Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்படுகொலை இடம்பெறவில்லை - சரணடைந்தவர்கள் காணாமல்போகவில்லை- காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை இடம்பெறவில்லை - சரணடைந்தவர்கள் காணாமல்போகவில்லை- காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர்

By RAJEEBAN

26 OCT, 2022 | 05:56 PM
image

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த    இராணுவத்தினர் 60,000 பொதுமக்களை மீட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

missing_persons.jpg

 

2009 இல் இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்படுவதை இலங்கையின் காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த மறுத்துள்ளார்.

ரொய்ட்டருக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் போதியளவு செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.

சரணடைந்தவர்கள் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அவர் அதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டனர் அல்லது அவர்களிற்கு எதிரான குழுக்களால் கடத்தப்பட்டனர் என காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் குறித்த விசாரணையில்  காணாமல்போனவர்கள் என என அறிவிக்கப்பட்டவர்களில் 50 பேர் வெளிநாடுகளில் வசிப்பது தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள  அவர் இராணுவத்தினர் 60,000 பொதுமக்களை மீட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/138482

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனிதாபிமானத்துக்கு தான் பட்டினி கிடந்து  அல்லலுறுகிறீர்கள். இப்பட்டினி தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் காணாமல் போகவில்லையென்றால் எதற்கு அந்த அலுவலகத்தின் தலைவரானார் இவர்? எதற்கு அவர்களுக்கு இழப்பீடு வழங்க முன்வந்தனர்?

17 hours ago, ஏராளன் said:

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள  அவர் இராணுவத்தினர் 60,000 பொதுமக்களை மீட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

எதற்கு உள்நாட்டில் விசாரிக்கிறோம் என்று அடம்பிடிக்கிறீர்கள்? சர்வதேச விசாரணைக்கு சென்று நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கலாமே?

17 hours ago, ஏராளன் said:

காணாமல்போனவர்கள் குறித்த விசாரணையில்  காணாமல்போனவர்கள் என என அறிவிக்கப்பட்டவர்களில் 50 பேர் வெளிநாடுகளில் வசிப்பது தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட  சிங்களப்பத்திரிகை ஆசிரியர் ஒருவர் பிரான்சில் இருப்பதாக கதைவிட்டு மாடுபட்டவர் ஒருவர், ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். சும்மா இழுத்து விட்டு பிறகு மூடப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை இடம்பெறவில்லை என்ற காணாமல்போனோருக்கான அலுவலக தலைவரின் கருத்து கண்மூடித்தனமானது – சிறீதரன்

By Vishnu

28 Oct, 2022 | 11:16 AM
image

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்றும், காணாமற்போனோர், சரணடைந்தோர் என எவரும் இங்கில்லை என்றும் காணாமல்போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுண்டல கூறியுள்ள கருத்து கண்மூடித்தனமானது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

IMG-20221027-WA0011.jpg

27 ஆம் திகதி,  வியாழக்கிழமை வன்னேரிக்குளம் ஐயனார் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னேரிக்குளம் வட்டாரக்கிளைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

IMG-20221027-WA0008.jpg

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அறவழிப்  போராட்டம் ஒன்றின் எல்லா நியாயங்களையும் அடியோடு ஒதுக்கிவிட்டு, இந்த நாட்டின் சுதேசிய இனமொன்றின் மீது சிங்கள பேரினவாதம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும் நேரடியாக முகம்கொடுத்து, கொடிய போரொன்றின் முழுமையான தாக்கங்களை எதிர்கொண்ட எங்கள் மக்களுக்குத்தான் அந்தப் போரின் வலியும், அது தந்த இழப்புக்களின் வலியும் தெரியும்.

IMG-20221027-WA0007.jpg

குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தவர்களைக்கூட பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்ற எந்தப் பாகுபாடுமற்று பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் கோயில்களில் தஞ்சமடைய வைத்து கொத்துக்குண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகளும் வீசி எங்கள் மக்களை கொத்தாகக் கொன்றொழித்ததை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்லமுடியும்? என்றும் சிறீதரன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். 

