Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரும் செலவுகளுடன் சிறிலங்கா வான்படை நவீன மயம்: ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் செலவுகளுடன் சிறிலங்கா வான்படை நவீன மயம்: ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகை

[ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 09:55 ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்கா வான்படையினர் 7 பில்லியன் ரூபாய்களை தமது கொள்வனவுகளுக்காக இந்த வருடத்தின் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் செலவிட உள்ளனர் என ஜேன்ஸ் பாதுகாப்பு வர சஞ்சிகை இந்த வாரம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.

அந்த சஞ்சிகையின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவரான றொபேட் கர்நியோல் ஆகஸ்ட் மாத முதல் பதிப்பிற்கு எழுதியதாவது:

சிறிலங்கா வான்படை ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தமது கொள்வனவுகளுக்கு 7,779.4 மில்லியன் ரூபாய்களை (69.6 மில்லியன் டொலர்) எதிர்பார்க்கின்றது. இது வடபகுதியின் மீதான அரசின் பெரும் தாக்குதலுக்கான எதிர்பார்ப்பாகும்.

இது 32,875.5 மில்லியன் ரூபாய்கள் செலவுள்ள இராணுவ விரிவாக்கத் திட்டத்திற்கான தொடக்க நடவடிக்கையாகும். எனினும் ஏனைய விரிவாக்கங்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இதற்கான திட்டம் ஜூலை 19 ஆம் நாள் மகிந்தவினால் அறிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து முற்றாக வெளியேற்றப் போவதாக அவர் அன்று தெரிவித்திருந்தார். பின்னர் தமது இராணுவத்தினரின் கவனம் வடபோர் முனை நோக்கி சென்றுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடும்பிமலையை கைப்பற்றியதை தொடர்ந்து கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்டுள்ளதாக மகிந்த தெரிவித்தது மிகைப்படுத்தப்பட்டதாகும். ஏனெனில் ஜூலை 16 ஆம் நாள் கிழக்கு மாகாண பிரதம செயலாளரான ஹேரத் அபயவீரவின் கொலை அந்த கூற்றை பொய்யாக்கியிருந்தது.

வடபகுதியில் பல தொடர்ச்சியான இராணுவ நடைவடிக்கைகளுக்கு அரசு திட்டமிட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாத முற்பகுதியில் தொடங்கலாம்.

சிறிலங்கா வான்படையின் தேவைகள் அவசர தேவைகளை பெறுத்து முன்னுரிமை அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் அவசர தேவையாக உள்ளவற்றின் பெறுமதி 20,246.4 மில்லியன் ரூபாய்களாகும், இதில் 3,656.7 மில்லியன் ரூபாய்கள் இந்த வருடத்தின் எஞ்சிய செலவாகும்.

இரண்டாவது முன்னுரிமையில் உள்ளவற்றின் செலவு 12,019.1 மில்லியன் ரூபாய்களாகும்,

மூன்றாவது முன்னுரிமையில் உள்ளவற்றின் செலவு 600 மில்லியன் ரூபாய்களாகும்,

இவற்றில் 3,327.6 மில்லியன், 100 மில்லியன் ரூபாய்கள் 2007 ஆம் ஆண்டுக்கானவை.

உயர் முன்னுரிமையில் உள்ள பொருட்கள் 04 எஃப்-7GS தாக்குதல் வானூர்திகள், 04 மிக்-29 SM, 01 மிக்-29 UB தாக்குதல், பயிற்சி வானூர்திகள், 02 பிரி-6 பயிற்சி வானூர்திகள், புளு ஹரிசோன் - 02 வகை ஆளில்லாத உளவு வானூர்தி என்பனவாகும்.

சிறிலங்காவின் வான்படைத் தளபதியான ஏயர் மார்சல் றொகான் குணதிலக்க மிக்-29 தாக்குதல் வானூர்திகளை கொள்வனவு செய்வதில் ஆர்வமாக இருந்த போதும் அதற்கு நிதி நெருக்கடி காரணமாக பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஜேவை-2 ரக (JY-II) இலகுவாக நகர்த்தப்படும் ரடார்கள், எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 வகை தாக்குதல் உலங்கு வானூர்திகளுக்கான சுற்றும் பிரதான இறக்கைகள், எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 உலங்கு வானூர்திகளை தரமுயர்த்துதல், பீச் கிங் உளவு வானூர்திக்கு இரவு மற்றும் பகல் ஆகிய வேளைகளில் புகைப்படங்களை எடுக்கும் ஒளிப்படக்கருவிகளை வாங்குதல் என்பனவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் வை-12 ரக போக்குவரத்து வானூர்திகள், 03 எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகள், 02 அன்ரனோவ்-32பி ரக கனரக போக்குவரத்து வானூர்திகள், 01 எம்ஐ-17 ரக உலங்குவானூர்தி போன்றவற்றை மறுசீரமைத்தல் அல்லது திருத்துதல் பேன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் வான்படையினர் திருமணமானவர்களுக்கான 3 கட்டடங்களுடன் கூடிய 300 தங்குமிடங்களை கட்டும் திட்டத்தையும், அனுராதபுரம் மற்றும் ஹிங்குரான்கொட ஆகியவற்றில் உள்ள வானூர்தி ஓடுபாதையின் நீளத்தை அதிகரிக்கும் திடத்தையும் கொண்டுள்ளனர்.

