Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாமியார்களின் திருவிளையாடல்கள்

Featured Replies

சித்து வேலைகளால், பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தும் சாமியார்கள்: நாக்கில் `ஓம்' என்று எழுதினால் `பேஷண்ட்' பேசி விடுகிறார்

இந்த `கம்ப்ïட்டர் கிராபிக்ஸ்' காலத்திலும், சாமியார்களின் மாயா ஜாலங்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை!

உலகிலேயே சித்து விளையாட்டுக்களில் மெய்சிலிர்க்க வைப்பவர்கள் நமது இந்தியச் சாமியார்கள்தான்!.

இன்றைய தேதியில் இந்தியா முழுக்க சுமார் 5 லட்சம் சாமியார்கள் இருக்கிறார்கள். இதில் இமயமலை, ரிஷிகேஷம்

பகுதியில் இருக்கும் 5 ஆயிரம் சாமியார்கள், இதர 3 லட்சம் சாமியார்கள் தவிர பாக்கி உள்ளவர்கள் போலியாக

இருக்கலாம் என்கிறது போலீஸ் துறை புள்ளி விவரம்.

கடந்த 2 மாதத்தில், மும்பையில் மட்டும் 25 போலிச் சாமியார்கள் பிடிபட்டு கம்பி எண்ணுகிறார்கள்.

விவேக்கின் பாவாடைச் சாமியார் போல, இவர்களில் ஏராளமான வினோதச் சாமியார்களும் இருக்கிறார்கள்.

குடும்ப வாழ்வை துறந்து, கால்போன போக்கில் பயணிக்கும் இவர்கள் தியானம் செய்வது, கடவுளைத் தொழுவது,

பக்தர்களுக்கு ஆசி வழங்குவது தவிர மந்திரத்தில் மாங்காயும் வரவழைக்கிறார்கள்.

"இவரால் வாய் பேச முடியாது'' என்று எப்பேர்பட்ட டாக்டர்கள் கைவிட்ட `பேஷண்ட்' டும் ரிஷிகேஷத்தில் உள்ள ஒரு

சாமியாரிடம் போனால் "அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி' என்று பாடவே வைத்து விடுகிறார்.

இத்தனைக்கும் அவர் அதிக பொருட்செலவில் ஆபரேஷன் எல்லாம் செய்வதில்லை. கையில் உள்ள குடைக்கம்பு

போன்ற ஊன்றுகோலை வைத்து நாக்கில் `ஓம்' என்று எழுதுகிறார். பேஷண்ட் பேச ஆரம்பித்து விடுகிறார்.

ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு சாமியார் தனது நாக்கில் உள்ள எச்சிலை தொட்டு பெண்களின் தொப்புளில்

தடவுகிறார். கணவரே பக்கத்தில் தேவையில்லையாம். கண்டிப்பாக 10-வது மாதத்தில் குழந்தை "கன்பார்ம்''

என்கிறார்கள்.

நம்ம `வடிவேலு' மாதிரியே வாரணாசியில் ஒரு சாமியார் இருக்கிறார். அவரது கையில் உள்ள மந்திர செருப்பால்

தலையில் ஆசிர்வாதம் வழங்கி, ஒரு குவளைத் தண்ணீர் குடிக்க கொடுத்து, இரு காதையும், கையையும் பிடித்து

லேசாக சுளுக்கு எடுத்து விடுகிறார். உடம்பில் கிட்னி உள்பட எந்த `பார்ட்' பெயிலியராக இருந்தாலும் உடனே

பாசாகி விடுகிறது.

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள கோவணச்சாமி யாரிடம் சென்று பெண்கள் காலம், காலமாக அவரது

காலால் தங்கள் தலையில் மிதி வாங்கி ஆசி பெற்றுச் செல்கிறார்கள். இதுவரை அவர் பேசியதுமில்லை. யார்

குறையும் தீர்ந்தது மாதிரியும் இல்லை. இருந்தாலும் அவரிடம் மிதி வாங்கி கன்னத்தில் போட்டுக் கொள்வது

தொடர்கிறது.

அமர்நாத் அருகே ஓம்புரீஸ்வரர் என்ற சாமியார் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு காலிலேயே நிற்கிறார். எதற்காக என்று

சொல்லவேமாட்டேன் என்கிறார்.

