Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய ரி 20 அணி - அரையிறுதி தோல்விக்கு பின்னர் பல மாற்றங்கள் இடம்பெறலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ரி 20 அணி - அரையிறுதி தோல்விக்கு பின்னர் பல மாற்றங்கள் இடம்பெறலாம்

By RAJEEBAN

11 NOV, 2022 | 12:36 PM
image

இந்திய ரி20 அணி அடுத்த இரண்டு வருடங்களில் பாரிய மாற்றங்களை சந்திக்கும் ரோகித் சர்மா விராட்கோலி ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் ஓய்வு பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரோகித் சர்மா விராட்கோலி அஸ்வின் போன்றவர்கள் மெல்ல மெல்ல அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்களை மேற்கோள்காட் டிதகவல்கள் வெளியாகியுள்ளன.

தினேஸ் கார்த்திக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினும் ரி20 போட்டிகளில் தங்களின் இறுதி போட்டிகளை விளையாடியுள்ளனர் பி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்கள் தெரிவி;த்துள்ளன.

எனினும் விராட்கோலி ரோகித்சர்மாவை பொறுத்தவரை தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு அவர்களிடமே வழங்கப்படும் என  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

india_t20-south-africa.jpg

அடுத்த ரி20 உலக கிண்ணப்போட்டிகளிற்கு இன்னமும் இரண்டு வருடங்கள் உள்ள சூழ்நிலையில் புதிய ரி20 அணியொன்று காணப்படும் ஹர்டிக் பண்ட்யா அணித்தலைவராக நியமிக்கப்படுவார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எவரையும ஓய்வு பெறுமாறு ஒருபோதும் கேட்காது அது தனிப்பட்ட தீர்மானம் 2023 இல் மிகவும் குறைந்தளவு ஒருநாள் போட்டிகளே விளையாடப்படவுள்ள நிலையி;ல் சிரேஸ்ட வீரர்கள் ஒருநாள் டெஸ்ட்போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள் என  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உங்களிற்கு விருப்பம் இ;;ல்லாவிட்டால் நீங்கள் ஒய்வு பெறத்தேவையில்லை,அடுத்த வருடம் அனேகமான சிரேஸ்ட வீரர்கள் ரி20 போட்டிகளில் விளையாடுவதை பார்க்கமாட்டீர்கள் என  விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/139727

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருபது20 குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க பிசிசிஐ ஆராய்கிறது

By DIGITAL DESK 3

15 NOV, 2022 | 03:56 PM
image

 

இருபது20 போட்டிகளுக்கான இந்திய குழாமில் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனிக்கு முக்கிய பதவியொன்றை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 10 விக்கெட்களால் தோல்வியடைந்து வெளியேறியது.

இதையடுத்து. இந்திய அணியை மீளக் கட்டியெழுப்புவதற்கான வழிகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆராயந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இருபது20 போட்டிகளுக்கான குழாமில் மஹேந்திர சிங் தோனிக்கு முக்கிய பதவியை வழங்கி அவரை குழாமில் வைத்துக்கொள்வவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளிhயகியுள்ளது.

மற்றொரு முன்னாள் அணித்தலைவர் ராகுல் திராவிட் 3 வகைப் போட்டிகளுக்கும் இந்திய அணியின் பயிற்றுநராக உள்ளமை அவருக்கு பணிச்சுமையை அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.

