Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சீனா கொள்கையிலிருந்து யுவான் வாங் 5 வரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சீனா கொள்கையிலிருந்து யுவான் வாங் 5 வரை

By RAJEEBAN

26 AUG, 2022 | 04:00 PM
image

 

QI ZHENHONG

இலங்கைக்கான சீன தூதுவர்

 

------------

 

சமீப நாட்களில் சீனா தொடர்பான இரண்டு விடயங்கள்  இலங்கையின் பரந்துபட்ட கவனத்தையீர்த்துள்ளன.

இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்கசனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் சீனாவின் தாய்வான் பிராந்தியத்திற்கான இரகசிய விஜயத்தின் பின்னர் சீனா தரப்பு கடுமையான பல பதிலடி நடவடிக்கைகளை எடுத்தது.

உலகின் 170 நாடுகள் ஒருசீனா கொள்கைக்கு தங்கள் உறுதியான ஆதரவை வழங்கியுள்ளதுடன் அமெரிக்காவின் பதற்றத்தை தூண்டும் நடவடிக்கையை  கடுமையாக எதிர்த்துள்ளன.

இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மற்றும் பல அரசியல் கட்சிகள்; சமூக குழுக்கள்- சீனாவிற்கு ஆதரவாக நீதி குறித்துவெளிப்படையாக கருத்துதெரிவித்துள்ளமை குறித்து நான் நன்றியுடையவனாக உள்ளேன்.

சீனாவின் தாய்வான் பிராந்தியத்திற்கான நான்சி பெலோசியின் இரகசிய விஜயத்தின் விளைவுகள்

இதேவேளை இந்த மாதநடுப்பகுதியில் சீனாவும் இலங்கையும் மூன்றாம் தரப்பின் முரட்டுத்தனமான மற்றும் நியாயமற்ற குறுக்கீடுகளை முழுமையாக எதிர்த்துள்ள நிலையில், சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் யுவான் வாங் 5 இலங்கை அரசாங்கத்தின் சமீபத்தைய அனுமதியை பெற்ற பின்னர் மீள்நிரப்புதலிற்காக வெற்றிகரமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்றது.

yuan-wang-5-2022-lk-7-1536x1024.jpg

இந்த இரு விடயங்களும் பொருத்தமற்றவையாகவும் ,ஆயிரம் மைல் இடைவெளியை கொண்டுள்ளவையாகவும் தோன்றலாம்,ஆனால் இந்த இரண்டு விடயங்களும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளவையாக காணப்படுகின்றன.அதாவது இணைந்து பரஸ்பரம் மற்றையவரின் இறைமை சுயாதிபத்தியம் ஆள்புல ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாப்பது தொடர்பானது.

இந்த இரண்டு விடயங்களும் செயற்பாடுகளும் விளைவுகளும் எங்கள் இருதரப்பு உறவின் சிறந்த பாரம்பரியத்தை வெளிப்படுத்தியுள்ளன.இரு நாடுகளிற்கும் இடையில் 65 வருடங்களிற்கு முன்னர் உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் முக்கிய விவகாரங்கள் பாரிய கரிசனைகள் தொடர்பில் சீனாவும் இலங்கையும பரஸ்பர புரிந்துணர்வு மதிப்பு மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளன என்பதே அது.

1971 இல் இலங்கை இணை அனுசரணை வழங்கிய( சிலோன்) தீர்மானமொன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 26வது அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானம் ,உத்தியோகபூர்வமாக ஒரு சீனா கொள்கையை அங்கீகரிக்கின்றது - உலகில் ஒரு சீனா மாத்திரமே உள்ளது - தாய்வான் சீனாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி முழு சீனாவையும் பிரதிநிதித்துவம் செய்யும்ஒரேயொரு சட்டபூர்வமான அரசாங்கம் சீனா அரசாங்கமே என்பதே அந்த நிலைப்பாடு.

அந்த தீர்மானம் பிசிஆரே ஐக்கியநாடுகளிற்கான ஒரேயொரு நியாயபூர்வமான பிரதிநிதி என்பதையும் அங்கீகரிக்கின்றது.

இதன் பின்னர் ஒரு சீனா கொள்கை என்பது சர்வதேச சமூகத்தின் பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகவும் சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறையாகவும் மாறியுள்ளது.

அந்த கொள்கையின் அடிப்படையில் அமெரிக்கா உட்பட 181 நாடுகள் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளன.

