Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் முறையாக காத்திருந்து படித்த பதிவு.இணைப்பிற்க்கு நன்றி ஏராளன்.அந்தப் பையனின் அடிகளை வார்த்தைகளில் வர்னிக்க முடியாது என்பது 100 வீதம் உண்மை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

'360 டிகிரி' வாண வேடிக்கையால் நம்பர் ஒன் அணிக்கு புதிய சிக்கல்

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 13 மே 2023, 02:51 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக்ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றாலும், அது கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பார்த்த வெற்றி அல்ல.

குஜராத் டைட்டன்ஸ் அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெல்லலாம் என்று மும்பை இந்தியன்ஸ் கனவை கடைசி நேரத்தில் ரஷித் கான் தனது அதிரடியான பேட்டிங்கால் தவிடுபொடியாக்கினார்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்னும் எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைக்கவில்லை.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 57-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியின் முடிவு பிளே ஆப் கனவுடன் இருக்கும் பல அணிகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

360 டிகிரி வீரர் என்று வர்ணிக்கப்படும் சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியிலும், ஐபிஎல் தொடரிலும் தனது முதல் சதத்தை நேற்று பதிவு செய்தார். 32 பந்துகளில் அரைசதம் அடித்த ஸ்கை(சூர்யகுமார்), அடுத்த 17 பந்துகளில் 50 ரன்கள் அடித்து சதத்தை நிறைவு செய்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.

சூர்யகுமாரின் ஒரு சிக்சரை பார்த்து ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கரே வியந்து போனதைக் காண முடிந்தது.

மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா நீண்ட காலத்துக்குப்பின் ஃபார்முக்கு வந்திருப்பது கூடுதல் பலமாகும். இந்த ஆட்டத்தில் தனது வழக்கமான ஷாட்களை ஆடிய ஹிட்மேன் 18 பந்துகளில் 29 ரன்கள்(2சிக்ஸர்,3பவுண்டரி) அடித்து ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

7-வது ஓவரை வீசிய ரஷித் கான் ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(31) இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி நெருக்கடி அளித்தார். நடுவரிசை வீரர் நேஹல் வதேரா (15) ரன்னில் ஆட்டமிழந்தாலும், சூர்யகுமாருக்கு துணையாக ஆடிய விஷ்ணு வினோத்(30) சிறிய கேமியோ ஆடி, ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் அசத்தல் சதம்

360 டிகிரி வீரர் என்று வர்ணிக்கப்படும் சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியிலும், ஐபிஎல் தொடரிலும் தனது முதல் சதத்தை நேற்று பதிவு செய்தார். 32 பந்துகளில் அரைசதம் அடித்த ஸ்கை(சூர்யகுமார்), அடுத்த 17 பந்துகளில் 50 ரன்கள் அடித்து சதத்தை நிறைவு செய்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.

மும்பை அணியின் கடைசி ஓவர்வரை சூர்ய குமார் 87 ரன்கள்தான் அடித்திருந்தார். கடைசி ஓவரில் ஒருசிக்ஸர் உள்ளிட்ட 10 ரன்களுடன் 5-வது பந்துவரை சூர்யகுமார் யாதவ் 97 ரன்களே சேர்த்திருந்தார், ஸ்கை சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஜோஸப் வீசிய கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி தனது முதல் ஐபிஎல் சதத்தை சூர்யகுமார் நிறைவு செய்தார்.

சூர்யகுமார் யாதவுக்கு 4-வது டி20 சதமாகும். இதற்கு முன்று சதங்களும் சர்வதேச அரங்கில் அடிக்கப்பட்டவை, அந்த 3 சதங்களும் 50 பந்துகளுக்குள் சூர்யா அடித்திருந்தார்.

இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல்முறையாக சதம் அடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர் எனும் பெருமையை சூர்யகுமார் பெற்றார். மும்பை அணிக்காக இதுவரை 4 வீரர்கள் சதம் அடித்தநிலையில் 5வதுவீரராக ஸ்கை சேர்ந்தார்.

சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் முதல் 5 போட்டிகளில் 66 ரன்கள் மட்டுமே சேர்த்து ஃபார்மில் இல்லை என்ற விமர்சனத்தைப் பெற்றார். ஆனால், கடைசி 7 ஆட்டங்களில் ஸ்கை 413 ரன்கள்(204பந்துகள்) சேர்த்துள்ளார். இந்த ஆட்டத்தில் சூர்ய குமார் 16-வது ஓவர் முடிவுவரை அரைசதம் அடிக்காமல் 47 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால், ஆட்டத்தின் முடிவில் 49 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து கம்யூட்டர் கேம் போல் ஸ்கை விளையாடிவிட்டார்.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

குஜராத் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை சந்தித்தப் போட்டிகளில் மற்ற அணிகளுக்கு சிம்மசொப்னமாகவே இருந்தது. ஆனால், பேட்ஸ்மேன்களின் தோல்வி அந்த அணியால் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில்கூட ரன்களைச் சேர்க்க முடியவில்லை.

தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்(6), சாஹா(2), ஹர்திக் பாண்டியா(4) ஆகியோர் ஆட்டமிழந்தபோதே குஜராத் வெற்றி ஆட்டம் கண்டது. நடுவரிசை விஜய் சங்கர்(29), திவேட்டியா(14) , மனோகர்(2) ஆகியோர் தேவைப்படும் நேரத்தில் ஆடாமல் விக்கெட்டை இழந்தனர். ஆனால், நிதானமாக ஆடிய மில்லர் (41) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

வான்ஹடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி, இந்தஆட்டத்தில் 8 ஓவர்களுக்குப்பின் பனிப்பொழிவு இருந்ததால், பந்தை பிடித்து மும்பை பந்துவீச்சாளர்களால் பந்துவீச முடியவில்லை, சரியான லென்த்தில் வீசமுடியவில்லை. அப்படி இருந்தும், விக்கெட்டுகளை குஜராத் அணி கோட்டைவிட்டுள்ளது.

48 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத் அணி, அடுத்த 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், 8-வது விக்கெட்டுக்கு அல்சாரி ஜோஸப், ரஷித் கான் கூட்டணி குஜராத் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

மும்பையின் கனவை சிதைத்த ரஷித் கான்

219 ரன்களை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களுடன் தோல்வியின் பிடியில் இருந்தது. எப்படியும் 120 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம், 80 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்தலாம் என்ற கனவில் ரோஹித் சர்மா இருந்தார்.

ஆனால் 9-வது விக்கெட்டுக்கு ரஷீத் கான், அல்சாரி ஜோஸப் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிம்ம சொப்னமாக இருந்தது. கடைசியில் மரண அடி அடித்த ரஷித் கான் 32 பந்துகளில் 79 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார், ரஷித் கான் கணக்கில் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.

அதாவது, ரஷித் கான் தான் சேர்த்த 79 ரன்களில் 72 ரன்களை சிக்ஸர், பவுண்டரி மூலமே சேர்த்து மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை திணறவிட்டார். 20 ஓவர்கள் முடிவுவரை ரஷித் கானை ஆட்டமிழக்க வைக்க மும்பை பந்துவீச்சாளர்களால் முடியவில்லை என்பது வியப்புக்குரியது. அல்சாரி ஜோசப் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

9-வது விக்கெட்டுக்கு ரஷித் கான், ஜோஸப் இருவரும் சேர்ந்து, 88 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் வரலாற்றில் 9-வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

கடைசிப் பந்துவரை போராடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. வலுவான பேட்ஸ்மேன் ரஷித் கானுக்கு துணையாக இருந்திருந்தால், ஆட்டம் நிச்சயம் குஜராத் டைட்டன்ஸ் பக்கம் மாறியிருக்கும்.

