Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளியின் பந்துவீச்சை மீண்டும் குறை கூறுகிறார் பிஷன்சிங்பேடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முரளியின் பந்துவீச்சை மீண்டும் குறை கூறுகிறார் பிஷன்சிங்பேடி

[09 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிவதாக, பிஷன்சிங் பேடி கடுமையாக தாக்கியிருக்கிறார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 1100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருப்பவர் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவ்வப்போது அவரது பந்து வீச்சு, சர்ச்சையிலும் சிக்குவதுண்டு.

இந்த நிலையில், அவரது பந்து வீச்சை இந்திய அணியின் முன்னாள் கப்டன் பிஷன்சிங் பேடி மீண்டும் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். பேடி அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது;

"முரளிதரன் பந்து வீசுவது, குண்டு எறிவது போலவும், ஈட்டி எறிவது போலவும் இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் அவர் தான் கிரிக்கெட் வரலாற்றில் எல்லாக் காலங்களிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருப்பார் போல் தெரிகிறது. இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தற்போதைய கிரிக்கெட்டில் அதிக தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. களத்தில் இருக்கும் நடுவர் எடுக்கும் முடிவே இறுதி முடிவு. பந்து வீச்சாளரின் பந்து வீச்சு முறை சரியில்லை என்று அவர் சொன்னால் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

நாம் தோள்மூட்டை பயன்படுத்தி பந்து வீசுகிறோம். ஆனால் முரளிதரன் தோள்மூட்டை பயன்படுத்துவதில்லை. கையை மட்டுமே பயன்படுத்தி பந்தை எறிகிறார். இதனை வெறும் கண்ணால் பார்த்தாலே தெரியும்.

ஒரு பந்து வீச்சாளர் ஒரு இனிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றுவது என்பது, ஒரு துடுப்பாட்ட வீரர் 150 ஓட்டங்கள் எடுப்பதற்குச் சமம். அப்படிப் பார்த்தால் டெண்டுல்கர் 37 சதங்களும் பிராட்மன் 29 சதங்களும் தான் அடித்திருக்கிறார்கள். ஆனால் முரளிதரன் 65 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். இது அபத்தமான"தென்றார்.

http://www.thinakkural.com/news/2007/8/9/s...s_page33204.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கண்டியில் படித்த காலத்தில்முரளியை தெரியும். சரியான தலைக்கனம் பிடிச்சது. அப்போதுதான் சிறிலங்கா அணிக்காக ஆடத்தொடங்கியிருந்த நேரம். கண்டிக்கு வரும் நேரங்களில் கூட நண்பர்களுடன் தமிழ் கதைத்தால் அவமானம் என்று சிங்களத்திலேயே கதைக்கும். இவனிட்டை போய்தமிழ் உணர்வை எதிர்பாக்கிறீங்களே?--- written by professor

முரளியை இரண்டு அடைமொழிகளால் குறிக்கலாம்1. கறிவேப்பிலை2. கோடரிக் காம்புமுரளி எப்படித் தான் தமிழன் என்பதை மறைத்து சிங்களவர்களுக்கு வக்காலத்து வாங்கினாலும் அவர்கள் மரளிதரனை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருக்கிறார்கள்.இத்தனை வருட காலம் விளையாடிய அனுபவமும் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த நிலமையும் இருந்த போதிலும் அணியின் உதவித் தலைவர் பதவியைக் கூடக் கொடுப்பதற்குச் சிங்களப் பேரினவாதம் அனுமதிக்காதுஅதாவது கறிவேப்பிலையாகத் தான் பயன்படுத்தப்படுகிறார்முரளி

Edited by raja.m

முரளி தலைக்கனம் பிடித்தவர் என்பது தவறு. அவர் சிறுவயது முதலே படித்தது ஆங்கிலப்பாடசாலையில். தமிழ் அவ்வளவாக வராது. ஒரு தமிழராக இருந்து கொண்டு பேரினத்தின் பல இன்னல்களுக்கு மத்தியில் இன்று உலகத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர் வரிசையில் இருப்பது பெருமை. அவரது சாதனைகள் தொடரட்டும்.

ஜானா

தனது அயல்நாட்டவனின் திறமையைக் கண்டு வயிரெரிகிறார் இந்த இந்திய முன்னாள் கப்டன்.

அவுஸ்திரேலியர் சேன் வோணின் சாதனைக்கு போட்டியாக முரளி வருகிறார் என்பதால் முரளி மீது குறை பிடிப்பார்கள். ஆனால் ஏன் இந்தியர் இப்படி புலம்புகிறார் என்று புரியவில்லை.

ராஜா முரளியின் தனிப்பட்ட குணங்கள் நமக்கு வேண்டாம். ஆனால் அவர் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகவாவது அவரின் சாதானைகள் தொடர வாழ்த்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது அயல்நாட்டவனின் திறமையைக் கண்டு வயிரெரிகிறார் இந்த இந்திய முன்னாள் கப்டன்.

அவுஸ்திரேலியர் சேன் வோணின் சாதனைக்கு போட்டியாக முரளி வருகிறார் என்பதால் முரளி மீது குறை பிடிப்பார்கள். ஆனால் ஏன் இந்தியர் இப்படி புலம்புகிறார் என்று புரியவில்லை.

ராஜா முரளியின் தனிப்பட்ட குணங்கள் நமக்கு வேண்டாம். ஆனால் அவர் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகவாவது அவரின் சாதானைகள் தொடர வாழ்த்துவோம்.

