Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை

By DIGITAL DESK 2

07 DEC, 2022 | 04:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (டிச. 08) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு முன்வைத்தார்.

அதன் பிரகாரம்  2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 22 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை வரையிலான 7 நாட்கள்  இடம்பெற்றன.

செவ்வாய்க்கிழமை மாலை  6 மணிக்கு  இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக  121 பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

இதில் அரசுடன் இணைந்து  எதிரணியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம்.பி.க்களான ஜீவன் தொண்டமான், ராமேஸ்வரன்  ஆகியோரும் எதிரணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த துமிந்த திசாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜோன் செவிரத்ன ஆகியோரும் வாக்களித்தனர்.

வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சிகளான  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,தேசிய மக்கள் சக்தி (ஜே வி.பி.),கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் வாக்களித்தனர். அதேபோன்று எதிரணியில் உள்ள ஏ.எல்.எம்.அதாவுல்லா, அலி சப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவி்ல்லை. என்றாலும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் இருந்த போதும் வாக்களிப்பதில் தவிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம்   கடந்த 23 ஆம்  திகதி  புதன்கிழமை ஆரம்பமாகிய நிலையில் நாளை வியாழகிழைமை (டிச. 08) மாலை 5மணியுடன் நிறைவடைந்ததுடன் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான (இறுதி) வாக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது.

https://www.virakesari.lk/article/142440

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

By VISHNU

08 DEC, 2022 | 07:04 PM
image

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

 

317092465_834944784223314_12434897989682

315528740_970973443876246_77878940217109
314394299_455839069855116_26282486883538

315283981_541724577804390_88787252092706

வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் வழங்கப்பட்டன.

https://www.virakesari.lk/article/142583

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.