Jump to content

இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்

By T. SARANYA

21 OCT, 2022 | 11:56 AM
image

இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இன்று (21) காலை 88 ஆவது வயதில் காலமானார்.

இன்றுவரை எழுத்துத்துறையில் தனக்கென தனித்துவம் கொண்டிருந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இலங்கை அரசாங்கத்தினால் 'சாகித்திய ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

311857909_3428688090696340_7306201974154

இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். 

அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/138124

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்தும் மறவா எழுத்தாளுமை தெளிவத்தை ஜோசப்

By Nanthini

21 Oct, 2022 | 09:18 PM
image

(மா. உஷாநந்தினி)

லைசிறந்த இலக்கியப் பொதுவுடமை ஆளுமையாக, முற்போக்குவாதியாக மின்னிய தெளிவத்தை ஜோசப் அவர்களின் பேனைகளை பிடித்தே பழகிப்போன கரங்கள், பிடி தளர்ந்து, அவர் தனது எழுத்துப்பணிக்கு ஓய்வு கொடுத்த நாள் இன்று. 

சாகித்திய ரத்னா எனும் வாழ்நாள் கெளரவப் புகழை தாங்கிய இவர், 60களில் எழுதத் தொடங்கி சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக மாறுபட்ட பல சமூகங்களின் எல்லைகளை தொட்டுவந்தவர். 

குறிப்பாக, தான் பிறந்து, வாழ்ந்த மலையகத்தினதும், அந்த மக்களின் வாழ்நிலைகளையும் சற்றே அதிகமாக உரிமையோடு பேசியும் எழுதியும் வந்ததால், பலர் இவரை மலையக எழுத்தாளராக கொண்டாடிய போதும், ஈழத்து இலக்கியப் படைப்பாளி என்ற பெரும் வட்டத்துக்குள் வியாபித்து நிலைபெற்று விளங்கினார், தெளிவத்தை ஜோசப்.

Joseph.bmp.jpg

தெளிவத்தை ஜோசப்...

பதுளை மாவட்டம், ஹாலி எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934 பெப்ரவரி 16 அன்று பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சந்தனசாமி ஜோசப். 

தமிழகத்தின் கும்பகோணம் லிட்டில் ஃப்ளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 வருடங்கள் படித்துவிட்டு, இலங்கை திரும்பிய ஜோசப் பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார். 

பள்ளிக் கல்வியை நிறைவு செய்த பின்னர், தெளிவத்தை எனும் தோட்டப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். அதனாலேயே இவரது பெயர்  'தெளிவத்தை ஜோசப்' என்றானது. 

ஆசிரியப் பணிக்கு மத்தியில் கணக்கியலும் கற்றார். தொடர்ந்து மலையகத்தை விட்டு வெளியேறி, கொழும்புக்கு வந்தார். கொழும்பில் இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இணைந்து வேலை செய்த போதும், இவருக்கும் மலையகத்துக்குமான நெருக்கம் விலகவில்லை. 

மலையக இயற்கை வளம், சுற்றுச்சூழல், லயத்து வாழ் உறவுகள், அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் விதம் பற்றிய சிந்தனை அவருக்கு ஏதோ ஒரு கடமையை உணர்த்தியபடி இருந்திருக்க வேண்டும். அந்த கடனை, மனக்கிடக்கை எழுத்தை கொண்டு நிறைவேற்ற துணிந்தார்.

2021-03-18_wxnhAmtumSvUi0Y4ZAdVfh87WPxVV

Naamirukkum_naade.jpg

1960இல் எழுத ஆரம்பித்தார். இவர் எழுதிய  சிறுகதையொன்று தமிழ்நாட்டில் அப்போது ஜி. உமாபதிக்கு சொந்தமான 'உமா' இதழில் பிரசுரமானது. 

தொடர்ந்து தெளிவத்தை ஜோசப் எழுதி வந்த பல சிறுகதைகள், ஆக்கங்கள் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியாகின. 

முதல் முதலாக அவர் எழுதிய 'காலங்கள் சாவதில்லை' நாவல் நூலுருவானது 1974இல் ஆகும். அந்த நாவலை வீரகேசரி பிரசுரம் வெளியிட்டமை அவரது இலக்கியப் பயணத்தின் மறக்க முடியாத நிகழ்வானது. 

பின்னர், வைகறை வெளியீட்டினூடாக 1979இல் 'நாமிருக்கும் நாடே' சிறுகதை தொகுப்பு உதயமானது. 

