Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

Picture1.png

சிறு கிராமத்திலிருந்து மதுரையில் வாழ்ந்து, பின் சென்னையிலும் வேலை நிமித்தம் காலத்தை ஓட்டவேண்டிய நிலை இருந்தது.

கிராமத்தில் வாழும்போது தெருவில் யார் எதிரே வந்தாலும் "என்னப்பு சுகமா இருக்கிறீர்களா? படிப்பு வேலை எப்படி..?" என சகலத்தையும் நம்மிடம் நேசத்துடன் விசாரிப்பார்கள். அண்டை கிராமங்களுக்கு போனாலும் நட்புடன் பேசும் கிராமத்திய வாழ்வும், வழக்கமும் இன்றும் உள்ளது.

மதுரை வந்தபோது, இம்மாதிரியான அக்கறையான விசாரிப்புகள் குறைந்து, தெரியாத முகமென்றாலும், ஓரளவு சிநேகத்துடன் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் அல்லது வழி காட்டுவார்கள்.

ஆனால் 70களின் இறுதியில் சென்னைக்கு வந்தபோது, அப்பெரிய நகரத்தை முதன் முதலில் பார்த்து பிரமித்துப்போனேன்.. பலதரப்பட்ட கலவை முகச் சாயல்கள்.. யார், எப்படி, எந்த மொழி என தெரியாத தடுமாற்றம்.

சாலையில் செல்வோரிடம் ஏதாவது கேட்டால், உடனே பதில் வராது. ஏற இறங்க பார்த்துவிட்டு, விட்டேத்தியாக பதில் வரும்.. அல்லது "தெரியாது சார்.." என முடித்துவிடுவார்கள்.

முதலில் இவர்களின் பேசுமுறை, தெரியாதவர்களிடம் சாக்கிரதையாக பேசும்/பழகும் விதம் அந்நியமாக தெரிந்தாலும், பரபரப்பான எந்திர வாழ்க்கை, ஏமாற்றுதல், திருட்டு பயம் போன்றவற்றால் அனைவரும் எச்சரிக்கையுடன் பழகுவது பாதுகாப்பானது என்ற அவர்களின் அணுகுமுறையை நாளடைவில் அனுபவத்தில் யாரும் உணர்வர்.

நிற்க.

இலங்கையிலிருந்து வந்துள்ள இந்த தம்பி, வெள்ளேந்தியாக சென்னை மக்களிடம், அதுவும் செளகார் பேட்டையில்(இது பெரும்பாலும் வட இந்தியர்களின் வியாபார பகுதி, இந்திதான் இங்கே கோலோச்சும், தமிழிலில் அரைகுறையாக பேசுவார்கள்) பேச எத்தனித்தால், எப்படி சிநேகமான முறையில் பதில் வரும்..? (தெருவோர கடை வைத்திருக்கும் சில கடைநிலை தமிழ் தொழிலாளிகளை தவிர.)

வேடிக்கை..!

இப்பகுதிக்கு பல வருடங்களாக சென்று வந்துள்ள அனுபவத்தில் எழுதுகிறேன். (மின்ட் தெரு, கோவிந்தப்பன் தெரு, பிராட்வே, ஏழு கிணறு, தம்பு தெரு இன்ன பிற..)

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
57 minutes ago, ராசவன்னியன் said:

Picture1.png

சிறு கிராமத்திலிருந்து மதுரையில் வாழ்ந்து, பின் சென்னையிலும் வேலை நிமித்தம் காலத்தை ஓட்டவேண்டிய நிலை இருந்தது.

கிராமத்தில் வாழும்போது தெருவில் யார் எதிரே வந்தாலும் "என்னப்பு சுகமா இருக்கிறீர்களா? படிப்பு வேலை எப்படி..?" என சகலத்தையும் நம்மிடம் நேசத்துடன் விசாரிப்பார்கள். அண்டை கிராமங்களுக்கு போனாலும் நட்புடன் பேசும் கிராமத்திய வாழ்வும், வழக்கமும்..!

மதுரை வந்தபோது, இம்மாதிரியான அக்கரையான விசாரிப்புகள் குறைந்து, தெரியாத முகமென்றாலும், ஓரளவு சிநேகத்துடன் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் அல்லது வழி காட்டுவார்கள்.

