Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தின் உருவகக் கதை பிதாமகர் நாவற்குழியூர் சு. வே அவர்கள்

Featured Replies

ஈழத்தில் உருவகக்கதையின் மூலவர் நாவற்குழியூர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப்பகிர்வுநிகழ்வு கடந்த 4ம் திகதி (04.08.2007) அன்று கனடா நாட்டின் ரொரன்ரோ மாநகரில் இடம் பெற்றது.

veluppilai11wm2.th.png

பண்டிதர் சு.வேலுப்பிள்ளையின் (சு.வே) இழப்பு தமிழ்ச் சமூகத்திற்குமான ஒரு வெற்றிடம்

meeting2sb7.th.jpg

“சிறுகதை எழுத்தாளனைவிட ஒரு உருவகக் கதை எழுதுபவன் ஆழமான சிந்தனையாளனாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்டதொரு ஆழமான பார்வை பண்டிதர் சு.வேயிடம் காணப்பட்டதினால்; அவரை உருவகக் கதையின் பிதாமகராக ஈழத்து இலக்கிய உலகம் இன்றும் மதிக்கின்றது. அத்தோடு ஆசிரியராக, வகுப்பறை கற்பித்தலுடன் மட்டும் நின்றுவிடாமல் கல்வி வெளியீட்டு திணைக்களத்தினூடாக முழுத் தமிழ் தேசியத்திற்கும் கல்வி கற்பித்த பெருமை உடையவர்.” என்று தமதுரையில் குறிப்பிட்டார், சு. வேயின் சமகாலத்தில் ஆசிரியப்பணியாற்றிய பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்கள்.

நாவற்குழி மண்ணில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஆரம்பக்கல்வியை அங்கேயே கற்று பின்னர் திருநெல்வேலி சைவாசிரியப் பயிற்சிக் கல்லூhயில் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியனாக கற்றுத் தேர்ந்ததோடு நின்றுவிடாமல், அக் கல்லூரி உருவாக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, ஈழத்து சிறுகதை மூலவரில் ஒருவரான சம்பந்தன், இரசிகமணி கனக செந்திநாதன் போன்றோரின் தடத்தில் சு.வேயும் புத்திலக்கியப் படைப்பாளியாக ஈழத்துத் தமிழிலக்கியத்துறையில் முக்கியமானவராக கருதப்படலானார். அத்தோடு ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தில் கற்று தமிழ் பண்டிதராகவும் இவர் விளங்கினார். பண்டைய தமிழ் இலக்கியங்களை இவர் தெரிந்து வைத்திருந்தது போலவே நவீன தமிழிலக்கியங்களையும் அவர் ஆழமாக தெரிந்து வைத்திருந்தார். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை வழியாக யாழ்ப்பாண மண்ணிலே விளைந்த செழுமைத் தமிழை நவீன படைப்பிலக்கியத்திலே புகுத்திய மூலவர் என்று அறிஞர்களால் போற்றப்படுபவர் சு.வே ஆவாவர்.

ஆசிரியற்றொழிலை டிக்கோயா தோட்டப் பாடசாலை, ஹற்றன் சென் பொஸ்கோ, சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்யாசாலை, மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் புரிந்து அதன்பின்னர் அரசினர் பாடநூல் பிரசுர சபையில் பணியாற்றினார். அத்தோடு புனைகதை, உருவகக்கதை, நாடகங்கள் துணைப்பாட நூல்களை எழுதுவதிலும் ஈடுபட்டார்

அண்மையில் ஈழத்து இலக்கிய உலகை விட்டு மறைந்தும் மாணவர்களிடத்தே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் சு.வே என அழைக்கப்படும் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை அவர்களின் நிணைவுப் பகிர்வு நிகழ்வு கனடா, ஸ்காபறோ நகரத்தில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் நடத்தப்பட்டது.

meetingol4.th.jpg

நிகழ்வை அவரது சகோதரி திருமதி சரஸ்வதி வீரசிங்கம் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

meeting1vt8.th.jpg

நிகழ்விற்கு தலைமை தாங்கிய அவரது மாணவர்களில் ஒருவராகிய திரு. தம்பிராஜா விஜயசேகரன் தனதுரையில் கடல் கடந்தும் கனடா நாட்டில் அவரை நினைவு கொள்ளுமளவிற்கு தனது கற்பித்தல் வல்லமையால்; மாணவர்களை கட்டி வைத்திருந்தவர் சு.வேயவர்கள் எனக் கூறினார்.

meeting3id1.th.jpg

பொது நலனுக்காகவும், மாணவச் சமூகத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்த ஒரு நல்ல மனிதர் சு.வே அவர்கள். அவருடன் பணியாற்றக்கிடைத்தது பெரும் பாக்கியமெனவும், நல்லதொரு மனிதனை, நல்லதொரு சிந்தனையாளனை, ஒரு நண்பனை பெற்றதை பெருமையெனக் கருதுவதாக திரு. சி.சிற்றம்பலம் அவர்கள் சு.வேயுடன் பாடசாலையில் கற்பித்த அனுபவம் பற்றிப் பேசும் பொழுது குறிப்பிட்டார்.

