Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பக்கத்திவீடு குறுந்திரைப்படம் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல நடிப்பு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

பூனைக்குட்டியின் விமர்சனம் படைப்பாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='சுவ்ய்' டடெ='ஆஉக் 5 2007, 10:13 PM' பொச்ட்='331280']

பூனைக்குட்டியின் விமர்சனம் படைப்பாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

[/ஃஉஒடெ]

ஆள் பெயரிலேதான் "பூனைக்குட்டி.". அறிவிலை "புலிக்குட்டி! ஆ இருக்

ஆனால் புசுக்குட்டி என்று செல்லமாய் கூப்பிடுவதுதான் எனக்கு பிடிச்சிருக்கு.. :lol:

உண்மையில் இவ்வாறு பொருட்செலவு செய்து, நேரத்தை செலவளித்து படைப்புக்கள் செய்பவர்கள் வேறு பலரின் ஆலோசனைகளை பெற்ற பின் தமது படைப்புக்களை மேற்கொள்வது அவர்களின் படைப்பு வெற்றியடைய நிச்சயம் உதவி புரியும். எமது தமிழ்வானம் - வசீகரன் கூட தனது பேட்டியில் ரகுமான் தமது ஆலோசகராக இருப்பதாக கூறியுள்ளார்.

பக்கத்தி விடு குறுந்திரைப்படம் பார்த்தேன். எதிர்பார்காத மாதிரி காட்சிகள் மாறியிருந்தது. படத்துக்கு முன்னர் எந்த எச்சரிக்கையும் இடப்படவில்லை. சாதாரணமாக சண்டைக்காட்சிகளில் வில்லன்கள் கொல்லப்படும் காட்சிகள் அமைக்கப்படும் போது வில்லன்களின் சாவுகள் திரைப்படப்பாணியில் இருக்கும் ஆனால் இந்தப்படத்தில் ஒருவரை துண்டு துண்டாக வெட்டும் காட்சி இல்லை என்றாலும் கத்தியின் இரத்தத்தை கழுவுவதும் கார்பேஜ் பைக்குள்ளால் வெட்டப்பட்ட கை தெரிவதும் மிகவும் அழுத்தமான வன்முறை வடிவவம். உளவியல் ரீதியாக நிச்சயம் மனதை பாதிக்கும் விடையம். நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். என்னுடன் கூட இருந்து பார்தவர்களும் பாதிக்கப்பட்டனர். நிச்சயம் படம் தொடங்க முதல் எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும்.

கனடா வாழ் எமது சமூகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா? இவ்வாறு கேட்பதற்கு காரணம் என்னவெனில் கணவன் மனைவிக்குள் கருத்து முரண்பாடுகள்இ பிரச்சனைகள் ஏற்படுவதும் பிரிவதும் தற்கொலை முயற்சிகளும் உளவியல் பாதிப்புக்கு உட்படுவதும் அதிகமாக இடம் பெறுகின்றது. அந்தவகையில் இந்த படத்தின் முக்கால் பகுதி உண்மையை பிரதி பலிக்கின்றது. அடுத்த கால்பகுதி உண்மையில் நடந்ததா அல்லது நடைமுறையில் இதுவரை இருந்திராத ஒரு விசயத்தின் கற்பனையா? மனைவியை கணவன் கொல்லாமல் என்னுமொருவர் திட்டமிட்டு கொன்றாரா? கொன்று பழியை கணவன் மீது போட்டாரா? மூன்றில் இரண்டு பகுதிக்கு மேலாக நடைமுறையில் உள்ளதும் ஒருபகுதி கேள்விக்குறியாக இருப்பதாலும் இந்த கேள்வியை கேட்டேன்.

இந்த படம் மூலம் சொல்லவரும் செய்தி என்ன? மிக கஸ்டத்தின் மத்தியில் படம் எடுக்கப்படுவது உண்மை. கஸ்டப்பட்டு குறை காண முடியாதளவுக்கு நடித்துள்ளனர். இருந்தும் இந்தப்படத்தின் நோக்கம் என்ன? சொல்லவரும் செய்தி என்ன? இது ஒரு சமூக சீர் திருத்தம் சார்ந்த படமா இல்லை வர்த்தகம் பொழுது போக்கு சார்ந்த படமா? இல்லை எமது நாட்டு கலைஞர்களின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டுவரும் படமா? இது எந்த வகையில் சேர்கின்றது?

இவ்வாறு பல கேள்விகள் என்னுள் எழுகின்றது. இந்தக்கேள்விகளும் படத்தின் காட்சிகளும் அதிகம் முரண்படுகின்றது. படத்தின் காட்சிகளும் யதார்த்தமாக சமூகத்தில் உள்ள முரண்பாடுகளும் வேறொரு எதிர்பாராத பகுதியில் முட்டி மோதுகின்றது.

