Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த 25ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தினை உருவாக்குவேன்- ஜனாதிபதி ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த 25ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தினை உருவாக்குவேன்- ஜனாதிபதி ரணில்

11 Dec, 2022 | 02:14 PM
image

இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய வகையில் அடுத்த 25  ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றவுள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்கவுடன் இளைஞர்கள் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.  ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இளைஞர்கள் முன்வைத்த கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பதில்களும் வருமாறு :

கேள்வி :  இந்த ஆண்டு வரவு, செலவுத்திட்டம், ஏன் இளைஞர்களுக்கான வரவு, செலவுத்திட்டம்என்று அடையாளப்படுத்தப்படுகிறது? இதில் இளைஞர்களுக்கு என்ன வாய்ப்புக்கள் இருக்கின்றன?

பதில் : எமது பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இது ஒரு பெரிய நெருக்கடி. நாம் இதிலிருந்து மீள வேண்டும். அப்போதுதான் நாம் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியும். ஆனால், நாம் இந்த நிலையில் இப்படியே இருக்கப் போகிறோமா? அல்லது இதிலிருந்து மீளப் போகிறோமா என்பதே முதல் கேள்வியாகும். புதிய பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்ப முடியாது. 

25 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு இதனை முன்னெடுக்க வேண்டும். இது பெரியவர்களுக்கான வரவு, செலவுத்திட்டம் அல்ல. பொதுவாக 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு என்று சொல்ல வேண்டும். இன்று உங்களுக்கு 40 வயது என்றால், உங்களுக்கு 65 வயது ஆகும் போது இந்த இலக்கை அடைய முடியும். இன்று 20 வருடங்கள் என்றால் 45 வயது ஆகும் போது இந்த இலக்கை அடைய முடியும்.

அப்போது அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.  நான் பிறந்தபோது ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. இன்றைய நிலையில் ஆப்கானிஸ்தான் மட்டுமே நமக்கு கீழே உள்ளது. இந்தப் பிரச்சினையால் எமது இளைஞர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். 

நாட்டில் சிறிது காலம் நிலவிய இனக் கலவரத்தால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று அப்படிப்பட்ட கலவரங்கள் இல்லாவிட்டாலும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பெரும்பாலான மக்கள் இங்கு வாழ விரும்பவில்லை. தற்போதைய அரசியல் அமைப்பில் அவர்களுக்கு திருப்தியில்லை. 

இந்த ‘முறைமையில்’ மாற்றம் வரவேண்டும் என்கிறார்கள். மேலும் நாம் பொருத்தமான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதன்படி, அடுத்த 25 ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க உள்ளேன். ஜப்பான், சீனா, சிங்கப்பூர், கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் வகையில் முன்னேறிச் செல்லக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். இது இந்த வரவு, செலவுத் திட்டத்தில்    இருந்து இந்தப் பணி ஆரம்பமாகிறது. 

ஆகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட வரவு,செலவுத் திட்டம் இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்திற்கு ஓரளவு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவந்தது. 2023 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதன்மூலம் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். 

கேள்வி :  அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் தேசியமயமாக்கப்படும் போது பிரதேச செயலகத்தின் ஊடாக மாத்திரம் காணி அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து மக்கள் அஞ்சுகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் :  நான் முதலில் நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தப் பார்க்கிறேன். ஒட்டு மொத்த மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியை தடுக்க வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு நபர்களுக்கு காணி வழங்குகின்றன. யாருக்கு கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. என்ன காரணத்திற்காக கொடுக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. 

1977இல் இந்த காணிகள், காணி ஆணையாளருக்கு கீழே இருந்தன. கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு காணி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த அமைப்புகள் தங்களுக்குத் தேவையான விதத்தில் நிலத்தைப் பிரித்துக் கொள்கின்றன. 

அன்றைய நிலப் பங்கீட்டு முறை இன்று இல்லை. நிலச் சீர்திருத்தப் பேரவைக்கு மட்டுப்படுத்தப்பட்ட பணியைக் கொடுத்தோம். ஆனால் இப்போது நிலத்தையும் பிரித்துக் கொடுக்கிறார்கள். நகர அபிவிருத்தி அதிகார சபை, ரயில்வே திணைக்களம் போன்ற பல நிறுவனங்கள் முறையற்ற விதத்தில் காணிகளை விநியோகம் செய்கின்றன.

