Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

rayil.png

ஈழத்து பொப்பிசை பாடல்கள் என மதியம் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள்..அதில் இந்த எளிமையான "இரயிலோடுது.." பாடல் மிகவும் பிடிக்கும்.

'ஈழம்' பற்றி எந்த விபரமும் எமக்கு தெரியாது, ஆனால் அவற்றைப் பற்றி தெரிந்து உருவகப்படுத்திக்கொள்ள தூண்டுதலானது இம்மாதிரி பாடல்களே... அதுவும் மிகக் குறிப்பாக, இலங்கை வானொலியும், அதன் தமிழ்ச் சேவை அறிவிப்பாளர்களுமே..! 😍

 

 

Edited by ராசவன்னியன்
சொற்பிழையை திருத்த..
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் வரும் "கொழும்பேத்துது.." என்ற சொல் 'கொழும்பு சென்று பொருளீட்ட உந்துதல் ஏற்படுத்துகிறது' என்ற பொருள்படுமா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ராசவன்னியன் said:

ஈழத்து பப்பிசை பாடல்கள்

வன்னியர் பப்பிசையா?

பொப்பிசை என்று எண்ணுகிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் பப்பிசையா?

பொப்பிசை என்று எண்ணுகிறேன்.

தவறை சுட்டியமைக்கு மிக்க நன்றி, பிரியன். 🤝

இப்பொழுது திருத்தியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, ராசவன்னியன் said:

தவறை சுட்டியமைக்கு மிக்க நன்றி, பிரியன். 🤝

இப்பொழுது திருத்தியுள்ளேன்.

இலங்கையில் போர்த்துக்கேயரின் இசை பாரம்பரியத்தில் வந்த பொப் இசைப்பாடலில் சிங்கள இசையியலில் முன்னிலை வகித்த நிலையில், தமிழக திரை இசையில் நனைந்து கொண்டிருந்த தமிழர்கள் இடையே, சிங்களவர் மத்தியில் வாழ்ந்த தமிழர்களினால், பொப் இசையில் தமிழ் பாடல்கள் புகுந்தன.

இவை பெரும் வரவேற்பினை இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பெற்றன. முதல்வர் எம்ஜிஆர் அழைப்பில் தமிழகம் போய், 'கள்ளுக்கடை பக்கம் போகாதே' பாடலை தமிழக அரசு சார்பில் பாடி வெளியிட்டார் மறைந்த ஏ ஈ மனோகரன். சிலோன் மனோகரன் என்ற பெயரில் படங்களிலும் நடித்தார்.

தமிழ் பாடல்கள் புகழ் பெற, அவை அனைத்துமே, மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பாடியதாக, ஒரு மேடையில் சொன்னார் மனோகரன்.

சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே.... இன்றும் தமிழகம் எங்கும் ஒலிக்கும் பாடல்.

 

Edited by Nathamuni
  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.