Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாளை முதல் 45ஆவது சென்னை புத்தகக் காட்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளை முதல் 45ஆவது சென்னை புத்தகக் காட்சி!

spacer.png

சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து விதமான கண்காட்சி மற்றும் பொருட்காட்சிக்குத் தமிழக அரசு தடை விதித்தது. இதனால் புத்தகக் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், தற்போது கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்தச் சூழலில் சென்னை புத்தகக் காட்சியை நடத்தத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி நாளை (பிப்ரவரி 16) முதல் மார்ச் 6ஆம் தேதி வரை 45ஆவது புத்தகக் காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (பிப்ரவரி 16) தேதி மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்க உள்ளார். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை பபாசி அமைப்பினர் மிகத் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

புத்தகக் காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பபாசி இணையதளத்தில் இருந்து புத்தகக் காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். கொரோனா பரவல் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் புத்தகக் காட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மேலும் பேசிய பபாசியின் துணைத் தலைவர் மயிலவேலன், "கடந்த ஜனவரி மாதம் 1,000 அரங்குகளில் பிரமாண்டமான முறையில் புத்தகக் காட்சியைத் திட்டமிட்டிருந்தோம். இப்போது அரசின் வழிகாட்டுதல்கள்படி 200 அரங்குகள் குறைக்கப்பட்டு, 800 அரங்குகளில் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 500 பதிப்பகங்கள் பங்கேற்க உள்ளன" என்றார். மேலும், சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்காக பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடக்க உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்

 

https://minnambalam.com/public/2022/02/15/7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தகக் காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன்'

 

spacer.png

சென்னையில் 45ஆவது புத்தகக் காட்சியை நேற்று (பிப்ரவரி 16) மாலை தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தப் புத்தகக் காட்சியில் நான் எழுதிய 'உங்களில் ஒருவன்' என்ற நூல் இம்மாத இறுதியில் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடைபெறும். சென்னையில் இந்த வருடத் தொடக்கத்தில் நடைபெற இருந்த புத்தகக் காட்சி கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தகக் காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.

தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று புத்தகக் காட்சி தொடங்கியது. இந்த 45ஆவது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

பின்னர் ஆறு எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை வழங்கி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா தொற்று பரவலால் புத்தகக் காட்சி தேதியை தள்ளிவைத்தது முதலில் சிரமமாக இருந்தது. மாவட்டங்கள்தோறும் புத்தகக் காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும். சென்னை புத்தகக் காட்சிக்கு வழக்கமாக வழங்கப்படும் ரூ.75 லட்சத்துடன் கூடுதலாக ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

செம்மொழி தமிழின் சிறப்புகளை உலகமெங்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக ஆக்கப்பட்டுள்ளது. ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது. அறிவுக் கோயில்களைக் கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசுதான் இந்த அரசு. மதுரையில் கருணாநிதி பெயரில் பிரமாண்டமான நூலகம் அமைக்கப்படுகிறது” என்று பேசியவர்...

தொடர்ந்து, “இதுவரை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய 1.50 லட்சம் புத்தகங்களை, இலங்கை யாழ்ப்பாணம் நூலகம் தொடங்கி பல ஊர்களில் இயங்கும் நூலகங்களுக்கு வழங்கியுள்ளேன். நான் எழுதிய 'உங்களில் ஒருவன்' என்ற நூல் இம்மாத இறுதியில் வெளியாகும். என்னுடைய 23 ஆண்டுக் கால வாழ்க்கை பயணத்தை அதில் நான் பதிவு செய்திருக்கிறேன்.

விரைவில் இந்தப் புத்தகக் காட்சியில் அந்தப் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும். புத்தகக் காட்சியில் நல்ல திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என விரும்பினேன், ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அறிவிக்க முடியவில்லை, இரண்டு நாட்களில் மக்களுக்கான நல்ல செய்தியை வெளியிடுவேன்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

மார்ச் 6ஆம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

 

https://minnambalam.com/politics/2022/02/17/6/MKStalin-says-I-am-one-among-you

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை புத்தகக் கண்காட்சி: கவனத்தை ஈர்க்கும் இளைஞர்களின் படைப்புகள்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

புத்தகக் கண்காட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

தமிழ்நாட்டில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளிலேயே, சென்னை புத்தகக் கண்காட்சி மிகவும் பெரியது. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறை தினங்களை ஒட்டி இந்தக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிப்ரவரி மாதத்தில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டைப் பொறுத்தவரை, ஜனவரி மாதத்தில் கண்காட்சியை நடத்த அரங்குகள் எல்லாம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், கொரோனா பரவலால் ஊரடங்கு அமலாக்கப்படவே, கண்காட்சி நடப்பது தள்ளிப்போடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில், இந்த மாதம் 16ஆம் தேதி முதல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு, துவக்கத்திலேயே ஜனவரியில் புத்தகக் கண்காட்சி நடக்காது என்பது தெரிந்துவிட்டதால், புதிய புத்தகங்களின் வரவு என்பது பெரிய அளவில் இல்லை. ஆனால், இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் பலரும் டிசம்பர் இறுதியிலேயே புத்தக வெளியீட்டிற்கான முயற்சிகளில் இருந்தனர்.

