Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோலியின் அசத்தல் தொடக்கம், டுப்ளெஸ்ஸியின் சரவெடி - பட்டாசாக வெடித்த பெங்களூரு 'கே.ஜி.எஃப்'

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

10 ஏப்ரல் 2023, 16:12 GMT
புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு, லக்னெள அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னெள அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். லக்னெள அணி இந்தப் போட்டியில், மார்க் வுட், ஆவேஷ் கான் ஆகியோரை ஆடும் லெவனில் களமிறக்கியது.

இன்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸில் பெங்களூரு அணியின் கே.ஜி.எஃப் ஆக களமிறங்கிய கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, கேஜிஎஃப் காட்டிய ஆக்ஷனை போலவே சுவாரஸ்யம் குறையாத அதிரடியால் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார்கள்.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெஸ்ஸி களமிறங்கினார்கள். முதல் ஓவரை ஜெய்தேவ் உனாத்கத் வீசியபோது, விராட் கோலி பவுண்டரி ஷாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவரது செயல்பாட்டைக் கணித்து ஃபீல்டிங்கை திறமையாகத் தொடங்கியது லக்னெள.

விராட் கோலி பந்து வீச்சாளர்களைத் தொடர்ந்து சிந்திக்க வைக்கும் வகையில் ஆடிக்கொண்டே இருந்தார். அவர் க்ரீஸ் லைனுக்கு முன்னும் பின்னும் தொடர்ச்சியாக நகர்ந்துகொண்டே இருந்தது, பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு நீளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

அதன்விளைவாக ஆவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், ஃபோர் என்று அவர் திட்டமிட்டு அடித்தார். வழக்கமாக தொடக்கத்தில் அதிரடி காட்டுவது விராட் கோலியின் அணுகுமுறை அல்ல. ஆனால், இந்தப் போட்டியில் தொடக்கத்திலேயே பவுண்டரி ஷாட்டுகளுக்கான அவரது நோக்கம் தெளிவாகத் தெரிந்தது.

சின்னசாமி மைதானத்தைப் பொறுத்தவரை, பந்துவீச்சாளர்கள் செய்யும் சிறு தவறுகள்கூட பெரிய இழப்புகளை அவர்களது அணிக்குக் கொண்டுவரக்கூடும். அத்தகைய பிழைகளைச் செய்ய வைத்து, பயன்படுத்தியும் கொண்டார் கோலி.

ஆரம்பத்திலேயே அவர் பந்துகளைப் பறக்கவிடத் தொடங்கவே அதைத் தடுக்க, க்ருணால் பாண்ட்யாவை களமிறக்கியது லக்னெள.

அவர் ஏற்கெனவே இரண்டு முறை கோலியின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவின் சுழற்பந்து வீச்சாளர்களிடம்தான் கோலி, டுப்ளெஸ்ஸி இருவருமே ஆட்டமிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை உணர்ந்து லக்னெள 3வது ஓவரிலேயே க்ருணாலை களமிறக்கியது. ஆனால், அவரது ஓவரில் அதற்கான பலன் கிடைக்கவில்லை.

கோலியின் அதிரடியால் அதிர்ந்த சின்னசாமி அரங்கம்

சின்னசாமி மைதானத்திற்கும் கோலிக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பு இன்றைய போட்டியிலும் வெளிப்பட்டது. அவர் முதல் ஓவரில் இருந்தே பல்வேறு அதிரடி முயற்சிகளை மேற்கொண்டார். ஆவேஷ் கான், க்ருணால், மார்க் வுட் என்று ஒவ்வொருவரது பந்துகளையும் முழுமையாக அவதானித்து, சிக்ஸ், ஃபோர் என்று அடித்துக் கொண்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

லக்னெளவின் பவுலர்களை நிலைகொள்ளவே விடாமல் தொடர்ந்து அவரது பேட்டில் இருந்து பட்டாசாக வெடித்த பவுண்டரி ஷாட்கள், பந்துவீச்சாளர்களை அழுத்ததிலேயே வைத்திருந்தது. பவர் பிளே முடிவில் விராட் கோலி நான்கு பவுண்டரி, மூன்று சிக்ஸ் அடித்திருந்தார்.

பெங்களூரு அணி, 56 ரன்களை எடுத்திருந்தது. குறிப்பாக, பவர் பிளேவின் இறுதி ஓவரில் மார்க் வுட் பந்துவீச்சில், நேராக அவரது தலைக்கு மேலேயே சிக்சர் ஷாட் அடித்தபோது, கோலியின் ஆட்டத்தைக் கொண்டாடிய ரசிகர்களின் ஆனந்தக் கூச்சல் பெருகியது. அதிலும், அவர் ஒன்பதாவது ஓவரில் 36 பந்துகளில் அரை சதம் அடித்தபோது, சின்னசாமி மைதானமே அதிர்ந்தது.

கோலி, டுப்ளெஸ்ஸிக்கு எதிராக லக்னெளவின் சுழற்பந்து தாக்குதல் தொடர்ந்தது. ஆனால், ரவி பிஷ்னோய், க்ருணால் என்று இருவரின் தாக்குதலையும் உணர்ந்த இருவருமே நிதானித்து பவர் பிளேவுக்கு அடுத்த மூன்று ஓவர்களிலும் சிங்கிள்ஸ் மட்டுமே ஆடினார்கள். ஆனால், 10வது ஓவரில் மீண்டும் சிக்சரோடு அதிரடியை மீண்டும் தொடங்கினார்.

தொடக்கத்தில் இருந்து கோலிக்கு பக்கபலமாக நின்று ஈடுகொடுத்துக் கொண்டிருந்த டுப்ளெஸ்ஸி, 9வது ஓவர் வரை நிதானத்தைக் காட்டினார். அதற்குப் பிறகு அவரும் பந்துகளைப் பறக்கவிடத் தொடங்கினார். க்ருனால், ரவி பிஷ்னோய் போன்ற இன்று குறிப்பிடத்தக்க அளவில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினார்கள்.

ஆனால், அமித் மிஷ்ரா அதைச் சாதித்துக் காட்டினார். அவரை களமிறக்கி ராகுல் புத்திசாலித்தனமாக காய் நகர்த்தினார். அவரது ஷார்ட் பால் ஒன்றை பவுண்டரி ஷாட் அடிக்க கோலி முயன்றார்.

ஆனால், அதை மார்கஸ் ஸ்டாய்னிஸ் கேட்ச் பிடித்து கோலியை வெளியேற்றினார். 44 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர் அடித்து 61 ரன்களோடு விராட் கோலி வெளியேறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

டுப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் கூட்டணியின் சரவெடி

டுப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல்லின் பேட்டிங்கை கணித்து அதற்கேற்ப லக்னெள வீரர்கள் பந்துவீசினார்கள். டுப்ளெஸ்ஸிக்கு வீசும்போது பந்து ஸ்டம்ப் லைனிலேயே பிட்ச் ஆனது அவரது பேட்டிங்கை தடுத்துக் கொண்டிருந்தது.

அதையும் தாண்டி இந்தப் போட்டியில் தனது முதல் சிக்சரை பிஷ்னோய் வீசிய 15வது ஓவரில் அடித்தார். அடுத்த பந்திலேயே லெக் சைடில் 115 மீட்டர் தொலைவுக்கு மீண்டுமொரு சிக்ஸ். அவரைத் தொடர்ந்து பிஷ்னோய் வீசிய கடைசி ‘நானும் அடிப்பேன்’ எனக் கூறி தன் பங்குக்கு மேக்ஸ்வெல்லும் ஒரு சிக்ஸ் அடித்தார்.

12வது ஓவரில் கோலி அவுட்டான பிறகு அடுத்த இரண்டு ஓவர்களிலும் ரன் ரேட் பெரிதும் அடி வாங்கியது. 14 ஓவர் முடிவில் ஆர்சிபி 117 ரன்களே எடுத்திருந்தது. ஆனால், அடுத்த மூன்று ஓவர்களில் டுப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் இருவரும் விளாசத் தொடங்கினார்கள்.

பெங்களூரு அணி ஒரு திட்டத்தோடுதான் களமிறங்கியிருந்தது. ஆனால், மிடில் ஓவர்களில் தவறவிட்டுவிட்டார்கள். அமித் மிஷ்ரா, மார்க் வுட் பந்துவீச்சில் சற்றுத் திணறினார்கள். ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ள நிலையில், 17 ஓவர்களில் ஆர்சிபி 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

மேக்ஸ்வெல் போன்ற பேட்ஸ்மேன் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளையும் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்துவிடுவார். இது பவுலர்களுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும். அத்தகைய அழுத்தத்தைத் தாண்டி உனத்கத் வீசிய ஒரு யார்க்கர் பந்தில் மேக்ஸ்வெல் அடித்த ஷாட்டை க்ருனால் பாண்ட்யா ஒரு கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அது எவ்வளவு பெரிய தவறு என்பதைக் காட்டும் வகையில், டுப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் இருவரும் ஆளுக்கொரு சிக்சரை அடுத்தடுத்து விளாசினார்கள். உனாத்கத் முன்பு நிறைய ரன்களை கொடுத்துவிட்டதால், இந்தப் போட்டியில் தனது அணுகுமுறையை மாற்றிப் பார்த்தார். ஆனாலும் அவரது யார்க்கர் பந்துகளில் தொடர்ந்து இருவரும் பந்துகளை பவுண்டரி லைனை நோக்கிப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

தொடக்கத்தில் மெதுவாகத் தொடங்கினாலும் மேக்ஸ்வெல் தான் இன்னும் தனது ஃபார்மை இழந்துவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக 19வது ஓவரில் அரை சதத்தை 24 பந்துகளில் பூர்த்தி செய்தார். இறுதி ஓவரின் 5வது பந்தில் 29 பந்துகளுக்கு 59 ரன்களை எடுத்து மேக்ஸ்வெல், மார்க் வுட் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

டுப்ளெஸ்ஸி 46 பந்துகளில் 79 ரன்களுடன் களத்தில் நின்று கொண்டிருந்தார். 53 பந்துகளில் அவர்களது கூட்டணி 115 ரன்களை குவித்தது.

மிடில் ஓவர்களின்போது இருவரும் சற்றுத் திணறியிருந்தாலும், அடுத்தடுத்து போட்டி போட்டு விளாசிக் கொண்டிருந்தார்கள். டுப்ளெஸ்ஸி ஆரம்பத்தில் 30 பந்துகளில் 33 என்ற நிலையில் இருந்தார். அதற்குப் பிறகு எதிர்கொண்ட பந்துகளில் சரவெடியாய் வெடித்தார்.

மொத்தம் 5 பவுண்டரி, 5 சிக்ஸ் அடித்தார். மேக்ஸ்வெலும் 6 சிக்ஸ், 3 பவுண்டரி ஷாட்களை விளாசினார். அவர்களது கூட்டணி வழிநடத்திச் சென்ற முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு 212 ரன்களை எடுத்தது.

https://www.bbc.com/tamil/articles/cy7nr0qzq9yo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விராட் கோலியின் 'மந்தமான பேட்டிங்' பெங்களூரு தோல்விக்கு காரணமாகிவிட்டதா?

பெங்களூரு தோல்விக்கு கோலி காரணமா?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான நேற்றைய ஆட்டமும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. கடைசிப் பந்து வரை நீடித்த இந்த ஆட்டம் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது. ரோலர் கோஸ்டர் ரெய்டு போல அமைந்த இந்த ஆட்டத்தில், நெருக்கடியை சிறப்பாக கையாண்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி வெற்றியை வசமாக்கியது.

கோலி - டுப்ளெஸ்ஸி ஜோடி வழக்கம் போல் சிறப்பான தொடக்கம் தந்து, மேக்ஸ்வெல்லின் அதிரடி சரவெடியால் 212 ரன்களைக் குவித்தும் கூட ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளது. மும்பை இந்தியன்சுக்கு எதிரான முதல் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தில் நடப்பு ஐ.பி.எல். தொடரை சிறப்பாக தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இது இரண்டாவது தோல்வி.

பவுலிங், பேட்டிங் ஆகிய இரண்டிலும் ஒருங்கிணைந்த நல்ல அணியாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திகழ்வதை உறுதிப்படுத்திய இந்த போட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலவீனத்தையும், நெருக்கடியை கையாள முடியாமல் அந்த அணி வீரர்கள் கோட்டை விட்டதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

சிறப்பான தொடக்கம் தந்தாலும் பேட்டிங் சொர்க்கபுரியில் இது போதுமா?

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சிறந்த தொடக்க ஜோடியாக திகழும் விராட் கோலி - டுப்ளெஸ்ஸி ஜோடி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு முறை சிறப்பான தொடக்கம் தந்தது. பவர் பிளேவில் 6 ஓவர்களில் 56 ரன்களைக் குவித்துவிட்ட இந்த ஜோடி, அதன் பிறகு வேகத்தை குறைத்து விட்டது.

 

விக்கெட் ஏதும் விழாத நிலையில் பேட்டிங்கிற்கு ஏதுவான பெங்களூரு மைதானத்தில் அந்த அணி காட்டிய அசாத்திய நிதானம் ரசிகர்களுக்கு வியப்பூட்டியது. இதன் பிறகு, கோலிக்குப் பிறகு களம் புகுந்த மேக்ஸ்வேல் காட்டிய அதிரடி, அதற்கு முன்பு குறைந்து போன ரன் வேகத்தை ஈடு செய்வதாக மட்டுமே அமைந்துவிட்டது.

பெங்களூரு தோல்விக்கு கோலி காரணமா?

பட மூலாதாரம்,BCCI/IPL

மிடில் ஓவர்களில் சாதித்த லக்னோவின் சுழல் கூட்டணி

நட்சத்திர வீரர்களான கோலியும் டுப்ளெஸ்ஸியும் உச்சக்கட்ட பார்மில், களத்தில் நன்றாக காலூன்றி நின்றிருந்த நிலையிலும் கூட, லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சு கூட்டணி மீண்டும் ஒருமுறை சாதித்துக் காட்டியுள்ளது. குருணால் பாண்டியா, ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை பெரிய அளவில் ஷாட்களை ஆட விடாமல் செய்தனர்.

இதனால் குறைந்து போன ரன் ரேட்டை மீண்டும் தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே விராட் கோலி ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு - லக்னோ அணிகளுக்கு இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் இந்த மிடில் ஓவர்கள்தான்.

பெங்களூரு தோல்விக்கு கோலி காரணமா?

பட மூலாதாரம்,BCCI/IPL

கடைசி 19 பந்துகளில் 19 ரன் - ஆர்.சி.பி. தோல்விக்கு கோலியும் ஒரு காரணமா?

கோலி - டுப்ளெஸ்ஸி ஜோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்தாலும், டுப்ளெஸ்ஸி ஆரம்பத்தில் பெரிய ஷாட்களை ஆட முடியாமல் தடுமாறினார். அப்போதெல்லாம் கோலி ஆடிய அற்புதமான கிரிக்கெட் ஷாட்களே அந்த அணியின் ஸ்கோரை உயர்த்தின. பவர் பிளேவில் பெங்களூரு எடுத்த 56 ரன்களில் 42 ரன்கள் கோலியிடம் இருந்து வந்தவை. 25 பந்துகளில் அந்த ரன்களை கோலி எடுத்திருந்தார்.

பேட்டிங் சொர்க்கபுரி, விக்கெட் இழப்பு இல்லை, தனிப்பட்ட முறையில் உச்சக்கட்ட பார்ம் என இவ்வளவு பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் கூட பவர் பிளேவுக்குப் பிறகு கோலி திடீரென கியரை மாற்றினார். டுப்ளெஸ்ஸி வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்த போது, கோலியும் வேகத்தை குறைத்தது அந்த அணியின் ரன் ரேட்டை வெகுவாக பாதித்தது.

அதனை மீண்டும் தூக்கி நிறுத்தும் முயற்சியில் அமித் மிஸ்ரா பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்க முயற்சித்து, கோலி அவுட்டாகி வெளியேறினார். அவர் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அவரைப் போன்ற சிறந்த வீரருக்கு இந்த ரன்கள் போதுமா? இதுதான் பெங்களூரு அணியின் தோல்விக்கு வழிவகுத்ததா? என்று கிரிக்கெட் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பூரன் இந்த 19 பந்துகளில் 62 ரன்களைக் குவித்து லக்னோ வெற்றிக்கு வித்திட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

பெங்களூரு தோல்விக்கு கோலி காரணமா?

பட மூலாதாரம்,BCCI/IPL

பந்துவீச்சு பலவீனம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வாடிக்கை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகப்பெரிய ரன்களைக் குவித்து விட்டு தோல்வியை முத்தமிடுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை நடந்துள்ளது. அதற்கெல்லாம் காரணம் அந்த அணியின் பலவீனமான பந்துவீச்சுதான். அது நேற்றும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.

அந்த அணிக்கு முகமது சிராஜ் மட்டுமே நம்பிக்கை தரும் ஒரே பவுலராக திகழ்கிறார். நேற்றும் கூட 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அவர், கைல் மேயர்ஸ், லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை தேவையாக இருந்த போது எடுத்துக் கொடுத்தார்.

லக்னோவைப் போல பெங்களூருவுக்கு தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறை. ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன் ஆகிய இருவரும் ருத்ர தாண்டவம் ஆடிய போது என்ன செய்வதென்றே தெரியாமல் அவர்கள் திகைத்து நின்றதை பார்க்க முடிந்தது.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் வெய்ன் பர்னெல் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை அளிக்கும் புதிய வரவு. இது மட்டுமே நேற்றைய போட்டி முடிவில் பெங்களூரு அணிக்கு நல்ல செய்தி.

பெங்களூரு தோல்விக்கு கோலி காரணமா?

பட மூலாதாரம்,BCCI/IPL

லக்னோவை சரிவில் மீட்ட ஸ்டோய்னிசின் தரமான ஆட்டம்

மிகப்பெரிய இலக்கைத் துரத்திய லக்னோ அணி தொடக்கத்திலேயே அதிரடி வீரர் கைல் மேயர்சை இழந்து விட்டது. குருணால் பாண்டியா, தீபக் ஹூடாவும் அடுத்தடுத்து அவுட்டாக, 23 ரன்களிலேயே அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கிய ஸ்டோய்னிஸ் தனது அதிரடி பேட்டிங்கால் ஆட்டத்திற்கு உயிரூட்டினார். வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலையும், லெக் ஸ்பின் பவுலர்களான கரன் ஷர்மா, ஷாபாஸ் அகமதுவையும் அவர் கடுமையாக தண்டித்தார்.

30 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்களை குவித்த அவரது ஆட்டமே துவண்டு போயிருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ரன் ரேட்டை தூக்கி நிறுத்தியது. லக்னோ அணியால் வெற்றி இலக்கை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையும் அதன் பிறகே துளிர்விட்டது.

பெங்களூரு தோல்விக்கு கோலி காரணமா?

பட மூலாதாரம்,BCCI/IPL

நிகோலஸ் பூரனிடம் இருந்து வெளிப்பட்ட நம்ப முடியாத வாண வேடிக்கை

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் நிகோலஸ் பூரனிடம் இருந்து மீண்டும் ஒருமுறை நம்ப முடியாத ஆட்டம் வெளிப்பட்டது. சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்சர் விளாசிய அவர், தனது அதிரடியை நிறுத்தவே இல்லை. எதிர்கொண்ட ஒவ்வொரு பந்தையுமே எல்லைக்கோட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார். பந்து தரை மார்க்கமாவும், ஆகாய மார்க்கமாகவும் எல்லைக்கோட்டை கடந்து கொண்டே இருந்தது. மொத்தம் 7 சிக்சர்களையும், 4 பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் சாதனையாக, 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய அவர், வெறும் 19 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். பூரன் களமிறங்கும் போது லக்னோஅணி வெற்றிபெற 56 பந்துகளில் 116 ரன் தேவை என்ற நிலை இருந்தது. 17-வது ஓவரில் பூரன் அவுட்டாகி வெளியேறும் போது அதுவே 18 பந்துகளில் 24 ரன் என்ற எட்டக் கூடிய இலக்காக மாறிவிட்டது. இப்படித்தான், இமாலய இலக்காக தோன்றியதை சாதாரண ஒன்றாக தனது சூறாவளி பேட்டிங்கால் மாற்றிக் காட்டினார் நிகோலஸ் பூரன்.

பெங்களூரு தோல்விக்கு கோலி காரணமா?

பட மூலாதாரம்,BCCI/IPL

பெங்களூரு பீல்டிங் மோசம் - ஸ்டோய்னிஸ் கொடுத்த கேட்சை கோட்டைவிட்ட சிராஜ்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதான காரணமான ஸ்டாய்னிஸ், நிகோலஸ் பூரன் ஆகிய இருவருக்குமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது.

ஸ்டோய்னிஸ் வெறும் 2 ரன்களே எடுத்திருந்த நிலையில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் தவறவிட்டார். இதுபோல், லோகேஷ் ராகுலுக்கு ஒருமுறை மேக்ஸ்வெல்லும், இரண்டாவது முறை கரன் சர்மாவும் ரன் அவுட் வாய்ப்பை வீணாக்கினர். ஒருவேளை அது நடந்திருந்தாலும் லக்னோ அணி நிலைகுலைந்து போயிருக்கும்.

லக்னோவுக்கு கைகொடுத்த இம்பாக்ட் பிளேயர் வியூகம்

நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணிக்கு இம்பாக்ட் பிளேயர் வியூகம் வெகுவாக கைகொடுத்தது. பந்துவீச்சில் ஓரளவு நல்ல பங்களிப்பை அளித்ததுடன், விராட் கோலியின் விக்கெட்டையும் வீழ்த்திய அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக ஆயுஷ் படோனியை லக்னோ அணி இம்பாக்ட் பிளேயராக களமிறக்கியது.

இக்கட்டான கட்டத்தில் பூரனுக்கு ஒத்துழைப்பு தந்த அவர், பூரன் அவுட்டான பிறகு ரன் ரேட்டை உயர்த்தும் பொறுப்பை தானே கவனித்துக் கொண்டார். வெய்ன் பர்னெல் பந்துவீச்சில் ஆப் ஸ்டம்பிற்குச் சென்று பந்தை லெக் சைடில் சிக்சருக்கு அவர் தூக்கியதும் லக்னோ வெற்றியை எட்டிவிட்டது என்றே ரசிகர்கள் நினைத்தார்கள்.

பெங்களூரு தோல்விக்கு கோலி காரணமா?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆனால், துரதிர்ஷ்டவசமாக பந்தை அடித்த பின்னர் பேட்டால் அவர் ஸ்டம்புகளையும் தொட்டு வெளியேறினார். இல்லாவிட்டால் ஆட்டம் அப்போதே முடிவுக்கு வந்திருக்கும். 24 பந்துகளில் அவர் எடுத்த 30 ரன்கள் லக்னோ அணியின் சேஸிங்கில் முக்கியமான பங்களிப்பு.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைப் பொருத்தவரை, இளம் பேட்ஸ்மேன் அனுஜ் ராவத்திற்குப் பதிலாக களம் கண்ட சுழற்பந்துவீச்சாளர் கரன் சர்மா 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 48 ரன்களை வாரி வழங்கினார். அந்த அணியின் தோல்விக்கு இவரது இந்த மோசமான பந்துவீச்சும் ஒரு காரணம். ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக குறைந்தபட்சம் 3 ஓவர்களை வீசிய பவுலர்களில் சராசரியாக ஒரு ஓவருக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது இவர்தான் என்ற வகையில் மிக மோசமான பந்துவீச்சாக இது பதிவாகிவிட்டது.

நெருக்கடியை சரிவர கையாளத் தவறிய பெங்களூரு மூத்த வீரர்கள்

கடைசிப் பந்து வரை நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர்கள் பதற்றத்தில் செய்த தவறுகள் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகிவிட்டன. குறிப்பாக, பேட்டிங் களத்தில் 2 பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்த கடைசி ஓவரில் பெங்களூரு அணியின் மூத்த வீரர்களே பதற்றத்தில் தவறிழைத்துவிட்டனர்.

ஒரு பந்துக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் அரங்கேறிய கடைசி நேர உச்சக்கட்ட டிராமாவில் கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் 2 தவறுகள் அரங்கேறின. மன்கட் முறையில் ரவி பிஷ்னோயை அவுட் செய்ய முயன்ற ஹர்ஷல் படேல் பதற்றத்தில் ஸ்டம்புகளை பெயர்க்கத் தவறவிட்டார்.

அதேபோல், அடுத்து ஹர்ஷல் படேல் வீசிய கடைசிப் பந்தை பேட்டிங் முனையில் நின்றிருந்த ஆவேஷ் கானால் தொட முடியாமல் போய்விட்டாலும் கூட, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர்கள் ஒரு ரன்னை ஓடி எடுத்துவிட்டனர். அதற்கு மிக முக்கிய காரணம், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பதற்றத்தில் பந்தை சரிவர பிடிக்காததே காரணம். பந்தை துரிதமாக சேகரிக்காமல் பதற்றத்தில் அவர் தடுமாறியதே லக்னோ வெற்றிக்கான ரன்னைக் கொடுத்துவிட்டது.

பெங்களூரு தோல்விக்கு கோலி காரணமா?

பட மூலாதாரம்,BCCI/IPL

தினேஷ் கார்த்திக் துரிதமாக செயல்பட்டிருந்தால் இந்தப் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றிருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்தப் போட்டியை வெல்ல மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஹர்ஷல் படேல் குறி தவறாமல் எறிந்தும் மன்கட் முறையில் அவுட் கொடுக்கப்படாதது ஏன்?

ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்த கடைசிப் பந்தில், வெற்றிக்குத் தேவையான ரன்னை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று முனைப்புடன் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றிருந்த ரவி பிஷ்னோய், பந்துவீசப்படும் முன்பே கிரீசை விட்டு வெளியேறிவிட்டார். இதனை முன்பே எதிர்பார்த்திருந்தது போல், ஹர்ஷல் படேல் பந்துவீசாமல் மன்கட் முறையில் ஸ்டம்புகளை பெயர்த்து அவரை அவுட் செய்ய முயன்றார்.

இது நல்ல முயற்சியாக இருந்த போதிலும் பதற்றத்தில் அவர் ஸ்டம்புகளை பெயர்க்கத் தவறிவிட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு பந்தை தூக்கி எறிந்து அவர் ஸ்டம்புகளை சிதற விட்டாலும் நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். காரணம், முதல் முயற்சியில் அவர் ஸ்டம்புகளை தாக்கியிருந்தால் அது மன்கட் முறையில் அவுட்டாக அமைந்திருக்கும்.

பெங்களூரு தோல்விக்கு கோலி காரணமா?

பட மூலாதாரம்,BCCI/IPL

அதைச் செய்யத் தவறிய ஹர்ஷல் படேல் சில அடிகள் முன்னே சென்றுவிட்டதால் பந்து 'டெட்பால்' ஆகிவிடுகிறது. இதனால் அதற்குப் பின்னர் அவர் ஸ்டம்ப் மீது பந்தை குறி தவறாமல் வீசியிருந்தாலும், மன்கட் முறை பரிசீலிக்கப்படாது. ஹர்ஷல் படேல் பதற்றப்படாமல் இருந்திருந்தால் இந்தப் போட்டியின் முடிவும் கூட வேறு மாதிரி ஆகியிருக்கக் கூடும்.

https://www.bbc.com/tamil/articles/cd12wz2x975o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே ஓவரில் 4 விக்கெட்: கடைசிப் பந்து வரை திக்... திக்... டெல்லிக்கு எதிராக மும்பை 'திரில்' வெற்றி

மும்பை இந்தியன்ஸ் 'திரில்' வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

11 ஏப்ரல் 2023, 18:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 11 ஏப்ரல் 2023, 19:07 GMT

ஐ.பி.எல், தொடரில் மீண்டும் ஒரு திரில்லிங் மேட்ச் நடந்து முடிந்துள்ளது. கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக நகர்ந்த இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது. ரோகித் சர்மாவின் அதிரடியால் இலக்கு நோக்கி வேகமாக முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி ஓவரில் அடுத்தடுத்து யார்க்கர்களை வீசி நோக்கியா மிரட்டிவிட்டார்.

டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னரும், அதிரடியில் அசத்தக் கூடிய பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த 3 போட்டிகளைப் போல அல்லாமல் இம்முறை டெல்லி அணிக்கு தொடக்கம் சிறப்பாகவே அமைந்தது.

டெல்லி அணி சிறப்பான தொடக்கம்

பெஹரன்டார்ஃப் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே லாங்-ஆப் திசையில் பவுண்டரி அடித்து பிரித்வி ஷா நம்பிக்கை அளித்தார். அடுத்த ஓவரிலும் பிரித்வி ஷா பவுண்டரி அடிக்க, மறுமுனையில் வார்னரும் தன் பங்கிற்கு பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டினார். இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த மூன்றாவது ஓவரின் கடைசி இரு பந்துகளையும் அடுத்தடுத்து பவுண்டரிக்கு ஓடவிட்டார்.

3 ஓவரில் 29 ரன் என்று சிறப்பான தொடக்கம் கண்ட டெல்லி கேபிட்டல்ஸ் நான்காவது ஓவரில் தடம்புரண்டது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பவர் ஓவர்களில் துணிச்சலாக சுழற்பந்து வீச்சாளரை கொண்டு வர அதற்கு பலனும் கிடைத்தது. ஹிரிதிக் ஷோகீன் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த பிரித்வி ஷா, நான்காவது பந்தை ஸ்கொயர் லெக் திசையில் முட்டிப்போட்டு ஸ்வீப் செய்ய கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 10 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார்.

 

இந்த தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடும் மணிஷ் பாண்டே முதல் போட்டியிலேயே அசத்தினார். பிரித்வி வெளியேறியதும் களம் புகுந்த அவர், வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் ஓவரிலும், அதற்கு அடுத்த ஷோகீனின் ஓவரிலும் தலா 2 பவுண்டரிகளை விளாசினார். இதனால், டெல்லி அணியின் ரன் ரேட் எகிறியது. 6 ஓவர் பவர் பிளே முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன் என்ற நல்ல நிலையில் இருந்தது.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீட்டுக்கட்டுகளாக சரிந்த டெல்லி விக்கெட்டுகள்

பவர் பிளே முடிந்ததும் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவை கொண்டு வந்தார் ரோகித் சர்மா. தான் வீசிய இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் எதிர்பார்த்ததை செய்து முடித்தார் பியூஷ் சாவ்லா. சாவ்லா வீசிய 9-வது ஓவரின் மூன்றாவது பந்தை சிக்சருக்கு ஆசைப்பட்டு இறங்கி வந்து லாங் ஆஃப் திசையில் மணிஷ் பாண்டே தூக்கி அடிக்க, எல்லைக்கோடு அருகே நின்றிருந்த பெஹரன்டார்ஃப் கைகளில் பந்து தஞ்சம் புகுந்தது. 18 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அவர் சேர்த்திருந்தார்.