தொடர்ந்து 1997இல் 'பாலாயி' (மூன்று குறுநாவல்களின் தொகுப்பு), 2000இல் 'மலையக சிறுகதை வரலாறு', 'இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்', 2010இல் 'குடை நிழல்' (புதினம்) ஆகிய நூல்களை வெளியிட்டார்.  

60க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கதையும் இவரது எழுத்தாற்றலுக்கும் இவர் சந்தித்துவந்த துளித்துளி சம்பவங்களுக்கும் சான்றாகிறது. 

குறிப்பாக, இவரது 'மீன்கள்' கதை லயத்து வாழ் மக்களுக்கான கதையாகி, வாசிக்கும் நம்மையும் லயத்து வாசலில் நிறுத்துகிறது.  

'நாமிருக்கும் நாடே' சிறுகதைத் தொகுப்புக்காக இவர் இலங்கை சாகித்திய விருதினை பெற்றதோடு, இவரது 'குடை நிழல்' நூல் 2010இல் யாழ்ப்பாண இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கிய பேரவையின் விருதை பெற்றுக்கொண்டது. 

தவிர, இவர் 2013இல் எழுத்தாளர் ஜெயமோகன் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும், 2014இல் இலக்கியத்துக்கான உயர் விருதாக கருதப்படும் சாகித்திய ரத்னா விருதையும் பெற்றார். 

20911070.jpg

மேலும், தனது இலக்கிய தேடலுக்காக இந்தியா,  இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல நாடுகளுக்கும் சென்று, பல்வேறு அமைப்புகளின் மூலம் பாராட்டுகளை பெற்றுள்ளார்.  

குறிப்பாக, 2003இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தமிழினி மகாநாட்டிலும் கலந்துகொண்டிருந்தார்.

சிறுகதை, விமர்சனம், நாவல், பத்தி எழுத்துக்கள், ஆய்வுத் தொடர்கள், ‍தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடக எழுத்தாக்கத்தோடு பயணித்தது மட்டுமன்றி, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதிலும் தனது பங்களிப்பினை வழங்கினார்.   

முக்கியமாக, மலையக தோட்டப்புற அவலத்தை காட்டும் விதமாக 1975ஆம் ஆண்டு 'புதிய காற்று' என்றொரு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் தெளிவத்தை ஜோசப் அவர்களே. 

மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக மலையக இலக்கியத்துறை வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. 

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்தேறிய குடியினரின் வழிவந்து, தோட்டத்து வாழ்க்கையின் கசந்துபோன பக்கங்களை கண்ணெதிரிலேயே கண்டு, பொறுக்க மாட்டாமல் எழுதி எழுதியே தன் மனக்காயங்களை ஆற்றிக்கொண்ட இந்த மலையக மைந்தனின் பெயரை இனி அவரது எழுத்துக்கள் உச்சரிக்கும், சுவாசிப்போமாக!

312394110_399686869023473_40443069952315

312004798_1089371128443696_1552148883566

312277284_3572088193037666_8131675908201

 

https://www.virakesari.lk/article/138159

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் வாழும் வரை தெளிவத்தை ஜோசப்பின் தமிழ்த்தொண்டும் வாழும்"

By NANTHINI

21 OCT, 2022 | 07:40 PM
image

 

லங்கையின் ஜனரஞ்சக எழுத்தாளரும்  முற்போக்குச் சிந்தனையாளருமான 'சாஹித்ய ரத்னா' தெளிவத்தை ஜோசப் அவர்கள் இன்று (ஒக் 21) தனது 88ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். 

இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர்.

'காலங்கள் சாவதில்லை' என்ற இவரது முதலாவது நாவல் வாசகர்களிடையே மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, முக்கியமான நாவலாக கருதப்படுகிறது. 

பல மேடைகளில் நானும் ஜோசப் அவர்களும் சந்தித்துள்ளோம். தமிழ்ப் புலமை உள்ளவர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே. 

ஈழத்து படைப்பாளிகளின் முன்னோடியாக திகழ்ந்த ஜோசப் அவர்களின் இழப்பு இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும். 

எழுத்து, பத்திரிகைத்துறை, வானொலி என தான் கற்றறிந்த தமிழை ஆழமாக பதித்த மலையக படைப்பாளி ஜோசப் அவர்கள். குறிப்பாக, மலையக மக்களின் வாழ்வாதாரத்தை தன் தூய தமிழில் எளிய நடையில் அகிலத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய படைப்பாளிகளில், மலையகத்தில் முன்னிலை வகித்த பெருமைக்குரியவர்.

இவரின் சில நூல்களை வாசிக்கும் போது, கதாபாத்திரங்கள் நம்முடன் பேசுவது போலிருக்கும். மலையகத்தின் அழகினை ஆழ்ந்த உவமானங்களுடன் இவர் எழுதும்போது இயற்கை நம்மிடம் உறவாடும்.

