Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

CMR இல் இருந்து விடைபெற்றேன் சொந்தங்களே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

CMR இல் இருந்து விடைபெற்றேன் சொந்தங்களே...🙏
274867752_10220393356208457_141384737338
 
CMR வானொலி கருக்கொண்ட நாள் முதல், என் இதயத்தில் உறைந்துபோன பெயர். கடந்த சுமார் 18 ஆண்டுகளாக, CMR உம் நானும் சேர்ந்தே வளர்ந்தோம். அது தவழ்ந்தபோது நானும் தவழ்ந்தேன், அது நடந்தபோது நானும் நடந்தேன், அது ஓடியபோது நானும் ஓடினேன். ஆனால், தனிப்பட்ட காரணங்களால், என்னோடு வளர்ந்த பிள்ளை, CMR ஐ விட்டு கனத்த மனதுடன் ஓடிவந்துவிட்டேன்.
இம்முடிவு, என் சாவுக்குச் சமானமானது என்ற போதிலும், காலம் அவ்வாறான ஒரு முடிவுக்கு என்னை இட்டுச்சென்றுள்ளது. இதற்காக, என்னை நேசித்த அத்தனை உள்ளங்களிடமும், என்னை வளர்த்த CMR நிர்வாகத்திடமும் மன்னிப்புக்கோருகிறேன்.
எனினும், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை முடிந்தவரை, பயன்படுத்தி, என் ஊடகப்பணியை ஆற்றியிருப்பதாகவே கருதுகிறேன். ஒரு திருப்திகரமான மிக நீண்ட பயணமாகவே, CMR உடன் பயணித்த அத்தனை நாட்களும், மணிகளும், நொடிகளும் எனக்கான அடையாளத்தை சிறுகச் சிறுகச் செதுக்கின. என் பயணம் நீள.. நீள.. பாதைகளும் விரிந்தன. சிறுகச் சிறுக என் மீது வெளிச்சம் பட்டது. எனது பணியும், படைப்புக்களும் அங்கீகாரம் பெற்றன.
இவ்வாறு, ஒலி- ஒளிபரப்புத்துறையில் நான் அகலக் காலூன்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கி, என்னைத் தாங்கிய CMR நிர்வாகத்திற்கு எனது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி.
குறிப்பாக, கடந்த 18 ஆண்டுகளாக, நமக்கான கொடுப்பனவுகளை ஒரு நாள் கூடத் தாமதமின்றி வழங்கியது மட்டுமல்லாமல், சிந்தனை முரண்கள் பல இருப்பினும், என் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, பலவேளைகளில் சமரசங்களை மேற்கொண்டு, என் பாணியில், என் பணி செய்ய அனுமதியளித்து, எனக்கான கௌரவத்தையும் வழங்கியது மட்டுமல்லாமல்...
...எனக்கு பிரியாவிடை தரமாட்டேன் என்று கூறி, பிரியாவிடை நிகழ்வில் பிரசன்னமாகாமல் தவிர்த்தபோதிலும், எனக்கு கெளரவம் அளிக்கும்முகமாக, விளம்பரங்களையும், செய்திகளையும் நிறுத்தி, ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த, CMR வானொலியின் நிறுவனத் தலைவர் 'ஸ்டான் அன்ரனி' அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன்.
(குறிப்பாக November 27 அன்று மட்டுமே, CMR இல் விளம்பரங்கள் நிறுத்தப்படுவதும், எக்காரணத்திற்காகவும் இதுவரை காலமும் CMR இல் செய்திகள் நிறுத்தப்பட்டதுமில்லை என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன்.)
மேலும், CTR முதல் CMR/TVI வரை, ஒலி-ஒளிபரப்புத்துறையில் என்னைச் செதுக்குவதிலும், முகாமைத்துவ மற்றும் திட்டமிடல் விடயங்களில் என்னைக் கூர்மைப்படுத்திய, மிகுந்த கோபக்காரனான என்னை, ஒரு கௌரவமான முகவரி கொண்ட மனிதனாக மாற்றுவதில் பெரும் பங்காற்றிய, தனது நேர்த்தியான திட்டமிடல், தயாரிப்பு, நெறியாள்கை என்பவற்றின் மூலம் நிகழ்ச்சிகளின் தரத்தை மிக உயர்வாகப் பேணுவதில் முன்னுதாரணமாக விளங்கிய, போரின் இறுதிக்கு முன்னரான காலத்தில், தான் நெறிப்படுத்திய 'செய்திக்கண்ணோட்டம்' ஊடாக எனது நிகழ்ச்சிகளான 'செய்தியின் பின்னணியில்', 'குவியம்', 'பார்வை', 'தாயக நோக்கு', 'வீச்சு', 'கருத்தாடல்' போன்ற, TVI தொலைக்காட்சியிலும், CMR வானொலியிலும் எனது பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளுக்கும், முன்னுதாரணமாக அமைந்த ஆசான் 'தமிழ்ப்பிரியன்' அவர்களுக்கும் எனது நெஞ்சு நிறைந்த நன்றியை பதிவு செய்கிறேன்.
மேலும், CMR இல் செய்திப்பிரிவிலும், ஒலிபரப்பிலும், ஒலிபரப்பு நுட்பங்களையும், அதன் இலக்கணங்களையும் பயிற்றுவித்த, வரிகளின் - வார்த்தைகளின் தவறுகளை, பிறழ்வுகளைக் கணப்பொழுதில் கண்ணுறவும், செய்திகள், கட்டுரைகளில் உள்ள தேவையற்ற சொற்களை தணிக்கை செய்யவும் கற்றுக்கொடுத்த...