இதனால், இருபது20 போட்டிகளுக்கான குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/140124

  • கருத்துக்கள உறவுகள்

ரோகித் சர்மா ஓர‌ம் க‌ட்ட‌ப் ப‌ட‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

கோலி இன்னும் இந்திய‌ அணிக்காக‌ குறைந்த‌து ஜ‌ந்து ஆண்டு த‌ன்னும் விளையாவார்

 

ர‌ன் மிசின் ப‌ழைய‌ ப‌டி வேலை செய்ய‌ தொட‌ங்கிட்டு

 

அஸ்வின் கார்த்திக்கு இது தான் க‌ட‌சி உல‌க‌ கோப்பை

 

அடுத்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இவ‌ர்க‌ள் விளையாடுவ‌து ச‌ந்தேக‌ம்

 

என்ன‌ தான் வீர‌ர்க‌ளை மாற்றி விளையாடினாலும் இந்தியாவுக்கும் உல‌க‌ கோப்பைக்கும் தூர‌த்து பொருத்த‌ம் 😏

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஐ பில் உடன் நிற்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

இந்தியா ஐ பில் உடன் நிற்பது நல்லது.

கிரிக்கெட்டால் இந்திய‌ நாட்டுக்கு பெருத்த‌ அவ‌மான‌ம் அண்ணா

கோடி கோடியா காசை கொட்டி ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌த்தி க‌ட‌சியில் ஒவ்வொரு உல‌க‌ கோப்பையிலும் கோப்பை தூக்காம‌ வெளி ஏறுவ‌து

சில‌ உல‌க‌ கோப்பையில் சிமி பின‌லுக்கு கூட‌ வ‌ராம‌ல் போய் இருக்கின‌ம் நான் சொல்ல‌ வ‌ருவ‌து ஜ‌பிஎல் தொட‌ங்கின‌ பிற‌க்கு

20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இல‌ங்கை மூன்று முறை பின‌லுக்கு வ‌ந்து இருக்கு அதில் ஒரு முறை கொப்பையை தூக்கினார்க‌ள்

இந்தியா இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்து ஒரு முறை தான் கோப்பை அவ‌ர்க‌ள் கைக்கு போன‌து..........

இந்தியா அணியில் க‌ப்ட‌னை மாற்றி ஒன்றும் பெரிசா ந‌ட‌க்க‌ப் போவ‌து கிடையாது...........டோனியிம் திற‌மையும் அதிஷ்ட‌மும் இருந்த‌ ப‌டியால் இந்தியாவுக்கு ப‌ல‌ கோப்பைக‌ளை வென்று கொடுத்தார் 

இந்திய‌ கிரிக்கேட் ர‌சிக‌ர்க‌ள் ஜ‌பிஎல்ல‌ தான் பெருமையா நினைக்குதுக‌ள்..........17வ‌ருட‌மாகியும் மீண்டும் உல‌க‌ கோப்பைய‌ தூக்க‌ வில்லை என்ர‌ க‌வ‌லை அவ‌ர்க‌ள் ம‌த்தியில் இருப்ப‌தா தெரிய‌ வில்லை 🤣😁😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'தலைவன்' தோனி வந்தால் இந்திய அணி கோப்பைகளைக் கைப்பற்றிவிடுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம். மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியிலேயே வெளியேறியதும், சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவிய பெயர்களுள் ஒன்று மகேந்திர சிங் தோனி. ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்காக அதிகமாகப் பெற்றுத் தந்தவர் என்பது அவரது சிறப்பு.

ஆனால் இந்திய அணி இன்னொரு உலகக் கோப்பையை வெல்வதற்கு அவரால் உதவ முடியுமா? இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அவரை எந்த இடத்தில் பொருத்திக் கொள்ள முடியும்? இந்திய அணிக்கு தோனியின் தேவை இருக்கிறதா?

“கிரிக்கெட்டில் முடிவெடுக்கும் திறன் என்பது மிகவும் முக்கியமானது. தோனி மற்ற எல்லா கேப்டன்களையும் விட அதில் சிறந்தவர்” என்கிறார் இந்திய மகளிர் அணியில் ஆடி வரும் ஹேமலதா.

மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது டி20 உலகக் கோப்பையையும், 50 ஓவர் உலகக் கோப்பையைும் இந்திய அணி கைப்பற்றியது. கூடவே சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சாம்பியன் பட்டம் பெற்றது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி தொடர்கள் எதிலும் கோப்பையைக் கைப்பற்றவில்லை. 

