Jump to content

இது தாங்க எங்களுக்கு சோலியே!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1658568995051853-0.png

(நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - பகுதி 3)

 

வேளாவேளைக்கு சாப்பிடுவது என்று சொல்லுவார்கள். இது ஒரு வாழ்க்கை முறை என்றால் தோணும் போது தோணுகிற மாதிரி சாப்பிடுவது இன்னொரு வாழ்க்கை முறை. ஊரில் என்னுடைய அண்டை வீட்டில் ஒரு வயதான தம்பதி. நான் அவர்களுடைய தினசரி நடைமுறையை என் ஜன்னலில் இருந்தே கவனிப்பேன். காலை ஆறுமணி என ஒன்று உண்டெனில் சரியாக அப்போது அவர்கள் இருவரும் சுடச்சுட காபி குடிப்பார்கள். இரண்டு மணிநேரம் கழித்து எட்டு மணிக்கு காலை உணவு, பத்து மணி சத்துமாவுக் கஞ்சி அல்லது ஏதாவது ஒரு சிற்றுண்டி. பன்னிரெண்டரைக்குள் மதிய உணவு சோறு, கூட்டு, பொரியல் சகிதம், மூன்று மணிக்கு தேநீரும் நொறுக்குத்தீனியும், ஐந்தரை மணிக்குள் மீண்டும் தேநீர், சரியாக ஏழு மணிக்கு இரவுணவு. கடிகாரம் தவறினாலும் இந்த அட்டவணை மாறி நான் கண்டதில்லை. எனக்கு இவர்கள் வாழ சாப்பிடுகிறார்களா அல்லது சாப்பிட வாழ்கிறார்களா என குழப்பம் ஏற்பட்டதுண்டு. ஆனால் இன்று பல உணவுமுறை பயிற்சியாளர்கள் இதுதான் சரியான வாழ்வு முறை என்கிறார்கள். அதாவது அந்த வயதான தம்பதி எந்த புத்தகத்தையும் படிக்காமல் மிக ஆரோக்கியமாக சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அந்த தாத்தா 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார். எண்பது வயதில் அவர் மாமரத்தில் ஏறுவதைக் கண்டிருக்கிறேன். அந்த பாட்டி இன்னும் நன்றாக இருக்கிறார்

இவர்கள் மட்டுமல்ல என்னுடைய சொந்த பாட்டியும் இப்படித்தான் - எங்கே போய் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவருக்கு ஐந்து வேளை உணவுகளும் கிடைத்து விட வேண்டும். எட்டு மணி என ஒன்றிருந்தால் கடிகாரம் பார்க்காமலே அவர் காலை உணவுக்கு தயாராகி விடுவார். என்னுடைய ஊரில் கடந்த தலைமுறைக்கு முந்தின தலைமுறையினர் இன்னமும் இப்படித் தான் சாப்பிடுகிறார்கள். இன்று உணவுமுறை பயிற்சியாளர்கள் சரியான நேரத்தில் சாப்பிடுவது, சாப்பாட்டுக்கு இடையில் இரண்டு மணிநேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும், உடல் சத்துக்களை உள்வாங்கவும் அவசியம் என்கிறார்கள். ஆனால் என்னுடைய தலைமுறையில் தான் நிறைய பேர் அவசர வாழ்க்கை முறைக்கேற்ப உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொண்டு அவஸ்தைப்படுகிறோம். சான்றிதழ் பெற்ற ஒரு டயட்டீஷியன் வந்து கட்டணம் வாங்கிக் கொண்டு எப்படி நம் முன்னோர்களைப் போல சாப்பிடுவது என எங்களுக்கு சொல்லித் தர வேண்டி இருக்கிறது.

 

நான் இதைப் போல நேரம் குறித்துக் கொண்டு சிறிய அளவில், சீரிய இடைவெளியில் ஐந்தாறு தவணைகளாக உண்ண முயன்றிருக்கிறேன். ஆனால் ஒன்பதரை மணிக்குள் இரவுணவை முடிப்பதே எனக்கு பெரிய பிரயத்தனமாக இருக்கிறது. ஏனென்றால் என்னுடைய ஒருநாளைக்குள் நூறு விசயங்களை செய்து முடிக்க நினைக்கிறேன். திட்டவட்டமாக இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என வகுத்து வைத்து நான் வாழ்வதில்லை. நிறைய பேர் நகரங்களில் என்னைப் போலத்தான் இருக்கிறார்கள்.  

