Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக உயர் நீதிமன்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக உயர் நீதிமன்றம்!

spacer.png

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பியூ கல்லூரி மாணவர்கள் எனப்படும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் எட்டு பேர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வந்தனர். இவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் வருகைப்பதிவிலும் ஆப்சென்ட் போட்டனர். இதை எதிர்த்து வகுப்பறைக்கு வெளியே மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சனையைத் தொடர்ந்து கர்நாடக அரசு பள்ளிகளில் ஒரே சீருடை திட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது. அதில், ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. உடுப்பியில் ஆரம்பித்த பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.

ஹிஜாப் அணிந்துவர அனுமதி வழங்கக் கோரி மாணவிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்கு எதிராக காவி சால்வை அணிந்து வர அனுமதி அளிக்கக் கோரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப்-காவி சால்வை போராட்டம் நாளடைவில் வன்முறையாக மாறியது. மேலும் வன்முறை தொடராமல் இருக்க, பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உள்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சனை தேச அளவில் எதிரொலித்தது.

இதற்கிடையில், கர்நாடக அரசின் ஒரே சீருடை சட்டத்தை எதிர்த்தும், ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி வழங்கக் கோரியும் ஐந்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் விசாரித்து வந்தார். பின்பு இந்த வழக்கு தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், காஸி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளை பள்ளிக்கு அணிந்து செல்லக் கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு வந்த மாணவிகள் வாசலிலேயே நிறுத்தப்பட்டு, ஹிஜாப்பை அகற்றிவிட்டு உள்ளே வருமாறு ஆசிரியர்கள் கூறினர். இதை ஏற்க மறுத்த மாணவிகள், வகுப்பையும், தேர்வுகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் தீர்ப்பு வந்த பின்னர் எங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். எங்களுக்கு கல்வி போன்று ஹிஜாப்பும் முக்கியம். இது எங்கள் மத சுதந்திரம். அதை விட்டுக் கொடுக்க முடியாது என பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

spacer.png

இதுகுறித்தான வழக்கில் சீருடை கலரிலேயே மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்க வேண்டும். ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(10)(ஏ)ன்படி ஹிஜாப் அணிவது தனிப்பட்ட உரிமை. அதனால் ஹிஜாப் அணிவதற்கு சீருடை சட்டம் தடையாக இருக்க முடியாது என்று மாணவிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

சீருடை தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹிஜாப் அணிவது கட்டாய மத வழக்கம் கிடையாது என்று அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவதகி வாதாடினார்.

பதினொரு நாள் நடைபெற்ற விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 25ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.

இந்த நிலையில் இன்று(மார்ச் 15) ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடுப்பி, கலபுர்கி, ஷிமொகா உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அனைவரும் தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேளையில் இன்று காலை 10.30 மணியளவில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூடியது. அப்போது தீர்ப்பு நகலில் அனைத்து நீதிபதிகளும் கையெழுத்திட்டனர்.

தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை வாசித்தார். அந்த தீர்ப்பில், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் அத்தியாவசியமான நடைமுறை அல்ல. ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நியாயமான கட்டுப்பாடுதான். அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது. ஹிஜாப் தடைக்கு எதிராக சரியான முகாந்திரங்கள் எதுவும் வைக்கப்படவில்லை. அதனால், ஹிஜாப் மீதான தடை தொடரும்...இதற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/politics/2022/03/15/16/hijab-case-verdict-announced

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

நல்ல ஆரம்பம்

நல்ல தீர்ப்பு. 
பாடசாலைக்கு... சீருடை அணிந்து வருவதே முறை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நாடே துரோகம் செய்துள்ளது: மனுதாரர்கள்!

 

spacer.png
சொந்த நாடே எங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக உணர்கிறோம் என்று ஹிஜாப் வழக்கின் மனுதாரர்களான ஐந்து மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஹிஜாப் தீர்ப்பை நேற்று கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியது. ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின் கீழ் வரவில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்ப்பு வெளியானதையடுத்து, சில மாணவிகள் தேர்வை புறக்கணித்து விட்டு வீட்டிற்கு சென்றனர். இது மாணவிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மனுதாரர்களான ஐந்து மாணவிகள்,

“மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்யும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்கள் சொந்த நாடே எங்களுக்கு துரோகம் செய்ததாக உணர வைக்கிறது. நீதி அமைப்பின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. தற்போது எங்களுக்கு கிடைத்திருப்பது அநீதி.