மணிஷ் பாண்டே ஆட்டமிழந்ததும் டெல்லி அணியின் சரிவு தொடங்கியது. 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 78 ரன் என்ற நிலையில் இருந்த அந்த அணி தடம்புரண்டது. ஐ.பி.எல்.லில் அறிமுக வீரராக டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக களம் கண்ட இளம் வீரர் யாஷ் துல்லை அடுத்த ஓவரிலேயே ரிலே மெரிடித் காலி செய்தார். ஷார்ட்பிட்ச் பந்தை யாஷ் துல் பிளிக் செய்ய, டீப் மிட் விக்கெட் திசையில் மேலேழும்பிய பந்தை வதேரா கேட்ச் செய்தார். யாஷ் துல் 2 ரன்களை மட்டுமே எடுத்தார்.

மிடில் ஆர்டரில் டெல்லி அணி பெரிதும் நம்பியிருந்த ரோவ்மென் பொவெல் மீண்டும் ஏமாற்றினார். ஒரு பவுண்டரியுடன் திருப்திப்பட்டுக் கொண்ட அவர், பியூஷ் சாவ்லா பந்தில் எல்.பி,டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்தும் பலனில்லாமல் போய்விட்டது.

பியூஷ் சாவ்லா தனது அடுத்த ஓவரிலும் விக்கெட் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலம் சேர்த்தார். இம்முறை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் லலித் யாதவின் ஸ்டம்புகளை அவர் சிதறடித்தார். லலித் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது டெல்லி அணி 12.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை சேர்த்திருந்தது.

தடாலடியாக அதிரடியில் மிரட்டிய அக்ஷர் படேல்

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்ததால் மறுமுனையில் கேப்டன் வார்னரால் வழக்கமான அதிரடி காட்ட முடியவில்லை. அவருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக மறுமுனையில் ஜோடி சேர்ந்த அக்ஷர் படேல் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினார். அவரது பேட்டில் இருந்து பந்துகள் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறந்தவண்ணம் இருந்தன.

ஷோகீன் வீசிய 15-வது ஓவரின் கடைசி இரு பந்துகளையும் அவர் சிக்சர் அடித்து பிரமாதப்படுத்தினார். லாங் ஆப் திசையில் அக்ஷர் அடித்த இரண்டாவது சிக்சர் கேட்சாக மாறியிருக்க வேண்டியது. அங்கே நின்றிருந்த சூர்யகுமார் பந்தின் திசையை தவறாக கணித்ததால் கேட்சை கோட்டை விட்டதுடன், 6 ரன்களையும் தாரை வார்த்தார். இந்த பீல்டிங் சொதப்பலால் கேப்டன் ரோகித் சர்மாவின் முகத்தில் அதிருப்தி ரேகைகளை பார்க்க முடிந்தது.

கேமரூன் கிரீன் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளையும், அதற்கு அடுத்து வீசிய பெஹரன்டார்ஃபின் ஓவரில் 2 சிக்சர்களையும் அக்ஷர் படேல் அடித்து டெல்லி ரசிகர்களை பரவசப்படுத்தினார். ரிலே மெரிடித் வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி 22 பந்துகளில் அரைசதம் கடந்து அக்ஷர் படேல் அசத்தினார்.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெஹரன்டார்ஃப் வீசிய ஒரே ஓவரில் 4 விக்கெட்

அரைசதம் அடித்த அக்ஷர் படேல் அடுத்ததாக பெஹரண்டார்ஃப் வீசிய ஓவரின் முதல் பந்திலேயே அர்ஷத் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர்களையும், 4 பவுண்டரிகளையும் விளாசினார்.

மூன்றாவது பந்தில் டெல்லி கேப்டன் வார்னரையும் பெஹரண்டார்ஃப் வெளியேற்றினார். ஒருநாள் போட்டிகளைப் போல ஆடிய வார்னர் 47 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களை சேர்த்தார்.

அடுத்து வந்த குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலேயே ரன் அவுட்டானார். கடைசிப் பந்தில் அபிஷேக் போரலையும் ஒரு ரன்னில் பெஹரண்டார்ஃப் அவுட்டாக்கினார்.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லி அணி 172 ரன்களில் ஆல்அவுட்

ரிலே மெரிடித் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த ஆன்ரிச் நோக்கியா, அடுத்த பந்தில் கிளீன் போல்டானார். இதனால் டெல்லி அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை சேர்த்திருந்தது. அக்ஷர் படேலின் அதிரடி அரைசதமே மும்பை அணிக்கு சவாலான வெற்றி இலக்கை டெல்லி அணி நிர்ணயிக்க காரணமாக அமைந்தது.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெஹரன்டார்ஃப் 3 விக்கெட்டுகளையும், ரிலே மெரிடித் 2 விக்கெட்டுகளையும் ஷோகீன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓவர்களில் 68-0

173 ரன்களைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்சை கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக தொடங்கினார். முகேஷ் குமார் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த ரோகித், அடுத்த பந்தை சிக்சருக்கு விளாசினார். இந்த ஓவரின கடைசி பந்தையும் பவுண்டரிக்கு ஓடவிட்டார் ரோகித்.

வங்கதேசத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இஷான் கிஷன் வீசிய இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து மிரட்டினார் இஷான் கிஷான். ஆன்ரின் நோக்கியா வீசிய மூன்றாவது ஓவரில் 2 பவுண்டரிகளையும், மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்சரையும் தெறிக்க விட்டார் ரோகித் சர்மா. ரோகித்திடம் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிப்பட்ட அதிரடி ஆட்டம் மும்பை அணி ரசிகர்களை மகிழ்வித்தது.

ரோகித்தின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 ஓவர்களிலேயே 42 ரன்களைக் குவித்துவிட்டது. களத்தில் தொடர்ந்து சூறாவளியாக ரோகித் சுழன்ற பவர் பிளே ஓவர்களிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்களைத் திரட்டிவிட்டது. ரோகித் 37 ரன்களுடனும் இஷான் கிஷன் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஷான் கிஷன் 31 ரன்னில் ரன்அவுட்

பவர் பிளே முடிந்த பிறகு அக்ஷர் படேல் வீசிய அடுத்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. லலித் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் டெல்லி அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. அவசரப்பட்டு ரன் எடுக்க ஓடிய இஷான் கிஷன், முகேஷ் குமாரால் ரன்அவுட் செய்யப்பட்டார். இஷான் கிஷன் 26 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 46 பந்துகளில் 88 ரன்களை குவித்து பிரமாதப்படுத்திய இளம் வீரர் திலக் வர்மா அடுத்து களம்புகுந்தார். ஒரு ஓவர் நிதானம் காட்டிய அவர், குல்தீப் யாதவ் வீசிய 12-வது ஓவரில் சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார். மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் அடித்து அணியின் ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டார்.

சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய திலக் வர்மா

மும்பை அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 5 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டன, ரன் ரேட்டை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த திலக் வர்மா 16-வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். முகேஷ் குமார் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்ட திலக் வர்மா, அடுத்த இரு பந்துகளையும் சிக்சராக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

துரதிர்ஷ்டவசமாக அந்த ஓவரிலேயே டீப் மிட் விக்கெட் திசையில் மணிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். 29 பந்துகளில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களை அவர் சேர்த்தார்.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பைக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த சூர்யகுமார்

அதன் பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை டக்அவுட் ஆகிய மோசமான பார்முடன் ஐ.பி.எல்.லை தொடங்கிய அவர் இங்கும் அதனைத் தொடர்கிறார்.

கடந்த சில தொடர்களில் அசத்திய அவர், நடப்புத் தொடரில் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் மும்பை அணிக்கு ஏமாற்றம் அளித்தார். சந்தித்த முதல் பந்திலேயே லெக்சைடில் தனது பேஃபரைட் ஷாட்டை ஆட, டீப் பைன் லெக்கில் குல்தீப் யாதவால் கேட்ச் செய்யப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அவுட்

அடுத்தடுத்து 2 விகெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் கேப்டன் ரோகித் நல்ல பார்மில் இருந்ததால் மும்பை அணி தனக்கு சேஸிங்கில் சிக்கல் இருப்பதாக எண்ணவில்லை. அதற்கேற்ப, முஸ்தாபிஜூர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து தனது அபார பார்மை ரோகித் நிரூபித்தார்.

அடுத்த 3 பந்துகளிலும் ரன் எடுக்காத ரோகித், ஐந்தாவது பந்தில் விக்கெட் கீப்பர் அபிஷேக் போரலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டி.ஆர்.எஸ். முறையைப் பயன்படுத்தினாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்கவில்லை. அந்த அணியின் இன்னிங்சில் நங்கூரமாக நின்று பலம் சேர்த்த ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதில், 6 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

மும்பை இந்தியன்ஸ் 'திரில்' வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிக்சர்களை விளாசி நம்பிக்கை தந்த கேமரூன் கிரீன் - டிம் டேவிட் ஜோடி

அடுத்து வந்த கேமரூன் கிரீன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மிரட்டலாக இன்னிங்சை தொடங்கினார். கடைசி 3 ஓவர்களில் மும்பை அணிக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலையில், களத்தில் கேமரூன் கிரீன், டிம் டேவிட் ஆகிய இரு அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தால் மும்பை அணி நம்பிக்கையுடன் இருந்தது. இரு தடாலடி ஆட்டக்காரர்கள் களத்தில் இருந்த போதிலும் 18-வது ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோக்கியா சிக்கனம் காட்டினார்.

2 ஓவர்களில் 20 ரன் தேவை என்ற நிலையில், முஸ்தாபிஜூர் வீசிய 19-வது ஓவரில் கேமரூன் கிரீன், டிம் டேவிட் ஆகிய இருவருமே தலா ஒரு சிக்சர் அடித்து மும்பை அணிக்கு இருந்த நெருக்கடியை குறைத்தனர்.

யார்க்கர்களால் மிரட்டிய நோக்கியா - கடைசிப் பந்தில் மும்பை திரில் வெற்றி

கடைசி ஓவரில் 5 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் மீண்டும் பந்து வீச வந்த நோக்கியா யார்க்கர்களை வீசி திணறடித்தார். இரு அதிரடி வீரர்களுமே ரன் சேர்க்க முடியால் திணறினர். இரண்டாவது பந்தில் டிம் டேவிட் கொடுத்த கேட்சை முகேஷ் கோட்டை விட்டு பெரும் தவறிழைத்தார்.

கடைசிப் பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் நோக்கியா மீண்டும் ஒரு அற்புதமான யார்க்கரை வீசினார். அதனை லாங் ஆப் திசையில் டிம் டேவிட் அடிக்க, பந்தை சேகரித்த வார்னர் மிக உயரத்தில் விக்கெட் கீப்பரை நோக்கி வீசியெறிய அதனால் கிடைத்த அவகாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்குத் தேவையான 2 ரன்களை எடுத்துவிட்டது.

ஒரு கட்டத்தில் மிக எளிதாக வெற்றி இலக்கை எட்டிவிடும் என்று கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பாராத சரிவால் திணறிப் போய், ஒருவழியாக கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

நடப்புத் தொடரில் அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அதேநேரத்தில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக சந்தித்துள்ள 4-வது தோல்வி இதுவாகும். அந்த அணி இன்னும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c25vy5l9315o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை கோட்டையில் 'பதுங்கிப் பாய்ந்த' ராஜஸ்தான்; 175 ரன்களை சேஸ் செய்யுமா தோனி & கோ?

IPL

பட மூலாதாரம்,BCCI/IPL

18 நிமிடங்களுக்கு முன்னர்

தொடக்கத்தில் வேகமெடுத்தது ராஜஸ்தானின் பேட்டிங். மிடில் ஆர்டரில் அந்த வேகத்தை மிதமாக கட்டுப்படுத்தினார் ஜடேஜா. சுழலுக்கு கைக்கொடுக்கும் சென்னை ஆடுகளத்தில் 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். வெற்றிகரமாக சேஸ் செய்து மஞ்சள் படைக்கு விருந்து படைக்குமா சி.எஸ்.கே?

'கேப்டன்' தோனிக்கு 200-ஆவது ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணி சார்பில் ஆகாஷ் சிங் அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் மஹீஷ் தீக்சனாவும் களமிறக்கப்பட்டார்.

பென் ஸ்டோக்ஸ் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 200-ஆவது ஆட்டத்தில் களமிறங்கினார் எம்.எஸ்.தோனி.

IPL

பட மூலாதாரம்,BCCI/IPL

பட்லரின் அரைசதமும் படிக்கலின் நிதானமும்

யாசஷ்வி ஜெய்ஷ்வால் - ஜாஸ் பட்லர் ஜோடி ஓபனிங் செய்தது. முதல் ஓவரிலேயே அதிரடியாக தொடங்கினார் ஜெய்ஷ்வால். இருப்பினும் துசார் தேஷ்பாண்டே வீசிய பந்தில் ஷிவம் துபே வசம் கேட்ச் கொடுத்து 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த படிக்கல் பட்லருடன் இணைந்து நிதானம் காட்டினார்.

 

2வது விக்கெட்டிற்கு பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி 88 ரன்கள் வரை சேர்த்தது. பவர்பிளேவில் மட்டுமே ராஜஸ்தான் அணி 57 ரன்களை குவித்தது. ஆட்டத்தில் ராஜஸ்தானின் கை ஓங்கியிருந்தது. பேட்டிங்கில் படிக்கலும் பட்லரும் சென்னை களத்தில் மிரட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த `மேஜிக்` சுழற்பந்துவீச்சாளரை கொண்டு வந்தார் எம்.எஸ்.தோனி

ராஜஸ்தான் வேகத்திற்கு பிரேக் போட்ட ஜடேஜா

IPL

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது 9வது ஓவர்தான். அதனை ரவீந்திர ஜடேஜா வீசினார். அரைசதம் விளாசும் முனைப்பில் வேகமாக ஆடிக்கொண்டிருந்த படிக்கலை தனது சுழற்பந்துவீச்சு மூலம் வீழ்த்தினார் ஜடேஜா. அடுத்து வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனையும் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

அடுத்தடுத்து 2 விக்கெட்களால் ராஜஸ்தானின் ரன் குவிப்பு வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. ஜடேஜாவின் சுழல் சென்னை அணிக்கு பெரும் ஆறுதலைத் தந்தது.

சென்னை ஆடுகளத்திற்கு நன்கு பரிட்சயமான அஷ்வினை இடது கை சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதமாக முன்கூட்டியே பேட்டிங் ஆட அனுப்பி வைத்தது ராஜஸ்தான் அணி.

முதல் பந்திலேயே அவர் கொடுத்த கேட்சை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த மொயின் அலி தவறவிட்டார். தனது பங்கிற்கு பொறுப்புடன் ஆடிய அஷ்வின், 22 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து விடைபெற்றார்.

மொயின் அலி செய்த '3 தவறுகள்'

தீக்‌ஷனா வீசிய 4வது ஓவரின் முதல் பந்தை படிக்கல் எதிர்கொண்டார். 15 ரன்கள் எடுத்திருந்தபோது பந்து எட்ஜில் பட்டு ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த மொயின் அலி வசம் கேட்சாக சென்றது. ஆனால் மொயின் அலி கேட்சை தவறவிட்டார். பதிலுக்கு அடுத்த பந்தே சிக்சருக்கு பறக்கவிட்டார் படிக்கல். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான்.

ஜடேஜா வீசிய 9வது ஓவரில் அஷ்வினை கோல்டன் டக் அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கொடுத்த கேட்சை மீண்டும் அதே பாணியில் நழுவவிட்டிருந்தார் மொயின் அலி.

ராஜஸ்தானின் வேகம் ஒருபக்கம் கட்டுக்குள் வந்தாலும் மறுபக்கம் நிதானமாக ரன் சேர்த்துக்கொண்டிருந்தார் அஷ்வின். அவர் 10 ரன்கள் எடுத்திருந்தபோதே அவரை ரன் அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையும் சொதப்பலான ஃபீல்டிங்கால் அதை தவறவிட்டார் மொயின் அலி.

பாதி தூரம் வரை ஓடிவிட்டு ரன் எடுக்காமல் மீண்டும் க்ரீஸிற்குள் திரும்பினார் அஷ்வின். பெரிய இடைவெளியில் ரன் அவுட்டாக்கும் வாய்ப்பு இருந்தபோதிலும் தோனியின் கைக்கு பந்தை வழங்காமல் வேறு திசையில் வீசினார்.

சென்னைக்கு 176 ரன்கள் இலக்கு

Twitter பதிவை கடந்து செல்ல
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

30 ரன்கள் எடுத்திருந்தபோது அஷ்வினின் கேட்சை பிடித்தார் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மகாலா. அப்போது அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக 16வது ஓவரை வீசினார் மொயின் அலி. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பட்லரை 52 ரன்களில் வெளியேற்றினார் மொயின் அலி.

அடுத்து வந்த ஹெட்மயர் 18 பந்துகளில் 30 ரன்கள் விளாச ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. முதல் 10 ஓவர்களில் ராஜஸ்தான் 95 ரன்கள் விளாசியிருந்தபோதிலும் கடைசி 10 ஓவர்களில் 80 ரன்களை மட்டுமே வழங்கியது சென்னை அணி. அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் அதாவது கடைசி 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே சென்னை அணி வழங்கியது சேசிங்கிற்கு ஓரளவு கைக்கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனி சிக்ஸர்கள் விளாசியும் சென்னை அணி தோற்றது ஏன்? முக்கியமான காரணங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் முடிந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றிபெற வாய்ப்பில்லை என்ற ரசிகர்களின் எண்ணத்தை தனது அதிரடி மூலம் தோனி, ஜடேஜா ஆகியோர் மாற்றினர். இறுதியில் சிஎஸ்கே நிச்சயம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பிய வேளையில், கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்தது.

நேற்றைய ஆட்டம் தோனி கேப்டனாக விளையாடும் 200ஆவது ஆட்டம் என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானமே ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. தோனி டாஸ் வென்றதுமே மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர்.

டாஸ் வென்ற தோனி பந்து வீச்சை தேர்வு செய்து பேசும்போது, 200வது ஆட்டத்தில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்கள் கூட்டத்தை பார்க்கும்போது பிரமாதமாக இருக்கிறது. புனரமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் விளையாடுவது ஸ்விட்சர்லாந்தில் விளையாடுவது போல் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக தாக்குபிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது` என்று கூறியிருந்தார்.

தொடக்கமும் இறுதியும் அதிரடியாக அமைந்த ராஜஸ்தான் பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்திருந்தது. தொடக்கத்தில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் பட்லர் - படிக்கல் ஆகியோர் அதிரடி காட்ட 6-ஆவது ஓவரில் அந்த அணி 50 ரன்களை கடந்தது. 8 ஓவர்களில் 86 ரன்களை எடுத்து பலமாக இருந்த ராஜஸ்தான் அணிக்கு 9வது ஓவரில் ரவிந்திர ஜடேஜா அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

 

அந்த ஓவரில் படிக்கல், சஞ்சு சாம்சன் ஆகியோரின் விக்கெட்களை அவர் வீழ்த்தினார். இதன் மூலம் அனைத்து வகையான 20 ஓவர் போட்டிகளிலும் சேர்த்து 200 விக்கெட் என்னும் மைல்கல்லை அவர் எட்டினார். அதே ஓவரில் அஸ்வினின் விக்கெட்டையும் அவர் வீழ்த்தியிருக்க வேண்டியது.

ஆனால், மொயின் அலி அந்த கேட்சை தவறவிட்டார். அதன் பின்னரும் ஜடேஜா, சிசாண்டா மகாலா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் பெரியளவில் ரன் எடுக்க முடியவில்லை. இறுதி ஓவர்களில் ஹெட்மயர் இரண்டு பவுண்டரி, 2 சிஸ்கர் அடிக்க ராஜஸ்தான் அணி 175 ரன்களை எடுத்திருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

சென்னைக்கு ஏமாற்றமாக அமைந்த 10- 17 ஓவர்கள்

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சென்னை அணி களமிறங்கியது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் இந்த ஆட்டத்தில் வெறும் 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதைத் தொடர்ந்து கான்வே- ரஹானே ஜோடி சேர்ந்தனர். இருவரும் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பௌலிங்கை அடித்து ஆடினர். குறிப்பாக அஸ்வின் வீசிய 6வது ஓவரில் ரஹானே மிட் ஆஃப்பில் சிக்ஸர் அடித்து சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

அஸ்வின் வீசிய 10-ஆவது ஓவரில் ரஹானே ஆட்டமிழக்க அதன் பின்னர், அதன் பின்னர் ராஜஸ்தானின் கை ஓங்கியது. டி20 போட்டியென்றாலே பேட்ஸ்மேன்களில் சிக்ஸர், பவுண்டரி போன்ற அதிரடி தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 10 முதல் 17 வரையிலான ஓவர்களில் சென்னை அணி வெறும் 2 பவுண்டரிகளை மட்டுமே எடுத்திருந்தது. அதே நேரத்தில், ரஹானே, டூபே, மொயின் அலி, அம்பதி ராயுடு, கான்வே போன்ற முக்கிய விக்கெட்களையும் அந்த அணி இழந்திருந்தது.

இந்த ஓவர்களில் பெரிய ஸ்கோர்களையும் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் விட்டுக்கொடுக்கவில்லை. 10-ஆவது ஓவரை வீசிய அஸ்வின் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ரஹானேவின் அதிரடிக்கு முடிவு கட்டினார். அடுத்த ஓவரை வீசிய குல்தீப் சென் 7 ரன்களையும் 12-ஆவது ஓவரை வீசிய அஸ்வின் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து சிவம் துபேவின் விக்கெட்டை கைப்பற்றினார். 13, 14 ஆகிய ஓவர்களிலும் தலா 5 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் விட்டுகொடுத்தனர். 15வது ஓவரை வீசிய சாஹல் 10 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் ராய்டு, கான்வே ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தி சிஎஸ்கேவுக்கு நெருக்கடி கொடுத்தார்.

இதனால் 9 ஓவர் முடிவில் 9.09 ஆக இருந்த தேவைப்படும் ரன் ரேட் 18-ஆவது ஓவரின் தொடக்கத்தில் 18.00 ஆக இருந்தது.

சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்த தோனி- ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

கடைசி 3 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். காரணம், களத்தில் இருந்தது தோனி- ஜடேஜா ஜோடி. இருவருமே அதிரடி ஆட்டக்காரர்கள் 3, 4 பந்துகளில் ஆட்டத்தின் போக்கையே அவர்களால் மாற்ற முடியும். ரசிகர்களின் நம்பிக்கையை மெய்ப்பிப்பது போன்று ஜாம்பா வீசிய 18-ஆவது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய டோனி 4வது பந்தில் சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் கிடைத்தது.

நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, "தோனி கேப்டனாக விளையாடும் 200 ஆட்டத்தில் வெற்றி பெற்று, அந்த வெற்றியை தோனிக்கு பரிசாக அளிப்போம்` என்று ரவிந்திர ஜடேஜா கூறியிருந்தார். 19-ஆவது ஓவரில் அதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். ஹோல்டர் வீசிய ஓவரில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து நம்பிக்கை அளித்தார். இருந்தாலும் சந்தீப் சர்மாவின் துல்லியமான பந்துவீச்சால் தான் கூறிய பரிசை தோனிக்கு அவரால் வழங்க முடியாமல் போனது.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய கடைசி மூன்று பந்துகள்

6 பந்துகளுக்கு 21 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே வெற்றி என்ற நிலையில் பந்துவீச வந்த சந்தீப் சர்மா பதற்றத்தில் முதல் இரண்டு பந்துகளையும் வைடாக வீசினார். முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காத தோனி அடுத்த இரண்டு பந்துகளையும் சிஸ்கர்களுக்கு விரட்ட ஆட்டம் சென்னை பக்கம் திரும்பியது. 3 பந்துகளுக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பேட்டிங் ஆடிகொண்டிருந்ததோ கடைசி ஓவரில் வெற்றிகரமாக போட்டியை முடித்து வைப்பதில் வல்லவரான தோனி. ஐபிஎல் தொடரில் இதுவரை 89 ஆட்டங்களில் 20ஆவது ஓவரை எதிர்கொண்டுள்ள தோனி அந்த ஓவரில் மட்டும் 680க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். எனவே, கேப்டனாக விளையாடும் 200வது போட்டியை டோனி வெல்வார் என்றே கருதப்பட்டது. ஆனால், சந்தீப் சர்மா தனது அற்புதமான பந்துவீச்சு மூலம் 3 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

ராஜஸ்தான் - சென்னை அணிகள் இதுவரை மோதிய 27 போட்டிகளில் 15 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் இரு அணிகளும் விளையாடிய கடைசி 6 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 6 முறை வெற்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்விக்கு பின் பேசிய தோனி, நான் பேட்டிங் செய்யும்போது மிடில் ஓவர்களில் அதிக பந்துகளை ரன்கள் எடுக்காமல் வீணடித்துவிட்டோம். மிடில் ஓவர்களில் கூடுதல் ரன்களை எடுத்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார் அதேபோல், பந்துவீச்சாளர்கள் எதாவது தவறு செய்வார்களா என்று காத்திருந்தேன். கடைசி ஓவரில் பந்து வீச்சாளர் சற்று அழுத்தத்தில் இருந்தார். மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததையும் நாங்கள் பார்த்தோம். முதல் சில ஓவர்களுக்கு பின்னர் அது எளிதாகிவிட்டது. நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்

நேற்றைய ஆட்டத்திற்கு முன்பாக ஸ்டார் ஸ்போட்ஸ் ஊடகத்தில் பேசியிருந்த இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், `எம்எஸ் தோனி பேட்டிங் வரிசையில் தன்னை உயர்த்திக் கொள்வார் என்று நம்புகிறேன். இதனால், அவர் கூடுதலாக இரண்டு அல்லது மூன்று ஓவர்களுக்கு மேல் விளையாட முடியும். அவரால் மிகப்பெரிய ரன்களை அடிக்க முடியும் என்பதால், தனது பேட்டிங் மூலம் சிஎஸ்கேவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்` என்று தெரிவித்திருந்தார்.

நடப்பு தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் போட்டிங்களில் நேற்றைய ஆட்டத்தில் மட்டுமே டோனி 10 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 7 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 ரன்களையும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 பந்துகளில் 12 ரன்களையும் தோனி எடுத்திருந்தார். நேற்றைய ஆட்டத்தில்17 பந்துகளை எதிர்கொண்ட தோனி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 32 ரன்களை எடுத்திருந்தார். ஒருவேளை கவாஸ்கர் கூறியபடி டோனி பேட்டிங்கில் சற்று முன்வரிசையில் களமிறங்கியிருந்தால் போட்டி சிஎஸ்கே வசம் வந்திருக்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/c25xqy05j87o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூர்ய குமார் யாதவ்: மிஸ்டர் 360க்கு திடீரென்று என்ன ஆயிற்று, மட்டைக்கு அவரிடம் என்ன கோபம்?

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விமல் குமார்
  • பதவி,விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
  • 55 நிமிடங்களுக்கு முன்னர்

ஐபிஎல் போட்டியின் போது ஒவ்வொரு நாளும் ஒரு ஹீரோவையும் வில்லனையும் சோஷியல் மீடியா தேடுகிறது.

யாரோ ஒருவர் அதிரடியான மேட்ச்-வின்னிங் இன்னிங்ஸை விளையாடுகிறார் அல்லது அற்புதமாக பந்துவீசுகிறார்.

அப்போது அவருக்கு பாராட்டு மழை பொழியும் வகையில் அவரது சிறுவயது பின்னணியில் இருந்து இன்று வரையிலான போராட்டமும் வெற்றியும் அனைவரின் முன்னும் வைக்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் முழு கோபத்தையும் காட்டுவதற்காக சமூக ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வில்லனையும் தேடுகின்றன.

 

ஏற்கனவே நிலைபெற்றிருக்கும் ஒரு வீரர் போராடுவதைப் பார்த்தால், அவரை 'போட்டியின் குற்றவாளி' ஆக்குவதில் நிறைய விமர்சகர்களுக்கு சந்தோஷம் ஏற்படுகிறது.

டீம் இந்தியாவின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு முறை சரியான ஆனால் மிகவும் தீவிரமான ஒரு விஷயத்தை புன்னகையுடன் கூறினார். ஒருமுறை தனக்கு 'தி வால்' அதாவது "டீம் இந்தியாவின் சுவர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இது ஊடகங்களுக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில் தனது ஃபார்ம் மோசமடையும்போது, 'சுவரில் விரிசல்' போன்ற தலைப்புச் செய்திகளை எழுத முடியும் என்று அவை மகிழ்ச்சியாக இருந்தன என்று டிராவிட் அப்போது கூறியிருந்தார்.

2011-12 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டிராவிட் போராடியபோது இது உண்மையிலேயே நடந்தது என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

'சூரியனுக்கு கிரகணம்'

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தற்போது சூர்ய குமார் யாதவுக்கும் அதுதான் நடக்கிறது. ஸ்கை என்று அழைக்கப்பட்ட அதே சூர்ய குமார் யாதவுக்கு ‘சூர்யா பர் லகா கிரஹண்’ (சூரியன் மீது கிரஹணம்) என தலைப்புகளை அளிப்பதுடன் அன்றைய போட்டியின் குற்றவாளியைத் தேடும் பணி முடிவுக்கு வருகிறது.

கடந்த இரண்டு மாதப் பயணம் சூர்யகுமார் யாதவுக்கு விசித்திரமானதாக இருக்கிறது. அதற்கு முந்தைய 12 மாதப் பயணம் ஒரு தங்கக் கனவு போல இருந்ததை தற்போது அவரால் நம்பக்கூட முடியாது.

2023 பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள் என்ற ஒரு குறுகிய ஆனால் பயனுள்ள இன்னிங்ஸை விளையாடினார்.

அன்று முதல் அடுத்த 7 இன்னிங்ஸ்களில் (டெஸ்டில் 1, ஒருநாள் மற்றும் ஐபிஎல்லில் 3-3) அவரால் 24 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது என்பதை விளையாட்டின் கொடுமையின் ஒரு பகுதி அல்லது காலத்தின் மாற்றம் என்றே சொல்லமுடியும்.

