Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களை விட ஆண்கள் உடுதுணிகள் வாங்குவதில் அதிக நேரத்தை செலவு செய்கின்றார்கள்?

கீழுள்ள கருத்துக்கணிப்பில் நீங்கள் ஒரு ஆண் எனில் ஆண் எனவும் பெண் எனில் பெண் எனவும் கூறவும் 13 members have voted

  1. 1. நீங்கள் கடைக்கு உங்களுக்கு தேவையான உடுதுணிகளை வாங்கச் சென்றால் அதை வாங்கி முடிக்க எவ்வளவு நேரம் செல்லும்?

    • 00 - 15 நிமிடம் (நான் ஒரு ஆண்)
      5
    • 00 - 15 நிமிடம் (நான் ஒரு பெண்)
      1
    • 15 - 30 நிமிடம் (நான் ஒரு ஆண்)
      2
    • 15 - 30 நிமிடம் (நான் ஒரு பெண்)
      3
    • 30 - 45 நிமிடம் (நான் ஒரு ஆண்)
      1
    • 30 - 45 நிமிடம் (நான் ஒரு பெண்)
      1
    • 45 - 60 நிமிடம் (நான் ஒரு ஆண்)
      0
    • 45 - 60 நிமிடம் (நான் ஒரு பெண்)
      0
    • 01 - 1.5 மணித்தியாலம் (நான் ஒரு ஆண்)
      0
    • 01 - 1.5 மணித்தியாலம் (நான் ஒரு பெண்)
      0
    • 1.5 - 2.0 மணித்தியாலம் (நான் ஒரு ஆண்)
      0
    • 1.5 - 2.0 மணித்தியாலம் (நான் ஒரு பெண்)
      0
    • 02 மணித்தியாலங்களிற்கு மேல் (நான் ஒரு ஆண்)
      0
    • 02 மணித்தியாலங்களிற்கு மேல் (நான் ஒரு பெண்)
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்!

காலங் காலமாக பெண்கள் புடவை கடைக்கு போய் புடவை வாங்குவது பற்றி சினிமா, கவிதை, கதை, நாடகம் என சகல துறைகளிலும் கிண்டல் அடிக்கப்பட்டு வந்துள்ளது. இது அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களிற்கு பொருத்தமான பகிடியாய் இருக்கலாம். ஆனால், இந்தக் காலப்பெண்கள் இப்போது இவ்வாறு உடுதுணிகள் வாங்குவதில் நேரத்தை மணித்தியாலக் கணக்கில் கடைகளில் செலவளிக்கின்றார்களா என்பது கேள்விக்குரிய விசயம் (அவர்கள் புடவை கட்டுவதில்லை என்பது வேறு விசயம்).

ஆனால்... எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்... நான் உடுதுணி கடைகளிற்கு ஆண்களுடன் (நண்பர்கள், உறவினர்கள்) சென்று அறிந்ததில் இருந்து ஆண்கள் பெண்களை விட அதிக நேரம் உடுதுணி வாங்குவதில் நேரத்தை செலவளிக்கின்றார்கள் என சொல்லத் தோன்றுகின்றது. மேலும், பெண்களை விட ஆண்களே Brand Names இல் கூடுதல் கவனம் செலுத்துவது போலவும் தெரிகின்றது.

எனவே, இதுபற்றி உங்கள் எண்ணங்களை அறிய இந்த கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன்.

எனது பாணி:

நான் உடுதுணி வாங்க சென்றால் 15 - 20 நிமிடங்களில் அலுவலை முடித்துவிடுவேன். நான் உடுதுணி வாங்கும் போது கவனிக்கும் விசயங்கள்...

1. விலை - எனது பட்ஜட்டினுள் அடங்க வேண்டும்.

2. தோற்றம் - look - பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும்... எனது மனதிற்கு அதன் தோற்றம், கலர் பிடித்திருக்க வேண்டும்.

3. தனித்துவம் - ஊரில் உள்ள எல்லாரும் போடுகின்ற ஒரே மாதிரியான தோற்றம், கலர், டிசைன் கொண்ட உடுப்பாக இருக்ககூடாது. சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும்.

4. அளவு - size சரியாக இருக்க வேண்டும்.

