களை தமிழ் புலிகள் இரண்டு நாட்கள் முனைப்பான சண்டையின் பின்னர் இன்று மாலை பரம்பியுள்ளனர். புலிகளின் தாக்குதலின் சினத்தில் கறங்கிய சிறிலங்காப் படையினர் தங்கள் எதிர்ப்பைக் கைவிட்டு  முற்றிலும் சீர்குலைந்து தப்பியோடினர். இந்தக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த படைத்தளங்களின் வீழ்ச்சியானது சாவகச்சேரி நகரத்தை புலிகளின் தாக்குதலுக்கு வடுப்படத்தக்கதாக மாற்றியுள்ளது.

"யாழ்ப்பாண நகர மையத்துக்கு அருகாமையிலும் சாவகச்சேரி வட்டக்கூறிலும் இடம்பெற்ற முரட்டுத்தனமான சண்டையில் சிறிலங்காப் படையினர் வலுத்த உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளனர். புலிகளால் பரம்பப்பட்ட இரண்டு படைத்தளங்களில் இருந்து பாரியளவிலான கணைகள் மற்றும் படைக்கலன்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

"யாழ் நகரின் மையப்பகுதி மற்றும் சாவகச்சேரி நகரின் மையப்பகுதியை நோக்கி புலிகளின் படைகள் சூழ்ந்துவரும் நிலையில், தமிழ்ப் புலிகளின் அரசியல் பிரிவு தமிழ் மக்களை சமர்முனைகளிலிருந்து விலகி ஓம்பலான பரப்புகளுக்கு செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளது."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் இறுதித் தாக்குதலுக்கு அணியமாகிறார்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5029
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 10:41
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27
/4/2023

யாழ்ப்பாண நகருக்குள் "இறுதித் தள்ளலிற்கு" தயாராகி வருவதாக விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். வலுவெதிர்த்து வரும் சிறிலங்கா தரைப்படையினரிடையே ஏற்பட்டுள்ள கிலி மற்றும் குழப்பத்தின் நடுவணில் இந்த நோக்கத்திற்காக வன்னியில் இருந்து புதியதாக கைப்பற்றப்பட்ட பரப்புகளுக்கு விடுதலைப் புலிகளின் கனவகை ஆயுதம் பூண்ட படையினர் நகர்ந்துள்ளதாகவும், சிறிலங்கா தரைப்படையால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இருந்தபோதிலும் வடக்கு நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேறி வருவதாகவும் இலண்டன் அலுவலகத்திலிருந்து புலிகள் விடுத்துள்ள கூற்றுரையில் தெரிவித்தனர். 

சிறிலங்காவின் தாரை வானூர்திகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்த கூற்றுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் தகவல்களின்படி, அவர்கள் வேதநாயகம் சற்குணம், 54, (ஐந்து பிள்ளைகளின் தந்தை), கந்தையா கமலன், 23, அந்தோனிப்பிள்ளை யோகபாலன், 35, மற்றும் அவரது பிள்ளைகளான நிக்சன் யோகபாலன், 4, மற்றும் நிசாந்தன் யோகாபாலன், 4, ஆகியோரே ஆவர்.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை வருமாறு:

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிபாட்டுப் பிரிவுகள், தலைநகரின் மையப் பரப்பில் இறுதித் தாக்குதலுக்கு அணியமாகி வரும் யாழ்ப்பாண நகரின் கரையோரப் பகுதியில் புதிதாகக் கைப்பற்றப்பட்ட தங்கள் நிலைகளை திடப்படுத்தி வருகின்றன.

"கேந்திர வழிவகையாக முக்கியத்துவம் வாய்ந்த நகரின் புறநகர்ப் பரப்புகளான அரியாலை, மணியந்தோட்டம், கொழும்புத்துறை, பாசையூர், புங்கன்குளம் மற்றும் நெடுங்குளம் ஆகியன ஏற்கனவே புலிகளின் பிடியில் வீழ்ந்து நகர மையத்தை புலிகளின் தாக்குதலுக்கு வடுப்படத்தக்கதாகியுள்ளது. வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் தளங்களிலிருந்து யாழ்ப்பாணப் போர் அரங்கம் நோக்கி பெரும் எண்ணிக்கையில் கனவகை ஆயுதம் பூண்ட தமிழ்ப்புலிகளின் படையினர் உருவாக்கங்கள் தீர்க்கமான சமருக்கு அணியமாகி வருகின்றன.

"யாழ் மாநகரசபை பரப்பிலும் சாவகச்சேரியிலும் புலிகளின் அடிபாட்டுப் பிரிவுகளின் மின்னல் முன்னகர்வுகளால் மனச்சோர்வும் அதிர்ச்சியும் அடைந்துள்ள படைத்துறையின் கட்டளைக் கட்டமைப்பு உருக்குலைந்து அரச படையினர் நடுவணில் கிலியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் புலிகளின் கைகளில் வீழ்ந்து விடாமல் நகரத்தை ஓம்பும் நம்பிக்கையற்ற முயற்சியில், சிறிலங்கா தரைப்படை 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. ஆனால், ஊரடங்குச் சட்டத்தை மீறி தமிழ் மக்கள் சமர் வலையங்களை விட்டு ஓம்பமான பரப்புகளுக்கு நகர்ந்து வருகின்றனர்.

"இதற்கிடையில், இசுரேலினால் கட்டப்பட்ட கிஃபிர் குண்டுவீச்சு-சண்டை தாரை வானூர்திகள் யாழ் குடாநாட்டிலும் பூநகரியிலும் பொதுமக்கள் வசிக்கும் பரப்புகள் மீது கண்மூடித்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று மாலை 5.30 மணியளவில் பூநகரியின் பள்ளிக்குடா மீனவ சிற்றூரில் இசுரேலிய அடிபாட்டு வானூர்தி குண்டுவீசித் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பத்து பேர் படுகாயமடைந்தனர்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆயிரக்கணக்கானோர் வடக்கு நகரை விட்டு வெளியேறுகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5030
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 1:48
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27
/4/2023

யாழ் போதனா வைத்தியசாலை அதன் அனைத்து ஊழியர்களுடன் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் திரு.கர்ச குணவர்தன இன்று மாலை தமிழ்நெட்டிற்கு தெரிவித்தார். மருத்துவமனையையும் அதன் உடனடி சுற்றுப்புறங்களையும் உள்ளடக்கிய படைத்துறையற்ற வலயத்தை அமைப்பது குறித்து அரசாங்கமோ அல்லது விடுதலைப் புலிகளோ இதுவரை செஞ்சிலுவைச் சங்கத்தை அணுகவில்லை என்று அவர் கூறினார்.

சிறிலங்கா தரைப்படை இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நான்கு மணிநேரம் ஊரடங்குச் சட்டத்தை நீக்கியபோது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். வலிகாமம் வட்டக்கூறிற்கு மேற்கே ஓம்பமான பரப்புகளை நோக்கிச் செல்லும் மக்களில் மிதிவண்டிகள், மகிழுந்துகள், வையம் (van) மற்றும் ஏனைய ஊர்திகள் உள்ளன.

மே 10 புதன்கிழமை முதல் யாழ்ப்பாண நகரத்தை விட்டு வெளியேறி குடாநாட்டின் ஓம்பமான பரப்புகளுக்குச் செல்லுமாறு விடுதலைப் புலிகள் தமிழ் பொதுமக்களை கழறு(அறிவுறுத்துதல்)கின்றனர்.

எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொதுமக்கள் மாத்திரமே மே 9 செவ்வாய்க்கிழமை முதல் வைத்தியசாலைக்கு பண்டுவத்திற்காக அழைத்து வரப்பட்டதாக திரு.குணவர்தன கூறினார்.

ஐ.சி.ஆர்.சி குழு இன்று மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டது. தற்போது மருத்துவமனையில் மூன்று அறுவை பண்டுவ வல்லுநர்கள் உட்பட 34 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 38 மருத்துவர்கள் உள்ளனர். பதினொரு பயிற்சித் தாதியர்களும் நூற்றி ஐம்பது தாதியர்களும் தற்போது வைத்தியசாலையில் பணிபுரிகின்றனர் என திரு.குணவர்தன தெரிவித்தார்.

இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து ஏராளமான நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியேறினர் என்று தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளக்கூடிய யாழ்ப்பாண நகர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவசர மருத்துவப் பண்டுவம் தேவைப்படும் பல கர்ப்பிணிப் பெண்கள் பருத்திதுறைக்கு அருகிலுள்ள மந்திகையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கோரினர்.

 

 


 

 

யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடியது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5031
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 7:20
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27
/4/2023

தரைப்படையினரால் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மூன்று மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்பட்ட போது யாழ்ப்பாணம் நகரம் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டது. நகரத்தின் பெரும்பாலான மக்கள் வலிகாம வட்டக்கூறுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று யாழ்ப்பாண நாளிதழ் அலுவலகம் ஒன்றின் ஊடகவியலாளர் இன்று பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். சிறிலங்கா வான்படையின் இசுரேலிய கிஃபீர் தாரை வானூர்திகள் நாவற்குளி மற்றும் தனங்கிளப்பு பரப்புகளில் இன்று காலை பாரிய குண்டுவீச்சு நடத்தியதாக நகரத்திலுள்ள முன்னாள் தமிழ் போராளி வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாண நகரத்தின் கரையோரப் புறநகர்ப் பகுதியான கொழும்புத்துறையின் ஒரு பகுதியை புலிகள் தொடர்ந்தும் தக்கவைத்திருப்பதாக முன்னாள் போராளிகள் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. அரியாலை, தனங்கிளப்பு பரப்புகள் தற்போது விடுதலைப் புலிகளின் வசம் உள்ளது.

கிபிர் தாரை வானூர்திகள் இந்த வட்டக்கூறிலும் நாவற்குளியிலும் உள்ள புலிப் படையினரின் நிலைகளை தாக்குவதற்காக குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி வருவதாக முன்னாள் தமிழ் போராளி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரியாலைக்கும் நாவற்குளிக்கும் இடையிலான ஏ9 நெடுஞ்சாலை உடைக்கப்பட்டபடியே இருப்பதுடன், விடுதலைப் புலிகளின் படையினர் இந்த வீதியின் துண்டத்தை தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

கொழும்புத்துறையில் சிறிலங்கா தரைப்படை நிலைகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டதுடன் முப்பத்தெட்டு பேர் காயமடைந்துள்ளதாக அரசாங்க ஊடக மையம் இன்று தெரிவித்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

வலிதாக்குதனாது யாழ்ப்பாணத்தின் தாக்கக்கூடிய 'எளிய நலிவை' புலப்படுத்துகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5032
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:32
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27
/4/2023

யாழ்ப்பாண நகரத்தின் தென்கிழக்கே அரியாலை மற்றும் தனங்கிளப்பு வட்டக்கூறுகளை வைத்திருக்கும் புலிப் படையினரின் நிலைகள் மீது சிறிலங்கா வான்படை தாரை வானூர்திகள் வான்குண்டுவீச்சை தொடர்ந்தன. எனினும், சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடக மையம் இன்று வெளியிட்டுள்ள சூழ்நிலை அறிக்கையில், வலுத்த குண்டுவீச்சிற்கு நடுவணிலும் புலிகள் இவ்வட்டக்கூறுகளில் செயலுறுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடக மையத்தின் அறிக்கை, "கொழும்புத்துறையில் பாதுகாப்புப் படைகளின் வலுவெதிர்ப்புகளை நோக்கி புலிகளால் இங்குமங்குமாக கணையெக்கி மற்றும் சேணேவித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன." என்று கூறியது.

