Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

large.education.jpg.0aa33d1db4a4c559b0db3dcc74fcef3d.jpg

நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை!

***********************************

ஆதிகால மனிதனென காட்டுக்குள் அலைந்தோம்

அதன் பின் ஆரம்ப மனிதராய் நாட்டுக்குள் வந்தோம்

மற்றைய உயிரினத்திலிருந்து மாறுபட வைத்த -அந்த

ஆறாம் அறிவு எம் கல்விக்கென்றே கிடைத்தது. 

 

கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில்

பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை

ஆளுமை கொண்ட ஒரு சமுதாயம் நிமிர-நல்ல

ஆரம்பக் கல்வியில் அத்திவாரமிடுவோம்.

 

சொல்லில் அடங்காத ஆசிரியத் தொண்டும்

சுறுசுறுப்பாய் கற்கின்ற மாணவர்கள் பங்கும்

எல்லைகள் கடந்தே நல்லதைச்செய்யும்-இல்லையேல்

தொல்லைகள் நிறைந்த சமுதாயமாகும்.

 

வேலைக்கு மட்டும் படிக்கின்ற பாடங்கள்-பின்பு

வேதனை தந்து வீதிக்கும் வரலாம்.

வேலை இருக்கென படிக்கின்ற தொழிற்க் கல்வி

வீட்டையும் உயர்த்தி நாட்டையும் உயர்த்தலாம்.

 

காற்றுள்ள போதே தூற்றுவாய் நெல்லை-அதேபோல்

காலம் இருக்கையில் கல்வியைத் தேடு

பாலை வனம்கூட சோலைவனமாகும்-இல்லையேல்

படுக்கின்ற பாய்கூட வெறுப்பாவே பார்க்கும்.

 

பட்டங்கள் பெற்று நீ உயர்ந்து போனாலும்-கீழே

பார்க்க மறக்காதே? உன்கால்கள் நிற்பதை

அப்பா,அம்மா, ஆசிரியர் தோள்களில்.. 

அவர்களின் மகிழ்வே உன் உயரத்தின் எல்லை.

 

ஆசிரியப் பணியை போற்றுவோம் உலகில்

அவர்கள் இல்லையேல் அகிலமே இருளில்

காலா காலமும் புது,புது கல்வியைக் கற்று

காசினி உயர பல  கடமைகள் செய்வோம்.

-பசுவூர்க்கோபி.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்வியையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் கவிதை .......!   🌹

நன்றி கோபி ......!  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில்

பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை

 

 

 

அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/5/2022 at 20:32, நிலாமதி said:

கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில்

பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை

 

 

 

அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்   

நன்றிகள் சுவி அண்ண்ணா

On 2/5/2022 at 20:32, நிலாமதி said:

கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில்

பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை

 

 

 

அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்   

நன்றி  அக்கா



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.