Mall - பெரிய கடைகளிற்கு சென்றால் ஆண்களின் பகுதி எங்கே இருக்கின்றது என்று கண்டுபிடிப்பதற்கே எமக்கு ஐந்து, பத்து நிமிடங்களாகும். எனவே, கடையினுள் சென்றதும் முதலில் ஆண்களின் பகுதி எங்கு இருக்கின்றதென கேட்டு அறிந்துவிடுவேன். இதன் பின் போனேனா, பார்த்தேனா, உடுப்பை தூக்கினேனா, காசை pay பண்ணினேனா என அலுவலை சுருக்கமாக முடித்துவிட்டு வந்துவிடுவேன். இது காற்சட்டை, சேர்ட் போன்றவை வாங்கும் போது செலவளிக்கும் நேரம்.

எனினும், சப்பாத்து வாங்குவதென்றால் மொத்தமாக நான் எப்படியும் சுமார் இரண்டு மணித்தியாலங்களாவது கடைகளில் செலவளிப்பேன். ஒவ்வொரு சப்பாத்து கடையாக ஏறி இறங்குவேன். ஏனென்றால், சப்பாத்தை தினமும் போடவேண்டும். இதை அடிக்கடி வாங்க முடியாது. ஒருமுறை வாங்கிய சப்பாத்தை நான் ஆகக்குறைந்தது இரண்டு வருடங்களாவது நான் பாவிப்பேன்.

இனி.... நான் ஆண்களுடன் கடைக்கு சென்ற அனுபவங்களை கூறுகின்றேன்...

எனது நண்பன் ஒருவனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வேறு நாடுகளில் இருந்து வந்த பலரில் யூகேயில் இருந்து வந்திருந்தஅவனது மூன்றாவது அண்ணாவும் ஒருவர். திருமண நாளிற்காக தனக்கு Trousers வாங்கவேண்டும், கடைக்கு கூட்டிக்கொண்டு போகச்சொன்னார். நாங்களும் இங்குள்ள மிகவும் பிரபலமான ஒரு பெரிய Mall க்கு அவரை கூட்டிச்சென்றோம். பிறகு என்ன நடந்ததென்றால்..

அண்ணையர் ஒவ்வொரு கடைக்கிலையும் போறார்... கிடு, கிடுவென்று உடுப்புகள புரட்டி, புரட்டி எடுத்து பார்க்கிறார்.. பிறகு தீவிர யோசனை.. பிறகு "இஞ்ச இருக்கிற ஒண்டும் எனக்குபிடிக்கேல... வேற கடைக்கு போவம்!" எண்டு சொல்வார்.. நாங்களும் ஒவ்வொரு கடையா ஏறி, இறங்கி.. ஒவ்வொரு கடையிலையும் நின்று முழுசிக்கொண்டு இருக்க கடையில வேலை செய்யுறவங்கள் எங்களிடம் வந்து "May I help you?" என்று கேட்டு அன்புத்தொல்லை தர நாங்கள் "no thanks, we're just looking around!" என்று அவர்களிற்கு மறுமொழி வேறு கூறி, பல்லை காட்ட... இப்படி இழுபட்டு, இழுபட்டு.. சொன்னா நம்ப மாட்டீங்கள்... அண்ணையர் கடைசியில "சரி காணும் வீட்ட போவம்!" எண்டு சொல்லிறதுக்கு மூன்று அரை மணித்தியாலங்களுக்கு மேல சென்றது. கடைசியில ஏதோ ஒரு பிராண்ட் இல ஏதோ ஒரு Trousers ஐ வாங்கிப்போட்டு, அத வச்சு புளுகிக்கொண்டு இருந்தார்.. நான் அவருக்கு சொன்னன்.. "எனக்கு Trousers என்றால்.. இரண்டு குழாய்கள் மாதிரி.. இடுப்பில நிக்கிற மாதிரி ஒரு உடுப்பு இருந்தால் காணும்.. இவ்வளவு நேரத்தை எல்லாம் கடையில செலவளிக்க மாட்டன்!" எண்டு. ஒரு சிங்கிள் Trousers வாங்க மூன்று அரை மணித்தியாலங்கள் செலவளித்த அந்த அண்ணையை என்னவென்று சொல்வது?

