Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் தொடர் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் தொடர் போராட்டம்

By T. SARANYA

09 SEP, 2022 | 03:52 PM
image

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் மாபெரும் தொடர் போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

நாளை காலை 9 மணிக்கு மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும்  காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய  ஊர்தி வழிப்போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த  வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன், தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், தொழிற்சங்க மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், 1979ஆம் ஆண்டு, 6 மாதங்களுக்கு ஒரு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் அமுலிலுள்ள கொடூரமான பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் பிரச்சார  நடவடிக்கையொன்றினை நாம் ஆரம்பித்துள்ளோம். அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான  அதிருப்தியை நசுக்குவதற்கு இச்சட்டம் பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டோம்.  

இது கடந்த காலங்களில் தொடர்ந்ததைப் போலவே நாளையும் தொடர்கின்றது. குறிப்பாக தற்போது  காலி முகத்திடல் அகிம்சைவழி போராட்டக்காரர்களை கைதுசெய்யவும் இச்சட்டமே  பயன்படுத்தப்படுகின்றது. 

ஆகவே அச்சட்டத்தினை நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோரப்படுவதோடு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை இரத்து செய்வதற்கான மனுவில் கையெழுத்திடுமாறும் வேண்டப்படுகின்றர் என்றுள்ளது.  https://www.virakesari.lk/article/135375

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாசத்துக்கு முன்னம் தானே.... 
சுமந்திரன் நாடு தழுவிய ரீதியில் கையெழுத்து சேகரித்தவர். 
அதுக்கு... என்ன நடந்தது?
ஏன்... இப்ப, இரண்டாம்தரம் சேகரிக்கிறார்.

இவர்களுக்கு... கிறுக்கு பிடித்து விட்டதா?
இவர்கள் கையெழுத்து சேகரித்து கொடுத்தவடன், 
சிங்களம் பயங்கரவாத தடைச்  சட்டத்தை நீக்கி விடும் என்று, 
நம்புகின்ற அளவுக்கு... இவர்கள் முட்டாள்களா?  

சுமந்திரன், தினமும்... பத்திரிகையில்  பெயர் அடிபட வேண்டும் என்பதற்காக,
மக்களை... முட்டாள்  ஆக்கிக் கொண்டு இராமல், 
போய்... உருப்படியான வேலையை பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன், தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், தொழிற்சங்க மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2015 இல் சேர்ந்து அரசமைக்கும் போது பெட்டிகளை வாங்கிவிட்டு பேசாம இருந்துட்டு இப்ப நல்ல பிள்ளைக்கு நடிப்பு.

சிலவேளை உள்ளூராட்சித் தேர்தல் வரப்போகுதென்று இப்பவே வேசம் போடத் தொடங்கியாச்சோ தெரியலை.

3 hours ago, தமிழ் சிறி said:

ஆறு மாசத்துக்கு முன்னம் தானே.... 
சுமந்திரன் நாடு தழுவிய ரீதியில் கையெழுத்து சேகரித்தவர். 
அதுக்கு... என்ன நடந்தது?
ஏன்... இப்ப, இரண்டாம்தரம் சேகரிக்கிறார்.

இவர்களுக்கு... கிறுக்கு பிடித்து விட்டதா?
இவர்கள் கையெழுத்து சேகரித்து கொடுத்தவடன், 
சிங்களம் பயங்கரவாத தடைச்  சட்டத்தை நீக்கி விடும் என்று, 
நம்புகின்ற அளவுக்கு... இவர்கள் முட்டாள்களா?  

சுமந்திரன், தினமும்... பத்திரிகையில்  பெயர் அடிபட வேண்டும் என்பதற்காக,
மக்களை... முட்டாள்  ஆக்கிக் கொண்டு இராமல், 
போய்... உருப்படியான வேலையை பாருங்கோ.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி ஊர்திவழி கையெழுத்து போராட்டம் யாழில் ஆரம்பம்

By VISHNU

10 SEP, 2022 | 03:28 PM
image

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

01__4_.jpg

இன்று(10) காலை 10 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த ஊர்தி வழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் 25 மாவட்டங்களுக்கும் சென்று அம்பாந்தோட்டையை சென்றடையவுள்ளது.

