Jump to content

ஜனாதிபதி ரணிலை சந்திக்கவுள்ள ரெலோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணிலை சந்திக்கவுள்ள ரெலோ

2022-11-13 10:55:53

 

image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு எம்.பி.க்களுடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பு நடைமுறையில் சாத்தியப்பட வேண்டும் என்று ரெலோ தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலாநன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமான பேச்சுவர்த்தைகள் முன்னெடுகின்றபோது கிழக்கு மாகாணத்தினை புறக்கணிக்க முடியாது.

Selvam Adaikalanathan on Twitter: "https://t.co/4TjAgesWNc" / Twitter

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு உறுப்பினர்களுடன் சந்திக்கும் அதேநேரம் கிழக்கு உறுப்பினர்களின் பிரசன்னம் அவசியமாகின்றது. வடக்கை தனியாகவும் கிழக்கைத் தனியாகவும் பார்க்கமுடியாது.

அதேநேரம், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக இருந்தால் அது இணைந்த வடக்கு கிழக்கிலேயே அமைய வேண்டும் என்பது எமது நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.

Ranil Wickremesinghe: Sri Lanka's returning prime minister | Politics News  | Al Jazeera

அவ்வாறான நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது கிழக்கு உறுப்பினர்களையும் உள்ளீர்க்க வேண்டியது அவசியமாகின்றது. 

இதனால் ஜனாதிபதியைச் சந்தித்து நேரில் கோரிக்கை விடுப்பதென தீர்மானித்துள்ளோம். பெரும்பாலும் இந்தச் சந்திப்பானது அடுத்தவார பாராளுமன்ற அமர்வில் இடைப்பட்ட நேரத்தில் முன்னெடுப்பதற்கு திர்மானித்துள்ளளோம் என்றார்.

 

https://www.virakesari.lk/article/139845

 

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.