Jump to content

குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

குரங்கம்மை பாதிப்பு பரிசோதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது.

தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ், "75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன," என்று கூறினார்.

இந்த பாதிப்பால் இதுவரை ஐந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக அளவில் தற்போது இதுபோன்ற இரண்டு சுகாதார அவசரநிலைகள் மட்டுமே அமலில் உள்ளன - முதலாவதாக கொரோனா வைரஸும், இரண்டாவதாக போலியோ மற்றும் அதை ஒழிப்பதற்கான முழு முயற்சியும் உள்ளன.

குரங்கம்மை பாதிப்பை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டுமா என்பதில் அவசர குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்று கூறிய அவர், எவ்வாறாயினும் இந்த பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் இது உண்மையில் சர்வதேச கவலைக்குரியது என்ற முடிவுக்கு தாம் வந்துள்ளதாகவும் டெட்ரோஸ் தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி குரங்கம்மையால் ஏற்படும் ஆபத்து அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய பிராந்தியத்தைத் தவிர உலகின் மற்ற இடங்களில் மிதமானதாக உள்ளது என்றும்," டெட்ரோஸ் கூறினார்.

இந்தியாவில் மூவருக்கு இதுவரை பாதிப்பு

 

குரங்கம்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் முதலாவதாக குரங்கம்மை பாதிப்பு, ஜூலை 14ஆம் தேதி கேரளாவின் கொல்லத்தில் பதிவானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த அந்த நபருக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டது.

இரண்டாவதாக, துபாயில் இருந்து கேரளத்துக்கு வந்த 31 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு பரிசோதனையில் உறுதியானது. கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் கேரளாவுக்கு வந்த 35 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. மலப்புரத்தை பூர்விகமாகக் கொண்ட அவர், ஜூலை 6ஆம் தேதி கேரளாவுக்கு வந்ததாகவும், அங்குள்ள மஞ்சேரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

தற்போது அந்த நபரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீனா கூறினார்.

அண்டை மாநிலமான கேரளாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டிலும் குரங்கம்மை வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

 

குரங்கம்மை பரிசோதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.

இந்த தொற்று பாதித்த மாணவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும்.

காய்ச்சல் ஏற்பட்டதும் தடிப்புகள் ஏற்படும். இவை பெரும்பாலும் முகத்தில் உண்டாகும். இந்த சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் வரும். கடைசியாக சிரங்கு போல உண்டாகி உதிர்ந்து விடும். இந்தக் காயங்களால் தோலில் தழும்பு ஏற்படும்.

14 முதல் 21 நாட்கள் வரை இந்தத் தொற்று, தாமாகவே சரியாகிவிடும்.

எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளில் இது மரணத்தை உண்டாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-62279322

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்: ' தீயில் இருப்பது போல் இருக்கும்' - பாதிக்கப்பட்ட பிரேசில் மனிதரின் அனுபவம்

  • ஜூலியா ப்ரான்
  • பிபிசி நியூஸ் பிரேசில்
25 ஜூலை 2022, 07:46 GMT
 

குரங்கம்மை பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2022 ஜூலை மாதம் நிலவரப்படி, உலகம் முழுவதும் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு WHO வகைப்படுத்த வேண்டுமா என்று விவாதிக்க குரங்கம்மை நோய் நிபுணர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர். இதன்பிறகு, குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.

சாவோ பாலோவில் வசிக்கும் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரான தியாகோ, அதிக காய்ச்சல், சோர்வு, நடுக்கம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவர் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பதை அறிந்தார்.

ஆனால், அவரது ஆணுறுப்பு பகுதியில் வலி, வீக்கம் மற்றும் எரியும் உணர்வு இருப்பதே அவரதுமுக்கிய பிரச்னை. அந்த உறுப்பில் குறைந்தது ஒன்பது தோல் புண்கள் தோன்றின.

 

"இது மிகவும் வலிக்கும்; அரிப்பு எடுக்கும்," என்று அவர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். "எல்லா பாகங்களும் மிகவும் வீங்கியிருக்கிறது. சில சமயங்களில் அது தீயில் எரிவது போல் இருக்கும்."

பெரியம்மை பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸால்தான் குரங்கம்மையும் ஏற்படுகிறது, ஆனால் பெரியம்மை மிகவும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது. இது குரங்கு, எலி அல்லது அணில் போன்ற பாதிக்கப்பட்ட விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும்.

மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நபருடன் யாராவது நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது அப்படி ஏற்படலாம்.