சில சமயங்களில் காணி ஆணையாளர் திணைக்களத்தில் இருந்து காணி வழங்குவதும் பிரச்சினையாக உள்ளது. இன்று அரசிடம் எவ்வளவு காணி இருக்கிறது என்று தெரியவில்லை. விவசாயத்தை நவீனப்படுத்த விரும்பினோம். காணி வழங்குவதற்கு நாட்டில் உள்ள காணிகளின் அளவு குறித்து தமக்கு தெரியாது என சம்பந்தப்பட்ட பலர் தெரிவித்தனர்.

அதனால்தான் நிலத்தை விநியோகிக்க அதிகாரம் ஒன்றை வகுக்க முயற்சித்தேன். தற்போது ஒரு குழுவை நியமித்து உள்ளோம். அந்த குழுவின் அறிவுறுத்தல்களின்படி மட்டுமே காணி பகிர்ந்தளிக்க வாய்ப்பு வழங்கப்படும். இது ஒரு தற்காலிக முறையாகும். இதற்காக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்.

கேள்வி :  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில் அரச பாதுகாப்பு சேவைகளுக்கு 10 சதவீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

பதில் : பாதுகாப்பு அமைச்சகம் என்பது இராணுவம் மட்டுமல்ல. இடர்முகாமைத்துவம் உள்ளிட்ட பல பகுதிகள் இதில் அடங்கும். அதற்கான செலவுகளும் உள்ளன. எனவே, இராணுவச் செலவு,ஏனைய விடயங்களைப் போல, 24 மணி நேரத்தில் மாற்ற முடியாது. நமது இராணுவம்,பணியாளர்களுக்காக அதிக பணத்தை செலவிடுகிறது. 

அவற்றை ஒரேயடியாக 40,000-50,000 குறைக்க முடியாது. அவர்கள் விருப்பத்துடன் சேவையில் இருந்து விலக அனுமதிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி இராணுவத்தையோ அல்லது வேறு எந்த அரச சேவையையோ விட்டு யாரும் விலகவில்லை. எதிர்காலத்தில் கடற்படை மற்றும் விமானப்படையில் கவனம் செலுத்த வேண்டும். 

இராணுவத்தில் ஆட்கள் குறையலாம். ஆனால் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்று இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது. செலவு செய்ய்பட்டது. அந்தப் போர் முடிவுக்கு வந்ததால், அவர்களை மறுநாளே வெளியேற்ற முடியாது. 

கேள்வி :  நாட்டில் உள்ள மருத்துவ பீடங்களில் இருந்து வெளியேறும் மருத்துவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஏதாவது வேலைத்திட்டம் உள்ளதா?

 பதில்: உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது. எனவே அதனுடன் போட்டியிட முடியாது. ஐயாயிரம் டொலர்கள் என்று சொன்னால் அவர்களை எப்படி தடுக்க முடியும்? ஒரு பகுதியினர் செல்ல வேண்டும். முடிந்த அளவு மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்காக குருநாகல், பொலன்னறுவை போதனா வைத்தியசாலையை திறந்து மருத்துவ பீடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி : வரவு, செலவுத்திட்டம் உரையின்படி அரச நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கள் குறித்து முன்மொழிந்துள்ளீர்கள். தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்துவது பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். அதைப் பற்றி அறிய விரும்புகிறோம். ?

பதில்: நமது நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் 1930 - 1940 களில் தொடங்கியது. அது அவ்வப்போது திருத்தப்பட்டு வந்தது. ஆனால் ஒரு முழுமையான சட்டம் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. 30-40களில் சூழல் வேறு. உதாரணமாக, நமக்கு இருக்கும் ஓய்வூதியம் பெரும் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை. இதையெல்லாம் பார்த்து இதற்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அந்தச் சட்டங்களின்படி நாம் செயல்பட வேண்டும். சிலர் இன்று வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். இன்றைய தொழிலாளர் சட்டத்தில் அத்தகைய சட்டம் இல்லை. இதற்கான உரிய சட்டங்கள் இதுவரை கொண்டு வரப்படவில்லை. தொழிலாளர் சட்டத்தை எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

கேள்வி : ஆராய்ச்சி துறைக்கு எவ்வளவு பணம் ஒதுக்கினாலும் அதன் நிலை திருப்திகரமாக இல்லை. இதற்காக இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில்    இருந்து பணம் ஒதுக்க ஏற்பாடுள்ளதா? 

பதில் : மேலும் நிறுவனங்களை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. ஏற்கனவே உள்ள நிறுவனங்களில் இருந்து திட்டங்களை தொடங்க பணம் கொடுக்க முடிவு செய்தோம். இந்த தொகையை வர்த்தக மதிப்புள்ள திட்டங்களுக்கு வழங்குவோம். பணம் ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை. பொருளாதாரத்திற்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வோம் என்று நம்புகிறோம்.