"அரியாலை, தனங்கிளப்பு மற்றும் பூநகரியில் நடத்தப்பட்ட திடீர் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்ததான விடுதலைப் புலிகளின் வழங்கல் பாதையை அழிக்கவில்லை என்பதோடு யாழ்ப்பாண நகரத்திலுள்ள படைநிலைகள் மீதான புலிகளின் தாக்குதலையும் தடுக்கவில்லை என்பதை ஊடக மையத்தின் அறிக்கை ஒப்புக்கொள்கிறது." என்று கொழும்புப் பாதுகாப்புப் பகுப்பாய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் யாழ்பாணத்தை நோக்கிய ஓயாத அலைகள் மூன்று வலிதாக்குதலின் அண்மைய கட்டத்தில், கேரதீவு இறங்குதுறையிலிருந்து கொழும்புத்துறை கிழக்கு வரையிலான கேந்திர யாழ்ப்பாணக் களப்புக் கரையோரம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

1999 டிசம்பரில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீதான பொது வலிதாக்குதலின் முதல் கட்டமாக கேரதீவு இறங்குதுறை மற்றும் தனங்கிளப்பு ஊடாக நாவற்குளிக்கு செல்லும் சுமார் ஆறு கிலோமீற்றர் வீதியின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் எடுத்தனர்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக வலுத்த குண்டுவீச்சு, சேணேவி எறிகணைவீச்சை தாக்குப்பிடித்தல் மற்றும் பல தரைப்படை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், இந்த உவர்க்கத்தலையைப் வைத்திருந்த புலிப் படையினரை சிறிலங்கா தரைப்படையால் வெளியேற்ற முடியவில்லை.

கேரதீவிலிருந்து கொழும்புத்துறை வரையிலான ஏ9 மற்றும் யாழ்ப்பாணக் களப்புக் கரையோரத்திற்கு இடையிலான நிலப்பரப்பானது தனங்கிளப்பு மற்றும் கோவிலாக்கண்டி ஆகிய இரண்டு படைமுகாம்களால் வைத்திருக்கப்பட்டது. கேரதீவிலிருந்து நாவற்குளி வரையிலான பாதையில் புலிகளின் படையினர் வடமேற்காகத் தள்ளுவதைத் தடுக்கவும், கிளை வீதி ஓரமாக வடகிழக்கில் சாவகச்சேரிக்குத் திரும்புவதைத் தடுக்கவும், கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து சிறிலங்கா தரைப்படையால் முன்னையதின் வலுவெதிர்ப்பு வலுப்படுத்தப்பட்டது.

ஓயாத அலைகள் நடவடிக்கையின் அண்மைய கட்டத்தில் இந்த முகாம்கள் அழிக்கப்பட்டதன் மூலம் வன்னிப் பெருநிலப்பரப்பில் புலிகளின் படையவலுற்கு குடாநாட்டின் தாக்கக்கூடிய எளிய நலிவை புலப்படுத்தியுள்ளது என்று கொழும்பிலுள்ள வலுவெதிர்ப்பு பகுப்பாய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார். "இது யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரியின் வலுவெதிர்ப்பாளர்களுக்கு எதிர்வரும் நாட்களில் ஒரு நல்ல அறிகுறியாகத் தென்படவில்லை" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், யாழ்ப்பாண நகருக்கு வடக்கே இணுவில் என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் என ஐயப்படுபவர்களால் ஒரு படைவீரர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாண ஊடகவியலாளரை சிறிலங்கா தரைப்படையினர் எழுதருகை செய்தனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5034
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 1:45
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27
/4/2023

கடந்த வாரம் இந்திய வான்படை தலைமையர் ஏ. வை. டிப்னிசை சந்தித்தபோது சிறிலங்கா அதிபர் கண்ணீர் விட்டு அழுதது தொடர்பான செய்தியை யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் திரு.சி.என். வித்யாதரன் தனது நாளிதழில் வெளியிட்டதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை கடிந்து எழுதருகையிட்டுள்ளது. மே 12 வெள்ளிக்கிழமையன்று பூநகரியில் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பொதுமக்களின் பெயர்களை உதயன் நாளிதழ் வெளியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கடுமையாக எழுதருகையிடப்பட்டார்.

சிறிலங்கா தரைப்படை  பகலில் வித்யாதரனிற்கு அழைப்பாணை விடுத்து, உதயன் நாளிதழில் இந்தச் செய்திகளை வெளியிடுவதற்கு அண்மையில் முரசறையப்பட்ட பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினர்.

எவ்வாறாயினும், தற்போது உதயன் நாளிதழை தணிக்கை செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் உரிய அதிகாரம் இல்லை என திரு.வித்தியாதரன் சுட்டிக்காட்டினார்.

உதயன் நாளிதழ் இவ்வாறான கதைகளை வெளியிடுவதன் மூலம் யாழ்ப்பாண மக்கள் மனதில் ஐயுறவை ஏற்படுத்துவதாக சிறிலங்கா தரைப்படை குற்றஞ்சாட்டியிருந்தது.

இத்தருணத்தில் தம்மையும் உதயன் நாளிதழ் தொடர்பாகவும் சிறிலங்கா தரைப்படையின் அணுகுமுறை குறித்து கவலையடைவதாக திரு.வித்தியாதரன் தெரிவித்தார்.

கடுமையான விதிமுறைகளின் கீழ், தணிக்கையாளர் அல்லது தகுதியான அதிகாரம் படைத்தவர், தீவிலுள்ள அனைத்து செய்தித்தாள்களையும் அவரது வரம்பிற்குள் கொண்டு வர முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஊடகத்திலுள்ள அனைத்து தலையங்கப் பொருட்களும் வெளியிடுவதற்கு முன் தகுதிவாய்ந்த அதிகாரியால் அங்கீகரிக்கப்பட வேண்டும். போர் தொடர்பான அனைத்து நாளிதழ் படிகளும் அடையாளம் காண முடியாத வகையில் 'நறுக்கப்பட்டிருந்தன', என ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

"ஆனால் யாழ்ப்பாணத்துடனான சண்டை மற்றும் தகவல் தொடர்பு சீர்குலைந்துள்ள நிலையில், உதயன் நாளிதழானது கொழும்பில் உள்ள அரசாங்கத்தின் ஊடக மையத்திற்கு அனைத்து செய்திகளையும் தொலைநகல் அனுப்பும் என்று எதிர்பார்க்க முடியாது; பின்னர் தணிக்கையாளரின் மறுமொழிக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் காலக்கெடுவை நிறைவு செய்ய முடியாது" என திரு.வித்தியாதரன் தெரிவித்தார்.

மே 12 வெள்ளியன்று சங்குப்பிட்டி இறங்குதுறையிலுள்ள குடாநாட்டிற்கான விடுதலைப் புலிகளின் வழங்கல் நிலையை குண்டுவீசித் தாக்கியதாக சிறிலங்கா வான்படை வெள்ளிக்கிழமை கோரியது.

எவ்வாறாயினும், உதயன் நாளிதழ் இன்று தனது பத்திகளில், பூநகரி வட்டக்கூறிலுள்ள கடற்கரையோர சிற்றூரான பள்ளிக்குடா மீது வான்படை குண்டுவீச்சு நடத்தியதாகவும், வெள்ளிக்கிழமை கிஃபீர் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட பொதுமக்களின் பட்டியலை வெளியிட்டதாகவும் கூறியுள்ளது.

விதிமுறைகளை மீறும் செய்தித்தாள்களின் அச்சகங்களை உரிய அதிகாரி மூலம் பறிமுதல் செய்யலாம். 

உதயன் யாழ்ப்பாணத்திலுள்ள அதன் அலுவலகங்களிலிருந்து திருத்தப்பட்டு வெளியிடப்படுகிறது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சாவகச்சேரியில் சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்புகளை புலிகள் பரம்பினர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5037
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:00
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27
/4/2023

கொழும்பில் உள்ள படைய வட்டாரங்களின் படி, யாழ். நகருக்கு கிழக்கே சாவகச்சேரியை நெருங்கும் போது விடுதலைப் புலிகள் சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்புகளை பரம்பினர். சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடக மையத்தின் ஊடக வெளியீடு கூறியதாவது, இன்று பிற்பகல் சிறிலங்கா தரைப்படையின் மூத்த தரைக் கட்டளையாளர்கள் தனங்கிளப்பு வட்டக்கூறின் "வடகிழக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட நிலைகளுக்கு தங்கள் வலுவெதிர்ப்பை பெயர்த்தனர்".

தனங்கிளப்புக்கு வடகிழக்கில் சிறிலங்கா தரைப்படையின் 52 ஆவது படைப்பிரிவின் படைத்தொகுதி அமைந்துள்ள சாவகச்சேரி நகரம் கடந்த வாரம் விடுதலைப் புலிகளால் பரம்பப்பட்டது. தரைப்படை மீண்டும் சாவகச்சேரிக்கு திரும்பியுள்ளதாக ஊடக மையத்தின் ஊடக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது என்று வட்டாரங்கள் கூறின.

இதற்கிடையில், நாகர்கோவிலில் உள்ள சிறிலங்கா தரைப்படை முகாம் இன்று புலிகளால் எறிகணைவீச்சுக்கு உட்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ் நகரில் உள்ள மக்களை அவசரமாக ஓம்பமான பரப்புகளுக்கு செல்லுமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளதாக புலிகளின் குரல் இன்று காலை தெரிவித்துள்ளது. சாவகச்சேரி நகரம், மட்டுவில், கிளாலி மற்றும் கச்சாய் ஆகிய பரப்புகளிலிருந்து ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ள மக்கள் மறு அறிவித்தல் வரை தற்போது இருக்கும் இடத்திலேயே இருக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

 

 


 

 

புலிகள் பொதுமக்களை நகருமாறு கேட்டுக்கொள்கின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5038
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:08
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27
/4/2023

இன்று காலை வவுனியாவில் கண்காணிக்கப்பட்ட புலிகளின் குரல் ஒலிபரப்பின்படி, பொதுமக்களின் ஓம்பமான இடப்பெயர்விற்காக சில நாட்கள் இடைவெளியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். யாழ்.நகரின் மாநகரசபை எல்லையிலுள்ள பொதுமக்களை, குடாநாட்டின் வலிகாமம் மேற்குப் வட்டக்கூறிலுள்ள சங்கானை, மானிப்பாய், சித்தங்கேணி, சண்டிலிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை போன்ற ஓம்பமான பரப்புகளுக்கு அவசரமாகச் செல்லுமாறு புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கிளாலி, கச்சாய், கைதடி, நாவற்குளி, சாவகச்சேரி, மட்டுவில் ஆகிய பரப்புகளில் இருந்து மீசாலை, புத்தூர் சந்தி, மந்துவில் ஆகிய பரப்புகளில் உள்ள ஓம்பமான பரப்புகளுக்குச் சென்ற பொதுமக்களை மறு அறிவித்தல் வரை இந்த இடங்களில் தங்கியிருக்குமாறு புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று யாழ். நகரில் எறிகணைத் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டதாகவும் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பண்டுவம் பெற்று வருவதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று காலை யாழ்ப்பாணம் நகரில் எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக வடக்கில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்த போதிலும் மேலதிக விரிப்புகளை வழங்க மறுத்துவிட்டனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் இரட்டை முனைகளில் முன்னகர்கின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5040
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 3:11
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27
/4/2023

இரட்டை முனைத் தாக்குதலில், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா தரைப்படையின் பிடியிலுள்ள ஆட்புலத்தினுள் ஆழமாக முன்னகர்ந்துள்ளதாக விடுதலைப் புலிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். புலிகளின் படைகள் முன்னர் கைப்பற்றப்பட்ட நிலைகளிலிருந்து சாவகச்சேரி வட்டக்கூறிற்கு முன்னகர்ந்து, நாவற்குளியில் உள்ள சிறிலங்கா தரைப்படை வலுவெதிர்ப்புகளை முறியடித்து கைதடியில் உள்ள சிறிலங்கா தரைப்படை தளத்தைத் தாக்கி வருகின்றனர் என்று விடுதலைப் புலிகள் தம் இலண்டன் அலுவலகங்களில் இருந்து ஒரு கூற்றுரையில் தெரிவித்தனர். யாழ்ப்பாண நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாசையூர் மற்றும் குருநகர் ஆகிய இடங்களிலும் விடுதலைப் புலிகளின் படைகள் சிறிலங்கா தரைப்படை வலுவெதிர்ப்புகளை நொறுக்கியுள்ளனர் என்று அந்த கூற்றுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை வருமாறு:

"யாழ்ப்பாண நகரின் கரையோரத்திலும் சாவகச்சேரி வட்டக்கூறிலும் நேற்றிரவு விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதம்பூண்ட அடிபாட்டு உருவாக்கங்கள் இரு முனை வலிதாக்குதல் தாக்குதல்களைத் திறந்ததால், யாழ்ப்பாணத்துக்கான தீரணமான சமர் மீண்டும் செறிவுடன் தொடங்கியது.