அதெப்படி. தமிழனாக இருந்தால் மட்டும் போதுமா அவர் சிங்கள அணியில இருந்து கிரிக்கெட் விளையாடும் துரோகி அல்லவா.. அப்படின்னு விளையாட்டுக்கையும் அரசியலைப் புகுத்தி சித்து விளையாட்டுக் காட்டுற ஆக்கள் இருக்கினம். ஆனால் அவையின்ர தனி நலனுக்காக அவை அந்நிய நாட்டில அடைக்கலம் பெற்றும் வாழுவினம். அப்ப தமிழ் தேசியம்.. தமிழீழம் எல்லாம் பேச்சளவில இருக்கும்..!

தமிழர்கள் பலருமே இப்படித்தான். கொள்கையில் தெளிவும் நிலையான தன்மையும் இல்லாதவர்கள். இவை சப்போட் பண்ணுவினம் என்று எதிர்பார்த்து முரளி அணியில் சேர முனைந்திருந்தால் இன்று முரளி பெட்டைக்கடை முதலாளியாத்தான் இருந்திருப்பார். இப்ப எத்தனையொ சோதனைகளை கடந்து பெயரும் புகழும் பெற்ற உடன.. தமிழன் என்பதற்காய் ஆதரிப்பம்.. எண்டுவினம். நாளைக்கு இதே வாயால துரோகி என்றும் சொல்லும் இன்னொரு கூட்டம்..!

முதலில தமிழர்கள் தங்களின் தேசம் அரசியல் தமிழ் தேசியம் விளையாட்டு உலகம்.. என்று அவற்றிற்கிடையில உள்ள வேறுபாடுகளை உணரனும். இல்ல.. இப்படிக் குழப்பங்களே மிஞ்சும். வெறும் உணர்ச்சிப் பிளம்புகளாக மட்டும் இருந்து பிரயோசனமில்ல. புத்தியைப் பாவிக்கனும்.

அதுதான் சொன்னாங்க.. கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டென்று. :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Muralitharan, who has taken 23 wickets at this tournament compared to his seven in 1996, said: ``It helps all the country rather than anything else. We have all nationalities in our team and peace as well because we get together and play.``We are going through a bad situation in our country but this could achieve something different.'' ********"
அதெப்படி. தமிழனாக இருந்தால் மட்டும் போதுமா அவர் சிங்கள அணியில இருந்து கிரிக்கெட் விளையாடும் துரோகி அல்லவா.. அப்படின்னு விளையாட்டுக்கையும் அரசியலைப் புகுத்தி சித்து விளையாட்டுக் காட்டுற ஆக்கள் இருக்கினம். ஆனால் அவையின்ர தனி நலனுக்காக அவை அந்நிய நாட்டில அடைக்கலம் பெற்றும் வாழுவினம். அப்ப தமிழ் தேசியம்.. தமிழீழம் எல்லாம் பேச்சளவில இருக்கும்..!Muralitharan, who has taken 23 wickets at this tournament compared to his seven in 1996, said: ``It helps all the country rather than anything else. We have all nationalities in our team and peace as well because we get together and play.``We are going through a bad situation in our country but this could achieve something different.'' ********"can u reply for this traitor muralis statement
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Muralitharan, who has taken 23 wickets at this tournament compared to his seven in 1996, said: ``It helps all the country rather than anything else. We have all nationalities in our team and peace as well because we get together and play.``We are going through a bad situation in our country but this could achieve something different.'' ********"

whatever he says is his point of view or his opinion.no mater what he is a legend cricketer.As a mater of fact he is a tamil.we (tamils) are proud of him as a cricketer(baller).who cares whatever his political view or his personal life?.mr raja what's wrong with you man?.leave murali alone.give him a boost because he is going to break the world record sooner than you think.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

whatever he says is his point of view or his opinion.no mater what he is a legend cricketer.As a mater of fact he is a tamil.we (tamils) are proud of him as a cricketer(baller).who cares whatever his political view or his personal life?.mr raja what's wrong with you man?.leave murali alone.give him a boost because he is going to break the world record sooner than you think.

i dont care abt anyone.he is a good cricketer but he should not use the sufferings of tamils for getting captaincy.no tamils livilng in north-east did not even comment a single statement on murali playing with studentkillers team, but if murali says

---srilanka has problem it can be solved by world cup so what mr.murali is trying to say north east problem

is terrorist problem, by playing cricket terrorist problem is solved

---he is legend in cricket --this website is not cricket website but a website for supporting suffering tamils in srilanka

---so all will accept murali as a good cricketer

but he is opportunist to get captaincy he should not insult sufferings of north eats

--because murali family safely shifted to chennai only others suffers

---if u people scold also i wont care

Edited by raja.m

சிரிலங்காவின் கிரிக்கெட் அணித்தலைவராக வேண்டியவர் முரளி அனா என்ன நடந்தது. சிங்களவன் தமிழன் தலைமையில் விளையாட வருவானா? அணித்தலைவர் பதவியை முரளி கேட்டாலே அவரை வீட்டுக்கே அனுப்பி விடுவார்கள். இதுதான் சிரிலன்காவின் நிலமை. எதோ இருக்கு மட்டும் ஓடுவம் எண்டுதான் முரளீ பாவம் ஓடுது அதை ஏன் கெடுக்கிறியள்.

எண்டாலும் தனது உணர்வோடு தமிழ் பெண்னை திருமணம் செய்து கொண்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.