இரண்டாவது முன்னுரிமையுள்ள திட்டங்கள் இதே போன்றனவே. மூன்றாவது முன்னுரிமை உள்ள திட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை அதாவது எம்ஐ-17, எம்ஐ-24 உலங்குவானூர்திகளை திருத்தும் மையங்களை நிறுவுதலாகும்.

இரண்டாவது முன்னுரிமையில் உள்ள திட்டமானது, கடற்பகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் ராடார்கள், பகல் மற்றும் இரவு வேளைகளில் தொழிற்படும் தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்ட இரு பீச் கிங் உளவு வானூர்திகள், இரு அன்ரனோவ்-32பி ரக போக்குவரத்து வானூர்திகள், 04 எம்ஐ-17வி5 உலங்குவானூர்திகள், 03 எம்ஐ-24, எம்ஐ-35 தாக்குதல் உலங்குவானூர்திகள், 02 புதிய அல்லது மறுசீரமைக்கப்பட்ட கே-8 ரக பயிற்சி வானூர்திகள் ஆகியவற்றை கொள்வனவு செய்தலாகும்.

மேலும் இவற்றுடன் எம்ஐ-24 உலங்குவானூர்திக்கான நீண்ட தூர ஸ்பைக் ரக ஏவுகணைத் தொகுதிகள், பல்வேறுபட்ட தொலைத்தொடர்பு கருவிகள், வானூர்திகளுக்கான சுய பாதுகாப்பு கருவிகள் என்பனவும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இரு சி-130 ரக போக்குவரத்து வானூர்திகள் மறுசீரமைக்கப்படுவதுடன் அதன் இயந்திரங்களும் தரமுயர்த்தப்படவுள்ளன. அந்த வானூர்திகளுக்கு விரைவாக இயந்திரத்தை மாற்றும் தொகுதி, ஏனைய வானூர்திகளுக்கான 05 மாட்டின் பேக்கர் சுயமாக வானூர்தியை விட்டு வெளியேறும் இருக்கைகள் என்பனவும் கொள்வனவு செய்யப்பட உள்ளன.

மறுசீரமைத்தல் அல்லது திருத்த வேலைகள் என்பன வேறு பல வானூர்திகளுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அவற்றில் எம்ஐ-24, எம்ஐ-35, பெல்-212 வகை உலங்குவானூர்திகள், அன்ரனோவ்-32பி ரக போக்குவரத்து வாணூர்திகள் என்பன அடங்கும்.

கிழக்கில் பெற்றுவிட்ட சில வெற்றிகளால் மகிழ்ச்சியில் உள்ள கடும்போக்கான அரசு வடக்கிலும் படைநடைவடிக்கையை மேற்கொள்ள ஆயத்தமாகின்றது. ஆனால் விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு கடுமையாக இருக்கும். அது சிறிலங்கா அரசை மேலும் நெருக்கடிக்குள் தள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

puthinam

Sources of weapons

Explosives, weapons and other supplies have come from the southern Indian state of Tamil Nadu, just 22 miles away and a 45-minute dash by speedboat; the Sri Lankan navy has intercepted only a fraction of this incoming arsenal.

During the past decade, the LTTE has transported consignments of weapons from Bulgaria (SA 14, LAW), Ukraine (50 tonnes of TNT and 10 tonnes of RDX), Cyprus (RPGs), Cambodia (small arms), Thailand (small arms), Myanmar (small arms) and Croatia (32,400 mortars). The amount of explosives and mortars transported by the LTTE remains the largest quantity of armaments ever transported by a non-state armed group. Most armaments have been obtained by using forged or adapted end-user certificates.

(ஜேன்ஸ் சஞ்சிகை)

இப்பிடி ஒரு பட்டியலையும் உந்த ஜேன்ஸ் புலநாய்வு பத்திரிக்கை புலிகளை பற்றி வெளியிட்டு இருந்தது.... தமிழகத்தில் இருந்துதான் வ்டி பொருட்களை புலிகள் கொண்டு வருகிறார்கள் எண்று சொன்னவர்கள் .... அடுத்த பந்தியிலேயே உக்கிரேனில் இருந்து TNT, RDX வெடிபொருட்களை கொண்டு வந்ததாக கூறி இருக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா வான்படையினர் 7 பில்லியன் ரூபாய்களை தமது கொள்வனவுகளுக்காக இந்த வருடத்தின் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் செலவிட உள்ளனர் என ஜேன்ஸ் பாதுகாப்பு வர சஞ்சிகை இந்த வாரம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.

நல்ல விசியம்தானே.. எப்பிடியும் உதிலை குறைஞ்சது 75% மான பொருட்களை புலிகளுக்கு கொடுக்கத்தானே போயினம்.. கைப்பற்றக்குள்ளதான் தெரியும்..

Wait & see..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.