கேள்வி :  பொதுப் பல்கலைக்கழகங்களில் பகிடி வதையை நிறுத்த முடியவில்லையா?

பதில் :  பகிடிவதை நிறுத்தப்பட வேண்டும். அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். அடுத்த ஆண்டு முதல் கண்டிப்பாக இவை அமுல்படுத்தப்படும். பகிடிவதை செய்வது கொடுமைக்காரனின் உரிமை அல்ல. பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். 

எங்கள் காலத்திலும் பகிடிவதை இருந்தது. அவர் என்னை ஒரு பாடலைப் பாடச் சொன்னார்.அல்லது புதிய ஆடைகளை அணியச் சொன்னார். ஆனால் தற்போது ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது மனித நேயமற்ற செயல். பல்கலைகழக துறையினர் இதுபற்றி மௌனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் அதை நிறுத்த வேண்டும். 

கேள்வி :  வங்கி அமைப்பு தற்போது படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாக ஒரு கதை உள்ளது. இதனைத் தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இது நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியுமா?

பதில் :  முதலில் வங்கி அமைப்பு சீர்குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வட்டி வீதம் அனைத்தும் உயரும் நிலையில் நாடு உள்ளது. வட்டி வீதம் உச்சத்தை எட்டியுள்ளன. இது படிப்படியாக குறையும். இது ஒரு அசாதாரண நிலை. இங்கே நீங்கள் சாதாரணமாக செயல்பட முடியாது. அடுத்த ஆண்டு இதை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி :  வரவு, செலவுத்திட்டம் முன்மொழிவுகளில் ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் ஹில்டன் போன்ற அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைகின்றன. இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் :   எங்களிடம் பணமில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை. தந்திரோபாயங்கள் மூலம் அதைக் கட்டியெழுப்புவதுதான் ஒரே வழி. அரசுக்கு வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தொடர்ந்து கொண்டு நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளோம். மேலும் இங்கு சுமார் 03 பில்லியன் டொலர்கள் உள்ளன. எனவே எங்கள் திட்டத்தின் மூலம் ரூபாவும் வலுவடையும்.

கேள்வி :  அரசு சேவையின் செலவுகளையும் வீண் விரயத்தையும் குறைக்க இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில் ஏதாவது திட்டம் உள்ளதா?

பதில் : அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையும், வட்டியையும் செலுத்துவதில் இந்தப் வரவு, செலவுத்திட்டத்தில்   பெரும் பங்கு இருக்கிறது. உண்மையில் அது பெரும் சுமைதான். எதிர்காலத்தில்இ ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதிகரித்து அவர்களுக்கு எப்படி பணம் செலுத்துவது என்று கூட யோசிக்காமல், அவர்கள் உழைத்துள்ளனர். தேவையில்லாமல் அரச பணியில் ஆட்களை நியமித்ததில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. 

2035இற்கு பின்னர் இவர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவது பெரிய பிரச்சினையாகிவிடும். இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான முறையான தீர்வு எங்களிடம் உள்ளது. அதற்கான கொள்கை இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில்    சேர்க்கப்பட்டுள்ளது.

கேள்வி :  சமூகத்தில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வரவு, செலவுத்திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இந்த வரவு, செலவுத் திட்டத்தில்    வணிக நீதிமன்ற விவகாரங்கள் குறித்து உங்கள் நிலைப்பாட்டை விபரிக்க முடியுமா?

பதில் :  வரவு, செலவுத் திட்டத்தில் இருந்ததைப் போலவே, அதற்கு முன்னரும் மேற்பார்வைக் குழுக்களை நியமிக்கவும், நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுக்களை வலுப்படுத்தவும் நான் முன்மொழிந்தேன். முதலில் பாராளுமன்றத்தில் பொதுக் கணக்குக் குழு மட்டுமே இருந்தது. பின்னர் பொது விவகாரங்களுக்கான இரண்டாவது குழு அமைக்கப்பட்டது. 2016இல் இன்னொரு குழுவை உருவாக்கினேன்.

மேலும், கண்காணிப்புக் குழுக்களையும் நியமித்தோம். அதன் ஒரு பகுதி குறிப்பாக பொருளாதார மற்றும் நிதித் துறையில் உள்ளது. இந்தக் குழுக்கள் பலப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, முறைகள் மற்றும் நடைமுறைகள் குழு நியமிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு வருமானத்தைப் பெறுவதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும். 