meeting4on2.th.jpg

சு.வே அவர்களது படைப்புக்களானது பிறர் படைப்புக்களை தழுவாமலும், மொழி பெயர்க்காமலும், பிரதிபண்ணாமலும், பிறர்கை படாததுமான தூய்மையானது என்றும், அவரது உருவகக்கதைகள் எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடியவாறு அமைந்திருப்பது தனிச் சிறப்பு என்றும் சு.வே யின் இலக்கியப் பணி பற்றி பேசும் பொழுது எழுத்தாளர் வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) அவர்கள் தெரிவித்தார்.

meeting5xu6.th.jpg

தொடர்ந்து தமிழர் புணர்வாழ்வுக் கழக கனடாக்கிளையின் தலைவர் திரு.குணநாதன் அவர்கள் உரையாற்றுகையில் சு.வேயவர்களது இழப்பு தனக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்திற்குமான ஒரு வெற்றிடம் என நெகிழ்ந்தார். கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் உடன் பணியாற்றும் காலத்திலும் தமிழ் கற்பதோடு மட்டுமல்லாது பல வாழ்ககை அனுபவங்களையும் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டோம். எனத் தொடர்ந்து கூறினார்.

சு.வே அவர்களது சிறுகதைகள், உருவகக்கதைகள் எந்தளவு தூரம் இலக்கிய உலகில் பேசப்படுகின்றனவோ அந்தளவிற்கு அவரது நாடகங்களும் பேசப்பட்டன. குறிப்பாக அவரது ‘பொன்னொச்சிக்குளம்’ போன்ற வானொலித்தொடர் நாடகங்கள் இலங்கை வானொலியில் 97 வாரங்கள்வரை ஒலிபரப்பப் பட்டு புகழ் பெற்றவை. வானொலி நாடகங்கள் பற்றிய ஒரு ஆய்விற்கான தேடலில் அவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். என்று வானொலிக் கலைஞரும், நாடகக் கலைஞருமாகிய திரு. கே.எஸ். பாலச்சந்திரன் தனதுரையில் குறிப்பிட்டார்..

meeting7kc6.th.jpg

தான் பிறந்து வாழ்ந்த ஊராகிய நாவற்குழியின் பெருமை, தமிழின் பெருமையாக வாழ்ந்து காட்டியவர் சு.வே. இவர் போன்ற பெரிய மனிதர்களுடன் பழகக் கிடைத்த காலம் என் வாழ்வில் ஒரு பொற்காலம். தனலக்குமி புத்தகசாலையினால் வெளியிடப்பட்ட “பாலபோதினி” அவற்றோடு வெளிவந்த துணைப்பாட நூல்களாகிய பரதன், குகன், சந்திரமதி போன்ற இலக்கிய நூல்கள் வெளிவரவும் காரணமாய் இருந்து உழைத்தவர்களில் சு.வேயவர்களும் முக்கியமானவராக திகழ்கின்றார் என தனலக்குமி புத்தகசாலையில் சு.வேயுடனான அனுபவம் பற்றி பேசும் பொழுது கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் குறிப்பிட்டார்.

meeting8ed6.th.jpg

தொடர்ந்து “கதாநிகழ்வாக” அவரது முதலாவது சிறுகதையான “கிடைக்காத பலன்” எனும் சிறுகதையை கவிஞரும், நடிகையுமாகிய திருமதி இராஜ்மீரா இராசையா அவர்களும், வானொலிக் கலைஞரும் மேடை நடிகருமாகிய குரும்பசிட்டி இ.இராசரட்ணம் அவர்களும் உணர்வுடன் வாசிக்க, கலைஞர் தம்பிராஜா விஜயசேகரன் அக் கதாபாத்திரமாக (கார்த்திகேயனாக) தோன்றி பார்வையாளரை அக்கதையின் களத்திற்கு கொண்டு சென்று நெகிழ வைத்தார். தொடர்ந்து சு.வேயின் பெறாமகனாகிய திரு.ம.கிருபாகரனால் பதிலுரை வழங்கப்பட்டது.

-தகவல் :சேகர் தம்பிராஜா

  • கருத்துக்கள உறவுகள்

தகவலிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி பொன்னி

  • தொடங்கியவர்

நன்றி..புத்தன், ஈழபிரான்.

யாழ் களத்தின் அன்பர்களே.. சு.வே பற்றிய, அவரது படைப்புகள் பற்றிய நீங்கள் அறிந்த மேலதிக தகவல்கள் (இருப்பின்) தாருங்கள். அவர் பற்றிய தொகுப்பு வெளியிட விரும்புகிறோம். நன்றி.

:lol:

Edited by Ponniyinselvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.