.....குறிப்பாக, CMR இல் பணி தொடங்குவதற்கு முன்னர் நடத்திய, 1-1/2 மாதகால ஒலிபரப்புப் பட்டறை மூலம், எனக்கும், சக ஒலிபரப்பாளர்களுக்கும், ஒலிபரப்பு அரிச்சுவடியை, ஆத்திசூடியாக வழங்கிய மூத்த ஒலி-ஒளிபரப்பாளர் P. விக்னேஸ்வரன் அவர்களுக்கும் எனது வணக்கத்துடன் கூடிய நன்றி.
மேலும், எனது நிகழ்ச்சிகள் சார்ந்த நேர விரயங்கள் காரணமாக, நமது அன்றாட வாழ்வில் பல சமரசங்களைச் செய்யவேண்டி இருந்தபோதிலும், அவற்றைப் பொறுத்துக்கொண்டு, எனக்கான தோழியாகவும், எனது நிகழ்ச்சிகளை மற்றும் செயல்களை நேருக்கு நேர் விமர்சனம் செய்யும் விமர்சகியாகவும், என் நிகழ்ச்சிகள் காரணமாக வெளிப்படுகின்ற எதிர்வினைகளைத் தாங்கிய ஒருவராகவும் விளங்கிய, எனது மனைவி 'கவிதா'வுக்கும் எனது நெகிழ்ச்சியான நன்றியை இவ்வேளையில் பதிவு செய்கிறேன்...
மேலும், நான் வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி, என்னை தமது குடும்பத்தில் ஒருவராக நேசித்த, என் மீது பாசமும்-நேசமும் கொண்ட நேயர்கள், ரசிகர்கள் அனைவருக்கும், தலை வணங்கி, கை கூப்பி நன்றி கூறுகிறேன். எனது இம்முடிவு, உங்களுக்குப் பேரதிர்ச்சி என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், உங்களைப் பிரிவது எனக்குத் தாங்க முடியாத பெரும் துயர் என்பதையும் கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறேன்.
...உங்களில் பலரை நான் கண்டதில்லை. நீங்கள் விரும்பியவாறான 'நெ'கிழ்ச்சியை நான் ஒலிபரப்பில் தந்ததில்லை. உங்களில் பலரிடம் நான் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருந்துள்ளேன். இருப்பினும், எனது பிரியாவிடை நிகழ்ச்சியில், உங்களின் விம்மலும், அழுகையும், கதறலும், என் நெஞ்சை உடைத்து விட்டன. அதற்க்கு மேல் தாங்கும் சக்தி என்னிடம் இருக்கவில்லை. நீங்கள் விரும்பாத முடிவை நான் எடுத்தமைக்காக என்னை மன்னித்துவிடுங்கள். என் நெஞ்சில் என்றும் நீங்கள் குடியிருப்பீர்கள். என் செவிகளில் உங்கள் குரல்கள் அசரீரியாக ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நிறைவாக, February 27, 2022 - ஞாயிறுக்கிழமை அன்று, எனக்கான பிரியாவிடை நிகழ்ச்சியை மிகவும் வேகமாகவும், நெகிழ்ச்சி மிக்கதாகவும் தொகுத்து வழங்கிய, என் ஒலிபரப்புத் தோழர்களான 'S. J. ராம்பிரஷன்' மற்றும் 'தர்ஷினி உதயராஜா' இருவருக்கும் எனது அகம் நிறைந்த நன்றி.
பிரியாவிடை நிகழ்ச்சி, என் வாழ் நாளில் மறக்கமுடியாத நினைவுகளைப் பதிவு செய்தது. 'ராம்பிரஷன்' மற்றும் 'தர்ஷினி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கலையகத்தினுள் நுழைந்தவுடனேயே, இறுதி ஊர்வலத்திற்குத் தயாரான பிணம்போல் ஆகினேன். அன்று நீங்கள் எதிர்பார்த்ததுபோல், என்னால் பேசமுடியவில்லை. கைகள் பதறி, கண்கள் குளமாகி, வார்த்தைகள் முட்டி, வேறு ஒருவனாகவே மாறிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்துக்கொள்ளவும்.
மேலும், அன்று கலையகம் வருகைதந்து பிரியாவிடை தந்த ஏனைய சக ஒலிபரப்புத் தோழர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கும், எனது அன்புடன் கூடிய நன்றி.
...SLBC முதல் CMR வரையான எனது, 25 ஆண்டுகால ஒலிபரப்பு பயணத்தின் குறியீட்டுடன், CMR வானொலியின் ஒலிபரப்பில் இருந்து, தனிப்பட்ட காரணங்களுக்காகவும், புதிய பயணத்திற்காகவும் விடைபெற்றுள்ளேன் என்பதை அனைவருக்கும் கனத்த இதயத்துடன் அறியத்தருகிறேன்..!!!
தொடர்ந்தும், உங்கள் அனைவரது அன்பையும் ஆசியையும் வேண்டிநிற்கும்....
- உதயன் S. பிள்ளை -
நன்றி வணக்கம்.!!! 🙏🙏🙏
(March 01, 2022)
  • கருத்துக்கள உறவுகள்

 CMR , TVi எல்லாத்தையும் Stan Anthony என்பவர் கையகப்படுத்தியபின்தான் உதயன் பிள்ளை இந்த முடிவு எடுத்தார்கள் என்கிறார்கள் இந்த  Stan Anthony யார் என்பது யாருக்கும் தெரியுமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.