ஆனால் இந்த ஏழு இன்னிங்ஸ்களில் 4 முறை இரண்டாவது பந்தை கூட எதிர்கொள்ள முடியாமல் அவர் 'கோல்டன் டக்கிற்கு' பலியாகி இருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

சூர்யகுமார் யாதவின் முகத்தில் பிரகாசத்திற்கு பதிலாக திகைப்பும் குழப்பமும் கலந்த உணர்வே காணப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தரவரிசையில் நம்பர் 1

இந்த காலகட்டத்தைப் பார்க்கும்போது, ஐசிசி டி20 தரவரிசையில் அவர் இன்னும் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்பதை நம்புவது மிகவும் கடினம்.

அவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த நம்பர் 2 பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானுக்கும் இடையே கிட்டத்தட்ட 100 அதாவது 95 புள்ளிகள் இடைவெளி உள்ளது.

2022-ம் ஆண்டில் அதிகபட்சமாக 1164 ரன்கள் எடுத்த இந்த மும்பை பேட்ஸ்மேனின் ஸ்டிரைக் ரேட் (187.43) சராசரி (46.56) வியக்க வைக்கும் வகையில் இருந்ததால் இது நடந்துள்ளது.

கடந்த ஆண்டு, 9 அரை சதங்கள் அடித்ததைத் தவிர, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இரண்டு சதங்களையும் அடித்துள்ளார் சூர்யா.

அந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் சதம் அடித்த சூர்யா செய்தியாளர் கூட்டத்திற்கு வந்தபோது, தனது அசாதாரண நிலைத்தன்மையைக் கண்டு தானே ஆச்சரியப்பட்டதை ஒப்புக்கொள்ள மறுக்கவில்லை.

சூர்யா பேட்டிங் செய்வதைப் பார்த்தால் அவர் ஆடுகளத்தில் அல்ல, வீடியோ கேமில் பேட்டிங் செய்கிறார் என்ற எண்ணம் ஏற்படுகிறது என்று விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் கூறிய காலகட்டம் இது.

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையின் போது ஒவ்வொரு போட்டியிலும் எதிரணி பந்துவீச்சாளர்கள் பொதுவாக சூர்யாவின் முன் உதவியற்றவர்களாகத் தெரிவது மற்றும் எதிரணி பயிற்சியாளரின் திகைப்புடன் கூடிய வெளிப்பாடு, 1970கள் மற்றும் 80களில் சர் விவியன் ரிச்சர்ட்ஸின் ஆதிக்க சகாப்தத்தை நினைவூட்டுவதாக இருந்தது.

கிரிக்கெட் மட்டை இடி முழக்கத்தை ஏற்படுத்தியபோது..

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பையின் போது, மெல்போர்னில் ஜிம்பாப்வேக்கு எதிரான அவரது அற்புதமான ஸ்டைல், உலகம் முழுவதிலுமிருந்து வந்த எல்லா செய்தியாளர்களையும் சிறிது நேரம் தங்கள் வேலையை நிறுத்தி அவரது பேட்டிங்கைப் பார்க்க கட்டாயப்படுத்தியது.

தொழில்முறை வாழ்க்கையில் ஒரு புதிய வீரருக்கு அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களின் அத்தகைய மரியாதை, அன்பு அத்தனை எளிதில் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்ட வெற்றிக்குப் பிறகு புத்தாண்டில் அதாவது 2023ல் சூர்யாவுக்கு பரிசுகள் பொழிந்தன.

ராஜ்கோட்டில் இலங்கைக்கு எதிராக அபார சதம் அடித்த அவருக்கு டி20 வடிவத்தில் துணைக் கேப்டன் பொறுப்பு கிடைத்தது.

ஒரு நாள் அணியில் சஞ்சு சாம்சனை விட அவர் முன்னுரிமை பெற்றார். கூடவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. ஆனால், அன்றிலிருந்து காலச் சக்கரம் வித்தியாசமான முறையில் சுழன்றது.

டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான பந்தயத்திற்கு ஒரு நாள் முன்பு 32 வயதான சூர்யகுமார் யாதவை நான் சந்தித்தேன்.

சூர்யாவின் முகத்தில் அதே பழைய உற்சாகமும், அவரது கைகுலுக்கலில் பரிச்சயமான அரவணைப்பும் மகிழ்ச்சியும் தெரிந்தது.

சூர்யாவின் தினசரி பழக்க வழக்கம் மற்றும் பயிற்சியில் எந்த மாற்றமும் இல்லை. முன்பு அவர் தனது விளையாட்டில் எச்சரிக்கையாகவும் விடாமுயற்சியுடனும் இருந்ததைப் போலவே இன்றும் அவரது பாணி அப்படியே உள்ளது.

'பிரகாசம் மீண்டும் தோன்றும்'

அவருக்கு என்னதான் நேர்ந்தது? இந்தக் கேள்வியை அவரிடம் நேரிடையாகக் கேட்க சிறிது தயங்கினேன். அதனால் வியர்வையில் அவர் நனைந்திருப்பதைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொன்னேன்.

" கடினமாக உழைப்பது மட்டுமே நம் கையில் உள்ளது. பலன் கொடுப்பது கடவுளின் வேலை. அதனால்தான் நான் என் பக்கத்திலிருந்து கடினமாக உழைக்கிறேன். கடவுள் மட்டுமே பலனை கொடுக்க முடியும்," என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

இவ்வாறு கூறிக்கொண்டே சூர்யகுமார் யாதவ் முன்னே செல்கிறார். டெல்லியிலும் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. அவர் மீண்டும் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார்.

ஆனால், போட்டி முடிந்ததும் டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் சூர்யகுமார் யாதவ் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த படங்களும் வெளியாயின.

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சாதிக்கும் அபாரத்திறமை சூர்யாவிடம் உள்ளது என்பது உலகம் முழுவதற்கும் தெரியும். அத்தகைய வீரர்கள் உலகக் கோப்பையை வென்று தருவார்கள் என்பதால் இந்தியா அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஐபிஎல் போட்டிக்கு முன்பு பாண்டிங் கூறியதை இங்கே குறிப்பிடுவது சுவாரசியமாக இருக்கும்.

சூர்யாவின் ஆட்டத்தில் நிலைத்தன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரிய தருணங்களில் மேட்ச்-வின்னராக பிரகாசிக்கும் பழைய அணி வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை அவர் தனக்கு நினைவுபடுத்துகிறார் என்று அதிகபட்ச ஒருநாள் உலகக் கோப்பைகளை விளையாடியுள்ள பாண்டிங் கூறினார்.

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் 18 இன்னிங்ஸ்களில் டக் அவுட் ஆகாமல் இருந்த பேட்ஸ்மேன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று இன்னிங்ஸ்களிலும் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பிய அதிர்ச்சி அனுபவத்தை சந்திக்க வேண்டியிருந்தது. கூடவே இந்த மூன்று இன்னிங்ஸ்களிலும் ஒவ்வொரு முறையும் அவர் முதல் பந்திலேயே அவுட் ஆனதுதான் வேதனையான விஷயம்.

ஆனால், கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நடப்பது முதல் முறை அல்ல. ஒருநாள் கிரிக்கெட் பற்றி மட்டும் பேசினால், அலெக் ஸ்டீவர்ட், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஷேன் வாட்சன் போன்ற ஜாம்பவான்கள் கூட முதல் பந்திலேயே அதாவது கோல்டன் டக்கில் அவுட் ஆகியுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் கோல்டன் டக்கிற்கு பலியாகாமல் இருந்திருக்கலாம், ஆனால் 1994 இல், அவரும் தொடர்ச்சியாக மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார்.

ஒருவர் எவ்வளவு அற்புதமான வீரராக இருந்தாலும் அவர் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இதுபோன்ற ஒன்றை கடக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு கிரிக்கெட் திடீரென்று இதயமில்லாத ஒன்றாக தோன்றத்தொடங்கும் என்று இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நல்ல விஷயம் என்னவென்றால், அவரது அணி சூர்யா மீது நம்பிக்கை வைத்துள்ளது. ”10 பந்துகள் காத்திருங்கள். மூன்று பவுண்டரிகள் அடித்தவுடன் அந்த பழைய சூரியாவை நீங்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்,” என்று லெக் ஸ்பின்னர் பீயூஷ் சாவ்லா சூரியாவுக்கு ஆதரவாகப்பேசியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c728g02pveeo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"56 டாட் பால்களை விட்டால் இதுதான் நடக்கும்"

குஜராத் டைடன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது. குஜராத் அணியின் பந்துவீச்சாளர் மோதிக் சர்மா, பேட்ஸ்மேன் சுப்மான் கில், ராகுல் தேவாட்டியா ஆகியோர் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி இறுதிக்கட்டத்தில் ஷாருக்கான் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்களை எடுத்தது. எனினும், தங்களது அணியின் பேட்டிங் சரியில்லை என்பதை தோல்விக்கான முக்கிய காரணமாக ஷிகர் தவான் தெரிவித்தார்.

ஆட்டம் முடிந்த பின்னர் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் அளித்த பேட்டியில், `நாங்கள் தேவையான ரன்களை குவிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். 56 டாட் பால்களை எதிர்கொண்டால், ஆட்டத்தை இழக்கத்தான் நேரிடும்.

எனவே, அதை சரி செய்ய வேண்டும். தொடக்கத்திலேயே விக்கெட்களை இழக்கும்போது, அடுத்து வருபவர்கள் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனை சரி செய்ய வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி இல்லாத நிலையைல் பேட்ஸ்மேன்கள் ஏற்படுத்தி தரவேண்டும்` என்று குறிப்பிட்டார்.

 

கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து செல்வதை தான் ரசிப்பதில்லை என்று வெற்றி குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டார்.

` உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நாங்கள் இருந்த சூழ்நிலையையும் ஆட்டம் சென்ற சூழ்நிலையையும் கணக்கில்கொண்டால் நிச்சயம் நான் இந்த ஆட்டத்தை பாராட்ட மாட்டேன். இந்த ஆட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள எங்களுக்கு நிறைய விஷயங்கள் உள்ளன.

ஆனால், அதுதான் விளையாட்டின் அழகு. மோஹித்தும் அல்ஜாரியும் சிறப்பாக பந்துவீசினார்கள். பெருமை எல்லாம் மோஹித்தையே சேரும். ஆட்டத்தை இந்த அளவு இறுதிக்கட்டத்துக்கு எடுத்து சென்றதை ஏற்றுக்கொள்வது கடினமாகதான் இருக்கும்` என்று தெரிவித்தார்.

பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி

மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 18வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து பஞ்சாப் அணியின் சார்பில் பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். கடந்த ஆட்டத்தை போன்றே இந்த ஆட்டதிலும் ரன் எதுவும் எடுக்காமலே பிரப்சிம்ரன் வெளியேறினார்.

ஷமி வீசிய முதல் ஓவரின் 2வது பந்தை பிரப்சிம்ரன் அடிக்க ரஷித் கானின் கேட்சாக தஞ்சமடைந்து. பஞ்சாப் அணியின் பேட்டிங் தூணாக விளங்கும் ஷிகர் தவானும் லிட்டில் வீசிய 4வது ஒவரில் கேட்சாகி 8 ரன்களோடு வெளியேற பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒருபக்கம் விக்கெட்கள் வீழ மறுபக்கம் மேத்யூ ஷார்ட் அதிரடி காட்டிக்கொண்டிருந்தார்.

அல்ஸாரி ஜோசப் வீசிய 5வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர்களை அவர் விளாசினார். பவர்பிளே ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.

ரஷீத் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷித் கான் சூழலில் சிக்கிய ஷார்ட்

2 விக்கெட்களை இழந்தபோதும் பஞ்சாப் அணியின் ரன்ரேட் சீரான அளவிலேயே இருந்தது. ஷார்ட் தனக்கு கிடைத்த நல்ல பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டிருந்தார். இதனால், பௌலிங்கில் மாற்றம் செய்ய திட்டமிட்ட குஜராத் கேப்டன் ஹர்திக் 7வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானிடம் வழங்கினார். அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. அந்த ஓவரின் 4வது பந்தில் ரஷித் கான் வீசிய கூக்லியை எதிர்கொள்ள முடியாமல் போல்ட் ஆனார்.

கடைசியில் கைகொடுத்த தமிழ்நாடு வீரர் ஷாருக் கான்

அதன் பின்னர் பஞ்சாப் அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்துபோனது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிதானமாகவே ஆடிக்கொண்டிருந்தனர். ராஜபக்‌ஷ 1 பவுண்டரி மட்டுமே விளாசினார். 26 பந்துகளை எதிர்கொண்ட அவரது பேட்டில் இருந்து 20 ரன்கள் மட்டுமே கிடைத்தன. ஜிதேஷ் சர்மாவும் சாம் கரனும் அவ்வளவு பெரிய ஷாட்கள் ஏதும் ஆடவில்லை. ஷிகர் தவான் கூறியது போலவே அதிக டாட் பால்களை பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டனர்.

10 ஓவருக்கு 75 ரன்களை எடுத்த பஞ்சாப் 15 ஓவர் முடிவில் கூடுதலாக 24 ரன்களை மட்டுமே எடுத்து 99 ரன்களை எட்டியிருந்தனர். இறுதிக்கட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக்கான் அதிரடியாக ஆட பஞ்சாப் அணி 150 ரன்களை கடந்தது. 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 22 ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 153 ரன்களை எடுத்திருந்தது.

குஜராத் அணியின் மோஹித் சர்மா கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினார். கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 5 சிக்ஸரை விட்டுக்கொடுத்த யஷ் தயாலுக்கு பதிலாக 34 வயதான மோகித் சர்மா குஜராத் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார். 4 ஓவர்களை வீசிய அவர் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

ஐபிஎல்

பட மூலாதாரம்,IPL

வலுவான தொடக்கம்

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய குஜராத் அணிக்கு சாஹா- கில் ஜோடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர். ர்ஷ்தீப் சிங் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். 19 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 30 ரன்கள் எடுத்த நிலையில், ரபாடா பந்துவீச்சில் சாஹா வெளியேறினார். ஐபிஎல்லில் ரபாடாவின் 100வது விக்கெட்டாகவும் இது அமைந்தது. 5 ஓவர் முடிவில் ஒருவிக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் எடுத்திருந்தது.

அதன் பின்னர் பஞ்சாப் பௌலர்கள் சாம் கரன், ஹர்பிரீத் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு காரணமாக குஜராத் அணியால் பவுண்டரிகளை பெரியளவில் அடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்ஷன்19 ரன்களிலும் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்களிலும் வெளியேறினார். விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுபக்கம் சுப்மான் கில் பொறுப்பாக விளையாடி 41 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

ஐபிஎல்

பட மூலாதாரம்,IPL

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்தபோது, முதல் பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் ஒரு ரன் அடித்து கில்லுக்கு ஸ்டிரைக் கொடுத்தார். பெரிய ஷார்ட்க்கு கில் முயற்சிக்க பந்து அவரிடம் இருந்து தப்பி ஸ்டம்பை பதம் பார்த்தது. 67 ரன்களில் கில் வெளியேற , ராகுல் தேவாட்டியா களத்திற்குள் வந்தார். 3வது பந்தில் 1 சிங்கில். 4வது பந்தில் யார்க்கர் வீசினார் சாம் கரண். அடிக்கத் தடுமாறிய மில்லர், ரன் ஓட முயற்சிக்க, ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டார் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா.

2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சாம் கரண் வீசிய 5வது பந்தை சாமர்த்தியமாக எதிர்கொண்ட தேவாட்டியா, பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் 4 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் 4 ஆட்டங்களில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.

https://www.bbc.com/tamil/articles/cv29yn854nro

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனிக்காக ஆடிய வீரரை தனது துருப்புச் சீட்டாக மாற்றிய ஹர்திக் பாண்டியா

மோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அபிஜீத் ஸ்ரீவாஸ்தவ்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மொஹாலியில் வியாழக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியின் 18வது பந்தயம் அதன் கடைசி ஓவருக்கு முன்பாக முற்றிலும் ஒருபக்கமாகவே இருந்தது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் அணிக்கு 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது. ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சாஹா சிறப்பான மற்றும் வேகமான தொடக்கத்தை கொடுத்தனர். கடைசி ஓவர் வரை பந்தயம் முற்றிலுமாக குஜராத்தின் கைக்குள் இருந்தது.

கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி பெற 7 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் சாம் கரனின் ஓவரின் முதல் பந்தில் மில்லர் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் மொத்தம் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது. நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மீதமுள்ள இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் எடுக்கும் சவால் இருந்தது. மேலும் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் ராகுல் தேவ்தியா பவுண்டரி அடித்தபோது குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

 

குஜராத் டைட்டன்ஸ் அணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று தோன்றிய ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. இது தொடர்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டி இவ்வளவு தூரம் சென்றிருக்கக் கூடாது என்றார் அவர். ”மிடில் ஓவர்களில் அதிக ரிஸ்க் எடுத்திருக்கலாம். இந்தப் பந்தயத்தில் நாங்கள் தோல்வியடைந்திருந்தால் முன்னோக்கி செல்வது கடினமாக இருந்திருக்கும். எனவே அதைப் பற்றி நாங்கள் கலந்து பேசுவோம். இந்தப் பந்தயத்தில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

ஹர்த்திக்கின் துருப்புச் சீட்டு யார்?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றியில் ஷுப்மன் கில் 67 ரன்கள் பங்களிப்பை அளித்திருந்தாலும் , பஞ்சாப் கிங்ஸை 153 ரன்களுக்குள் கட்டிப்போட்ட பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மாதான்.

கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் துருப்புச் சீட்டு தான் என்பதை அவர் நிரூபித்தார். மிகவும் அற்புதமாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மேலும் ஜிதேஷ் ஷர்மா மற்றும் சாம் கரன் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஆட்டநாயகனாகவும் முடிசூட்டப்பட்டார்.

2023 ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த இந்தப் பந்தயம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மோஹித் ஷர்மா விளையாடிய முதல் பந்தயமாகும்.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு 2013 இல் மோஹித் தனது முதல் ஐபிஎல் பந்தயத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனியின் தலைமையில் விளையாடினார்.

மோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பர்பிள் கேப் வென்றவர் மோஹித்

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்விங் மற்றும் மெதுவான பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடித்த மோஹித், தான் விளையாடிய முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் தனது அணியின் மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக தன்னை நிரூபித்தார்.

அவரது இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அவரது எக்கானமி 6.50 ஆக இருந்தது, இது மற்ற பந்துவீச்சாளர்களை விட குறைவு.

இது மட்டுமின்றி ஐபிஎல் இன் முதல் சீசனில் 6.43 என்ற எக்கானமியுடன் 20 விக்கெட்டுகளை மோஹித் ஷர்மா கைப்பற்றினார். மோஹித் இத்துடன் நிற்கவில்லை. அடுத்த சீசனிலேயே 23 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.

மோஹித் உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ளார்

2013 ஆகஸ்டில் மோஹித் ஷர்மாவுக்கு இந்திய அணியிலிருந்தும் அழைப்பு வந்தது. மோஹித் ஷர்மா 2014 டி20 உலகக் கோப்பை மற்றும் 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

2015 வரை அவர் இந்திய அணிக்காக ODI மற்றும் T20 போட்டிகளிலும் விளையாடினார். ஆனால் இடது கணுக்கால் காயம் காரணமாக 2016 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் செல்ல முடியவில்லை.

இதே தொடரில்தான் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இணைந்தார். பும்ரா 21 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும், 8 டெஸ்ட்களில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதற்குப் பிறகு, மோஹித் ஷர்மா டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது மட்டுமல்லாமல், 2015 அக்டோபருக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் போனது.

மறுபுறம், ஐபிஎல்லின் நான்கு சீசன்களில் (2013-2015) 57 விக்கெட்டுகளை வீழ்த்திய மோஹித், அடுத்த சீசனில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சிரமப்பட்டார்.

அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டதால் மோஹித், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார். அவர் 2018 வரை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். ஆனால் அவரது அணிகள் (சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ) மாறிக்கொண்டே இருந்தன, மேலும் அவரது எக்கானமி விகிதம் 8.40 ஆக அதிகரித்தது.

2019-ல் ஒரே ஒரு பந்தயத்தில் மட்டுமே விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு 2020-ல் தான் விளையாடிய ஒரே ஒரு பந்தயத்தில் நான்கு ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்தார். 2017 முதல் 2019 வரையிலான உள்நாட்டுப் போட்டிகளில் அவரால் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மோஹித் ஷர்மா நெட்டில் பந்துவீசினார். இந்த சீசனில், குஜராத் டைட்டன்ஸ் 50 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை அணியில் சேர்த்தது. இப்போது தனது முதல் ஆட்டத்திலேயே தான் ஹர்திக்கின் துருப்புச் சீட்டு என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

மோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கில் குஜராத்தின் பலம் என்ன?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக உள்ளது என்பது உண்மை.

ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சாஹா, அணிக்கு நல்ல மற்றும் வேகமான தொடக்கங்களை வழங்குகின்றனர். மிடில் ஆர்டரும் மிகவும் வலுவாக உள்ளது.

எனினும் கேப்டன் ஹார்திக்கின் மட்டையில் இருந்து இன்னும் ரன்கள் வரவில்லை. எனவே ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்களின் இதுவரையிலான செயல்பாடுகள் குறித்துப்பார்ப்போம்.

ஷுப்மன் கில்

இந்த பேட்ஸ்மேனை எவ்வளவு புகழ்ந்தாலும் அது குறைவுதான். அவரது பேட்டிங் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக கூட அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டு அவரது பேட் இந்திய அணிக்காக தொடர்ந்து ரன்கள் குவித்தது. அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் சதம் அடித்தார். அதே நேரத்தில் இந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 63, 14, 39 மற்றும் 67 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆரஞ்சு கேப்புக்கான போட்டியில் ஷுப்மன் இப்போது மொத்தம் 183 ரன்களுடன் ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளார்.

விருத்திமான் சாஹா

குஜராத் டைட்டன்ஸ் அணியின் இரண்டாவது தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹாவும் 19 பந்துகளில் வேகமான இன்னிங்ஸை விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில் விருத்திமான் 30 ரன்கள் எடுத்தார். இந்த ஐபிஎல்லில் இதுவரை அவர் 25, 14, 17 மற்றும் 30 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் பேட் ரன்களை குவிக்கவில்லை.

கடந்த சீசனில் 487 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த சீசனில் தான் விளையாடிய மூன்று போட்டிகளில் 8, 5 மற்றும் 10 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். இந்த பந்தயத்தில் ஹார்திக் பந்துவீசவில்லை என்றாலும், பேட்டிங்கில் அவர் எடுத்த குறைவான ஸ்கோர், வரும் போட்டிகளில் அணிக்கு கவலையை ஏற்படுத்தக்கூடும்.

டேவிட் மில்லர்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறந்த ஃபினிஷர் மற்றும் இறுதி வரை ஆடுகளத்தில் இருந்து அணியை வெற்றி பெறச்செய்யும் திறமை கொண்டவர்.

இந்தப் பந்தயத்திலும் அவ்வாறே செய்து இறுதிவரை நிலைத்து நின்று, ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்தார்.

எனினும் இந்த இன்னிங்ஸின் போது அவர் சற்று வேகமாக விளையாடியிருந்தால் கடைசி ஓவர் வரை பந்தயம் சென்றிருக்காது.

அவர் 18 பந்துகளை விளையாடினார். ஐபிஎல்லில் விளையாடும் மற்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களைப் போல மில்லரும் முதல் பந்தயத்தில் விளையாடவில்லை.

அவர் அணியில் இணைந்தபிறகு முதல் பந்தயத்திலேயே 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார். இரண்டாவது பந்தயத்திலும் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சாய் சுதர்ஷன்

இந்த ஐபிஎல்லின் மிகவும் பிரபலமான இம்பாக்ட் வீரர்களில் ஒருவர் சாய் சுதர்ஷன். (ஒவ்வொரு அணியும் தனது 11 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக பந்தயத்தின் எந்த நேரத்திலும் ஒரு இம்பாக்ட் வீரை களம் இறக்கமுடியும். இந்த விதி 2023 ஐபிஎல் போட்டியில் அறிமுகமானது.) கடந்த சீசனில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார் மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 65 ரன்கள் எடுத்தார். ஆனால் இந்த ஆண்டு, முதல் இம்பாக்ட் வீரராக களம் இறங்கி சென்னைக்கு எதிராக 22 ரன்கள் எடுத்தார்.

பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அவரது பேட்டில் இருந்து அதிக ரன்கள் வரவில்லை. அவரால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொத்தம் 156 ரன்களுடன் சாய் சுதர்சனும் ஆரஞ்சு கேப்புக்கான போட்டியில் 13வது இடத்தில் இருந்து எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

குஜராத்தின் பந்துவீச்சில் பலம் அதிகம்

பேட்டிங்கில் குஜராத் டைட்டன்ஸ் அணி வலுவாக இருக்கும் நிலையில், அதன் பந்துவீச்சாளர்களும் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையிலான முதல் 10 இடங்களில், மூன்று பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள ஒரே அணி குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே.

ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் ராஷித் கான் தான். இந்த ஐபிஎல்லில் அதிக டாட் பால்கள் போட்ட முதல் இரண்டு பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் அல்சாரி ஜோசப்.

மோஹித் சர்மா சிறந்த எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரஷீத் கான்

ரஷீத்

பட மூலாதாரம்,ANI

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.

இந்த ஐபிஎல்லில் இதுவரை ஹாட்ரிக் எடுத்த ஒரே பந்து வீச்சாளர் இவர்தான்.

அவர் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். ஆனால் அந்த விக்கெட் மிக முக்கியமான பேட்ஸ்மேனுடையது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 36 ரன்களை எடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். இத்தகைய சூழ்நிலையில், ராஷித் தனது கூக்லி பந்தில் அவரை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நிம்மதியைக் கொடுத்தார்.

அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார் மற்றும் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராகவும் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.

அதே நேரத்தில், சென்னையின் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை (பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி) பெவிலியன் திரும்பச்செய்தார்.

பர்ப்பிள் கேப்புக்கான (அதிக விக்கெட் எடுப்பவர்) போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்குப் பிறகு 9 விக்கெட்டுகளுடன் அவர், மார்க் வுட்டுடன் கூட்டாக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார்.

அல்சாரி ஜோசப்

இந்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் இந்தப் பந்தயத்தில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். ஆனால் இந்த சீசனில் ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களை அவுட் ஆக்கியுள்ளார்.

மேலும் ரஷீத் கானுக்குப் பிறகு அவர் அணிக்காக 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதிக டாட் பால்களை (46 டால் பால்களுடன்) போட்டதில், அவர் தனது சக அணி வீரர் முகமது ஷமிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஷமி

பட மூலாதாரம்,ANI

முகமது ஷமி

இந்த ஐபிஎல் தொடரில் முகமது ஷமி இதுவரை 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அவர் சென்னை சூப்பர் கிங்ஸின் இரண்டு பேட்ஸ்மேன்களையும், டெல்லி கேபிடல்ஸின் மூன்று பேட்ஸ்மேன்களையும் அவுட் ஆக்கினார்.

பர்பிள் கேப்புக்கான பந்தயத்தில் ஷமி ஆறாவது இடத்தில் உள்ளார். அதே சமயம், இந்த ஐபிஎல்லில் அதிகபட்சமாக 47 டாட் பால்களை வீசி, அந்தப் போட்டியிலும் அவரே முதலிடத்தில் இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv2qy38j1n0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடராஜன் தந்த திருப்பம்: 13 கோடிக்கு 'ஒர்த்' என நிரூபித்த ஹாரி புரூக் - கொல்கல்த்தாவை வென்ற ஹைதராபாத்

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 15 ஏப்ரல் 2023, 04:03 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது வெற்றியை ருசித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இம்முறை இமாலய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியது.

கடந்த முறையைப் போல கடைசிக் கட்டத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்த்துவார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை புதிய நட்சத்திரம் ரிங்கு சிங்கால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அதிரடி வீரர் ஹாரி புரூக், கேப்டன் மார்க்ரம், இளம் வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட, புவனேஷ்குமார், மார்க்கண்டே ஆகியோர் பவுலிங்கில் அசத்தினர். இக்கட்டான நேரத்தில் அணிக்கு மிகவும் அவசியமான விக்கெட்டை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நடராஜன், வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்.

ஹைதராபாத் அணி பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு பல கேட்ச்களை கோட்டை விட்டதால் எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றிக்கு கடைசி வரை போராட வேண்டி வந்துவிட்டது.

 

மறுமுனையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியோ ஒரு கட்டத்தில் இமாலய இலக்கை துரத்துகையில் எப்படி ஆட வேண்டும் என்று மற்ற அணிகளுக்கு பாடம் எடுப்பது போன்றதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், அதே இமாலய இலக்கு தந்த அழுத்தத்துடன், ஆந்த்ரே ரஸ்ஸலின் உடல் தகுதிப் பிரச்னையும் சேர்ந்து கொள்ள அந்த அணி கடைசி வரை போராடியும் வெற்றி கைகூடவில்லை.

ரூ.13.25 கோடிக்கு 'ஒர்த்' என்பதை நிரூபித்த ஹாரி புரூக்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்னை 13.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது சரிதான் என்று நிரூபிக்கும் வகையில் ஹாரி புரூக்கின் ஆட்டம் அமைந்திருந்தது. கடந்த சில தொடர்களாகவே பலவீனமாக காணப்பட்ட மிடில் ஆர்டரை வலுப்படுத்தவே இவரை அந்த அணி வாங்கியிருந்தது. ஆனால், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பவுன்சாகக் கூடிய ஆடுகளங்களில் அதிரடியாக விளையாடிப் பழக்கப்பட்ட ஹாரி புரூக், மெதுவான இந்திய ஆடுகளங்களில் சற்று தடுமாறினார்.

அவரது ஆட்ட ஸ்டைலை புரிந்து கொண்டு, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதற்கான பலனை அறுவடை செய்துள்ளது. மிடில் ஆர்டரில் 2 போட்டிகளிலும், தொடக்க வீரராக கடந்த ஆட்டத்திலும் ஜொலிக்கத் தவறிய ஹாரி புரூக், ஐ.பி.எல்.லில் தனது நான்காவது ஆட்டத்திலேயே சதம் கடந்து அசத்தினார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்சைத் தொடங்கிய அவர், தனது ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு அப்போதே கட்டியம் கூறிவிட்டார்.