இவர்களைப் போலவே தமிழகத்திலும் ஏராளமான வசியச்சாமியார்கள் இருப்பதாகச் சொல்கிறது "நமது சிறப்பு

நிருபர்கள் குழு''.

சேலம் கெங்கவள்ளி அருகே ஒரு சாமியார் பக்தர்களுக்கு மந்திரத்தில் ஆப்பிள் வர வழைத்து தருகிறாராம்.

"காஷ்மீர் ஆப்பிளையே கெங்கவள்ளிக்கு வரவழைக்கும்போது பக்தா உன் குறையை தீர்க்கமாட்டேனா?''

என்கிறாராம் அவர்?

அரூரை அடுத்த கடத்தூரில் உள்ள சாமியார் காலால் பக்தர்களை எத்துகிறார். தோஷம் கழிந்து விடுமாம்! இவருக்கு

காணிக்கையாக கோல்டு பில்டர் சிகரெட் அல்லது சிசர் பில்டர் தரவேண்டும் என்பது கட்டளை.

யாருக்காவது சர்டிபிகேட் காணாமல் போனால் வெற்றிலையில் மை போட்டு கண்டுபிடித்து சொல்கிறார்

கொண்டலாம்பட்டி சாமியார் ஒருவர்.

சேலத்திலேயே ருசிகரமான ஒரு சாமியாரும் இருக்கிறார். புத்து மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் இவர்

பக்தர்களுக்கு போண்டா, வடையை பிரசாதமாக தருகிறார். இதைச்சாப்பிட்டால் நோய் குணமாவ தோடு குழந்தையும்

பெற முடியுமாம்!.

நமது கோவை நிருபர் மேலும் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

இளம்பெண் மாயமாகி விட்டால் கண்டுபிடித்து தர கோவை, ராமநாதபுரத்தில் ஒரு சாமியார் இருக்கிறார். பித்தளைத்

தட்டில் மை போட்டு அப்படியே காட்டி விடுகிறாராம்.

மருதூர் ரோட்டில் உள்ள ஒரு சாமியார் கீழே படுத்துக்கொண்டு தனது நெஞ்சுப் பகுதியில் இருந்து பக்தர்களுக்கு

பால் தருகிறாராம்! இந்தப் பாலைக் குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உடனே ரெடியாம்!

யாராவது வாகனத்தில் செல்பவர்கள் மோதிவிட்டு பறந்து விட்டால் அவர்களை பிடித்து தரும் பெண் சாமியார்

நாகர்கோவிலில் இருக்கிறார்.

தக்கலையை அடுத்து முளகுமூடு என்ற இடத்தில் இருக்கும் இவர் ஒரு குடம் தண்ணீரை எடுத்து வரச்சொல்லி

வாகனத்தில் மோதிச் சென்றவர் முகத்தை அந்த தண்ணீரில் காட்டி விடுவாராம்!

திங்கள் சந்தையை அடுத்த பூச்சாஸ்தான்விளையில்தான் பிரபல பீடிச் சாமியார் இருக்கிறார். பீடி குடித்து முடிந்ததும்

`நடக்கும்' அல்லது `நடக்காது' என்று ஒரே வார்த்தையில் இவர் பதில் சொல்வார். அடுத்து நெக்ஸ்ட்?

இருப்பது சென்னை என்பதாலோ என்னவோ வண்டலூர் மிருகக்காட்சி சாலை அருகே இருக்கும் சாமியார்

அருள்வாக்கு சொல்ல பெப்சி அல்லது கோக் கேட்கிறார். தினமும் சுமார் 20 கூல்டிரிங்ஸ் ஓசியில் குடிக்கிறார்.

பக்தர்களின் ஊர் பெயரைச் சொல்லி இவர் அழைப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

ஈரோடு அருகே வெண்டிபாளையத்தில் இருக்கும் சாமியார் வாரம் தோறும் அக்னி குண்டத்தில் நடனமாடி

வேப்பிலையால் பக்தர்களை அடித்து வரம் தருகிறார். 10 நாளில் குறை தீரும் என்பது இவர் தரும் கியாரண்டி.

இத்தகைய சாமியார்களுக்கு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் பயபக்தியுடன் திரள்கிறது.

