Jump to content

ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படப்போவது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படப்போவது எப்படி?

  • டேவிட் பிரௌன்
  • பிபிசி நியூஸ் விஷுவல் ஜர்னலிசம் குழு
7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஷி ஜின்பிங்

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு அக்டோபர் 16ஆம் தேதி பெய்ஜிங்கில் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கட்சியில் இரண்டு முறை மட்டுமே பொதுச் செயலாளராக இருக்க முடியும் என்ற விதி கடந்த 2018ஆம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவர் பொதுச் செயலாளர் ஆவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இது சீனா மீதான அவரது பிடியை மேலும் இறுக்கும்.

அதோடு 69 வயதான ஷி ஜின்பிங் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது.

அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கவுள்ள அந்த மாநாடு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்களில் ஒன்றாகும்.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

ஷி ஜின்பிங் தற்போது வகிக்கும் பதவிகள்

  • பொதுச் செயலாளர் என்ற முறையில் அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக உள்ளார்.
  • அதிபர் என்ற முறையில் அவர் சீனாவின் தலைவர்.
  • சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக அவர் நாட்டின் ஆயுதப் படைகளுக்கு தலைமை தாங்குகிறார்.

அவர் சீனாவின் உயர்ந்த தலைவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

சீனாவின் தலைமைத்துவம்

 

சீனாவின் தலைமைத்துவம்

இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங், தன்னுடைய பொதுச் செயலாளர் மற்றும் மத்திய ராணுவ ஆணையத் தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இந்த மாநாடானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அடுத்த ஆண்டின் வசந்த காலத்தில் நடைபெறும் வருடாந்திர தேசிய மக்கள் கூட்டத்தில் அதிபர் பதவியை அவர் தக்கவைத்துக் கொள்ளலாம்.

இந்த மாநாட்டில் என்ன நடக்கும்?

சுமார் 2,300 பிரதிநிதிகள் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மண்டபத்தில் ஒரு வாரத்திற்கு கூடுவார்கள்.

அவர்களில் சுமார் 200 பேர் கட்சியின் மத்தியக் குழுவில் இணைவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் 170 பேர் வரை மாற்று உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்சியின் முதன்மை கொள்கைக் குழுவான பொலிட் பீரோவிற்கு 25 பேரை மத்திய குழு தேர்வு செய்யும். பொலிட் பீரோ நிலைக்குழு உறுப்பினர்களை நியமிக்கும்.

மிகப்பெரும் தலைவர்களே நிலைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் உட்பட 7 பேர் தற்போது அந்தப் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள்.

 

சீனா முக்கிய தலைமைகள்

அனைத்து நடவடிக்கைகளும் இந்த மாநாட்டில் எடுக்கப்படுவதில்லை. பிரதான மாநாடு முடிந்த மறுநாள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது?

மூன்றாவது முறையாக அதிகாரம் வழங்கப்பட்டதும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் மற்றும் மிகப்பெரிய ராணுவப் படைகளுக்கு ஷி ஜின்பிங் தன்னுடைய தலைமையைத் தொடர்வார்.

தன்னுடைய மூன்றாவது ஐந்தாண்டு காலத்தில் அவர் சீனாவை இன்னும் எதேச்சதிகார அரசியல் நிலைப்பாட்டை நோக்கி தள்ளக்கூடும் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஷி ஜின்பிங் தலைமையில் சீனா சர்வாதிகார திசையில் நகர்வதாகக் கூறுகிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்க ஆய்வுப் பள்ளியின் பேராசிரியர் ஸ்டீவ் சாங்.

"மாவோ தலைமையிலான சீனா ஒரு சர்வாதிகார அமைப்பாக இருந்தது. நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. ஆனால், அந்தத் திசையை நோக்கிச் செல்கிறோம்" என்றும் அவர் கூறுகிறார்.

"ஷி ஜின்பிங்கின் சிந்தனை, கட்சியின் வழிகாட்டும் தத்துவமாக மேலும் பொறிக்கப்படுவதன் மூலம் கட்சியின் அமைப்பு சார்ந்த மாற்றங்களைக் காண முடியும்" என்கிறார் பேராசிரியர் ஸ்டீவ் சாங்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

ஷி ஜின்பிங் சிந்தனை என்பது சீன சோசலிசத்தின் தனி அடையாளம். இது தனியார் வணிகத்தில் நம்பிக்கையற்ற உறுதியான தேசியவாதத் தத்துவம். அவரது தலைமையின் கீழ் சீன அதிகாரிகள் பொருளாதாரத்தின் பல துறைகளில் உள்ள சக்திவாய்ந்த நிறுவனங்களை ஒடுக்கியுள்ளனர்.