இந்த போட்டியில் சதம் அடித்து மும்பை வெற்றிக்கு காரணமாக இருந்த சூர்ய குமார் யாதவ் ஆட்டாயநாயகன் விருது வென்றாலும், ஆட்டத்தின் ஹீரோ ரஷித் கான். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும், கடைசி நேரத்தில் வெளுத்துவாங்கி 79 ரன்களும் சேர்த்து வான்ஹடே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ரோகித் முகத்தில் தோல்வி பயம்

ரஷித் கான் கடைசி நேரத்தில் அடித்த ஒவ்வொரு ஷாட்களைப் பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா முகத்தில் தோல்விப் பயம் தொற்றிக்கொண்டது, சிக்ஸர் அடித்தபோதெல்லாம் முகத்தை மூடிக்கொண்டும், தலையில் கை வைத்தும் தனது அதிருப்தியை தெரிவித்தார். ஜோர்டான் பந்துவீச்சை ரஷித் கான் விளாசித் தள்ளியபோது, என்ன செய்வதென்று தெரியாமல் பலமுறை ஆலோசனைகளை ரோஹித் சர்மா வழங்கினார்.

15 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்த 30 பந்துகளில் 61 ரன்களை குஜராத் அணி சேர்த்தது. ஜோர்டானின் 17-வது ஓவரில் 2பவுண்டரி, ஒருசிக்ஸர் உள்ளிட்ட 15 ரன்கள், கேமரூன் க்ரீன் வீசிய 18-வது ஓவரில் 2 சிஸ்கர் உள்ளிட்ட 13 ரன்கள், கார்த்திகேயா வீசிய கடைசிஓவரில் 3 சிக்ஸர் உள்ளிட்ட 19 ரன்களை ரஷித் கான் சேர்த்தார்.

மும்பைக்கு ஜாக்பாட்

கேரள மாநில வீரரான விஷ்ணு 2017ல் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றாலும் வாய்ப்புப் பெறவில்லை, சன்ரைசர்ஸ், டெல்லி அணியால் வாங்கப்பட்டாலும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

6 ஆண்டுகள் உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக ஆடியதையடுத்து, கடந்த ஏலத்தில் மும்பை அணி வினோத்தை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது. ஆனால், தனக்கு வழங்கப்பட்ட விலைக்கு நான் ஒர்த் என்பதை வினோத் வெளிப்படுத்திவிட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ஆகாஷ் மத்வால்(ரூ.20லட்சம்), நேபல் வதேரா(ரூ.20லட்சம்), விஷ்ணு வினோத்(ரூ.20லட்சம்) ஆகியோரை அடிப்படை விலையில் வாங்கிப்போட்டது. இந்த 3 பேருமே இந்த சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை, வெற்றிக்கு துணையாக இருந்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் மூத்த வீரர் பியூஷ் சாவ்லாவையும் ரூ.50 லட்சத்துக்கு அடிப்படைவிலையில் மும்பை அணி வாங்கிப்போட்டது. ஆனால், இந்த சீசனில் முன்னணி விக்கெட் வீழ்த்திய வீரர்களில் ஒருவராக சாவ்லா இருந்து வருகிறார். மும்பை அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் சாவ்லாவின் பங்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்த 4 வீரர்களை மும்பை அணி வாங்கியது ஜாக்பாட் அடித்தது போலத்தான்.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

‘ஸ்கை’யால் பெருமை

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வெற்றிக்குப்பின் கூறுகையில் “ ஸ்வரஸ்யமான ஆட்டம், 2 புள்ளிகள் தேவையாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்து அந்த ஸ்கோரை டிபெண்ட் செய்ய நினைத்தோம், கடைசியில் வேறுவிதமாக முடிந்தது. பனிப்பொழிவு இருந்ததால் பந்துவீச்சாளர்களுக்கு சூழல் ஒத்துழைக்கவில்லை. சூர்யகுமார் ஆட்டம் எங்களுக்கு நம்பிக்கை அளித்தது.

இடதுகை, வலதுகை பேட்ஸ்மேன்களோடு களமிறங்குவோம் என சூர்யாவிடம் தெரிவித்தேன், ஆனால் சூர்யா அவரே களமிறங்கினார். இந்த நம்பிக்கைதான் முக்கியம், இது பேட்ஸ்மேன்களுக்கு அவசியம். ஸ்கையை நினைத்து பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்

“தீர்மானத்தோடு வந்தோம்”

ஆட்டநாயகன் விருது வென்ற சூர்யகுமார் யாதவ் கூறுகையில் “ இதுதான் எனது சிறந்த இன்னிங்ஸ். 200 ரன்களுக்கு மேல் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு முதலில் பேட் செய்தோம். சேஸிங் செய்தாலும், 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். 8 ஓவர்களுக்கு பின் பனிப்பொழிவு இருந்ததால் ஸ்ட்ரைட்டில் பந்தை அடிக்க முயலவில்லை.

மாறாக, தேர்டு மேன், ஸ்குயர் லெக் திசையில்தான் அடித்தேன். என்னுடைய 360 டிகிரி ஆட்டத்துக்குப்பின்னால் ஏராளமான பயிற்சி எடுத்திருக்கிறேன். நடுவரிசையில் களமிறங்கும்போது, என் மனதை தெளிவாக வைத்து வருவேன்” எனத் தெரிவித்தார்.

'திட்டமிடல் இல்லை'

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ பந்துவீச்சு, பேட்டிங்கில் எங்கள் அணியை ரஷித் கான் மாற்றிவிட்டார், நாங்கள் அதிகமாக முயற்சிக்கவில்லை, குழுவாக இன்று சிறப்பாகச் செயல்படவில்லை. சரியான திட்டமிடல் இல்லாததால், அதை செயல்படுத்தவும் முடியவில்லை. 200 ரன்களுக்குள் சுருட்ட நினைத்து கூடுதலாக 25 ரன்கள் வழங்கிவிட்டோம்.

வெற்றியை இழந்துவிட்டோம் என்று நினைக்கையில் ரஷித் கான் ஆட்டம் நிகர ரன்ரேட்டை தக்கவைத்திருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர் சூர்யகுமார். உங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தாவிட்டால் இதுதான் நடக்கும். பந்துவீச்சாளர்கள் மீதுதான் அழுத்தம் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை

இந்த சீசனில் 200 ரன்களுக்கு மேல் மும்பைஅணி 5 முறை அடித்துள்ளது, ஒரு சீசனில் அதிகமுறை 200 ரன்களுக்கு மேல் அடித்த முதல் அணி மும்பை அணியாகும்.

மும்பை வான்ஹடே மைதானத்திலும் 4-வதுமுறை தொடர்ந்து 200 ரன்களுக்கு மேல் மும்பை இந்தியன்ஸ் சேர்த்துள்ளது, ஒரே மைதானத்தில் தொடர்ந்து 4முறை 200ரன்கள் சேர்த்தது என்பது ஆர்சிபி அணி 2016ல் பெங்களூரு சின்னசாமி அரங்கில் அடித்திருந்தது. அதன்பின் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி அடித்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆப் சென்றுவிட்டதா?

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வெற்றி மூலம் 12 ஆட்டங்களில் 7 வெற்றிகள், 5 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் நிகர ரன்ரேட் இன்னும் 0.117 என மைனசில்தான் இருக்கிறது.

இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மும்பை அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன, இதில் இரண்டிலும் மும்பை அணி வென்றால், பாதுகாப்பாக ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்லும், ஒரு வெற்றி மட்டும் பெற்றால், 16 புள்ளிகளுடன் இருக்கும், நிகர ரன்ரேட் அந்த அணிக்கு கடைசி நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆதலால், அடுத்துவரும் ஆட்டங்களில் நிகர ரன்ரேட்டை உயர்த்துவது அவசியமாகும்.

மும்பை அணி வென்றதன் மூலம், ராஜஸ்தான், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் , ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட மும்பை அணி 16 புள்ளிகளை எட்டிவிடும். ஆனால், மும்பை அணிக்கு ஈடாக புள்ளிகளைப் பெற மற்ற அணிகளான ராஜஸ்தான் அடுத்த 2 போட்டிகளை வெல்லவேண்டும், ஆர்சிபிக்கு 3 வெற்றியும், லக்னோவுக்கு 3 வெற்றிகளும்,பஞ்சாப் அணிக்கு 3 வெற்றிகளும் தேவை நல்ல ரன்ரேட்டும் அணிகளுக்கு அவசியம். இதனால் அடுத்துவரும் போட்டிகள் நாக்அவுட் சுற்று போன்று, ஒவ்வொரு அணிக்கும் வாழ்வா சாவா ஆட்டமாக இருக்கும்.

