Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோதிடப்புரட்டுக்கள்!!!

Featured Replies

சோதிடப்புரட்டுக்கள்!!!

சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறது. இதனை அறிவியல் அடிப்படையில் காண்பிக்க முடியாது. சோதிடத்தின் அடிப்படை மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை போல் வெறும் மனத்தளவிலான நம்பிக்கை மட்டுமே.சோதிடம் - சாதகம் என்பவை போலி அறிவியலே என்பதை சுருக்கமாகக் காண்போம்..

(1) சோதிட சாத்திரம் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் வேறுபடுகின்றன.

(2) வெப்ப மண்டல சோதிடம் நெப்தியூன், யுறேனஸ் மற்றும் புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு, கேது கோள்களையும்,

27- நட்சத்திரங்களையும் கணக்கில் எடுப்பதில்லை.

(3) இந்திய சோதிடம் நெப்தியூன், யுறேனஸ், புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் இராகு, கேது என்ற கற்பனைக் கோள்களைக் கணக்கில் எடுக்கிறது.

(4) சோதிடம் ஞாயிறு குடும்பத்தின் மையம், புவி என்று சொல்வது பெரிய மடமை. அதன் மையம் ஞாயிறு என்பது இன்று அறிவியல் பால பாடம்.

(5) சோதிடம் ஞாயிறு போன்ற விண்மீனையும், நிலா போன்ற துணைக் கோளையும் கோள்களாகவே கொள்கிறது.

(6) இராசி மண்டலத்தை 12- ஆகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் 30- பாகை கொண்ட வீட்டுக்குள் அடைப்பது செயற்கை ஆனது. அப்படிப் பிரிக்கப்படுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது. அது முற்றிலும் விதிக்கட்டின்றி (Arbitrary) மனம் போன போக்கில் வகுக்கப் பட்டதாகும். கோள்கள் வெவ்வேறு இராசியில், வெவ்வேறு காலத்தைச் செலவிடுகின்றன. பாம்பாட்டி என்ற இராசியை சோதிடம் முற்றாகக் கணக்கில் எடுப்பதில்லை.

(7) இராசி உருவங்கள் (மேடம், இடபம்...) வெறும் கண்காட்சியை அடிப்படையாகக் கொண்டவை. வெவ்வேறு தொலைவில் கூட்டமாக இருக்கும் நட்சத்திரங்கள் பண்டைய மனிதனுக்கு ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்ற தோற்ற மயக்கத்தைக் கொடுத்தன. அந்தத் தோற்றத்தை வைத்து அந்த இராசிகளுக்கு உண்மையான ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்றவற்றின் குணாம்சங்களை மாடேற்றினர்! அறிவியல் வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும் அறிவிலிகளான சோதிடர்கள் தங்கள் மூடத்தனத்தைக் கைவிடாது தொடர்ந்து சோதிடத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்து வருகின்றனர்.

(8) சோதிடத்தில் ஒரு குழந்தை பிறந்த நேரம் மற்றும் இடம் முக்கியமானது. ஆனால் குழந்தையின் பிறப்பு என்னும் பொழுது அது குழந்தை கருவறையில் இருக்கும் பொழுது உயிர் ஏற்பட்ட நேரமா? பிறக்கும் பொழுது தலை வெளியில் தெரிந்த நேரமா? கால் தரையில் படும் நேரமா? மருத்துவச்சி கையில் எடுத்த நேரமா? தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நேரமா? மருத்துவர் வயிற்றை அறுத்து எடுத்த நேரமா? குழந்தையின் முதல் மூச்சா? அல்லது அழுகையா? இதில் எது என்பதில் சோதிடர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை.

இரண்டொரு மணித்துளி நேர வித்தியாசம் ஒரு குழந்தை பிறக்கும் சமயத்தில் அடிவானத்தில் எழுகிற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இலக்கினம், சந்திரன் நின்ற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இராசி, பிறப்புக் காலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இடம்பெற்று இருந்ததோ அந்தப் பிறப்பு (ஜென்ம) நட்சத்திரம் ஆகியவை வேறு வேறாக மாறி விட வாய்ப்பு இருக்கிறது.

(9) புவி தன்னைத்தானே தனது அச்சில் சுற்றும்பொழுது தளம்பல் (wobble) ஏற்படுகிறது. அதனால் ஞாயிறு தனது பயணத்தில் புவியின் நடுவட்டக் கோட்டைக் கடக்கும் பொழுது முந்திய ஆண்டைவிட மறு ஆண்டு சற்று மேற்கு நோக்கிக் கடக்கிறது. இந்த வேறுபாட்டை வெப்ப மண்டல சோதிடம் கணக்கில் எடுப்பதில்லை. இரண்டுக்கும் இடையிலான இந்த வேறுபாடு இன்று ஏறத்தாழ 24 - பாகையை (24 நாள்களை) எட்டி இருக்கிறது.