அண்மையில் இன்னொரு உறவினர் ஒருவருடன் (ஆண்) அவருக்கு உடுப்பு வாங்க போனபோதும் அதே அனுபவம்.. ஆனால் ஒரு வித்தியாசம் கடையில் வேலை செய்பவர்கள் வேறு மொழியில் கதைத்து "உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?" என்று கேட்டு தொல்லை தந்தார்கள். எனக்கு அவர்கள் கதைத்த மொழி விளங்கவில்லை. எப்படி பதில் சொல்வது என்றும் தெரியவில்லை. தலையைச் சொறிந்துவிட்டு என்னுடன் கூட வந்தவரிடம் சொன்னேன், "நான் வெளியில இருக்கிற கதிரையில நீ வரும்மட்டும் இருக்கிறன்.. நீ ஆறுதலா உண்ட உடுப்பை வாங்கிக்கொண்டு வா" எண்டு. அவர்வரும் வரை காதினுள் ஐ பொட்டை கேட்டுக்கொண்டு இருந்ததால் நேரம் போனது தெரியவில்லை.

இப்படி ஆண்களுடன் உடுதுணி வாங்கச் சென்று நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், எனது அக்காமாருடன், அம்மாவுடன் அவர்களிற்கு உடுதுணி வாங்க சென்றபோது அவர்கள் இவ்வளவு நேரத்தை எடுக்கவில்லை. ஆகக்கூடியது ஒரு மணித்தியாலத்தினுள் அலுவலை முடித்துவிடுவார்கள். அவர்கள் ஒரு மணித்தியாலத்தை ஒரு சிங்கிள் உடுப்பு வாங்க மட்டும் செலவளிப்பதில்லை. தேவையான பல உடுதுணிகளை இந்த கால அவகாசத்தினுள் வாங்கிவிடுவார்கள்.

இனி மிச்சம் உங்கள் அனுபவங்களை சொல்லுங்கோ.. நான் நினைவு வரும் போது மிகுதியை சொல்லிறன்..

Edited by கலைஞன்

மாப்பி நம்மளை பொறுத்தவர உடுப்பு எடுக்க கடைக்கு போறது எல்லாம் பிடிக்கவே.........பிடிக்காது பாருங்கோ........அம்மா தான் போய் எடுத்து கொண்டு வந்து தருவா..........கொண்டு வந்தா பிறகு கத்துறது நிறம் பிடிக்கவில்லை அது பிடிக்கவில்லை என்று பிறகு அவாவும் கொண்டு போய் மாத்தி கொண்டு வருவா.........இப்படி தான் சின்னனில இருந்து பழகி போச்சு..........விலை,பிராண்ட் எல்லாம் பார்கிறது இல்லை...........வாங்கி கொண்டு வருவா போடுவேன் அதற்கு முன் தம்பிக்கு என்ன வாங்கினவா என்று பார்த்து என்ட உடுப்பின்ட விலை அவன்ட உடுப்பின்ட விலைய விட குறைந்திருந்தா பிறகு சொல்ல தேவையில்லை............இப்படி தான் நாட்டில இருக்கும் போது உடுப்பு வாங்கிற மாட்டர் பிறகு இங்கே வந்தா பிறகு கூட எனக்கு உடுப்பு வாங்க கடை பக்கம் போனதில்லை...........எல்லாம் அம்மா தான் அங்கே இருந்து அனுப்புவா ஆனால் இங்கத்தையான் பசன் கொஞ்சம் வேற பாருங்கோ...........சோ நண்பர்களுடன் போவேன் போயிட்டு ஒன்றை செலக்ட் பண்ண சொல்லி அவையிட்ட சொல்லுவேன் அவங்க எடுப்பாங்க அது சரி என்று போறது கடைசி 10நிமிசம் தான் அதற்கு மேல பொறுமையா இருக்கவே என்னால முடியாது...........

வேறு அநுபவங்களையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன்.......... <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளிப்பதற்கு மட்டுமல்ல; உடுப்புத்தேர்ந்தெடுப்பதற்க

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வையில் பிடித்து இருக்கவேண்டும். உடுத்தினால் மற்றவர்களின் கண்ணைக் குத்தவேண்டும்!!!

இல்லையேல் காசைக் செலவழித்துப் பிரயோசனமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ம். ஒரே வடிவத்தில் இருக்கின்ற தொகுப்புக்களில் நான் ஒரு நாளும் ஆடை தெரிவு செய்வதில்லை. ஆளை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வித்தியாசமான விதத்தில் தான் தெரிவு செய்வதுண்டு. ஆனால், கண்ணைக் குத்துவது போலக் கடுமையாக போடுவதுமில்லை.( கலர் அப்படிங்க)

நான் ஒரு ஆடையைத் தெரிவு செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதுமானது. ஆனால் வீட்டிற்கு வந்தப்புறம், மற்றய வர்ணத்தில் எடுத்திருக்கலாமோ என்று, சிலவேளைகளில் யோசிப்பேன். அது தான் சோகம்.