"நகரின் மாநகரசபையின் புறநகரிலுள்ள பாசையூர் மற்றும் குருநகரில் முன்னகர்ந்து வரும் புலிகளின் படைகள் சிறிலங்காப் படையினருடன் அரத்தக்களரிச் சமரில் மிண்டியுள்ளன. புலிகளின் அடிபாட்டுப் பிரிவுகள் அரசாங்கப் படையினரின் வலுவெதிர்ப்பு வேலிகளை உடைத்தெறிந்ததால் பகைவருக்கு வலுத்த சேதம் ஏற்பட்டது. அந்த வட்டக்கூறில் இன்னும் கனமான சண்டை நடந்து வருகிறது.

"சாவகச்சேரி வட்டக்கூறில், நேற்றிரவு நாவற்குளி மற்றும் தச்சன்தோப்பு ஆகிய இடங்களிலுள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகளை தவிபு-வின் சண்டைப் பிரிவுகள் பரம்பி அப்புலம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கனவகை சேணேவி மற்றும் கணையெக்கி சூட்டாதரவுடன் புலிகள் கைதடிக்கு மேலும் முன்னேறி கைதடி சந்தியில் அமைந்துள்ள முதன்மை தரைப்படை தளத்தின் மீது பாரிய தாக்குதலை தொடுத்துள்ளனர். சமர்க்களத்திலிருந்து கிடைத்த அண்மைய தகவல்களின்படி, விடுதலைப் புலிகளின் அதிரடிப் பிரிவுகள் தரைப்படைத் தளத்தின் வலுவெதிர்ப்பு எல்லைகளை உடைத்து உள்நுழைந்துள்ளதுடன், தளத்தின் நடு வட்டக்கூறில் முரட்டுத்தனமான சண்டை தொடர்கிறது.

"யாழ் குடாநாட்டின் விடுதலைக்கான 'ஓயாத அலைகள் 3' என குறியீட்டுப் பெயரிடப்பட்ட நடவடிக்கை மூன்று நாட்கள் சிற்றோய்விற்குப் பின்னர் நேற்று மாலை 5 மணியளவில் மீண்டும் தொடங்கியது, இந்தச் சிற்றோய்வில் விடுதலைப் புலிகள் புதிதாக கையகப்படுத்திய ஆட்புலத்தை திடப்படுத்தி தமிழ் பொதுமக்களை சமர் வலயத்திலிருந்து வெளியேறி ஓம்பமான பரப்புகளுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தனர்."

jaffna_ariyalai_110500.jpg

 

 


 

 

கைதடி சிறிலங்க தரைப்படைத் தளம் கைப்பற்றப்பட்டது - தவிபு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5042
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:37
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28
/4/2023

கைதடியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிறிலங்கா தரைப்படையின் தளத்தை தாங்கள் பரம்பியதாகவும், நூறு படையினரைக் கொன்று மேலும் நூற்றுக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியதாகவும், தென்மராட்சி வட்டக்கூறிலுள்ள ஆயிரக்கணக்கான சிறிலங்கா தரைப்படையினரோடான இணைப்பை துண்டித்ததாகவும் விடுதலைப் புலிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

புதனன்று அவர்களின் இலண்டன் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்ட கூற்றுரையில், புலிகள் யாழ்ப்பாணத்தில் மக்கள் வசிக்கும் பரப்புகளுக்கு எறிகணைத் தாக்குதல் நடத்தியதாக சிறிலங்கா அரசாங்கத்தின் "பலதர பரப்புரைக்" கோரிக்கைகளை புறக்கணித்ததோடு யாழ்ப்பாணத்தின் வடமேற்கே ஓம்பமான பரப்புகளுக்கு பொதுமக்கள் செல்வதை சிறிலங்கா தரைப்படை தடுக்கிறது என்றனர்.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை வருமாறு:

"தமிழீழ விடுதலைப் புலிகளின் (தவிபு) கனமாக ஆயுதம் பூண்ட அதிரடிப்படைப் பிரிவுகள் இன்று மாலை கைதடியில் உள்ள வலுவெதிர்ப்புக் கோடுகளுக்குள் புயலென நுழைந்து கூட்டுப்படைத்தளத்தைப் பரம்பியதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதுடன் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர்.

"வலுவாக அரணப்படுத்தப்பட்ட படைத்தளங்களைக் கொண்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கைதடி தானைவைப்பு நகரமானது 12 மணிநேர முரட்டுத்தனமான அடிபாட்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் சண்டை உருவாக்கங்களிடம் வீழ்ந்தது. யாழ். நகர் மற்றும் பலாலி வானூர்தி நிலையத்தை தளமாகக் கொண்ட அரசாங்க படையினருக்கான முக்கியமான வழங்கல் பாதைகளுடனான சூனிய வலயத்தை உருவாக்கியது, யாழ். நகரின் நுழைவாயிலிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கைதடி ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிக் கோட்டத்தில் நிலைகொண்டுள்ள ஆயிரக்கணக்கான படையினருக்கு பாரிய தளவாடச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய நாவற்குளி பாலத்தையும் கைதடி ஊடாகப் பிரியும் முதன்மை கோப்பாய் வீதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையானது புலிப் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

"கைதடி கூட்டுப்படைத்தளத்தின் மீது நேற்றிரவு புலிப் போராளிகள் கனவகை சேணேவி மற்றும் கணையெக்கி சூட்டாதரவுடன் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளனர். புலிகளின் கடுந்தாக்குதலின் வேகத்தினாலும், வெறித்தனத்தினாலும் கறங்கிய சிறிலங்காப் படையினர் தங்களது கடுமையான எதிர்ப்பைக் கைவிட்டு, இறந்த கூட்டாளிகளை விட்டுவிட்டு முற்றிலும் சீர்குலைந்து தப்பியோடினர். கவசவூர்திகள் உட்பட ஏராளமான நவீன ஆயுதங்களை தமிழ் புலிப் போராளிகள் மீட்டுள்ளனர். இந்தக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தானைவைப்பு நகரமும் அதைச் சுற்றியுள்ள ஊர்களும் வீழ்ச்சியடைந்ததால் சாவகச்சேரி நகரம் புலிகளின் தாக்குதலுக்கு வடுப்படத்தக்கூடிய நிலையில் உள்ளது.

"இதற்கிடையில், யாழ்ப்பாண நகரின் கரையோர வட்டக்கூறுகளின் நகராட்சிப் புறஞ்சேரிகளில் சண்டை தொடர்ந்தது. வலிகாமம் மேற்கிலுள்ள பாதுகாப்புப் புலங்களைக் குறிப்பிட்டு ஓம்பமான பரப்புகளுக்குச் செல்லுமாறு விடுதலைப் புலிகள் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

"எமது போராளிகள் அதிக மக்கள் தொகை கொண்ட பரப்புகளில் சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைகளால் குத்துகின்றனர் என்ற அரசாங்கத்தின் பலதர பரப்புரையையும் புலிகள் மறுக்க விரும்புகின்றனர். ஊரடங்குச் சட்டம் என்ற காப்புமறைப்பின் கீழ் பொதுமக்களின் ஓம்பமான இடங்களுக்கான இலகுவான நடமாட்டத்தை தடுப்பது சிறிலங்கா தரைப்படையே என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

பலாலியில் புலிகள் எறிகணை வீச்சு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5044
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:34
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 28
/4/2023

பலாலியில் உள்ள சிறிலங்கா தரைப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளால் வீசப்பட்ட சேணேவி எறிகணைகள் முதன்மை தொலைத்தொடர்பு கோபுரத்தையும் வடக்கு கூட்டுப்படைத்தளத்தின் வானூர்தித்திடலையும் (airfled) தாக்கியதாக புலிகளின் குரலின் வணிக ஒலிபரப்பான தமிழீழ வானொலி தனது வியாழக்கிழமை மாலை 5 மணி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. இந்த எறிகணைத் தாக்குதலில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் கொல்லப்பட்டதாக வானொலி தெரிவித்துள்ளது.

எறிகணை தாக்குதலால் தளத்தின் பல பகுதிகளும் தாக்கப்பட்டன என்று வானொலி கூறியது.

இதற்கிடையில், பலாலியின் உயர் பாதுகாப்பு வலயத்தில் சுமார் 6 எறிகணைகள் தாக்கியதாக கொழும்பில் உள்ள சிறிலங்காத் தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன, ஆனால் வானூர்தி அட்டவணைகள் பாதிக்கப்படவில்லை என்று கூறினர்.

யாழ் குடாநாட்டில் விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் 3 உடன் சமராடும் பல ஆயிரம் சிறீலங்காப் படையினருக்கு உள்ள ஒரே வான்படைத் தளம் பலாலி ஆகும். பறப்புகளில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், சிறிலங்கா தரைப்படைக்கான வழங்கல் பாதைகள் கடுமையாக மிகுமுயற்சிப் படுத்தப்படும்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

பலாலி எறிகணை வீச்சு யாழ்ப்பாணக் கப்பலை நீக்கறன்றது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5045
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:03
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29
/4/2023

கிழக்கின் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி புறப்படவிருந்த 'சிட்டி ஒஃவ் றிங்கோ' என்ற பயணிகள் கப்பல் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிலங்கா கடற்படையினரால் நீக்கறல் செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்கு வட்டக்கூறில் பரந்து விரிந்த பலாலி கூட்டுப்படைத்தளத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் 350 பயணிகளுடன் புறப்படயிருந்தது. புதன்கிழமை முதல் தளத்தின் மீது தமது சேணேவிப் பிரிவுகள் சூடு நடத்தி வருவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

குடாநாட்டில் முன்னகர்ந்து வரும் விடுதலைப் புலிகளின் படையினருடன் சமரிடும் சிறிலங்காப் படையினருக்கு பலாலி வான்தளமும் காங்கேசன் துறைமுகமும் மட்டுமே இயலுமான வழங்கல் புள்ளிகளாகும்.

இந்த தளத்தின் மீது புலிகள் பல சரமாரி சூடு நடத்தியதில் 7 வீரர்கள் கொல்லப்பட்டதோடு 28 பேர் காயமடைந்தனர் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. புலிகளின் சேணேவித் தாக்குதல் தளத்தின் தொலைத்தொடர்பு கோபுரத்தைத் தகர்த்ததோடு ஓடுபாதையையும் தாக்கியதாக புலிகளின் குரல் வானொலி தெரிவித்தது.

காங்கேசன் துறைமுகம் விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்செல்லைக்குள் இருக்கலாம் என கொழும்பில் உள்ள படைய வட்டாரங்கள் தெரிவித்தன. புதன்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்புகொண்ட யாழ்ப்பாண நாளிதழ் வட்டாரங்கள், பலாலி தளத்திலிருந்து சுமார் 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோப்பாய் வெளிக்குள் காகங்கள் பறந்தபடியிருப்பதால் விடுதலைப் புலிகள் முன்னகர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

புலிகளால் சிறிலங்கா தரைப்படையிடமிருந்து கைப்பற்றப்பட்ட 122 மிமீ தெறோச்சிகள் 17 கிலோமீட்டர் தாக்க வரம்பு உடையவையாகும்.

புலிகளுக்கு எதிரான படையினரின் தற்போதைய நடவடிக்கைகளைத் தக்கவைக்க, பலாலி மற்றும் குடாநாட்டிலுள்ள ஏனைய முக்கிய முகாம்களில் தமது படையினருக்கான போதிய பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் சேணேவித் தாக்குதலால் ஏற்பட்ட அச்சுறுத்தலின் அளவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தது. 