எங்களுக்கு ஹிஜாப் வேண்டும். ஹிஜாப் இல்லாமல் வகுப்புகளுக்கு செல்லமாட்டோம். பெண்கள் தலைமுடி மற்றும் மார்பை மறைக்க வேண்டும் என்று குரானில் கூறப்பட்டுள்ளது. இதை குரானில் குறிப்பிடாமல் இருந்திருந்தால் நாங்கள் ஹிஜாப்பை அணிந்திருக்க மாட்டோம். குரானில் இதைக் குறிப்பிடாமல் இருந்திருந்தால் நாங்கள் போராடியிருக்க மாட்டோம். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இன்று உயிருடன் இருந்திருந்தால், இந்த தீர்ப்பை கேட்டு அழுது கொண்டிருப்பார்.

உள்ளூர் மட்டத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த பிரச்சனை இப்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்கு செல்ல மாட்டோம், ஆனால் அதற்காக தொடர்ந்து போராடுவோம். நாங்கள் அனைத்து சட்ட வழிகளிலும் முயற்சிப்போம். நீதிக்காகவும் எங்கள் உரிமைகளுக்காகவும் போராடுவோம்” என்று கூறினர்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு

இந்த நிலையில், இந்த ஐவரில் இல்லாத நிபா நாஸ் என்ற மாணவியும், வழக்கறிஞர் அனஸ் தன்வீர் மூலம் மற்றொரு மாணவியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

அந்த மனுவில், “கர்நாடகா கல்விச் சட்டம் 1983 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள், மாணவர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என்று கூறவில்லை. அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் ஹிஜாப் அணிவது தனியுரிமைக்கான வரம்பிற்கு உட்பட்டது. இந்த உரிமை அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. மதச் சுதந்திரம் மற்றும் மனசாட்சி சுதந்திரம் என்ற இரு வேறுபாட்டை உருவாக்கி, மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மனசாட்சிக்கு உரிமை இருக்க முடியாது என்று ஊகித்திருப்பதில் உயர்நீதிமன்றம் தவறு செய்துள்ளது.

மதச் சின்னங்களை அணிவதை அல்லது எடுத்துச் செல்வதை இந்திய சட்ட அமைப்பு வெளிப்படையாக அங்கீகரித்துள்ளது என்பதை உயர் நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 129,இன்படி தலைப்பாகை(டர்பன்) அணிந்த சீக்கியர்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கிறது. விமானத்தில் சீக்கியர்கள் டர்பனுடன் செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் விதிகள் அனுமதிக்கிறது. இப்படி இருக்கும்போது எங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி மறுக்கப்படுகிறது.

சீருடையின் பெயரில் மதச்சார்பின்மை மற்றும் சமத்துவம் என்ற போர்வையின் கீழ் இந்த கேலிக்குரிய தாக்குதல் நடத்தப்பட்டது. அரசாங்க அதிகாரிகளின் இந்த மாற்றாந்தாய் நடத்தை மாணவர்களின் நம்பிக்கையை கடைப்பிடிப்பதைத் தடுக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://minnambalam.com/politics/2022/03/16/11/petitioners-say-injustice-betrayed-by-our-own-country


 

 

படத்தில் இருப்பவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் ஹிஜாப் அணிந்திருந்தால் முகங்கள் தெரிந்திருக்கவேண்டுமே.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Kapithan said:

நல்ல ஆரம்பம்

அரோகரா...😁

Bild

ஹிஜாப் அணியுறது குத்தாமா?🤣

19 hours ago, தமிழ் சிறி said:

நல்ல தீர்ப்பு. 
பாடசாலைக்கு... சீருடை அணிந்து வருவதே முறை.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அரோகரா...😁

Bild

ஹிஜாப் அணியுறது குத்தாமா?🤣

 

ஒரு இருபது வருடங்கள் அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்த முஸ்லிம் பெண்கள் அணிந்த ஆடைகளையும் தற்போது அவர்கள் அணியும் ஆடைகளையும் ஒப்பிட்டிப் பாருங்கள். வேறுபாடு புரியும்.

இந்த மாற்றம் நன்மையா தீமையா..?

இதன் தொடர்ச்சி எங்கே போய் முடியும்? 

(உடை தனி மனித தெரிவுக்குட்பட்டதுதான். ஆனால் இந்த மாற்றம் நிச்சயம் நன்மையைத் தரப்போவதில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அரோகரா...😁

Bild

ஹிஜாப் அணியுறது குத்தாமா?🤣

 

சாமியாரே! இவர்கள் எங்கு செல்கிறார்கள்....? பள்ளிக்கூடத்திற்கா?? அன்றிப் பள்ளியறைக்கா.??? 

இவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் ஆனால் இவர்கள் செல்லும் சாலைகளில், ஊர்களில் உள்ள நாய்களைக் கட்டிப்போட்டு இவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கச் சொல்லுங்கள்.😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.