சொப்பிங்க் போகும்போதே இதுதான் எடுக்கணும் என்று நினைச்சிட்டு போவம். உடனேயே அந்த அந்த செக்சனுக்குள் போய் எடுத்துட்டு ஒரு 30 நிமிடத்தில் சொப்பிங்க் முடிச்சிடுவம். அங்கிருந்து எல்லாம் போட்டு பார்த்து எடுக்கிற வாடிக்கை இல்லங்க. அதுதான் 7 நாட்களுக்குள் திருப்பி மாத்திக்கலாமே ஏதும் அளவில்லை என்றால். ஹீஹீ. நமக்கு என்ன உடுப்பு என்றாலும் அளவாக இருந்தால் போட்டுடுவம் ல. அதுக்காக கஸ்டப்பட்டு எல்லாம் போடுறதில்லை.

புடவை கட்டிக்கிற வயசு வந்திருப்பினும் உயரமான புடைவை என்றால் எல்லாம் கட்டத்தயார். அதுக்காக பெரிய பெரிய வேலைப்பாடுகள் எல்லாம் பிடிக்காது. சிம்பிளாக அதே நேரம் உடலில் கட்டியிருக்கும்போது இதமாகவும் இருக்கணும் ல. எனவே புடைவை எடுப்பது எல்லாம் அம்மா தான். ஹீஹீ

புடவை கட்டிக்கிற வயசு வந்திருப்பினும் உயரமான புடைவை என்றால் எல்லாம் கட்டத்தயார். அதுக்காக பெரிய பெரிய வேலைப்பாடுகள் எல்லாம் பிடிக்காது. சிம்பிளாக அதே நேரம் உடலில் கட்டியிருக்கும்போது இதமாகவும் இருக்கணும் ல. எனவே புடைவை எடுப்பது எல்லாம் அம்மா தான். ஹீஹீ

நிலா அக்கா சேலை எல்லாம் கட்டுவீங்களோ எனக்கு தெரியாம போச்சு............தெரிந்திருந்தா வந்து பார்திருப்பேன் என்று சொல்ல வந்தனான்................. :D ;)

சேலை அணிந்து வந்த நிலவே என்று பாடி கொண்டு ஜம்மு எஸ்கேப்................. :P

பெண்கள் ஆடை எடுப்பதில் கூட்டிக்கொண்டு போகும்.. ஆடவனைக் கொல்வது மட்டுமல்ல அங்கு பணிபுரிவோரையும் ஒரு வாங்கு வாங்கிவிடுவார்கள்..

இளவயது ஆண்கள் சற்று நேரம் செழிவழிப்பதுணடு ஆனால் பேரம் பேசுவதில்லை..

இருந்தாலும் பெண்கள் போல்.. ஆண்கள் ஆடைஎடுக்க நேரம் செலவழிப்பதில்லை என்பதே என் கருத்து..

விற்பனைக்கு மிக அழகான பெண்கள் வேலை செய்யும் பச்சத்தில் மட்டும் நாங்கள் அதிகம் அசடு வழிவோம்... :D

நிலா அக்கா சேலை எல்லாம் கட்டுவீங்களோ எனக்கு தெரியாம போச்சு............தெரிந்திருந்தா வந்து பார்திருப்பேன் என்று சொல்ல வந்தனான்................. :D ;)

சேலை அணிந்து வந்த நிலவே என்று பாடி கொண்டு ஜம்மு எஸ்கேப்................. :P

:D:o:)

:):):)

சேலை கட்டின உடனே நிலா அக்காவின் உதட்டில் சிரிப்பு ஜம்மு உதட்டிலோ நக்கல்............ :P

சேலை கட்டின உடனே நிலா அக்காவின் உதட்டில் சிரிப்பு ஜம்மு உதட்டிலோ நக்கல்............ :P

கவனம் நக்கல் விக்கலாகி சிக்கலாக போகுது :angry:

கவனம் நக்கல் விக்கலாகி சிக்கலாக போகுது :angry:

பாவம் ஒரு பேபிக்கு விக்குது தண்னி எடுத்து தரமா இப்படியா சொல்லுறது.........அது சரி நிலா அக்கா நீங்க விருப்பமா போடுற உடுப்பு என்ன.............. :)