நான்சி பெலோசியின் விஜயம் என்பது ஒரு சீனா கொள்கையை மற்றும் சீனா அமெரிக்காவிற்கு இடையிலான மூன்று கூட்டு அறிக்கைகளின் விதிகளை பாரதூரமாக மீறும் விடயமாகும்.

அது சீனாவின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் பாரதூரமாக மீறுகின்றது,தாய்வான் நீரிணையில் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது தாய்வானின் சுதந்திரத்திற்கான பிரிவினை வாத சக்திகளிற்கு தவறான செய்தியை தெரிவிக்கின்றது.

எனினும் சில உள்ளுர் செய்தித்தாள்கள் மேற்குலகின் குரல்களை முன்னிறுத்தியுள்ளதுடன் சீனா அளவுக்கதிகமாக நடந்துகொள்கின்றது பதட்டத்தை அதிகரிக்கின்றது தாய்வான்நீரிணையில் நிலைமையை மாற்றுகின்றது என தெரிவித்துள்ளன.

இது அவர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை கேள்விக்குட்படுத்துவது, திருடன் திருடனை பிடிக்குமாறு கூச்சலிடும் வழமையான தந்திரோபாயமாகும்.

அமெரிக்காவும் தாய்வான் பிரிவினைவாதிகளுமே பொறுப்புணர்வற்ற செயல்களை செய்துள்ளனர் தாய்வான் நீரிணையின் நிலைமையை மாற்றுகின்றனர் பதற்றமானதாக்குகின்றனர்.சீனா அவ்வாறு செயற்படவில்லை.

சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளிற்கு தயக்கமின்றி பதிலளிப்பதற்கான அனைத்து உரிமைகளும் சீனாவிற்குள்ளன.

சீனாவின் விஞ்ஞான ஆராய்ச்சிக்கப்பலான யுவான் வாங்5 இன் பயணம்

 

ஒருசீன கொள்கையை பின்பற்றுவது என்பது சீனாவின் முக்கிய நலன்களை பாதுகாப்பது மாத்திரமில்லை,அது ஐநா சாசனத்தை சர்வதேச இராஜதந்திர உறவுகளின் அடிப்படை விதிமுறைகளை பாதுகாப்பது தொடர்பானது.

அமெரிக்காவின் அதிகளவு  பொறுப்பற்ற பகுத்தறிவற்ற செயல்களை சீனாவும் சர்வதேச சமூகமும் எதிர்க்காவிட்டால் தலையிடாமை,தேசிய இறைமை, சர்வதேச உறவுகளில் ஆள்புல ஒருமைப்பாடு ஆகிய பொதுவான கொள்கைகள் வெறுமனே ஆவணங்களாக மாத்திரம் மாறிவிடும்.

அதனை விட முக்கியமாக உலகம் காட்டுவிதிமுறைகள் மற்றும் காட்டுமிராண்டிகளின் காலத்தை நோக்கி பின்செல்லக்கூடும்..

ga-2758.jpg

  பிரிவினைவாதிகளும்; தீவிரவாதிகளும் ஊக்குவிக்கப்படலாம் சிறிய நடுத்தர நாடுகளின்  தேசிய இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பன கடுமையாக கேள்விக்குட்படுத்தப்படலாம்.

இலங்கை உட்பட பல நாடுகள் உலகிலும் பிராந்தியத்திலும் அனுபவிக்கும் அமைதியும் ஸ்திரதன்மையும் மோசமாக பாதிக்கப்படலாம்.

 

இலங்கையின் பெரும் வரலாற்றை பார்க்கும்போது அதன் வடபகுதி அயல்நாட்டின் ஆக்கிரமிப்பை இலங்கை 17 தடவை எதிர்கொண்டது- மேற்குலகின் காலனித்துவத்தை 450 வருடங்கள் எதிர்கொண்டது,பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை மூன்று தசாப்தங்கள் எதிர்கொண்டது தற்போது உலகில் துணிச்சலுடனும் பெருமிதத்துடனும் காணப்படுகின்றது.

இலங்கையின் இறைமை சுதந்திரம் ஆட்புல ஒருமைப்பாட்டின் மீதான எந்த தலையீடும் சகித்துக்கொள்ளப்படாது.

அம்பாந்தோட்டை துறைமுகத்திலோ அல்லது வேறு எந்த துறைமுகத்திலோ மீள்நிரப்புதலிற்காக கப்பலிற்கு அனுமதி வழங்குவது இலங்கை அரசாங்கம் எடுக்கவேண்டிய தீர்மானமாகும்.அது முழுமையாக இலங்கையின் இறைமைக்குள் உட்பட்ட விடயம்.