தோலில் கீறல், சுவாசக்குழாய், கண்கள் மற்றும் வாய் வழியாக இந்த தொற்று பரவுகிறது.

குரங்கம்மை பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் ஆடைகள், படுக்கை அல்லது துண்டுகளைத் தொடுவதும் நோய் பரவும்.

குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டவர்கள் எப்படி உணர்வார்கள்?

 

படிப்படியாக ஏற்படும் குரங்கம்மை புண்

பட மூலாதாரம்,UKHSA

 

படக்குறிப்பு,

படிப்படியாக ஏற்படும் குரங்கம்மை புண்

தியாகோவின் அறிகுறிகள் ஜூலை 10ம் தேதி அன்று தொடங்கியது. "முதலில் நான் கடுமையான குளிரை உணர்ந்தேன், அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் பொதுவாக ஏற்படும் அசெளகரியம் ஏற்பட்டது. என் உடல் முழுவதும் நொறுங்கியதைப் போல் உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

"இது காய்ச்சலாகவோ அல்லது கோவிட் -19ஆகவோ இருக்கலாம் என்று நான் நினைத்தேன், ஆனால் அடுத்த நாள், நான் குளிக்கும்போது, என் முதுகிலும் ஆண்குறியிலும் புண்கள் இருப்பதை முதலில் கவனித்தேன்."

அப்போது முதல், தியாகோ தனது கால்கள், தொடைகள், கை, வயிறு, மார்பு, முகம் மற்றும் ஆணுறுப்பில் புண்கள் இருப்பதைப் பார்த்தார்.

"இது கிட்டத்தட்ட வீங்கிய, வலிமிகுந்த பருக்கள் போன்றது," என்று அவர் கூறுகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தொடர்பு கொண்ட நண்பருக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அறிகுறிகள் தென்பட்ட மூன்றாவது நாளில் அவர் மருத்துவமனைக்குச் சென்றார்.

ரத்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பரிசோதனை மேற்கொண்டார். அது நெகட்டிவ் என்று வந்தது.

""மருத்துவமனைக்கு செல்ல எனக்கு சில நாட்கள் பிடித்தது. ஏனென்றால் வலி மிகவும் கடுமையானதாக இருந்ததால், ஆடைகளை அணிய முடியாமல் இருந்தது. . கார் பயணம் கூட வலியையும் வீக்கத்தையும் மிகவும் மோசமாக்கியது.

"மருத்துவமனையில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அழற்சி எதிர்ப்பு, வலி மருந்து மற்றும் ஒரு மயக்க மருந்து, இது எரிச்சல் ஏற்படும் உணர்வை போக்கியது" என்கிறார்.

அந்த மருத்து உதவுகிறது. ஆனால் நான்கு மணி நேரம் கழித்து, அது வேலை செய்வது நின்றுவிடும் மற்றும் வலி மீண்டும் ஏற்படும்," என தியாகோ மேலும் கூறுகிறார்.

அவரும் அவரது நண்பரும் சமீப காலமாக பிரேசிலை விட்டு வெளியே வரவில்லை.

"நான் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன், முந்தைய சில நாட்களில் நான் தொடர்பு கொண்ட நண்பர்களை அழைத்து, எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பற்றி அவர்களிடம் கூறினேன்," என்று அவர் கூறுகிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிற சவால்கள்

 

காங்கோவில் 1996 முதல் 1997 வரை குரங்கம்மை பரவியது

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

காங்கோவில் 1996 முதல் 1997 வரை குரங்கம்மை பரவியது

இந்த போராட்டங்களுடன், தியாகோ மருத்துவமனையில் தான் கடினமான தருணங்களைச் சந்தித்ததாக கூறுகிறார்.

"புண்களை எவ்வாறு சுத்தம் செய்வது, எவ்வளவு காலம் நான் நோய்வாய்ப்பட்டிருப்பேன் அல்லது எப்போது தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வர முடியும் என்பது பற்றி எனக்கு எந்த தகவலும் தரவில்லை. இந்த தகவலை நான் இணையத்தில் பார்க்க வேண்டும் அல்லது மருத்துவ நண்பர்களிடம் கேட்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

"குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மையம் எதுவும் இல்லை. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இந்த சூழ்நிலையை சமாளிக்க அவர்கள் தயாராக இருப்பதாக நான் உணரவில்லை" என்று தியாகோ மேலும் கூறுகிறார்.

டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் "முரட்டுத்தனமாகவும், அவமதித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நான் சென்ற மருத்துவமனையில் எல்லா இடங்களிலும், நான் எச்.ஐ.வி பாசிட்டிவ்வா அல்லது எனக்கு வேறு ஏதேனும் பாலியல் ரீதியாக தொற்று இருக்கிறதா என்று கேட்கப்பட்டது." என்கிறார்.

எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) சமூகத்தில் உள்ளவர்களிடையே இந்த நோய் அதிகம் பரவுவதாக ஒரு கூற்று இருப்பதால் அது தொடர்பாக நான் அவமானப்படுத்தப்பட்டேன்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்களில் பாலியல் சுகாதார மருத்துவமனைகள் மூலம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் தொடர்பு கொண்டால் யாருக்கும் இந்த நோய் வரக்கூடும் என்று இந்த அமைப்பு எச்சரிக்கிறது.

பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் சமீபத்திய பாதிப்புகளில் "குறிப்பிடத்தக்க விகிதத்தில்" தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மற்றும் இருபாலின ஆண்களிடம் கண்டறியப்பட்டுள்ளன.

ஆகவே, அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும், தேவைப்பட்டால் உதவியை நாடவும் நாங்கள் அவர்களுக்கு குறிப்பாக அறிவுறுத்துக்கிறோம்," என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

 

குரங்கம்மை வைரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

குரங்கம்மை வைரஸ்

குரங்கம்மை பற்றி

பொதுவாக மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் மேலும் குறிப்பாக மழைக்காடு பகுதிகளில் காணப்படுகிறது.

அடர்ந்த காடுகளைக் கொண்ட காங்கோ ஜனநாயகக் குடியரசில், இந்த ஆண்டு மட்டும் 1,200 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 2022 மே 1ம் தேதி வரை 57 இறப்புகள் பதிவாகியுள்ளன என்ற உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வைரஸின் இரண்டு முக்கிய விதங்கள் உள்ளன. அவை மேற்கு ஆப்பிரிக்க மற்றும் மத்திய ஆப்பிரிக்க இருப்பதாக அறியப்படுகிறது, இது மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பாதிப்பு சற்றே வலு குறைந்தது. இது இப்போது உலகின் பிற பகுதிகளில் பரவுகிறது.

வழக்கத்திற்கு மாறாக, இந்த பிராந்தியத்திற்கு எந்த பயண இணைப்புகளும் இல்லாத நிலையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது வைரஸ் இப்போது சமூகத்தில் பரவுகிறது.

 

குரங்கம்மை காரணமாக ஏற்பட்ட தோல் புண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

குரங்கம்மை காரணமாக ஏற்பட்ட தோல் புண்

பிரிட்டன் ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி கூறுகையில், தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்று கவலைப்படுபவர்கள் தங்கள் உள்ளூர் பாலியல் சுகாதார கிளினிக்கைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் வருகைக்கு முன்னதாக அழைக்கவும் அல்லது மின்னஞ்சல் செய்யவும்", என தெரிவிக்கிறது.

நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் அறிகுறிகள் இருக்கும் போது உடலுறவு கொள்ள வேண்டாம் என்றும், நோய்த்தொற்று ஏற்பட்ட எட்டு வாரங்களுக்கு முன்னெச்சரிக்கையாக ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.

வைரஸின் பெரும்பாலான பாதிப்புகள் மிதமானவை. சில சமயங்களில் சின்னம்மை போலவே இருக்கும். மேலும் சில வாரங்களில் அவை தானாகவே மறைந்துவிடும்.

ஆனால், குரங்கம்மை சில சமயங்களில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். உலக சுகாதார அமைப்பு இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து இறப்புகளும் ஆப்பிரிக்க நாடுகளில் பதிவு செய்யப்பட்டவை.

நோய்த்தொற்றுக்குப் பிறகு, முதல் அறிகுறிகள் தோன்றுவதற்கு வழக்கமாக 5 முதல் 21 நாட்கள் ஆகும்.

தோல் பகுதியில் வெடிப்பு தோன்றும், பொதுவாக முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு, குறிப்பாக கைகள் மற்றும் கால்களில் பரவுகிறது.

அடிக்கடி மிகவும் எரிச்சலூட்டும், வலிமிகுந்ததாக இருக்கும் இந்த வெடிப்பு , மாறும். அது வெவ்வெறு நிலைகளுக்கு செல்லும், - சிக்கன் பாக்ஸ் போன்றது - ஒரு சிரங்கு உருவாவதற்கு முன், பிறகு அது விழும்.