இலங்கை மண்ணகம் நல்லதொரு படைப்பாளியை பறிகொடுத்துவிட்டது. 

எழுத்துலக அன்பர்கள் சார்பாக ஈழத்தின் பெரும் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவுக்கு எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக செலுத்துகின்றோம். 

"தமிழ் வாழும் வரை ஜோசப் அவர்களின் தமிழ்த்தொண்டும் வாழும்" 

கம்பளை மக்கள் அனைவரும் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். 

- எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை.

https://www.virakesari.lk/article/138167

Link to comment
Share on other sites

ஒரு முறை நான் இவரை சந்தித்த பொழுது, எஸ்.பொ எழுதிய ' சடங்கு' நாவல் பற்றி பேச்சு எழுந்தது. அந்த நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை என்று கூறியதைக் கேட்டவர், அடுத்த நாளே அதைக் கொண்டு வந்து தந்து விட்டுப் போனார். அப்போது என் வயது இருபது இருக்கும், அவரோ ஊர் அறிந்த எழுத்தாளர். ஆனாலும் எந்த பாரபட்சமும் இன்றி பழகும் மனம் படைத்தவர்.

கண்ணீர் அஞ்சலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'தெளிவத்தை' ஜோசப் - ஒரு விடிவெள்ளி மறைந்தது !

By NANTHINI

22 OCT, 2022 | 07:28 PM
image

(குமார் சுகுணா)

லையக இலக்கியத்துறையில் அறுபதுகள் என்பது மிக முக்கியமான காலகட்டம். அதுவரை காலமும் இந்திய எழுத்துத்துறையே மலையகத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்திவந்த நிலையில் மலையகம் என்ற மண் சார்ந்த படைப்புகளையும், உலகம் திரும்பி பார்க்காத மக்களின் துயரங்களையும் தங்களது எழுத்துக்கள் மூலம் பல இளைஞர்கள்  உலகுக்கு வெளிக்கொண்டு வந்தனர். அவர்களின்  சுய படைப்புகள் அனைத்தும் மலையக இலக்கியத்துறைக்கு விடிவெள்ளிகளாக புது வெளிச்சங்களை பாய்ச்சின என்றே கூற வேண்டும்.

அந்த வகையில் பதுளை மாவட்டத்தில் இருந்து மலையகத்துக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த ஈழத்து இலக்கியத்துறைக்கும் கிடைத்த பொக்கிஷம் என்றால், அவர் தெளிவத்தை ஜோசப் தான். 

இவர் தனது இறுதி மூச்சு வரை இலக்கியப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

ஆம், இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாஹித்ய ரத்னா 'தெளிவத்தை' ஜோசப் தனது 88ஆவது வயதில் ஒக்டோபர் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.

_________-_____.jpg

மலையகத்தின் மாபெரும் இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான இவர், 1934ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி, பதுளை மாவட்டத்தின் ஊவா கட்டவளை எனும் தோட்டத்தில் ஆசிரியராக பணியாற்றிய  சந்தனசாமிக்கும் பரிபூரணம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.  

மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி என கத்தோலிக்க குடும்ப சூழலில் வளர்ந்த இறை நம்பிக்கை கொண்ட ஜோசப் தன் தந்தையையே குருவாகக்கொண்டு ஊவா கட்டவளை தோட்டத்துப் பள்ளியில் தொடக்கக் கல்வியை ஆரம்பித்தார். இரண்டாம் நிலை கல்விக்காக பதுளை செல்லவேண்டிய நிலையில் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் தனது தந்தை பிறந்த இடமான தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் தனது உயர்கல்வியை தொடர சென்றார்.

மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் ஃப்ளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு, மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியை தொடர்ந்தார்.

சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக கடமையாற்றியதன் காரணமாக தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக்கொண்டார்.

அறுபதுகளில் எழுதத் தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். 

அறுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த 'உமா' எனும் சஞ்சிகைக்கு அவர் எழுதிய ‘வாழைப்பழத் தோல்’ எனும் சிறுகதையே அவரது முதல் சிறுகதையாக பதிவாகிறது. 

அதனை தொடர்ந்து இலங்கையின் முன்னணி தேசிய தமிழ் பத்திரிகையான வீரகேசரி, மலையக எழுத்தாளர் மன்றத்துடன் இணைந்து நடாத்திய மலையக சிறுகதைப் போட்டியில் 1962, 1963 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறுகதைக்கான முதல் பரிசினை பெற்று இலங்கை சிறுகதை படைப்பில் பிரபலமானார்.

