கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 6
🐪 பாகம் 06 – துபாய் வர்த்தக வளாகத்தில் மாபெரும் ஒட்டகம் துரத்தல்
கதிரவன் துபாயின் அடிவானத்தில் மெதுவாக மூழ்கிக் கொண்டிருந்த போது, ஒளிரும் உயர்மாடிக் கட்டிடங்கள் பொன்னாக மின்னும் போது, தாத்தா கந்தையா தில்லையும் அவரது மூன்று பேரக்குழந்தைகளும் -திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரின் - உலகப் புகழ்பெற்ற, உலகத்திலேயே பெரிய, துபாய் வர்த்தக வளாகத்தில் ஒரு மாலை சாகசத்திற்காகப் புறப்பட்டனர்.
துபாய் மால் [Dubai Mall], புர்ஜ் கலீஃபாவிற்கு [Burj Khalifa] அடுத்ததாக அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் [வர்த்தக வளாகம்] ஆகும், மேலும் இது உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் கட்டிடங்களில் ஒன்றும் ஆகும். இது 1,200 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள், 120 க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் துபாய் மீன் [நீர்வாழ்] காட்சியகம் [Aquarium] & நீருக்கடியில் மிருகக்காட்சிசாலை, ஒலிம்பிக் அளவிலான பனி வளையம் [Olympic-sized ice rink] மற்றும் ஒரு பல்திரைக் கூடம் /அரங்கம் [மல்டிபிளக்ஸ் சினிமா / multiplex cinema] உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்குகளைக் கொண்டுள்ளது.
துபாய் வீதிகளின் அகலமான வழியாக கார் பயணித்த போது, சிறுவர்கள் ஆச்சரியத்தால் கண்களை விரித்துக் கொண்டு ஜன்னலை நோக்கி முகத்தை அழுத்தினர். கடலுக்கு அருகிலுள்ள தங்க மணற் குன்றுகளின் விளிம்பிற்கு வெளியே, அவர்கள் திடீரென்று ஒட்டக சவாரிகளைக் கண்டனர் - உயரமான விலங்குகள் சுற்றுலாப் பயணிகளை மணலில் சுமந்து செல்லும் போது மெதுவாக அசைந்தன, மாலை வெளிச்சத்தில் அவற்றின் நிழல்கள் நீண்டிருந்தன.
“தாத்தா! பாருங்க! உண்மையான ஒட்டகங்கள்!” என்று உற்சாகமாகக் கூவினான் நிலன். அவன் குரல் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தது.
“அட, நாம் காரை நிறுத்தலாமா!” என்றான் திரேன்
தாத்தா சிரித்தார். “சரி, ஒரு சில நிமிடங்கள் மட்டும். ஆனால் துபாய் வர்த்தக வளாகம் மூடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னவது, தாமதமாகாமல் போகவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ” என்று வேண்டுகோள் விடுத்தார்.
கார் துபாயின் மணல் மேடுகளுக்கு [sand dunes] அருகில் மெதுவாகச் சென்று நின்றது. சிறுவர்கள் வெறுங் காலுடன் மணலில் இறங்கிய போது, சூடான பாலைவனக் காற்று அவர்களின் முகங்களை தொட்டுச் சென்றது. தங்க மணல் மேடுகளின் குறுக்கே சிறிய கால் தடங்களை பதித்து பதித்துக் கொண்டு, அவர்கள் ஒருவரை யொருவர் துரத்தும் போது, புன்னகைகள் வெப்பக் காற்றை குளிராக நிரப்பியது. ஒட்டகங்கள் சில சோம்பேறித்தனமாக அவர்களின் அருகில் மெல்ல மெல்ல நடந்தன. அப்பொழுது அவற்றின் கழுத்தில் கட்டிய மணிகள் காற்றில் மெதுவாக ஒலித்தன.
அவர்கள் சில புகைப்படங்களை எடுத்தனர் - நிலன் ஒரு கற்பனை ஒட்டகத்தை சவாரி செய்வது போல் பாசாங்கு செய்தான். திரேன் தனது கைகளை கடிவாளங்களைப் போல நீட்டினான். மற்றும் குட்டி ஆரின், மணலில் விழுந்து உருண்டான். காற்று தனது கால் விரல்களுக்கு இடையில் மணலைச் சுமந்து செல்லும் போது மகிழ்ச்சியுடன் எழும்பி துள்ளிக் கத்தினான்.