பாவம் ஒரு பேபிக்கு விக்குது தண்னி எடுத்து தரமா இப்படியா சொல்லுறது.........அது சரி நிலா அக்கா நீங்க விருப்பமா போடுற உடுப்பு என்ன.............. :rolleyes:

பர்தா :P

பர்தா :P

பர்த்தா என்றா............முஸ்லீம் ஆட்கல் போடூவீனம் அதோ............ :P

பர்த்தா என்றா............முஸ்லீம் ஆட்கல் போடூவீனம் அதோ............ :P

:P :P :P :P

:P :P :P :P

நீங்க எப்ப இருந்து மூஸ்லீமாக மாறினீங்கள்....... :P

நீங்க எப்ப இருந்து மூஸ்லீமாக மாறினீங்கள்....... :P

:rolleyes: என்ன இது? நான் மாறினேன் னு சொன்னேனா? எப்பவுமே அப்படித்தானுங்கோ.

:rolleyes: என்ன இது? நான் மாறினேன் னு சொன்னேனா? எப்பவுமே அப்படித்தானுங்கோ.

ஓ நீங்களும் முஸ்லீமா நம்மளை மாதிரி ...............ஈசா அல்லா.......... :P

ஓ நீங்களும் முஸ்லீமா நம்மளை மாதிரி ...............ஈசா அல்லா.......... :P

அதுசரி.

ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வோர் உடுப்பு என்று இருக்குதுதானே. இது கலாச்சாரமா? ஆனால் அதை பின்பற்றுவதில்லை தானே. என ஜம்மு :rolleyes:

அதுசரி.

ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வோர் உடுப்பு என்று இருக்குதுதானே. இது கலாச்சாரமா? ஆனால் அதை பின்பற்றுவதில்லை தானே. என ஜம்மு :rolleyes:

வெறி சாறி நிலா அக்கா கலாச்சாரதிற்கும் எனக்கும் லோங் டிஸ்சர்ன்ஸ்...................அதை பற்றி என்னிட்ட கேட்க வேண்டாம்................நமக்கு தெரிந்தது எல்லாம் உலகதிற்கு ஏற்ற மாதிரி வாழ தான் சும்மா நடிக்க தெரியாது பாருங்கோ கலாச்சாரம் என்று சொல்லி.............. :P

வெறி சாறி நிலா அக்கா கலாச்சாரதிற்கும் எனக்கும் லோங் டிஸ்சர்ன்ஸ்...................அதை பற்றி என்னிட்ட கேட்க வேண்டாம்................நமக்கு தெரிந்தது எல்லாம் உலகதிற்கு ஏற்ற மாதிரி வாழ தான் சும்மா நடிக்க தெரியாது பாருங்கோ கலாச்சாரம் என்று சொல்லி.............. :P

Both are equal :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடுப்பு விடயங்களில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. நாகரீக உடுப்புகளுக்கென பணவிரயம் செய்வதுமில்லை.ஆனால் எனது மனைவி உடுதுணிகள் எடுக்க சென்றால் கையுடன் பிரசர் மாத்திரைகள் எடுத்துச்செல்வது வழக்கம் B) :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உடுப்பு விடயங்களில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. நாகரீக உடுப்புகளுக்கென பணவிரயம் செய்வதுமில்லை.ஆனால் எனது மனைவி உடுதுணிகள் எடுக்க சென்றால் கையுடன் பிரசர் மாத்திரைகள் எடுத்துச்செல்வது வழக்கம் B) :rolleyes:

கொடுத்து வைச்சனீங்க குமாரசாமி உடுப்பு வாங்கிறச்ச மட்டும் குளிசையுடன் இருக்கிறீங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுத்து வைச்சனீங்க குமாரசாமி உடுப்பு வாங்கிறச்ச மட்டும் குளிசையுடன் இருக்கிறீங்க.

அட மன்னிக்கவும் கறுப்பாத்தா ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன் வீட்டில் நான் கிட்டத்தட்ட கோமா நிலைமையில்........... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அட மன்னிக்கவும் கறுப்பாத்தா ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன் வீட்டில் நான் கிட்டத்தட்ட கோமா நிலைமையில்........... :rolleyes:

ஆ.......அப்படின்னா மதுரை மீனாட்சியின் ஆட்சி எண்டு சொல்லுங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.