அதன் பிறகு ஹாரி புரூக்கின் பேட்டில் பட்ட பந்துகள் எல்லைக்கோட்டை முத்தமிட்ட வண்ணம் இருந்தன. குறிப்பாக, வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 55 பந்துகளில் சதம் கடந்து அசத்திய ஹாரி புரூக் 12 பவுண்டரிகளையும், 3 சிக்சர்களையும் விளாசினார்.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கில் திட்டங்களை கனகச்சிதமாக செய்து முடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் தனது திட்டத்தை கனகச்சிதமாக செயல்படுத்துவதில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஹாரி புரூக் முதல் பந்தில் இருந்தே வேகப்பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். உமேஷ் யாதவ், பெர்குசன் ஆகியோர் வீசிய முதல் 3 ஓவர்களிலேயே அணிக்கு 43 ரன்களை அவர் திரட்டித் தந்துவிட்டார்.

இதன் மூலம், கொல்கத்தா அணி முன்கூட்டியே சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தத்தை அவர் உண்டாக்கினார். பவர் பிளேவில் நான்காவது ஓவரை சுனில் நரைன் சிக்கனமாக பந்துவீசி முடித்தாலும் அடுத்து வந்த ஓவர்களில் கேப்டன் மார்க்ரம் சுழற்பந்துவீச்சாளர்களை சின்னாபின்னமாக்கினார். இதனால், கொல்கத்தா அணி சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் மிடில் ஓவர்களிம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரன்கள் தடையின்றி வந்து கொண்டிருந்தன.

கேப்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 50 ரன் குவித்து ஆட்டமிழந்த பிறகு சுழற்பந்துவீச்சாளர்களை இளம் வீரர் அபிஷேக் சர்மா பார்த்துக் கொண்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்னிங்சின் கடைசிக் கட்டத்தில் ஒருபுறம் வேகப்பந்துவீச்சாளர்களை ஹாரி புரூக் சிதறடிக்க, சுழற்பந்துவீச்சாளர்கள் சிக்கனம் காட்டாமல் அபிஷேக் சர்மா நன்றாக கவனித்தார். 17 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் சேர்த்தார்.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தாவின் சுழல் மும்மூர்த்திகளை சிதறடித்த மார்க்ரம், அபிஷேக்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் - வருண் சக்கரவர்த்தி சுழல் கூட்டணி கடந்த இரு தொடர்களாகவே எதிரணிகளை அச்சுறுத்தி வருகிறது. நடப்புத் தொடரில், அவர்களுடன் 19 வயதே நிரம்பிய இளம் லெக் ஸ்பின்னர் சுயாஷ் சர்மாவும் சேர்ந்து கொள்ள, இந்த சுழல் மும்மூர்த்திகளை எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.

இந்த சுழல் கூட்டணியை சமாளிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் போட்டு வைத்த திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்றிக் காட்டினர். வேகப்பந்துவீச்சுக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய ஹாரி புரூக்கின் வேகம் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்ததும் தணிந்தது. பவர் பிளேவுக்கு பிறகு 7 முதல் 14-வது ஓவர் வரையிலும் ஹாரி புரூக் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 20 பந்துகளில் வெறும் 19 ரன்களையே அவர் எடுத்திருந்தார்.

ஆனால் மறுமுனையில் இருந்த கேப்டன் மார்க்ரம் சுழற்பந்துவீச்சாளர்களை கவனித்துக் கொண்டார். மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சில் 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் 42 ரன்களை விளாசினார். நரைன் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 ரன்களை எடுத்த மார்க்ரம், வருண் சக்கரவர்த்தி வீசிய 8 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களையும், சுயாஷ் வீசிய 8 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களையும் விளாசினார்.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம்,BCCI/IPL

மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை மார்க்ரம் கவனித்துக் கொண்டதால், மறுமுனையில் ஹாரி புரூக்கால் நெருக்கடியின்றி விளையாட முடிந்தது. 15-வது ஓவர் வரையிலும் ஒரு பவுண்டரி கூட கொடுக்காத சுனில் நரைனை டெத் ஓவர்களில் அபிஷேக் சர்மா கவனித்தார். அவரது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அசத்தினார் அபிஷேக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் திட்டங்களை சரியாக நிறைவேற்றி, எந்தவொரு கட்டத்திலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த விடாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆந்த்ரே ரஸ்ஸல் பாதியில் வெளியேறியதால் கொல்கத்தாவுக்கு பாதிப்பு

நடப்புத் தொடரில் நான்காவது போட்டியாக, ஒவ்வொரு முறையில் பந்துவீச வந்ததுமே விக்கெட் வீழ்த்தி அசத்தி வரும் ஆந்த்ரே ரஸ்ஸல் நேற்றும் அதனை செய்து காட்டினார். முதல் பந்திலேயே மயங்க் அகர்வாலை வீழ்த்திய அவர், அதே ஓவரின் கடைசிப் பந்தில் ராகுல் திரிபாதியையும் பெவிலியனுக்கு அனுப்பினார். அந்த ஸ்பெல்லில் மேலும் ஒரு ஓவரை வீசிய ரஸ்ஸல் காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.

இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் போது ஆந்த்ரே ரஸ்ஸலை அவசியமான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தவித்தது. 19-வது ஓவரின் போது மீண்டும் பந்து வீச வந்த ஆந்த்ரே ரஸ்ஸல், முதல் பந்திலேயே அபிஷேக் ஷர்மாவை வீழ்த்தினாலும், மேற்கொண்டு பந்துவீச முடியாமல் மீண்டும் பெவிலியனுக்குத் திரும்பிவிட்டார்.

இமாலய இலக்கைத் துரத்துகையில் ஆந்த்ரே ரஸ்ஸல் போன்ற அசகாய சூரரின் பங்களிப்பு எந்தவொரு அணிக்கும் மிகவும் அத்தியாவசியமானது. 100 சதவீத உடற்தகுதியுடன் இல்லாத அவரால் முழு பங்களிப்பை அளிக்க முடியாமல் போனது அவரது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இமாலய இலக்கு தந்த நெருக்கடியால் சரிந்த விக்கெட்டுகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 229 ரன் என்ற இமாலய இலக்கு தந்த நெருக்கடியே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பேட்ஸ்மேன்களை மனதளவில் முதலிலேயே வீழ்த்திவிட்டது. முதல் பந்து முதலே அடித்து நொறுக்க வேண்டும் என்று அவசரம் காட்டிய கொல்கத்தா வீரர்கள் 20 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை தாரை வார்த்து விட்டனர். வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் ஆகியோர் அனைத்து பந்துகளையும் விளாச விரும்பி, ஜேன்சன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டனர்.

பின்னர் ஜெகதீசன், கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியால் அந்த அணி வேகமாக ரன்களைக் குவித்தாலும் வெற்றி இலக்கு வெகுதொலைவில் இருந்ததால் அது போதுமானதாக இருக்கவில்லை.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம்,BCCI/IPL

தனி ஒருவனாக போராடிய கேப்டன் நிதிஷ் ராணா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் போய்விட்டாலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பேட்டிங்கும் அசத்தலாகவே இருந்தது. குறிப்பாக, கேப்டன் நிதிஷ் ராணாவின் பேட்டிங் அசத்தலாக இருந்தது. முதல் 3 ஓவர்களிலேயே 20 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டாலும், கொஞ்சமும் சோர்ந்து போகாமல் களத்தில் சூறாவளியாக அவர் சுழன்றார். குறிப்பாக, ஐந்தாவது ஓவரை வீச வந்த உம்ரான் மாலிக்கை நிதிஷ் ராணா பதம் பார்த்தார்.

அந்த ஓவரில் 4, 6, 4, 4, 4, 6 என்ற வகையில் அனைத்துப் பந்துகளையும் எல்லைக்கோட்டிற்கு விரட்டி 28 ரன்களை நிதிஷ் ராணா திரட்டினார். இதன் மூலம் ரன் ரேட் நெருக்கடியில் இருந்து சற்று விடுபட்ட கொல்கத்தா அணிக்கு, அடுத்து வந்த ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்து ரன் ரேட்டை பராமரிக்க அவர் உதவினார். சேஸிங்கில் அந்த அணியின் உத்தியும் அதுவாகவே இருந்தது. அதாவது ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர், மற்ற பந்துகளில் ஒன்று இரண்டு ரன்கள் என்ற வகையில் அந்த அணி ரன்களை குவித்துக் கொண்டே இருந்தது.

இக்கட்டான நேரத்தில், தனது அணிக்காக ஒரு கேப்டன் இன்னிங்சை அபாரமாக விளையாடிய நிதிஷ் ராணா, 41 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 75 ரன்களை குவித்தார்.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அச்சுறுத்திய ஜோடியை பிரித்து திருப்பம் தந்த நடராஜன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 228 ரன்களைக் குவித்திருந்த போதிலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு சேஸிங்கில் நிதிஷ் ராணா - ரிங்கு சிங் ஆகியோர் களத்தில் இருந்த வரை வெற்றி இலக்கு எட்டும் தொலைவில் இருந்ததாகவே பட்டது. இருவருமே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணம் இருந்ததால் ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவ்வளவு ரன்களைக் குவித்தும் பலனில்லாமல் போய்விடுமோ என்று அதன் ரசிகர்கள் அஞ்சும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

அந்த நேரத்தில், 17-வது ஓவரை வீச வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், தனது அணி எதிர்பார்த்திருந்த திருப்பத்தை தந்தார். களத்தில் அச்சுறுத்திக் கொண்டிருந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் நிதிஷ் ராணாவை மூன்றாவது பந்தில் நடராஜன் காலி செய்தார். நடராஜன் புல்டாசாக வீசிய பந்தை ராணா தூக்கி அடிக்க, டீப் கவர் திசையில் நின்றிருந்த வாஷிங்டன் சுந்தர் அற்புதமாக கேட்ச் செய்தார். நிதிஷ் ராணா - ரிங்கு சிங் ஜோடி பிரிந்த பிறகே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம்,BCCI/IPL

ரிங்கு சிங்கிடம் மீண்டும் ஒரு அற்புதத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம்

நிதிஷ் ராணா ஆட்டமிழந்த பிறகும், ரிங்கு சிங் களத்தில் இருந்ததால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே அதன் ரசிகர்கள் நம்பினர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கடந்த ஆட்டத்தில், கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை நொறுக்கி அணிக்கு அதிசயிக்கத்தக்க வெற்றியைத் தேடித் தந்த ரிங்கு சிங் அதுபோன்றதொரு அற்புதத்தை நிகழ்த்துவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

நிதிஷ் ராணா ஆட்டமிழந்த போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 3 ஓவர்களில் 58 ரன்கள் தேவையாக இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது போல ரிங்கு சிங்கும் சில பவுண்டரிகளை விளாசினார். இதனால், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவையாக இருந்தது. ரிங்கு சிங்கோ நான்-ஸ்டிரைக்கர் முனையில் இருந்தார்.

கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக் முதல் பந்திலேயே ஷர்துலை காலி செய்தார். அடுத்த பந்தில் உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுத்து, ரிங்கு சிங்கிற்கு பேட்டிங் வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அப்போதே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டிருந்தது. ஏனெனில், அடுத்த 4 பந்துகளில் கொல்கத்தா அணிக்கு 31 ரன்கள் தேவையாக இருந்தது. சன்ரைசர்ஸ் அணி நோபால், வைடுகளை வீசாத பட்சத்தில் அனைத்து பந்துகளில் சிக்சருக்குப் போனாலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உம்ரான் மாலிக் கச்சிதமாக ஓவரை வீசி ரிங்கு சிங்கை பெரிய ஷாட்களை ஆட விடாமல் கட்டிப் போட்டார். கடைசி வரையிலும் களத்தில் இருந்த ரிங்கு சிங், ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சர் அடித்து திருப்திப்பட்டுக் கொண்டார். ரிங்கு சிங் மீண்டும் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுவார் என்று கடைசி வரையிலும் நம்பிக் கொண்டிருந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மோசமான பீல்டிங் - 7 கேட்ச்களை கோட்டை விட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பீல்டிங் கடந்த ஆட்டத்தைப் போலவே நேற்றும் மிகவும் மோசமாக இருந்தது. அந்த அணி வீரர்கள் மொத்தம் 7 கேட்ச்களை கோட்டை விட்டனர். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசனுக்கு மட்டும் 2 கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. புவனேஷ்வர் குமாரும், ராகுல் திரிபாதியும் தலா ஒரு கேட்சை தவறவிட்டனர்.

மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருந்த நிதிஷ் ராணாவை 16-வது ஓவரில் அவுட்டாக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் கோட்டை விட்டார். புவனேஷ்வர் குமார் வீசிய 18-வது ஓவரில் மட்டும் 2 கேட்ச்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் கோட்டை விட்டனர்.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் எளிய கேட்ச்களை தவறவிடாமல் பிடித்திருந்தாலே, அந்த அணி நேற்றைய ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றிருக்கும். பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டால் அந்த அணி எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை மிகவும் போராடியே பெற முடிந்தது.

https://www.bbc.com/tamil/articles/czrvzr39xrko

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விராட் கோலி அரை சதம்: திருப்பம் தந்த குல்தீப் - டெல்லிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

ஐபிஎல்: பெங்களூரு- டெல்லி ஆட்டம்

பட மூலாதாரம்,BCCI/IPL

34 நிமிடங்களுக்கு முன்னர்

பெங்களூருவில் நடைபெற்று வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 174 ரன்களை எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூருவின் விராட் கோலி, டு பிளெசி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

நோர்ட்ஜே வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விராட் கோலி விரட்ட முஸ்தாஃபிசூர் ரஹ்மான் வீசிய மூன்றாவது ஓவரில் டூ பிளெசி தன் பங்கிற்கு 2 பவுண்டரிகளை விரட்டினார். இதனால் 4 ஓவர் முடிவில் 33 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.

 

அமன் ஹாகிம் பிடித்த அற்புத கேட்ச்

மிட்செல் மார்ஷ் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி பவுண்டரி அடிக்க, 3வது பந்தில் டு பிளெசி ஒரு பவுண்டரி அடித்தார்.

மார்ஷ் வீசிய அடுத்த பந்தை டு பிளெசி மிட் விக்கெட்டில் தூக்கியடிக்க அமன் ஹாகிம் அதை அற்புதமாகப் பாய்ந்து பிடித்தார். இதையடுத்து 16 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 22 ரன்களில் டு பிளெசி வெளியேறினார்.

இதையடுத்து மஹிபால் லாம்ரோர் களமிறங்கினார். டு பிளெசி அவுட் ஆன பிறகு, பெங்களுரு அணியின் ரன் ரேட்டில் சுணக்கம் ஏற்பட்டது. டு பிளெசி ஆட்டமிழந்த அடுத்த 12 பந்துகளுக்கு எந்த பவுண்டரியையும் பெங்களூரு தரப்பு அடிக்கவில்லை.

விராட் கோலி அரை சதம்

முஸ்தாஃபிசூர் ரஹ்மான் வீசிய பத்தாவது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி 4வது பந்தில் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் போட்டியில் தனது 47வது அரை சதத்தை அவர் எட்டினார்.

அடுத்த பந்தில் லாம்ரோர் சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தது. லலித் யாதவ் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை விராட் கோலி சிக்ஸர் அடிக்க முயல அது யஷ் துல்லிடம் கேட்ச்சாக அமைந்தது. அப்போது, பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களை எடுத்திருந்தது.

ஐபிஎல்: பெங்களூரு- டெல்லி ஆட்டம்

பட மூலாதாரம்,BCCI/IPL

பயம் காட்டிய மேக்ஸ்வெல்

அடுத்து வந்த மேக்ஸ்வெல் தனது ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினார். லலித் யாதவி வீசிய அதே ஓவரில் 2 சிக்ஸர்களை அவர் அடித்தார்.

மார்ஷ் வீசிய 13வது ஓவரின் 2வது பந்தை சிக்ஸருக்கு விரட்டிய லாம்ரோர் அடுத்த பந்தேலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அக்‌ஷர் பட்டேல் வீசிய 13வது ஓவரில் மேக்ஸ்வெல், ஹர்ஷால் ஆகியோர் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். இதனால் கடந்த ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் பெங்களூரு அணி 200 ரன்களை கடக்க சாத்தியம் இருப்பதாகத் தோன்றியது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

3 பந்துகளில் மூன்று விக்கெட்கள்

இரண்டு சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தாலும் தனது ஓவரின் கடைசிப் பந்தில் ஹர்ஷாலை அக்‌ஷர் பட்டேல் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்திருந்தது.

15வது ஓவரை வீசிய குல்தீப் சிங் முதல் பந்திலேயே அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லையும் அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக்கையும் ஆட்டமிழக்கச் செய்து பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இறுதிக்கட்டத்தில் ஷாபாஸ் அகமத் அதிரடியாக விளையாட 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 174 ரன்களை எடுத்தது.

குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்களையும் அக்ஷர் பட்டேல், லலித் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணி களமிறங்கியது. வார்னர் - பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

சிராஜ் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் பிரித்வி ஷா சிங்கிள் எடுக்க முயன்றார். அப்போது, இம்பேக்ட் பிளேயராக களமிறங்கியிருந்த அனுஜ் ராவத் பந்தை டைவ் அடித்து பிடித்து ஷாவை ரன் அவுட் செய்தார்.

அடுத்த ஓவரில் மிட்ஷெல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேற 1-2 என்ற மோசமான நிலையில் டெல்லி இருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cv2v0720155o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் 2023: விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி- பரிதாப நிலையில் டெல்லி

ஐபிஎல்: பெங்களூரு- டெல்லி ஆட்டம்

பட மூலாதாரம்,BCCI/IPL

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பெங்களூருவில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்தார்.

டெல்லி அணியின் மணீஷ் பாண்டே அரை சதம் அடித்தப்போதும், 2 ரன்களுக்குள் 3 விக்கெட்களை அந்த அணி இழந்ததால் அந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை.

தோல்வி குறித்து டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ` நாங்கள் தொடக்கத்திலேயே நிறைய விக்கெட்களை இழந்துவிட்டோம். ஸ்கோரை விரட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற பார்னர்ஷிப்பை நாங்கள் உருவாக்கவில்லை. அடுத்த 5 நாட்களுக்குள் பலம் வாய்ந்த அணியாக திரும்ப வேண்டும். தற்போது எதுவும் சரியாக அமையவில்லை. அதே நேரத்தில் ஒருசில அணிகள் 0-5க்கு என்ற நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளன. அதேபோல், நாங்களும் மீண்டு வருவோம்` என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, நடப்பு ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூருவின் விராட் கோலி, டு பிளெசி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

நோர்ட்ஜே வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விராட் கோலி விரட்ட முஸ்தாஃபிசூர் ரஹ்மான் வீசிய மூன்றாவது ஓவரில் டூ பிளெசி தன் பங்கிற்கு 2 பவுண்டரிகளை விரட்டினார். இதனால் 4 ஓவர் முடிவில் 33 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.

அமன் ஹாகிம் பிடித்த அற்புத கேட்ச்

மிட்செல் மார்ஷ் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி பவுண்டரி அடிக்க, 3வது பந்தில் டு பிளெசி ஒரு பவுண்டரி அடித்தார்.

மார்ஷ் வீசிய அடுத்த பந்தை டு பிளெசி மிட் விக்கெட்டில் தூக்கியடிக்க அமன் ஹாகிம் அதை அற்புதமாகப் பாய்ந்து பிடித்தார். இதையடுத்து 16 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 22 ரன்களில் டு பிளெசி வெளியேறினார்.

இதையடுத்து மஹிபால் லாம்ரோர் களமிறங்கினார். டு பிளெசி அவுட் ஆன பிறகு, பெங்களுரு அணியின் ரன் ரேட்டில் சுணக்கம் ஏற்பட்டது. டு பிளெசி ஆட்டமிழந்த அடுத்த 12 பந்துகளுக்கு எந்த பவுண்டரியையும் பெங்களூரு தரப்பு அடிக்கவில்லை.

ஐபிஎல்: பெங்களூரு- டெல்லி ஆட்டம்

பட மூலாதாரம்,BCCI/IPL

விராட் கோலி அரை சதம்

முஸ்தாஃபிசூர் ரஹ்மான் வீசிய பத்தாவது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி 4வது பந்தில் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் போட்டியில் தனது 47வது அரை சதத்தை அவர் எட்டினார்.

அடுத்த பந்தில் லாம்ரோர் சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தது. லலித் யாதவ் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை விராட் கோலி சிக்ஸர் அடிக்க முயல அது யஷ் துல்லிடம் கேட்ச்சாக அமைந்தது. டெல்லி அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை 1 ரன்னில் விராட் கோலி தவற விட்டார். அப்போது, பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களை எடுத்திருந்தது.

ஐபிஎல்: பெங்களூரு- டெல்லி ஆட்டம்

பட மூலாதாரம்,BCCI/IPL

பயம் காட்டிய மேக்ஸ்வெல்

அடுத்து வந்த மேக்ஸ்வெல் தனது ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினார். லலித் யாதவி வீசிய அதே ஓவரில் 2 சிக்ஸர்களை அவர் அடித்தார்.

மார்ஷ் வீசிய 13வது ஓவரின் 2வது பந்தை சிக்ஸருக்கு விரட்டிய லாம்ரோர் அடுத்த பந்தேலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அக்‌ஷர் பட்டேல் வீசிய 13வது ஓவரில் மேக்ஸ்வெல், ஹர்ஷால் ஆகியோர் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். இதனால் கடந்த ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் பெங்களூரு அணி 200 ரன்களை கடக்க சாத்தியம் இருப்பதாகத் தோன்றியது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

3 பந்துகளில் மூன்று விக்கெட்கள்

இரண்டு சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தாலும் தனது ஓவரின் கடைசிப் பந்தில் ஹர்ஷாலை அக்‌ஷர் பட்டேல் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்திருந்தது.

15வது ஓவரை வீசிய குல்தீப் சிங் முதல் பந்திலேயே அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லையும் அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக்கையும் ஆட்டமிழக்கச் செய்து பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஐபிஎலில் குல்தீப் யாதவுக்கு எதிராக தடுமாறிவரும் மேக்ஸ்வெல் 4வது முறையாக தனது விக்கெட்டை அவரிடம் பறிகொடுத்தார்.

இறுதிக்கட்டத்தில் ஷாபாஸ் அகமத் அதிரடியாக விளையாட 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 174 ரன்களை எடுத்தது.

குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்களையும் அக்ஷர் பட்டேல், லலித் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

ஐபிஎல்: பெங்களூரு- டெல்லி ஆட்டம்

பட மூலாதாரம்,BCCI/IPL

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணி களமிறங்கியது. வார்னர் - பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

சிராஜ் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் பிரித்வி ஷா சிங்கிள் எடுக்க முயன்றார். அப்போது, இம்பேக்ட் பிளேயராக களமிறங்கியிருந்த அனுஜ் ராவத் பந்தை டைவ் அடித்து பிடித்து ஷாவை ரன் அவுட் செய்தார்.

அடுத்த ஓவரில் மிட்ஷெல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேற 1-2 என்ற மோசமான நிலையில் டெல்லி இருந்தது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கு ஏற்ப இந்த வீழ்ச்சியில் இருந்து டெல்லி அணி எழுச்சி பெறவே இல்லை. 3வது ஓவரை வீசிய சிராஜ் யாஷ் துல்லை எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழக்க செய்ய, மைதானத்தில் கூடியிருந்த பெங்களூரு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 2 ரன்களை எடுப்பதற்குள் மூன்று விக்கெட்களை அந்த அணி இழந்திருந்தது.

ஹாட்ரிக் ஃபோர் அடித்த வார்னர்

மறுபக்கம் பொறுமையாக ஆடி வந்த வார்னர், சிராஜ் வீசிய 5வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி ஹாட்ரிக் ஃபோர் அடித்தார். தங்களது முதல் பவுண்டரியை அடிக்க டெல்லி அணி 23 பந்துகளை எடுத்துகொண்டது குறிப்பிடத்தக்கது. விஜயக்குமார் வீசிய அடுத்த ஓவரிலேயே வார்னரும் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க 32 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் டெல்லி இருந்தது. அடுத்து வந்த மணீஷ் பாண்டே ஓரளவு பெங்களூருவின் பந்துவீச்சை தாக்குபிடித்தாடினார்.

ஐபிஎல்: பெங்களூரு- டெல்லி ஆட்டம்

பட மூலாதாரம்,BCCI/IPL

அரை சதம் அடித்த மணீஷ் பாண்டே

விக்கெட்கள் ஒரு பக்கம் சரிந்துகொண்டிருந்தாலும் அதிரடியாக விளையாடிய மணீஷ் பாண்டே ஹஸரங்கா வீசிய 14வது ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்ஸரை அடித்ததோடு ஐபிஎல் போட்டியில் தனது 22வது அரை சதத்தையும் கடந்தார். 38 பந்துகளில் 1 சிக்ஸர் , 5 பவுண்டரி உட்பட 50 ரன்களை எடுத்திருந்த நிலையில், அதே ஓவரின் கடைசி பந்தில் மணீஷ் பாண்டே எல்பிடபிள்யு ஆகி ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்திருந்தது.

டெல்லியின் வெற்றிக்கு 36 பந்துகளுக்கு 77 ரன்கள் தேவைப்பட்டன. நோர்ட்ஜே இறுதிக்கட்டத்தில் சில பவுண்டரிகளை அடித்தபோதும் வெற்றிக்கு போதுமானவையாக அவை அமையவில்லை. இறுதியில் 20 ஓவர் முடிவில் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2ல் தோல்வியையும் 2ல் வெற்றியையும் பெங்களூரு அணி பெற்றுள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி தான் விளையாடிய5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cv2v0720155o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

37 நிமிடங்களுக்கு முன்னர்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இடையிலான லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல். ராகுல் 74 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தூணாக விளங்கும் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக ஆட்டத்தில் பங்கேற்தாக நிலையில், சாம் கரண் அணியை வழி நடத்தினார்.

பஞ்சாப் கிங்ஸை பொறுத்தவரை அதன் பேட்டிங் பெரியளவில் ஷிகர் தவானை நம்பியே உள்ளது. அவர் இல்லாத நிலையில், பேட்டிங்கில் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவியது.

கடைசி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த பஞ்சாப் அணி இந்த ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்குத் திரும்புமா போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இதை சாம் கரணும் ஒப்புக்கொண்டார்.

 

"ஷிகர் தவான் பங்கேற்காதது எங்களுக்குப் பெரிய இழப்பு. அதே நேரத்தில் அணியில் உள்ள இளைஞர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புவதாக" டாஸின்போது அவர் தெரிவித்தார். டாஸ் வென்ற சாம் கரண் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

வலுவான தொடக்கம்

லக்னோ அணியின் கே.எல். ராகுல் - மேயர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். மேத்யூ ஷார்ட் வீசிய முதல் ஓவரில் சிக்ஸர் அடித்து தனது ரன் கணக்கை கைல் மேயர்ஸ் தொடங்கினார்.

இருவரும் தங்களுக்குக் கிடைத்த நல்ல பந்துகளை பவுண்டரி, சிக்ஸர் என விரட்ட பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை லக்னோ எடுத்திருந்தது.

இந்தக் கூட்டணியைப் பிரிக்க பஞ்சாப் அணி மேற்கொண்ட முயற்சிக்கு 8வது ஓவரில் பலன் கிடைத்தது. ஹர்பீத் சிங் வீசிய அந்த ஓவரின் 4வது பந்தை மேயர்ஸ் தூக்கியடிக்க ஹர்பீத் பிராட்டின் கைகளில் அது தஞ்சமடைந்தது.

23 பந்துகளில் 1 பவுண்டரி , 3 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் எடுத்து மேயர்ஸ் வெளியேறினார். சிக்கந்தர் ரஸா வீசிய அடுத்த ஓவரில் தீபக் ஹூடா 2 ரன்களில் வெளியேறியபோது, பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களை எடுத்திருந்தது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

கிறில் கெயிலின் சாதனையை முறியடித்த கே.எல். ராகுல்

இதையடுத்து, கே.எல்.ராகுலுடன் குருனால் பாண்டியா கூட்டணி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி வந்த கே.எல். ராகுல் 30 ரன்களை எட்டியபோது ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.

105 இன்னிங்ஸில் அவர் இந்த இலக்கை எட்டினார். இதற்கு முன்பு அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 112 இன்னிங்ஸில் 4000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

114 இன்னிங்ஸுடன் டேவிட் வார்னர், 128 இன்னிங்ஸுடன் விராட் கோலி, 131 இன்னிங்ஸுடன் டி வில்லியர்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும், சாஹர் வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தையும் கே.எல்.ராகுல் கடந்தார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஷாருக் கான் பிடித்த அற்புத கேட்ச்

சாம் கரண் வீசிய ஓவரில் 2 பவுண்டரி அடித்து அதிரடி காட்டிய குருனால், ரபாடா வீசிய 15வது ஓவரின் 3வது பந்தை சிக்ஸர் அடிப்பதற்காக தூக்கியடித்தார்.

இந்தப் பந்தை தாவி கேட்ச் பிடித்த ஷாருக் கான் தான் பவுண்டரி எல்லையைத் தாண்டி இருப்பதை உணர்ந்து பந்தை மேலே வீசி, மீண்டும் எல்லைக் கோட்டுக்குள் வந்து பிடித்தார்.

ஆர்சிபிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 19 பந்துகளில் 62 ரன்கள் அடித்து அதிரடி காட்டிய பூரண், இந்த முறையும் அதிரடியைக் காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ரபாடாவின் அதே ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

கடைசி 3 ஓவர்கள்: 1 பவுண்டரி, 4 விக்கெட்

பின்னர் கே.எல்.ராகுலுடன் இணைந்த ஸ்டாய்னிஸ், சாஹர் வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸர்களை அட்டகாசமாக அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

சிறப்பாக ஆடி வந்த கே.எல். ராகுல் அர்ஷ்தீப் சிங் வீசிய 18வது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். 57 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரி உட்பட 74 ரன்களை அவர் எடுத்திருந்தர்.