நம்பர் ஒன் அணிக்கு புதிய சிக்கல்

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தாலும் முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றிருந்தால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருந்திருக்கும். தற்போது குஜராத் அணியின் நிகர ரன்ரேட் 0.951 என்ற ரீதியில் இருந்த நிலையில் இந்த தோல்வியால் 0.762 ஆகக் குறைந்துவிட்டது.

ஆதலால், 16 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்களில் நுழைவதற்கான தகுதியைப் பெற்றாலும், அடுத்துவரும் 2 போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களில் இடம் பெறுவதை உறுதி செய்யும்.

https://www.bbc.com/tamil/articles/c3g9z1dplv0o

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றி சாதனை நாயகனானார் யுஸ்வேந்த்ர சஹால்

Published By: NANTHINI

13 MAY, 2023 | 10:34 AM
image

 

(என்.வீ.ஏ.)

இண்டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர் யுஸ்வேந்த்ர சஹால் படைத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 187ஆக உயர்த்தி ஐபிஎல் பந்துவீச்சில் புதிய சரித்திர நாயகனாக தன்னை பதித்துக்கொண்டார்.

2013இல் மும்பை இண்டியன்ஸ் அணியில் அறிமுகமாகி பின்னர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய யுஸ்வேந்த்ர சஹால் தற்போது ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இடம்பெறுகிறார்.

இதுவரை 143 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சஹால், மொத்தமாக 187 விக்கெட்களைக் கைப்பற்றி ட்வேன் ப்ராவோவின் 184 விக்கெட்கள் என்ற சாதனையை முறியடித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 183 விக்கெட்களுடன் எதிர்கொண்ட யுஸ்வேந்த்ர சஹால், நிட்டிஷ் ராணா விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ப்ராவோவின் சாதனையை சமப்படுத்தினார். அதன் பின்னர் வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டை கைப்பற்றி ட்வென் ப்ராவோவின் 184 விக்கெட்கள் என்ற சாதனையை முறியடித்தார்.

21.27 என்ற பந்துவீச்சு சராசரியைக் கொண்டுள்ள சஹாலின் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களாகும். அவரது எக்கொனொமி ரேட் 7.63 ஆகும்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலில் 100 விக்கெட்களை வீழ்ந்தியவர் இலங்கையின் யோக்கர் மன்னன் லசித் மாலிங்க ஆவார். அத்துடன் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (70) இந்த மைல்கல்லை எட்டியவர் என்ற சாதனையை இன்னமும் மாலிங்க கொண்டுள்ளார். மொத்தமாக 170 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள மாலிங்க 2019இல் ஐபிஎல் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார்.

மும்பை இண்டியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக இருந்த மாலிங்க, இந்த வருடம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்றுநர் குழாத்தில் இடம்பெறுகிறார்.

அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் சஹாலைத் தொடர்ந்து ட்வேன் ப்ராவோ (183), பியூஸ் சௌலா (174), அமித் மிஷ்ரா (172), ரவிச்சந்திரன் அஷ்வின் (171), லசித் மாலிங்க (170) ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

https://www.virakesari.lk/article/155185

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் அணியாக டெல்லி அவுட்: பஞ்சாப் கிங்ஸ் வெற்றியால் கோலியின் ஆர்சிபி அணிக்கு நெருக்கடி

PBKS vs DC

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரப்சிம்ரன் சிங்கின் அபாரமான சதத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் டி20 தொடரில் இருந்து முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற 168 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்திருந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டும் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.

பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் தோல்வி

பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்சிம்ரன் சிங்(103) தவிர வேறுஎந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. பிரப்சிம்ரனுக்கு அடுத்ததாக அதிகபட்ச ஸ்கோர் சாம் கரன் அடித்த 20 ரன்களும், உதிரிகளாக கிடைத்த 13 ரன்களும்தான்.

தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் இசாந்த் ஷர்மா பவர்ப்ளே ஓவருக்குள் தவண்(7), லிவிங்ஸ்டோன்(4) என இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடியில் தள்ளினார். சுழற்பந்துவீச்சு கொண்டுவந்தவுடன் அக்சர் படேல் பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மா(5) ஆட்டமிழந்தார். பவர் ப்ளே ஓவரில் பஞ்சாப் அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு சாம்கரன், பிரப்சிம்ரன் நிதானமாக ஆடி அணியை மீட்டனர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்ததால், சாம் கரன் ஷாட்களை ஆட சிரமப்பட்டார். ஆனால், பிரப்சிம்ரன் சிங் அநாயசமாக ஷாட்களை ஆடி சிக்ஸர் , பவுண்டரிகளாக விளாசினார். டெல்லி மைதானத்தில் பலமுறை விளையாடிய அனுபவம் இருந்ததால், பிரப்சிம்ரனுக்கு எளிதாக இருந்தது. 42 பந்துகளில் பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார்.

PBKS vs DC

பட மூலாதாரம்,BCCI/IPL

டாப் கியரில் சிம்ரன்

சாம்கரன், பிரப்சிம்ரன் 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தநிலையில் பிரிந்தனர். சாம் கரன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹர்பீரித் பிரார்(2), ஷாருக்கான்(2) ரன்களில் வெளியேறினர். 42 ரன்களில் அரைசதம் அடித்த பிரப்சிம்ரன், அதன்பின் ஆட்டத்தை டாப்கியருக்கு மாற்றினார்.

அரைசதம் அடிக்கும்போது 3 சிக்ஸர், 3 பவுண்டரி சேர்த்திருந்த பிரப்சிம்ரன் அதன்பின் 3 சிக்ஸர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசி அடுத்த 19 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ஐபிஎல் தொடரில் பிரப்சிம்ரன் சிங் முதல் சதத்தை நிறைவு செய்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பாராட்டிய டெல்லி வீரர்கள்

பிரப்சிம்ரன் சதம் அடித்தவுடன் பேட்டை தூக்கி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை தெரிவிக்காமல், இரு கைகளையும் கூப்பி மைதானத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு நன்றி செலுத்தினார். அதன்பின்புதான் டக்அவுட்டிலும், ரசிகர்களுக்கும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிரப்சிம்ரன் சிங் சதம் அடித்தவுடன், எதிரணி என்றுகூட பாராமல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பல வீரர்கள் தாங்களாகவே முன்வந்து கைகுலுக்கி பாராட்டுகளைத் தெரிவித்துச் சென்றனர்.

பஞ்சாப் அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் பக்கம் சென்றுவிடும் என நினைத்த தருணத்தில் தனிஆளாக களத்தில் நின்று டெல்லி அணிக்கு சிம்மசொப்பனமாக பிரப்சிம்ரன் சிங் திகழ்ந்தார்.

PBKS vs DC

பட மூலாதாரம்,PBKS/IPL

ஆட்டநாயகன் பிரப்சிம்ரன் சிங்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் அடித்த அற்புதமான சதம், சுழற்பந்துவீச்சாளர்கள் ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோரின் பந்துவீச்சு முக்கியமானதாகும்.

ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சதம் அடித்து 103 ரன்களில் (65பந்துகள், 6 சிக்ஸர், 10பவுண்டரி) ஆட்டமிழந்த பிரப்சிம்ரன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

பஞ்சாப் அணியில் நேற்று மட்டும் பிரப்சிம்ரன் சிங்கைத் தவிர்த்து 8 பேட்ஸ்மேன்கள் பேட் செய்தனர். இதில் பிரப்சிம்ரன் மட்டும் 103 ரன்கள் சேர்த்தார், மற்ற 8 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 55 பந்துகளில் 51 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். தனிஒருவனாக களத்தில் போராடி சதம் அடித்த பிரப்சிம்ரன் ஆட்டமே பஞ்சாப் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

10-வது ஓவர் முடிவுவரை பிரப்சிம்ரன் சிங் 27 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார் ஆனால், 18-வது ஓவர்கள் முடிவில் 61 பந்துகளில் சதத்தை நிறைவு செய்துவிட்டார்.