எவ்வாறாயினும், பலாலி ஓடுபாதையை புலிகள் தமது களச் சுடுகலன்களால் குறிசுட்டால், குடாநாட்டில் இடம்பெற்று வரும் சமர்களில் காயமடைந்த படையினரை வெளியேற்றுவதில் பாரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும் என தரைப்படைக் கட்டளையாளர்கள் கவலையடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வலுத்த காயங்களுக்குள்ளான முன்னணிப் படையினரை வான்வழியாக வெளியேற்ற முடியாவிட்டால், மனவுறுதியும் ஒழுக்கமும் மேலும் வீழ்ச்சியடையும் என்று - பலாலி ஓடுபாதையே யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே வானூர்தித்திடலாக உள்ளதால், அவர்கள் கவலைப்படுவதாக கொழும்பில் உள்ள படைய வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் செல்வதற்காக மூவாயிரத்து நாற்பது பேர் பதிவு செய்து இருக்கைகளை முன்பதிவு செய்துள்ளதாக திருகோணமலை கோட்டச் செயலக அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்திலிருந்தும் செல்வதற்கு காத்திருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் கப்பல் புறப்பட்டது. மார்ச் மாத இறுதியில் புலிகள் குடாநாட்டிற்குள் தங்கள் வலிதாக்குதலை முடுக்கிவிட்டதையடுத்து இந்தச் சேவை நீக்கறல் செய்யப்பட்டது. 'லங்கா முடித' என்ற இந்தக் கப்பல் படையினரை ஏற்றிச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.

சிலோன் கப்பல் கூட்டுத்தாவனத்தால் யாழ்ப்பாணத்திற்கும் அங்கிருந்து வேறிடங்களிற்கும் பயணிகளின் போக்குவரவிற்காக கொள்வனவு செய்யப்பட்ட 'லங்கா ராணி' மற்றும் 'லங்கா தேவி' ஆகிய இரண்டு கப்பல்கள்,  குடாநாட்டில் விடுதலைப் புலிகளின் முன்னகர்ந்து வரும் சண்டை உருவாக்கங்களின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில், கடந்த மாதம் சிறிலங்கா தரைப்படையால் அவற்றின் தளவாட பயன்பாட்டிற்காக முறைப்பற்றப்பட்டது

கடலோரக் கடற்பரப்பில் கடற்புலிகளைத் தவிர்ப்பதற்காக, சிறிலங்காக் கடற்படையானது, தீவின் வடகிழக்கு கடல்சார் வலயத்திற்கு அப்பால் அனைத்துலகக் கடற்பரப்பில் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு படைய வழங்கல் கப்பல்களை அழைத்துச் செல்கிறது.

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு வட்டக்கூறிலிருந்து திருகோணமலை மாவட்ட எல்லையை அண்மித்த கொக்குத்தொடுவாய் வரையிலான நீண்ட கடற்கரையை விடுதலைப் புலிகள் இப்போது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

 

 


 

 

சேணேவித் தாக்குதல் யாழ்ப்பாண வான்தளம் மற்றும் கடல் துறைமுகங்களை மூடியது - புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5047
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:33
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29
/4/2023

இரண்டும் நேரடி சேணேவிச் சூட்டிற்கு உள்ளானதையடுத்து, சிறிலங்கா தரைப்படை யாழ்ப்பாணத்தின் ஒரே துறைமுகத்தில் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதோடு குடாநாட்டிலுள்ள ஒற்றை வான்பொல்லத்திலிருந்து பறப்புகளை நீக்கறல் செய்துள்ளதாக விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். பலாலி வான்படைத் தளத்தின் ஓடுபாதையிலும் காங்கேசன்துறை துறைமுகத்திலுள்ள படை நிறுவல்களையும் தமது சுடுகலன்கள் தாக்கியதாக விடுதலைப் புலிகள் தமது இலண்டன் அலுவலகங்களிலிருந்து விடுத்துள்ள கூற்றுரையில் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இன்று மட்டுவில் மற்றும் சரசாலை ஆகிய பரப்புகளை முன்னகரும் விடுதலைப் புலிகளின் படையினர் கைப்பற்றியதாகவும், கேந்திர சரசாலை சந்தியில் சண்டை சீற்றமடைவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை வருமாறு:

"கடல் மற்றும் வான் வழியாக சிங்களப் படையினரின் வழங்கலிற்கான ஒரே உயிர்நாடியாகிய காங்கேசன் துறைமுகம் மற்றும் பலாலி வான்படைத் தளத்தின் மீது தமிழ்ப் புலிகள் சேணேவி எறிகணைவீச்சை தீவிரப்படுத்தியதால், யாழ்ப்பாணக் குடாநாட்டில் முடங்கியிருந்த ஆயிரக்கணக்கான சிறிலங்காப் படையினர் வழங்கலில் இடரார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டனர்.

"காங்கேசன் துறைமுகத்தில் நேற்று இரவும் இன்று காலையும் படைய நிலைகள் மீது சேணேவி எறிகணைகள் வீழ்ந்ததில் பல சிறிலங்கா படைய ஆளணியினர் கொல்லப்பட்டனர், இதனால் அரச படையினர் நடுவணில் கிலியும் குழப்பமும் ஏற்பட்டது. இதன் விளைவாக, அரசாங்கம் துறைமுகத்தில் நடவடிக்கைகளை இடைநிறுத்தியதோடு அனைத்து பொதுமக்கள் மற்றும் படைய போக்குவரத்தையும் நீக்கறல் செய்தது.

"பலாலியில் உள்ள வான்படைத் தளம் மற்றும் படைய நிறுவல்கள் மூன்றாவது நாளாக இன்றும் கடுமையான சேணேவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. படைய நிலைகளும் ஓடுபாதையும் அடிக்கடி தாக்கப்பட்டு வான்வழிப் போக்குவரத்துக்கு இடரார்ந்த ஊறை ஏற்படுத்துகிறது. சேணேவி பல்லத்தில் ஏராளமான படைவீரர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.

"இதற்கிடையில், நேற்று இரவு கைதடியில் உள்ள படைத் தளங்களை பரம்பிய கனமாக ஆயுதம் பூண்ட புலிகளின் அதிரடிப்படையினர் நேற்றிரவு சாவகச்சேரி வட்டக்கூறில் மேலும் ஆழமாக முன்னகர்ந்து பரந்த ஆட்புலங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. மட்டுவில் மற்றும் சரசாலையின் பெரும் பரப்புகள் புலிகளிடம் வீழ்ந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சரசாலை சந்தியில் இன்னும் கடுமையான சண்டை சீற்றமடைந்து வருகிறது.

"நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட கிண்ணி இயக்கத்தில், பல ஆயிரக்கணக்கான படையினர் முகாமிட்டுள்ள தென்மராட்ச்சிக் கோட்டத்தின் தலைநகரான சாவகச்சேரி நகரைச் சுற்றி வளைத்து, புலிகளின் சண்டை உருவாக்கங்கள் உள்ளன. சாவகச்சேரி வட்டக்கூறிலுள்ள தமிழ் மக்களை ஓம்பமான பரப்புகளுக்கு செல்லுமாறு புலிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்."

 

 


 

 

புலிகள் சிறிலங்கா தரைப்படையை சரணடையுமாறு வலியுறுத்துகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5048
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 11:14
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 29
/4/2023

விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சிறிலங்கா தரைப்படையினரிடம் "இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்காக" சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆயுதங்களை கீழே போடும் வீரர்கள் "கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவார்கள்" என்றும், "24 மணி நேரத்திற்குள்" அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் காப்பில் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் விடுதலைப் புலிகள் அவர்களின் இலண்டன் அலுவலகங்களில் இருந்து ஒரு கூற்றுரையில் தெரிவித்தனர்.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை வருமாறு:

"தொடரும் அரத்தக்களரியைத் தவிர்ப்பதற்கும், அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் நேரிய பெருமுயற்சியாக, யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான சிறிலங்காப் படையினரிடம் ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுமாறு விடுதலைப் புலிகள் இன்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆயுதங்களை கீழே போடுபவர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் காப்பில் ஒப்படைக்கப்படுவார்கள் என்று புலிகள் உறுதியளித்துள்ளனர்.

"சரணடைவதற்கான அழைப்பு யாழ்ப்பாண போர் அரங்கில் பல்வேறு களமுனைகளில் ஒலிபெருக்கிகள் மூலமாகவும் புலிகளின் குரல் வானொலி மூலமாகவும் அறிவிக்கப்படுகிறது. அவர்களின் உறுதியாக நிலைபெற்றிராத இக்கட்டான தன்மையை விளக்கிய புலிகள், அரசாங்கப் படையினரின் முக்கிய வழங்கல் பாதைகள் துண்டிக்கப்பட்டும் உயிர் இடரார்ந்த ஊறில் உள்ளதையும் அவர்களின் மனதில் பதித்து வருகின்றனர். கொழும்பில் உள்ள பேரினவாத உயரடுக்கின் அரசியல் பேராவல்களை ஊக்குவிப்பதற்காக ஒரு பயனற்ற போரை நடத்த வேண்டிய கட்டாயத்தில் கையாளப்படும் அப்பாவி சிங்கள இளைஞர்களின் பெரும் உயிரிழப்புகளின் மனித அவலத்தைத் தவிர்க்க தமிழ்ப் புலிகள் விரும்புவதாக அவர்களிடம் கூறப்படுகின்றது. சிறிலங்காப் படையினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று விடுதலைப் புலிகளும் ஒரு வார கால சமயம் வழங்கியுள்ளனர்.

"இதற்கிடையில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் மேற்கு மற்றும் வடமராட்சிப் பிரிவுகளில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி, சமர் வலயங்களில் இருந்து ஓம்பமான பகுதிகளுக்குச் செல்லுமாறு புலிகள் தமிழ் பொதுமக்களிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாண நாளிதழை மூடியது சிறிலங்கா தரைப்படை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5049
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 10:58
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30
/4/2023

யாழ்ப்பாண நாளிதழான உதயன் நாளேட்டிற்கு சிறிலங்கா தரைப்படை நேற்று இறுகமூடி முத்திரை வைத்தது. நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள நாளிதழ் அலுவலகத்திற்குச் சென்ற படையினர் கட்டிடத்தைப் பூட்டி, தொலைபேசி இணைப்புகளை அறுத்து திறப்பை எடுத்துச் சென்றதாக நாளிதழிலிருந்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். நாளிதழ்கள் மற்றும் அச்சகங்களை மூடுவதற்கான அதிகாரம் உட்பட சிறப்பாக நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் கொடூரமான சட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் சாற்றாணையிட்டது.

கடந்த வாரம், சிறிலங்கா அதிபரின் இந்திய வான்படைக் கட்டளையாளருடனான சந்திப்பு பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக உதயன் நாளிதழின் உதவிப் பொது முகாமையாளரும் இணை ஆசிரியருமான சி.என்.வித்தியாதரனுக்கு சிறிலங்கா தரைப்படை எழுதருகையிட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் அலுவலகத்திற்கு நேற்று மாலை 7 மணியளவில் நான்கு படையப் பாரவூர்திகளில் படையினர் வந்துள்ளனர். உதயன் அச்சகமும் நாளிதழின் அலுவலக வளாகத்திலேயே உள்ளது.

நேற்றிரவு கொழும்பில் உள்ள ஊழியர்களை தொடர்பு கொண்ட உதயன் ஊடகவியலாளர், படையினர் தாங்கள் நாளிதழை மூடுவதாக நாளிதழ் ஆசிரியருக்கு அறிவித்ததாக தெரிவித்தார். வெளிப்படையான காரணம் எதுவும் கூறப்படவில்லை என ஊடகவியலாளர் மேலும் தெரிவித்தார்.

செய்தித்தாள்கள் மற்றும் அச்சகங்களை மூடுவதற்கான அதிகாரம் பொது பாதுகாப்பு ஆணை (அத்தியாயம்) பிரிவு 5 இன் கீழ் வெளியிடப்பட்ட 2000 ஆம் ஆண்டின் அவசரநிலை (இதர விதிகள் மற்றும் அதிகாரங்கள்) ஒழுங்குமுறை எண்.1 இன் பிரிவு 14 இன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

 

 


 

 

யாழ்ப்பாணத்தில் புலிகள் மேலும் முன்னகர்வு - புலிகளின் குரல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5050
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:45
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30
/4/2023

யாழ்ப்பாணக் குடாநாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சாவகச்சேரியின் அணுகுவழியை வலுவெதிர்த்து நின்ற சிறிலங்கா படைநிலைகளை முன்னகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளின் படையினர் கைப்பற்றியதாக புலிகளின் குரல் இன்று நண்பகல் தனது சிறப்புச் செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் தெற்கு வட்டக்கூறிற்குட்பட்ட தென்மராட்சிக் கோட்டத்திலுள்ள அரச படையினருக்கான பலாலியிலிருந்ததான மூன்றாவது வழங்கல் பாதையை இடைநிறுத்துவதற்காக புலிகளின் சிறப்புப்படைகள் பல முனைகளில் நள்ளிரவு முதல் முன்னகர்ந்ததாக வானொலி தெரிவித்தது.

