Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீரழிந்து வரும் பொருளாதாரம் சிக்கலுக்குள் நாட்டின் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீரழிந்து வரும் பொருளாதாரம் சிக்கலுக்குள் நாட்டின் மக்கள்

தினசரி எகிறிவரும் விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பவற்றுக்கு முகம் கொடுக்க முடியாது திணறிக் குமுறிக் கொண்டிருக்கின்றார்கள் இலங்கைத் தீவின் மக்கள்.

இதுவரை காலமும் யுத்தப் பிரதேசங்களில் - குறிப்பாகத் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் வாழும் மக்களே அன்றாட ஜீவனோபாயத்தைப் பறிகொடுத்து, வாழிடத்தையும், உடைமைகளையும் இழந்து தினசரி வாழ்வியலுக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அது இப்போது தென்னிலங்கைக்கும் பரவி விட்டது. அன்றாட வாழ்வைக் கொண்டு நடத்த முடியாத இக்கட்டுக்கு விலைவாசி அதிகரிப்பு உயரப் பாய்ந்து விட்டதால் இலங்கைத் தீவு மக்கள் அனைவருமே பெரும் நெருக்கடிக்கும் திண்டாட்டத்துக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஆளும் தரப்பு வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ சார்பில் தென்னிலங்கையில் ஒரு பரப்புரை முன்வைக்கப்பட்டது. "பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக நீண்டகாலம் குரல் எழுப்பி வருபவர் மஹிந்தர். இலங்கை பாலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் தலைவராகவும் நீண்ட காலம் பணிபுரிந்தவர் அவர். விடுதலை கோரிப் போராடும் பாலஸ்தீன மக்களுக்காகக் குரல் எழுப்பியவர் என்ற காரணத்தால் அரபுலகில் பெரிதும் மதிக்கப்படுபவர். அரபுலகில் பல தலைவர்களுடன் இதனால் நல்லுறவைப் பேணுகிறார் அவர். எனவே அவர் ஜனாதிபதியானால், தமது நண்பர்களான அரபுலகத் தலைவர்கள் மூலம் அத்தலைவர்களின் நாடுகளிடமிருந்து குறைந்த விலையில் - மானிய அடிப்படையில் எரிபொருளை இலங்கைக்குப் பெற்றுத்தருவார் மஹிந்த ராஜபக்ஷ' என்று அப்போது தெற்கில் பிரசாரப்படுத்தப்பட்டது.

தேர்தல் கால வாக்குறுதியும் பிரசாரமும் 'குடிகாரன் பேச்சு' போன்றவை என்பதைத் தெரியாமலா சொல்லி வைத்தார்கள்? 'குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு' என்ற மாதிரி தேர்தல் கால பரப்புரையும் அத்தேர்தலோடு அடிபட்டுப் போய்விட்டது.

மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதியாகிவிட்டார். அவரது நண்பர்களைத் தலைவராகக் கொண்ட எந்த அரபுலக நாடும் இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்கவும் இல்லை. தேர்தல் காலத்தில் வழங்கிய மற்றைய வாக்குறுதிகள் போல இதையும் நம்பி மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.

ஜனாதிபதி மஹிந்தர் பதவியேற்ற பின்னர் இதுவரை 16 தடவைகள் எரிபொருள் விலைகள் அதிகரித்து விட்டன. இந்த வருடத்தில் மட்டும் எட்டுத்தடவைகள். கடந்த ஒரு மாத காலத்துக்குள் இரண்டு முறைகள். உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்தால் இங்கும் உடனே விலை அதிகரிப்பு என்றாகிவிட்டது.

எரிபொருள் விலை அதிகரிப்பு 'றொக்கட்' பாய்ச்சலில் உயர்ந்திருக்கின்றமை விலைவாசியை மிக மோசமாக அதிகரிக்க வைத்திருக்கின்றது. ஒவ்வொரு பொருளின் விலையிலும் - ஒவ்வொரு சேவையின் கட்டணத்திலும் - பெரும் பாய்ச்சலை இந்த எரிபொருள் விலை உயர்வு ஏற்படுத்தி நிற்கின்றது.

மா விலை உயர்ந்ததால் ஓர் இறாத்தல் பாணின் விலை 27 ரூபாவாகிவிட்டது.