PBKS vs DC

பட மூலாதாரம்,BCCI/IPL

பரிதாபத்தில் டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் நேற்று கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிட்டதால், அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இசாந்த் ஷர்மா, அக்சர் படேல் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை மற்ற பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தொடக்கத்திலேயே பஞ்சாப் அணியின் 3 விக்கெட்டுகளை இருவரும் வீழ்த்தி உதவிசெய்தனர், ஆனால் பிரப்சிம்ரன் சிங்கை ஆட்டமிழக்கச் செய்யும் அளவுக்கு மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துவீசவில்லை.

இவரை மட்டும் ஆட்டமிழக்க வைத்திருந்தால் ஆட்டம் டெல்லி அணியின் கையில் இருந்திருக்கும். தொடக்கத்தில் டெல்லிஅணியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டத்தை பிரப்சிம்ரன் பறித்துவிட்டார்.

டெல்லி அணியின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவரான வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார், நேற்று ஒரு ஓவர் மட்டுமே வீசி 3 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழத்தினார். முகேஷ் குமாருக்கு தொடர்ந்து ஓவர்களை வழங்கியிருக்கலாம், கலீல் அகமதுக்கும், மிட்ஷெல் மார்ஷுக்கும் ஓவர்களை வழங்கி வார்னர் தவறு செய்துவிட்டார்.

“கேட்ச் மிஸ்ஸிங், மேட்ச் மிஸ்ஸிங்” என்று கிரிக்கெட்டில் சொல்வதுண்டு, பிரப்சிம்ரன் சிங்கை ஆட்டமிழக்கச் செய்ய வந்த கேட்சை ரூசோ கோட்டை விட்டதற்கு மிகப்பெரிய விலையை டெல்லி அணி கொடுக்க நேர்ந்தது.

PBKS vs DC

பட மூலாதாரம்,BCCI/IPL

வார்னர் மட்டும் சிறப்பாக ஆடினால் போதுமா?

பேட்டிங்கில் வார்னர், சால்ட் மட்டுமே டெல்லி அணிக்கு நம்பிக்கையளித்தனர். டேவிட் வார்னர் மட்டும் எத்தனை போட்டிகளுக்கு தனி ஆளாக விளையாட முடியும். மற்ற வீரர்களின் பங்களிப்பும்தான் அணியின் வெற்றிக்கு உதவும். ஆனால், பெரும்பாலான போட்டிகளில் பேட்டிங்கில் மற்ற வீரர்களின் பங்களிப்பை தேட வேண்டியுள்ளது.

இந்த ஆட்டத்தில்கூட வார்னர், சால்ட் இருவரும் களத்தில் இருந்தவரை ரன்ரேட் வேகமாகச் சென்றது. ஸ்கோரை விரைவாக சேஸிங் செய்யலாம் என்ற ஆர்வத்தில் வார்னர் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார், சால்ட்டும் உதவியாக இருந்தார்.

இதனால் பஞ்சாப் அணியின் பக்கம் ஆட்டம் செல்லாமல் டெல்லி பக்கம் நகர்ந்தது. 5 ஓவர்களில் டெல்லி அணி 50ரன்களை எட்டியது, பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி டெல்லி அணி 65 ரன்கள் சேர்த்தது. வார்னர் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

PBKS vs DC

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆனால் பவர்ப்ளே முடிந்து ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹரை பந்துவீச தவண் அழைத்தபின் ஆட்டத்தில் திருப்பம் நிகழ்ந்தது. சால்ட் 21 ரன்னில் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், பிரார் வீசிய 7வது ஓவரில் மார்ஷ் 3ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரூஸோ(1), வார்னர்(54) என பிரார்வீசிய 9-வது ஓவரில் விக்கெட்டை இழந்தனர். அக்சர் படேல்(1), இம்பாக்ட் வீரர் மணிஷ் பாண்டே(0) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.

விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்திருந்த டெல்லி அணி அடுத்த 23 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிரவீண் துபை(16) ரன்னில் எல்லீஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். குல்தீப்(10), முகேஷ்(6) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணியின் வெற்றிக்கு வார்னர், சால்ட் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை, பின்வரிசையில் வந்த எந்த பேட்ஸ்மேன்களும் பயன்படுத்தவில்லை.

ஆடுகளமும் 2வது இன்னிங்ஸில் மாறத் தொடங்கி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. ராகுல் சாஹர், பிரார் பந்துகளை எதிர்கொள்ள டெல்லி பேட்ஸ்மேன்கள் கடும் சிரமப்பட்டனர். டெல்லி பேட்ஸ்மேன்களை வைத்து சாஹர், பிரார் படம் காட்டியதால் ரன்கள் வரவேயில்லை.

PBKS vs DC

பட மூலாதாரம்,BCCI/IPL

பிரார், சஹார் ஹீரோக்கள்

ஹர்பிரீத், சாஹர் இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் வரிசையை குலைத்தனர்.

இருவரும் சேர்ந்து 29 டாட் பந்துகளையும் வீசினர். அதாவது ஏறக்குறைய 5 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கவிடாமல் கட்டிப்போட்டனர். இருவரும் 8 ஓவர்கள் வீசியதில் 5 ஓவர்களில் ரன் ஏதும் வழங்கவில்லை.

"நீண்ட காலம் காத்திருநதேன்"

ஆட்டநாயகன் விருது வென்ற பிரப்சிம்ரன் சிங் கூறுகையில் “ நான் அதிகமாக எதையும் சிந்திக்கவில்லை. விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தவுடன், கடைசிவரை ஆட வேண்டும் என்று முடிவு செய்தேன். பஞ்சாப் அணியில் நீண்டகாலமாக இருக்கிறேன், மூத்த வீரர்களிடம் இருந்து அதிகமாகக் கற்றுக்கொண்டேன். என் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறேன். ஆடுகளத்தில் பந்து அதிகமாக டர்ன் ஆகியதால் ஷாட்களை அடிக்க சிரமமாக இருந்தது.

சாம் கரனுடன் பார்டனர்ஷிப் அமைக்க முயன்று அதன்பின் அடித்து ஆட நினைத்தேன். இந்த சதம் எனக்கு முக்கியமானது. இந்த ஆட்டத்துக்காகவே நீண்ட நாட்கள் காத்திருந்தேன். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இது எனக்கு அங்கீகாரம்” எனத் தெரிவித்தார்.

"வாய்ப்பைத் தவறவிட்டு விட்டோம்"

தோல்வி குறித்து டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் வார்னர் கூறுகையில் “ ஆடுகளத்தில் பந்துகள் அதிகமாக டர்ன் ஆகின, நல்ல ஸ்கோருக்குள் பஞ்சாபை சுருட்டினோம். எங்களைவிட சிறப்பாகவே பந்துவீசினர். பிரப்சிம்ரன் சிறப்பாக பேட் செய்தார். அவரை ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட்டோம்.

நன்றாகத் தொடங்கினோம், ஆனால், 30 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்தோம். பேட்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டது வேதனையாக இருக்கிறது.ஏராளமான மாற்றங்களைச் செய்து நல்ல கூட்டணியை உருவாக்கியும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தோம்” எனத் தெரிவித்தார்

ப்ளே ஆப் ரேஸில் பரபரப்பு

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் நிகர ரன்ரேட் அடிப்படையில் மைனசில் 0.268ல் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 12 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் வலுவாக வைத்துள்ளது. ஆனால், ஆர்சிபி அணி, நிகர ரன்ரேட்டில் பஞ்சாப் அணியைவிட குறைவாக இருக்கிறது.

இன்று நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இ்ந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றால், 14 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டில் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தும், ஆர்சிபி வெல்லும்பட்சத்தில் ராஜஸ்தான் ப்ளே ஆப் கனவுக்கு ஆபத்து வரலாம்.