டெத் ஓவர்களில் பஞ்சாபின் பந்துவீச்சு பாராட்டத்தக்க வகையில் இருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே விட்டுக்கொடுத்த பஞ்சாப் அணி கே.எல்.ராகுல், ஸ்டாய்னிஸ், கிருஷ்ணப்ப கௌதம், யுத்வீர் சிங் ஆகிய 4 பேரின் விக்கெட்களை வீழ்த்தியிருந்தது. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாடு வீரர் ஷாருக்கான் கச்சிதமான ஃபினிஷிங்: பஞ்சாப் கிங்சுக்கு சாதகமாக ஆட்டத்தை திருப்பிய 'அந்த' ஒரு ஓவர்

சாம் கரண் - ஷாருக்கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 16 ஏப்ரல் 2023, 03:22 GMT
    புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. கேப்டன் ஷிகர் தவான் இல்லாமல் களமிறங்கிய அந்த அணியின் இளம் வீரர்கள் இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர். சிக்கந்தர் ரஸா அரைசதம் அடிக்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாரூக் கான் கச்சிதமாக பினிஷிங் செய்து அணியின் தேவையை பூர்த்தி செய்துள்ளார்.

முந்தைய இரு போட்டிகளில் வென்று தெம்பாக வந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நேற்றைய போட்டியில் வென்றால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறலாம் என்ற உத்வேகத்துடன் களமிறங்கியது. பஞ்சாப் கிங்ஸ் அணியோ உடல்தகுதி பிரச்னை காரணமாக கேப்டன் ஷிகர் தவான் இல்லாமல் இளம் வீரர் சாம் கரண் தலைமையில் களம் கண்டது.

கடந்த ஐ.பி.எல்.லில் அந்த அணிக்காக கலக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் வந்து சேர்ந்துவிட்ட போதிலும், நேற்றைய ஆட்டத்தில் களம் காணவில்லை.

லக்னோவில் போட்டி நடைபெற்ற அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலுமே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்று நம்பிக்கையுடன் இருந்தது. ஒப்பீட்டளவில் சற்று பலவீனமாக காணப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலிடத்திற்கு முன்னேறும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பொய்த்துப் போனது.

 

சிறப்பான தொடக்கத்தை சரிவர பயன்படுத்திக் கொள்ளாத லக்னோ

முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் - கைல் மேயர்ஸ் ஜோடி மீண்டும் ஒருமுறை சிறப்பான தொடக்கம் தந்தது. அந்த அணி பவர் பிளே முடிவில் ஆறே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை எடுத்தது. அதிரடியாக மட்டையை சுழற்றிய கைல் மேயர்ஸ் 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆட்டம் கண்டது.

லக்னோ அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல சரிந்தது. குருணால் பாண்டியா மட்டும் சற்று நேரம் தாக்குப் பிடித்து 17 பந்துகளில் 18 ரன்களை எடுத்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் 2 சிக்சர்களுடன் 15 ரன்களில் வெளியேறினார். கடந்த போட்டிகளில் நாயகனாக ஜொலித்த நிகோலஸ் பூரன் இம்முறை டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறினர்.

ஷாருக்கான் கச்சிதமான ஃபினிஷிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பார்ட்னர்ஷிப் அமையாமல் தன்னந்தனியாக தவித்த கேப்டன் லோகேஷ் ராகுல்

சர்வதேசப் போட்டிகளில் எப்படி இருந்தாலும், ஐ.பி.எல். என்றாலே ஃபார்முக்கு வந்துவிடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் லோகேஷ் ராகுலின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நடப்புத் தொடரில் முதல் அரைசதத்தை நேற்றைய ஆட்டத்தில் பதிவு செய்த அவர், 56 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளை அவர் விளாசினார்.

19-வது ஓவர் வரை களத்தில் இருந்த லோகேஷ் ராகுலுக்கு மறுமுனையில் சரியான பார்ட்னர்ஷிப் அமையவே இல்லை. பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். இதனால், ஒரு முனையில் விக்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால் லோகேஷ் ராகுலால் கியர் மாற்றி முழு வேகத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

ஷாருக்கான் கச்சிதமான ஃபினிஷிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி ஓவர்களில் ரன் குவிக்க தவறிய லக்னோ

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டெத் ஓவர்களில் ரன்களைக் குவிக்கத் தவறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. அந்த அணி 14 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 108 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுலுடன் குருணால் பாண்டியா களத்தில் இருந்தார்.

விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் கடைசிக்கட்டத்தில் அந்த அணி அதிரடியாக ரன்களை குவிக்கும் என்ற அதன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. 15-வது ஓவரை வீசிய காஜிசோ ரபாடா குருணால் பாண்டியா, நிகோலஸ் பூரன் ஆகிய இருவரையும் வெளியேற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தடம் புரண்டு போனது.

16-வது ஓவரில் ஸ்டோனிஸ் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினாலும் சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் கடைசி 6 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 51 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதுவும், கடைசி 3 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் சாம் கரண் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஷாருக்கான் கச்சிதமான ஃபினிஷிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எல்லைக்கோடு அருகே ஷாருக்கான் பிடித்த அற்புதமான கேட்ச்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஷாரூக் கான் நேற்றைய ஆட்டத்தில் 3 அற்புதமான கேட்ச்களை பிடித்து அசத்தினார். குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தடம்புரண்டதன் தொடக்கமாக அமைந்த, குருணால் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்த அவர் செய்த கேட்ச் பிரமிப்பாக இருந்தது.

அவுட்சைட் ஆப் ஸ்டம்பில் காஜிசோ ரபாடா வீசிய பந்தை குருணால் பாண்டியா புல்ஷாட் ஆட, பந்து டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சரை நோக்கி பறந்தது. ஆனால், ஷாரூக் கான் அபாரமாக செயல்பட்டு, துள்ளிக் குதித்து பந்தை கேட்ச் செய்தார். ஆனால், எல்லைக்கோட்டை நெருங்கிவிட்டதை உணர்ந்த அவர் துரிதமாக செயல்பட்டு பந்தை உள்ளே தூக்கி வீசிவிட்டு, ஓரடி மட்டும் எல்லைக்கோட்டை தாண்டிச் சென்று மீண்டும் உள்ளே வந்து பந்தை அபாரமாக கேட்ச் செய்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

பஞ்சாப் கிங்சை சரிவில் இருந்து தூக்கி நிறுத்திய சிக்கந்தர் ரசா

எளிய இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும் அடுத்து வந்த மேத்யூ ஷார்ட் சிறிது நேரம் அதிரடி காட்டி, பவர் பிளே ஓவர்களில் அந்த அணிக்கு கணிசமாக ரன் சேர்த்தார். 22 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்களை அவர் சேர்த்தார். பவர் பிளேவில் அவரும் ஆட்டமிழக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை மட்டுமே எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது.

அப்போது களத்திற்கு வந்த ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவரான சிக்கந்தர் ரஸா பொறுப்புடன் ஆடி அணியை கரை சேர்த்தார். களத்தில் தன்னை நன்றாக நிலைநிறுத்திக் கொண்டு விட்ட பிறகு அதிரடி காட்டிய அவர், அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டையும் பராமரிக்கத் தவறவில்லை. 41 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் சேர்த்த அவர் ரவி பிஷ்னோய் பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்டு எல்லைக்கோடு அருகே ஸ்டோனிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆட்டத்தை பஞ்சாப் கிங்ஸ் பக்கம் திருப்பிய 'அந்த' ஒரு ஓவர்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரன் ரேட் மிடில் ஓவர்களில் வெகுவாக குறைந்துவிட்டது. 12 ஓவர்களில் அந்த அணி 82 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டிருந்தது. இன்னும் 8 ஓவர்களில் அந்த அணி வெற்றி பெற 78 ரன்கள் தேவைப்பட்டன. முந்தைய ஓவரில்தான் ஹர்பிரீத் சிங் விக்கெட்டை அந்த அணி இழந்துவிட்டிருந்தது.

ஆனாலும், கொஞ்சமும் சலனப்படாமல் கியரை மாற்றிய சிக்கந்தர் ரசா குருணால் பாண்டியா வீசிய 13-வது ஓவரில் அதிரடி காட்டி அசத்தினார். அந்த ஓவரின் 2, 3 பந்துகளை டீப் மிட் விக்கெட் திசையில் அடுத்தடுத்து சிக்சருக்கு பறக்கவிட்ட சிக்கந்தர் ரஸா அடுத்த பந்தில் பவுண்டரியும் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தன.

ஷாருக்கான் கச்சிதமான ஃபினிஷிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிடில் ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரன் ரேட் மந்தமானதால், எங்கே ஆட்டம் படிப்படியாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பக்கம் திரும்புகிறதோ என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கிய நேரத்தில் சிக்கந்தர் ரஸாவிடம் இருந்து இந்த அதிரடி வெளிப்பட்டது.

தமிழ்நாடு வீரர் ஷாருக் கானின் கனகச்சிதமான ஃபினிஷிங்

ஷாருக்கான் கச்சிதமான ஃபினிஷிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிக்கந்தர் ரஸா அரை சதம் அடித்து அணியை தூக்கி நிறுத்தினாலும் சேஸிங்கை வெற்றிகரமாக நிறைவு செய்யாமல் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்து விட்டார். ஆனால், அவர் விட்டுச் சென்ற பணியை தமிழ்நாடு வீரர் ஷாரூக் கான் வெற்றிகரமான முடித்து வைத்தார். களமிறங்கியதும், தான் எதிர்கொண்ட முதல் பந்தையே லாங் ஆன் திசையில் பிரமாண்ட சிக்சரை விளாசி ஷாரூக் கான் அமர்க்களப்படுத்தினார். அதுவும், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மூன்றே போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, நீலத் தொப்பிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்டின் பந்தில் இந்த சிக்சர் வந்தது.

மார்க் வுட் வீசிய அடுத்த ஓவர், அதாவது ஆட்டத்தின் 19-வது ஓவரிலும் ஷாரூக் கான் சிக்சர் அடித்து அசத்தினார். ஷார்ட் பிட்ச் ஆகி பவுன்சான பந்தை ஷாரூக் கான் அடித்தாட முயல, பந்து அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பருக்கு நேரே பின்னால் பறந்து சென்று எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்தது.

கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 7 ரன்கள் தேவையாக இருந்தது. முதலிரு பந்துகளையும் லெக் சைடில் அடித்து தலா 2 ரன்களை சேகரித்த ஷாரூக் கான், மூன்றாவது பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்து பவுண்டரிக்கு விரட்டினார். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை தோற்கடித்து மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது.

ஷாருக்கான் கச்சிதமான ஃபினிஷிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இம்பாக்ட் பிளேயர் தேர்வில் லக்னோ அணி சொதப்பியதா?

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போதே, விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் முதலில் ஆட்டமிழந்த கைல் மேயர்சுக்குப் பதிலாக கிருஷ்ணப்பா கவுதமை இம்பாக்ட் பிளேயராக களமிறக்கியது. ஆல் ரவுண்டரான கிருஷ்ணப்பா கவுதம் பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கிலும் கைகொடுப்பார் என்று அந்த அணி நம்பியது.

ஆனால், கிருஷ்ணப்பா கவுதம் இம்பாக்ட் பிளேயராக உள்ளே செல்ல வசதியாக, அந்த அணி கைல் மேயர்சை வெளியேற்றியது சரியா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது. ஏனெனில், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கைல் மேயர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடிய கடந்த போட்டிகளில் தொடக்க ஓவரை வீசியுள்ளார். இந்தப் போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இக்கட்டான நேரத்தில் பந்துவீச்சில் அவர் பயன்பட்டிருக்கக் கூடும்.

ஷாருக்கான் கச்சிதமான ஃபினிஷிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டமிழந்து வெளியேறிவிட்ட விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரனுக்குப் பதிலாக கிருஷ்ணப்பா கவுதமை இம்பாக்ட் பிளையேராக களமிறக்கி இருக்கலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். பூரனுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பணியை கேப்டன் லோகேஷ் ராகுலே கவனித்திருக்கலாம். அது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகத் தான் ஐ.பி.எல்.லில் அவர் அடியெடுத்து வைத்தார். அவ்வாறு செய்திருந்தால், பந்துவீச்சில் பயன்படுத்த கைல் மேயர்ஸ் கூடுதலாக ஒரு ஆப்ஷனாக கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு இருந்திருப்பார்.

https://www.bbc.com/tamil/articles/c4nv1kzvwp2o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழக வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ்… ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுமா?

christopherApr 13, 2023 18:51PM
cdfH2qmc-image.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது சட்டமன்றம் வரை எதிரொலித்த நிலையில், மற்ற அணிகளில் எந்தளவுக்கு அதே மாநிலத்தைச் சேர்ந்த வீர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு

கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற 20 ஓவர் தொடர் முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்த தொடருக்கு பிசிசிஐ எனப்படும் இந்தியா கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் மற்றும் ஐசிசி ஆகியவை அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும் டி20 தொடரை நடத்த முற்பட்டது ஐசிஎல். அதில் பிசிசிஐ அனுமதி இல்லாமல் பல வீரர்களும் பங்கு பெற முனைப்பு காட்டினர்.

இதனை தடுக்கும் நோக்கில் அதே ஆண்டில் செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் என்ற டி20 தொடரை தொடங்குவதாக அறிவித்தது பி.சி.சி.ஐ. அதன் முதல் தொடர் 2008 ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்றும், இது உள்ளூர் இந்திய வீரர்கள் தங்களது திறமையை காட்ட சிறப்பான வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தது.

FJ8LfigE-image.jpg

சிஎஸ்கே அணியில் 10 தமிழக வீரர்கள்

அதன்படி 2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கு பெற்றன.

இதில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரிநாத், பழனி அமர்நாத், ரவிச்சந்திரன் அஸ்வின், லக்‌ஷ்மிபதி பாலாஜி, அபினவ் முகுந்த், பத்ரிநாத், அனிருத் ஸ்ரீகாந்த், அருண் கார்த்திக், நெப்போலியன் ஐன்ஸ்டீன், வித்யூத் சிவராமகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் குமார் என 10 தமிழக வீரர்கள் இடம்பெற்றனர்.

இது போலவே முதல் ஐபில் தொடரில் விளையாடிய எட்டு அணிகளிலும் பிசிசிஐ அறிவித்தது போலவே சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கே அந்தந்த அணிகளில் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது.

கிரிக்கெட் போட்டிகளால் மூச்சுவிடும் ரசிகர்களை கொண்ட இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் போட்டிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் உலகளவில் தற்போது பணம் கொழிக்கும் தொடராக ஐபிஎல் மாறி உள்ளது. அதனையடுத்து சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு அதிக முன்னுரிமை என்பது முற்றிலும் குறைந்து விட்டது.

QCGlMvJV-image.jpg

தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே

அதன் வெளிப்பாடாகவே நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முகமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோகித் சர்மாவும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் பாண்டியாவும் கேப்டன்களாக இருக்கும் ஐபிஎல் தொடரில், 15 ஆண்டுகள் ஆன பின்னரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இன்றி தொடரை சந்தித்துள்ளது.

இதற்கிடையே நடப்பு ஐபில் தொடருக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏலம் நடைபெற்றது. அதில் புதிதாக தமிழக வீரர்களை எடுக்க முயற்சிக்காத சிஎஸ்கே அணி, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் ஆகிய இருவரையும் கூட தக்கவைக்க தவறியது.

Opkshdhs-image.jpg

ஜெகதீசனை தவறவிட்ட சிஎஸ்கே

கோயம்புத்தூரைச் சேர்ந்த வீரரான ஜெகதீசனை மட்டும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது சென்னை அணி. கொல்கத்தா அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே ஜெகதீசன் நாராயணனை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவிய நிலையில், இறுதியில் கொல்கத்தா அணி ஜெகதீசனை 90 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. தனது கையிருப்பில் இன்னும் 1.5 கோடி ரூபாய் மீதம் வைத்திருந்த நிலையில், ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க 85 லட்சம் ரூபாய் வரை மட்டுமே கேட்டது சென்னை அணி.

இத்தனைக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் உட்பட மொத்தம் 6 சதங்கள் அடித்து கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஜெகதீசன் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மினி ஏலத்தின் போதே ’தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடும் முக்கிய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், நடராஜன், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் என யாரையுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுக்க ஏன் முயற்சிக்கவில்லை?’ என கேள்வி எழுப்பினர் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள்.

MoooZ9eX-image.jpg

ஐபில் அணிகளில் தமிழக வீரர்கள்

அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் மற்ற அணியில் இடம்பெற்று முக்கிய தூண்களாக பங்காற்றி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் விஜய் சங்கர், சாய் கிஷோர், சாய் சுதர்ஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஜெகதீசன் நாராயணன், வருண் சக்ரவர்த்தி மற்றும் தமிழ் பேசும் வெங்கடேஷ் அய்யரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முருகன் அஸ்வின், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தங்கராசு நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தரும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷாருக் கான், ஆர்சிபி அணியில் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் உள்ளனர்.

8BBAbBKs-image.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை

இந்நிலையில் கடந்த 11ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் விளையாட்டுத் துறைக்கான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், ”தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை. தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர்.

எனவே தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்.” என கோரிக்கை வைத்தார்.

பாமக எம்.எல்.ஏவின் கோரிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அதே நேரத்தில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சொந்த மாநில வீரர்களை கூட ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாத சிஎஸ்கே அணி மட்டுமின்றி ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ மீதும் எழுப்பப்பட்ட அதிரடியான தாக்குதல் கேள்வியாகவே தேசிய அளவில் இது பார்க்கப்பட்டது.

ivs5YCAf-image.jpg

வாய்ப்பு வழங்காத அணிகள்

மொத்தமுள்ள 10 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மட்டுமே சொந்த மாநில வீரர்களுக்கு முற்றிலுமாக வாய்ப்பை தர மறுத்துள்ளன.

அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த 5 வீரர்களுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணி 4 வீரர்களுக்கும், டெல்லி அணி 3 வீரர்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது. அதேபோல ஆர்.சி.பி மற்றும் எல்.எஸ்.ஜி அணிகள் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த தலா 2 வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரருக்கு வாய்ப்பளித்துள்ளன.

C0plwayZ-image.jpg

பெஞ்சில் அமரவைக்கப்படும் வீரர்கள்

அப்படியே வாய்ப்பளிக்கப்பட்டாலும் அவர்கள் ஆடும் லெவனில் களமிறக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த அணிகளில் இடம்பெற்றுள்ள 19 வீரர்களில் 8 வீரர்கள் இன்னும் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.

கடந்த 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட என்.ஜெகதீசனுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டு தான் சொந்த அணிக்காக தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. ஐந்து ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த அவர், விக்கெட் கீப்பராக தோனி ஏற்கெனவே அணியில் இருந்ததன் காரணமாக மொத்தம் 7 போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்டு, பெரும்பாலும் வாய்ப்பு வழங்காமல் பென்ச்சில் அமர வைக்கப்பட்டார்.

dlwHVTD8-image.jpg

சொந்த மாநில வீரர்களுக்காக புதிய விதி

இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று ஐபிஎல் தொடரின் 16வது சீசனுக்கிடையே, உள்ளூர் வீரர்களுக்கான வாய்ப்பு குறித்த கோரிக்கை சரியான நேரத்தில் எழுந்துள்ளது. அதுவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது பாராட்டத்தக்கது.

ஐபிஎல் விதிப்படி, சென்னைக்கு அணிக்கோ, வேறு எந்த அணிக்கோ அதே மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை தங்கள் அணிக்கு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அதேவேளையில் சென்னை போன்ற அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களை பெயரளவில் கூட எடுக்காமல் இருப்பது இளம் கிரிக்கெட் வீரர்களிடம் தவறான முன்னுதாரணத்தையும், அவர்களின் உத்வேகத்தையும் பின் வாங்க செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, ஐபிஎல் தொடர் தோற்றுவிக்கும்போது சொன்னது போன்று, உள்ளூர் கிரிக்கெட் வீர்ர்களுக்கு, அதுவும் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்க புதிய விதிகள் இயற்ற பிசிசிஐ முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 

கிறிஸ்டோபர் ஜெமா
https://minnambalam.com/sports/no-tamilnadu-players-in-csk-team-made-agony-in-ipl/

Posted

புதிய சாதனை படைத்த கே.எல் ராகுல்

புதிய சாதனை படைத்த கே.எல் ராகுல்

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தில் லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 56 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 74 ரன் எடுத்தார்.

30-வது ரன்னை எடுத்த போது அவர் ஐ.பி.எல்.லில் 4 ஆயிரம் ரன்னை தொட்டார். 30 வயதான ராகுல் ஐ.பி.எல். போட்டியில் 114 ஆட்டத்தில் 105 இன்னிங்சில் 4044 ரன் எடுத்துள்ளார். சராசரி 47.02 ஆகும். 4 சதமும், 32 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 132 ரன் எடுத்துள்ளார்.

ஐ.பி.எல்லில் 4 ஆயிரம் ரன்னை எடுத்த 11-வது இந்தியர் ராகுல் ஆவார். ஓட்டுமொத்தத்தில் 14-வது வீரர் ஆவார்.

விராட் கோலி (6838 ரன்), தவான் (6477), ரோகித் சர்மா (5966), ரெய்னா (5528), டோனி (5036), ராபன் உத்தப்பா (4952), தினேஷ் கார்த்திக் (4386), அம்பதி ராயுடு (4250), காம்பீர் (4217), ரகானே (4166) ஆகிய இந்திய வீரர்களோடு லோகேஷ் ராகுல் இணைந்தார்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

தமிழக வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ்… ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுமா?

christopherApr 13, 2023 18:51PM
cdfH2qmc-image.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது சட்டமன்றம் வரை எதிரொலித்த நிலையில், மற்ற அணிகளில் எந்தளவுக்கு அதே மாநிலத்தைச் சேர்ந்த வீர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு

கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற 20 ஓவர் தொடர் முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்த தொடருக்கு பிசிசிஐ எனப்படும் இந்தியா கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் மற்றும் ஐசிசி ஆகியவை அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும் டி20 தொடரை நடத்த முற்பட்டது ஐசிஎல். அதில் பிசிசிஐ அனுமதி இல்லாமல் பல வீரர்களும் பங்கு பெற முனைப்பு காட்டினர்.

இதனை தடுக்கும் நோக்கில் அதே ஆண்டில் செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் என்ற டி20 தொடரை தொடங்குவதாக அறிவித்தது பி.சி.சி.ஐ. அதன் முதல் தொடர் 2008 ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்றும், இது உள்ளூர் இந்திய வீரர்கள் தங்களது திறமையை காட்ட சிறப்பான வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தது.

FJ8LfigE-image.jpg

சிஎஸ்கே அணியில் 10 தமிழக வீரர்கள்

அதன்படி 2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கு பெற்றன.

இதில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரிநாத், பழனி அமர்நாத், ரவிச்சந்திரன் அஸ்வின், லக்‌ஷ்மிபதி பாலாஜி, அபினவ் முகுந்த், பத்ரிநாத், அனிருத் ஸ்ரீகாந்த், அருண் கார்த்திக், நெப்போலியன் ஐன்ஸ்டீன், வித்யூத் சிவராமகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் குமார் என 10 தமிழக வீரர்கள் இடம்பெற்றனர்.

இது போலவே முதல் ஐபில் தொடரில் விளையாடிய எட்டு அணிகளிலும் பிசிசிஐ அறிவித்தது போலவே சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கே அந்தந்த அணிகளில் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது.

கிரிக்கெட் போட்டிகளால் மூச்சுவிடும் ரசிகர்களை கொண்ட இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் போட்டிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் உலகளவில் தற்போது பணம் கொழிக்கும் தொடராக ஐபிஎல் மாறி உள்ளது. அதனையடுத்து சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு அதிக முன்னுரிமை என்பது முற்றிலும் குறைந்து விட்டது.

QCGlMvJV-image.jpg

தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே

அதன் வெளிப்பாடாகவே நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முகமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோகித் சர்மாவும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் பாண்டியாவும் கேப்டன்களாக இருக்கும் ஐபிஎல் தொடரில், 15 ஆண்டுகள் ஆன பின்னரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இன்றி தொடரை சந்தித்துள்ளது.

இதற்கிடையே நடப்பு ஐபில் தொடருக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏலம் நடைபெற்றது. அதில் புதிதாக தமிழக வீரர்களை எடுக்க முயற்சிக்காத சிஎஸ்கே அணி, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் ஆகிய இருவரையும் கூட தக்கவைக்க தவறியது.

Opkshdhs-image.jpg

ஜெகதீசனை தவறவிட்ட சிஎஸ்கே

கோயம்புத்தூரைச் சேர்ந்த வீரரான ஜெகதீசனை மட்டும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது சென்னை அணி. கொல்கத்தா அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே ஜெகதீசன் நாராயணனை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவிய நிலையில், இறுதியில் கொல்கத்தா அணி ஜெகதீசனை 90 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. தனது கையிருப்பில் இன்னும் 1.5 கோடி ரூபாய் மீதம் வைத்திருந்த நிலையில், ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க 85 லட்சம் ரூபாய் வரை மட்டுமே கேட்டது சென்னை அணி.

இத்தனைக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் உட்பட மொத்தம் 6 சதங்கள் அடித்து கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஜெகதீசன் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மினி ஏலத்தின் போதே ’தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடும் முக்கிய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், நடராஜன், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் என யாரையுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுக்க ஏன் முயற்சிக்கவில்லை?’ என கேள்வி எழுப்பினர் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள்.

MoooZ9eX-image.jpg

ஐபில் அணிகளில் தமிழக வீரர்கள்

அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் மற்ற அணியில் இடம்பெற்று முக்கிய தூண்களாக பங்காற்றி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் விஜய் சங்கர், சாய் கிஷோர், சாய் சுதர்ஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஜெகதீசன் நாராயணன், வருண் சக்ரவர்த்தி மற்றும் தமிழ் பேசும் வெங்கடேஷ் அய்யரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முருகன் அஸ்வின், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தங்கராசு நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தரும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷாருக் கான், ஆர்சிபி அணியில் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் உள்ளனர்.

8BBAbBKs-image.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை

இந்நிலையில் கடந்த 11ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் விளையாட்டுத் துறைக்கான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், ”தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை. தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர்.

எனவே தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்.” என கோரிக்கை வைத்தார்.

பாமக எம்.எல்.ஏவின் கோரிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அதே நேரத்தில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சொந்த மாநில வீரர்களை கூட ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாத சிஎஸ்கே அணி மட்டுமின்றி ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ மீதும் எழுப்பப்பட்ட அதிரடியான தாக்குதல் கேள்வியாகவே தேசிய அளவில் இது பார்க்கப்பட்டது.

ivs5YCAf-image.jpg

வாய்ப்பு வழங்காத அணிகள்

மொத்தமுள்ள 10 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மட்டுமே சொந்த மாநில வீரர்களுக்கு முற்றிலுமாக வாய்ப்பை தர மறுத்துள்ளன.

அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த 5 வீரர்களுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணி 4 வீரர்களுக்கும், டெல்லி அணி 3 வீரர்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது. அதேபோல ஆர்.சி.பி மற்றும் எல்.எஸ்.ஜி அணிகள் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த தலா 2 வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரருக்கு வாய்ப்பளித்துள்ளன.

C0plwayZ-image.jpg

பெஞ்சில் அமரவைக்கப்படும் வீரர்கள்

அப்படியே வாய்ப்பளிக்கப்பட்டாலும் அவர்கள் ஆடும் லெவனில் களமிறக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த அணிகளில் இடம்பெற்றுள்ள 19 வீரர்களில் 8 வீரர்கள் இன்னும் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.

கடந்த 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட என்.ஜெகதீசனுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டு தான் சொந்த அணிக்காக தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. ஐந்து ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த அவர், விக்கெட் கீப்பராக தோனி ஏற்கெனவே அணியில் இருந்ததன் காரணமாக மொத்தம் 7 போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்டு, பெரும்பாலும் வாய்ப்பு வழங்காமல் பென்ச்சில் அமர வைக்கப்பட்டார்.

dlwHVTD8-image.jpg

சொந்த மாநில வீரர்களுக்காக புதிய விதி

இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று ஐபிஎல் தொடரின் 16வது சீசனுக்கிடையே, உள்ளூர் வீரர்களுக்கான வாய்ப்பு குறித்த கோரிக்கை சரியான நேரத்தில் எழுந்துள்ளது. அதுவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது பாராட்டத்தக்கது.

ஐபிஎல் விதிப்படி, சென்னைக்கு அணிக்கோ, வேறு எந்த அணிக்கோ அதே மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை தங்கள் அணிக்கு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அதேவேளையில் சென்னை போன்ற அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களை பெயரளவில் கூட எடுக்காமல் இருப்பது இளம் கிரிக்கெட் வீரர்களிடம் தவறான முன்னுதாரணத்தையும், அவர்களின் உத்வேகத்தையும் பின் வாங்க செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, ஐபிஎல் தொடர் தோற்றுவிக்கும்போது சொன்னது போன்று, உள்ளூர் கிரிக்கெட் வீர்ர்களுக்கு, அதுவும் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்க புதிய விதிகள் இயற்ற பிசிசிஐ முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 

கிறிஸ்டோபர் ஜெமா
https://minnambalam.com/sports/no-tamilnadu-players-in-csk-team-made-agony-in-ipl/

தென்னாபிரிக்க தேசிய அணிக்கு மண்ணின் மைந்தர்களுக்கு கட்டாய வாய்ப்பு(கோட்டா) போல இங்கும் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15 ஆண்டுகள் கழித்து வந்த அபார சதம் - கொல்கத்தாவின் ஏக்கத்தை பூர்த்தி செய்த வெங்கடேஷ் ஐயர்

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

3 மணி நேரங்களுக்கு முன்னர்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தார். கேப்டன் சூர்ய குமார் யாதவ் 43 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 185 ரன்களை எடுத்திருந்தது, அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா அணிக்காக ஆடும் வீரர் ஒருவர் அடித்த சதமாக இது பதிவானது.

சதம் அடித்தது குறித்து பேசிய வெங்கடேஷ் ஐயர், `பெருமையாக உள்ளது. மும்பையில் இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதை சிறப்பாக உணர்கிறேன்` என்றார்.

தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ராணா பேசும்போது, `நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பியுஷ் சாவ்லா சிறப்பாக பந்துவீசினார். வெங்கடேஷ் ஐயருக்காக வருத்தப்படுகிறேன். அவர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தும் நாங்கள் தோற்றுவிட்டோம்` என்றார்.

 

ஐபிஎல் தொடரில் களமிறங்கிய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை இண்டியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

உடல்நல பாதிப்பு காரணமாக ரோகித் சர்மா டாஸ் போட வரவில்லை. அவருக்கு பதிலாக மும்பை அணியை சூர்ய குமார் யாதவ் வழிநடத்தினார். டாஸ் வென்ற அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தாவின் ரஹ்மானுல்லா குர்பாஸ், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் முதன்முதலில் களமிறங்கினார்.