பண வீக்கமும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது. பண வீக்கம் 13 வீதத்தில் இருப்பதாக மத்திய வங்கி வட்டாரங்கள் கதை விட்டாலும் அது 17 வீதத்தை எட்டிவிட்டதாக பொருளாதார நிபுணர்கள் கணிப்பிடுகின்றார்கள்.

எரிபொருள் விலை அதிகரிப்பு, அதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு போன்றவை மட்டுமே பணவீக்கத்துக்குக் காரணமல்ல.

மோசமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, அதனால் பெரும் நிதி நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் மஹிந்தரின் அரசு, அன்றாட நிதி நெருக்கடிப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காக புதிய பண நோட்டுக்களை அச்சிட்டு, புழக்கத்துக்கு விட்டுத் தள்ளும் - குறுகிய நோக்கம் கொண்ட - குறுக்குவழித் திட்டத்தையும் செயற்படுத்தி வருகின்றது. அதுவும் பண வீக்கம் எல்லை மீறுவதற்கு முக்கிய காரணம் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதற்காக முன்னெப்போது மில்லாதவாறு சுமார் நூற்றிப்பத்துப் பேரை அமைச்சர்களாக நியமித்து பொது நிதியை வீணாக விரயம் செய்யும் மஹிந்தரின் அரசு, நாட்டின் நிதி ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை இந்த அமைச்சர்களிடம் ஒப்படைக்கவேயில்லை என்பதுதான் விநோதமானது.

நாட்டில் பெரும் நிதி புரளும் அமைச்சுகள், அதிகார சபைகள் என்பன இன்னும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்தான் உள்ளன. அவை அவரினதும், அவரது சகோதரர்களைக் கொண்ட அணியினதும் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே இன்னும் இயங்குகின்றன.

நாட்டின் நிதி ஆதாரங்களில் அறுபது வீதத்துக்கும் அதிகமான பகுதியைக் கையாளும் அமைச்சுகள் நாட்டின் அதிபர் வசமே இருக்கின்றன. எஞ்சிய நாற்பது வீதத்துக்கும் உட்பட்ட நிதி ஆதாரங்களை உள்ளடக்கிய ஏனைய அமைச்சுக்களே மிஞ்சிய நூற்றிப்பத்து அமைச்சர்களுக்கும் பிரித்துப் பங்களிக்கப்பட்டிருக்கின்றன.

சுமார் அறுபது வீத நிதி ஆதாரங்களைக் கொண்ட அமைச்சுகளை விடாமல் தம்வசம் மடக்கிக் கொண்டு எஞ்சியவற்றை மட்டும் வைத்து, நூற்றிப்பத்துப் பேருக்குப் புதிது, புதிதாக அமைச்சுகளைப் பிரித்து, பங்குபோட்டுக் கொடுத்த மஹிந்தரின் "கில்லாடி'த்தனம் விதந்துரைக்கத்தக்கதே.

இவ்வாறு பொருளாதார போக்கிரித்தனம் ஒருபுறம் அரங்கேற, மறுபுறம் தென்னிலங்கை மக்கள் மத்தியில் இனவாத வித்தை விதைத்து, வளர வைத்து, அந்தப் பேரினவாதத்துக்குத் தீனி போடுவதன் மூலம் தங்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் இந்த அரசுத் தலைமை அதற்காகப் போரியல் பூச்சாண்டியைத் தெற்குக் காட்டுகின்றது. அதற்காகவும் நாட்டின் நிதி வளத்தை மிக மோசமாகச் சுரண்டிச் சீரழிக்கிறது இந்தத் தலைமை.

வயிற்றுப் பசியால் துடிக்கும் தென்னிலங்கைக்கு போரியல் வெற்றிகள் என்ற மாயைப் பிரசாரம் உணவளித்து திருப்திப்படுத்துமா? காலம் இதற்கு விரைவில் பதில் கூறும். அதுவரை காத்திருப்போம்.