இந்த நிலையில் கண்காட்சி தள்ளிப்போனது பல பதிப்பாளர்களையும் பபாசியையும் திகைக்க வைத்தாலும், இந்த ஆண்டு விற்பனை கைகொடுக்குமென நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 790 அரங்குகள் அமைக்கப்பட்டு, ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் ஏதாவது ஒன்றிரண்டு புத்தகங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும். இந்த ஆண்டு, ஆயிரக்கணக்கான பக்கங்களுடன் 2,750 ரூபாய் விலையில் வெளியாகியிருக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் 'மிஸ் யூ' சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காணொளிக் குறிப்பு,

புல்லட்டில் புத்தகம் விற்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள்

அதேபோல, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சிறுகதைத் தொகுப்புகளும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இளைஞர்கள் வெளியிட்டுள்ள தொகுப்புகள். கவிதைகளில் கவனம் செலுத்திவந்த முத்துராசா குமாரின் 'ஈத்து', கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் ஒளிரும் பச்சைக் கண்கள், பெருந்தேவியின் 'கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?', கே.என். செந்திலின் 'விருந்து' ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன.

நாவல்களைப் பொறுத்தவரை, இமயத்தின் 'இப்போது உயிரோடிருக்கிறேன்', கரண்கார்க்கியின் சட்டைக்காரி ஆகியவை பரபரப்புடன் பேசப்பட்டுவருகின்றன.

புனைவல்லாத எழுத்துகளைப் பொறுத்தவரை, எல்லா ஆண்டுகளைப் போலவும் இந்த ஆண்டும் புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்திருக்கின்றன. குறிப்பாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் நூல்களின் எண்ணிக்கையும் தேர்வும் வாசகர்களை ஈர்க்கிறது.

கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புனைவல்லாத படைப்புகள் என எந்தவிதமான புத்தகங்கள் அதிகம் வருகின்றன, அதிகம் விற்கின்றன? "இதை அறிய பல ஆண்டுகள் முயற்சித்திருக்கிறோம். ஆனால், பதில் கிடைத்ததில்லை. ஒவ்வொரு பதிப்பாளரும் தங்கள் பதிப்பகம் சார்ந்தே தகவல்களைத் தெரிவிப்பார்கள். தற்போது நிறைய புனைவுகள் வருகின்றன. ஆங்கிலத்தில் வரும் பல நூல்கள் தற்போது உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படுகின்றன. தன் முனைப்புப் புத்தகங்கள் அதிகம் விற்கின்றன. குழந்தைகளுக்கான புத்தகங்களும் அதிகம் விற்கின்றன. பெரியார் தொடர்பான புத்தகங்களும் தொடர்ச்சியாக விற்றுவருகின்றன" என்கிறார் கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஒளிவண்ணன்.

 

புத்தகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

43வது புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடி தொடர்பான கண்காட்சி இடம்பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு பொருநை நதி நாகரீகம் தொடர்பான கண்காட்சி இடம்பெற்றிருக்கிறது. இதே அரங்கில் மெய்நிகர் முறையில் தொல்லியல் பொருட்களை காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால், அதையும் வரிசையில் நின்று ரசித்து வருகிறார்கள் வாசகர்கள்.

இந்த புத்தகக் கண்காட்சியை பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் நடத்துகிறது. ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி துவங்குவதற்கும் முன்பாக, உறுப்பினர்கள் அல்லாத பதிப்பாளர்களிடமும் விற்பனையாளர்களிடமும் அரங்குகளைப் பெறுவதற்கு போட்டி நிலவும். புதிதாக உறுப்பினர்களைச் சேர்ப்பதும் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. "ஆனால், கடந்த ஆண்டு புதிதாக 80 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் இந்த ஆண்டிலிருந்து அதுபோல போட்டிகள் ஏதும் இல்லை" என்கிறார் ஒளிவண்ணன்.

வேறு மொழியில் பதிப்பிக்கப்படும் புத்தகங்களின் பதிப்பாளர்களும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பினாலும், இடமின்மை காரணமாக அது சாத்தியப்படுவதில்லை என்கிறார் அவர். எவ்வளவு முயன்றாலும் 800 கடைகளுக்கு மேல் இந்தக் கண்காட்சியில் அமைக்க முடியாது என்பதுதான் இதற்குக் காரணம்.

கண்காட்சியின் துவக்க நாட்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாசகர்கள் வராததால், பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் சற்று சோர்வடைந்திருந்தனர். ஆனால், வெள்ளிக்கிழமையன்று மாலை நான்கு மணியளவிலேயே வாசகர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-60442637

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக  கண்காட்சியில் எதுக்கு அப்பன்பிள்ளையின்  அரசியல்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.