 

2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, இப்போது மீண்டும் ஒரு டி20 உலகக் கோப்பை என தொடர்ச்சியான தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருகிறது. 

தோனிக்கு பிறகு நீண்ட கால கேப்டன்களாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இருந்திருக்கிறார்கள். ஆயினும் கோப்பைகள் கிடைக்கவில்லை. தோனி போன்ற கேப்டன் இல்லாததே இந்திய அணி கோப்பைகளை வெல்ல முடியாமல் போவதற்குக் காரணம் என்ற விவாதங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. 

இப்படியொரு சூழலில் மகேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய அணிக்காக புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தோனி ஏற்கெனவே அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். மீண்டும் அவர் அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஏற்கெனவே கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் செயல்பட்டது போன்றே ஆலோசகர் என்கிற அளவிலான பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது?

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை  தொடரைப் போல அல்லாமல், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று சிறப்பான தொடக்கத்தை தந்தது. ரன்கள் எடுப்பதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட நட்சத்திர வீரரான விராட் கோலி இந்தத் தொடரில் அதிரடியாக மீண்டு வந்தார். குரூப் -2 பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி அந்தப் பிரிவிலேயே முதலாவதாக வந்தது. 

உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 12 சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருந்தது. இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்கள். அர்ஷ்தீப் சிங் நம்பிக்கையளிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனாலும் கோப்பையை வெல்வதற்கு இது போதுமானதாக இல்லை.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் உத்தி மோசமாக விமர்சிக்கப்பட்டது.

“இந்தியா பழைய பாணி கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சாடினார். 

 

இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் 6 ஓவர்களில் இந்திய அணி மிகக் குறைவான ரன்களையே எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் பவர் பிளே முடியும் வரை நீடித்து நிற்காததால் விரைவாக அடித்து ரன்களைக் குவிக்க வேண்டிய தருணங்களில் இந்திய அணி தடுமாறியது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடக்க ஓவர்களிலேயே இந்தியா விக்கெட்டை இழந்துவிட்டதால், விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 10 ஓவர்களில் ரன்ரேட் குறைவாக இருந்ததால், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.

“கிரிக்கெட்டில் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணி பழைய வகையில் இருந்து வெளியே வர மறுக்கிறது” என்று குறிப்பிடுகிறார் விளையாட்டு விமர்சகர் தினேஷ் அகிரா.

"திறமையான வீரர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது. அணுகுமுறையில்தான் தவறு இருக்கிறது. டி20 கிரிக்கெட்டை ஒரு நாள் கிரிக்கெட்டின் நீட்சியாகத்தான் இந்திய அணி பார்க்கிறது.

இங்கிலாந்து போன்ற அணிகள் வீரர்களை வரிசையை மாற்றி களமிறக்குகின்றன. எதிர் தரப்பில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து ரன்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டார்கள் என்றால், அதற்கு ஏற்ற பேட்ஸ்மேனை கொண்டு வரிசையை மாற்றுகின்றன. ஆனால் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களையோ, மிடில் ஆர்டரையோ மாற்றத் தயங்குகிறது. ” என்கிறார் தினேஷ் அகிரா.

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் குறைபாடா?

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததுடன், ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட திறன்களும் விமர்சிக்கப்படுகின்றன. கேப்டனாக இருப்பது தனிப்பட்ட வகையிலும், தனிப்பட்ட முறையில் ரன் குவிக்கத் திணறுவது கேட்டன்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

“நிறைய தருணங்களில் ரோஹித் சர்மா கோபப்படுவதை பார்க்க முடிந்தது. தொடர் முழுக்கவே அவர் அழுத்தத்துடன் இருப்பது போலவே தோன்றியது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்த ரோஹித் சர்மாவை சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியவில்லை” என்கிறார் தினேஷ் அகிரா.