ஒரு சில நேர மகிழ்வான பொழுது போக்கும் மற்றும் வேடிக்கைக்கும் பிறகு, தாத்தா கைகளைத் தட்டினார். "சரி பசங்களா, கிளம்ப வேண்டிய நேரம் இது. ஒட்டகங்களும் தூங்க வேண்டும்!" என்றார்.
குழந்தைகள் மணலைத் தம் கால்களில் இருந்து தட்டி விட்டு மீண்டும் காரில் மகிழ்வாக ஏறினர். துபாய் மால் நோக்கிப் பயணம் தொடர்ந்த போது, வானம் மஞ்சளிலிருந்து ஊதா நிறமாக மாறியது; தூரத்தில் துபாய் நகர விளக்குகள் ஒளிரத் தொடங்கின. ஆனால் தாத்தா, அந்த கால இடைவெளியை, ஒட்டக சவாரி வரலாற்றை [Camel Riding History], பேரன்களுக்கு விளக்குதலில் ஈடுபட்டார்.
கார் துபாய் மால் நோக்கிச் செல்லும் போது, நிலன் இன்னும் ஒட்டக சவாரி பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
“தாத்தா, பாலைவனத்தில் ஏன் கார்களில் பயணம் செய்யாமல், ஒட்டகத்தில் சவாரி செய்கிறார்கள்?” என்று அவன் கேட்டான்.
கண்ணாடியில் மறைந்து போகும் தங்க மணல் மேடுகளை உற்றுப் பார்த்துக் கொண்டு “ஆ, என் அன்பான பையன்களே,” என்று அவர் தொடங்கினார். “ஒட்டகம் சவாரி செய்வதற்கு மட்டும் ஒரு விலங்கு அல்ல - அது பாலைவன வரலாற்றின் ஒரு பகுதி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கார்கள் அல்லது சாலைகள் இருப்பதற்கு முன்பு, பாலைவனப் பகுதிகளில் கால்நடைகள் மேய்க்கும் நாடோடிப் பழங்குடியான பெடோயின் [Bedouins] என்று அழைக்கப்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து பயணம் செய்தனர். வெப்பமான, முடிவற்ற மணல் வழியாக தங்களை வழிநடத்த அப்பொழுதே ஒட்டகத்தை அவர்கள் நம்பினர்.” என்று தாத்தா மெதுவாகச் சிரித்தபடி சொன்னார்.
அவர் தொடர்ந்தார், “ஒட்டகம் மிகவும் சிறப்பு வாய்ந்த உயிரினம். அது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் நடக்க முடியும், அதிக சுமைகளைச் சுமந்து செல்ல முடியும், அத்துடன் மிகவும் மெதுவாக நகரவும் முடியும். அதனால்தான் மக்கள் அதை பாலைவனக் கப்பல் என்று அழைத்தனர். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் ஒட்டகங்களை அடக்கக் கற்றுக் கொண்டபோது, எல்லாம் மாறியது. ஒரு காலத்தில் மக்களைப் பிரித்து வைத்திருந்த பெரிய பாலைவனங்கள், பயணம் மற்றும் வர்த்தகத்திற்கான பாதைகளாக மாறின. ஒட்டகங்கள் உலகை இணைக்க உதவியது என்று நீங்கள் கூறலாம்.” என்றார்.
திரேன் கண்களை விரித்து கேட்டான். “அப்போ இன்னைக்கு நாம ஒட்டகத்துல சவாரி பண்ணப்போ, அது ஒரு வரலாற்றுச் சவாரி மாதிரி இருந்துச்சு என்று சொல்லலாமா?”
தாத்தா, திரேனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகநானூற்றில் மருதன் இளநாகனார் பாடிய பாடலைப் பாடினார்.
“குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்
கல்நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம்மா அரிவை ஒழிய"
[அகம்.245]
திரேன் இதன் கருத்து என்னவென்று கேட்டான்.