அதேநேரம், பஞ்சாப் அணியும் அடுத்துவரும் இரு ஆட்டங்களையும் வென்று 16 புள்ளிகளுடன், நல்ல ரன்ரேட்டில் இருந்தால்தான் ப்ளே ஆப் வாய்ப்பு குறித்தவாய்ப்பு பிரகாசமாகும். ஆதலால் பஞ்சாப் அணிக்கு அடுத்துவரும் இரு ஆட்டங்களும் முக்கியமானவை.

கொல்கத்தா அணியும், சிஎஸ்கே அணியும் இன்று இரவு மோதுகின்றன. இந்த ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 13-வது போட்டியாகும். 10 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா இதில் தோற்கும் பட்சத்தில் தொடரிலிருந்து வெளியேறும். சிஎஸ்கே அணி 17 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யும். ஆதலால் இன்று நடக்கும் இரு ஆட்டங்களும் மிகுந்த முக்கியமானவை.

இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் போட்டியில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்துவரும் 2 ஆட்டங்களில் வென்றால்கூட 12 புள்ளிகள்தான் பெறும், இது ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல உதவாது என்பதால், வெளியேறியது.

அதேசமயம், இனிவரும் 2 ஆட்டங்களையும் தோற்றாலும் வென்றாலும் கவலையில்லை என்ற ரீதியில் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி டெல்லி அணி விளையாடலாம். ஒருவேளை அடுத்து இரு ஆட்டங்களில் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகளை டெல்லி அணி வென்றால் ப்ளே ஆப் ரேஸை இன்னும் பரபரப்பாக்கும்.

https://www.virakesari.lk/article/155218

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிஎஸ்கே, ஆர்.சி.பி., சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு பிளேஆஃப் வாய்ப்பு எப்படி?

ஐபிஎல் டி20 கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 12 மே 2023
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(ஐ.பி.எல். தொடரில் இருந்து முதல் அணியாக டெல்லியை பஞ்சாப் கிங்ஸ் வெளியேற்றிய போட்டிக்குப் பிறகு இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது)

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமுள்ள 10 அணிகளுக்குமே கோப்பையை வெல்லும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. சில அணிகளுக்கு இந்த வாய்ப்பு மிக நெருக்கமாகவும் பல அணிகளுக்கு சற்றுத் தொலைவிலும், இன்னும் சில அணிகளுக்கு வெகு தொலைவிலும் கோப்பை இருக்கிறது. அவ்வளவுதான்.

ஆனால் யாருக்கும் கோப்பையை வெல்வதற்கான வழி முற்றிலுமாக அடைக்கப்படவில்லை.

இது ஏன்? இப்போது அணிகளின் நிலை என்ன? உச்சத்தில் இருக்கும் குஜராத்தும் சென்னையும் இனி கவலைப்பட வேண்டியதில்லையா? முதலிட்த்தில் இருக்கும் குஜராத்தை வீழ்த்தியிருப்பதன் மூலம் மும்பைக்கான வாய்ப்பு எப்படி அதிகரித்திருக்கிறது என்பன போன்ற தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

தற்போதைய நிலை என்ன?

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 4-ஆவது இடத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் உள்ளன. ராஜஸ்தான் 5-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

6 முதல் 8ம் இடம் வரையிலான இடங்களில் ஆர்சிபி அணி(6-வது இடம்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(7வது இடம்), பஞ்சாப் கிங்ஸ்(8வது இடம்) ஆகிய அணிகள் 10 புள்ளிகளுடன் உள்ளன. இதில் நிகர ரன்ரேட் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

9-வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், 10வது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் உள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆப் வாய்ப்பு என்ன? (12 போட்டிகள், 16புள்ளிகள்)

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று(12ம்தேதி) நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றிருந்தால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருந்திருக்கும். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ப்ளே ஆப் தகுதிக்கு மும்பை அணி பிரேக் போட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி, இதுவரை 12 போட்டிகளில், 4 தோல்விகள், 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்களில் நுழைவதற்கான தகுதியைப் பெற்றாலும், அடுத்துவரும் 2 போட்டியில் கட்டாய வெற்றி, ப்ளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களில் இடம் பெறுவதை உறுதி செய்யும்.

தற்போது குஜராத் அணியின் நிகர ரன்ரேட் 0.951 என்ற ரீதியில் இருந்த நிலையில் இந்த தோல்வியால் 0.762 ஆகக் குறைந்துள்ளது. அடுத்துவரும் 2 ஆட்டங்களிலும் குஜராத் அணி மாபெரும் வெற்றி பெற்றால் 20 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி இடையூறு இல்லாமல் ப்ளே ஆப்பில் முதலிடத்தைப் பிடிக்கும்.

கடந்த மாதம் 25ம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 55 ரன்களில் குஜராத் அணி தோற்கடித்தது. அதற்கு பதிலடியாக இன்று நடந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மும்பை அணி வென்றுள்ளது.

வரும் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்முறையாக எதிர்கொள்கிறது.

சன்ரைசர்ஸ் அணி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பதாலும், பந்துவீச்சு பலம், இளம் பேட்டிங் வரிசை, வெற்ற பெற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம் ஆகியவை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பிரச்சினைகளைத் தரலாம். அதேநேரம், சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுவது சாதகம் என்றாலும், குஜராத் அணி தோற்ற 3 ஆட்டங்கள் சொந்த மண்ணில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடைசி லீக் ஆட்டம் மே 21ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக முதல்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.

ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல ஆர்சிபி கடும் சவாலை வெளிப்படுத்தும் என்பதால், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிக்காக கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியதிருக்கும். மேலும், பெங்களூருவில் விளையாடுவது, ரசிகர்களின் ஆதரவு, மைதானத்தின் தன்மை ஆகியவை ஆர்சிபி அணிக்கு சாதகமான அம்சம்.

ப்ளே ஆஃப் சுற்றில் பாதுகாப்பான இடத்தைத் தக்கவைக்க நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்துவரும் 2 ஆட்டங்களில் வெல்வது அவசியம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் வாய்ப்பு என்ன? (12 ஆட்டங்கள், 15 புள்ளிகள்)

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி வழங்கப்பட்டதால் 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து 7 வெற்றிகளுடன் சிஎஸ்கே அணி கம்பீரமாக ப்ளே ஆஃப் சுற்றை எதிர்நோக்கியுள்ளது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் 0.493 என்று ப்ளசில்தான் இருக்கிறது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நேற்றைய வெற்றியால் அதன் நிகர ரன்ரேட் சிஎஸ்கேவைவிட அதிகமாக, 0.633 என இருக்கிறது.

இன்னும் சிஎஸ்கே அணிக்கு 2 போட்டிகள் மீதம் உள்ளன. இந்த இரு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி அபாரமாக வெல்லும் பட்சத்தில் ப்ளே ஆஃப் சுற்றில் 19 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களுக்குச் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

அதேசமயம், சிஎஸ்கே அணி, ஒரு போட்டியில் வென்று, ஒன்றில் தோற்றால் 17 புள்ளிகள் மட்டுமே பெறும்.

சிஎஸ்கே அணி அடுத்ததாக வரும் 14ம் தேதி சென்னையில் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய சிஎஸ்கே அணிக்கு மிக முக்கியம்.

ஈடன் கார்டனில் கடந்த மாதம் 23ம் தேதி நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை புரட்டி எடுத்தது சிஎஸ்கே. ரஹானே,கான்வே, துபே, கெய்க்வாட் மறக்க முடியாத இன்னிங்ஸ் ஆடினர். சிஎஸ்கே அணியின் பேட்டிங் சொந்த மண்ணில் கொல்கத்தாவுக்கு மிரட்டலாக இருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏற்கெனவே ராஜஸ்தானிடம் தோற்றுள்ள நிலையில் ப்ளே ஆஃப் வாய்ப்பை நோக்கி நகர்வதற்கு இந்த ஆட்டம் முக்கியம். 12 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆட்டத்தில், அடுத்துவரும் ஆட்டத்திலும் வெல்லும்பட்சத்தில் ப்ளேஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ளும்.