மட்டுவில் பாடசாலை வளாகத்திலுள்ள சிறிலங்கா தரைப்படை முகாமும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் பரம்பட்டதாக புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

வானொலியின் படி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில், கனகம்புளியடிச் சந்தி, மட்டுவில் சிவன் கோவிலடி, சரசாலை மற்றும் மட்டுவில் சந்தி ஆகிய இடங்களில் சிறிலங்கா படைநிலைகள் பரம்பப்பட்டன. புத்தூரில் இருந்து சரசாலை செல்லும் சாலையின் தென்கிழக்கு வட்டக்கூறில் இந்த நிலைகள் உள்ளன. புத்தூரானது யாழ்ப்பாண நகரத்திலிருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில் உள்ளது. சிறிலங்கா தரைப்படையின் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து காகம் பறந்து செல்வதால் எட்டு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவே உள்ளது.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் அண்மைய முன்னகர்வுகள், புலிகளின் குரலின் படி, யாழ்ப்பாணத்தின் தெற்கு வட்டக்கூறிலுள்ள சிறிலங்கா தரைப்படையினருக்கான அனைத்து வழங்கல் வழிகளையும் துண்டிக்க அச்சுறுத்துகிறது. தென்மராட்சிக் கோட்டத்தில் கிளாலி, கொடிகாமம், கச்சாய் மற்றும் சாவகச்சேரி ஆகிய இடங்களில் சிறிலங்கா தரைப்படை நான்கு தானைவைப்புகளைக் கொண்டுள்ளது.

சரசாலை மற்றும் மட்டுவில் வீழ்ச்சியுடன், கொடிகாமம் - வரணி வீதியானது தென்மராட்சியில் படையினரின் முதன்மை இயலுமான வழங்கல் பாதையாக உள்ளது. இந்த வீதிக்கு மிக அருகிலுள்ள பரப்புகளுக்குள் முன்னகர்ந்துள்ள புலிகளால் முற்றாக இடைநிறுத்தப்படும் பேரிடர் இதற்குள்ளது.

இதற்கிடையில், தென்மராட்சிக் கோட்டத்தின் சிறீலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலுள்ள பெருமளவிலான பொதுமக்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமராட்சியின் ஊர்கள் மற்றும் நகர்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக வடகிழக்கு வட்டக்கூறு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

சாவகச்சேரி கைப்பற்றப்பட்டது - தவிபு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5051
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:11
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30
/4/2023

யாழ்ப்பாணக் குடாநாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சாவகச்சேரி, 12 மணித்தியாலக் கடுமையான சண்டைக்குப் பின்னர், சனிக்கிழமை விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்ததாக, விடுதலைப் புலிகள் தமது இலண்டன் அலுவலகத்தின் ஊடக வெளியீட்டில் தெரிவிக்கின்றனர். தென்மராட்சி வட்டக்கூறில் சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கடைசி இடமான கொடிகாமத்தை நோக்கி சிறிலங்கா தரைப்படையினர் படையினர் தப்பியோடிக்கொண்டிருந்ததாக புலிகள் தெரிவித்தனர்.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை வருமாறு:

"தென்மராட்சிக் கோட்டத்தின் தலைநகரான சாவகச்சேரி நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்படைகளிடம் வீழ்ந்ததால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் விடுதலைக்கான போரில் சிறிலங்கா தரைப்படை மற்றொரு கடுமையான படையப் பின்னடைவைச் சந்தித்தது. யாழ் குடாநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம் 12 மணிநேர முரட்டுத்தனமான சண்டையின் பின்னர் தமிழ் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

chaa.jpg

"இன்று அதிகாலை சாவகச்சேரி நகரின் மீது சேணேவி மற்றும் கணையெக்கி சூட்டாதரவுடன் தமிழ்ப் புலிகளின் கனமாக ஆயுதம் பூண்ட அதிரடிப்படையின் நெடுவரிசைகள் பலமுனைத் தாக்குதலைத் தொடுத்தன. நாள் முழுவதும் கடுமையான சண்டை நீடித்தது. புலித் தாக்குதலின் வலுவையும் சீற்றத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அரசாங்கப் படையினரின் எதிர்ப்பு மாலை 6 மணியளவில் சரிந்து குழப்பமான பின்வாங்கும் உச்சக்கட்டத்தை அடைந்தது. தோற்கடிக்கப்பட்டு மனச்சோர்வுக்கு ஆளான படையினர் தென்மராட்சி வட்டக்கூறில் சிறிலங்கா தரைப்படையின் கடைசி வலுவெதிர்ப்பு நிலையான கொடிகாமம் நகரை நோக்கி தப்பிச் செல்கின்றனர்.

"சாவகச்சேரியில் இடம்பெற்ற அரத்தக்களரிச் சமரில் சிறிலங்கா தரைப்படை வலுத்த உயிர்ச்சேதத்தை சந்தித்தது. நகரப் பரப்பு முழுவதும் படைவீரர்களின் சடலங்கள் சிதறிக் கிடக்கின்றன. விடுதலைப் புலிப் போராளிகள் பெருமளவு படைக்கலன்களையும் கணைகளையும் மீட்டுள்ளனர்.

"நேற்றும் நேற்றிரவும் இடம்பெற்ற கடும் சண்டையில், மட்டுவில், நுணாவில் மற்றும் சரசாலை சந்தியில் உள்ள படைத் தளங்களை புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் பரம்பி சாவகச்சேரி வட்டக்கூறில் பரந்துபட்ட ஆட்புலங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. சாவகச்சேரி நகரமும் அதனைச் சூழவுள்ள ஊர்களும் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்ததையடுத்து, தப்பியோடிய சிறிலங்கா தரைப்படையினருக்கு குடாநாட்டின் தென்மராட்சிக் கோட்டத்தில் கொடிகாமம் நகரமே கடைசிக் கொத்தளமாக விளங்குகிறது.

"கொடூரமான தணிக்கைச் சட்டங்களின் இரும்புத்திரைக்குள் மறைந்துகொண்டு, இந்த வாரத்தில் சிறிலங்கா தரைப்படை சந்தித்த அவமானகரமான படையத் தோல்விகள் மற்றும் கனமான இழப்புகள் அனைத்தையும் வெட்கமின்றி மறுத்துள்ள சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு, உலக ஊடகங்களுக்கு போர்ச் செய்திகளின் பிழையான மற்றும் திரிக்கப்பட்ட பதிப்புகளைப் பரப்புரை செய்து வருகிறது."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சிறிலங்காப் படையினருக்கு புலித் தடூகங்கள் அழுத்தம் கொடுக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5052
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:56
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 30
/4/2023

யாழ்ப்பாணத்திலிருந்து பதினைந்து கிலோமீற்றர் தெற்கே உள்ள சாவகச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலுள்ள சிறீலங்கா தரைப்படையின் தானைவைப்புகள் மற்றும் ஏனைய வலுவெதிர்ப்பு நிலைகளை சனிக்கிழமை பரம்பிய விடுதலைப் புலிகளின் சிறப்புப் படைகள், குடாநாட்டின் தென்மராட்சிக் கோட்டத்திலுள்ள கிளாலித் தளம் மற்றும் எஞ்சிய சிறிலங்கா தரைப்படை நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன என்று இன்றைய புலிகளின் குரலின் விசேட நண்பகல் செய்தி ஒலிபரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தரைப்படையின் 52-3 படைப்பிரிவும், சிறிலங்காக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளமும் யாழ்ப்பாணக் களப்பின் கரையோரத்தின் முக்கியப் புள்ளியான கிளாலியில் தளமிட்டுள்ளன.

சிறப்புப் படகுச் சதளம் என்பது சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் ஒரு அதிசிறப்பு சண்டைப் பிரிவாகும். இது தீவின் தெற்குக் கரையோரத்தில் உள்ளவொரு ஒதுக்கமான தளத்தில் அமெரிக்க கடற்படையின் SEAL-களால் (சீல்) பயிற்சியளிக்கப்பட்டது ஆகும். கடந்த மாதம் புலிகள் பளை நகரத்தை பரம்பி கிளாலியின் வெளிப்புற வலுவெதிர்ப்புகளுக்கு அருகில் கடுகதியில் முன்னகர்ந்த போது, தளத்தின் வலுவெதிர்ப்பை வலுவூட்ட ஒரு நிரப்புக்கூறான தரைப்படையின் அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டனர்.

இதேவேளை நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் தென்மராட்சி வட்டக்கூறிலிருந்து சிறிலங்கா தரைப்படை படையினரை வெளியேற்றுவதாக தெரிவித்தார். பின்வாங்கப்பட்ட படையினர் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகிழக்கில் வடமராட்சிக் கோட்டத்தின் பல பகுதிகளில் தற்காலிகமாக முகாமிட்டுள்ளனர். அவரது அறிக்கையை தனித்தமாக சரிபார்க்க முடியவில்லை.

சாவகச்சேரியின் வீழ்ச்சியுடன், ஏப்ரல் 22 அன்று கேந்திர ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை பரம்பி தென்மராட்சிக் கோட்டத்தை எழுதுமட்டுவாள், கிளாலிக்கு அப்பால் பாரிய புலத்தில் வைத்திருக்கும் புலிப் படையினருக்கும் கொடிகாமத்திலிருந்து வரணி ஊடாக வடமராட்சிக்கு செல்லும் இணைப்புப்பாதையில் தன்னம்பிக்கையுடன் முன்னகர அணியமாகவுள்ள விடுதலைப் புலிகளின் படைகளுக்கும் இடையில் சிறிலங்கா அரச படையினர் சிக்கிக்கொள்ளும் பேரிடர் ஏற்பட்டுள்ளது.

புலிகளின் சுற்றிவளைக்கும் தடூகங்களை முன்கூட்டியே முறியடிப்பதற்காக கொடிகாமம் மற்றும் கிளாலியை படையினர் காலி செய்தால் அல்லது புலிகள் இரண்டு தானைவைப்புகளை கறங்கினால் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிக் கோட்டத்தின் மீதான பிடியை சிறிலங்கா அரச படைகள் முற்றாக இழக்க நேரிடும்.

தென்மராட்சி மீதான கட்டுப்பாடு, சிறிலங்கா தரைப்படையின் பரந்து விரிந்த பலாலி கூட்டுப்படைத்தளம் அமைந்துள்ள வலிகாமம் கோட்டத்திற்குள் பல முனைகளில் முன்னகர்வதற்கு புலிகளுக்கு ஒரு தனியான தளவாட நன்மையை வழங்கும். தென்மராட்சியில் இருந்து வடக்கிலும் மேற்கிலும் பரவும் வீதிகள் வன்னியிலிருந்து வலிகாமம் மற்றும் வடமராட்சிக்கு நேரடி அணுகலை வழங்கும்.

தென்மராட்சியை முழுமையாகக் கட்டுப்படுத்தினால், சிறிலங்கா தரைப்படையினருக்கு எதிராக தற்போது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் புலிகளின் சிறப்புப் படைகள், காலாட்படைப் பிரிவுகள் மற்றும் சேணேவி மற்றும் கணையெக்கித் தொகுதிகள் விடுவிக்கப்படும்.

எவ்வாறாயினும், சிறிலங்கா அரசாங்கமானது கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் அனுப்பிய ஊர்தியில் மூட்டப்படும் வலுவாய்ந்த 24 குழல் உந்துகணை செலுத்தி முறைமை உட்பட்ட புதிய ஆயுத முறைமைகளின் மூலம் அலைகளை மாற்றும் நிலையில் தாம் உள்ளதாக வலியுறுத்துகிறது. புதிய ஆயுத முறைமைகளை புலிகளுக்கு எதிராக திறம்பட ஆய்வு செய்து இயக்குவதற்கு சிறிலங்கா தரைப்படை பணியாளர்களுக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகலாம் என்று வவுனியாவில் உள்ள படைய வட்டாரங்கள் கூறுகின்றன.