ஆனால் 70களின் இறுதியில் சென்னைக்கு வந்தபோது, அப்பெரிய நகரத்தை முதன் முதலில் பார்த்து பிரமித்துப்போனேன்.. பலதரப்பட்ட கலவை முகச் சாயல்கள்.. யார், எப்படி, எந்த மொழி என தெரியாத தடுமாற்றம்.

சாலையில் செல்வோரிடம் ஏதாவது கேட்டால், உடனே பதில் வராது. ஏற இறங்க பார்த்துவிட்டு, விட்டேத்தியாக பதில் வரும்.. அல்லது "தெரியாது சார்.." என முடித்துவிடுவார்கள்.

முதலில் இவர்களின் பேசுமுறை, தெரியாதவர்களிடம் சாக்கிரதையாக பேசும்/பழகும் விதம் அந்நியமாக தெரிந்தாலும், பரபரப்பான எந்திர வாழ்க்கை, ஏமாற்றுதல், திருட்டு பயம் போன்றவற்றால் அனைவரும் எச்சரிக்கையுடன் பழகுவது பாதுகாப்பானது என்ற அவர்களின் அணுகுமுறையை நாளடைவில் அனுபவத்தில் யாரும் உணர்வர்.

நிற்க.

இலங்கையிலிருந்து வந்துள்ள இந்த தம்பி, வெள்ளேந்தியாக சென்னை மக்களிடம், அதுவும் செளகார் பேட்டையில்(இது பெரும்பாலும் வட இந்தியர்களின் வியாபார பகுதி, இந்திதான் இங்கே கோலோச்சும், தமிழிலில் அரைகுறையாக பேசுவார்கள்) பேச எத்தனித்தால், எப்படி சிநேகமான முறையில் பதில் வரும்..? (தெருவோர கடை வைத்திருக்கும் சில கடைநிலை தமிழ் தொழிலாளிகளை தவிர.)

வேடிக்கை..!

இப்பகுதிக்கு பல வருடங்களாக சென்று வந்துள்ள அனுபவத்தில் எழுதுகிறேன். (மின்ட் தெரு, கோவிந்தப்பன் தெரு, பிராட்வே, ஏழு கிணறு, தம்பு தெரு இன்ன பிற..)

எல்லா இடமும் மக்களால் நிரம்பி வழிகின்றது.
வாகன இரைச்சலும், ஹோர்ன் சத்தமும்…. மிக மிக அதிகம்.
வீதி வியாபாரிகள், மிக நட்பாக கதைக்கின்றார்கள்.
பகிர்விற்கு நன்றி வன்னியன்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பூக்கடை காவல் நிலையத்திலிருந்து தேவராஜ முதலி தெரு, கோவிந்தப்பன் நாயக்கன் தெரு போன்ற தெருக்களில் மக்கள் நெரிசல் மிக அதிகமாக இருக்கும்.

இங்கிருக்கும் கிளை தெருக்களான காசி செட்டி தெருவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கிவிட்டு, வரும்வழியில் அகர்வால் பவனின் ரசமலாய் வாங்கி சாப்பிட்டுவிட்டு அப்படியே கந்தசாமி கோவிலுக்கு சென்று வணங்கி வருவதும் உண்டு.  

d527e7e661f5d54c2cdde98de408a7e3.jpg    AF1QipP2u0VsSzIIXbg6VOJ3S-dEygePaWwffBheUHqG=w1080-k-no

Untitled.jpg

இந்த ரசமலாய் என்பது திரட்டுப்பாலுடன் பாலாடை கட்டிகள், மசாலா பொருட்களை சேர்த்து சுண்ட காய்ச்சிவிட்டு, பாதாம், குங்கும பூ தூவி, சிறு மண்பானைகளில் குளிரவைத்து கொடுப்பார்கள். அகர்வால் பவனில் இவ்வகை இனிப்புகள் மிக நன்றாக இருக்கும்.

இப்பகுதிகளில் மொத்த விலைக்கடைகள் அதிகமாக இருப்பதால், இந்த மீன் பாடி வண்டிகள், குட்டி யானை வாகனங்கள் அதிகமாக ஓடும். தேர்ந்தெடுக்க வகை வகையான பொருட்கள், அவைகளின் விலையும் கொஞ்சம் மலிவாக கிட்டும்.