பாறையில் உதிர்ந்து கிடக்கும் இலவ மலர்கள் காய்ந்து எலும்புகள் போலக் காட்சி தரும். அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் என்று இது பொருள்படுகிறது என்று கூறிய அவர், ஒட்டகம் ஒரு சைவ பிராணி என்று எடுத்துக் கூறினார்.
பின் தாத்தா பேரப்பிள்ளைகளை பார்த்து பெருமையாச் சிரித்தார். “சரியாகச் சொன்னாய், 'அது ஒரு வரலாற்றுச் சவாரி மாதிரி இருந்துச்சு!' என்று. “நீங்கள் உணர்ந்த ஒவ்வொரு மெதுவான அசைவும் கூட — காலத்தின் வழியே எடுத்த ஒரு அடியாயிருக்கும். ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் நேசித்த, வாழ்ந்த அனுபவத்தை நீங்கள் இன்று உணர்ந்திருக்கிறீர்கள்.” என்றார். தாத்தாவின் வாய், தனக்குள் முணுமுணுத்தது.
'ஒவ் வொரு ஒட்டக அசைவும்
ஒரு ஆயிரமாண்டின் மூச்சாய் ஒலிக்கிறது!
இன்றைய உன் அனுபவமும் சிரிப்பும்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கனவுகள்!'
காருக்குள், சிறுவர்கள் ஒட்டகங்களைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள் - அவற்றின் நீண்ட கண் இமைகள், பெரிய கால்கள் மற்றும் வேடிக்கையான நடைகள் [Walking] பற்றி.
“அதனால்த் தான் அது பாலைவனத்தின் கப்பல்,” என்றார் தாத்தா புன்னகையுடன். “அது அமைதியாகவும், பொறுமையுடனும், வலிமையுடனும் இருக்கும் — நாமும் அப்படித்தான் இருக்கணும்." என்று புத்திமதியும் கூறினார்.
விரைவில் அவர்கள் துபாய் மாலின் பிரமாண்டமான நுழைவாயிலை அடைந்தனர், கண்ணாடி ஒளியில் மின்னும் அந்த மால் [Mall] ஒரு கனவு உலகம் போல இருந்தது. அவர்கள் உள்ளே நுழைந்தவுடன், அவர்கள் வண்ணங்கள், ஒலிகள் மற்றும் வாசனைகளின் சுழலால் சூழப்பட்டனர். காற்று குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் இருந்தது. அத்துடன் வனிலா, கேரமல் பாப்கார்ன் மற்றும் புதிய காபியின் [vanilla, caramel popcorn, and fresh coffee] நறுமணத்தால் அது நிரம்பியிருந்தது. அங்கே பிரம்மாண்டமான திரைகள் மின்னி மின்னி ஆட்டம் போடும் விளக்குகளால் [dancing lights] ஒளிர்ந்தன; நீரூற்றுகள் இசைத்தன. காற்றில் தண்ணீரை மேலே தெளித்தன; மென்மையான அரபு இசை தென்றல் போல மிதந்தது.
ஆனால் அவர்கள் மாலை அங்கு உலாவி தேடுதல் செய்யும் போதும், அவர்களின் எண்ணங்கள் இன்னும் அவர்கள் பார்த்த ஒட்டகங்களைப் பற்றியே இருந்தன. அவர்கள் வளாகத்தின் முற்றத்திற்குள் [atrium] - நேர்த்தியான, தங்க நிற மற்றும் யதார்த்தமான உயிருள்ள அளவிலான ஒட்டக சிலைகளைக் கண்டபோது, அவர்களின் கற்பனை மீண்டும் ஒரு முறை தீப்பிடித்தது.
“பாருங்க, தாத்தா! மறுபடியும் ஒட்டகங்கள்!” என்று தாத்தாவின் சட்டையை இழுத்துக் கொண்டு கத்தினான் குட்டி ஆரின்.
“ஒருவேளை அவங்க பாலைவனத்துல இருந்து ஷாப்பிங் [shopping] பண்ண இங்கு ஓடி வந்திருக்கலாம்!” திரேன் கேலி செய்தான்.
“அல்லது அவங்க சோளப்பொரியைத் [popcorn] தேடிட்டு இங்கு வந்திருக்கலாம்!” என்று சிரித்தான் நிலன்.
