Jump to content

இலங்கை வர்த்தகருக்கு அமெரிக்கா தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வர்த்தகருக்கு அமெரிக்கா தடை

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மொஹமட் நிசார், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் அஹ்மத்லுக்மான் தாலிப் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரான முசாப் துர்க்மென் ஆகியோருடன் இணைந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் அல்லது நிசார் இலங்கையை தளமாகக் கொண்ட தாலிபின் வர்த்தக பங்காளி என அமெரிக்க திறைசேரி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தாலிப் மற்றும் நிசார் இருவரும் ஒரே வணிகத்தின் கூட்டு பங்காளிகளாக இருந்தனர்.

அத்துடன் நிசார் 2018இன் பிற்பகுதியிலிருந்து இலங்கையில் தாலிபின் வணிகப் பங்காளியாக செயற்பட்டு வந்துள்ளார்.

இலங்கையில் அவர்களின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் வருடத்திற்கு கிட்டத்தட்ட 200,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி குறிப்பிட்டுள்ளது.

நிசார், தாலிபின் உறவினர் என்றும் திறைசேரி குறிப்பிட்டுள்ளது.

பிரேசில், கொலம்பியா, இலங்கை, தன்சானியா, துருக்கி மற்றும் வளைகுடா உட்பட உலகம் முழுவதும் தாலிப் வணிகத்தை நடத்தி வருவதாக அமெரிக்க திறைசேரி தெரிவித்துள்ளது.

 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இலங்கை-வர்த்தகருக்கு-அமெரிக்கா-தடை/50-307216

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்ஹைதாவுடன் தொடர்புவந்திருந்த இலங்கை வர்த்தகரை நீண்டகாலமாக புலனாய்வு பிரிவுகள் கண்காணித்தன-

By Rajeeban

13 Nov, 2022 | 10:26 AM
image

அல்ஹைதாவிற்கு நிதி வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகளால் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை வர்த்தகர்  இலங்கை புலனாய்வு பிரிவினரால் நீண்டகாலம் கண்காணிக்கப்பட்டார் ஆனால் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருவளையை சேர்ந்த வர்த்தகர்  முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசார்  அல்ஹைதாவை சேர்ந்த நபருக்கு உதவினார் என அமெரிக்க திறைசேரியின்  வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம்  தெரிவித்துள்ளதுடன் அவருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

us_trasury_main.jpg

வெளிநாட்டு சொத்துக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் பட்டியலில் உள்ள  அஹமட் லுக்மான் தலிப் என்ற தனது வர்த்தக சகா மற்றும் உறவினருக்கு உதவினார், தலிப் அல்ஹைதாவின் வெளிநாட்டு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதிலும் நிதி சார்ந்த விடயங்களிலும் ஈடுபட்டிருந்தார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை வர்த்தகரை கண்காணித்த இலங்கையின் புலனாய்வு பிரிவினர் அவர் குறித்த  விபரங்களை நீண்ட காலத்திற்கு முன்னரே பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் நிசாரின் உள்நாட்டு வர்த்தக சகாக்கள்  அவரது நடவடிக்கைகளில் தொடர்பட்டவர்கள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

நிசார் வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடத்திவந்தார் ஆள்கடத்தல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்றவற்றி;ல் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன.

வடக்குகிழக்கில் வீதிகட்டுமான மற்றும் கட்டுமானத்தில் நிசார் ஈடுபட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புலனாய்வு தகவல்கள் அவர்  மடகாஸ்கர் வர்த்தகருடன் இணைந்து இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கின்றன.

அவர் தற்போது இலங்கையில் வசிக்கவில்லை துபாயில் வாழ்கின்றார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

 

 

https://www.virakesari.lk/article/139850

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.