உண்மையில் ஆறு குழுக்கள் உள்ளன. இனி இதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்மூலமே இதனை வெற்றியடையச் செய்ய முடியும். அதற்கு ஆதரவாக பாராளுமன்ற பட்ஜெட் அலுவலகம் என்ற பெயரில் ஒரு சுயாதீன அலுவலகம் அமைக்கப்படுகிறது.

இந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி திடீரென ஏற்படவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த நெருக்கடி தெரிந்தது. இது பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து இந்த நிலைக்கு வரும் என்று ஒரு பாராளுமன்ற அறிக்கை கூட சமர்ப்பிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். அப்படியிருந்தும் சிறுபான்மையினருக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியும். 

சிறுபான்மையினர் கூட அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. எனவே, இரு தரப்பினரும் இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மத்திய வங்கி ஆளுநர் குறித்து பேசினாலும், அவரும் இதுகுறித்து எச்சரிக்கைவில்லை. எனவே, தற்போதுள்ள இந்த குழுக்களை பயன்படுத்தி,அதன்படி செய ற்பட வேண்டும்.

இரண்டாவது விடயம், கொழும்பில் வர்த்தக நீதிமன்றம் உள்ளது. ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் இன்னும் கொழும்பில் மட்டுமே உள்ளது. கொழும்பில் இருப்பதற்கு அதுவே காரணம். தனி பிராந்திய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு மாகாணத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கேள்வி : இ-கொமர்ஸ் என்ற இணைய வணிக வளர்ச்சிக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் எந்த அளவு ஆதரவை வழங்க முடியும்?

பதில்: டிஜிட்டல் மயமாக்கலில் மட்டுமல்ல, வர்த்தகத்திலும், சட்டத்திலும் நாம் பின்தங்கியுள்ளோம். ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு கொள்கைகள் இருந்தாலும், அவை செயல்படுத்தப்படவில்லை. 

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கத்திற்காக நிறுவப்பட்டன. டிஜிட்டல் துறை அசுர வளர்ச்சியடைந்துள்ளதால், உலக அளவில் அந்நியச் செலாவணியை நிச்சயம் ஈட்ட முடியும்.

ஆனால் இந்த நிறுவனங்கள் இறுதியில் லாபத்தை மட்டுமே சார்ந்துள்ளன. நாம் செய்ய வேண்டியது முதலில் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தில் நுழைய வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது. அது போதுமான அளவு வளர்ந்துள்ளது. 

டிஜிட்டல் தொழில்துறையில் உள்ளவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். அவர்களை எப்படி ஆதரிப்பது என்பதை நாங்கள் விவாதிக்கிறோம். அவர்களை போட்டித்தன்மையுடன் வைத்திருக்க வேண்டும்.

கேள்வி : இலங்கையின் தற்போதைய கல்வி முறைமையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாடசாலைகளுக்கு வழங்கப்படும் வசதிகளுக்கு இடையில் பாரிய இடைவெளி இருப்பதை நாம் அறிவோம். தற்போதைய வரவு, செலவுத் திட்டத்தில்    இந்த இடைவெளியைக் குறைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

பதில்: நமது முழு கல்வி முறையையும் மறுசீரமைக்க வேண்டும். கொரோனா பாதிப்பால், கல்வி முறை முன்பு போல் செயல்படவில்லை. மேலும், பாடத்திட்டத்தைப் பார்த்தால், பல பாடங்கள் பின்தங்கியுள்ளன. நீங்கள் கூறியது போல், பாடசாலைகளுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் இடையில் தரத்தில் வேறுபாடு உள்ளது. இந்த குறைபாடுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். 

ஆனால் வெவ்வேறு பிரிவுகள் ஒன்றுக்கொன்று இணக்கமாக இல்லை என்பதே பிரச்சினையாக இருக்கிறது. முதலில் பல்வேறு துறைகளில் உள்ள குறைபாடுகளை கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒரு விரிவான கல்வி முறை குறித்து ஆராய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.இதற்கு ஓரிரு வருடங்கள் ஆகும். இதனை நடைமுறைக்குக் கொண்டுவர சுமார் ஐந்து முதல் ஏழு வருடங்கள் ஆகும். எனவே நாம் இப்போதே இதனை ஆரம்பிக்க வேண்டும்.

கேள்வி : சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இலங்கையில் உயர்கல்வி கற்கும் இளைஞர்களை எவ்வாறு ஈடுபடுத்துவது?

பதில் :  சுமார் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வழமையாக இலங்கைக்கு வருகின்றனர். ஒருநாளைக்கு ஒரு சுற்றுலாப் பயணி 500 டொலர்களை செலவிடும் வகையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். அத்துடன் புதிய சுற்றுலாப் பயணிகளை நாம் ஈர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். அதற்கு நாங்கள் என்ன சேவையை வழங்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். 