தாத்தா பதில் சொல்வதற்குள், சிறுவர்கள் கூட்டத்தின் ஊடே உற்சாகமாக ஓடினர். அவர்களுக்கு, அங்கிருந்த ஒட்டக சிலைகள் உயிர் பெற்றன! அவர்கள் ஒட்டக பந்தயம் ஓடுவது போல் பாசாங்கு செய்து சுற்றி சுற்றி ஓடி, அவைகளுக்கு உணவளிப்பது போல் நடித்தனர். திரேன், நிலன், ஆரினின் சிரிப்பு மால் [mall] முழுவதும் எதிரொலித்தது.
"ஏய், குழந்தைகளே, கொஞ்சம் எனக்காக காத்திருங்கள், ஒட்டகங்களை விட வேகமா ஓடாதீங்க, ஒட்டகம் மெதுவாகத்தான் ஓடும்!" என்று தாத்தா பாதி மூச்சுத் திணறி, பாதி சிரித்தார்.
தாத்தா துரத்தி துரத்தி பேரன்களுக்கு பின்னால் ஓடுவதை கடைக்காரர்கள் திரும்பிப் பார்த்தார்கள் - என்றாலும் நீரூற்றுகள் மற்றும் கண்ணாடிச் சுவர்களுக்கு [fountains and glass walls] மத்தியில் தனது துடிப்பான பேரக்குழந்தைகளைத் துரத்தும் அன்பான முதியவரைப் பார்த்து மகிழ்ந்தனர்.
கண்ணுக்குத் தெரியாத ஒட்டகத்திலிருந்து விழுவது போல் நடித்து நிலன் தடுமாறி விழுந்தபோது, திரேன் ஒரு பாலைவன வீரனைப் போல அவனை "மீட்க" விரைந்த போது "ஒட்டகத் துரத்தல்" இன்னும் வியத்தகு முறையில் வளர்ந்தது. சிறியவனான ஆரின் கைதட்டி, "ஓடு, ஓடு, ஒட்டகங்கள் வருகின்றன!" என்று கத்தினான்.
மால் பாதுகாப்புக் காவலர் கூட சிரித்துக் கொண்டே, “பிரச்சனை இல்லை சார் — சிறார்கள்தான்!” என்றார்.
நீண்ட, மகிழ்ச்சியான ஓட்டத்திற்குப் பிறகு, தாத்தா இறுதியாக மூன்று சிறுவர்களையும் நீரூற்றுக்கு அருகில் கூட்டிச் சென்றார். அவர்கள் அங்கு பளிங்கு விளிம்பில் அமர்ந்து, மூச்சுவாங்கி மூச்சுவாங்கி, சிரித்தனர். அவர்களுக்கு முன் தண்ணீர் நடனமாடி, வெள்ளி நூல்கள் போல விளக்குகளின் கீழ் மின்னியது.
தாத்தா சிரித்தார், அவரது கண்கள் அன்பால் சூழ்ந்து இருந்தது. “பார்த்தீர்களா, என் பிள்ளைகளே, சில நேரங்களில் சிறந்த சாகசங்கள் நம் கற்பனையால் நாம் உருவாக்கும் சாகசங்கள்தான். இன்று நாம் ஒட்டகங்களை சவாரி செய்யவில்லை - ஆனால் நாம் இன்னும் ஒரு சிறந்த ஒட்டகத் துரத்தலைக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன், இல்லையா?” என்று கேட்டார்
“ஆமாம், தாத்தா!” என்று அவர்கள் ஒன்றாகக் குரல் கொடுத்தனர் [chorused]. “எப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்தது!” என்று.
அவர்கள் ஐஸ்கிரீமைப் [ice cream] பகிர்ந்து கொண்டு இசை நீரூற்று நிகழ்ச்சி [musical fountain show] தொடங்குவதைப் பார்த்த போது, ஒருவேளை பாலைவனக் காற்றைப் போல குழந்தைப் பருவக் கனவுகள் ஒருபோதும் ஓடுவதை நிறுத்தாது என்று தாத்தா தனக்குள் நினைத்துக் கொண்டார்.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பாகம்: 07 தொடரும்
துளி/DROP: 2003 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 6
https://www.facebook.com/groups/978753388866632/posts/33359504587031426/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.