Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவசங்கள் தொடர்ந்தால் இலங்கை நிலைதான் நமக்கும்.! மோடியிடம் நேரடியாக முறையிட்ட செயலர்கள்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலவசங்கள் தொடர்ந்தால் இலங்கை நிலைதான் நமக்கும்.! மோடியிடம் நேரடியாக முறையிட்ட செயலர்கள்.!

1027317-modi-17.jpg

டெல்லி: தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் ஜனரஞ்சக மற்றும் இலவசத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கமாகத் தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகளும் பல வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்யும். தேர்தலில் மக்கள் வாக்குகளைப் பெற பல்வேறு கட்சிகளும் இலவசத் திட்டங்கள் அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த இலவச திட்டங்கள் குறித்து இரு வேறான கருத்துகள் உள்ளன. தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்கள் குறித்து நீதிமன்றங்களில் கூட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

முக்கிய சந்திப்பு

இந்தச் சூழலில் ஜனரஞ்சக மற்றும் இலவசத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை பல்வேறு துறைகளின் செயலாளர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இலங்கை நிலை

குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் இலவச திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. இலவசத் திட்டங்களின் போக்கைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால், சில மாநிலங்களில் இலங்கை நாட்டில் ஏற்பட்டது போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சில செயலாளர்கள் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பொருளாதார ரீதியாக அதிக காலம் நீடிக்க முடியாதவையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்போதோ திவால்

அரசியல் தேவைகள் காரணமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டங்களின் பொருளாதார சமநிலையை செக் செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினர். நாட்டின் பல மாநிலங்களில் ஆபத்தான நிதிநிலையில் இருப்பதாகவும், அவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்திருக்காவிட்டால் எப்போதே திவால் ஆகியிருக்கும் என்றும் செயலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாகப் பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் வெளியிட்ட அறிவிப்புகள் நீடிக்க முடியாதவை என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

இலவச மின்சாரம்

இது குறித்து உடனடியாக தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படும் இலவச மின்சாரம் என்பது அரசுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய திட்டங்களுக்கு அரசால் அதிக நிதி ஒதுக்க முடிவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் பாதிப்பு

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதிய முறைக்கு மாறியுள்ளது பொருளாதார ரீதியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று குறித்து மத்திய அரசு அதிகாரிகளும் கவலைப்படுகிறார்கள். இருப்பினும் இது தொடர்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இலவசத் திட்டங்கள் குறித்த அரசியல் கட்சிகளின் அறிவிப்புகள் நீண்ட கால நோக்கில் மத்திய-மாநில அரசில் கடுமையான நிதி பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


பிரதமர் மோடி

மத்திய மாநில அரசுகளுடன் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், வறுமையை ஒழிக்கச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மூத்த செயலாளர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும்,அனைத்து பிரச்சினைகளிலும் தேசியக் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்பதால், ஒரு குழுவாகச் செயல்படவும் பிரதமர் மோடி செயலர்களைக் கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், இதுபோல செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவது இது ஒன்பதாவது முறையாகும்.

மாநில வரி வருவாய்

வரி வருவாயை பொருத்தவரை இப்போது மாநில அரசுகள் பெரும்பாலும் மத்திய அரசை நம்பியே இருக்க வேண்டிய சூழலில் உள்ளன. சொத்து வரி மற்றும் மோட்டார் வாகனப் பதிவிலிருந்து பெறப்படும் வரிகள், மது மீதான கலால் மற்றும் பெட்ரோல் மீதான VAT என மாநில அரசின் நேரடி வரி வசூல் இப்போது குறைந்துள்ளன. இதனால் மாநில அரசுகளின் வருவாய் பெரியளவில் அதிகரிப்பதில்லை. அதிலும் கூட மத்திய அரசு தங்களுக்கு வரும் நிதியை முறையாக வழங்குவதில்லை என்று மாநிலங்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிலுவைத் தொகை முறையாக விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

https://tamil.oneindia.com/news/delhi/freebies-unsustainable-states-can-go-bust-like-srilanka-say-secretaries-at-meet-with-pm-narendra-mo-453881.html

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் போர் அச்சம் : அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை!

இலங்கை போன்ற நிலை... இந்தியாவுக்கும், ஏற்படும் என மோடியிடம் எடுத்துரைப்பு!

மாநிலங்கள் பொருளாதாரத்தை சீரமைக்காமல் இலவச திட்டங்களை அறிவிப்பதால் எதிர்காலத்தில் இந்தியாவும், இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என  பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு துறைகளிலுள்ள செயலாளர்கள் உட்பட பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இதன்போது  தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிக்கர திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பேசியுள்ளனர்.

மாநிலங்களின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி செல்வதாகவும், மத்திய அரசு உதவாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

மாநில நிதிநிலைமையை சீரமைக்காமல் இலவச திட்டங்களை தொடர்ந்தால் இலங்கை, கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டதுபோன்ற பொருளாதார நெருக்கடியை அத்தகைய மாநில அரசுகள் சந்திக்க நேரிடும் எனவும் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1274720

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நிலை இந்தியாவிலும் ஏற்படும்: பிரதமர் மோதியிடம் அதிகாரிகள் சொன்னது ஏன்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மோதி

பட மூலாதாரம்,ANI

இன்றைய (05.04.2022) நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

இந்தியாவில் இலவசங்களைக் கொடுக்கும் சில மாநிலங்கள் இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடலாம் என பிரதமர் நரேந்திர மோதியிடம் அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளதாக தி இந்து தமிழ் திசை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த செய்தியில், ''நல்லாட்சியை வழங்க, நிர்வாகத்தில் மேம்பாட்டைக் கொண்டுவர ஆலோசனைகளை வழங்குமாறு பிரதமர் மோதி, பிராந்திய வாரியாக 6 குழுக்களை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் அனைவருமே செயலர் நிலையில் உள்ளவர்கள்.

