Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை - ஐ.நா. தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை - ஐ.நா. தகவல்!

By DIGITAL DESK 2

14 NOV, 2022 | 10:13 AM
image

 

இன்னும் சில நாட்களில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1 வீதம் மக்கள் தொகை பெருக்கம் பதிவாகி வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் குறைவாக பதிவானது.

இந்நிலையில் வரும் பதினைந்தாம் திகதியுடன் உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு பாராட்டு

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் திகதி உலக மக்கள்தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுறது. 

இந்த ஆண்டு மக்கள் தொகை தினத்தன்று ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையின்படி, நவம்பர் 15 ஆம் திகதியோடு உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு, உலகின் அதிக மக்கள் தொகை கொண்டு நாடு என்னும் சிறப்பை பெற்றுள்ள சீனாவை இந்தியா 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.

800 கோடியை எட்டுகிறது உலக மக்கள் தொகை

அதோடு வரும் காலத்தில் உலகின் மக்கள் தொகை பெருக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்கிற கணிப்பையும் ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 2030 ஆம் ஆண்டு உலகின் மக்கள்தொகை 850 கோடியை தாண்டிவிடும் என்றும், 2050ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 950 கோடியை தாண்டிவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. .

கொங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்திருக்கும் என்றும், ஆசியாவின சில நாடுகள், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் எதிர்மறையாக இருக்கும் எனவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து விடும் என்பதால் மக்கள் தொகைப் பெருக்கத்தில் தாமதம் ஏற்படும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தால் உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் தொகை அதாவது 25 முதல் 64 வயதுவரையிலான மக்கள் தொகை அதிகம் இருக்கும் எனவும், இதனால் பொருளாதாரம் உயர்ந்து தனி மனித வருவாயும் அதிகரிக்கும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.

இது நம்முடைய பன்முகத்தன்மையை கொண்டாடும் நேரம் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/139940

  • கருத்துக்கள உறவுகள்

யுனிவர்ஸ் 25 பரிசோதனை முடிவு நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது உள்ளது தமிழாக்கம்  விளக்கமாக இல்லை கோரா வில் இருந்து சுருக்கமாக .

இது விஞ்ஞான வரலாற்றில் மிகவும் திகிலூட்டும் சோதனைகளில் ஒன்று.

இது எலிகளின் குழு நடத்தை மூலம் விஞ்ஞானிகள் மனித சமூகங்களை விளக்கும் முயற்சிககாக செய்யப்பட்டது.

"யுனிவர்ஸ் 25" என்ற யோசனை அமெரிக்க விஞ்ஞானி ஜான் கால்ஹவுனிடமிருந்து வந்தது.

அவர் எலிகளுக்காக ஒரு இடத்தை வடிவமைத்து உருவாக்கினார். அதில் நூற்றுக்கணக்கான எலிகள் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும்படி செய்தார். இது விசேஷமாக வடிவமைக்கப்பட்டது.

 

நொறுக்குத்தீனி, உணவு, மற்றும் நீர் போதுமான அளவு வைக்கப்பட்டது.

சோதனை தொடங்கியது.

ஆரம்பத்தில், அவர் நான்கு ஜோடி எலிகளை அந்த இடத்தில் வைத்தார். குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியது, இதன் விளைவாக எலிகளின் தொகை வேகமாக வளர்ந்தது.

இருந்த போதிலும், 315 நாட்களுக்குப் பிறகு அவற்றின் இனப்பெருக்கம் கணிசமாகக் குறையத் தொடங்கியது. எலிகளின் எண்ணிக்கை 600 ஐ எட்டியபோது, அவற்றுக்கிடையே ஒரு சமூக படிநிலை ( hierarchy) உருவாக்கி கொண்டது.

பின்னர் "மோசமான எலிகள் என்று அழைக்கப்படும் "ரவுடி எலிகள்" தோன்றின.

பெரிய ரவுடி எலிகள், குழுவைத் தாக்கத் தொடங்கின. இதன் விளைவாக பல ஆண் எலிகள் உளவியல் ரீதியாக collapse ஆக தொடங்கியது.

பெண் எலிகள் தங்களைக் தானே காப்பாற்றிக் கொள்ள கூட முயலவில்லை, இதையொட்டி தங்கள் இளம் வயது எலிகளுடன் ஆக்ரோஷமாக பழகியது.

நாட்கள் செல்ல செல்ல, பெண் எலிகள் மேலும் மேலும் ஆக்ரோஷமான நடத்தையை காட்டியது. தனிமையை விரும்பிகளாகவும், மற்றும் இனப்பெருக்கத்தில் விருப்பம் இல்லாத தாகவும் இருந்தது. பிறப்பு விகிதம் கடுமையாக குறைய தொடங்கி இருந்தது,

அதே நேரத்தில், இளைய எலிகளில் இறப்பு அதிகரிப்பு ஏற்பட்டது.

