Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கறுப்பு ஜூலை அழியாத வடுக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை அழியாத வடுக்கள்! -(தாயகன்) [22 - Jஉல்ய் - 2007] * 24 வருட நினைவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான இனவெறியும் மதவெறியும் கொண்ட அரசாங்கத்தின் இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது இதயங்களில் மாறா வடுவை ஏற்படுத்தி விட்ட `கறுப்பு ஜூலை' தின நிகழ்வுகளை நாளை அனுஷ்டிக்கின்றனர். 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஐ.தே.க.வினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு நாளையுடன் 24 வயதாகிறது. தமிழ் மக்களின் மனங்களின் சிங்களத்தின் கொடூரத்தை வடுவாக்கி விட்ட அந்த இனப்படுகொலை `கறுப்பு ஜூலை' என்கின்ற பெயரில் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ள அதேவேளை, அந்த கறுப்பு ஜூலையே சிங்களத்தின் வீழ்ச்சிக்கும் அத்திபாரமாக அமைந்து விட்டது. உலக நாடுகளையே உலுக்கிவிட்ட கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நடந்து நாளையுடன் 24 வருடங்களாகின்ற நிலையில் தற்போது ஆட்சி புரியும் மகிந்த அரசு மீண்டுமொரு கறுப்பு ஜூலையை ஏற்படுத்தும் முனைப்புகளில் ஈடுபட்டு வருகின்றது. `குள்ள நரி' என அழைக்கப்படும் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் நெறிப்படுத்தலில் அமைச்சராகவிருந்த காமினி திசாநாயக்கவின் வழிநடத்தலிலுமே படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. கொழும்பிலுள்ள தமிழர்களின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்ற வெறியில் நடத்தப்பட்ட இந்த இனக்கலவரம் என்கின்ற இன அழிப்பில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (அப்போதைய பெறுமதி) பெறுமதியான தமிழர் சொத்துகள் அழிக்கப்பட்டதுடன் ,2,500 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயப்படுத்தப்பட்டனர். உயிர் தப்பியோர் கப்பல்களில் ஏற்றப்பட்டு தமிழர் பகுதிகளான, வடக்கு கிழக்கிற்கு அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர். 1983 ஜூலை 23 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனப்படுகொலை 4 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. தமிழர்கள் வீதி, வீதியாக விரப்பட்டு வெட்டியும், சுட்டும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டன

இன்று வரை தொடரும் ஆறாத ரணங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை அழியாத வடுக்கள்! -(தாயகன்)

* 24 வருட நினைவு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான இனவெறியும் மதவெறியும் கொண்ட அரசாங்கத்தின் இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது இதயங்களில் மாறா வடுவை ஏற்படுத்தி விட்ட `கறுப்பு ஜூலை' தின நிகழ்வுகளை நாளை அனுஷ்டிக்கின்றனர்.

1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஐ.தே.க.வினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு நாளையுடன் 24 வயதாகிறது.

தமிழ் மக்களின் மனங்களின் சிங்களத்தின் கொடூரத்தை வடுவாக்கி விட்ட அந்த இனப்படுகொலை `கறுப்பு ஜூலை' என்கின்ற பெயரில் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ள அதேவேளை, அந்த கறுப்பு ஜூலையே சிங்களத்தின் வீழ்ச்சிக்கும் அத்திபாரமாக அமைந்து விட்டது.

உலக நாடுகளையே உலுக்கிவிட்ட கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நடந்து நாளையுடன் 24 வருடங்களாகின்ற நிலையில் தற்போது ஆட்சி புரியும் மகிந்த அரசு மீண்டுமொரு கறுப்பு ஜூலையை ஏற்படுத்தும் முனைப்புகளில் ஈடுபட்டு வருகின்றது.

`குள்ள நரி' என அழைக்கப்படும் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் நெறிப்படுத்தலில் அமைச்சராகவிருந்த காமினி திசாநாயக்கவின் வழிநடத்தலிலுமே படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.

கொழும்பிலுள்ள தமிழர்களின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்ற வெறியில் நடத்தப்பட்ட இந்த இனக்கலவரம் என்கின்ற இன அழிப்பில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (அப்போதைய பெறுமதி) பெறுமதியான தமிழர் சொத்துகள் அழிக்கப்பட்டதுடன் ,2,500 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயப்படுத்தப்பட்டனர். உயிர் தப்பியோர் கப்பல்களில் ஏற்றப்பட்டு தமிழர் பகுதிகளான, வடக்கு கிழக்கிற்கு அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர்.