பிரதமர் மோதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலர் பிகே மிஷ்ரா, கேபினட் செயலர் ராஜீவ் கவுபா ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதமர் மோதி, "பற்றாக்குறைகளை சமாளிக்க திட்டம் போடுவதை விடுத்து அதிகப்படியானவற்றை நிர்வகிக்க திட்டம் தீட்டுங்கள். வறுமையைக் காரணம் காட்டும் பழைய சாக்குகளை விட்டொழியுங்கள். பெரிய இலக்குகளைக் கொள்ளுங்கள்" என்று அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.

அதிகாரிகள் அளித்த விளக்கம்

அப்போது அதிகாரிகள் சிலர், "இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் மாநிலங்கள் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்" என்று எடுத்துரைத்தனர்.

அண்மையில், தேர்தலை சந்தித்த பஞ்சாப், உ.பி., கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட இலவசத் திட்டங்களை முன்வைத்து அதிகாரிகள் இந்த ஆலோசனையை பிரதமருக்கு வழங்கினர்.'' என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகேதாட்டு அணை விவகாரம்: கர்நாடக முதலமைச்சர் டெல்லி பயணம்

 

கர்நாடக முதலமைச்சர் பச்வராஜ் பொம்மை

பட மூலாதாரம்,BASAVARAJ BOMMAI

மேகேதாட்டு அணை, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார் என்று தினத் தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த அந்த செய்தியில், காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகேதாட்டு என்கிற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த நிலையில், பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்த உள்ளார்.

அதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசும் அவர், அமைச்சரவை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோருகிறார். கர்நாடக அமைச்சரவையில் இன்னும் 4 இடங்கள் காலியாக உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ளன.

அதனால் அமைச்சரவையை விரைவாக விஸ்தரிக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு பசவராஜ் பொம்மை ஒப்புதல் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசவராஜ் பொம்மையுடன் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோளும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

கிரிஷி உதான் திட்டம்: வேளாண் பொருட்களுக்கு 53 விமான நிலையங்களில் கட்டண சலுகை

வேளாண் பொருட்களை தேசிய, சர்வதேச அளவில் அனுப்பும் கிரிஷி உதான் திட்டத்தில் திருச்சி, கோயம்புத்தூர் உட்பட நாடு முழுவதும் 53 விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளாக தினமணி செய்தியில் உள்ளது.

இது குறித்த அந்த செய்தியில், வேளாண் பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்லும் கிரிஷி உதான் திட்டத்தில் பயனடைந்தவர்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி இரன்னா காடாடி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் அளித்த பதில் அளித்துள்ளார்.

அதில், சர்வதேச, தேசிய வழித்தடங்களில் வேளாண் பொருட்களை கொண்டு செல்ல, கடந்த 2020ம் ஆண்டு கிரிஷி உதான் திட்டம் தொடங்கப்பட்டது. மலைப்பகுதிகள், வட கிழக்கு மாநிலங்கள், பழங்குடியினர் பகுதிகளில் இருந்து வரும் எளிதில் அழுகும் உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வசதிக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.

முதல்கட்டமாக, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அகர்தலா, டேராடூன், திமாபூர், இம்பால், ஜம்மு, குலு, லே, ராய்ப்பூர், போர்ட் ப்ளேர், ராஞ்சி உள்ளிட்ட 25 விமான நிலையங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்திய விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள கோயம்புத்தூர், திருச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், ஜலந்தர், ஆக்ரா, அமிர்தசரஸ், சண்டிகர், வாரணாசி உள்ளிட்ட மேலும் 28 விமான நிலையங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

கிரிஷி உதான் திட்டத்தில் சிவில் விமான போக்குவரத்து, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், கால்நடை, மீன் வளம், வர்த்தகம், உள்ளிட்ட 8 அமைச்சகங்கள், துறைகள் உள்ளன.

இத்திட்டத்தின்படி, வேளாண் பொருட்களின் தரையிரக்கம், வாகன நிறுத்துமிடம், சரக்கு முனையத்தில் இருந்து பயணியர் பகுதிக்கு செல்லும் கட்டணம் ஆகியவை முழுமையாக தள்ளுபடி செய்து, விமான போக்குவரத்தின் மூலம் விவசாய உற்பத்தியை எளிதாக்கி, ஊக்குவிக்கப்படுகிறது.

ஏற்றுமதி அதிகரிப்பு

இதில், 2021-22ம் நிதியாண்டில் பிப்ரவரி வரை உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் மொத்தம் 1,08,479 மெட்ரிக் டன் அழுகிப் போகும் வேளாண் பொருட்கள் கையாளப்பட்டுள்ளன.

இது 2020-21ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 24, 437 மெட் ரிக் டன் அதிகம். என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.'' என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-60992123

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.