ரோகித் சர்மா அவருக்கு மும்பை இந்தியன்ஸ் தொப்பியை வழங்கினார். ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள முதல் தந்தை-மகன் என்ற சாதனையை சச்சினும் அவரது மகன் அர்ஜுனும் படைத்துள்ளனர். முதல் ஓவரை சிறப்பாக வீசிய அர்ஜுன், ஐந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அடுத்த ஓவரை வீசிய கேமரூன் கிரீன் 4வது பந்தை வைடாக வீச அது பவுண்டரிக்கு சென்றது. கிரீன் வீசிய 5வது பந்தை ஜெகதீசன் அடிக்க முயன்றபோது, ரித்திக் சோகீன் அதை டைவ் அடித்து பிடித்தார். இதையடுத்து ரன் எதுவும் எடுக்காமலேயே ஜெகதீசன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சிக்ஸர்களை பறக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர்

அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயர், அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், கிரீன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து வெங்கடேஷ் ஐயர் அசத்தினார்.

டுவான் யான்சன் வீசிய 5வது ஓவரில் 6 சிக்ஸர்களை வெங்கடேஷ் ஐயர் அடிக்க அவரது அதிரடி காரணமாக 5 ஓவர்களில் கொல்கத்தா அணி 50 ரன்களை கடந்தது. ரித்திக் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை அவர் எட்டினார்.

மும்பை இண்டியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

நித்திஷ் ராணா- ரித்திக் வார்த்தை மோதல்

9வது ஓவரை வீசிய ரித்திக் ஷோகின் முதல் பந்திலேயே நித்திஷ் ராணாவை வெளியேற்றினார்.

அந்த பந்தை ராணா தூக்கியடிக்க ரமன்தீப் சிங் கையில் கேட்ச்சாக மாறியது. அப்போது, ரித்திக் ராணாவை நோக்கி ஏதோ கூற, ராணாவும் பதிலுக்கு சில வார்த்தைகளைக் கூறியுள்ளார்.

அப்போது, `போ` என்று ராணாவை நோக்கி ரித்திக் சமிக்ஞை செய்தார். இதனால் ராணா ஆவேசமடைந்தார். உடனடியாக, மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோர் இருவரையும் சமாதானம் செய்தனர். அப்போது கொல்கத்தா 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களை எடுத்திருந்தது.

மும்பை இண்டியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

சதம் அடித்து அசத்திய வெங்கடேஷ் ஐயர்

ஒரு பக்கம் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாட, மற்றொரு பக்கம் கொல்கத்தாவின் ஏனைய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிக்கொண்டிருந்தனர்.

ஜெகதீசன் (0), குர்பாஸ் (8), கேப்டன் ராணா(5) என ஒற்றை இலக்கில் வெளியேறிக்கொண்டிருந்தனர். அடுத்து வந்த ஷார்துல் தாகூரும் 13 ரன்களில் வெளியேறினார்.

விக்கெட்கள் வீழ்ந்தாலும் தனது அதிரடியை விடாத வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் சதம் அடித்தார். கடந்த 2007-2008 சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா வீரர் பிரண்டன் மெக்குலம் 158 ரன்களை அடித்திருந்தார்.

அதன் பின்னர் அந்த அணியின் சார்பாக யாரும் சதம் அடித்ததே இல்லை. 15 ஆண்டுகள் கழித்து தற்போது வெங்கடேஷ் ஐயர் அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி

அவர் சதம் அடிக்கும்போது கொல்கத்தாவின் ஸ்கோர் 151 ஆக இருந்தது. அதாவது அணியின் ஸ்கோரில் மூன்றில் 2 பங்கு அவர் பங்களிப்பாக இருந்தது. மெரிடித் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த வெங்கடேஷ் ஐயர் அடுத்த பந்தில் கேட்ச்சாக வெளியேறினார். அவர் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 104 ரன்களை எடுத்திருந்தார். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் சிறிது அதிரடி காட்ட கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 185 ரன்களை சேர்த்தது. ரஸ்ஸல் 11 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிஸ்டர் உட்பட 21 ரன்களை எடுத்திருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

அதிரடியான தொடக்கம் கொடுத்த இஷான் கிஷன் - ரோகித் ஷர்மா

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. உடல்நல பாதிப்பு காரணமாக பந்துவீச்சின்போது அணியில் இடம்பெறாத கேப்டன் ரோகித் ஷர்மா, இம்பேக்ட் பிளேயராக ஓபனிங்கில் களமிறங்கினார். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே மும்பை அணி எடுத்தது. தாக்கூர் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து இஷான் கிஷன் அதிரடி காட்ட, அந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. உமேஷ் யாதவ் வீசிய 3வது ஓவரில் ரோகித் ஷர்மா சிக்ஸர் அடிக்க அடுத்தடுத்த பந்துகளில் இஷான் பவுண்டரி, சிக்ஸர் அடித்தார்.

மூன்று ஓவர் முடிவில் மும்பை அணி 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4வது ஓவரை வீச சுனில் நரைனுக்கு வாய்ப்பு கொடுத்தார் கொல்கத்தா கேப்டன் ராணா. ஆனால், சுனில் நரைனாலும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ரோகித் ஷர்மா பவுண்டரியுடன் அந்த ஓவரை தொடங்கி வைக்க, பதிலுக்கு இஷான் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார். அவர்களின் அதிரடி பேட்டிங்கால், 3.5 ஓவர்களில் மும்பை அணி 50 ரன்களை கடந்தது.

இம்பேக்ட் பிளேயரை வெளியேற்றிய இம்பேக்ட் பிளேயர்

இருவரின் பேட்டிங்கை பார்க்குபோது மும்பை அணி விரைவில் இலக்கை எட்டிவிடும் என்ற எண்ணம் வான்கடே மைதானத்தில் கூடியிருந்த மும்பை ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், 5வது ஓவரை வீசிய கொல்கத்தாவின் இம்பேக்ட் பிளேயர் சுயாஷ், மும்பையின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார்.

அவர் வீசிய 5வது பந்தை ரோகித் ஷர்மா தூக்கியடிக்க உமேஷ் யாதவ் டைவ் அடித்து அதனை கேட்ச் பிடித்தார். 13 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 20 ரன்களில் ரோகித் வெளியேற, சூர்யகுமார் யாதவ் உள்ளே வந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிகொண்டிருந்த இஷான் கிஷன் சுயாஷ் வீசிய 7வது ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை எட்டினார். வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்த இஷான் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 58 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

ஃபார்முக்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ்

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் ஃபார்ம் இழந்து தவித்த சூர்ய குமார் யாதவ், ஹோம் கிரவுண்டில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடினார். லோக்கி ஃபெர்குசன் வீசிய 11வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்திய சூர்ய குமார் யாதவ், ரஸ்ஸல் வீசிய 13வது ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர் , ஒரு பவுண்டரி அடித்தார். 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மும்பை எடுத்திருந்தது. வெற்றிக்கு 42 ரன்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. தனது கடைசி ஓவரை வீசிய சுயாஷ், 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மாவை போல்ட் ஆக்கி வெளியேற்றினார். வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் டிம் டேவிட் 6 சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் கிடைத்தது.

சூர்ய குமார் யாதவ் அரை சதம் அடிப்பார் என்று மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்த வேளையில், தாக்கூர் வீசிய 17வது ஓவரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். 25 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 43 ரன்களை அவர் எடுத்திருந்தார். 17.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை 2 அணிகளுக்கும் 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் மும்பை அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cy9jx11lvkvo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

7.2 ஓவரில் 113 ரன்: சாம்சன், ஹெட்மேயரின் பிரமிக்கத்தக்க ஆட்டம் வெற்றியைச் சாத்தியமாக்கியது எப்படி?

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் ஒரு நம்ப முடியாத ஆட்டத்தால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ரிங்கு சிங் என்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சாம்சன், ஹெட்மேயர் ஆகியோர் அந்த அணிக்கு வில்லனாக உருவெடுத்தனர். அவர்கள் இருவரும் தங்களது அதிரடி வாண வேடிக்கைகளால், இனி அவ்வளவுதான் என்றிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து வைத்தனர்.

நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்ற முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. ஆட்டத்தின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் இறுதிக்கட்டத்தில் சாம்சன், ஹெட்மேயரை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அந்த அணி கோட்டைவிட்டது.

நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி எங்கே கோட்டைவிட்டது? அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கணக்குகள் தப்பாகிப் போனது எப்படி? தோல்வி நிச்சயம் என்ற நிலையில் இருந்த ராஜஸ்தான் ராயல்சை கேப்டன் சாம்சனும், வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த அதிரடி வீரர் ஹெட்மேயரும் சேர்ந்து தூக்கி நிறுத்தியது எப்படி?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் மந்தமான தொடக்கம்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில்தான் பவர் பிளேவில் மிகக் குறைந்த அளவாக 42 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த நேரத்தில், விருத்திமான் சாஹா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஆகியோரின் விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்துவிட்டிருந்தது.

 

டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே விருத்திமான் சாஹா தூக்கி அடிக்க, பந்து எட்ஜாகி பிட்ச்சுக்கு நேரே மேலே பறந்தது. அந்த பந்தைப் பிடிக்க விக்கெட் கீப்பர் சாம்சன், ஸ்கொயர் லெக்கில் இருந்த ஹெட்மேயர், பாயிண்ட் திசையில் நின்றிருந்த துருவ் ஜூரெல் ஆகியோர் ஒரே நேரத்தில் விரைய, அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் பந்து சாம்சனின் கையில் விழுந்து மிஸ்சானது. ஆனால், அருகே நின்றிருந்த டிரெண்ட் போல்ட் சுதாரித்துக் கொண்டு துரிதமாக செயல்பட்டு பந்தை கேட்ச் செய்து சாஹாவை வெளியேற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

ஹர்திக் அவுட்டானதும் கில் - மில்லர் ஜோடி காட்டிய அசாத்திய நிதானம்

பவர் பிளே ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் ரேட் டல்லடிக்க, சாய் சுதர்சன் ஆட்டமிழந்ததும் உள்ளே வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா வேகமாக ரன்களை குவிக்க எத்தனித்தார். ஆடம் ஜம்பா வீசிய ஏழாவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை அவர் பறக்க விட்டார். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சரும், 2 பவுண்டரிகளும் வந்தன. மூன்றே ஓவர்களில் 40 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணி குவித்தது.

ஹர்திக் களத்தில் நின்றிருந்த வரையிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி 200 ரன்களை எட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 11-வது ஓவரில் அவர் ஆட்டமிழந்த பிறகு சுப்மன் கில் - டேவிட் மில்லர் ஜோடி அசாத்திய பொறுமை காத்தது. மில்லர் களத்தில் செட்டிலாக சற்று நேரம் எடுத்துக் கொண்டார் என்றால், மறுமுனையில் நல்ல பார்மில் இருப்பதுடுன் தொடக்க வீரராக களமிறங்கி நன்றாக செட்டிலாகியும் விட்ட சுப்மன் கில்லும் பொறுமை காத்தது அந்த அணியின் ரன்ரேட்டை கடுமையாக பாதித்தது.

12 முதல் 16 வரையிலான 5 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி 31 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், அந்த அணியால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்க முடியாமல் போய்விட்டது. தமிழ்நாடு வீரர் விஜய் சங்கருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அபினவ் மனோகரும், டேவிட் மில்லரும் சேர்ந்து இறுதிக்கட்டத்தில் சற்று அதிரடி காட்டியதால்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

ஷமி - ஹர்திக் அனல் பறக்கும் பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் திணறல்

சவாலான இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கம் மிக மோசமாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர், தனது ஐ.பி.எல். வரலாற்றில் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக நேற்றைய ஆட்டத்தில் டக்அவுட் ஆனார். முகமது ஷமி பந்தை விக்கெட் கீப்பருக்குப் பின்னே அவர் ஸ்கூப் ஷாட் ஆட முயல, பந்து ஆப் ஸ்டம்பை பெயர்த்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்க ஓவர்களை வீசிய முகமது ஷமி, கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. தொடர்ந்து அந்த அணி சிறப்பாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன்களை வேகமாக ரன்களை சேகரிக்க முடியாமல் திணறியது. 12 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

ரஷித் கான் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் - ஆட்டத்தின் போக்கையே மாற்றிய சாம்சன்

12 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்திருந்த ரன்களைப் பார்க்கும் போது, "இனி அவ்வளவுதான், அந்த அணிக்கு தோல்வி நிச்சயம்" என்றே ரசிகர்கள் கருதினர். ஏனெனில் அந்த அணி வெற்றி பெற 8 ஓவர்களில் 112 ரன்கள் தேவைப்பட்டன. ஏற்கனவே 4 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.

ஆனால், முன்னணி சுழற்பந்துவீச்சாளரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தியவருமான ரஷித் கான் வீசிய அடுத்த ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் விஸ்வரூபம் எடுத்தார். அந்த ஓவரில் சாம்சன் ஹாட்ரிக் சிக்சர்களை விளாச, 20 ரன்கள் கிடைத்தன.

எட்ட வேண்டிய இலக்கு மிகப்பெரிதாக இருந்ததால் சஞ்சு சாம்சன் அதன் பிறகு நிதானம் காட்டவே இல்லை. கிடைத்த பந்துகளை எல்லாம் எல்லைக்கோட்டிற்கு விரட்டியபடி இருந்தார். சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு தலைமை தாங்கும் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களை அவர் எடுத்தார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் நூர் அஹமத் வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய சஞ்சு சாம்சன் கடைசிப் பந்தை தூக்கி அடிக்க, அது லாங் ஆஃப் திசையில் நின்றிருந்த டேவிட் மில்லரிடம் கேட்சாகிப் போனது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இக்கட்டான நேரத்தில் கைகொடுத்து தூக்கி நிறுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 60 ரன்களை விளாசினார். இமாலய இலக்காக தெரிந்த வெற்றி இலக்கை எட்டக் கூடிய இலக்காக அவர் மாற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

வெற்றிகரமான ஃபினிஷர் என்று மீண்டும் நிரூபித்த ஹெட்மேயர்

சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற அடுத்த 5 ஓவர்களில் 64 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த ஷிம்ரோன் ஹெட்மேயர் விஸ்வரூபம் எடுத்தார். சஞ்சு சாம்சன் விட்டுச் சென்ற பணியை தானே ஏற்றுக் கொண்ட அவர், பவுண்டரி, சிக்சர்fளாக விளாசி வாண வேடிக்கையைத் தொடங்கினார்.

25 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஹெட்மேயர் மொத்தம் 26 பந்துகளில் 5 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 56 ரன்களைக் குவித்து கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். முக்கியமான இறுதிக் கட்டத்தில் துருவ் ஜூரெல் 10 பந்துகளில் எடுத்த 18 ரன்னும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றே பந்துகளில் எடுத்த 10 ரன்னும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு உதவின.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

தவறாகி போன ஹர்திக் பாண்டியாவின் கணக்குகள்

நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 12 முதல் 16 ஓவர் வரை காட்டிய அசாத்திய நிதானம் அந்த அணியை வெகுவாகப் பாதித்து விட்டது. அந்த அணியின் ரன் ரேட்டை வெகுவாக கட்டுப்படுத்தியதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுக்கு முக்கிய பங்கு உண்டு. அஸ்வின், சாஹல், ஆடம் ஜம்பா என்று 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த திட்டம் நல்ல பலனைத் தந்தது.

ஆனால், மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணியோ சுழற்பந்துவீச்சில் ரஷித் கானை மட்டுமே நம்பியிருந்தது. 13-வது ஓவரில் ரஷித் கான் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி, அவரது நம்பிக்கையை சஞ்சு சாம்சன் சீர்குலைத்தார். பிரதான சுழற்பந்துவீச்சாளரின் ஓவர் அடி வாங்கியதால், வேறு வழியின்றி ஹர்திக் பாண்டியா, இம்பாக்ட் பிளேயராக 18 வயதே நிரம்பிய சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவை உள்ளே கொண்டு வந்தார். சாம்சன் விக்கெட்டை அவர் எடுத்துக் கொடுத்தாலும், போதிய அனுபவம் இல்லாத அவரால் இக்கட்டான நேரத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை சரிவர கையாள முடியவில்லை.

முதல் 8 ஓவருக்குள்ளாகவே தனது 4 ஓவர் கோட்டாவை கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசி முடித்து விட்டார். பிரதான வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கும் ஒரு ஓவர் மட்டுமே எஞ்சியிருந்தது. இதனால், 12 ஓவர்களுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சாம்சனும், ஹெட்மேயரும் விஸ்வரூபம் எடுத்த போது அதனை சமாளிக்க குஜராத் டைட்டன்ஸ் வசம் போதிய அஸ்திரங்கள் இல்லாமல் போய்விட்டது. ரஷித் கானை மலை போல் நம்பியிருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, அவரது ஓவரை சாம்சன் அடித்து நொறுக்கிய பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்ததை காண முடிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 19-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை அவர் சாய்த்தாலும் ரன்களை அதிக அளவில் விட்டுக் கொடுத்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. வேறுவழியின்றி கடைசி ஓவரை அனுபவமே இல்லாத நூர் முகமதுவிடம் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒப்படைக்க, அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே சிக்சர் அடித்து ஹெட்மேயர் ஆட்டத்தை முடித்து வைத்துவிட்டார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி, அதன் சொந்த மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மீண்டும் ஒரு முறை வெற்றிபெறும் நிலையில் இருந்து தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c3grglywlvpo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல். அறிமுக ஆட்டத்தில் மகன் பந்துவீசும் போது சச்சினை நேரலையில் பார்த்தீர்களா? அவர் எங்கே இருந்தார் தெரியுமா?

ஐ.பி.எல்.லில் சச்சின் மகன் அறிமுகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய கிரிக்கெட் அரங்கில் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒரு விஷயம் நேற்று நடந்தேறியுள்ளது. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் கண்டுள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் முதன் முறையாக ஐ.பி.எல்.லில் கால் பதித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களாக பெரும் ஆரவாரத்துடன் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு ஆட்டங்கள் நடந்தன. ரசிகர்களுக்கு சிறந்த ஞாயிறு விருந்தாக அமைந்த இரு ஆட்டங்களிலும் பல சாதனைகள் படைக்கப்பட்டன.

முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்காக 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கடேஷ் சதம் அடித்து சாதித்தார். இரண்டாவது போட்டியில், சஞ்சு சாம்சனும், ஹெட்மேயரும் தங்களது அசாத்தியமான பேட்டிங்கால் குஜராத் டைட்டன்சுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இந்த போட்டியில் 18 வயதேயான ஆப்கனைச் சேர்ந்த நூர் அகமது அறிமுக வீரராக களமிறங்கி, சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தி கவனம் பெற்றார்.

ஆனால், இவர்கள் அத்தனை பேரையும் தாண்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது அர்ஜூன் டெண்டுல்கர்தான்.

 

அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகம்

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அவர் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நேற்றைய ஆட்டத்தில் அறிமுகமானார். அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் தொப்பியை கேப்டன் ரோகித் சர்மா அணிவித்ததுடன், கட்டியணைத்தும் வாழ்த்து கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா களம் காணாததால், கேப்டன் பொறுப்பை சூர்யகுமார் யாதவ் கவனித்துக் கொண்டார். டாஸ் வென்று பீல்டிங் செய்ய தீர்மானித்த அவர், முதல் ஓவரை வீசும் வாய்ப்பை அர்ஜூன் டெண்டுல்கருக்கு வழஙகினார்.

அர்ஜூன் டெண்டுல்கரின் பந்துவீச்சு எப்படி?

இடதுகை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய முதல் பந்தை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தொடக்க வீரர் ரமானுல்லா குர்பாஸ் எதிர்கொண்டார். அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது பந்தில் 2 ரன்னும், மூன்றாவது பந்தில் ஒரு ரன்னும் எடுக்கப்பட்டன.

அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய நான்காவது பந்தை எதிர்கொண்ட கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு விளையாடும் தமிழ்நாடு வீரர் ஜெகதீசன், பந்தை மிஸ் செய்யவே அது அவரது கால் காப்பில் பட்டது. உடனே மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்க, மைதானத்தில் திரண்டிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஆனால், நடுவர் அதனை நிராகரித்துவிட்டார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்வது குறித்த விவாதித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், அது வேண்டாம் என்று தீர்மானித்தனர். ரீப்ளேவில் பந்து ஸ்டம்பை விட்டு சற்று உயரமாக சென்றது தெரிந்தது.

ஐ.பி.எல்.லில் சச்சின் மகன் அறிமுகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஐந்தாவது பந்தில் ரன் கொடுக்காத அர்ஜூன் டெண்டுல்கர் கடைசிப் பந்தில் ஒரு ரன் விட்டுக் கொடுத்தார். ஐ.பி.எல். அறிமுக போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கரின் முதல் ஓவர் சிறப்பானதாகவே அமைந்திருந்தது. அந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால், அவர் வீசிய இரண்டாவது ஓவர் அப்படி அமையவில்லை.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆட்டத்தில் சதம் அடித்த சாதித்த வெங்கடேஷ், இந்த ஓவரில்தான் அதிரடி அவதாரம் எடுத்தார். மூன்றாவது பந்தில் 2 ரன்கள் எடுத்த அவர், கடைசி இரு பந்துகளில் பவுண்டரியும், சிக்சரும் விளாசினார். அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு வைடும் போட, இந்த ஓவரில் மொத்தம் 13 ரன்களை அவர் விட்டுக் கொடுத்திருந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் அதன் பிறகு அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் மொத்தம் 2 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. வெங்கடேஷ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, 2 ஓவர்களில் 6 பந்துகளை டாட் பாலாக வீசியிருந்தார் அர்ஜூன் டெண்டுல்கர்.

ஐ.பி.எல்.லில் சச்சின் மகன் அறிமுகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

அறிமுக போட்டியில் ஒப்பீட்டளவில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த அர்ஜூன் டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பை அணி எந்த சிக்கலும் இன்றி 14 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டிவிட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் டிரெண்டான அர்ஜூன் டெண்டுல்கர்

ஐ.பி.எல். அறிமுக போட்டியில் முதல் ஓவரை வீச பந்துடன் அர்ஜூன் டெண்டுல்கர் ஓடி வரும் போதே ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வலம் வரத் தொடங்கிவிட்டார். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அர்ஜூன் டெண்டுல்கரை வாழ்த்தி பதிவிட்ட வண்ணம் இருந்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

அர்ஜூன் டெண்டுல்கருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தாலும் கூட, அவரது பந்துவீச்சு குறித்த சில விமர்சனங்களும் வரவே செய்தன.

அவர் இன்னும் வேகமாக பந்துவீச முயற்சிக்க வேண்டும் என்று சிலரும், இளம் வீரரான அர்ஜூன் டெண்டுர்கர் தனது திறமையை நிரூபிக்க போதுமான கால அவகாசம் தர வேண்டும் என்று சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

மகனுக்கு தந்தை அளித்த செய்தி என்ன?

ஐ.பி.எல். அறிமுகப் போட்டியில் விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கருக்கு ட்விட்டர் மூலமாக தந்தையும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்தார்.

ட்வீட்டின் முதல் பகுதியில், கிரிக்கெட் தொடர்பாக மகனுக்கு சில அறிவுரைகளை அவர் வழங்கியிருந்தார். "கிரிக்கெட் வீரராக மேலும் ஒரு அடியை நீ எடுத்து வைத்துள்ளாய். உன் தந்தையாக, நான் உன்னை நேசிக்கிறேன். உன்னுடைய விளையாட்டில் நானும் ஆர்வமாக இருக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டுக்கு உரிய மரியாதையை நீ வழங்குவாய் என்று தெரியும். அதனை விளையாட்டு உனக்கு திருப்பித் தரும்" என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

ட்வீட்டின் இரண்டாவது பகுதியில், "அர்ஜூன், நீ இதனை அடைய கடுமையாக உழைத்துள்ளாய். அதனை தொடர்வாய் என்று எனக்குத் தெரியும். இது உன்னுடைய அழகான பயணத்தின் தொடக்கம்தான். வாழ்த்துகள்" என்று மகனை அவர் வாழ்த்தியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 6

மகனுக்கு வாழ்த்து தெரிவித்து சச்சின் பதிவிட்ட ட்வீட்கள், அடுத்த சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகத் தொடங்கிவிட்டன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது சச்சினின் ட்வீட்டை 38 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டிருந்தனர். சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதனை விரும்பியிருந்தனர். 9 ஆயிரத்து 300 பேர் அதனை ரீ ட்வீட் செய்திருந்தனர்.

அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசுகையில் சச்சின் எங்கே இருந்தார்?

அர்ஜூன் டெண்டுல்கரின் ஐ.பி.எல். பிரவேசம் சச்சின் குடும்பத்திற்கு சிறப்பான தருணமாக அமைந்திருந்தது. சச்சினின் ஒட்டுமொத்த குடும்பமும் மைதானத்திற்கு வருகை தந்திருந்தது. அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசும் போது, அவரது சகோதரி சாரா டெண்டுல்கர் அவரை உற்சாகப்படுத்திய காட்சியை தொலைக்காட்சி நேரலையில் ரசிகர்களால் பார்க்க முடிந்தது.

ஆனால், சச்சின் டெண்டுல்கரை மட்டும் மைதானத்தில் எங்கும் காண முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் என்ற முறையில் அந்த அணி விளையாடும் அனைத்து ஆட்டங்களையும் டக்-அவுட்டில் அமர்ந்து பார்ப்பது அவரது வழக்கம். நேற்றும் கூட மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்த போது அவரை டக் அவுட்டில் பார்க்க முடிந்தது.

ஐ.பி.எல்.லில் சச்சின் மகன் அறிமுகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஆகாஷ் அம்பானியுடன் சச்சின்

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கின் போது அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசுகையில் சச்சின் டெண்டுல்கரை மைதானத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. இதுகுறித்து, போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த, சச்சினுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து களம் கண்ட இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில விவரங்களை அளித்தார்.

அர்ஜூன் டெண்டுல்கரின் ஐ.பி.எல். அறிமுகம் குறித்து இடைவேளையின் போது சச்சின் டெண்டுல்கரிடம் பேசியதாகவும், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டார். அதேநேரத்தில், மைதானத்தில் எல்லைக்கோட்டிற்கு வெகு அருகில் வீரர்கள், உதவியாளர்கள் அமரக் கூடிய டக் அவுட் பகுதியில் சச்சின் அமர்ந்திருக்கவில்லை.

டக் அவுட்டில் தாம் அமர்ந்திருப்பதை பெரிய திரையில் நேரலை செய்தால் அர்ஜூன் டெண்டுல்கருக்கு பெரும் அழுத்தம் தருவதாக அமைந்துவிடும என்பதாலேயே டக்அவுட்டில் அமரவில்லை என்று சச்சின் கூறியதாக ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

ஆகவே, வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசியதை தொலைக்காட்சி வழியே நேரலையில் சச்சின் டெண்டுல்கர் கண்டு ரசித்ததாகவும், தன்னுடன் பேசிய பிறகு சச்சின் மீண்டும் அங்கே திரும்பிப் சென்றுவிட்டதாகவும் ஹர்பஜன் சிங் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cg3132q989jo

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கான்வே, துபேயின் சிக்சர்களால் 226 ரன்களை குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் - கோலி, டு பிளெசியை கட்டுப்படுத்த இது போதுமா?

கெய்க்வாட், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம்,BCCI/ IPL

20 நிமிடங்களுக்கு முன்னர்

3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த துபேவும், கான்வேயும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 80 ரன்களை குவித்தனர். மிட் ஓவர்களில் சென்னை அணியின் ரன் குறையாமல் இருக்க உதவிய இந்த ஜோடியால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 226 ரன்களை குவித்தது.

ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெசி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஏமாற்றிய கெய்க்வாட்

கெய்க்வாட், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம்,BCCI/ IPL

சென்னை அணிக்காக ரித்துராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை பெங்களூரு அணியின் சிராஜ் வீசினார். இதில் நான்கு டாட்பால் உட்பட 3 ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்தார் சிராஜ்.

 

சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் சென்னை அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. லெக்சைடில் கெய்க்வாட் தூக்கி அடித்த பந்தை பவுண்டரி லைனுக்கு அருகே கேட்ச் பிடித்தார் பர்னெல். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்த சென்னை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 5வது ஓவரில் பந்து வீச வைஷாக் வந்த போது அடித்து ஆட தொடங்கியது சென்னை. அந்த ஓவரில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் என மொத்தம் 15 ரன்களை குவித்தது ரஹானே, கான்வே ஜோடி.

கான்வே - ரஹானே ஜோடி

தொடர்ந்து அடித்து ஆடிய இந்த இணை பவர்பிளே ஓவரின் முடிவில் சென்னை அணியில் ஸ்கோரை 53ஆக உயர்த்தியது.

அதிரடியாக ஆடிய ரஹானே தொடர்ந்து பவுண்டரிகளை விளாசினார். சென்னை அணியின் ரன்களை உயர்த்தி வந்த இந்த ஜோடியை பிரிக்க பெங்களூரு அணி மேக்ஸ்வெல், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் என பல பந்துவீச்சாளர்களை களமிறக்கியது.

9வது ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி. டைம் அவுட்க்கு பின்னர் 10வது ஓவரை வீச வந்த ஹசரங்கா, பெங்களூரு அணியை எதிர்பார்த்த திருப்புமுனையை அளித்தார்.

ஹசரங்காவின் கூக்ளி சுழலில் க்ளின் போல்டானார் ரஹானே. 20 பந்துகளில் 3 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து 37 ரன்கள் குவித்து வெளியேறினார் ரஹானே.

ஆனால் தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிய கான்வே, அரை சதத்தை கடந்தார். அதைத் தொடர்ந்து பத்து ஓவர் முடிவில் சென்னை அணி 97 ரன்கள் குவித்தது.

பட்டாசாக வெடித்த கான்வே

கெய்க்வாட், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம்,BCCI/ IPL

அரை சதம் அடித்த பிறகு கான்வே மட்டை வேகமாக சுழன்றது. அதிரடியாகவும், அதே நேரத்தில் நிதானத்தையும் வெளிப்படுத்திய கான்வே ரன் ரேட்டை உயர்த்தி வந்தார்.

வைஷாக் வீசிய 12வது ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரியாக மாற்றினார் கான்வே. அதே ஓவரின் கடைசிப் பந்தை லெக்சைடில் பவுண்டரி லைனுக்கு மேலே தூக்கி அடித்து சிக்ஸாக்கினார் கான்வே. அந்த ஓவரில் சென்னை அணி, 16 ரன்களை குவித்தது.