-உதயன்

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஆளும் தரப்பு வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ சார்பில் தென்னிலங்கையில் ஒரு பரப்புரை முன்வைக்கப்பட்டது. "பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக நீண்டகாலம் குரல் எழுப்பி வருபவர் மஹிந்தர். இலங்கை பாலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் தலைவராகவும் நீண்ட காலம் பணிபுரிந்தவர் அவர். விடுதலை கோரிப் போராடும் பாலஸ்தீன மக்களுக்காகக் குரல் எழுப்பியவர் என்ற காரணத்தால் அரபுலகில் பெரிதும் மதிக்கப்படுபவர். அரபுலகில் பல தலைவர்களுடன் இதனால் நல்லுறவைப் பேணுகிறார் அவர். எனவே அவர் ஜனாதிபதியானால், தமது நண்பர்களான அரபுலகத் தலைவர்கள் மூலம் அத்தலைவர்களின் நாடுகளிடமிருந்து குறைந்த விலையில் - மானிய அடிப்படையில் எரிபொருளை இலங்கைக்குப் பெற்றுத்தருவார் மஹிந்த ராஜபக்ஷ' என்று அப்போது தெற்கில் பிரசாரப்படுத்தப்பட்டது

சும்மா நடிப்பு கொள்கை இல்லாத ஒரு தலைவர் மகிந்த அன்று பலஸ்தீன மக்களுகாக குரல் கொடுப்பவராக காட்டிகொண்டவர் கடைசியில் மங்கள ஜநாவில் பலஸ்தீனத்துக்கு ஆதரவான முடிவை எடுத்ததிலிருந்தே மங்களவுக்கும் மகிந்தவுக்கும் மோதல் உருவாகினது என்னும் ஒரு கதையும் இருகின்றது

கொழும்பில் இருக்கும் என் உறவினர்களுடன் கதைக்கும் போது சொன்னார்கள் பால்மாவின் விலை 200 ரூபாயை தொட்டுவிட்டதாகவும் ஒரு கிழமைக்கு முதல் 15 ரூபாயால் அதிகரித்த பால்மா நேற்று இன்னும் 15 ஆல் அதிகரிக்கப்பட்டு 200 இனை அடைந்து விட்டதாகவும் இதனால் பாதிக்கப்பட போவது நிச்சயம் மிக வறிய மக்களே ஆனால் அவர்கள் கிளர்ந்து எழப்போவதில்லை ஏன் எனின் அதனை மறைகத்தான் தொப்பிகல வெற்றி கொண்டாடினவர் மகிந்த போனவருடம் நான் இலங்கை சென்றபோது 100 ரூபாயாக இருந்த பெற்றோல் இன்று 117 ரூபாய்.இது நேரடியாக வறிய மக்களை பாதிக்க போவதில்லை என்றாலும் மறைமுகமாக நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் உதாரணமாக பாண்,அரிசி,பால்மா கோதுமை மா மரக்கறிகள் போன்றவற்றின் விலை நிச்சயம் அதிகரிக்கும்.அது மட்டுமல்ல கடந்தமாதம் 80-85 ரூபாய் வரை சென்ற அவுஸ்திரேலிய டொலர் இன்று 95-100 வரை செல்கின்றது இலங்கையின் நிலை மிக பரிதாபமானது.

தற்போது அகல கால் வைக்க நினைத்த மகிந்த பாதுகாப்பு செலவீனங்களையும் குறைக்க முடியாது.புதிதாக ஆட்சேர்புக்காக இன்னும் பணத்தை இறைக்க வேண்டும் அன்னிய உதவிகளும் கணிசமாண அளவு குறைக்கப்பட்டு விட்டது இதன் காரணமாக நிச்சயம் மகிந்த பணத்தினை அச்சிட்டு பண வீக்கத்தை உண்டாக்கியே தீருவார்.அதுமட்டுமல்ல அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தினை உயர்த்த வேண்டிய தேவை வாழ்கை செலவீன அதிகரிப்பால் ஏற்படுத்தபட்டு இருகின்றது.வழ்மையாக துண்டு விழும் வரவு செலவு கனக்கில் இந்த முறை இன்னும் அதிகரிக்கும்.எதிர்பார்த்த வரவுகள் இல்லாமல் போக கூடும் இதனால் பலத்த அழுத்தங்களுக்கு மகிந்த தள்ளப்படுள்ளார்.இதனால்தான் கடத்தல்கள் நடகின்றன என ஒரு அரச தலைவர் தன் அமைச்சருக்கு வாய்விட்டு அழும் நிலையில் இருக்குது அதாவது தனது நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற அல்லது அரச செலவீனங்களுக்கு தன் நாட்டு பிரஜையை கடத்தி பனம் சம்பாதிக்க வேண்டிய கேவல நிலை மகிந்தவுக்கு. புலிகள் மண்மீட்பு யுத்த்தை தொடங்கின் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையை அடையும் வெகு சீக்கிரம் சரணாகதி அடைவார் தமிழர்களிடம் மகிந்த என எதிர்பார்கலாம்

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.