இந்த விஞ்ஞான யுகத்தில் இதெல்லாம் நம்ப வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் மூடநம்பிக்கைக்கு எதிரான

அமைப்பினர்.

காலம், காலமாக பக்தர்கள் கையில் சூடத்தை கொளுத்திய விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சூடத்தின்

அடிப்பகுதியில் தண்ணீரால் லேசாக நனைத்துக் கொண்டு மேற்பகுதியில் தீ பற்ற வைத்தால், யார் வேண்டுமானாலும்

கையில் பிடித்துக் கொள்ளலாம் என்கிறார்கள் அவர்கள்.

பிரபலமான ஒரு சாமியார் பக்தர்களுக்கு தங்கச்சங்கிலி வரவழைத்து தந்ததைக் கூட, இடக்கையிலிருந்து

வலக்கைக்கு மாற்றுவதை வீடியோ படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் கிராமப்புறங்களிலும், பெண்களிடமும்தான் விழிப்புணர்வு தேவை. சாமியார்களை அதிகம் நம்பு

பவர்கள் இவர்கள்தான்.

இவர்களின் பலவீனம் தெரிந்ததால்தான் தமிழகத்தில் சுருட்டு சாமியார், கஞ்சா சாமியார், பீர்- பிராந்தி சாமியார்கள்

எல்லாம் புற்றீசல் போல் முளைத்து விட்டார்கள்.

"கண்முன்னே நடக்கும் மாஜிக் நிகழ்ச்சிகள் போலத்தான் சில சாமியார்களின் சித்து வேலைகளும்!''.

நன்றி:மாலை மலர்

  • கருத்துக்கள உறவுகள்

இதுமட்டுமா சார் உலகத்தில நடக்குது?

கந்தப்பு சாமியார் எண்டு ஒருத்தர் இருக்கார், அவர் எந்த பகுதியில எது நடந்தாலும் அதை ஒரு நிமிடத்தில செய்தியா கொண்டு வந்துடுறார்

அதேமாதிரி சின்னப்பு சாமியார் எண்டு ஒருத்தர் இருக்கார், அவர் ஆங்கிலம் கதைக்கும் பக்தர்களை தனது தமிங்கில அறிவால் சிதறடித்துவிடுகிறார்,

அதெமாதிரி வலைஞன் சாமியார் எண்டு ஒருத்தர் இருக்கார், அவர் எப்படிப்பட்ட பாரிய கருத்துக்களாக இருந்தாலும் சரி அதை ஒரு செக்கனில் மாயமாக மறைந்து போக செய்வார்,

இப்படி பல சாமியார்கள் எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்காங்க சார் ஆட்டி படைத்துக்கொண்டு இருக்காக்க சாஆஆஅர்ர்ர்ர்.. :lol::lol:

இங்கே பார்க்கவும்

http://www.rfjvds.dds.nl/thesecretswami/thesecretswami.wmv

மேலதிக தகவல்களிற்கு

http://www.exbaba.com/

இங்கிருக்கும் பாபா... பக்தர்கள் அடிக்க வராதைங்கப்பா.... :P

அடட்ட்டா இவ்வளவு சாமியார்களா?

அடட்ட்டா இவ்வளவு சாமியார்களா?

நானும் சாமியாராகப் போறேன் :lol:

நானும் சாமியாராகப் போறேன் :lol:

:D

ஹாஹா. எந்தக்குறையை தீர்ப்பீங்க? :lol:

பாலண் அண்ணா சாமியாகா போக போறாரோ அது சரி......................ஏன் இந்த மாற்றம்

அண்ணா......... :P :mellow:

:lol: ஹாஹா. எந்தக்குறையை தீர்ப்பீங்க? :huh:

என்ன இப்படி கேட்டு போட்டீங்க எல்லா குறையும் தீர்பார் எங்கள் அண்ணா என்ன நான் சொல்லுறது சரி தானே அண்ணா.......... :P :P

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த கடவுளும் தனக்கு இது செய் அது செய் எண்டு கேட்டதில்லை ஆனாலும் செய்யிறீங்க ஆனா தப்பில்லை யாரொ சாமி சொன்னதெண்டு செய்யிறவன் முட்டாள்

என்ன கொடுமையையா இது :angry: :angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.