சென்னை அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்த கான்வேயின் விக்கெட்டை குறிவைத்து பந்து வீசியது பெங்களூரு அணி. ஹர்ஷல் படெல், சிராஜ் என வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கினார் அந்த அணியின் கேப்டன் டு பிளெசி.

பெங்களூருவை சிதறடித்த துபே - கான்வே

கெய்க்வாட், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம்,BCCI/ IPL

ரஹானேவுக்கு பிறகு களமிறங்கிய துபே ஆரம்பம் முதலே அதிரடியாக அடித்து ஆடினார். ஒருமுனையில் கான்வே பவுண்டரிகளை அடிக்க, மறுமுனையில் துபே சிக்சர்களாக பறக்கவிட்டார்.

கான்வேயின் அதிரடியை கட்டுப்படுத்த முயற்சி செய்த பெங்களூரு பந்துவீச்சாளர்களுக்கு புதிய தலைவலியாக ஷிவம் துபே உருவெடுத்தார். சிராஜ் வீசிய 14 ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து 14 ரன்களை குவித்தார் துபே. அடுத்த ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்து அதிரடியை தொடர்ந்தார் துபே.

நீயா நானா என போட்டி போட்டு விளையாடிய கான்வேயும் அதே ஓவரில் தன்பங்குக்கு ஒரு சிக்ஸரும், ஒரு ஃபோரும் அடித்தார். 15 ஓவர் முடிவில் இந்த ஜோடி சென்னை அணியின் ரன்னை 165 ஆக உயர்த்தியது.

ஆனால் அடுத்த ஓவரிலேயே கான்வேயை வெளியேற்றியது பெங்களூரு. ஹர்ஷல் படேல் வீசிய யார்கர், கான்வேயை ஏமாற்றி ஸ்டம்பை பதம் பார்த்தது.

45 பந்துகளில் 83 ரன்களை குவித்திருந்த கான்வே அத்துடன் வெளியேறினார். அவரின் இன்னிங்சில் 6 சிக்ஸ், 6 ஃபோர்களை அடித்திருந்தார்.

கான்வே வெளியான அடுத்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே சிக்ஸாக்கி அரைசதமடித்தார் துபே.

25 பந்துகளில் 52 ரன்களை குவித்த துபே, அதே ஓவரில் அவுட்டானர். பர்னெல் வீசிய பந்தை டீப் மிட் விக்கெட்டில் துபே தூக்கி அடிக்க அதை சிராஜ் எல்லைக்கோட்டுக்கு அருகே நிதானமாக பிடித்தார்.

கடைசி ஓவர்களில் விக்கெடுகளை இழந்த சென்னை

கெய்க்வாட், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம்,BCCI/ IPL

கான்வே, துபேவின் விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு களமிறங்கிய அம்பதி ராயுடுவும், மொயின் அலியும் சென்னை அணிக்காக ரன் சேர்க்கத் தொடங்கினர். வந்தவுடனே அலியும், ராயுடும் தங்கள் பங்கிற்கு ஆளுக்கு ஒரு சிக்ஸ் அடித்தனர்.

ஆனால் இந்த பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முந்தைய ஓவர்களில் தொடர்ந்து அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வைஷாக் தனது கடைசி ஓவரில் ராயுடுவை அவுட்டாக்கினார். ராயுடு அடித்த ஷாட், டாப் எட்ஜாகி மேலே செல்ல அதை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.

18வது ஓவர் முடிவில் சென்னை அணி 200 ரன்களை கடந்தது. ராயுடுவுக்கு அடுத்து மொயின் அலியுடன் ஜடேஜா களமிறங்கினார்.

சென்னை அணியின் ரன்வேகத்தை, பெங்களூரு பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கட்டுப்படுத்தினார். 19வது ஓவரில் அவர் 10 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்தார்.

கெய்க்வாட் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்திய சிராஜ் 4 ஓவர்களை வீசிய 30 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்து நோபால் ஆனது. இதைத் தொடர்ந்து ஃபீரிஹிட் வழங்கப்பட்டது. ஆனால் அதை ஜடஜா பவுண்டரியாக மாற்றத் தவறினார்.

தொடர்ந்து மூன்றாவது பந்தை வைடாகவும், நோபாலாகவும் வீசினார் ஹர்ஷல். சென்னை அணி ரிவியூ கேட்க அதை சோதித்த நடுவர்கள் நோபால் என அறிவித்து ஃபீரிஹிட் வழங்கினர்.

ஆனால் தொடர்ந்து 2 நோபால், 1 வைடுபாலை ஹர்ஷல் படேல் வீசியதால் அந்த ஓவரை தொடர மேக்ஸ்வெல் உள்ளே வந்தார்.

மீண்டும் கிடைத்த ஃபீரிஹிட் வாய்ப்பை சிக்சராக்கினார் ஜடேஜா. ஆனால் அடுத்த பந்திலேயே ஜடேஜா அவுட்டானார்.

இரண்டு பந்துகள் மீதமிருக்க களமிறங்கிய தோனி, சிங்கிள் அடித்தார். முடிவில் சென்னை அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.

பெங்களூரு அணி கடைசி ஓவரில் மட்டும் 2 வைடு பால், 2 நோபால் உட்பட 10 பந்துகளை வீசியது.

https://www.bbc.com/tamil/articles/c4n5n8260pdo

Edited by ஏராளன்
சரியான இணைப்பை இணைத்தேன்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி: தும்பை விட்டு வாலைப் பிடித்த சிஎஸ்கே - எளிதான வெற்றி இழுபறியானது ஏன்?

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரில் பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மீண்டும் ஒரு ரோலர் கோஸ்டர் மேட்ச் நடந்து முடிந்தது. இரு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் குவித்த இந்த போட்டிகளில் கடந்த முறை எதிரணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை கட்டுப்படுத்த முடியால் தோல்வியைத் தழுவிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இம்முறை சேஸிங்கில் கோட்டை விட்டுள்ளது.

227 ரன்களைத் துரத்திய அந்த அணி, கேப்டன் டுப்ளெஸ்ஸி - மேக்ஸ்வெல் ஜோடி களத்தில் இருந்த போது எளிதில் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவர்கள் அவுட்டான பிறகு தடம் புரண்டது.

பெங்களூரு மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 250 ரன்களைக் குவித்தாலும் கூட வெற்றி உறுதியில்லை என்பதை நேற்றைய ஆட்டமும் நிரூபித்தது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த தவறுகளே, எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை கடினமாக்கிவிட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கேப்டன் டுப்ளெஸ்ஸி - மேக்ஸ்வெல் ஆகிய இருவருக்கும் சில கேட்ச்களை சென்னை வீரர்கள் கோட்டை விட்டது ஒரு கட்டத்தில் சென்னை அணியின் வெற்றியையே கேள்விக்குறியாக்கிவிட்டது. பின்னர் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக கடைசியில் ஒருவழியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது.

 

டெவோன் கான்வேயின் அதிரடி சரவெடி ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதான காரணம் தொடக்க வீரர் டெவோன் கான்வேயின் அதிரடி ஆட்டம் தான். நடப்புத் தொடரில் சிறப்பாக தொடங்கி நல்ல பார்மில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கத்திலேயே நடையைக் கட்ட ரன் ரேட்டை டெவோன் கான்வே பார்த்துக் கொண்டார்.

இரண்டாவது ஓவரிலேயே ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிவிட்ட அவர், ஆட்டமிழக்கும் வரை அதிரடியை தொடர்ந்தார். எந்தவொரு கட்டத்திலும் அவர் நிதானம் காட்டவே இல்லை. 45 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 ரன்களைக் குவித்த கான்வே, சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் ஆட்டத்தின் 16-வது ஓவரில் ஹர்ஷல் படேல் வீசிய கிளீன் போல்டாகி ஏமாற்றம் தந்தார்.

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

சி.எஸ்.கே.வுக்கு வந்ததும் பக்கா டி20 வீரராகிவிட்ட ரஹானே

டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்டு சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் இருந்தும், ஐ.பி.எல். தொடரில் மற்ற அணிகளாலும் புறக்கணிக்கப்பட்ட அஜிங்கியா ரஹானே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த பிறகு நடப்புத் தொடரில் அசத்தி வருகிறார். ருதுராஜ் அவுட்டானதும் களம் கண்ட அவர், பேட்டிங்கிற்கு உகந்த ஆடுகளத்தில் முதல் பந்தில் இருந்தே மட்டையை சுழற்றினார்.

அவரது மட்டையில் இருந்து 3 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் பறந்தன. ரஹானேவா இது என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் விஜய்குமார் வைஷாக் வீசிய வேகப்பந்தில் பிரமாண்ட சிக்சர் ஒன்றையும் அவர் விளாசினார். 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்த ரஹானே ஹசரங்கா பந்துவீச்சில் போல்டானார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதேபோன்று தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4-வது வரிசை பேட்ஸ்மேனுக்கு ரஹானே பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது.

பீல்டிங்கின் போதும், எல்லைக்கோடு அருகே நின்றிருந்த அவர், மேக்ஸ்வெல் அடித்த ஒரு சிக்சரை அபாரமாக துள்ளிக் குதித்து ஒற்றைக் கையால் பிடித்த போது, எல்லைக்கோட்டை கடந்து செல்வதை உணர்ந்து கொண்டு பந்தை உள்ளே எறிந்துவிட்டார். பந்து சிக்ராகிவிடும் என்று எதிர்பார்த்திருந்த டுப்ளெஸ்ஸியும் மேக்ஸ்வெல்லும் ஒரு ரன் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 ரன்களை ரஹானே சேமித்துக் கொடுத்தார்.

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

கழற்றிவிட்ட ஆர்.சி.பி. அணியைக் கதற விடும் ஷிவம் துபே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரஹானே 'கிளாசிக்' என்றால் ஷிவம் துபே தடாலடி ஆட்டக்காரர். தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை கொடுக்காவிட்டாலும் கூட, தன்னை கழற்றி விட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி என்றால் மனிதர் எப்படி இருந்தாலும் பார்முக்கு வந்துவிடுகிறார்.

நேற்றைய ஆட்டத்தில் 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகளை விளாசிய அவர் 25 பந்துகளில் 52 ரன்களை குவித்து அசத்தினார். அதில் ஒரு சிக்சர் 111 மீட்டர் தூரம் பறந்து சென்று பிரமாண்டமான ஒன்றாக அமைந்தது.

முன்னாள் அணியான பெங்களூருவுக்கு எதிராக ஆடிய போட்டிகளில் 98 பந்துகளை சந்தித்துள்ள ஷிவம் துபே 181 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 14 சிக்சர்கள் அடங்கும். மற்ற அணிகளுக்கு எதிராக ஷிவம் துபேவின் சராசரி 20.29 ரன் என்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக அவரது சராசரி 96.50-ஆக மலைக்க வைக்கிறது. அதுபோலவே, மற்ற அணிகளுக்கு எதிராக அவரது ஸ்ட்ரைக் ரேட்124, பெங்களூருவுக்கு எதிராக 183.80 என்கிறது புள்ளிவிவரம்.

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

ஷிவம் துபே ஆட்டமிழந்ததும் வெகுவாக ஆர்ப்பரித்து விராட் கோலி அதனை கொண்டாடிய விதமே துபே விக்கெட்டை ஆர்.சி.பி அணி எந்த அளவுக்கு எதிர்பார்த்திருந்தது என்பதை வெளிக்காட்டியது. கோலியின் விதிகளை மீறிய இந்த ஆர்ப்பரிப்பு அவருக்கு தண்டனையை பெற்றுத் தந்துள்ளது. நேற்றைய ஆட்டத்திற்கான கோலியின் ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தோனி விரித்த வலையில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த கோலி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இமாலய இலக்கை நிர்ணயித்திருந்ததால் முதல் பந்தில் இருந்தே அடித்தாடும் முடிவுடன் கோலி வந்திருந்தார். முதல் பந்தையே கிரீசை விட்டு வெளியே சென்று பவுண்டரி அடித்த அவர், அடுத்த பந்தில் 2 ரன்களையும் சேகரித்தார்.

எல்லா பந்துகளையும் எல்லைக்கோட்டிற்கு விரட்ட, கோலி காட்டிய தீவிரத்தால் சென்னை அணி கேப்டன் தோனி "கவ் கார்னர்" திசையில் பீல்டரை நிறுத்தி மிட்விக்கெட் திசையில் காலியாக விட்டிருந்தார். முதல் ஓவரின் நான்காவது பந்தை அறிமுக வீரர் ஆகாஷ் சிங் நல்ல லெங்த்தில் வீசிய பந்தை கோலி மிட் விக்கெட் திசையில் விரட்டியடிக்க முயல, துரதிர்ஷ்டவசமாக எந்து எட்ஜாகி அவரது கால்காப்பில் பட்டு ஸ்டம்பில் விழுந்துவிட்டது. கோலி 6 ரன்களில் திருப்திப்பட வேண்டியதாயிற்று.

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

தோனி திட்டங்களை தவிடுபொடியாக்கிய டூப்ளெஸ்ஸி-மேக்ஸ்வெல் ஜோடி

ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும் கேப்டன் டுப்ளெஸ்ஸியும், மேக்ஸ்வெல்லும் கொஞ்சமும் நிதானம் காட்டவே இல்லை. களத்தில் நிலைநிறுத்திக் கொண்டு விட்டு பின்னர் விளாசலாம் என்ற பார்முலா எல்லாம் அவர்களிடம் இல்லை. இருவருமே தொடக்கம் முதலே பவுண்டரியும், சிக்சருமாக விளாசத் தொடங்கிவிட்டனர்.

இருவரின் அதிரடியால் பெங்களூர் அணி 6 ஓவர் பவர் பிளே முடிவில் 75 ரன்களைத் திரட்டிவிட்டது. இந்த ஜோடி பத்தே ஓவர்களில் 126 ரன்களைக் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிரள வைத்துவிட்டது. இந்த ஜோடியின் ருத்ர தாண்டவத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஸ்கோர் 12-வது ஓவரிலேயே 141 ரன் என்ற நிலையை எட்டிவிட்டது.

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

பவர் பிளே முடிந்துவிட்டதா இல்லையா என்பதே தெரியாத வகையில் இருவரின் அதிரடியும் தொடர்ந்ததால், ஏழாவது ஓவரில் இருந்து சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வந்து எதிரணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் தோனியின் திட்டம் பலிக்கவில்லை. ரவீந்திர ஜடேஜா, தீக்ஷனா, மோயீன் அலி என ஒருவரைக் கூட மேக்ஸ்வெல் - டுப்ளெஸ்ஸி ஜோடி விட்டுவைக்கவைல்லை.

டூப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் வீழ்ந்ததும் தடம் புரண்ட ஆர்.சி.பி.

டுப்ளெஸ்ஸி - மேக்ஸ்வெல் ஜோடி களத்தில் இருந்த வரையிலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெறத் தேவையான ரன் ரேட்டைக் காட்டிலும் அதிகமாகவே பராமரித்து வந்தது. ஒருவழியாக 13-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. தீக்ஷனா வீசிய பந்தை மேக்ஸ்வெல் சிக்சருக்கு தூக்கி அடிக்க, நேரே மேலே பறந்த பந்தை தோனி சிறிதும் பதற்றப்படாமல் அபாரமாக கேட்ச் செய்தார். 36 பந்துகளை மட்டுமே சந்தித்த மேக்ஸ்வெல் 3 பவுண்டரி, 8 சிக்சர்களை நொறுக்கி 76 ரன்களைக் குவித்தார்.

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

மறுபுறம் தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய கேப்டன் டுப்ளெஸ்ஸியும், மொயீன் அலி வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்சர்களை விளாசிவிட்டு கடைசிப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் தடம் புரண்டு விட்டது. தினேஷ் கார்த்திக், இம்பாக்ட் பிளேயராக உள்ளே வந்த சுயாஷ் பிரபுதேசாய் ஆகியோர் சற்று நேரம் அதிரடி காட்டினாலும் அது வெற்றிபெற போதுமானதாக இருக்கவில்லை.

எளிதான கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்ட சிஎஸ்கே

சென்னை அணி எளிதான கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டதே ஆட்டம் இவ்வளவு தூரம் இழுபறியாகக் காரணமாகிவிட்டது. கேப்டன் தோனியே கூட எளிதான கேட்சை தவறவிட்டார். அதுவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தண்ணி காட்டிய ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் டுப்ளெஸ்ஸி கொடுத்த எளிதான கேட்சை தோனி கோட்டை விட்டார். அதனால் கிடைத்த பவுண்டரியுடன் ரன் கணக்கைத் தொடங்கி டுப்ளெஸ்ஸி பின்னர் வெளுத்து வாங்கிவிட்டார். 53 ரன்களில் அவர் மீண்டும் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீக்ஷனா விட்டுவிட்டார்.

இதேபோல், சென்னைக்கு கிலி கொடுத்த மற்றொரு வீரரான மேக்ஸ்வெல் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை தீக்ஷனா பிடிக்கத் தவறினார். கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய இருவருமே பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு கட்டத்தில் தோல்வி பயத்தை காட்டி விட்டனர். சிறந்த பீல்டர் என்று பெயரெடுத்த ருதுராஜ் கெய்க்வாட்டும் கூட, கடைசியில் இக்கட்டான கட்டத்தில் அச்சுறுத்திக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் கொடுத்த எளிதான கேட்சை தவறவிட்டார். இதேபோல், தொடக்கத்தில் மஹிபால் லோம்ராருக்கும் ஒரு கேட்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவறவிட்டது.

பீல்டிங்கில் செய்த தவறுகளால் எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய மேட்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியின் விளிம்பு வரை சென்று பின்னர் ஒருவழியாக மீண்டு வந்து வாகை சூடியிருக்கிறது.

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

கேப்டன் கூல் நிதானம் இழந்தாரா? உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளால் தடுமாற்றம்

கேப்டன் கூல் என்று பெயரெடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி உணர்ச்சிவசப்பட்டதையும் நேற்றைய ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. டுப்ளெஸ்ஸி - மேக்ஸ்வெல் ஜோடி தோல்வி பயத்தை காட்டிவிட்ட நிலையில், தீக்ஷனா ஓவரில் பெங்களூர் அணி வீரர் ஷாபாஸ் அஹமது ரிவெர்ஸ் ஸ்வீப் முயல, பந்து அவரது கால் காப்பில் பட்டுவிட்டது.

பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்டிருந்தாலும் கூட, வெற்றிக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியே ஆக வேண்டிய நெருக்கடியில் இருந்ததால் தோனி டி.ஆர்.எஸ். அப்பீலுக்குப் போனார். அது தோல்வியில்தான் முடிந்தது. வழக்கமாக, இதுபோன்ற தருணங்களில் தோனி டி.ஆர்.எஸ். முறைக்குச் செல்லவே மாட்டார். பெரும்பாலும் அவரது அப்பீல் சரியாக இருக்கும் என்பதால்தான் டி.ஆர்.எஸ். முறையையே ரசிகர்கள் தோனி ரிவியூ சிஸ்டம் என்று வர்ணிக்கிறார்கள். அப்படிப்பட்ட தோனி, நேற்றைய ஆட்டம் தந்த நெருக்கடிக்கு ஆளாக நேரிட்டதால் இந்த அப்பீலுக்குச் சென்றார் என்பதை உணர முடிந்தது.

அதேபோல், டுப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோருக்கு கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்ட தீக்ஷனா, கடைசிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக் கொடுத்த கேட்சை எல்லைக்கோட்டில் பிடித்த போது தோனி முகத்தில் தென்பட்ட நிம்மதியும், மகிழ்ச்சியுமே அவர் உணர்ச்சிவசப்பட்டதை வெளிக்காட்டியது. ஏனெனில், சர்வதேச போட்டிகளில் கூட தோனி இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படுபவர் அல்ல.

தினேஷ் கார்த்திக்கிற்கு அவர் ஸ்டம்பிங் செய்த போது விதிகளை மீறியதாகவும் தெரிகிறது. ஏனெனில், பந்து பேட்ஸ்மேனையோ, ஸ்டம்புகளையோ தொடாத போது ஸ்டம்புக்கு முன்னே விக்கெட் கீப்பரின் கைகள் செல்லக் கூடாது என்ற விதிகளை மீறி, தோனியின் கிளவுஸ் முன்னே இருந்தது டி.வி. ரிப்ளேவில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், தோனி செய்த தவறை நடுவரோ, எதிரணியோ கவனிக்கத் தவறிவிட்டதாகவே தெரிகிறது.

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் சாதனை சமன்

நேற்றைய ஆட்டத்தில் மொத்தம் 33 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் என்ற வகையில் ஏற்கனவே உள்ள சாதனையை நேற்றைய ஆட்டம் சமன் செய்துள்ளது.

இதில் 17 சிக்சர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 16 சிக்சர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளாசின. இரு அணிகளுமே சம அளவில் பவுண்டரிகளை விளாசின.

அவ்வளவு வாண வேடிக்கைக்கு மத்தியிலும் சிக்கனம் காட்டிய முகமது சிராஜ்

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் சொர்க்கபுரி என்பதால் இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் சிக்சர், பவுண்டரிகளாக வெளுத்து வாங்க ஒரே ஒரு பவுலர் மட்டுமே சிக்கனமாக பந்துவீசியிருந்தார். அவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முகமது சிராஜ்.

பவர் பிளேவில் 2 ஓவர்களை வீசிய அவர், 14 மற்றும் 19-வது ஓவர்களையும் வீசியிருந்தார். 4 ஓவர்களில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம், நடப்பு ஐ.,பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு வெற்றிகரமான பவுலராக அவர் வலம் வருகிறார். பந்துவீச்சில் முகமது சிராஜ் மட்டுமே அந்த அணிக்கு ஆறுதல் தருகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cn0q03ew93go

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஜிங்க்யா ரஹானே 2.0 : அற்புதம் நிகழ்த்தும் CSK 'சூப்பர் ஸ்டார்'

ரஹானே

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விவேக் ஆனந்த்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கேட்ச்களை கோட்டை விட்டு, ஃபீல்டிங்கில் சொதப்பிக் கொண்டிருக்க ஒரு வீரர் மட்டும் ரசிகர்களிடம் 'வாவ்' பாராட்டு பெற்றார்.

அவர் அஜிங்க்ய ரஹானே.

மேக்ஸ்வெல்லும் டு பிளசியும் சென்னை பந்துவீச்சாளர்களை தண்டித்துக் கொண்டிருந்த வேளையில், ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரை வீசினார் ஜடேஜா. அந்த ஓவரில் இரண்டாவது பந்தை லாங் ஆன் திசையில் அடித்தார்.. அந்த பந்தை ருதுராஜ் எகிறி தடுக்க முயன்றார். ஆனால் அவரது விரல்களால் பந்தை முத்தமிட மட்டுமே முடிந்தது. எல்லைக்கோட்டை பந்து வெற்றிகரமாக தாண்டியது.

அதே ஓவரில் ஐந்தாவது பந்தை லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸர் அடிக்க முயன்றார் மேக்ஸ்வெல். ஆனால் அந்த பந்தால் எல்லைக்கோட்டைத் தாண்டி விழ முடியவில்லை. அதற்கு காரணம் அங்கே 'பறந்து கொண்டிருந்த' ரஹானே.

 

இடது கால் இடுப்பு மேல் அந்தரத்தில் இருக்க, இடது கையால் அந்த பந்தை அந்தரத்தில் இருந்தபடியே தட்டிவிட்டார்.

சிக்சருக்குச் செல்ல வேண்டிய பந்து பௌண்டரியை கூட அடைய முடியவில்லை. மேக்ஸ்வெலால் ஒரு ரன் மட்டுமே ஓடி எடுக்க முடிந்தது. ஐந்து ரன்களை காப்பாற்றினார் ரஹானே.

226 ரன்கள் அடித்தும் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே சென்னையால் வெற்றியடைய முடிந்தது. ரஹானே ஃபீல்டிங்கில் காட்டிய பாய்ச்சல் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் ஃபீல்டிங்கில் மட்டுமல்ல, பேட்டிங்கில் ரஹானே இந்த சீசனில் காட்டிவரும் அதிரடி தான் சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.

ரஹானே ஒரு டெஸ்ட் பிளேயர், அவருக்கு ஸ்ட்ரைக் ரேட்டில் பிரச்னை இருக்கிறது, வயது 35 ஆகப்போகிறது, சென்னையில் ஏற்கனவே இளம் தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள், இப்போது ஏன் ரஹானேவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்க வேண்டும் என விமர்சனங்கள் எழாமலில்லை.

அந்த விமர்சனங்களுக்கு காரணம் சமீப இரண்டு ஆண்டுகளில் ரஹானேவிடம் இருந்து 'மெச்சத்தக்க இன்னிங்ஸ்' ஏதும் வரவில்லை என்பதே.

ஆனால், ஒப்பீட்டளவில் குறைவான தொகையில், அதாவது வெறும் 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரஹானே சென்னையின் அதி முக்கியமான துருப்புச்சீட்டாக உருவெடுத்திருக்கிறார்.

இந்த சீசனில் தனது முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 19 பந்துகளில் அரைசதம் விளாசியவர், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் பட்டாசாய் வெடித்தவர் 20 பந்துகளில் மூன்று பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் என 37 ரன்கள் குவித்தார்.

ரஹானே

பட மூலாதாரம்,SPORTZPICS

இந்த மூன்று போட்டிகளிலும் ரஹானே பவர்பிளேவில் அசத்தல் ஆட்டம் விளையாடியிருக்கிறார். இந்த சீசனில் பவர்பிளேவில் 200 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் ஒரே வீரர் அவர்தான்.

அது மட்டுமல்ல இந்த மூன்று போட்டிகளின் முடிவில் அவரது சராசரி ஸ்ட்ரைக் ரேட் 195-ல் இருக்கிறது.

ரஹானே சுழன்று சுழன்று பேட்டிங் செய்து மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிடுபவர் அல்ல. பாரம்பரிய கிரிக்கெட் ஷாட்டுகளைத் தான் ஆடுகிறார். ஆனால் அத்தனையும் நேர்த்தியாக தீர்க்கமாக இருக்கிறது என சிலாகிக்கிறார்கள் வர்ணனையாளர்கள்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் இர்பான் பதான், இந்த சீசனில் அஜிங்க்ய ரஹானேவின் ஸ்ட்ரைக் ரேட் மலைப்பூட்டுகிறது. தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது அவருக்கு உதவியிருக்கிறது என எழுதியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ரஹானே ஒரு குட்டி ஆச்சர்யம் தான். ஆனால் ரஹானேவின் ஆக்ரோஷமற்ற போர்க்குணம் இதற்கு முன்பும் பலமுறை வெளிப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், 2020 - 2021 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை குறிப்பிட வேண்டும்.

ஆஸ்திரேலிய மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 36 ரன்களுக்குச் சுருண்டு அதிமோசமான தோல்வியை சந்தித்தது இந்திய அணி.

அப்போது விராட் கோலி தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் மனைவி அருகில் உறுதுணையக இருக்க விடுமுறையில் செல்ல வேண்டியிருந்த சூழல்.

 

ரஹானே

பட மூலாதாரம்,SPORTZPICS

புஜாரா, ரஹானே தவிர அணியில் மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் என இளம் பேட்ஸ்மேன்களே இருந்தனர். இந்த இளம் படையை வைத்துக் கொண்டு மிச்செல் ஸ்டார்க், ஹெஸில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லியன் என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர்களை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளவிருந்தது இந்திய அணி.

அப்போது அந்த இளம் படைக்கு தலைமை தாங்கிய ரஹானே அதிமோசமான அந்த சொதப்பல் இன்னிங்க்ஸுக்கு பிறகு மெல்பர்ன் டெஸ்டில் விளையாடினார்.

அந்த போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் ரன் கணக்கை துவங்கும் முன்னரே முதல் விக்கெட்டை இழந்தது. மிகவும் சோர்ந்திருந்த இந்திய அணிக்கு அப்போது ரஹானே தனது பேட்டிங் மூலம் நம்பிக்கையூட்டினார்.

நங்கூரம் பாய்ச்சி களத்தில் நின்ற ரஹானே, அபாரமாக ஆடி சதமடித்தார்.

முதல் இன்னிங்சில் ரன் அவுட் ஆனவர், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அடிகோலினார்.

ஒரே டெஸ்ட் போட்டி மூலம் இந்திய அணி அந்த தொடரில் கம்பேக் கொடுத்தது. அதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் கோட்டை என வர்ணிக்கப்படும் பிரிஸ்பேன் கப்பா ஆடுகளத்தில் 32 ஆண்டுகளாக எந்த அணியாலும் தோற்கடிக்க முடியாத ஆஸ்திரேலியாவை ரகானே தலைமையிலான இந்திய அணி தோற்கடித்து டெஸ்ட் தொடர் கோப்பையை கைப்பற்றியது வரலாறு.

ரஹானே

பட மூலாதாரம்,SPORTZPICS

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2018 பிப்ரவரிக்கு மேல் ரஹானேவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் தனது கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் ஐந்து அரைசதம் விளாசியிருந்தார்.

டி20 போட்டிகளில் கிட்டதட்ட கடந்த ஏழு ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

அந்த மெல்பர்ன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஒரு சதம் கூட விளாசததால் டெஸ்ட் அணியில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு இடமில்லை.

ஐபிஎல்லில் ஒரு காலத்தில் அணித்தலைவராகவும், ராஜஸ்தான் அணிக்கு நம்பகமான தொடக்க வீரராகவும் விளையாடிய ரஹானேவை கடந்த ஐபிஎல் ஏலத்தில் பலர் கண்டுகொள்ளவில்லை.

இத்தகைய சூழலில் தன்னை ஏலத்தில் எடுத்து வாய்ப்பு வழங்கிய சென்னை அணிக்கு சிறப்பான ஆட்டம் மூலம் தனது இருப்பின் தேவையை உணர்த்தியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, தன் மீதான விமர்சனங்களுக்கும், கேலிகளுக்கும் உரிய பதிலை அழுத்தம் திருத்தமாக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். ஆனால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்...

இந்த சீசனில் ரஹானேவிடம் அதிரடியான ஆட்டபாணியை யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி முத்திரை பதித்திருக்கிறார்.