இரு சக்கர வாகனத்தில் செல்வது மிகக் கடினம். சில தெருக்கள் ஒரு வழிப்பாதையாகவும் இருக்கும். மாலைவேளைகளில் நடந்து செல்லவே மிக நெருக்கடியாக இருக்கும். பெரும்பாலும் மார்வாடி (ராஜஸ்தான், குஜராத்திகள்)கடைகள்தான்.

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, தமிழ் சிறி said:

எல்லா இடமும் மக்களால் நிரம்பி வழிகின்றது.
வாகன இரைச்சலும், ஹோர்ன் சத்தமும்…. மிக மிக அதிகம்.
வீதி வியாபாரிகள், மிக நட்பாக கதைக்கின்றார்கள்..

இதே வீதி வியாபாரிகளை, வாகனத்தில் செல்லும்போது கவனக்குறைவால் இடித்துவிட்டால் போதும், சென்னை தமிழில் வைவார்கள்.  😄

'பேமானி, கசுமாலம், ஒன் மூஞ்சியில கையை வைக்க..! வீட்ல சொல்லிக்கினு வந்துட்டையா..?' என ஒருமையில் விளித்து திட்டும் வசவுகளை காது கொடுத்து கேட்க இயலாது. 🤭

'சென்னை தமிழ்' புரிய கற்றுக்கொண்டது, இம்மாதிரி மக்கள் பேசும்போது கேட்டு பழகியதுதான்.

Edited by ராசவன்னியன்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😂 இலங்கை தமிழர்களின் உணவு செய்முறை காணொளிகள் வெளிநாட்டில் உள்ள ஈழதமிழர்களின்  காணொளிகள் பார்க்கும் போது அவதானித்துள்ளேன் ஆரோக்கியத்தில்  இருக்கின்ற அக்கறை காரணமாக உப்பை அள்ளி போடுவார்கள்.   எனக்கு தெரிந்திராத தகவல் 👍 corned beef வும் தானே
    • உங்களின் கேள்வியை இப்படியும் எழுதலாம்.....................🤣. பின்வருவனவற்றில் எது பிழையான கூற்று? 1. நாமல் தப்பி ஓட வெளிக்கிடுகின்றார் 2. நாமல் தன்னிடம் உள்ளவற்றை அரைகுறை விலைக்கு விற்க முயற்சிக்கின்றார் 3. நாமல் விற்பவற்றை வாங்கி சொத்து குவிக்கும் யாழ் மக்கள் இலாபம் அடையப் பார்க்கின்றனர் 4. மேற்கூறிய மூன்றும் தவறு என்று காசிநாத் சொல்லுகின்றார்
    • அது ஏன் திமிங்கிலம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு கடந்த காலத்திலேயே தீர்வு காணாமல் அநுர காலத்தில் அவசரமா திருந்துறீங்க? சிங்களவரையே நம்பியிருக்கும் நாமலின் கட்சிக்கு சிங்களவர்களிட்டையே 3% வாக்குகூட கிடைக்கவில்லை, நீங்கள் எதுக்கு யாரும் இல்லாத கடையில யாழ்ப்பாணத்தில  போண்டா சுடுறீங்க?
    • Pure cream+ ரின் பால், வேணுமெண்டால் கொஞ்சம் வனிலா ஒரே நிமிடத்தில் ஐஸ்கிறீம்    கொத்துரொட்டி கொத்து ரொட்டி தயாரிப்புக்கு ரொட்டி தயாரிக்கவே பாதிநாள் போய்விடும், ஆனால் இங்கு அதிவேக மென்மையான ரொட்டி தயாரிப்பு . அப்புறம் என்ன மொத்த வேண்டியதுதான்.   இது எல்லாருக்கும் தெரிஞ்ச ரோஸ்ட் பாண்தான் , இருந்தாலும் சும்மா ஒரு இணைப்பு   இது கொஞ்சம் நேரம் எடுக்கும், இருந்தாலும் நம்ம அச்சு பாண்.   உழுந்து தேவையில்லை, ஊற வைக்க தேவையில்ல அரைக்க தேவையில்லை அதிவேக அரிசி மா தோசை.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.