"ஷி ஜின்பிங்கிற்கு மீண்டும் அதிகாரம் கையளிக்கப்பட்டால், அவர்கள் திறம்பட அவரை சர்வாதிகாரியாக மாற்றுவார்கள்" என்கிறார் பேராசிரியர் சாங்.

மாநாட்டில் அமைக்கப்படும் சீனாவின் உயர்மட்ட தலைமைக் குழு, பெரிய அளவிலான கொள்கைகளை உருவாக்கும்.

பொருளாதாரம், அரசியல், ராஜதந்திர நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் சீனாவின் எதிர்கால நகர்வுகள் தொடர்பான எந்தக் குறிப்பும் உலகம் முழுவதும் கவனிக்கப்படும்.

பொருளாதார சவால்கள்

சமீபத்திய தசாப்தங்களில் சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டிருந்தாலும், கொரொனா பொதுமுடக்கம், விலைவாசி அதிகரிப்பு மற்றும் சொத்து நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக தற்போது கடும் நெருக்கடிகளை சீனா எதிர்கொள்கிறது.

யுக்ரேன் போரினால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை பற்றிய வளர்ந்து வரும் அச்சங்களும் சீனாவின் நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளன.

சீன தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் மற்றும் நல்ல வேலைகளை வழங்குவதில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் சட்டப்பூர்வமான தன்மையில் தேக்கம் இருப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் மோசமான பொருளாதார செயல்திறன் ஷி ஜின்பிங்குக்கு கடும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தலாம்.

 

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி

கொரோனா ஒழிப்பு

சீனாவின் பூஜ்ஜிய கொரோனா அணுகுமுறை ஷி ஜின்பிங்கின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.

உலகின் பெரும்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், சீன அதிகாரிகள் கடுமையான முடக்கம், சோதனைகள் மற்றும் நீண்ட தனிமைப்படுத்தல்களுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய வாரங்களில் ஷென்சென் மற்றும் செங்டு உட்பட 70க்கும் மேற்பட்ட நகரங்கள் முழு அல்லது பகுதியளவு முடக்க நடவடிக்கைகளின் கீழ் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பெரும் எண்ணிக்கையிலான வணிகங்கள் சீர்குலைந்துள்ளன.

தனது கொரோனா கொள்கையைச் சிதைக்கும், சந்தேகிக்கும் அல்லது மறுக்கும் எந்தவொரு வார்த்தை மற்றும் செயல்களுக்கு எதிராக உறுதியுடன் போராடுவேன் என ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.

 

சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த மாநாட்டின்போது, ஷி ஜின்பிங்குடைய திறமையின் பிம்பத்தை சேதப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் அபாயம் உள்ளது.

தொற்றுநோய்க்கு எதிரான வெற்றியை அறிவிக்கவும் பூஜ்ஜிய கொரோனா கொள்கையை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்த மாநாட்டை கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தக்கூடும் என்று சில பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மாறாக, மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் பொருளாதாரத்தைவிட மக்களின் உயிருக்கு சீனா மதிப்பளிக்கிறது. இந்தக் கொள்கை தொடரும் என்றும் கட்சி கூறலாம்.

தைவான் மற்றும் மேற்கு நாடுகள்

மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளில், குறிப்பாக தைவான் விவகாரத்தில் கடுமையான அணுகுமுறையை ஷி ஜின்பிங் கடைபிடிக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் தைவானுக்கு சுற்றுப்பயணம் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீவைச் சுற்றி ஏவுகணை ஏவுதலை உள்ளடக்கிய ராணுவப் பயிற்சிகளை சீனா மேற்கொண்டது.

தைவானை பெய்ஜிங்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பிரிந்து சென்ற மாகாணமாக சீனா பார்க்கிறது. ஆனால், தைவான் தன்னை தனிநாடாகக் கருதுகிறது.

 

அண்டை நாடுகளோடு சீனாவும் தைவானும்

சீன மக்கள் குடியரசின் நூற்றாண்டு விழா 2049ஆம் ஆண்டில் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அதற்குள் தைவானுடனான மறு ஒருங்கிணைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.

சீனா தைவானை கைப்பற்றினால் மேற்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் அமெரிக்காவின் பலம் குறையும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

'முதல் தீவு சங்கிலி' என அறியப்படும் தொகுப்பில் ஒரு பகுதியாக இருக்கும் தைவான், மேற்குலக நாடுகளின் வியூக வகுப்பில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. பல தசாபதங்களாக அமெரிக்காவுடன் இணைந்துள்ள பல பகுதிகளும் இதன் ஒருபகுதியாக உள்ளன.

https://www.bbc.com/tamil/global-63252768

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.