அப்போதும் கூட, புலிகளின் சேணேவிகள் மற்றும் 120 மிமீ கணையெக்கி நிலைகளை துல்லியமாக இடங்காண்வதிலும் அடையாளம் காண்பதிலும் உள்ள அடிப்படை சிரமம் குறித்து எதுவும் செய்யவில்லை என்றால், புதிதாக ஈட்டிய படைக்கலன்கள் புலிகளின் வலிதாக்குதலை நிறுத்துவதில் அதிகப் பயனை அளிக்காது.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள், புலிகள் 1996 ஆம் ஆண்டு முதல் தாம் கறங்கிய அரசாங்க தானைவைப்புகளில் இருந்து சேணேவிகளையும் 120 மிமீ கணையெக்கிகளையும் கைப்பற்றத் தொடங்கியதிலிருந்து இந்தச் சிக்கல் சிறிலங்கா தரைப்படையை விடாப்பிடியாக தொடர்ந்ததாகக் கூறினர். இதுவரை சிறிலங்கா தரைப்படையால் விடுதலைப் புலிகளின் சேணேவி அல்லது 120 மி.மீ கணையெக்கி நிலைகள் எதையும் இடங்காணவோ, சேதப்படுத்தவோ அல்லது அழிக்கவோ முடியவில்லை.

1997 ஆம் ஆண்டில் அமெரிக்காவிடமிருந்து அதிநவீன சூடு கண்டுபிடிக்கும் கதுவீ முறைமையின் பல அலகுகளை கொள்வனவு செய்து களமிறக்கிய போதிலும் சிரமம் நிலைப்புற்றுள்ளது.

 

 


 

 

முதியோர் இல்லத்தில் எறிகணை வீச்சு - பதினைந்து பேர் சாவு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5053
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 11:21
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/5/2023

யாழ்ப்பாண நகரின் கிழக்கே கைதடியில் உள்ள முதியோர் இல்லம் மே 19 வெள்ளிக்கிழமை சேணேவி எறிகணைகளால் தாக்கப்பட்டதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் 31 பேர் காயமடைந்ததாகவும் வடக்கிலுள்ள உதவி முகவரக வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. மே 17 அன்று விடுதலைப் புலிகள் இந்தச் சந்தி நகரைச் சுற்றியிருந்த சிறிலங்கா தரைப்படையின் படைநிலைகளைக் கைப்பற்றியதிலிருந்து கைதடிப் பொதுப் பரப்பு மீது படையினர் அதிகளவில் எறிகணை வீச்சு நடத்தி வருகின்றனர்.

எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட வீட்டின் உள்ளிருந்தவர்களின் சடலங்கள் துண்டு துண்டாக வீசப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கைதடி முதியோர் இல்லத்தின் மீது எறிகணைகள் வீழ்ந்ததில் 11 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் முப்பத்தைந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சண்டையின் காரணமாக அப்பரப்பில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் காயமடைந்த முதியவர்களில் நான்கு பேர் பின்னர் இறந்தனர்.

கைதடி தரைப்படையின் கட்டுப்பாட்டில் இல்லாததால் வெள்ளிக்கிழமை படுகொலை நடந்த இடத்தை பார்வையிட முடியாத நிலையில் உள்ளதாக இச்சம்பவம் குறித்து இன்று தகவல் அறிந்த யாழ்ப்பாணத்தில் உள்ள உதவி முகவரகங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

துறைமுகத்திற்கு அப்பால் புலிகளின் சுடுகலன்கள் நெருங்குகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5054
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 11:36
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/5/2023

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா படைத்துறையின் ஒரே துறைமுகமான காங்கேசன்துறைக்கு (கேகேஎஸ்) மேற்கிலுள்ள கரையோரப் பரப்புகளை விடுதலைப் புலிகளால் சுடப்பட்ட சேணேவி எறிகணைகள் தாக்கியதாக நேற்று வடக்குக் குடாநாட்டிலிரிந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. பலாலி மற்றும் காங்கேசன்துறையில் உள்ள பரந்து விரிந்த கூட்டுப்படைத்தளத்திற்கு அருகில் புலிகள் தமது களச்சுடுகலன்களை நகர்த்தியுள்ளதாக எறிகணை வீச்சுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சனிக்கிழமை யாழ்ப்பாணத்தின் வடக்கு மற்றும் வடமேற்குக் கரையோரங்களில் படைநிலைகளை அச்சுறுத்தும் வகையில் செந்தாங்குளம், முன்னான், இளவாலை மற்றும் மாதகல் ஆகிய இடங்களில் புலிகளால் வீசப்பட்ட எறிகணைகள் வீழ்ந்தன.

தென்மராட்சிக் கோட்டத்தில் எஞ்சியுள்ள சிறிலங்கா படைமுகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக புலிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அரியாலையில் இருந்து சாவகச்சேரி வரையிலான ஏ9 நெடுஞ்சாலையின் 13 கிலோமீற்றர் தற்போது தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மீசாலைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையிலான ஆறு கிலோமீற்றர் வீதி மாத்திரமே தற்போது சிறிலங்கா தரைப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்று மட்டுவில் தெற்கில் சிறிலங்கா தரைப்படையின் எறிகணை வீச்சில் கந்தசாமி பூமணிதேவி என்ற பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளான பிரபாலினி (லக்கி) மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் இன்று தனது இரவுச் செய்தியில் தெரிவித்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

குண்டுக் காப்பரண்களை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5055
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:31
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/5/2023

சிறிலங்கா வான்படையின் தாரை வானூர்திகளின் கடும் வான்குண்டு வீச்சிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பதுங்ககழிகளை அமைக்குமாறு ஞாயிற்றுக்கிழமை முதல் தென்மராட்சி வட்டக்கூறிஉள்ள பொதுமக்களிடம் புலிகளின் குரல் வானொலி மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. சனிக்கிழமை விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட மட்டுவில் வட்டக்கூறு மீது சிறிலங்கா தரைப்படை நேற்று எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் வானொலி தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் ஒலிபரப்பின்படி தென்மராட்சிக் கோட்டத்தின் தெற்கு வட்டக்கூறில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை கைதடி கள்ளிக்காடு ஊரின் மீது சிறிலங்கா தரைப்படையினர் சேணேவிகள் மூலம் வீசியதில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வானொலி தெரிவித்துள்ளது. மே 17 அன்று புலிகள் கைதடியைக் கைப்பற்றினர். அன்றிலிருந்து சிறிலங்கா தரைப்படை அப்பரப்பில் கடுமையான எறிகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. மே 19 வெள்ளியன்று முதியோர் இல்லம் ஒன்று சிறிலங்கா தரைப்படையின் எறிகணை வீச்சில் தாக்கப்பட்டதில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர்.

 

 


 

 

செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் நீக்கறப்பட்டது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5057
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 7:41
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/5/2023

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பில் உள்ள செய்தித் தொடர்பாளர் திரு. கர்ச குணவர்தன, பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான தனது அமைப்பின் வாராந்திர கப்பல் சேவை திங்கட்கிழமை நீக்கறப்பட்டதாக தமிழ்நெட்டிற்கு தெரிவித்தார். செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் கிழக்குத் துறைமுக நகரமான திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்குச் செல்லவிருந்தது.

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளிடம் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெற முடியாத காரணத்தினால் கப்பல் நீக்கறப்பட்டதாக (cancel)  திரு.குணவர்தன கூறினார்.

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி வான்படைத் தளத்தின் மீது சேணேவித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்

முன்னதாக, விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட சேணேவி எறிகணைகள், காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு மேற்கே உள்ள கரையோரங்களையும் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5064
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:55
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/5/2023

தென்மராட்சிக் கோட்டத்திற்குட்பட்ட சரசாலைக்கு அருகில் இன்று மாலை சிறிலங்கா வான்படையின் தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

வான்கலத்திலிருந்த இரண்டு சூட்டாளர்களும் கொல்லப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

வான் குண்டுவீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வானொலி கூறுகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5064
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:55
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/5/2023

புலிகளின் குரல் வானொலியின் வெள்ளிக்கிழமையின் இரவு நேர செய்தி ஒலிபரப்பின் படி, சாவகச்சேரிக்கு தென்மேற்கே மறவன்புலவு ஊரில் இன்று காலை 11 மணியளவில் கிஃபிர்களால் மேற்கொள்ளப்பட்ட கடும் வான்குண்டு வீச்சில் விசுவலிங்கம் மற்றும் அரியநாயகம் என அடையாளம் காணப்பட்ட இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பதினெட்டு பேர் காயமடைந்துள்ளனர். மட்டுவில் சிவன்கோவிலடியில் இன்று காலை சிறிலங்கா தரைப்படையினர் வீசிய எறிகணைகள் இளம் தாயான சிவநேசன் அன்னைமேரியும் அவரது கைக்குழந்தையும் வசித்த வீட்டைத் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.

மே 19 அன்று எறிகணை வீச்சிற்கு உள்ளான கைதடியில் உள்ள முதியோர் இல்லத்தின் காவலாளி மற்றும் பல உள்ளிருப்பாளர்களையும் வானொலி செவ்வி கண்டது. சாந்தி நிலையத்தில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயமடைந்தனர்.

காவலாளி மேரி லூர்து ஞானப்பிரகாசம் படுகொலைகளை விரித்ததுடன், முதியோர் இல்லத்தின் மீது சிறிலங்கா தரைப்படை எறிகணைகளை வீசியதாகக் கூறினார். சிறிலங்கா தரைப்படையினரால் வீசப்பட்ட எறிகணைகள் இல்லத்தின் பல கட்டில்களை கடுமையாகச் சேதப்படுத்தியதாக உள்ளிருப்பாளர்கள் தெரிவித்தனர். அவர்களும் கடுமையான சேணேவித் தாக்குதலால் இல்லம் தாக்கப்பட்ட போது ஏற்பட்ட இறப்புகள் மற்றும் காயங்களை விரித்தனர். தாங்கள் செல்வதற்கு எங்கும் இடமில்லை என்றும், எனவே சிறிலங்கா எறிகணைத் தாக்குதலுக்கு ஆளானதாகவும் அவர்கள் செவ்வி கண்டவரிடம் தெரிவித்தனர்.

 

 


 

 

பொதுமக்களை வெளியேற்ற போர் நிறுத்தம் - புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5077
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 10:46
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/5/2023

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சி கோட்டத்திற்குட்பட்ட சமர் வலயங்களில் இருந்து பொதுமக்களை ஓம்பமான பரப்புகளுக்கு வெளியேற்றுவதற்கு வசதியாக மே 27 சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிக போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடிக்கவுள்ளதாக விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை தமது இலண்டன் அலுவலகங்களிலிருந்து வெளியிட்ட கூற்றுரையில் தெரிவித்தனர். யு.என்.எச்.சி.ஆர் வெளியேற்றத்திற்கு ஆற்ற உள்ளதாக புலிகள் தெரிவித்தனர். சிறீலங்கா ஆயுதப்படையினரின் கண்மூடித்தனமான எறிகணை மற்றும் வான்குண்டு வீச்சுகளால் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 150 பேர் காயமடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் கூற்றுரை தெரிவித்ததோடு சிறிலங்கா தரைப்படை பொதுமக்களை ஓம்பமான பரப்புளுக்கு நகர்வதையும் தடுக்கிறது என்று மேலும் கூறியது.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை வருமாறு:

"யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிக் கோட்டத்திற்குட்பட்ட சமர் வலயங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பான பரப்புகளுக்கு வெளியேற்றுவதற்கு வசதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் நாளை (27.5.00) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிக வைரக அறவுளியை கடைபிடிக்கவுள்ளனர். யு.என்.எச்.சி.ஆர் இன் வதிவிடவாளர் நிகராளிகள், ஓம்பத்திற்காக குறியிடப்பட்ட புலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு ஆற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த விதப்பிட்ட(specific) காலத்தில் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு வசதியாக தென்மராட்சியில் ஆயுத செயல்களை நிறுத்துமாறு சிறிலங்கா ஆயுதப்படைகளிடம் யு.என்.எச்.சி.ஆர் கோரிக்கை விடுத்துள்ளது.