312394110_399686869023473_40443069952315

1974ஆம் ஆண்டு வீரகேசரியில் தொடராக வெளிவந்த ‘காலங்கள் சாவதில்லை’ எனும் புதினம் நூலாகவும் வெளிவந்து, இலங்கை சாகித்ய மண்டல பரிசுக்கு பரிந்துரையானதுடன்,  நாவல் இலக்கியத்திலும் தன்னை அடையாளப்படுத்தினார். 

1979ஆம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் முதலாவது சிறுகதை தொகுப்பான ‘நாமிருக்கும் நாடே’ வெளியானதுடன், அந்த ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்ய விருதினையும் வென்றது. சமகாலத்தில் தொழில் நிமித்தமாக பதுளை மாவட்டத்தில் இருந்து வெளியேறி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் குடியேறினார். 

இதன் பின்னர் மலையகம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த மானிடர்க்காகவும், ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் தனது படைப்புகளை விரிவுபடுத்தினார். இனவாதம் தாண்டவமாடிய காலத்தில் அவர் எழுதிய ‘குடை நிழல்’ (புதினம்), ‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’ (புதினம்) போன்றன இதற்கு சான்று.

1989ஆம் ஆண்டு முதல் இறுதி வரை மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக  பணியாற்றியவர்.  

சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் என இறுதி வரை இலக்கியப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர், எழுத்துத்துறைக்கு அப்பால் ஒரு ஆவண சேகரிப்பாளராக பல்வேறு இலக்கிய ஆவணங்களை திரட்டி வைத்திருப்பதுடன்; அவ்வப்போது இலக்கிய தகவல்களை பத்திரிகைகளுக்கு எழுதியும் வந்தார்.  

இலக்கிய உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அயராமல் உழைத்து வந்த தெளிவத்தை ஜோசப்பின் இலக்கிய பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைக்கழகங்கள், இலக்கிய அமைப்புகள், பல விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன. 

2013ஆம் ஆண்டு தமிழகத்தில் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. கொடகே தேசிய சாகித்ய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றுக்கொண்ட இவர் கலாசார அமைச்சின் ‘தேச நேத்ரு’ விருதுக்கும் உரியவரானார்.

தனது இரண்டாவது சிறுகதை தொகுப்புக்காகவும் 2013ஆம் ஆண்டு தேசிய சாகித்திய பரிசு பெற்றவர். மொத்தமாக மூன்று முறை சாகித்திய விருதினை வென்றுள்ளதுடன்,  இலங்கையின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருதினை (2014) வென்ற முதல் மலையகத் தமிழராகவும் தெளிவத்தை ஜோசப் விளங்குகின்றார்.

மேலும், இவர் ஊவா மாகாண சாகித்திய விருது, இந்து கலாசார திணைக்களத்தின் இலக்கிய செம்மல் விருது, கலாபூசண விருது, தேசிய சாகித்திய விருது, பேராதனை பல்கலைக்கழகத் தமிழ் ஒன்றியத்தின் விசேட விருது, கம்பன் கழக விருது, யாழ் இலக்கிய வட்டத்தின் விருது, மட்டக்களப்பு இலக்கிய மன்றத்தின் விருது, மத்திய மாகாண சாகித்திய விருது, மேல் மாகாண சாகித்திய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இலங்கையில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும், தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்ட தெளிவத்தை ஜோசப், தான் எழுதிய 'நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983' எனும் புதினத்துக்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து கரிகாற்சோழன் விருது வழங்கி கௌரவித்தது.

இதுவரை ஆறு நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ள தெளிவத்தை ஜோசப், இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'புதிய காற்று' திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 

மலையக சிறுகதை வரலாறு உள்ளிட்ட ஆய்வுக்கட்டுரைகளையும், ஜேயார், திரேசா, சியாமளா ஆகிய புனைபெயர்களில் இலக்கிய கட்டுரைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

60களில் மலையக இலக்கியத்துறைக்கு கிடைத்த மிக உயரிய பொக்கிஷமான தெளிவத்தை ஜோசப், தனது இறுதி மூச்சு வரை எழுத்துக்காகவே தன்னை அர்பணித்த நிலையில் இறையடி சேர்ந்துள்ளார். 

அவரது இழப்பு மலையக இலக்கியத்துறைக்கு மட்டுமல்ல, இலங்கையின் தமிழ் இலக்கியத்துறைக்கே மிக பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவர் மறைந்தாலும், அவரது படைப்புகள் அழிவில்லா  புகழோடு என்றும் மிளிரும் என்பதில் ஐயமில்லை.

https://www.virakesari.lk/article/138218

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.