உளவியல் பாதிப்புக்கு உட்பட்ட ஒருவனின்வெறியாட்டம் என்று ஒரு கோணத்தை போட்டு பார்தாலும் அவனின் பின்புலம் பற்றி எதுவும் எதிர்வு கூற முடியவில்லை அதற்கு ஒரு தரவும் இல;லை கதாநாயகியின் கணவனுடன் தனிப்பட்ட முரண்பாடு உள்ளது போலும் நகர்கின்றது. எழுத்தாளன் என்ற சமூக சார் அடயாளம் வழங்கப்படுகின்றது. அவன் ஒரு எழுத்தாளனாக மறுபடியும் சமூக பின்புலத்தில் வந்து விடுகின்றான். உளவியல் பாதிப்பு பொதுமைப்படுகின்றதை படம் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றது.

குழப்பங்கள் கேள்விகளுக்கு அப்பால் பாத்திரங்களின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது. இதில் இரசனை என்பதற்கோ அல்லது மறுபடியும் ஒரு முறை பார்க வேண்டும் என்ற எண்ணமோ எற்படுகின்றது என்ற அர்தம் இல்லை. நல்ல நடிப்பு.

(எனது தனிப்பட்ட உணர்வும் கருத்தும்)

Edited by sukan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலைஞன்,கண்டிப்பாக மேலும் ஈழத்தமிழர்களின் படைப்புக்களை இங்கே இணைப்பேன். இங்கு கனடாவில் லெனினை போல எத்தனையோ இளஞர்கள் மிகவும் தரமான படைப்பக்களை வெளியிட்டுள்ளனர். சரியான ஆதரவு இல்லாததால் அவை முழுமையாக வெளியே சென்றடைவதில்லை. என்னால் இயன்றளவு அவ்வகையான படைப்புக்களை இங்கே இணைக்க முயற்ச்சிப்பேன். உங்கள் ஆதரவிற்க்கும் யாழ் இணையத்தளத்திற்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

பூனைக்குட்டி,படத்தைக் கவனமாகப் பார்த்து கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். யாழ் கருத்துக்களத்தில் நடந்த பட்டிமன்றத்தின்போதும் உங்கள் கருத்துக்களை அழகாகத் தொகுத்து வழங்கியிருந்தீர்கள். தொடர்ந்து கருத்துக்களத்துக்கு வாருங்கள். சீண்டல் கருத்துக்களைத் தவிர்த்து இதுபோன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதுங்கள். வாழ்த்துக்கள்.தனுஜன்,நல்ல ஆக்கத்தை இணைத்துள்ளீர்கள். உங்களுக்கு எம்மவர் படைப்புகள் மீது ஈடுபாடு உள்ளது தெரிகிறது. தொடர்ந்தும் யாழ் கருத்துக்களத்தில் இதுபோன்ற படைப்புக்களை அறிமுகப்படுத்துகிற போது ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள முடியும். நம்மவரிடம் நம்மவர் படைப்புகள் பற்றிய தகவல்களைக் கொண்டுசேர்க்கமுடியும். எனவே இப்படியான படைப்புக்களையும், அவை தொடர்பான தகவல்களையும், அதனோடு தொடர்புடைய கலைஞர்கள் பற்றியும் எழுதுங்கள். பாராட்டுக்கள்.

ஈழத்தில் சில பகுதி மக்கள் பேச்சு வளக்கில் "பக்கத்திவீடு" என்றும் அழைப்பார்கள்.

பக்கத்துவீடு குறும்படம் நானும் பார்த்தேன். இணைத்தமைக்கு நன்றி !:huh:குறும்படத்தின் தலைப்பில் ஒரு சந்தேகம். " பக்கத்திவீடு" என்பது சரியா அல்லது "பக்கத்து வீடு" சரியா? கூடுதலாக நாம கதைக்கும் போது பக்கத்துவீடு எண்டுதானே கதைப்பம் அதுதான் கேட்டன். அல்லது "பக்கத்திவீடு" எண்டு குறும்படத்திற்கு தலைப்பு வைத்ததற்கு வேறு ஏதும் காரணம் இருக்கா?

Edited by Thanujan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகன்,

உங்கள் கருத்தையும் உணர்வையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உங்களின் சில கேள்விகளுக்கு என்னால் இயன்றளவு எனக்கு புறிந்தளவிற்க்கு பதிலளிக்கினறேன்.

கண்டிப்பாக படம் தொடங்க முதல் எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும், சம்மந்தப்பட்டவர்களிடம் இதை எடுத்துச்சொல்வேன்.

கனடா வாழ் சமூகத்தில் நான் அறிந்து இப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் சில மாதந்களுக்கு முன் ஒரு ஈழத்தமிழர் தனது மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு அதை தற்கொலை என்று யோடிக்க முயன்று பிடிபட்டுள்ளார். சில காட்சிகளுக்கும் அச்சம்பவத்திற்க்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றனதான் தவிர நான் நினைக்கின்றேன் இது முழுக்க முழுக்க லெனினின் கற்பனையே என்று.

கண்டிப்பாக இது எமது நாட்டு கலைஞர்களின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டுவரும் படமாகதான் நான் கருதுவேன். ஏனென்றால் கனடாவில் எமது படங்களை குறை சொல்லுபவர்கள் முதலில் நடிப்பைத்தான் முன்வைப்பார்கள். இம்முறை மைக்கலும் அபிசோகாவும் அவர்களுக்கு தகுந்த பதிலை இப்படம் மூலம் கொடுத்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.