வரும் 20ம் தேதி டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது. சென்னையில் வைத்து டெல்லி கேபிடல்ஸை துவைத்து எடுத்த சிஎஸ்கே அணி, டெல்லியில் அந்த அணியை எதிர்கொள்கிறது.

8 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குசெல்லுமா என்பது கடினம்தான். சிஎஸ்கே அணி இரு லீக் போட்டிகளிலும் வென்றால், 19 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் அல்லது 2வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி தனது அடுத்துவரும் அனைத்து ஆட்டங்களில் வெல்லும்பட்சத்தில் 22 புள்ளிகளுடன் முதலிடத்திலும். 2 ஆட்டங்களில் வென்றால் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். ஒருவேளை குஜராத் டைட்டன்ஸ் ஒரு ஆட்டத்தில் வென்றால் 18 புள்ளிகளுடன் இருக்கும், சிஎஸ்கே அணியும் தனது அடுத்த 2 ஆட்டங்களில் வென்றால் 19 புள்ளிகளுடன் முதலாவது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பிளே ஆப் வாய்ப்பு என்ன? (12 போட்டிகள், 13 புள்ளிகள்)

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஹைதராபாத்தில் இன்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வென்றதன் மூலம், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணியை 5-வது இடத்துக்கு தள்ளியுள்ளது.

4-வது இடத்தில் லக்னெள அணி இருந்தாலும், அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.309 என்று பிளஸில் இருப்பது அந்த அணிக்கு சாதகமானது. ஆனால், 14 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை அணி நிகர ரன்ரேட் இன்னும் மைனசில் தொடர்கிறது.

லக்னெள அணிக்கு வரும் 16ம் தேதி லக்னெளவில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டம் முக்கியமானது. இரு அணிகளும் முதல்முறையாக மோதுகின்றன. 14 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை அணியும், 13 புள்ளிகளுடன் இருக்கும் லக்னெள அணியும் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய போராடும். இந்த போட்டியில் தோற்கும் அணி, ப்ளே ஆப் சுற்று வாய்ப்பு சிக்கலாகிவிடும்.

மும்பை அணி தோற்றால் 14 புள்ளிகளுடன் இருக்கும், தனது கடைசி லீக் ஆட்டத்தில் வென்று 16 புள்ளிகள் வரை பெறலாம். ஆனால், நிகர ரன்ரேட் அந்த அணிக்கு சிக்கலாக இருக்கிறது.

அதேசமயம், லக்னெள அணி வென்றால், 15 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்து மும்பையை 4வது இடத்துக்கு தள்ளிவிடும். கடைசி லீக் ஆட்டத்தில் லக்னெள வென்றால், 17 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யும்.

ப்ளே ஆப் ரேஸில் லக்னெள இணைந்துவிட்டதால், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு தலைவலியாக மாறிவிட்டது.

ப்ளே ஆப் சுற்றில் 4வது இடத்தைப் பிடிக்க, ராஜஸ்தான் அணி அடுத்துவரும் இரு போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டைப் பொறுத்தவரை குஜராத்துக்கு அடுத்தார்போல் வலுவாக இருக்கிறது.

ராஜஸ்தான் அணி 16 புள்ளிகள் பெற்றாலும், கடைசி லீக்வரை காத்திருக்க வேண்டும்.

லக்னெள அணி அடுத்து ஒருபோட்டியில் தோற்றால், கடைசி லீக்கில் வென்றால் 15 புள்ளிகள் பெறும். அந்த நிலை வரும்போது, ராஜஸ்தான் 16 புள்ளிகளுடன் இருந்தால், ப்ளே ஆப்சுற்றுக்குள் நுழைந்துவிடும்.

அதேநேரம், சிஎஸ்கே அணி அடுத்துவரும் 2 ஆட்டங்களிலும் வென்றால்தான் 19 புள்ளிகளுடன் டாப்-2 இடங்களில் ஒன்றைப் பெற முடியும். ஒருவேளை சிஎஸ்கே ஒரு போட்டியில் தோற்று, மற்றொரு போட்டியில் வென்றால் 17 புள்ளிகள் பெறும். மும்பை அணி தனது அடுத்த 2 போட்டிகளையும் வென்றால், 18 புள்ளிகளுடன் டாப்-2 இடத்துக்கு நகர்ந்துவிடும்.

சிஎஸ்கே 3வது இடத்துக்கு தள்ளப்படலாம். சிஎஸ்கே 17 புள்ளிகளுடன் இருக்கும்பட்சத்தில், லக்னெள அணியும் அடுத்த இரு ஆட்டங்களில் வென்றால் 17 புள்ளிகளுடன் சிஎஸ்கேவுக்கு நெருக்கடி தரும் சூழலும் உருவாகலாம். ஆதலால், சிஎஸ்கே அணி அடுத்த 2 ஆட்டங்களிலும் வெல்வது அவசியம்.

வரும் 20ம் தேதி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கும் கடைசி லீக்கில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் லக்னெள முதல்முறையாக மோதுகிறது. இந்தப் போட்டியில் வென்றால்தான் 17 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் பாதுகாப்பாக நுழைய முடியும்.

இரு ஆட்டங்களில் வென்று 15 புள்ளிகளில் இருந்தால்கூட லக்னெள அணிக்கு பாதுகாப்பானதாக இருக்காது. ஆதலால் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் லக்னெள அணி வென்றால் 17 புள்ளிகளாக உயரும். ஆதலால் லக்னெள அடுத்துவரும் 2 ஆட்டங்களிலும் வெல்வது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பாதுகாப்பாக நுழைய வைக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (12 ஆட்டங்கள், 12 புள்ளிகள்)

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு சரிந்துள்ளது.

லக்னெள அணி நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை வென்றதன் மூலம் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி டாப்-4 இடத்துக்குள் முன்னேறியுள்ளது.

ஆனால், நிகர ரன்ரேட்டில் குஜராத்துக்கு அடுத்தபடியாக 0.633 என பிளஸில் இருபது ராஜஸ்தான் அணிக்கு சாதகமான அம்சம். ஆனால், புள்ளிக்கணக்கில் 12 புள்ளிகளுடன் இருப்பது பின்னடைவாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று ஜெய்பூரில் நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி அணியுடன் மோதுகிறது. இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் வாழ்வா, சாவா போன்றதாகும். இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி ப்ளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைப்பது கடினமாகும். ஆதலால் இரு அணிகளுக்கும் இது நாக்அவுட் சுற்றுபோல் இருக்கும்.

12 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் வென்றால், 14 புள்ளிகளுடன் ரன்ரைட்டையும் உயர்த்தி ப்ளே ஆப் சுற்றை பிரகாசப்படுத்தும்.

19ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப்பை வென்றால் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் மிகப்பெரிய ரன்ரேட்டில் இருப்பதால் ப்ளே ஆப் வாய்ப்புக் கிடைக்கலாம்.

மும்பை அணி அடுத்துவரும் 2 ஆட்டங்களில் ஒன்றில்வென்று ஒன்றில் தோற்று 16 புள்ளிகள் பெற்றால் ரன்ரேட் இல்லாததால் பின்னடைவைச் சந்திக்கலாம்.

ஒருவேளை ராஜஸ்தான் அணி இன்று தோல்வி அடைந்து கடைசி லீக்கில் வென்றால், 14 புள்ளிகளுடன் இருக்கும், ப்ளே ஆப் சுற்று வாய்ப்புக்காக மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளை எதிர்பார்த்திருக்க வேண்டியதிருக்கும்.

சிஎஸ்கே, லக்னெள, குஜராத் அணிகள் 16 புள்ளிகளுக்கு மேல் பெறும்போது, முதல் 3 இடங்களில் வந்தால், மும்பை 16 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடனும் இருந்தால், நிகர ரன் ரேட்டில் ராஜஸ்தான் 4வது இடத்தை பிடிக்கக்கூடும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(11 ஆட்டங்கள், 10 புள்ளிகள்)

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் 5 வெற்றி, 6 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல ஆர்சிபி அணிக்கு அடுத்துவரும் 3 ஆட்டங்களும் முக்கியமானது. குறிப்பாக இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியம்.