ஆயினும் கேப்டன்சியை காட்டிலும் ஒட்டுமொத்த அணுகுமுறையே உடனடியாக மாற்றப்பட வேண்டியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். “ஒருவர் மீது மட்டும் குறையைக் கூறி தப்பிக்க முடியாது” என்கிறார் அவர்.

அணித் தேர்வில் இருந்து சரி செய்யப்பட வேண்டியது என்கிறார் அவர்.

தோனியின் தனித்தன்மை என்ன?

தோனி இந்திய அணிக்கு கேப்டனாக வந்தது ஒரு நெருக்கடியான காலகட்டம். தனிப்பட்ட முறையும் தோனிக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் சோதனைகள் ஏற்பட்டிருந்தன. 2007-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இலங்கையிடமும், வங்கதேசத்திடமும் எதிர்பாராத வகையில் தோல்விகளைச் சந்தித்து வெளியேறியிருந்தது. இந்த இரு போட்டிகளிலும் பூஜ்ஜியம் ரன்களை எடுத்த தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவரது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால் சுமார் ஆறு மாத இடைவெளியில் இந்திய கிரிக்கெட் மீதும் தன்மீது இருந்த விமர்சனங்களை தோனியால் துடைத்தெறிய முடிந்தது.

 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட தோனி இறுதிப் போட்டியில்  பாகிஸ்தானை வீழ்த்தி நீண்ட இடைவெளிக்கப் பிறகு இந்தியாவுக்கு ஓர் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் திறன் தோனியிடம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

“தோனி ஒரு கற்பனை வளம் மிக்க கேப்டன்” என்கிறார் தினேஷ் அகிரா. மிகக் குறைந்த அளவு திறமை கொண்ட வீரர்களை வைத்தே, பெரிய அளவு சாதிப்பதற்கு இந்தக் கற்பனை வளம் உதவுகிறது என்கிறார் அவர்.

“2015 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரைக்கும் இந்திய அணி சென்றதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்தத் தொடருக்கு முன்பு இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டே இருந்தது. எதிர்பார்ப்பே இல்லாமல்தான் உலகக் கோப்பைக்குச் சென்றது. அத்தகைய அணியை அரையிறுதி வரைக்கும் அழைத்துச் சென்றார் தோனி. இருக்கும் வீரர்களைக் கொண்டு அணியை தோனியால் வெற்றிபெற வைக்க முடியும். அது ஒரு மேதையின் திறன். அந்தத் திறமை அடுத்த வந்த கேப்டன்களிடம் இல்லை” என்கிறார் தினேஷ்.

மைதானத்தில் பதற்றமில்லாமல் இருந்தபடியே சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கூடிய திறனைப் பற்றி ஹேமலதா குறிப்பிடுகிறார்.

“கிரிக்கெட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் இவரை பந்துவீச அழைக்க வேண்டும். அடுத்த போட்டியில் இந்த வீரரை களமிறக்க வேண்டும் என்பதையெல்லாம் தோனி அற்புதமாகத் தீர்மானிக்கக்கூடியவர்” என்கிறார் ஹேமலதா. இவர் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் ஆடி வருபவர்.

 

தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணிக்கு மீண்டும் தோனி வந்தால் என்னவாகும்?

இந்திய அணியின் தொடர் தோல்விகளால், வெற்றிகரமான கேப்டன் என்ற முறையில் தோனியின் பெயர் இப்போது விவாதத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் அணியை அப்படியே வைத்துக் கொண்டு தோனியை வரவழைத்து எதுவும் செய்ய முடியாது என்கிறார் தினேஷ் அகிரா.

இந்த அணியில் ஏற்கெனவே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கிறார். பெரிய அளவு அடையாளம் இல்லாதவர்கள் பயிற்சியாளர்களாக இருக்கும் அணிகளுக்கு ஆலோசகர் போன்ற பொறுப்புகளில் புகழ்பெற்ற ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் ஏற்கெனவே புகழ்பெற்ற வீரரான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நிலையில் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டால் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.