இறுதிப்போரின்போது எவரும்  காணாமற்போகவில்லை என்று சொல்லியிருக்கும் ஓ.எம்.பியின் தலைவர், தங்கள் கைகளால் இராணுவத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளை மீட்டுத்தரக்கூறி இன்றைக்கு இரண்டாயிரம் நாட்களைக் கடந்தும், தெருத்தெருவாக நின்று போராடும் தாய்மாருக்கும், அவர்களின் கண்ணீருக்கும் என்ன பதில் சொல்லப்போகிறார் என்றும், தனது அரசதரப்பு விசுவாசத்தைக் காட்டுவதற்காக, ஒடுக்கப்பட்ட இனமொன்றின் உணர்வுகளோடு விளையாடுவதை மகேஷ் கட்டுண்டல போன்ற இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும் இதே பொய்யைத்தான் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் சொல்லியிருந்தன என்பதை இனியாவது சர்வதேச சமூகம் உணரத் தலைப்பட வேண்டும் என்றும் சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/138568

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போனோர் பற்றிய அலுவலக தவிசாளரின் கருத்து கோட்டாவின் கருத்தை ஒத்திருக்கிறது - சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

By T. SARANYA

30 OCT, 2022 | 06:58 AM
image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து கடந்த 2020 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்தை ஒத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, இதுகுறித்துத் தமது கரிசனையையும் வெளிப்படுத்தியுள்ளது.

படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போனமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், காணாமல்போனோரில் பெரும்பான்மையானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் அல்லது அதற்கு எதிரான குழுக்களாலேயே கடத்தப்பட்டார்கள் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்திருப்பதாக ராய்ட்டர் செய்திச்சேவையில் கடந்த வியாழக்கிழமை வெளியான செய்தி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

இறுதிக்கட்டப்போரின்போது தமது உறவினர்களைப் படையினரிடம் கையளித்ததாகவும், அவர்கள் காணாமல்போயிருப்பதாகவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பல வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். 

அதேபோன்று படையினரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னரும் சரணடைந்ததன் பின்னரும் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகக்கட்டமைப்புக்கள் ஆவணப்படுத்தியுள்ளன. அவைகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் அறியவில்லையா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் தாம் கரிசனையடைவதாகத் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி மகேஷ் கட்டுலந்தவின் கருத்து கடந்த 2020 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்தை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான பிரதிபலிப்பாக இலங்கை தமது உள்ளகப்பொறிமுறையை 'விளம்பரப்படுத்திவரும்' வேளையிலேயே இவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/138648

  • கருத்துக்கள உறவுகள்

காணாமற் போனோரின் உறவினர்கள் தமது உறவுகளைத்தேடி பல ஆண்டுகளாக வீதிகளில் போராடி வருகின்றனர், அப்போ இவர் ஏதும் பேசவில்லை, அலி சப்ரி நட்ட ஈடாக ஒரு லட்ஷம் தருகிறோம் என்று சொல்லும்போதும்  பொத்திக்கொண்டு இருந்துவிட்டு, இப்ப என்ன வந்தது இவருக்கு? ஒருவரும் காணாமற் போகவில்லை என்றால்; எதற்கு அதற்கொரு அலுவலகம் திறந்தீர்கள்? தவிசாளர் பதவி ஏற்றீர்கள்? இந்த தவளை தன்வாயால் கெடுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சரணடைந்த 29 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கே ? - வவுனியாவில் போராட்டம்

By VISHNU

30 OCT, 2022 | 04:06 PM
image

K.B.சதீஸ் 

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

IMG20221030102136_01.jpg

குறித்த போராட்டமானது வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) இடம்பெற்றிருந்தது.