(10) ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கோள்கள், இராசிகள் மற்றும் விண்மீன்களின் இருக்கைகள் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்றால், அந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? பல கோடிகள் அப்பால் இருக்கும் கோள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? பல நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? ஆம் என்றால் அந்தக் குழந்தைக்கு அண்மையில் உள்ள பருப்பொருள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசை ஏன் கணக்கில் எடுக்கப்படுவதில்லை?

(11) புவியின் நடுவட்டக்கோட்டுக்கு அண்மித்த நிலப் பகுதிகளிலேயே சோதிட சாத்திரம் தோற்றம் பெற்றது. இதன் தார்ப்பரியம் என்னவென்றால் நடுவட்டக்கோட்டுக்கு வடக்கே அலஸ்க்கா, நோர்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதகம் கணிப்பது முடியாத செயலாகும். காரணம் இந்த நாடுகளில் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2- மணித்தியாலத்துக்கு ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆட்டங்கண்டு விடுகிறது.

(12) மனிதன் பிறந்த புவிக்கோளையும், அதன் தாக்கத்தையும், சோதிட சாத்திரம் அறவே கணக்கில் எடுப்பதில்லை. புவியும் ஒரு கோள் என்பது சோதிட சாத்திரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதே அதற்கான ஏது ஆகும்.

கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை ஈர்ப்பு விசையின் பெறுமதியை (செவ்வாய்க் கோளோடு ஒப்பிடும் பொழுது) காட்டுகிறது. செவ்வாய்க் கோள் விதிக் கட்டின்றித் தெரிவு செய்யப்பட்டது. செவ்வாயோடு ஒப்பிடுவது சோதிடம்; அந்தக் கோளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகவே!

ஈர்ப்பு விசை ஈர்ப்பு விசையின் பெறுமதி

தாய் 20

மருத்துவர் 06

மருத்துவமனை 500

ஞாயிறு 854,000

நிலா 4,600புதன்

38வெள்ளி 27

செவ்வாய் 1

வியாழன் 46

யுறேனஸ் 0..1

நெப்தியூன் 0.03

புளுட்டோ 0.059

வால்மீன் 0.00001

ஈர்ப்பு விசை கோள்கள் புவிக்கு அருகில் வரும் பொழுது கணிக்கப்பட்டதாக கொள்ளப்பட்டது. மேலதிகமாக கொள்ளப்பட்ட அனுமானங்கள்:

குழந்தையின் எடை - 3 கிலோ

தாயின் எடை - 50 கிலோ

மருத்துவர் எடை - 75 கிலோ

மருத்துவமனைக் கட்டடத்தின் எடை- 2.1 தர 1012

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை- 0.1 மீ

மருத்துவருக்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை- 0.3 மீ

மருத்துவமனையின் மைய எடைக்கும், குழந்தைக்கும் இடையில் உள்ள தூரம் - 6.1 மீ

மேலே கொடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் குழந்தை பிறக்கும் பொழுது தாய், மருத்துவர் மற்றும் மருத்துவமனைக் கட்டடம் மூலமாக இடம் பெறும் ஈர்ப்பு விசையின் தாக்கம் (force of gravity) சோதிடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் செவ்வாய்க் கோளை விட முறையே 20, 6 மற்றும் 500 மடங்கு கூடுதலாக இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

எனவே ஒரு சோதிடர் ஒரு குழந்தையின் சாதகத்தை ஈர்ப்பு விசை அடிப்படையில் தயாரித்தால் கோள்களை மட்டுமல்ல விண்வெளியிலும், மண்ணிலும் காணப்படும் ஏனைய பருப்பொருள்களையும் கணக்கில் எடுக்க வேண்டும். ஈர்ப்பு விசை அல்ல அந்த ஆற்றல் மின்காந்த ஆற்றல் (electro-magnetic energy) என்று சோதிடம் சொல்லுமானால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் மீது பருப்பொருள்கள் செலுத்தும் மின்காந்த ஆற்றல் செவ்வாய்க் கோளில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலோடு ஒப்பிடும் பொழுது பின்வருமாறு காணப்படும்.