ஆர்சிபி ரன்ரேட் தற்போது மைனஸில் இருப்பதால், அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் எதிரணியை குறைந்த ஓவர்களில் சுருட்டுதல், குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்தல் மூலம் ரன்ரேட்டை உயர்த்தலாம். இது ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்புக்கு அருகே கொண்டு செல்லும்.

ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடம் ஆர்சிபி தோற்றால், ஏறக்குறைய ப்ளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிவிடும்.

அடுத்துவரும் 2 ஆட்டங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள்தான் பெறும். ரன்ரேட்டை உயர்வாக வைத்திருந்தாலும், மற்ற அணிகளின் முடிவைப் பொறுத்துதான் ஆர்சிபிக்கு ப்ளே ஆப் சுற்றுவாய்ப்புக் கிடைக்கும். ஆதலால், இன்றைய ஆட்டம் ராஜஸ்தான், ஆர்சிபிக்கு வாழ்வா சாவா ஆட்டமாகும்.

சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் தவிர்த்து குறைந்தபட்சம் லக்னெள அல்லது மும்பை அணி 14 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெறக்கூடும். அப்போது ராஜஸ்தானும் 14 புள்ளிகள் பெற்றிருந்தால், நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானுக்கு வாய்ப்புசென்றுவிடும்.

மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் வாய்ப்பு என்ன? (12 ஆட்டங்கள், 14 புள்ளிகள்)

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்றதன் மூலம் 12 ஆட்டங்களில் 7 வெற்றிகள், 5 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மும்பை அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன, இதில் ஒரு ஆட்டம் மும்பையில் நடப்பது அந்த அணிக்கு சாதகமானது. இருப்பினும் நிகர ரன்ரேட் இன்னும் 0.117 என மைனசில்தான் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 120 ரன்களுக்குள் சுருட்டி, மாபெரும் வெற்றியைப் பெற மும்பை இந்தியன்ஸ் முயற்சி செய்தது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரஷித் கான் கேமியோ 78 ரன்கள் சேர்த்து மும்பை அணியின் கனவைக் கலைத்தார், இதனால் வெறும் 27 ரன்னில் மட்டுமே மும்பை அணி வென்றது. இதனால் ப்ளசில் வர வேண்டிய மும்பை ரன்ரேட், மைனஸைவிட்டு நகரவில்லை.

மும்பை அணி வென்றதன் மூலம், ராஜஸ்தான், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் , ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட மும்பை அணி 16 புள்ளிகளை எட்டிவிடும். ஆனால், மும்பை அணிக்கு ஈடாக புள்ளிகளைப் பெற மற்ற அணிகளான ராஜஸ்தான் அடுத்த 2 போட்டிகளை வெல்லவேண்டும், ஆர்சிபிக்கு 3 வெற்றியும், லக்னோவுக்கு 3 வெற்றிகளும்,பஞ்சாப் அணிக்கு 3 வெற்றிகளும் தேவை. இதனால் அடுத்துவரும் போட்டிகள் நாக்அவுட் சுற்று போன்றுதான் இருக்கும். ஒவ்வொரு அணிக்கும் வாழ்வா சாவா ஆட்டமாக இருக்கும்.

வரும் 16ம் தேதி லக்னெளவில் நடக்கும் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் லக்னெள அணி வென்றால்தான் ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்த முடியும், இல்லாவிட்டால், அடுத்த 2 ஆட்டங்களில் வென்றால்கூட லக்னெள அணி 15 புள்ளிகள் மட்டுமே பெறும். ஆனால், மும்பை அணி அடுத்த ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட 16 புள்ளிகளுடன் பாதுகாப்பாக இருக்கும்.

21-ம் தேதி மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மும்பை தனது கடைசி லீக்கில் சந்திக்கிறது. மும்பை அணி தனக்கிருக்கும் அடுத்த 2 ஆட்டங்களில் ஒரு போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வென்றாலே ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்ய வாய்ப்புள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்(12 ஆட்டங்கள், 12 புள்ளிகள்)

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டிகளில் 12 புள்ளிகளைப் பெற்று 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 12 புள்ளிகளுடன் இருந்தாலும் நிகர ரன்ரேட் மைனஸில் 0.268 ஆக இருப்பது பின்னடைவுதான்.

பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளன. இந்த 2 ஆட்டங்களிலும் ரன்ரேட்டை உயர்த்தும் விதத்தில் வெற்றி பெற்றால்தான் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

பஞ்சாப் அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களையும் தர்மசலா மைதானத்தில் விளையாடுகிறது. இந்த மைதானத்தில் முதல்முறையாக ஐபிஎல் ஆட்டம் நடக்கிறது, இந்த மைதானத்தைப் பற்றி அந்த அணிக்கேத் தெரியாது.

வலுவான பேட்டிங் வரிசை கொண்ட பஞ்சாப் அணி 17ம் தேதி தர்மசலாவில் நடக்கும் ஆட்டத்தில் டெல்லி அணியை மீண்டும் எதிர்கொள்கிறது. 19ம் தேதி தர்மசலாவில் நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.

இந்த 2 ஆட்டங்களையும் வென்றால்கூட பஞ்சாப் அணி 16 புள்ளிகள்தான் எடுத்திருக்கும், ப்ளே ஆப்சுற்றில் 4வது இடத்தைப் பிடிக்க ரன்ரேட்டும் உயர்வாக வைத்திருப்பதும் அவசியம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆப் வாய்ப்பு என்ன? (11 போட்டிகள், 10 புள்ளிகள்)

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலின் காட்டடியால், ராஜஸ்தானிடம் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. இதனால், கொல்கத்தா அடுத்த அடுத்த இரு ஆட்டங்களில் வென்றாலும் 14 புள்ளிகள்தான் பெற முடியும். ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு மறுக்கப்படாது என்றாலும், மற்ற 8 அணிகளின் தோல்விகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் ப்ளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

கொல்கத்தா அணி வரும் 14ம் தேதி சென்னையில் சிஎஸ்கே அணியையும், 20ம் தேதி கொல்கத்தாவில் லக்னெள அணியையும் எதிர்கொள்கிறது. இதில் சென்னையில் சிஎஸ்கே அணியை வீழ்த்துவது சாதாரணம் அல்ல.

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய சிஎஸ்கே அணிக்கும் வெற்றி அவசியம் என்பதால், கடுமையாகப் போராடும். ஆதலால் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டம் கொல்கத்தாவுக்கு வாழ்வா சாவா ஆட்டமாகத்தான் இருக்கும். ஒருவேளை இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோற்றால், ப்ளே ஆஃப் கதவுகள் அடைக்கப்படும்.

வரும் 20ம்தேதி கொல்கத்தா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னெள அணியை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணியை ஒருவேளை கொல்கத்தா அணி வென்றிருந்தால், லக்னெள அணியையும் வென்று ப்ளே ஆப் கனவை பாதுகாக்கலாம். ஒருவேளை சிஎஸ்கேயிடம் கொல்கத்தா அணி தோற்று, லக்னெள அணியை வென்றாலும் எந்த பயனும் இல்லை. அது லக்னெள அணி ப்ளே ஆஃப் செல்வதை கீழே இழுத்துவிடும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆப் வாய்ப்பு என்ன? (11 போட்டிகள், 8 புள்ளிகள்)

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று(13ம்தேதி) நடந்த லீக் ஆட்டத்தில் லக்னெள அணியிடம் தோல்வி அடைந்ததன் மூலம், 11 போட்டிகளில் 4 வெற்றி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் இருந்தாலும், அந்த அணிக்கான ப்ளே ஆப் வாய்ப்பு என்பது பேப்பரில்தான் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணி அடுத்த 3 போட்டிகளில் வென்றாலும் 14 புள்ளிகள்தான் பெற முடியும், ப்ளே வாய்ப்புக்காக மற்ற 6 அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

வரும் 18ம் தேதி ஆர்சிபி அணியையும் சன்ரைசர்ஸ் அணி சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது. மற்ற இரு போட்டிகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மும்பையிலும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்திலும் விளையாடுகிறது.