இந்த தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது.

https://www.bbc.com/tamil/science-62283889

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கம்மை: உடலுறவு மூலம் பரவுமா? - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

59 நிமிடங்களுக்கு முன்னர்
 

குரங்கம்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகெங்கிலும் உள்ள 78 நாடுகளில் 18 ஆயிரம் பேருக்கு மேல் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் உடலுறவு கொள்வது குறித்து புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

யாருக்கு அவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது? அதில் என்ன கூறப்பட்டுள்ளது? குரங்கம்மைக்கும் உடலுறவுக்கு என்ன தொடர்பு?

குரங்கம்மையின் பரவலைத் தடுப்பதற்கு நாடுகள், சமூகங்கள், மற்றும் தனிநபர்கள் இந்த அபாயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு பரவலைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட வாய்ப்புள்ள குழுக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் கூறியுள்ளார்.

குரங்கம்மை தொற்றுவதற்கான வாய்ப்பை குறைக்க மேலும் சில ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார்.

 

தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்கள் தற்போதைக்கு தாங்கள் உறவு கொள்ளும் பாலியல் இணைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, புதிய பாலியல் இணையுடன் உடலுறவு கொள்வதை மறுபரிசீலனை செய்வது, புதிதாக பாலுறவு கொள்வோருடன் தங்களது தொடர்பு விவரங்களை பரிமாறிக் கொள்வது ஆகிய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுவரை குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள 98 சதவிகிதம் பேர் தன் பாலின உறவில் ஈடுபடும் ஆண்கள்;

எனினும் குரங்கம்மை பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

பாலுறவு மூலம் மட்டுமல்லாமல் கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் வைரஸ் கிருமி தொற்றியுள்ள துணிகள் துண்டுகள் படுக்கைகள் உள்ளிட்டவற்றை தொடுவதன் மூலமும் குரங்கம்மை பாதிப்பு உள்ளாக வாய்ப்புண்டு.

தொற்றுக்கு உள்ளாகும் பாதிப்பை குறைக்கவும் குரங்கம்மை நோய் மேலதிகமாக பரவுவதை தடுக்கவும் தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களின் சமூகக் குழுக்கள் மீது நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய கவனிப்பு வழங்குவதுடன் அவர்களின் மனித உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேறு எந்த ஒரு வைரஸ் கிருமியையும் போல குரங்கமை மீதான தவறான கண்ணோட்டம் மற்றும் பாகுபாடு நோய்ப் பரவலை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் எச்சரித்துள்ளார்.

கோவிட் - 19 தொற்றை போல தவறான தகவல் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல் இணையம் மூலம் வேகமாக பரவும் என்று கூறியுள்ள அவர் சமூக ஊடக நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் இவற்றை தடுத்து எதிர் கொள்ள செயலாற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

monkey pox

பட மூலாதாரம்,GETTY IMAGES

போலிச் செய்திகள் பரவும் நிலையில் குரங்கம்மை தொடர்பான சரியான, துல்லியமான தகவல்கள் பெற பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

குரங்கு அம்மை என்பது என்ன?

குரங்கு அம்மை என்பது அரிதான ஒரு வைரஸ் தொற்றாகும். இதனால் லேசான பாதிப்புகளே ஏற்படும் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள் எனவும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வைரஸ் ஒருவரொருக்கொருவர் எளிதில் பரவாது, இதனால் பரவலாக பாதிக்கப்படும் ஆபத்து மிகவும் குறைவானது.

இந்தியாவில் இதுவரை நான்கு பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

 

குரங்கம்மை

பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.

ஆரம்பக் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி போன்ற அறிகுறிகள் தென்படும். அதன் பின் காய்ச்சல் வந்ததும் தடிப்புகள் ஏற்படுகிறது. முதலில் அது முகத்தில் தோன்றி பின் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுகிறது. பொதுவாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களுக்கு பரவுகிறது.

அரிப்பு அதிகமாகி அது வலி மிகுந்ததாகிவிடும். அதன்பின் பல்வேறு கட்டங்களாக உருவெடுத்து சிரங்கு உண்டாகும். அதன்பின் அது மறைந்துவிடும். ஆனால் கொப்பளங்கள் தழும்பை ஏற்படுத்தலாம்.

பொதுவாக இந்த தொற்று 14 - 21 நாட்களில் தானாக சரியாகிவிடும்.

எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

https://www.bbc.com/tamil/global-62333716

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.