பருப்பொருள் மின்காந்த ஆற்றல்

ஞாயிறு 3 தர 109

200 வட்ஸ் மின்குமிழ் 9 தர 106(2 மீ தொலைவில்)முழு நிலா 7,600

புதன் 0.4

வெள்ளி 4.4

செவ்வாய் 1

வியாழன் 0.8

சனி 0.1

யுறேனஸ் .0004

நெப்தியூன் .00005

புளுட்டோ 8 தர 10 - 3

மேலே கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 200 வாட்ஸ் ஆற்றல் உடைய ஒரு மின்குமிழியில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றல் செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கோள்களைவிட பல ஆயிரம் மடங்கு வலுவானது!

குழந்தை பிறக்கும் பொழுது அதனைப் பாதிப்பது கோள்களின் ஈர்ப்பு விசையும் அல்ல, மின்காந்த விசையும் அல்ல என்றால் பின் எது தான் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்பதைச் சோதிடர்கள் தெளிவாக விளக்க வேண்டும். பிறப்பதற்கு முன்னரே முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை காரணமாக ஒவ்வொரு உயிரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்று இந்து மதம் சொல்கிறது!

அது உண்மையென்றால் ஒரு குழந்தையின் பிறப்பின் பொழுது கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் ஆகியவற்றின் இருக்கை முக்கியமற்றுப் போய்விடுகிறது.

சோதிடம் முற்றிலும் பிழையான அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதற்கு மேலே எடுத்துக் காட்டியவை மேலதிக சான்றுகளாகும்.வானியல் பற்றிய அறிவு இன்றிருப்பது போல், பண்டைக் காலத்தில் இல்லாததால் சோதிடர்கள் மனம் போன போக்கில் கோள்கள் பற்றியும், இராசிகள் பற்றியும், இராசி வீடுகள் பற்றியும் எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்ததைப் பெரிய குற்றம் என்று சொல்ல முடியாது. அன்றைய அறிவு அவர்களுக்கு அந்த அளவில் மட்டுமே இருந்தது.

ஆனால் இன்றைய சோதிடர்கள் தொலமி, வராகமிரர் போன்றோர் தங்கள் காலத்தில் எழுதி வைத்ததையே கிளிப்பிள்ளை போல் மனப்பாடம் செய்து அதன் அடிப்படையில் சாதகம் கணித்துப் பலன் சொல்கிறார்கள். இது சோதிடர்களின் உச்சகட்ட புரட்டு ஆகும்.

ஒரு குழந்தையின் நிறம், குணம், உடல் நலம், புத்திக் கூர்மை, ஆயுள் பலம் போன்ற குணாம்சங்கள் அந்தக் குழந்தையின் தாய் தந்தை இருவரது மரபுக் குறியே தீர்மானிக்கின்றது. இதுவே இன்றைய அறிவியலின் முடிந்த முடிவாகும்

url="http://thamilachi.blogspot.com/2007/08/blog-post_9044.html"]http://thamilachi.blogspot.com/2007/08/blog-post_9044.html

Edited by navam

அதாவது ஐயருக்கு சாதகம் எழுதுவிப்பதற்காக நூறு டொலர் காணிக்கை கொடுப்பது, திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஐம்பது டொலர் காணிக்கை கொடுப்பது.. இவையெல்லாம் வேஸ்ட் என்று சொல்ல வாரீங்கள், சரிதானே? :P

  • கருத்துக்கள உறவுகள்

கூரையில் இருந்து நற் குறிதனைச் சொல்லி

கூழினுள் இருந்து தன் உயிர்விடும் பல்லி

யாரையும் ஏய்த்திடும் நமது சாத்திரிமார்

நாளை தம் வாழ்வதன் முடிவினையுணரார்

பாரையும் கோள் உடு நிலையைம் இணைத்தே

பலவித கதைகளையுரைத்திடு மூடர்

போரையும் அதன் அடிவேரையும் அறியார்

புவியினில் அமைதிக்கும் திகதிகள் குறிப்பார்.

ஆனாலும் சந்திர சூரிர கிரகண நேரங்களைச் சோதிடம் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்கின்றது. அந்த விடயத்தில் அந்த சாஸ்திரத்தை முற்றாகப் புறக்கணிக்காது அதிலுள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக்கொண்டு மேலும் விஞ்ஞானரீதியில் விருத்திசெய்யலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஜோதிடம் சொல்பவர்களில் நம்பிக்கையில்லை ஆனால் ஜோதிடத்தில் நம்பிக்கையுண்டு காரணம் என் சொந்த அனுபவம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.