"தமிழ்ப் புலிகளால் விடுவிக்கப்பட்ட யாழ் குடாநாட்டில் பொதுமக்கள் வசிக்கும் பரப்புகளில் சிறிலங்கா ஆயுதப்படைகள் தொடர்ச்சியான கண்மூடித்தனமான சேணேவிப் பல்லத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். கிபிர் அடிபாட்டு வானூர்திகளும் குடியிருப்புப் பரப்புகளில் திட்டமிட்டு வான்குண்டு வீசி வருகின்றன. இந்தப் பகரடி வான்வழி மற்றும் சேணேவித் குண்டுவீச்சுகளில் இதுவரை 40 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

"யாழ்ப்பாணத்தின் விடுதலைக்கான வலிதாக்குதல் படையெழுகை தொடங்கியதிலிருந்தே, தமிழ்ப் புலிகள் அடிபாட்டு வலயத்திலுள்ள தமிழ்ப் பொதுமக்களை, குறுக்குச்சூட்டில் சிக்காமல் இருக்க ஓம்பமான பரப்புகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் சிறிலங்கா படையினர் பொதுமக்களை மனிதக் கேடயமாக பாவிக்கும் மனிதநேயமற்ற கொள்கையை கடைப்பிடித்து ஊரடங்குச் சட்டத்தை விதித்து அவர்களின் நடமாட்டத்தை தடுத்துள்ளனர். மேலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணப் பொதுமக்களின் குடியிருப்புப் பரப்புகள் மீது ஆயுதப்படையினர் தொடர்ந்து வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துகின்றனர்.

"பொதுமக்களை ஓம்பமான பரப்புகளுக்கு வெளியேற்ற உதவுமாறு புலிகள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் குடாநாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகளையும் அணுகியுள்ளனர்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மறுமொழி இல்லை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5079
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:59
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 6
/5/2023

தென்மராட்சிக் கோட்டத்தின் மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய வட்டக்கூறுகளில் உள்ள பொதுமக்கள், யூ.என்.எச்.சி.ஆர். இன் உதவியுடன், குறிக்கப்பட்ட ஓம்பமான பரப்புகளுக்கு வெளியேறுவதற்காக விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை ஒருதலைப் பக்கமாக அறிவித்த போர் நிறுத்தத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து அலுவல்சார் எதிர்வினை எதுவும் இல்லை. கொழும்பில் உள்ள சிறிலங்கா தரைப்படைத் தலைமையக வட்டாரங்கள் விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்தை தற்செயலாக புறக்கணித்தன.

எனினும், புலிகளிடமிருந்து இந்த விடயம் குறித்து கொழும்புக்கு அலுவல்சார் தகவல் எதுவும் கிடைக்காததால், மறுமொழி குறித்த வினா எழவில்லை என்று சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், புலிகள் போர் நிறுத்தத்தை பயன்படுத்தி குடாநாட்டில் மீண்டும் மீளொருங்கிணைந்து புதிய வலிதாக்குதல்களை தொடுக்கலாம் என்ற சிறிலங்கா தரைப்படையின் கவலையுடன் அரசாங்கம் உடன்படுவதாக அவர் கூறினார்.

குடாநாட்டின் சமர் வலயங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிக போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என விடுதலைப் புலிகள் நேற்று வெளியிட்ட ஊடக வெளியீட்டில் தெரிவித்தனர்.

சிறிலங்கா தரைப்படை தனது கட்டுப்பாட்டில் உள்ள பரப்புகளில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் புலிககளால் வைத்திருக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மையங்கள் மீது கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல் நடத்துகிறது என்று விடுதலைப் புலிகள் தமது கூற்றுரையில் கூறியுள்ளதோடு ஐ.சி.ஆர்.சி மற்றும் பிற மனித உரிமை அமைப்புகளை வெளியேற்றுவதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது என்றனர்.

 

 


 

 

எறிகணை ஒருவரைக் கொன்றது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5080
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 11:12
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 6
/5/2023

இன்று மாலை 6.30 மணியளவில் சாவகச்சேரிக்கு வடமேற்கே உள்ள மட்டுவில் தெற்கு ஊரின் மீது சிறிலங்கா தரைப்படை எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது.

24 வயதான கணேசசிவம் நிரஞ்சன் கொல்லப்பட்டதாகவும், 27 வயதான துஷ்யந்தி எறிகணைத் தாக்குதலில் காயமடைந்ததாகவும் வானொலி தெரிவித்தது.

தென்மராட்சி வட்டக்கூறிற்குட்பட்ட கைதடி, நாவற்குளி, மறவன்புலவு, மட்டுவில் மற்றும் நுணாவில் ஆகிய ஊர்கள் மீது சிறிலங்கா தரைப்படை இன்று காலை 10.30 மணி முதல் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக வானொலி தெரிவித்துள்ளது.

எறிகணைத் தாக்குதல்களால் அண்மையில் காயமடைந்த பொதுமக்கள் வன்னியில் உள்ள மல்லாவி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

படுகாயமடைந்த 9 பொதுமக்கள் எம்.எஸ்.எஃவ். ஆளணியினரால் சனிக்கிழமை காலை வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், 7 பேர் வியாழன் அன்று வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

 

 


 

 

எறிகணை வீச்சு பொதுமக்களை வெளியேற்றுவதைத் தடுக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5082
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 11:42
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 6
/5/2023

சிறிலங்கா தரைப்படையின் கடும் எறிகணை வீச்சுகள், விடுதலைப் புலிகளால் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, யு.என்.எச்.சி.ஆர். அதிகாரிகள் காத்திருந்த இடங்களுக்குச் செல்வதைத் தடுத்ததால், சாவகச்சேரி பரப்பில் இருந்து 15,000 பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை சனிக்கிழமை தோல்வியடைந்தது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். "பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதையும், கண்மூடித்தனமான சேணேவி மற்றும் வான்குண்டு வீச்சிற்கு உட்படுத்தப்படுவதையும் சிறிலங்கா ஆயுதப் படைகள் கைவிட வேண்டும்" என்று புலிகள் பன்னாட்டு அரசாங்கங்களை வலியுறுத்தினர்.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை வருமாறு:

"சாவகச்சேரி வட்டக்கூறிலுள்ள சமர் வலயங்களில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கு வசதியாக விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்தக் கோரிக்கை சிறிலங்கா அரசால் இன்று நிராகரிக்கப்பட்டது.

"சிறிலங்கா தரைப்படை சாவகச்சேரி நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மீது வான்வழி மற்றும் சேணேவி தாக்குதல்களை நாள் முழுவதும் தீவிரப்படுத்தி பொதுமக்கள் ஓம்பமான பரப்புகளுக்கு செல்வதைத் தடுக்கிறது.

"இன்று காலை 10.00 மணி முதல் இரவு. UNHCR அதிகாரிகள் குடிமக்களைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்ட இடங்களில் காத்திருந்தனர், ஆனால் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகள் கடுமையான எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதால் சிலரால் செல்ல முடிந்தது.

"போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து யு.என்.எச்.சி.ஆர். சிறிலங்கா அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது. இதற்கு சிறிலங்கா அரசு மறுமொழியளிக்கத் தவறிவிட்டது.

"தமிழ் பொதுமக்களின் இக்கட்டான நிலை குறித்து ஏற்கனவே தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள பன்னாட்டு அரசாங்கங்கள் மற்றும் உலக மனித உரிமை அமைப்புக்களை, பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவதையும் கண்மூடித்தனமான சேணேவி மற்றும் வான்வழி குண்டுவீச்சுக்கு உட்படுத்துவதையும் கைவிட சிறிலங்கா ஆயுதப்படைகள் மீது தமது நல்ல அலுவலகங்களைப் பயன்படுத்துமாறு புலிகள் வலியுறுத்தியுள்ளனர். 

"சுமார் 15,000 தமிழ் பொதுமக்கள் சாவகச்சேரி வட்டக்கூறிலுள்ள சமர் வலயங்களில் சிக்கியுள்ளதோடு கணிசமான ஊறிலும் உள்ளனர்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணத்தில் காயமடைந்தவர்களை வவுனியாவிற்கு கொண்டு வந்தது எம்.எஸ்.எஃவ்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5086
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:59
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 6
/5/2023

யாழ்ப்பாணம் தென்மராட்சிக் கோட்டத்தில் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொதுமக்கள் மல்லாவியிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு திங்கட்கிழமை எல்லையற்ற மருத்துவர்கள் நிறுவனத்தால் மாற்றப்பட்டனர். இவர்கள் நால்வரும் மே 19- 20 தேதிகளில் சாவகச்சேரி மற்றும் அதனை அண்டிய பரப்புகளில் விடுதலைப் புலிகள் முன்னகர்ந்த போது அவர்களால் கைப்பற்றப்பட்ட மட்டுவில் தெற்கு ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணப் பரப்புகளிலிருந்து வன்னி ஊடாக எல்லையற்ற மருத்துவர்கள் (எம்.எஸ்.எஃவ்.) இனால் தரைவழியாகக் கொண்டு வரப்பட்டனர்.

தென்மராட்சியில் குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்த மேலும் பல பொதுமக்கள் மேலதிக பண்டுவத்திற்காக வன்னியிலிருந்து வவுனியாவிற்கு மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்த வடக்கு எல்லை நகரத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

51 வயதான தவேந்திரன் ஜெயராஜரத்தினம், அவரது மனைவி சிவகணேஸ்வரி தவேந்திரன், 48, மற்றும் அவர்களது மகன் அன்புமைந்தன், 8, மற்றும் கௌரீசன் கதிர்காமநாதன், 25, ஆகியோரே எம்.எஸ்.எஃவ் இனால் இன்று அழைத்து வரப்பட்ட காயமடைந்த பொதுமக்கள் ஆவர்.

தனங்கிளப்பு, நாவற்குளி, கைதடி, மட்டுவில், நுணாவில் மற்றும் சாவகச்சேரி ஆகிய இடங்களில் விடுதலைப் புலிகள் மே மாத தொடக்கத்தில் இருந்து சிறிலங்கா தரைப்படையின் படைநிலைகளை கறங்கத் தொடங்கியதிலிருந்து, தென்மராட்சிக் கோட்டத்தின் வடமேற்கு மற்றும் மேற்கு வட்டக்கூறுகள் மீது சிறிலங்கா தரைப்படை பாரியளவில் எறிகணை மற்றும் குண்டுவீச்சுகளை மேற்கொண்டு வருகிறது.

யாழ்ப்பாண நகரின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கில் சாவகச்சேரி வரையிலான ஊர்களில் உள்ள பொதுமக்கள் தற்போது கேரதீவு - சங்குப்பிட்டி தரைப்பாலம் மற்றும் வலசை மூலம் வன்னிக்கும் குடாநாட்டுக்கும் இடையில் பயணிக்கிறார்கள் என்று வடக்கில் உள்ள உதவி முகவரக வட்டாரங்கள் தெரிவித்தன.

கைதடி, நாவற்குளி, தச்சன்தோப்பு, மறவன்புலவு, தனங்கிளப்பு, மட்டுவில், சாவகச்சேரி நகரம், சங்கத்தானை போன்ற ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க வடக்கு வன்னிக்கு இடம்பெயர்ந்து வருவதாக இந்த வாரம் புலிகளின் புலங்களிலிருந்து வவுனியாவிற்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.

1995 ஆம் ஆண்டு இவ்வூர்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னியில் உள்ள பலர், பூநகரி - கேரதீவுப் பாதை மற்றும் கேரதீவிலிருந்து நாவற்குளி மற்றும் சாவகச்சேரி வரையிலான வீதிகள் கடந்த வாரம் விடுதலைப் புலிகளால் பொதுமக்களின் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டதன் பின்னர், உறவினர்களிடமும் சொந்த வீடுகளுக்கும் சென்றுள்ளனர்.