1983 ஜூலை 23 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனப்படுகொலை 4 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. தமிழர்கள் வீதி, வீதியாக விரப்பட்டு வெட்டியும், சுட்டும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டன

  • கருத்துக்கள உறவுகள்

நீடிக்கும் ஆடிக் கலவர அதிர்வு

இன்றைக்குச் சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணம் பலாலி வீதியில், திருநெல்வேலியில், தபால்கட்டுச் சந்தியில் வெடித்த நிலக்கண்ணியின் அதிர்வு இன்னும் ஓயவில்லை. அந்த அதிர்ச்சியின் அலைகள் பெரும் வன்முறைப் புயலாக விஸ்வரூபம் எடுத்து, இலங்கைத் தீவை இன்றும் கலங்கடித்து சமராடிக் கொண்டிருக்கின்றன. அன்று பறந்த சிறு பொறி, இன்று ஊழித்தீயாக உரு வெடுத்து,முழு இலங்கைத் தீவையும் வெந்தணலாய் தகிக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.

பௌத்த சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதி ராக, நீதியும், நியாயமும், கௌரவமும் மிக்க வாழ்வியல் உரிமை வேண்டி அஹிம்சை வழியில் அறநெறியில் சுமார் மூன் றரை தசாப்த காலம் சளைக்காது ஈழத் தமிழினம் நடத்திய விடு தலைப் போராட்டம் புதிய பரிமாணமும், புதிய பரிணாமமும் பெற்று, புது உத்வேகத்தோடு புதுப்பிறப்பு எடுத்துவிட்டது என்பதை உலகுக்கு எடுத்தியம்பும் அறிவிப்பாக கட்டியமாக அந்தக் கண்ணிவெடித் தாக்குதல் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

தமிழரின் விடுதலைப் போராட்டம், புதியதோர் அத்தியா யத்துக்குள் புத்துணர்வோடும், உத்வேகத்தோடும், தீவிரத் தோடும் புகுந்துவிட்டிருப்பதை உணர்ந்துகொள்ள மறுத்த சிங் களப் பேரினவாதம்,தனக்கே உரிய திமிர்த்தனத்தோடும், செருக்கோடும், மமதையோடும் அந்த நிலைமையைத் தவ றாக எடைபோட்டது.

கிளர்ச்சியும், எழுச்சியும் பெற்று புது உத்வேகத்தோடு ஆயுத வழிப் போராட்டத்துக்குத் தயாராகிவிட்ட தமிழ்த் தேசிய உணர்வை வன்முறை வழியிலான கொடூர இனக்கலவரம் மூல மும், பலாத்கார அடக்குமுறை வாயிலாகவும் அச்சுறுத்தி, நசுக்கி ஒடுக்கிவிடலாம் என்று தென்னிலங்கை கனவு கண்டது.

இந்தப் பின்னணியில்தான் தமிழ் இன அழிப்பு இலக்கின் அங்கமாக 1983 ஆடிக்கலவரம் சிங்களப் பேரினவாத ஆட்சி யாளர்களால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.

முன்னெப்போதும் இடம்பெற்றிராத குரூர கொடூர வன்முறையாக இலங்கைத்தீவு எங்கும் கலவரம் விஸ்வரூபம் எடுத்துப் பிரளயமாக வெடித்தது. இன வெறியாட்டம் சுமார் ஆறு நாள்கள் சன்னதம் கொண்டு ஆடி அடங்கியபோது, அப் பாவித் தமிழர்கள் சுமார் மூவாயிரம் பேர், வெட்டியும், சுட்டும், எரித்தும் காட்டுமிராண்டித் தனமாகப் படுகொலை செய்யப் பட்டிருந்தனர். பல தமிழ்க் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப் பட்டிருந்தன. தமிழருக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக் கான வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்கள், கட்டடங்கள், கைத்தொழில் வளாகங்கள், சினிமா அரங்குகள், தொழிற் சாலைகள், எரிபொருள் நிலையங்கள், வாகனங்கள் கொள்ளை யிடப்பட்ட பின்னர் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்தக் கறைபடிந்த வரலாற்றுக் காலத்தில் அருவருக்கத் தக்க மோசமான மற்றொரு மிலேச்சத்தனமும் சிங்கள இன வெறிக் காடையர்களால் புரியப்பட்டது. சிங்களக் கைதிகளும், சிங்கள சிறைக் காவலர்களும் கூட்டுச் சேர்ந்து, சிறைக்கூண்டு களை உடைத்து, உள்ளே நிராயுதபாணிகளாக அடைக்கப் பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 53 பேரை கண்ட துண் டமாக வெட்டியும், கண்களைப் பிடுங்கியும், குடலை உருவி யும் மிகக் கோரமாகப் படுகொலை, செய்து தமது மிருகத் தனத்தை வெளிப்படுத்தினர்.

