Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களது ஊர்ப் பயண அனுபவத்தை நகைசுவையாக நகர்த்திக்கொண்டு போகிறீர்கள், நன்றாக உள்ளது.

COVID பயணக்கட்டுப்பாடுகளை இங்கே எடுத்த கையோடு நானும் தை மாத ஊருக்கு சென்றிருந்தேன்.. வழமையான ஊர்ப்பயணங்களை விட சற்று வித்தியாசமாகவே இருந்தது. எனது நண்பர்கள் வரும் வாரங்களில் போக உள்ளார்கள், ஆனால் முன்பு மாதிரி அதிக கட்டுப்பாடுகள் இல்லை. 

On 3/4/2022 at 02:24, nedukkalapoovan said:

படங்களை இணைப்பதில் ஒரு சிக்கல் இருக்குது. படங்களை யாழில் தரவேற்ற முடியாத அளவுக்கு அவை அளவில் கூடி இருக்குது. வேறு சமூக ஊடகங்களின் ஊடாக ஏற்றி இணைப்பைக் கொடுத்தால்.. அதையும் தற்காலிகமாக அனுமதித்து பின் தடை செய்திடுறாங்க. இப்ப எல்லாம் நாம் எடுத்த படங்களை நிரந்தரமாகத் தெரிய யாழில் பகிர்வது சிரமமாக உள்ளது. வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.  எழுத ஆரம்பிக்க முன்னே படம் இணைக்கும் நோக்கமிருந்தது. ஆனால்.. இன்னொரு தலைப்பில் சமூக ஊடகமொன்றில் தரவேற்றி..  போட்ட படங்களே.. தற்காலிக காண்பித்தலுக்குப் பின்.. காணாமல் போயிட்டதால்.. இங்க படம் போடேல்ல

நான், யாழில் எழுதும் எனது உள்ளூர் பயண அனுபவங்கள், ஊர்ப் பயண அனுபவங்களிற்கான படங்களை விம்பகத்திலும், postimage website  மூலம் இணைப்பதுண்டு.  படத்தின் அளவைக் கூட  postimage மூலம் குறைக்கலாம். அதே போல இணைக்கும் பொழுது no expiry தேர்ந்தெடுத்தால் படங்கள் காணாமல் போகாது.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வந்த வாகனம்.. ஆட்டோ. வரவேண்டிய வானோ.. காரோ கடைசி நேரத்தில் கழுத்தறுத்துவிட்டதால்.. ஆட்டோ தான் வந்திக்கோனும் என்று நினைச்சுக் கொண்டே... சரி.. எனியும் இதில காத்துக் கொண்டிருக்க ஏலாது.. வந்த ஆட்டோவில என்றாலும்.. போய் வீடு சேருவம் என்றிட்டு.. பெட்டிகளை எல்லாம் ஆட்டோவில் ஏத்த ஆயத்தமாக.. ஆட்டோவில் வந்த உறவு சொல்லிச்சு.. கார் கொஞ்சம் தள்ளி நிப்பாட்டி இருக்குது. புக் பண்ணின வான் வராத படியா.. பிரன்டின்ட காரைத் தான் கூட்டிக்கொண்டு வந்தன். அவருக்கு எயார்போட் றைவ் சரியா வராத படியால்.. கொஞ்சம் வெளிய நிப்பாட்டி இருக்குது. 

சரி.. ஏதோ வந்திச்சேன்னு ஆட்டோவில் ஏறி.. பின் காரில் ஏறி.. களைச்சு விழுந்தவனை இன்னும் களைக்கப் பண்ணி கூட்டிக்கிட்டே போனாய்ங்க.

ஒருவாறு.. கொழும்பை அடைந்ததும்.. ரபிக்கை குறைக்க.. கடற்கரை வீதியால் பயணிக்கும் போது தான்..கொஞ்சம் வெளில விடுப்புப் பார்க்கும் எண்ணோட்டமே வந்தது. அப்ப கே எவ் சி தான் முதல்ல கண்ணில் பட்டிச்சு. உடன அதில நிறுத்தி.. சாப்பிடுவம் என்றால்.. அந்த ரபிக்குக்குள்ள போய் பார்க்கிங் தேடுவது பெரும்பாடாகி விட்டது.