சங்குப்பிட்டிக்கும் (பூநகரி) கேரதீவுக்கும் இடையேயான மகாதேவா தரைப்பாலமானது போர் காரணமாக நீண்ட காலமாகப் பாலம் செய்யப்படாமல் குறுகிய இடைவெளியுடன் முழுமையடையாமல் உள்ளது. (மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் - B32 வீதிக்கு இடையில் தடையற்ற தரைவழிப் பாதையை அமைப்பதற்காக இந்த தரைப்பாலம் கட்டப்பட்டது.) தரைப்பாலத்தின் இடைவெளியை நிரப்புவதற்கு ஒரு அடிப்படை வலசை தொடங்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் வவுனியாவிற்கு வந்த பளை மற்றும் அதனை அண்மித்த ஊர்களைச் சேர்ந்த வாசிகள் சிலர், வன்னிக்கும் தென்மராட்சியின் தெற்குப் பகுதிகளுக்கும் இடையிலான ஏ9 வீதியில் ஆனையிறவு ஊடாக பொதுமக்கள் தற்போது பயணிக்க முடியும் எனத் தெரிவித்தனர். குறிப்பாக பரந்தன் வடக்கிற்கும் இயக்கச்சிக்குமிடையில் வீதியில் உள்ள கண்ணிவயல்கள் துப்பரவு செய்யப்படாததால் போக்குவரத்து இன்னமும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு சூன் மாதம் 9ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சிறிலங்கா தரைப்படையின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது - தவிபு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5111
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:51
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 6
/5/2023

யாழ்ப்பாணக் குடாநாட்டின் சரசாலைப் பகுதியில் சிறிலங்கா தரைப்படை நடத்திய வலிதாக்குதல் வெள்ளிக்கிழமை வலுத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது என்று விடுதலைப் புலிகள் தங்கள் இலண்டன் அலுவலகத்திலிருந்து விடுத்த கூற்றுரையில் தெரிவித்தனர். மட்டுவிலிலும் சரசாலையிலும் உள்ள குடிமக்கள் குடியிருப்புகள் சேணேவி மற்றும் உந்துகணைகளால் தாக்கப்பட்டதாகவும், ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் அந்தக் கூற்றுரை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை வருமாறு:

"யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிக் கோட்டத்தின் சரசாலையில் கனகம்புளியடிச் சந்தியில் இன்று விடுதலைப் புலிகளின் வலுவெதிர்ப்பு முன்னணி நிலைகளை பரம்புவதற்காக தரைப்படை நடத்திய வலிதாக்குதலை தமிழ்ப் புலிளின் சண்டைப் பிரிவுகள் முறியடித்ததில் சிறிலங்காப் படையினர் வலுத்த இழப்புகளைச் சந்தித்தனர்.

"இன்று அதிகாலை சரசாலையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா படையினர் கடும் சேணேவி மற்றும் வான்வழிக் குண்டுவீச்சின் சூட்டாதரவுடன் தாக்குதலைத் தொடுத்தனர். கடுமையான சண்டை வெடித்து பல மணி நேரம் தொடர்ந்தது. தமிழ்ப் புலிகளின் முரட்டுத்தனமான எதிர்ப்பைத் தாங்க முடியாமல் தரைப்படை அதன் முந்தைய நிலைகளுக்கு பின்வாங்கியது.

"மட்டுவில் மற்றும் சரசாலை வட்டக்கூறுகளில் பொதுமக்கள் குடியேற்றங்கள் கனவகை சேணேவி மற்றும் பல்குழல் உந்துகணைத் தாக்குதல்களின் சீற்றத்தைத் தாங்கின. கிபிர் அடிபாட்டு வானூர்திகளும் அப்பரப்பில் கண்மூடித்தனமாக குண்டுவீசின. இன்று மட்டுவிலில் சேணேவி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு சூன் மாதம் 10ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணத்தில் நடந்த சண்டையின் இழப்புகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5114
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:38
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 6
/5/2023

யாழ்ப்பாணக் குடாநாட்டின் சரசாலையில் நேற்று வெடித்த கடும் சண்டையில் மூத்த அதிகாரி ஒருவர் உட்பட 25 சிறிலங்கா தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்பரப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது படையினர் தாக்குதல் தொடுத்த போது சண்டை வெடித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் சரசாலைப் பகுதியில் சிறிலங்கா தரைப்படை நடத்திய வலிதாக்குதல் வலுத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது என்று விடுதலைப் புலிகள் தங்கள் இலண்டன் அலுவலகங்களிருந்து வெளியிட்ட கூற்றுரையில் தெரிவித்தனர்.

இதேவேளை, தென்மராட்சிப் பகுதியில் நேற்று சிறிலங்கா தரைப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த 8 பொதுமக்களின் பெயர்களை புலிகளின் குரல் வானொலி வெளியிட்டிருந்தது. எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த 16 பொதுமக்களின் பெயர்களை வானொலி மேலும் கூறியுள்ளது.

வானொலியின் படி, எறிகணைத் தாக்குதலில் பின்வருபவர்கள் கொல்லப்பட்டனர்:

1) மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சபாரத்தினம் விஜிதா,2
2) நுணாவில் தெற்கைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சாஸ்திரி
3) மட்டுவில் வடக்கைச் சேர்ந்த சோமசுந்தரம் குருக்கள் கோபாலகுமார்,20
4) மட்டுவில் வடக்கைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை சாலினி,15
5) மட்டுவில் தெற்கைச் சேர்ந்த தம்பு சபாரத்தினம்,45
6) மட்டுவில் தெற்கைச் சேர்ந்த தம்பு மனோன்மணி,50
7) டி.சிவசோதி,46, முதல்வர், சந்திர மௌலிகா பாடசாலை
8 )கல்வயலைச் சேர்ந்த வரித்தம்பி சிவபாக்கியம்,70

காயமடைந்தவர்கள்:

1) மட்டுவிலைச் சேர்ந்த த.சின்னத்தம்பி,67
2) கல்வயலைச் சேர்ந்த எம்.சிவபாக்கியம்,70
3) கல்வயலைச் சேர்ந்த ஜி.வளர்மதி,28
4) சி.சிவபூரணம்,78, மட்டுவில்
5) கல்வயலை சேர்ந்த உதயசந்திர சர்மா,27
6) மட்டுவிலைச் சேர்ந்த மகாதேவன் தேவன்,10
7) மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சபாரத்தினம் மதுஷன்,4
8 )மட்டுவில் தெற்கைச் சேர்ந்த பாகையராசா திலானி,22
9) மட்டுவிலைச் சேர்ந்த பாலசுந்தரம் பாபி சரோஜினி,20
10)மிருசுவிலைச் சேர்ந்த தவரட்ணம் ரோகினி,21
11) நுணாவில் மேற்கைச் சேர்ந்த சரோஜினிதேவி,60
12) தவசிகுளம், மிருசுவிலைச் சேர்ந்த டேவிட் வினோதினி,29
13) தவசிக்குளம், மிருசுவிலைச் சேர்ந்த டொரின்டன் டேவிட் ஞானகிரி,50
14) சுன்னாகத்தைச் சேர்ந்த ஞானராசா சிவதர்ஷினி,
15) மட்டுவில் தெற்கைச் சேர்ந்த திருமதி அற்புதம் (பாடசாலை அதிபர்)
16) வேம்பிறையைச் சேர்ந்த வேதாரணியம் ஈஸ்வரன் கல்யாணி,42

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முடிவுரை

 

தமிழர் கன்னையை படைவலுச் சமநிலைக்கு இட்டுச்சென்று சிங்களத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு வரச்செய்த ஓயாத அலைகள்-3 என்று குறியீட்டுப் பெயரிடப்பட்ட இம் 'மண் மீட்புச் சமர்'ஐ கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து இரண்டு தொகுதிகளாக ஆவணப்படுத்தத் தொடங்கினேன். அன்று தொகுத்த முதற் தொகுதியில் தமிழரின் வரலாற்றுச் சிறப்புமிக்க குடாரப்புத் தரையிறக்கத்தை ஆவணப்படுத்தியிருந்தேன். அது ஒக்டோபர் 28 அன்று முடிக்கப்பட்டு இரண்டு பின்னிணைப்புகளோடு சனவரி 2, 2022 அன்று நிறைவுற்றது. அதற்குள்ளேயே இரண்டாவது தொகுதியினை திசம்பர் 26, 2021 அன்று எழுதத்தொடங்கினேன். இதில் குடாரப்புத் தரையிறக்க ஆவணக்கட்டை ஒரு பகுதியாக்கி ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையை முற்றாக ஆவணப்படுத்தத் தொடங்கினேன். நடுவில் எட்டு மாதங்கள், செப்டெம்பர் 2022 - ஏப்பிரல் 2023 வரை, சொந்த வேலைகள் காரணமாக இடைத்தங்கலாகியது. எனினும், முழு வீச்சோடு முடுக்கி இன்று மே 7, 2023 முடித்துள்ளேன்.

ஓயாத அலைகள் மூன்றினை முற்றாக ஆவணப்படுத்தியிருந்த "வன்னிச்சமர்க்களம்" என்ற வரலாற்று நூல் வஞ்சகத்தால் வெளியீடு தடைப்பட்டு ஊழியால் படிகள் மிச்சமின்றி அழிந்துபட்டது என பொதுவாக நம்பப்படுவதால், என்னால் இயன்றளவு இப்படை நடவடிக்கை தொடர்பான தகவல் மற்றும் இந்நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் ஆகியவற்றை சேகரித்து ஓத்தி (ஓரினமான செய்திகளை ஒன்றாக்கி) இங்கே ஆவணப்படுத்தியிருக்கிறேன். அந்நூல் கட்டளைப்பீடத்தில் வைத்து எழுதப்பட்டது என்று அதன் எழுத்தாளரால் கூறப்படுவதால், அதுபோன்று அச்சொட்டாக இது இல்லாதிருந்தாலும் தமிழர் சேனை தீரணத்தோடு சமராடிய சமர்க்களங்களையும் நகர்வு வழிகளையும் தெரிக்கி (விரிவாக விளக்கி) அந்நடவடிக்கையின் கனதியையும் முக்கியத்துவத்தையும் வாசகருக்கு அளிக்குமென்று முழுமையாக நம்புகிறேன். அத்துடன், இந்நடவடிக்கை தொடர்பாக எதிர்காலத்தில் வரலாற்றைக் கற்கும் அ ஆராயும் மாணவர்களுக்கும் இது உறுதுணையாக நிற்குமென்றும் நம்புகிறேன்.

ஆக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் எழுதி வந்த இவ்வாவணக்கட்டு முடிவிற்கு வந்துள்ளதால் இது தொடர்பான குறை-நிறைகள் யாவும், எத்தகையதும் எத்தொனியிலானதும், வரவேற்கப்படுகிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கள உறவுகள் நான்கு பேர் இதனினுள்ளே கருத்துக்கள் (அதாவது பாராட்டுகள்) எழுதியிருந்தனர். அவை யாவும் நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட விதிக்கமைவாக நீக்கிவிட்டேன் என்பதையும் இங்கே குறிப்பிட விழைந்து மன்னிப்புக் கோருகிறேன்.

வட தமிழீழத்தில் பன்னெடும் காலமாக பகை வல்வளைத்துக் குந்தியிருந்த நிலமெல்லாம் புலி வீசிய அலையில் கரையோர மண்கோட்டைகள் போலக் கரைந்துபோன வரலாறு கூறும் "ஓயாத அலைகள் - 3 நடவடிக்கை" என்ற இவ் ஆவணக்கட்டு இத்தோடு நிறைவு பெறுகிறது. இவ்வுலகில் எதுவும் நிலையற்றதென்பதால் ஏலுமானவர்கள் இதையொரு படியெடுத்து பிற்காப்புச் செய்யுங்கள்.

                                                      "... .... .........

மூன்றுநூற் றாண்டுகளின் பின்னர் வந்த 
முழுவெற்றி; தமிழ் மறவர் பகைவர் குந்து
கூண்டெதையும் தீயிடுவார் என்றே வையம் 
குறிப்பெழுதிக் கொண்டவெற்றி; புலிகள் சேனை 
ஆண்டதமிழ் நிலம்யாவும் ஆட்சி கொள்ள 
அடிபணிந்து வருமெதிரிச் சேனை சாயும்.
நீண்டநெடு நாளில்லை விரைவில் ஈழம் 
நிமிருமென உலகறியச் சொன்ன வெற்றி."

--> 'வெளிச்சம்' சித்திரை-வைகாசி 2000ஆம் ஆண்டு இதழில் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய 'ஆனையிறவே!' என்ற கவிதையிலிருந்து 

 

 

🙏நன்றி🙏

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.