தமிழரின் வாழ்வியல் உரிமையை அடியோடு மறுத்து கருவோடு வேரறுக்கும் இந்த மனிதனுக்கே அடுக்காத கொடூரம், ஞானசீலம் போதித்த புத்தனின் பெயரால் இலங்கைத் தீவில் அரங்கேறியது.

ஈழத் தமிழரின் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத வடுவை மாறாத புண்ணை ஆழமாக ஏற்படுத்திய மிக மோசமான துன்பியல் நிகழ்வாக அது அரங்கேறியது.

ஒருபுறம் தமிழரை சம்ஹாரம் செய்து, அடக்குவதாகவும், மறுபுறம் தமிழினத்தின் ஆணிவேரான பொருளாதார இருப் பையே அடியோடு வெட்டிச் சாய்ப்பதாகவும் இரு முனைப் பட்ட நோக்கோடு,வெகு நேர்த்தியாக திட்டமிடப்பட்டு அர சுத் தலைமையின் பின்னணி வழிகாட்டலோடு செயற் படுத்தப்பட்ட ஒரு கொடுங்கோன்மையாகவே அக்கலவரம் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் விளைவு என்னாயிற்று.....?

வஞ்சத்தனத்தோடு சிங்களம் புரிந்த இந்தக் குரூரத்தின் விளைவு, மிகமோசமாக சிங்களத்தையே திரும்பி வந்து தாக்கி மிக ஆழமான பின்னடைவுக்குள் அதைத் தள்ளி நிற்கின்றது.

ஆடிக் கலவரத்தால் தமிழினத்தின் பொருளாதாரம் நசுக்கப் பட்டது என்பது உண்மைதான். ஆனால் அன்று ஆரம்பித்த அந்த வீழ்ச்சி, இன்று வரை மீள முடியாத பெரும் பொருளா தாரப் பாதிப்பாக முழு இலங்கைத் தீவையுமே கவ்வி நிற்கின் றது. அந்தக் கலவரத்தின் தொடர்ச்சியாக இன்றுவரை உக்கிரமான உள்நாட்டு யுத்தமாக விரிவடைந்து, விஸ்வரூபம் அடைந் திருக்கும் இனச்சிக்கலால், தோல்வியுற்ற நாடுகளின் வரிசை யில் சேர்க்கும் அளவுக்கு முழு இலங்கையினதும் நிலைமை அதல பாதாளத்துக்குள் வீழ்ந்திருக்கின்றது.

மறுபுறத்தில், தமிழினத்தை அச்சுறுத்தி,கொடூரத்தின் மூலம் அடக்கும் சிங்களத்தின் எத்தனமும் எண்ணமும் நிறைவேறவில்லை. மாறாக, அது தலைகீழ் விளைவையே ஏற் படுத்தியது. தமிழர்கள் அஞ்சி, அடங்கவில்லை. ஆக்ரோஷ முற்று, ஆயுதவழிப்போரை பதிலடியாக பாடமாக சிங்களத் துக்குப் போதித்துப் புரியவைத்தார்கள்.

அந்தக் கொடூரம் மூலம் தமிழர்களுக்கு எதிராக சிங்களம் அரங்கேற்றிய பல்பரிமாண ஒடுக்குமுறை பாரதூரமான விளைவுகளுக்கு வழிசமைத்தது. இனமுரண்பாட்டை அது கூர்மைப்படுத்தியது. இலங்கைத் தீவில் தமிழர் தேசம், சிங்கள வர் தேசம் ஆகிய இரு தரப்புகளிடையே இன நல்லிணக்கமும், சமரச சகவாழ்வும் சாத்தியமேயில்லை என்ற உணர்வு நிலைக்கு அது தமிழரை உசுப்பேற்றியது. நாடுகள், கண்டங்கள், தேசங் கள் கடந்து தமிழர்கள் மத்தியில், தேசிய உணர்ச்சியும் விடு தலை எழுச்சியும் மடைவாய் திறந்த வெள்ளம் போல் கரை மீறிப் பிரவாகம் எடுக்க அது வழிகோலிற்று.

ஒடுக்குமுறையின் உச்சக்கட்ட வடிவமாக உருப்பெற்ற ஆடிக்கலவரம், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழ ரின் சுயநிர்ணயப் போராட்டத்தை உற்பவித்தது.

இந்தக் கலவரம் மூலம் தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியைத் தூண்டி, தமிழரின் தனியரசுப் போராட்டத்தை வீறுகொள்ள வைத்து, இந்திய ஆதரவோடு ஆயுதப் போராட்டத்தைத் தமி ழர்கள் தீவிரப்படுத்துவதற்கான அகப்புறச் சூழல்களை உரு வாக்கிக் கொடுத்துத் தன் குறுகிய குரூர செயற்பாட்டின் மூலம் தன் தலையிலேயே தானே மண்ணை அள்ளிப் போட் டுக்கொண்டது சிங்களம்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.