01__5_.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க தலைவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

01__2_.jpg

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், ஆகியோரும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சரவணபவான், சி.வீ.கே.சிவஞானம், இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் கி. சேயோன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

01__3_.jpg

குறித்த ஊர்தி வழிப் போராட்டம் மூலம் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கையெழுத்தை சேகரிக்கவுள்ளதுடன் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/135424

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதுகள் இடம்பெறுவதால் நாம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் - சுமந்திரன்

By VISHNU

11 SEP, 2022 | 08:18 PM
image

அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 10 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போதே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டத்தை நாம் ஆரம்பித்திருந்தோம். இது வடக்கு,கிழக்கு,கொழும்பு,மலையகம் என நாடு முழுவதும் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி உட்பட பல்வேறுபட்ட அரசியல் தலைவர்கள் தொழிற்சங்க தலைவர்கள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் இந்த கையெழுத்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

ஆனாலும் கூட நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கையெழுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டி ஏற்பட்டது. 

வீதியோரங்களில் நாங்கள் இருந்து கையெழுத்துக்களை சேகரித்த போது அங்கு நிற்க முடியாத அளவுக்கு வாகனங்கள் எரிபொருளுக்காக காத்திருந்ததால் நாம் கையெழுத்துப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவில்லை.

நாம் மீண்டும் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதியளித்திருந்தார். 

மேலும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் வரை அதனை உபயோகிக்க மாட்டோம் என இலங்கை அரசாங்கத்தால் ஐநா மனித உரிமை பேரவைக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் நாடாளுமன்றுக்கும் வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனாலும் அந்த வாக்குறுதிக்கு மாறாக அரசாங்கம் மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால் நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை நாட்டின் 25 மாவட்டங்களிலும் முன்னெடுப்போம். விசேடமாக வடக்கு கிழக்கிற்கு வெளியே நாம் இதனை மேற்கொள்ளும் போது மாணவர் அமைப்புகளும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் எம்முடன் இணைந்து செயல்படுவர். உறுதியாக நாம் அம்பாந்தோட்டை மாவட்டத்தை சென்றடைவோம் என்றார். https://www.virakesari.lk/article/135448

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அநுராதபுரத்தில் முன்னெடுப்பு

By VISHNU

19 SEP, 2022 | 10:06 PM
image

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றும் (19)முன்னெடுக்கப்பட்டுள்ளது.

PTA__7_.jpeg

இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

PTA__8_.jpeg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

PTA__6_.jpeg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

PTA__3_.jpeg

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

PTA__5_.jpeg

PTA__2_.jpeg

PTA__1_.jpeg

https://www.virakesari.lk/article/135976

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஊர்த்தி வழி கையெழுத்துப் போராட்டம் புத்தளத்தில் முன்னெடுப்பு

By VISHNU

20 SEP, 2022 | 12:24 PM
image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி ஊர்த்தி வழி கையெழுத்துப் போராட்டமொன்று நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Resize_20220919_180542_2509.jpg

இந்த நிலையில்புத்தளம் தபால் நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து போராட்டம் 19 ஆம் திகதி மாலை முன்னெடுக்கப்பட்டது.


Resize_20220919_180541_1222.jpg

குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சானக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Resize_20220919_180541_1854.jpg

இதன்போது புத்தளம் மாவட்ட அரசியல் தலைமைகளும் குறித்த கையெழுத்து சேகரிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வழு சேர்க்கும் முகமாக கலந்து கொண்டனர்.

Resize_20220919_180540_0453.jpg

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மூவின மத மக்களும் கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கி தத்தமது கையொப்பங்களையிட்டனர்.

Resize_20220919_180535_5067.jpg

Resize_20220919_180537_7007.jpg

https://www.virakesari.lk/article/135998

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் என்னத்துக்கோ அழுகிறான்...இவை 2 பேரும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கேகாலையில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

By VISHNU

21 SEP, 2022 | 01:39 PM
image

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் (21) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

PTA__2_.jpeg

இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கேகாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

PTA__3_.jpeg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

PTA__5_.jpeg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், சர்வமதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

PTA__6_.jpeg

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

PTA__7_.jpeg

இந்தநிலையில் நாளைய தினம் காலி முகத்திடல் பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/136113

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.