இப்போது இனி வரும் ஆட்டங்களில் ரஹானே ஆட்டத்தை ரசிகர்கள் கூர்ந்து கவனிப்பார்கள், எதிரணியினர் அவரை பெவிலியனை நோக்கி நடக்கவைக்க திட்டம் தீட்டுவார்கள், பெரும் எதிர்பார்ப்பு எனும் அழுத்தம் அவரது தோளில் இறங்கக்கூடும். இந்த புதிய சவால்களை 34 வயது ரஹானே எப்படிக் கடக்கப்போகிறார் என்பதில் சுவாரஸ்யம் காத்திருக்கிறது.

ஒருவேளை, அது ஒரு உத்வேக கதையாக கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடும்.

https://www.bbc.com/tamil/articles/ck5e5672j16o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடராஜனின் 'யார்க்கர்கள்' எங்கே போயின? அர்ஜூனை 'இளவரசர்' போல நடத்துகிறதா மும்பை? MI vs SRH ஆட்டத்தில் நடந்தது என்ன?

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோற்கடித்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீன், மும்பை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், தந்தையால் சாதிக்க முடியாததை தனது 2-வது போட்டியிலேயே சாதித்துக் காட்டியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளனர்.

நடப்புத் தொடரை அடுத்தடுத்த தோல்விகளுடன் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத டெல்லி கேபிட்டல்ஸ் அணி மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைக் காட்டிலும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

மும்பை சிறப்பான தொடக்கம் - மிடில் ஓவர்களில் திலக் வர்மா கைவரிசை

நடப்புத் தொடரில் ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி மீண்டும் ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி ஐந்தாவது ஓவரிலேயே பிரிந்துவிட்டாலும் கூட, அதற்குள் 41 ரன்களை சேர்த்துவிட்டிருந்தது. 18 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா, அதற்குள்ளாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் நம்பிக்கையை குலைத்துவிட்டிருந்தார்.

 

வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசிய ரோகித், நடராஜன் வீசிய ஓவரிலும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அசத்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இஷான் கிஷன் இம்முறை சற்று நிதானம் காட்டினார். 31 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 38 ரன்களை அவர் சேர்த்தார்.

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,BCCI/IPL

மிடில் ஓவர்களில் திலக் வர்மா மீண்டும் ஒரு சிறப்பான கேமியோவை ஆடினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் ஜொலித்த மார்க்கோ ஜேன்சனை ஒரே ஓவரில் திலக் வர்மா கலங்கடித்தார். அவர் வீசிய 15-வது ஓவரின் கடைசி இரு பந்துகளையும் சிக்சராக்கி பிரமாதப்படுத்தினார் திலக் வர்மா. அவர் 17 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார்.

கடந்த சீசனில் அறிமுகமான பிறகு, மிடில் ஓவர்களில் மும்பை அணிக்கு அவர் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2022-ம் ஆண்டுக்குப் பின் நடந்த ஐ.பி.எல். போட்டிகளை மட்டும் கணக்கில் கொண்டால், மிடில் ஓவர்களில் அதிக ரன் சேர்த்த வீரர் திலக் வர்மா தான். மிடில் ஓவர்களில் மட்டும் 479 ரன்களைக் குவித்துள்ள அவரது ஸ்டிரைக் ரேட் 137.64 என்கிற அளவில் சிறப்பானதாக இருக்கிறது.

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆல்ரவுண்டராக கலக்கிய கேமரூன் கிரீன்

மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் எதிர்பார்த்திருந்த கேமரூன் கிரீனிடம் இருந்து ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் செயல்பாடு வெளிப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் மும்பை அணிக்கு பேட்டிங்கில் அவர் கைகொடுத்தார். தொடக்கத்தில் களத்தில் தன்னை சரிவர பொருத்திக் கொள்ள முடியாமல் தடுமாறிய அவர், 5-6 ஓவர்களுக்குப் பிறகு இயல்பான ஆட்டத்திற்குத் திரும்பினார்.

ரோகித் சர்மா - இஷான் கிஷன் தொடக்க ஜோடி அளித்த சிறப்பான தொடக்கத்தால் கிடைத்த ரன்ரேட்டை கடைசி வரை அப்படியே மும்பை அணி பராமரித்ததில் கேமரூன் கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. மும்பை அணியின் ரன்ரேட் 8-க்கும் மேலாகவே தொடர்ந்தது. ஒன் டவுன் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார். இதில், 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

பேட்டிங்கைப் போலவே பந்துவீச்சிலும் இக்கட்டான நேரத்தில் அணிக்கு அவர் கைகொடுத்தார். நல்ல பார்மில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் நன்றாக களத்தில் நிலைத்து, பின்னர் அதிரடிக்கு மாறிய சிறிது நேரத்திலேயே அவரை வெளியேற்றி மும்பை அணியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினார் கிரீன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவையாக இருந்த போது, 19-வது ஓவரை வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மும்பை அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்ததும் கேமரூன் கிரீன் தான்.

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேஸிங்கில் தொடக்கத்திலேயே தடுமாறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐதராபாத் மைதானத்தில் 192 ரன்களை சேஸ் செய்வது என்பது சற்று சவாலான காரியம்தான். அதனை செய்து முடிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி புரூக்கின் அதிரடியை அதிகம் நம்பியிருந்தது. கடந்த முறை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், நேற்று 2 பவுண்டரிகளை அடித்த திருப்தியுடன் வெளியேறிவிட்டார். ராகுல் திரிபாதி மீண்டும் ஏமாற்றம் தர நான்காவது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 ஓவர் பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. சவாலான இலக்கை துரத்துகையில் பவர் பிளே ஓவர்களில் ரன் குவிப்பது முக்கியம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதனைச் செய்யத் தவறியது. அதன் பிறகு வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் மிகவும் அதிகமாக இருந்ததால் ஏற்பட்ட நெருக்கடியே அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்துவிட்டது.

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,BCCI/IPL

மார்க்ரம் அதிரடியும் மும்பைக்கு கைகொடுத்த ரோகித் வியூகமும்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அந்த அணியின் பிரமாஸ்திரமான சுழல் மும்மூர்த்திகளை கவனித்துக் கொண்ட மார்க்ரம், நேற்றும் மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை மிரட்டினார். ஹிரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா வீசிய ஏழாவது, எட்டாவது ஓவர்களில் சிக்சர் மற்றும் பவுண்டரியை அவர் விளாசினார்.

அதற்குப் பிந்தைய உத்தி இடைவேளைக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் தனது வியூகத்தை மாற்றிக் கொண்டார். ஒன்பதாவது ஓவரை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனுக்குக் கொடுக்க, அது எதிபார்த்த பலனைத் தந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய மார்க்ரம் நான்காவது பந்தை தூக்கி அடித்து மிட்விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மார்க்ரம் அவுட்டான பிறகே மும்பை இந்தியன்ஸ் அணி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிளாசனின் சிறப்பான கேமியோவும் மீண்டும் ஏமாற்றிய அப்துல் சமதும்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹெயின்ரிச் கிளாசன் மிடில் வரிசையில் அசத்தினார். பியூஷ் சாவ்லா வீசிய ஆட்டத்தின் 14-வது ஓவரில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகளை அடித்து மிரட்டிய அவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் நம்பிக்கை துளிர்விடச் செய்தார்.

ஆனால் அந்த ஓவரின் கடைசிப் பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்க லாங் ஆன் திசையில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்த கிளாசன் வெளியேறினார். அmவர் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 36 ரன்களை துரிதமாக சேர்த்தார். அவர் அவுட்டான போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற 6 ஓவர்களில் 66 ரன்கள் தேவையாக இருந்தது.

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,BCCI/IPL

அந்த ரன்களை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இம்பாக்ட் பிளேயராக அப்துல் சமதை அந்த அணி களமிறக்கியது. ஆனால் அவர் களத்தில் எந்தவொரு இம்பாக்டையும் ஏற்படுத்தத் தவறிவிட்டார். அதிரடியாக ரன் சேர்த்து அணியை கரைசேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 12 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்து ரன்அவுட்டானார்.

இக்கட்டான நேரத்தில் மோசமாக அவுட்டான வாஷிங்டன் சுந்தர்

நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பெரிய அளவில் சாதிக்காத தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், பேட்டிங்கிலும் இக்கட்டான நேரத்தில் மிக மோசமாக அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஜேசன் பெஹரெண்டார்ஃப் வீசிய 18-வது ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்த வாஷிங்டன் சுந்தர் ஐந்தாவது பந்தில் ரன் அவுட்டானார்.

லாங் ஆன் திசையில் நின்றிருந்த டிம் டேவிட் நேராக ஸ்டம்பை நோக்கி த்ரோ செய்து வாஷிங்டன் சுந்தரை வெளியேற்றினார். வாஷிங்டன் சுந்தர் எளிதாக கிரீசுக்குள் பேட்டை வைத்திருக்க வேண்டிய அந்த நேரத்தில், சற்று அசட்டையாக செயல்பட்டதால் விக்கெட்டை தாரை வார்த்து அணியை மேலும் இக்கட்டில் தள்ளினார்.

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,BCCI/IPL

மீண்டும் ஏமாற்றம் தந்த நடராஜன் - யார்க்கர்கள் எங்கே போயின?

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் இம்முறையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரிய அளவில் பங்களிக்கத் தவறிவிட்டார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதும், சுதாரித்துக் கொண்டு அடுத்த பந்தை லோ கட்டர் வீசி அவரை காலி செய்தார் நடராஜன். ஆனால் அதன் பிறகு நேற்றைய ஆட்டத்தில் அவர் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.

டெத் ஓவர்களில் அவரை, குறிப்பாக அவரது யார்க்கரை நம்பியிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று ஏமாற்றம் அடைந்தது. அவர் வீசிய 18-வது ஓவரில் கேமரூன் கிரீன் ஹாட்ரிக் பவுண்டரி, சிக்சருடன் 21 ரன்கள் குவித்தார். நடராஜனின் டிரேட் மார்க்கான யார்க்கர்கள் அவரிடம் இருந்து இன்னும் வரவில்லை. நேற்றைய ஆட்டத்தில் வெறும் 2 யார்க்கர்களை மட்டுமே அவர் வீசினார்.

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,BCCI/IPL

2017-ம் ஆண்டு ஐ-பி.எல்.லில் அறிமுகமான பிறகு அதிக யார்க்கர்களை வீசிய பவுலர் பும்ராவுக்குப் பிறகு நடராஜன் தான். அதானாலேயே யார்க்கர் கிங் என்று பெயரெடுத்த நடராஜன், காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு இன்னும் தனது இயல்பான பார்முக்கு வர முடியாமல் தவிக்கிறார். அவரது பந்துவீச்சில் இன்னும் 'ரிதம்' கைகூடி வரவில்லை.

யார்க்கருக்கு முயற்சிக்கையில் புல்டாசாகும் ஆபத்து அதிகம் என்றாலும், உச்சக்கட்ட பார்மில் இருக்கும் போது, டெத் ஓவர்களை வீசுகையில் 3 அல்லது 4 யார்க்கர்களை சாதாரணமாக வீசிய நடராஜன் தற்போது அந்த நிலையை எட்ட முடியாமல் தடுமாறுகிறார். யார்க்கருக்கு முயற்சிக்கும் போது அது புல்டாசாக மாறி பேட்ஸ்மேன்கள் அடிக்க எளிதாகி விடுகிறது. இதனால், அவரது பந்துவீச்சில் ரன்கள் அதிகம் எடுக்கப்பட்டு விடுகின்றன. நேற்று 2 யார்க்கர்களை மட்டுமே வீசிய நடராஜன் 8 புல்டாஸ் பந்துகளை வீசினார். அந்த பந்துகளில் மட்டும் 19 ரன்கiள மும்பை அணி சேர்த்தது.

அர்ஜூன் டெண்டுல்கரை இளவரசர் போல் பாதுகாக்கிறதா மும்பை?

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் ஆட்டம் நேற்றும் ஒப்பீட்டளவில் சிறப்பானதாகவே அமைந்தது. அந்த அணியின் முதல் ஓவரையும், மூன்றாவது ஓவரையும் வீசிய அவர் 15 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசிய அர்ஜூன் டெண்டுல்கர் ஓரிரு யார்க்கர்களையும் சிறப்பாக வீசியிருந்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கின் போது, மார்க்ரம்மும், கிளாசனும் களத்தில் இருந்த போது மட்டுமே அந்த அணியின் கை ஓங்கியிருந்தது போல் தெரிந்தது. அதன் பிறகும் 6 ஓவர்களில் 66 ரன்கள் என்பது பெங்களூரு மைதானத்தில் எட்டக் கூடிய இலக்காக இருந்தாலும், பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைக்கும் பெரிய அரங்கமான ஐதராபாத்தில் அது சவாலான இலக்குதான்.

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் இருக்கும் போது பந்துவீச அர்ஜூன் டெண்டுல்கர் மீண்டும் அழைக்கப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மும்பை அணிக்கு நேற்று கதாநாயகனாக ஜொலித்த கேமரூன் கிரீன், யார்க்கர்களை வீசி மிரட்டிய இம்பாக்ட் பிளேயர் ரிலே மெரிடித் ஆகியோரையே சவாலான கட்டத்தில் கேப்டன் ரோகித் பயன்படுத்தினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வெற்றி பெற கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை, ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் என்றிருந்த நிலையில்தான் அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீச அழைக்கப்பட்டார். அப்போதுதான் களத்திற்குள் வந்திருந்த புவனேஷ்வர் குமாரும் - மயங்க் மார்க்கண்டேவும் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்காதவர்கள் என்பதால் கிட்டத்தட்டட அப்போதே மும்பை அணியின் வெற்றி உறுதியாகிவிட்டிருந்தது.

கடைசி ஓவரை அவுட்சைட் ஆப்சைடில் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் 2 யார்க்கர்களையும் வீசி ரசிகர்களை மகிழ்வித்தார். அத்துடன், கடைசி விக்கெட்டாக புவனேஷ்வர் குமாரையும் அவர் வெளியேற்றினார். ஐ.பி.எல்.லில் இரண்டாவது ஆட்டத்தில் ஆடும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இதுவே முதல் விக்கெட்டாக அமைந்தது. சர்வதேச போட்டிகளில் பேட்டிங்குடன் பல நேரங்களில் பந்துவீச்சிலும் ஜொலித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த அவரது சச்சின் டெண்டுல்கர், ஐ.பி.எல்.லில் 5 தொடர்களை ஆடியும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தியதில்லை. ஆனால், தனது இரண்டாவது ஆட்டத்திலேயே அதனை அர்ஜூன் டெண்டுல்கர் சாதித்துக் காட்டியுள்ளார்.

அர்ஜூனை 'இளவரசர்' நடத்துகிறதா மும்பை?

பட மூலாதாரம்,BCCI/IPL

இருப்பினும் அர்ஜூன் டெண்டுல்கரை இக்கட்டான நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்துவதே இல்லை. இரண்டு ஆட்டங்களிலுமே முதல் 2 ஓவர்களை வீசிய பிறகு அவரை அந்த அணி மீண்டும் பந்துவீச அழைப்பதே இல்லை. நேற்றைய ஆட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த பின்னரே கடைசி ஓவரை வீச அவருக்கு அந்த அணி வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலம் ஒரு இளவரசரைப் போல அர்ஜூன் டெண்டுல்கரை அந்த அணி பொத்திப் பொத்தி பாதுகாக்கிறதோ என்ற கேள்வியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆடிய முதல் ஆட்டத்தில் அவர் பந்துவீசுகையில் டக் அவுட்டில் இல்லாமல் வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து நேரலையில் ஆட்டத்தைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர், நேற்று பெவிலியனில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. இதன் மூலம் ஐ.பி.எல்.லில் மகன் பந்துவீசுவதை அவர் முதன் முறையாக நேரடியாக கண்டு களித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cg31j5963q5o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லக்னோவை காப்பாற்றிய ஜெய்ப்பூர் ஆடுகளம்; வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் வெற்றியை கோட்டைவிட்டது எப்படி?

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மார்க்கஸ் ஸ்டாய்னிஷ், ஆவேஷ் கான் ஆகியோரின் கட்டுக்கோப்பான, நெருக்கடிதரும் பந்துவீச்சால், ஜெய்பூரில் நேற்று நடந்த ஐ.பி.எல். டி20 தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில் ராயஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. இருப்பினும் நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் இருக்கிறது.

குறைந்த ரன்னில் சுருட்டல்

2023 ஐ.பி.எல். டி20 தொடரில் குறைந்த அளவு ஸ்கோர் செய்து, அதை லக்னோ அணி டிஃபண்ட் செய்துள்ளது. இதற்கு முன், நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை இதுபோல் குறைந்த ஸ்கோரில் ஆர்சிபி அணி சுருட்டி இருந்தது.

 

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து, டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களில் சுருட்டி ஆர்சிபி வென்றிருந்தது. இந்த ஸ்கோரைவிட குறைந்த அளவு அடித்த லக்னோ அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இந்த ஆட்டத்தில் வென்றுள்ளது.

1,460 நாட்களுக்குப்பின் நடந்த போட்டி

ஜெய்ப்பூர் சவான் மான்சிங் மைதானத்தில் கடைசியாக 2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டி நடந்தது. ஏறக்குறைய 1460 நாட்களுக்குப்பின் மீண்டும் இங்கு போட்டி நடந்தது என்றால் ஆடுகளத்தின் தன்மை கணிக்க முடியாத வகையிலேயே இருந்துள்ளது.

இந்த மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டி மட்டுமே நடந்துள்ளது. 2021ம் ஆண்டு, நவம்பர் 17ம் தேதி இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடந்துள்ளது.

இந்த ஆட்டத்திலும் இரு அணிகளும் குறைந்த ஸ்கோரையே அடித்தன. நியூசிலாந்து அணி அடித்த 164 ரன்களை இந்திய அணி 19.4 ஓவர்களில் சேஸிங் செய்து வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப்பின் இதுவரை இந்த மைதானத்தில் எந்த ஆட்டமும் நடந்ததில்லை.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆடுகளத்தின் தன்மை

ஜெய்ப்பூர் ஆடுகளம் சேஸிங்கிற்கு சாதகமானது என்று கடந்த காலபோட்டிகளின் முடிவுகள் தெரிவித்தாலும், நேற்றைய ஆட்டத்தின்போது, ஆடுகளம் இரட்டைத் தன்மை உடையதாக இருந்ததால், இரு அணிகளாலும் பிட்ச்சின் தன்மையை கணிக்க முடியவில்லை.

ஜெய்ப்பூர் ஆடுகளத்தில் இதுவரை 47 ஐ.பி.எல். ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் 32 ஆட்டங்களில், சேஸிங் செய்த அணிகளே வென்றுள்ளன, முதலில் பேட் செய்த அணிகள் 15 போட்டிகளில் மட்டுமே வாகை சூடியுள்ளன. இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோர் என்பது 157 ரன்கள்தான். இந்த ரன்களை வைத்து ஒரு அணியால் டிஃபெண்ட் செய்யவும் முடியும், சேஸிங்கும் செய்யலாம்.

மஞ்சரேக்கர் கூறியது என்ன?

ஆனால், ஜெய்ப்பூர் ஆடுகளத்தின் தன்மை குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் “ இந்த ஆடுகளத்தில் பந்து வழுக்கிச் செல்லும், இருவிதமான வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும், சுழல்பந்துவீச்சுக்கு பெரிதாக சாதகமாக இருக்காது.

ஆதலால், டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலான கேப்டன்கள் டாஸ் வென்றால் சேஸிங்கை தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

கணிப்பு மாறியது

ஆனால், மஞ்சரேக்கர் கணிப்புக்கு மாறாக நேற்று ஆடுகளத்தன்மை இருந்தது, மிகவும் மந்தமாக, பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்காத வகையில் இருந்தது. ஆடுகளத்தில் எந்த இடத்தில் பந்து பிட்ச்சானால் பவுன்ஸ் ஆகும், ஆகாது என்பதை பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாத வகையில் இருந்தது, சில நேரங்களில் பந்து பேட்ஸ்மேன்களின் முழுங்காலுக்கு மேல் எழும்பாமல் இருந்ததால், தூக்கி அடிக்கவும், பேட்டிங்கிற்கும் மிகவும் சிரமமாக இருந்தது.

இந்த சிரமத்தை ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிட்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் நேற்று உணர்ந்தார்கள். ஆனால், ஆடுகளத்தின் தன்மையை லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள்தான் கூடுதலாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

வெற்றியைப் பறிகொடுத்த ராஜஸ்தான்

ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கரங்களே ஓங்கியிருந்தது, ராஜஸ்தான் அணி எளிதாக சேஸிங் செய்துவிடும் என்று ரசிகர்களால் நம்பப்பட்டது. 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 89 ரன்கள் என வலுவாக இருந்தது. வெற்றிக்கு 66 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன.

ஆனால், லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் அளித்த நெருக்கடி, ஆடுகளத்தின் தன்மை போன்றவை ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

ஸ்டாய்னிஸ், ஆவேஷ் கான் அமர்க்களம்

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் மிதவேகப்பந்துவீச்சாளர்களான ஸ்டாய்னிஸ், ஆவேஷ் கான் இருவரும் ஆடுகளத்தின் தன்மையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்களை பெரிய நெருக்கடிக்குத் தள்ளினர்.

ஸ்டாய்னிஸ் 4 ஓவர்கள் வீசி 11 டாட் பந்துகளுடன் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆவேஷ் கான் 4 ஓவர்களில் 12 டாட் பந்துகள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆடுகளத்தின் நடுவில் பந்தை பிட்ச் செய்தால், பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினமாக இருந்தது. இந்த நுணுக்கத்தை தெரிந்த ஸ்டாய்னிஷ், ஆவேஷ் கான் இருவரும் சரியாகப் பயன்படுத்தி பந்துவீசியதால், ராஜஸ்தான் அணியை சுருட்ட முடிந்து.

அதிலும் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் 20-வது ஓவரை கட்டுக் கோப்பாக வீசி, இரு விக்கெட்டுகளை வீழ்த்தி, 10 ரன்களில் அணியை வெற்றி பெறச் செய்தார்.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

வரலாறு முக்கியம்

ஜெய்பூர் ஆடுகளம் கடந்த கால புள்ளிவிவரங்களைப் பார்த்தால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பது புலப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சோஹைல் தன்வீர் 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இந்த மைதானத்தில்தான்.

இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பதைவிட, வேகப்பந்துவீச்சாளர்களுக்கே அதிகமாக ஒத்துழைத்துள்ளது என்பது கடந்த காலப் போட்டியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது, வேகப்பந்துவீச்சாளர்களின் சராசரி 29.1 என்றநிலையில், சுழற்பந்துவீச்சாளர்களின் சராசரி 32.1 ஆக இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்களின் ஸ்ட்ரைக் ரேட் 23.4 ஆக இருக்கும்போது, சுழற்பந்துவீச்சாளர்களின் ஸ்ட்ரைக் ரேட் 26 ஆக இருக்கிறது.

200 ரன்களைத் தொட்டதில்லை

பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானம் திகழ்வதால், இந்த ஆடுகளத்தில் இதுவரை எந்த அணியும் 200 ரன்களுக்கு மேல் அடித்தது இல்லை.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றிய பிட்ச்

ஜெய்பூர் ஆடுகளம் சேஸிங்கிற்கு சாதகமானது என்று கடந்த கால புள்ளிவிவரங்களை நம்பி ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸனும் டாஸ் வென்று சேஸிங் செய்தார். ஆனால், அவரின் கணிப்பு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது.

ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகினால், பேட்ஸ்மேன்கள் மைதானத்தின் நான்கு திசைகளிலும் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருக்கும். ஆனால், நேற்று போட்டி நடந்த ஆடுகளத்தில், பேட்ஸ்மேன்கள் பந்தை கணிப்பதே கடினமாக இருந்தது.

இதைப் பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் டிரன்ட் போல்ட், சந்தீப் சர்மா இருவரும் தொடக்கத்தில் இருந்தே லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் தொடக்க வீரர்கள் மேயர்ஸ், கேஎல் ராகுலுக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.

பவர்ப்ளேயில் குறைவான ஸ்கோர்

இதனால் பவர்ப்ளே ஓவரில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்த ஐ.பி.எல். சீசனில் பவர்ப்ளே ஓவரில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. லக்னோ பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க திணறினர்.

இந்த ஆடுகளத்துக்கு ஒத்துவராமல் பந்துவீசும் பந்துவீச்சாளரின் ஓவரை குறிவைத்து விளாச லக்னோ பேட்ஸ்மேன் முடிவு செய்தனர். அந்த வகையில் சாஹல் வீசிய 9வது ஓவரில் 18 ரன்களையும், ஹோல்டர் வீசிய 9வது ஓவரில் 13 ரன்களையும் லக்னோ பேட்ஸ்மேன்கள் விளாசினர்.

இந்த ஆடுகளத்தின் தன்மை எந்த அளவுக்கு லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு எரிச்சலூட்டியதோ அதைவிட இரு மடங்கு ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன்களுக்கும் இருந்தது.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

ராகுலுக்கு வந்த சோதனை

ஐ.பி.எல். தொடரில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனைபுரிந்த கேஎல் ராகுல் நேற்றை ஆட்டத்திலும் ரன் சேர்க்க மிகவும் திணறினார். இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர், சிம்ரன் ஹெட்மயர் இருவருமே ஷாட்களை அடிக்க முயன்றும் ஆடுகளத்தின் தன்மையால் கணித்து அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

"என் கனவு இன்னிங்ஸ் இதுவல்ல"

ஆடுகளத்தின் தன்மை குறித்து லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் தொடக்க வீரர் மேயர்ஸ் கூறுகையில் “ நான் விளையாட வேண்டும் என்று கனவு காணும் இன்னிங்ஸ் இதுவல்ல. இந்த ஆடுகளத்தில் பந்து எப்போது பவுன்ஸ் ஆகிறது, எந்த இடத்தில் பவுன்ஸ் ஆகிறது என்பதைக் கணிக்க முடியவில்லை. இந்த ஆடுகளத்தை எங்கள் பந்துவீச்சாளர்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டர்.

லைன்,லென்த்தில் சரியாகப் பந்துவீசி முயன்றால் அது சிரமமாக இருக்கும். பந்து வழுக்கிக்கொண்டு செல்வதால், பேட்ஸ்மேன்கள் விளையாடுவது சிரமமாக இருந்தது. நானும் பந்தை நேராக அடிக்க முயற்சித்தேன், ஆஃப் திசையில் அடிக்க முயன்றும், நினைத்த ஷாட்களை அடிக்க முடியவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

ராஜஸ்தான் தோல்விக்கு காரணம் என்ன?

ராஜஸ்தான் அணி சேஸிங்கின்போது ஆடுகளத்தின் தன்மை வெகுவாக மாறியது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிரமத்தைக் கொடுத்தது. ஆடுகளத்தின் மந்தமான தன்மையைப் புரிந்து கொண்ட லக்னோ பந்துவீச்சாளர்களும் அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் களத்தில் இருக்கும் வரை அந்த அணி வெற்றி பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது என்றே ரசிகர்களால் நம்பப்பட்டது. ஆனால், இருவரும் ஆட்டமிழந்து சென்றபின், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நல்ல ‘கேமியோ’ ஆடாமல் இருந்ததன் விளைவுதான் ராஜஸ்தான் அணியை தோல்விக்கு இட்டுச் சென்றது.

சஞ்சு சான்ஸனின் எதிர்பாராத ரன்அவுட், ஹெட்மெயர் விரைவாக ஆட்டமிழந்தது போன்றவை ராஜஸ்தான் அணிக்கு வெற்றிக்கு தேவையான ரன்ரேட் அழுத்தத்தை அதிகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் 4 ஓவர்களில் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் இருந்த பேட்ஸ்மேன்கள், தேவ்தத் படிக்கல், ரியான் பராக் இருவருமே பெரிய ஷாட்களை அடிக்கும் வல்லமை படைத்த பேட்ஸ்மேன்கள் இல்லை, நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு, அணியை மீட்கும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களும் இல்லை.

இதைப் புரிந்துகொண்ட லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், பந்துவீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தி ராஜஸ்தான் அணிக்கு தொடர்நெருக்கடிகளை அளித்தார். ஸ்டாய்னிஷ் வீசிய 18-வது ஓவரில் படிக்கல் 3 பவுண்டரிகள் அடித்து 13 ரன்கள் சேர்த்தவுடன் ஆட்டத்தின் போக்கு மாறுவதுபோல் தெரிந்தது.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

இதனால், 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய நவீன் உல் ஹக், 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அற்புதமாகப் பந்துவீசினார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.

ஆவேஷ் கான், வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரியான் பராக் பவுண்டரி அடித்தவுடன் அழுத்தம் அதிகரித்தது. 2வது பந்தில் பராக் ஒரு ரன் சேர்க்கவே, 3வது பந்தை படிக்கல் எதிர்கொண்டார். ஆப்சைடில் விலக்கி ஆவேஷ் கான் வீசிய பந்தை படிக்கல் அடிக்க முற்படவே அது விக்கெட் கீப்பர் பூரனிடம் தஞ்சமடைந்து கேட்சானது.

அடுத்துவந்த ஜூரெலும், வந்தவேகத்தில் லாங்ஆன் திசையில் தூக்கி அடிக்க, தீபக் ஹூடா, பவுண்டரி அருகே கேட்ச் பிடித்தார். அடுத்து வந்த அஸ்வினாலும் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியாததால் ராஜஸ்தான் தோல்வி உறுதியானது.

"நினைத்தது ஒன்று நடந்தது வேறு"

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் ஆடுகளம் குறித்து கூறுகையில் “ இது சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான். ஆனாலும் எங்களால் முடியவில்லை. ஆடுகளத்தை மிகவும் எதிர்பார்த்தேன், ஆனால் மாறுபட்டு அமைந்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடமுடியாதவகையில் பந்து குறைவாக பவுன்ஸ் ஆகியது” எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணங்களி்ல் ஒன்று அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களின் இயல்புத் தன்மையிலிருந்து விலகி நேற்று ஆடியதுதான். வழக்கம்போல் தொடக்க பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து பவர்ப்ளேயை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை.

பட்லர், ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து சென்றபின் வந்த சாம்ஸன், ஹெட்மயர், படிக்கல், ஜூரல் ஆகியோர் நல்ல கேமியோ ஆடி இருக்க வேண்டும். இவர்கள் நான்கு பேருமே சொதப்பிவிட்டனர். தேவ்தத் படிக்கலும், ரியான் பராக்கின் மந்தமான ஆட்டமும் ராஜஸ்தான் தோல்விக்கு முக்கியக் காரணம்.

https://www.bbc.com/tamil/articles/cyxv07pv12zo




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.