பின்னர், "அழகான எலிகள்" என்று அழைக்கப்படும் ஆண் எலிகளின் புதிய வகை" தோன்றியது

அந்த "அழகான ஆண் எலிகள்" பெண்களுக்கு துணையாகவோ அல்லது தங்கள் இடத்திற்காக "சண்டையிடவோ" மறுத்துவிட்டது

அந்த அழகான ஆண் எலி அக்கறை காட்டியது உணவு மற்றும் தூக்கத்தில் மட்டுமே

ஒரு கட்டத்தில், "அழகான ஆண்கள்" மற்றும் "தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள்" மட்டும் தான் பெரும்பான்மையான இருந்தது.

காலம் செல்ல செல்ல, எலி குட்டி குழந்தைகள் இறப்பு விகிதம் 100% ஐ அடைந்தது. இனப்பெருக்கம் பூஜ்ஜியத்தை அடைந்தது.

மீதி மிச்சம் இருந்த எலிகள் மத்தியில், ஓரினச்சேர்க்கை காணப்பட்டது. அதே நேரத்தில், ஏராளமான உணவு இருந்தாலும், நரமாமிசம் போல எலிகளே எலிகளை சாப்பிடுவது அதிகரித்தது.

சோதனை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எலிகளின் காலனியின் கடைசி குட்டி பிறந்தது.

1973 வாக்கில், அவர் யுனிவர்ஸ் 25 சோதனையில் கடைசி சுட்டியைக் கொன்றார். ஜான் கால்ஹவுன் அதே பரிசோதனையை இன்னும் 25 முறை மீண்டும் செய்தார், ஒவ்வொரு முறையும் முடிவு ஒரே மாதிரியாக தான் இருந்தது.

கால்ஹோனின் இந்த சோதனை, உலகத்தில சமூக சரிவை விளக்குவதற்கு ஒரு மாதிரியாகப் பயன்படுத்தப்பட்டது.

மேலும் அவரது ஆராய்ச்சி நகர்ப்புற சமூகவியல் ஆய்வுக்கான மைய புள்ளியாக செயல்படுகிறது.

இது போல நடக்குமா என்பவர்களுக்கு:

it is happening in Japan among young males known as "Herbivore men". They have been forgoing romantic and/or sexual relationships with women and it is causing a serious problem because the country's birth rate is plummeting. Some of these men are also "Hikikomori" which are men who are nearly totally socially withdrawn and who live as hermits under their parents' roofs throughout their teens, twenties, and even into their thirties.

சோதனையை பற்றி அறிந்து கொள்ள : http://tomax7.com/HeyGod/misc/MousePopulationStudy.PDF (http://tomax7.com/HeyGod/misc/MousePopulationStudy.PDF)

https://ta.quora.com/unkalaip-poruttavarai-manita-varalarril-mikapperiya-marrum-mikac-ciranta-kantupitippukal-evai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் 800 ஆவது கோடி குழந்தை பிறந்தது; 900 கோடியாக அதிகரிப்பது எப்போது?

By DIGITAL DESK 3

15 NOV, 2022 | 09:29 AM
image

உலகின் 800 ஆவது கோடி குழந்தை பிறந்துள்ளது. உலக சனத்தொகை 800 கோடியை அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

உலக சனத்தொகை 800 கோடியாக அதிகரிக்கிறது

2011 ஒக்டோபர் 31 ஆம் திகதி உலக சனத் தொகை 700 கோடியாக அதிகரித்தது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அறிவித்திருந்தது.

ஆதன்பின் 11 ஆண்டுகளில் உலக சனத்தொகை மேலும் 100 கோடியினால் அதிகரித்துள்ளது.

இதேவேளை அடுத்த வரும் உலகில் ஆகக்கூடுதலான சனத்தொகையைக் கொண்ட நாடாக சீனாவைக் கடந்து இந்தியா முன்னேறும் எனவும் ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு உலக சனத்தொகை 850 கோடியாக அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சனத்தொகை 900 கோடியாகுவதற்கு 15 வருடங்கள் தேவைப்படும் என ஐநா மதிப்பிட்டுள்ளது. அதாவது, 2037 ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 900 கோடியாகலாம்.

https://www.virakesari.lk/article/140044

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இதேவேளை அடுத்த வரும் உலகில் ஆகக்கூடுதலான சனத்தொகையைக் கொண்ட நாடாக சீனாவைக் கடந்து இந்தியா முன்னேறும் எனவும் ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

 

Light Turn Off GIF by Alexis Tapia - Find & Share on GIPHY

சனத்தொகை பெருக்கத்தில், இந்தியா  விரைவில்...  சீனாவை, பின்னுக்கு தள்ளி 
முதலாம் இடத்தை பிடிக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.  👏

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.