“அணியைக் கலைத்துப் போட்டு, இளைஞர்களைக் கொண்டு வந்துவிட்டு, தோனியை ஆலோசகராக நியமித்தால் சரியாக இருக்கும்” என்கிறார் தினேஷ் அகிரா.

தோனி இன்னும் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை மீண்டும் கேப்டனாக தேர்வு செய்து அறிவித்திருக்கிறது. 

"தலைவன் (எம்.எஸ். தோனி) தான் அணியை வழிநடத்தப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் சிறப்பானதைச் செய்வார், அணி சிறப்பாகச் செயல்படும்" என்று அறிவித்தார் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி விஸ்வநாதன். 

ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் தோனி மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பது அதன் அடுத்தகட்ட அறிவிப்புகளில்தான் அறிய முடியும்.

https://www.bbc.com/tamil/articles/cp65e40jpjxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட வேண்டுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விதான்ஷு குமார்
  • பதவி,பிபிசி இந்திக்காக
  • 17 நவம்பர் 2022, 12:33 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொதுவாக இதுபோன்ற படங்கள் அரிதாகவே காணப்படுகின்றன - கேமரா உங்கள் மீது ஃபோக்கஸ் செய்கிறது, நீங்கள் அழுது கொண்டிருக்கிறீர்கள்.

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியபோது ரோஹித் சர்மாவின் நிலை இதுதான்.

ரோஷித் சர்மா, ஒயிட் பால் கிரிக்கெட்டில் அழியாத முத்திரையை பதித்தவர். ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர்.

ஹிட்மேன் என்று உலகம் போற்றும் அவர், ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனும் ஆவார். அவரது உணர்ச்சிப் பெருக்கு, சக வீரர்களை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் கோடிக்கணக்கான ரசிகர்களையும் வருத்தமடையச் செய்தது.

 

ஆனால், டி20யில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமையேற்று ஒரு வருடம்தான் ஆகிறது.

இந்திய டி20யின் எதிர்காலம் 35 வயதான ரோஹித் சர்மாவின் கேப்டன்சியைத்தான் நம்பியிருக்கிறதா என்ற குரல்கள் உலகக் கோப்பையின் இந்தத் தோல்விக்குப் பிறகு  எழுந்துள்ளன.

ரோஹித்தின் கேப்டன்சியில் அணியின் செயல்பாடு

2021 டி 20 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலே இந்தியா வெளியேறியது.அதன் பிறகு கேப்டன்சியிலும் மாற்றம் ஏற்பட்டது.விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மா அணியின் புதிய கேப்டனானார்.

புதிய கேப்டன் ரோஹித் தலைமையில் இந்திய அணி இருதரப்பு தொடர்களில் சிறப்பாக விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றது.

இதில் சில தொடர்களில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும்  முடிவு இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது.

இதன் போது நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளை 3-0 என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்தது. அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் இந்தியா வெற்றிவாகை சூடியது.

 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தனது சொந்த மண்ணில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

இந்த முடிவுகளைப் பார்க்கும்போது இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது, எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது என்பது போலவே தோன்றும்.

ஆனால் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் மிகப்பெரிய ஐசிசி போட்டியில் இந்தியா வெற்றி பெறத் தவறிவிட்டது.

 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எங்கே தவறு நடந்தது?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு முதல் பெரிய சவால் ஏற்பட்டது.

குழு நிலையிலான முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, பின்னர் பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு அணிகளிடமும் தோல்வியடைந்து இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

ரோஹித் ஷர்மாவின் அணிக்கு இரண்டாவது பெரிய சவாலாக இருந்தது T20 உலகக் கோப்பை 2022. இதிலும் இந்திய அணி ரசிகர்களை ஏமாற்றியது.