கே எவ் சி யில்.. விலைப்பட்டியலில் பெரிய மாற்றமிருக்கேல்ல. ஆனால் அளவு சிறிதாகி இருக்குது. அதே தான் பின் நாட்டில் எல்லா இடமும் என்பதையும் காண முடிஞ்சுது. கிலோ கணக்கிற்கு இருந்த விலை எல்லாம்.. இப்ப 100 கிராம்.. 250 கிராம் என்றிருக்குது. ஒரு மாம்பழம்.. 250 ரூபா போகுது. ஆனால் மஞ்சள் தொடங்கி எல்லாம் கிடைக்குது. பெட்டிக்கடையிலும் மஞ்சள் இருக்குது. அங்கர் பால் மாவுக்கும் காஸூக்கும் தான் அப்ப தட்டுப்பாடு. அதிலும்.. காஸ் வரத் தொடங்கி இருந்தது. வர்த்தக செல்வாக்குள்ளவை உள்ளால எல்லாம் பெற்றுக் கொள்ளினம். இல்லாத சனம் கியூவில நின்று ஏமாறுவதும் போவதும் வருவதுமா அவஸ்தைப் படுகுது. 

எங்கட நல்ல காலம் உயர்தரப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால்.. மின்வெட்டு அதிகம் நேரம் இருக்கவில்லை. ஆனால்.. நுளம்புத் தொல்லை மட்டும் மிக அதிகமாக இருந்திச்சு. மற்றும்படி பயணம்.. சுமூகமாகவே அமைஞ்சுது.

முற்றும். 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் அலைச்சலுடன் போய்வந்திருக்கிறீர்கள்......நல்ல பயணக் கட்டுரை .......!  👏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, suvy said:

மிகவும் அலைச்சலுடன் போய்வந்திருக்கிறீர்கள்......நல்ல பயணக் கட்டுரை .......!  👏

இன்னும் எழுதனுன்னு விருப்பம் தான். ஆனால் நேரம் கிடைப்பது கடினமாக இருப்பதால்.. சுருக்கியாச்சு. 

21 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களது ஊர்ப் பயண அனுபவத்தை நகைசுவையாக நகர்த்திக்கொண்டு போகிறீர்கள், நன்றாக உள்ளது.

COVID பயணக்கட்டுப்பாடுகளை இங்கே எடுத்த கையோடு நானும் தை மாத ஊருக்கு சென்றிருந்தேன்.. வழமையான ஊர்ப்பயணங்களை விட சற்று வித்தியாசமாகவே இருந்தது. எனது நண்பர்கள் வரும் வாரங்களில் போக உள்ளார்கள், ஆனால் முன்பு மாதிரி அதிக கட்டுப்பாடுகள் இல்லை. 

நான், யாழில் எழுதும் எனது உள்ளூர் பயண அனுபவங்கள், ஊர்ப் பயண அனுபவங்களிற்கான படங்களை விம்பகத்திலும், postimage website  மூலம் இணைப்பதுண்டு.  படத்தின் அளவைக் கூட  postimage மூலம் குறைக்கலாம். அதே போல இணைக்கும் பொழுது no expiry தேர்ந்தெடுத்தால் படங்கள் காணாமல் போகாது.. 

உங்கள்.. எங்கள் அனுபவங்கள் எனிப் போறவைக்கு வழிகாட்டலாக அமைந்தால்.. இன்னும் சிறப்பாக அமையும் அவைட பயணங்கள். ஆனால்.. தொடர்ந்து நாட்டு மற்றும் உலக நிலைமைகளை அவதானித்துப் பறப்பது நல்லம். 

பட இணைப்புக்கான உங்கள் விளக்கத்துக்கு நன்றி. மூன்றாம் வகை மூலதார தரவேற்றம் ( Third party picture uploading platform) குறித்த நம்பகத்தன்மைகள் குறைஞ்சிட்டுது இப்ப. முன்னைய கால அனுபவங்களில் இருந்து. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/4/2022 at 16:06, nedukkalapoovan said:

விமானக் கூரையை தொட்டுத் தடவினால்.. ஒரே தண்ணி. என்ன ராயிலட் லீக்கான தண்ணியான்னு கோவமாக் கேட்க.. இல்லை இல்லை.. இது சிலவேளை நடக்கிறது.. ஆக்கள் விடுற மூச்சுக் காத்தில உள்ள தண்ணி ஒடுங்கி நின்று பிளைட் ஏறேக்க.. இப்படி ஒழுகிறது தான் என்றாள்.

நீங்கள் ஓ.எல் விஞ்ஞானம், ஏ.எல் பெளதிகவியலில் படித்த விடயங்கள் தான். விமானம் 37,000 அடி உயரத்தில் பறக்கும்போது வெளி வெப்பநிலை மைனஸ் 40 50 என்று குறையும். ஈரப்பதன் உள்ள வெப்ப காற்று குளிரான முகப்புடன் தொடுகையை ஏற்படுத்தி நீர் துளிகள் உருவாகலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/4/2022 at 19:44, நியாயத்தை கதைப்போம் said:

நீங்கள் ஓ.எல் விஞ்ஞானம், ஏ.எல் பெளதிகவியலில் படித்த விடயங்கள் தான். விமானம் 37,000 அடி உயரத்தில் பறக்கும்போது வெளி வெப்பநிலை மைனஸ் 40 50 என்று குறையும். ஈரப்பதன் உள்ள வெப்ப காற்று குளிரான முகப்புடன் தொடுகையை ஏற்படுத்தி நீர் துளிகள் உருவாகலாம்.

விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சொகுசு பயணிகள் விமானம் ஒன்றில்.. இந்த அடிப்படை பெளதீகமாற்றத்துக்கு தீர்வு தேடாமல் விமானம் வடிவமைக்கப்பட்டிருக்கவாய்ப்பில்லை. ஏனெனில்.. மற்றைய விமானங்களில் இப்படி நிகழ்வில்லை. அதற்கேற்ப அந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏன் இந்தக் குறிப்பிட்ட விமானத்தில் மட்டும்..??!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 5/4/2022 at 02:44, nedukkalapoovan said:

எங்கட நல்ல காலம் உயர்தரப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால்.. மின்வெட்டு அதிகம் நேரம் இருக்கவில்லை. ஆனால்.. நுளம்புத் தொல்லை மட்டும் மிக அதிகமாக இருந்திச்சு. மற்றும்படி பயணம்.. சுமூகமாகவே அமைஞ்சுது.

போய் இறங்கிய மாதிரி திரும்ப புறப்பட்டதையும் லண்டனில் கருவாடோடு முழுசிக் கொண்டு நின்றதுகளையும் எழுதியிருக்கலாம்.அமுக்கியிட்டீங்க.பரவாயில்லை.

Edited by ஈழப்பிரியன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, nedukkalapoovan said:

விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சொகுசு பயணிகள் விமானம் ஒன்றில்.. இந்த அடிப்படை பெளதீகமாற்றத்துக்கு தீர்வு தேடாமல் விமானம் வடிவமைக்கப்பட்டிருக்கவாய்ப்பில்லை. ஏனெனில்.. மற்றைய விமானங்களில் இப்படி நிகழ்வில்லை. அதற்கேற்ப அந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏன் இந்தக் குறிப்பிட்ட விமானத்தில் மட்டும்..??!

உங்களுக்கு பறப்பு அசெளகரியத்தை கொடுத்தால் விமான நிறுவனத்திற்கு முறைப்பாடு கொடுக்கலாம். படம்/காணொலியை அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். Refund/Gift voucher ஏதும் கொடுப்பார்கள். விமானத்தின் Tail Numberஐ குறித்தால் அதன் வயது, பின்னணி பற்றி அறியலாம். சிலருக்கு தாம் பயணிக்கும் விமானங்களின் Tail IDஐ சேகரிப்பது பொழுது போக்கு. வெவ்வேறு சமயங்களின் அந்தந்த விமானங்களை இனம் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, ஈழப்பிரியன் said:

போய் இறங்கிய மாதிரி திரும்ப புறப்பட்டதையும் லண்டனில் கருவாடோடு முழுசிக் கொண்டு நின்றதுகளையும் எழுதியிருக்கலாம்.அமுக்கியிட்டீங்க.பரவாயில்லை.

அளவோடு...கருவாடு கொண்டு வந்தது தான். அதனால் முழிக்கத் தேவையில்லை. இங்கிலாந்து இந்த விடயத்தில் அவுஸி... சுவிஸை விட எவ்வளவோ மேல். ஆனால் கருவாடு வாங்கப் போய் பக்கத்தி பக்கத்தி கடைக்காரர் போட்டி போட்டுக் கொண்டு அடிபிடி படும் அளவுக்கு போகப் பார்த்திட்டுது. அவங்கள விலக்குப் பிடிக்கிறதே பெரியப்பாடாப் போச்சு. 

ஆனாலும்.. இப்ப எல்லாம் நல்லா சின்னதா வெட்டி.. நல்லா பக்கிங் பண்ணி தாறாய்ங்க. 

15 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

உங்களுக்கு பறப்பு அசெளகரியத்தை கொடுத்தால் விமான நிறுவனத்திற்கு முறைப்பாடு கொடுக்கலாம். படம்/காணொலியை அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். Refund/Gift voucher ஏதும் கொடுப்பார்கள். விமானத்தின் Tail Numberஐ குறித்தால் அதன் வயது, பின்னணி பற்றி அறியலாம். சிலருக்கு தாம் பயணிக்கும் விமானங்களின் Tail IDஐ சேகரிப்பது பொழுது போக்கு. வெவ்வேறு சமயங்களின் அந்தந்த விமானங்களை இனம் காணலாம்.

தகவலுக்கு நன்றி.

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.