இரண்டாவது, நமது சந்தை என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாம் எந்த நாடுகளில் கவனம் செலுத்துகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 500 டொலர்கள்செலவழிக்கும் மக்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? முன்பு அறைகளை விற்பனை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தினோம். ஆனால் இந்த முறையில் புதிய விடயங்களை முயற்சிக்க வேண்டும். 

அதற்குத்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுலாத் துறைக்கு போதிய பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் இல்லை. பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் போதுமானதாக இருக்காது. முதலில் இந்த குறைபாடுகளை நாம் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். 

கேள்வி : கடல்சார் சுற்றுலாவில் இளைஞர் சமுதாயத்திற்கு என்ன மாதிரியான வாய்ப்பு உள்ளது?

பதில் : ஒருபுறம், கப்பல் சுற்றுலா. தற்போது இலங்கையைச் சுற்றிச் செல்லக்கூடிய பல கப்பல்கள் எங்களிடம் உள்ளன. இதனைத்தவிர, வங்காள விரிகுடாவை ஒட்டிய சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். அந்தமான் தீவுகள் வழியாக, பங்களாதேஷ், மியான்மர், இந்தியாவின் துறைமுகங்களில் இருந்து திருகோணமலை வழியாகவும், அதே நேரத்தில் தாய்லாந்து, மலேசியா,சிங்கப்பூர் வழியாகவும் விரிவாக்கப்பட வேண்டும். உண்மையில், வங்காள விரிகுடா, கரீபியனை விட பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது.

கேள்வி :  முதலீட்டை ஊக்குவிக்க, முதலீட்டுச் சூழலை உருவாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?

பதில் :  முதலீட்டாளருக்கு அனுமதி வழங்க ஒரு வருடம் ஆகின்றது. முதலீட்டாளர் வந்து தன் வேலையை எளிதாகச் செய்வதற்கு சாதகமான சூழல் அமைய வேண்டும். அந்த முதலீட்டாளருக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் அவர்களின் பணிகளை செய்துமுடிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதன்பின்னர் முதலீட்டிற்குத் தேவையான விடயங்களை அங்கீகரிக்க பல துறைகள் உள்ளன. இவை அனைத்தும் துரிதமாகசெய்யப்பட வேண்டும். 

சில நாடுகள் இதை மூன்று நாட்களில் செய்கின்றன. முதலீட்டு ஊக்குவிப்புச் சபை மற்றும் ஏற்றுமதி சபை இரண்டையும் இணைக்க வேண்டும். ஏனெனில் இவற்றின் சேவைகளில் திருப்தி அடைய முடியாது. உண்மையில், இந்நாட்டில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை இருக்க முடியாது. நமக்குப் பின்னர் இந்தப் பணியைத் தொடங்கிய நாடுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

 

https://www.virakesari.lk/article/142816

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

25 வருடத்துக்கு அசைய மாட்டார் போலும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

25 வருடத்துக்கு அசைய மாட்டார் போலும் 

2047 தீபாவளிக்கு ரணில் இனப்பிரச்சனைக்கு தீர்வு தாறாராம். சம்+சும் சொன்னவை🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

2047 தீபாவளிக்கு ரணில் இனப்பிரச்சனைக்கு தீர்வு தாறாராம். சம்+சும் சொன்னவை🤣

இவங்க நம்புவாங்க 

ஆனால் ஊரில் சொல்வார்கள்

சொல்பவன் சொன்னால் கேட்பவருக்கு மதி என்ன என்று?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இவங்க நம்புவாங்க 

ஆனால் ஊரில் சொல்வார்கள்

சொல்பவன் சொன்னால் கேட்பவருக்கு மதி என்ன என்று?

சிங்களத்தில் மதி என்றால் குறைவு என்றுதானே அர்த்தம்.

கேட்பவருக்கு, மதி - மதி 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் மட்டும் வெட்டி விழுத்துகிறார். செயல் எதனையும் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

25 வருடத்துக்கு அசைய மாட்டார் போலும் 

2022 - 1949 = 73 +25 =98 

சரிதான் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

2022 - 1949 = 73 +25 =98 

சரிதான் 🤔

🤣 @விசுகு அண்ணா சொல்லுறார் - ஒரு ஆம்பிளைக்கு பஞ்சு மூட்டைய தூக்கும் பலம் இருக்கும் வரைக்கும் பெண்ணாசை போகாதாம்.

நரியருக்கு அது அறவே இல்லை ஆனால் பதவியாசை? 98 தாண்டும் போலயே🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.