கடைசி சில பந்துகளில் பாகிஸ்தான் மற்றும் வங்க தேச அணிகளுக்கு எதிரான கடினமான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் இரண்டு பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் மோதிய போது பந்தயத்தின் முடிவு இந்தியாவுக்கு எதிராக அமைந்தது.

 பேட்டிங் பவர்பிளேயை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியாமல் போனதுதான், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம்

ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியை டாப் ஆர்டராகக்கொண்ட இந்திய அணியின் பவர்ப்ளே சராசரி  ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட  மட்டுமே அதிகமாக இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்திய அணியின் தோல்விக்கு,  பயத்தால் வெலவெலத்த அதன்  பேட்டிங் தான் காரணம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் உசேன் தெரிவித்துள்ளார்.

மேலும்  இந்திய அணி  மிகவும் பழைய பாணியில் டி20 கிரிக்கெட்டை விளையாடி வருவதாகவும், அதன் காலம் கடந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

தொடக்கத்தில் விக்கெட்டுகளை காப்பாற்றி பின்னர் அடித்து நொறுக்குவது இந்திய அணியின் உத்தியாக இருந்தது. ஆனால் இந்த உத்தி தோல்வியடைந்தது, இதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பொறுப்பேற்க வேண்டும்.

 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கு முன்பும் மாற்றங்கள் நடந்தன

எந்த  ஒரு அணிக்கும் உலகக் கோப்பை  ஒரு பெரிய இலக்காக உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாட அணிகள் விரும்புகின்றன. அதற்கென நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பை தொடங்குகின்றன.

உலகக் கோப்பையில் ஒரு அணி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால், அணியில் பெரிய மாற்றங்களும் நிகழ்கின்றன.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடமே கேளுங்கள்! 1979 உலகக் கோப்பைக்குப் பிறகு 2007 ஒருநாள் உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிகவும் மோசமாக அமைந்தது.

1979 இல் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 2007 இல் இந்தியா வங்கதேசம் மற்றும் இலங்கையிடம் தோற்றது.  பெர்முடாஸுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அணி வெற்றி பெற்றது.

போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது.

அந்த ஒருநாள் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளராக கிரெக் சேப்பல் இருந்தனர்.இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு ராகுல் டிராவிட்டும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

புதிய கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஆக்கப்பட்டார். அவர் இந்திய அணிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2011 இல் உலகக் கோப்பை நம் கைக்கு வந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும், அணியில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டதாக குரல் கொடுத்துள்ளனர். தோல்வி அடைந்த  அணியின் கேப்டன்கள் இதற்கு முன்பும் நீக்கப்பட்டுள்ளனர், இப்போது அதைச்செய்ய என்ன தயக்கம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த டி20 உலகக் கோப்பைக்குள் ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதாகிவிடும். அப்போதும் அவர் கேப்டனாக இருப்பாரா, அணியில் இடம் பெறுவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால், அதை எவ்வளவு சீக்கிரம் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்வது நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர்.

 

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021 இல் தோல்வியடைந்த அதே அணி தான் 2022 உலகக் கோப்பையில் விளையாடியது

கவனமாகப் பார்த்தால் இந்திய டி20 அணியில் பெரிய மாற்றங்களுக்கான நேரம் சென்ற ஆண்டே வந்துவிட்டது.

2021 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியைப் பார்த்தால், அப்போது அணியில் இடம்பெற்ற எல்லா வீரர்களும் 2022 இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடியதை பார்க்கமுடிகிறது.

ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விளையாடாததால், அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.

2021ல் மிக மோசமாக விளையாடிய அதே அணி அடுத்த ஆண்டு உலக சாம்பியன் ஆக முடியுமா? அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு  வயதாகிவிட்டது. அணிக்கு ' டேடீஸ் ஆர்மி’ என்ற பட்டப்பெயரும் அளிக்கப்பட்டு வருகிறது.

அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரவிசந்திரன் அஷ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் - அனைவரும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்களில் பலரும் 34-35 வயதை நெருங்கியவர்கள்.

அணியின் சராசரி வயது அதிகரித்து வருவதும் உடனடி மாற்றத்திற்கான அறைகூவலாக உள்ளது.

 

எதிர்பார்த்ததை விட குறைவான வெற்றி

10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, அணியின் செயல்பாடு எல்லா இடங்களிலும் கண்டிக்கப்பட்டது, இதில் மைக்கேல் வார்ன் முன்னிலையில் உள்ளார்.

உலக கிரிக்கெட்டில் எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த வெற்றி பெற்ற அணிகளில் இந்திய அணியும் ஒன்று என்று வார்ன் கூறினார்.

இவ்வளவு திறமைகள் நிறைந்த அணி டி20 கிரிக்கெட்டில் விளையாடும் விதம் வியப்பளிப்பதாக அவர் கூறினார்.

இந்திய அணியிடம் வீரர்கள் இருக்கின்றனர்,ஆனால் விளையாடும் முறை சரியில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வார்ன், கூறினார். முதல் 5 ஓவர்களில் எதிரணி பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதற்கு எப்படி வாய்ப்பு தருகிறீர்கள் என்று அவர் வினவியுள்ளார்.

வார்ன் இந்திய அணியின் உத்தியை கண்டித்தார். பவர்பிளேயில் அதிக ரன்களை எடுக்காதது  பலவீனம். இது திறமையுடன் தொடர்புடையது அல்ல, மனநலம் சம்பந்தப்பட்டது  என்றும் அவர் கூறினார்.

கேப்டன் ரோஹித் ஷர்மா அணியின் உத்திகளை திட்டமிடுவதில் தவறு செய்து வருகிறார். அதன் காரணமாகவே அணி இதுபோன்ற தோல்விகளை சந்தித்து வருகிறது.

பவர்பிளேயில் பலவீனமான பேட்டிங்கைத் தவிர, லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்படாத காரணமாகவும் அணி பெரிய விலையை கொடுக்கவேண்டி வந்தது. இந்த உலகக் கோப்பையில் அதில் ரஷீத் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் லெக் ஸ்பின் பந்துவீச்சில் அசத்தினர்.

அரையிறுதி போட்டியிலும்கூட  லெக் ஸ்பின்னர் இல்லாத குறையை இந்திய அணி உணர்ந்தது. இந்தியாவிடம் சிறந்த லெக் ஸ்பின்னர் இருக்கிறார், அவர் களத்தில் இல்ல, டக்-அவுட்டில் இருக்கிறார் என்று  போட்டியின் நேர் வர்ணனையின் போது ரவி சாஸ்திரி ஏமாற்றத்துடன் கூறினார். 

 

ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேப்டன் மாற்றப்படவேண்டுமா அல்லது விளையாடும் விதமா?

கேப்டன் பதவி மற்றும் மாற்றம் குறித்த இந்த விவாதத்தில், இர்ஃபான் பதானும் ட்வீட் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கேப்டனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மூன்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் வேகமாக விளையாட வேண்டும், அணியில் ஒரு லெக் ஸ்பின்னர் இருக்க வேண்டும், அதிவேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இர்ஃபானின் பரிந்துரைகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் 2024 வரை இந்த அணி இதே கேப்டன்சியின் கீழ் தொடருமா என்பது சந்தேகமே.

இந்தியாவின் வெவ்வேறு அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் இருக்க வேண்டும் என்றும் சில வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெவ்வேறு கேப்டன்கள் இருக்கவேண்டும் என்று  கருதப்படுகிறது.

ஹார்திக் பாண்டியா தலைமையில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் மாற்றம் தொடங்கியுள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.