 

நேற்று ஒரு நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன். மாலை ஆறு மணியிருக்கும். ஒரு டப்பாவில் இருந்து சப்பாத்தி, குறுமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 “என்னங்க இப்போ போய் லஞ்ச் சாப்டுறீங்க?”

 “அதெல்லாம் அப்படித்தாங்க.” என்று அவர் சாதாரணமாக சொன்னார்

 

ஒவ்வொருவருக்கும் ஒரு நெருக்கடி, அலைகழிப்பு இருக்கும். சிலருடைய வாழ்க்கை நிலையே அவர்களுக்கு ஒரு ஒழுங்கை உணவுமுறையில் கொண்டு வர அனுமதிக்காது. இடைவேளை இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிற அலைச்சல், தொடர்ச்சியான சந்திப்புகள், ஓய்வில்லாத வேலைகள் என ஆகும் போது வேளைக்கு நியாபகம் வைத்து சாப்பிட இயலாது. இன்னொரு வகையினருக்கு நேரமிருந்தாலும் மனம் இருக்காது அல்லது பசியிருக்காது. கிடைத்த போதெல்லாம் சாப்பிடுவார்கள்

 

நான் மேற்சொன்ன இந்த இரண்டு வகையாகவும் (மோசமாக) இருந்திருக்கிறேன். இப்போது தான் ஒரு ஒழுங்குமுறைக்குள் என்னுடைய உணவுப்பழக்கம் வந்திருக்கிறது. நேரத்துக்கு உண்பது, உணவுகளுக்கு இடையே சீரிய இடைவேளையை வைத்துக் கொள்வது, முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி சாப்பிடுவது, ஒவ்வொரு வேளையும் அளந்து சாப்பிடுவது - இதையெல்லாம் இன்னும் துல்லியமாக செய்ய இயலவில்லை என்றாலும் தினமும் முயல்கிறேன். அதற்கான பலன்களையும் அனுபவிக்கிறேன். குறிப்பாக எடை குறைப்புக்கு இந்த உணவு ஒழுக்கம் மிக மிக அவசியம்.

 

கடந்த முறை மனுஷ்யபுத்திரனை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது கரெக்டா  டயட் இருக்கிறது, உடற்பயிற்சி செய்யுறது ஒரு தனிவேலைங்க. அதை வேலை மெனக்கெட்டு கண்ணுங்கருத்துமா செய்யணும். ஏகப்பட்ட வேலைகள் குவியும் போது அதைப் பண்ணவே முடியாது.” என்றார். இது முழுக்க உண்மை

 

வாழ்க்கைக்காக சாப்பிடாமல் சாப்பிடுவதற்காக வாழ்வதே சிறந்தது என இப்போது தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். அதே போல சாப்பாட்டுக்கு இடைஞ்சலாக வரும் வேலைகளை முடிந்தளவுக்கு நாம் குறைத்துக் கொண்டு உண்பதும் அவசியம். எடை குறைப்புக்காக மட்டுமல்ல, இது தான் சரியான வாழ்க்கை என நினைக்கப் பழக வேண்டும். உங்களுக்கு குறைந்தபட்சமான வசதிகள் இருந்தால், அன்றாட வாழ்க்கையில் பண நெருக்கடிகள் பெரிதாக இல்லையென்றால், வேலைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டு டப்பாவைத் திறக்கையில் என்னடா இதுவே பொழப்பா இருக்கோமே என உங்களுக்கு அலுப்பு வந்தால் நீங்கள் சரியாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். போகப் போக அலுப்பே ஆரொக்கியமாகும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.   யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:   62)    சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, மேற்கிந்தியத் தீவுகள் (C2) எதிர் தென்னாபிரிக்கா (D1)  WI  எதிர்  SA   நான்கு போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 11 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த ஏழு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி AFG நிலாமதி NZ குமாரசாமி SA தியா NZ தமிழ் சிறி NZ புலவர் SA P.S.பிரபா WI நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் SA கிருபன் SA ரசோதரன் NZ அஹஸ்தியன் WI கந்தப்பு SA வாத்தியார் WI எப்போதும் தமிழன் SA நந்தன் SA நீர்வேலியான் WI கல்யாணி NZ கோஷான் சே SA   இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?         63)    சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா (B2) எதிர் இந்தியா (A1)    AUS  எதிர்  IND   11 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனவும், 05 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.  இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா PAK தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா ENG நுணாவிலான் PAK பிரபா USA ENG வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் AUS ரசோதரன் IND அஹஸ்தியன் AUS கந்தப்பு IND வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS   இப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
    • கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!! இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம்  ஒப்பவில்லை ஐயா!!🤔😟
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.