IMG20221030101823_01.jpg

கொலையாளி ஜனாதிபதியாய் உள்ள நாட்டில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும் , குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29 ற்கு மேற்பட்ட குழந்தைகள் எங்கே?, யுத்த காலத்தில் மரணித்த இராணுவ உடல்களை பொறுப்பெடுக்க மறுத்த சிங்கள அரசு அவர்களை காணாமல் ஆக்கப்பட்டோர் என அவர்களின் குடும்பத்தையும் ஏமாற்றுகின்றது போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

IMG20221030102105_01.jpg

IMG20221030101401_01.jpg

IMG20221030101508_01.jpg

IMG20221030101627_01.jpg

IMG20221030101329_01.jpg

https://www.virakesari.lk/article/138704

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலர் காணாமல்போயிருப்பதையும் அவர்களது உறவினர்களின் துன்பத்தையும் அறிந்தமையினாலேயே நான் இப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டேன் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் 

By DIGITAL DESK 2

15 NOV, 2022 | 09:03 PM
image

(நா.தனுஜா)

 

பலர் காணாமல்போயிருப்பதையும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கான பதிலை நாடி அவர்களது உறவினர்கள் காத்திருப்பதையும் நான் அறிந்ததன் காரணமாகவே காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கான தவிசாளராக எனது நியமனத்தை ஏற்றுக்கொண்டேன். அவ்வாறிருக்கையில் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் நான் கூறியதாக அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டவையாகவே இருக்கின்றன என்பதுடன் நான் அவற்றை முற்றாக மறுக்கின்றேன் என்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போனமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என்றும், காணாமல்போனோரில் பெரும்பான்மையானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் அல்லது அதற்கு எதிரான குழுக்களாலேயே கடத்தப்பட்டார்கள் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்திருப்பதாகக் கடந்தமாத இறுதியில் ஆங்கில ஊடகமொன்றில் வெளியான செய்தி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்ததுடன் அதுகுறித்துப் பலரும் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் அவ்விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மகேஷ் கட்டுலந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

Untitled-5.jpg

'இந்த நாட்டில் காணாமல்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் எவருமில்லை', 'தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை. மாறாக 2009 ஆம் ஆண்டு வன்செயலின்போது பொதுமக்கள் 60,000 பேரை இராணுவம் மீட்டுள்ளது. அவ்வன்செயலே படுகொலை என்று சாயம் பூசப்பட்டுள்ளது', 'சரணடைந்தவர்கள் காணாமல்போனமைக்கான ஆதாரங்கள் இல்லை. அதேபோன்று காணாமலாக்கப்பட்டவர்களுள் பெரும்பான்மையானோர் புலிகளால் அல்லது அவர்களுக்கு எதிரான குழுக்களால் கடத்தப்பட்டவர்களாவர்', 'காணாமல்போனோர் பற்றிய சுமார் 50 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்துவருவது கண்டறியப்பட்டுள்ளது' என்று நான் கூறியதாக அண்மையகாலங்களில் ஊடகங்களில் வெளியான அனைத்து செய்திகளையும் மறுக்கின்றேன்.

நபர்கள் காணாமல்போயிருப்பதையும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கான பதிலை நாடி அவர்களது உறவினர்கள் காத்திருப்பதையும் நான் அறிந்ததன் காரணமாகவே காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கான எனது நியமனத்தை ஏற்றுக்கொண்டேன். காணாமல்போனோர் பற்றிய ஆதாரங்களை அடுத்தடுத்து இயங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் பதிவுசெய்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். அவ்வாறிருக்கையில் என்னை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட கூற்றுக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவையாகவும், தவறான முறையில் விளக்கமளிக்கப்பட்டவையாகவுமே இருக்கின்றன.

காணாமல்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தரவுத்தளமொன்றைத் தொகுப்பதற்கும், அவர்களைத் தேடுவதற்கும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு உரியவாறான நிவாரணத்தை வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து அரசாங்கத்துக்கும் அதன் முகவர்களுக்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமான நடவடிக்கைகளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மேற்கொண்டிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி கடந்த 8 மாதங்களில் 1,549 முறைப்பாடுகள் தொடர்பில் எமது அலுவலகம் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன் அடுத்த வருட இறுதிக்குள் 4,500 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் உத்தேசித்துள்ளது. அவ்விசாரணைகளின் முடிவில், கண்டறியப்பட்ட உண்மைகளுடன்கூடிய விரிவான அறிக்கை வெளியிடப்படும். அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான 100,000 ரூபா இழப்பீட்டுத்தொகையை 200,000 ரூபாவாக அதிகரிக்குமாறு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வேண்டுகோள்விடுத்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/140148

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.