புதிய கேப்டன் நியமனம் ஓரளவு உறுதியான ஒன்றுதான்.அது நடக்குமா நடக்காதா என்பது கேள்வி அல்ல.ஆனால் அது எப்போது நடக்கும் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/c7214rrxereo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MS Dhoni Entry கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா? இந்தியா கோப்பைகளை கோட்டைவிட காரணம் என்ன?

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியிலேயே வெளியேறியதும், சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவிய பெயர்களுள் ஒன்று மகேந்திர சிங் தோனி. ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்காக அதிகமாகப் பெற்றுத் தந்தவர் என்பது அவரது சிறப்பு. ஆனால் இந்திய அணி இன்னொரு உலகக் கோப்பையை வெல்வதற்கு அவரால் உதவ முடியுமா? இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அவரை எந்த இடத்தில் பொருத்திக் கொள்ள முடியும்? இந்திய அணிக்கு தோனியின் தேவை இருக்கிறதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டி20 கிரிக்கெட் உலக கோப்பை வீழ்ச்சி: சேத்தன் சர்மா தலைமையிலான மொத்த குழுவையும் கலைத்தது பிசிசிஐ

 

டி20 கிரிக்கெட் உலக கோப்பை

பட மூலாதாரம்,CHETAN SHARMA

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

18 நவம்பர் 2022

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறிய நிலையில், வீரர்களைத் தேர்வு செய்யும் சேத்தன் சர்மா தலைமையிலான ஒட்டுமொத்த தேர்வுக் குழுவை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கலைத்திருக்கிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான இந்தக் குழுவில் மொத்தம் 4 பேர் அங்கம் வகித்தனர். சேத்தன் சர்மா தவிர ஹர்விந்தர் சிங் சுனில் ஜோஷி, தேபாசிஷ் மொஹந்தி ஆகியோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.

புதிய தேர்வுக் குழுவில் இடம் பெற விரும்புவோர் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ தனது இணையதளத்தில் அறிவித்திருக்கிறது. இதில் மொத்தம் 5 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள், அல்லது 30 முதல் தர போட்டிகள், அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் ஆடிய அனுபவம் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படுவோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு உருவாக்கப்பட்டது. வழக்கமாக ஒரு தலைவர், நான்கு மண்டலங்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் இது இயங்கும். ஆனால் கலைக்கப்பட்ட தேர்வுக் குழுவில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தேர்வாளர் யாரும் இல்லை.

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது?

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரைப் போல அல்லாமல், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று சிறப்பான தொடக்கத்தை தந்தது. ரன்கள் எடுப்பதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட நட்சத்திர வீரரான விராட் கோலி இந்தத் தொடரில் அதிரடியாக மீண்டு வந்தார். குரூப் -2 பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி அந்தப் பிரிவிலேயே முதலாவதாக வந்தது.

உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 12 சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருந்தது. இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்கள். அர்ஷ்தீப் சிங் நம்பிக்கையளிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனாலும் கோப்பையை வெல்வதற்கு இது போதுமானதாக இல்லை.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,CHETAN SHARMA

டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் உத்தி மோசமாக விமர்சிக்கப்பட்டது.

“இந்தியா பழைய பாணி கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சாடினார்.

முதல் 6 ஓவர்களில் இந்திய அணி மிகக் குறைவான ரன்களையே எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் பவர் பிளே முடியும் வரை நீடித்து நிற்காததால் விரைவாக அடித்து ரன்களைக் குவிக்க வேண்டிய தருணங்களில் இந்திய அணி தடுமாறியது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடக்க ஓவர்களிலேயே இந்தியா விக்கெட்டை இழந்துவிட்டதால், விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 10 ஓவர்களில் ரன்ரேட் குறைவாக இருந்ததால், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததுடன், ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட திறன்களும் விமர்சிக்கப்படுகின்றன. கேப்டனாக இருப்பது தனிப்பட்ட வகையிலும், தனிப்பட்ட முறையில் ரன் குவிக்கத் திணறுவது கேட்டன்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/czv0rj80wq2o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.