மேலும் கப்பலின் அனைத்து விஞ்ஞான ஆராய்ச்சிகளும் சர்வதேச சட்டம் மற்றும் வழமையான சர்வதேச நடைமுறைகளிற்கு உட்பட்டவை என்பதை குறிப்பிடவேண்டும்.

சில சக்திகளின் பாதுகாப்பு கவலைகள் என அழைக்கப்படுபவைகளை அடிப்படையாக கொண்ட வெளிப்புறத்தடைகள் - ஆனால் எந்த ஆதாரமும் அற்றவை-உண்மையில் இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் ஒரு தலையீடாகும்.

எனினும் அதிஸ்டவசமாக இலங்கை சீனாவின் இணைந்த முயற்சியால் இந்த விடயத்திற்கு பொருத்தமான விதத்தில் தீர்வு காணப்பட்டது.இது இலங்கையின் இறைமை மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதுடன் இல்லாமல் சர்வதேச நியாயத்தன்மை மற்றும் நீதியை மீண்டுமொரு முறை பாதுகாக்கின்றது.

இலங்கையை போல சீனாவும் 1840 முதல் 1949 வரை 100 வருட அவமானத்தை சந்தித்துள்ளது.இலங்கை போன்ற கசப்பான அனுபவம் காரணமாக இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாடு சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு சர்வதேசஅளவில் சீனா எப்போதும் ஆதரவாக செயற்பட்டுள்ளது.

நாங்கள் அதனை தொடர்ந்தும் செய்வோம்.

இதற்குமாறாக அருகில் அல்லது தொலைவில் உள்ள நாடுகள் இலங்கையை கொடுமைப்படுத்தவும் இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை காலில் மிதிக்கவும் பல்வேறு ஆதாரமற்ற சாக்குபோக்குகளை எப்போதும் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின்மனித உரிமை பேரவையின் 51 வது அமர்வு இடம்பெறலாம் அங்கு இலங்கையின் மனித உரிமை நிலவரம் மீண்டும் கிளறப்படலாம்.

இலங்கை மக்கள் கடும் பொருளாதார மனிதாபிமான நெருக்கடியின் மத்தியில் சிக்குண்டுள்ள வேளையில் மனித உரிமைகள் குறித்து எப்போதும் போதிக்கும் இந்த நாடுகள் என்ன செய்யப்போகின்றன என பலர் ஆச்சரியப்படுகின்றனர். அவர்கள் உறுதியான ஆதரவை வழங்குவதன் மூலம் இலங்கைதனது மனித உரிமை நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவார்களா?

அல்லது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக - இலங்கை மக்களின் காயங்களில் உப்பை தடவுவதற்காக அவர்கள் மனித உரிமைகளை மீண்டும் மறைமுக கருவியாக பயன்படுத்துவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/134447

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, நெப்போலியன், சீனா குறித்து, "அது தூங்கும் டிராகன். தூங்கட்டும்! எழுந்தால் உலகையே உலுக்கி விடுவான்" என்றார்.

இந்த சீனாவுக்கு இந்தியா ஒரு பொருட்டே இல்லை.

ஒரே நேரத்தில், அருணாசல பிரதேசம், பாகிஸ்தான், தீபெத், சிங்கள இலங்கை என்று, நாலாபுறமும் இந்தியாவை மிரள வைக்கும் வலையினை விரித்து வைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருப்பது போல நடிக்கிறான்.

இந்தியா நிலைமை, உண்மையிலேயே கவலைக்கிடமானது.

மிக பலவீனமான உளவு அமைப்பினைக்கொண்ட கொண்ட, நுனி மரத்தில் இருந்து கொண்டு அடிமரத்தினை வெட்டிய நிலையில் உள்ளது இந்தியா.

அதன் தலைவர்கள், பாலை (சாமிசிலை மேல்) கொட்டுகிறார்கள், வெண்ணையினை (கோவிலில்) எரிக்கிறார்கள். மாட்டு மூத்திரத்தினை பக்தியுடன் குடிக்கிறார்கள் என்று மேலை நாட்டு பத்திரிகை எழுதியது. 

வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார், இந்தியர்களுக்கு, தமது நாட்டினை சிறப்பாக நிர்வகிக்கும் திறமை இருப்பதாக தெரியவில்லை.

அது சரியானது தானே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.