மும்பை அணிக்கு எதிராகவும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகவும் அவர்களின் சொந்த மைதானத்தில் விளையாடி வெல்வது என்பது சன்ரைசர்ஸ் அணிக்கு சவாலானது.

டெல்லி கேபிடல்ஸ் (12 போட்டிகள், 8 புள்ளிகள்)

ஐபிஎல் பிளேஆப்

பட மூலாதாரம்,BCCI/IPL

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கான போட்டியில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. இதுவரை 12 போட்டிகளில் மோதி, 4 வெற்றி, 7 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இன்னும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 2 ஆட்டங்கள் மீதமுள்ளன.

இதில் இரு ஆட்டங்களில் டெல்லி அணி வென்றாலும் 12 புள்ளிகள்தான் கிடைக்கும். இந்த புள்ளிகள் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல உதவாது.

17ம் தேதி தர்மசலாவில் நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை மீண்டும் டெல்லி எதிர்கொள்கிறது.

20ம் தேதி டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை டெல்லி கேபிடல்ஸ் எதிர்கொள்கிறது. இந்த இரு ஆட்டங்களிலும் டெல்லி அணி ஒருவேளை அதிசயம் நிகழ்த்தி வென்றால், ப்ளே ஆப் போட்டியில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம்.

https://www.bbc.com/tamil/articles/cll107l4yqpo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரசிகர்களின் குழப்பத்திற்கு மத்தியில் மான்காட், பூரண் பிரகாசிக்க லக்னோ வெற்றியீட்டியது

Published By: VISHNU

14 MAY, 2023 | 05:36 PM
image

(நெவில் அன்தனி)

ஹைதராபாத் ரஜீவ் காந்தி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (13) நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது இரசிகளின் கட்டுமீறிய செயல்களுக்கு மத்தியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட்களால் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ்  வெற்றிகொண்டது.

மார்க்ஸ் ஸ்டொய்னிஸ், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவருடன் ப்ரேராக் மான்காட் ஏற்படுத்திய இரண்டு முக்கிய இணைப்பாட்டங்கள் லக்னோவின் வெற்றியை இலகுபடுத்தியது.

இந்த வெற்றியுடன் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் தனது ப்ளே ஓவ் வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளதுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ப்ளே ஓவ் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 183 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

லக்னோ 8.2 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்து சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், ப்ரேராக் மான்காட் 2 முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி லக்னோவின் வெற்றியை இலகுவாக்கினார்.

மார்க்ஸ் ஸ்டொய்னிஸுடன் 3ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்த மான்காட், தொடர்ந்து நிக்கலஸ் பூரணுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து 4 பந்துகள் மீதமிருக்க அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 25 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்று ஒட்ட வேகத்தை சற்று அதிகரிக்கச் செய்தார்.

மான்காட் 45 பந்துகளில் 64 ஓட்டங்களுடனும் நிக்கலஸ் பூரண் 13 பந்துகளில் 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.

சுமாரான வேகத்தில் ஓட்டங்களைப் பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தென் ஆபிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் அப்துல் சாமத்துடன் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டார்.

அப்துல் சாமத் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட ஆரம்ப வீரர் அன்மொன்ப்ரீத் சிங் 36 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அணித் தலைவர் க்ருணல் பாண்டியா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப்துல் சாமத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது 19ஆவது ஓவரின் 3ஆவது பந்தை ஆவேஷ் கான் இடுப்பளவு உயரத்திற்கு வீசினார். இதனை கள மத்தியஸ்தர் நோபோல் என அழைத்தார்.

மத்தியஸ்தரின் அந்தத் தீர்ப்பை மீயாய்வு செய்யுமாறு லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் கோரியது.

இதனை அடுத்து அதனை மீளாய்வு செய்த தொலைக்காட்சி மத்தியஸ்தர் அந்த பந்து விதிகளுக்கு உட்பட்டது என கள மத்திஸ்தருக்கு அறிவிக்குமாறு பணித்தார்.

மத்தியஸ்தரின் தீர்ப்பு மாற்றப்பட்டு  நோ - போல் வாபஸ் பெறப்பட்டதுடன் ப்றீ ஹிட்டும் இல்லாமல் போனது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இரசிகர்கள் சிலர் குழப்பமடைந்தனர்.

இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் தொடர்ந்தது. சற்று நேரத்தில் கிளாசன் 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

நோ - போல் முடிவு மாற்றப்பட்டதை டொம் மூடி உள்ளிட்ட நிபுணர்கள் கடுமையாக விமர்சித்தனர். தொலைக்காட்சி மத்தியஸ்தர் தவறான முடிவை எடுக்க ஏன் இவ்வளவு நேரம் எடுக்க வேண்டும்?' என்று அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

'நேர்மையாகக் கூறுவதென்றால், இரசிகர்களின் செயலால்

ஏமாற்றம் அடைந்தேன. அது விரும்பத்தக்கதல்ல' என்று போட்டி முடிவில் கிளாசென் கூறினார்.

'போட்டியில் இருந்த உத்வேகத்தை அது குறைத்தது. அத்துடன் மத்தியஸ்தமும் சிறப்பாக அமையவில்லை. ஆனால் விடயங்கனை சொந்த கைகளில் எடுக்க முடியாது' எனவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியில் ஐபிஎல் ஒழுக்க விதிகளை மீறினார் என்ற காரணத்திற்காக க்ளேசனின் போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/155265

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சண்டை செய்யாமல் சரணடைந்த ராஜஸ்தான்: இமாலய வெற்றியால் ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்த ஆர்சிபி

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 14 மே 2023

ஐபிஎல் டி20 வரலாற்றிலேயே இதுபோன்ற மோசமான ஆட்டத்தைக் காண்பது மிகவும் அரிது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்றைய மட்டமான பேட்டிங், அதிர்ச்சியளிக்கும் தோல்வி அந்த அணியின் ப்ளேஆஃப் கனவு ஏறக்குறைய முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது.

அதேநேரம், ஆர்சிபி அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றில் தனது இருப்பை உயிர்ப்புடன் ஆர்சிபி வைத்துள்ளது.

பர்னல் ஆட்டநாயகன்

ஜெய்ப்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 60வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்திருந்தது.

172 ரன்களை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வது இது 10-வது முறை. அந்த வகையில் ஆர்சிபி மைல்கல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

 

ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் பர்னல், சிராஜ், கரன் சர்மா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 5 ஓவர்களுக்குள் மீதம் இருந்த 5 விக்கெட்டுகளையும் சீட்டுக்கட்டு சரிவதுபோல் இழந்தது.

ஜோஸ் ஹேசல்வுட்டுக்கு பதிலாக இன்று பர்னல் சேர்க்கப்பட்டிருந்தார். அற்புதமாகப் பந்துவீசிய பர்னல், ராஜஸ்தானின் பட்லர், சாம்சன், ரூட் ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

3 ஓவர்கள் வீசி 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்து பர்னல் ஆட்டநாயகன் விருது பெற்றார். சுழற்பந்துவீச்சாளர்கள் பிரேஸ்வெல், கரண் சர்மா தலா 2விக்கெட் ,மேக்ஸ்வெல் ஒருவிக்கெட் என சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

இதுதான் அதிகபட்சமாக!

ராஜஸ்தான் அணியில் ஹெட்மயர்(35), ஜோ ரூட்(10) ரன்கள்தான் அதிகபட்சமாகும். மற்ற முக்கிய வீரர்களான ஜெய்ஸ்வால், சாம்சன், பட்லர், படிக்கல், ஜூரேல், அஸ்வின் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

ராஜஸ்தான் அணியில் 4 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர், 4 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.

கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 150 ரன்களை 12 ஓவர்களில் சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் தலைகீழாக 59 ரன்களில் சுருண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.

3வது மோசமான ஸ்கோர்

ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்களில் ஆர்சிபி அணி சுருண்டதே மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர். அதன்பின் 2009இல் ஆர்சிபிக்கு எதிராக 58 ரன்னில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுருண்டுள்ளது.

இப்போது 2023இல் ஆர்சிபிக்கு எதிராக 59 ரன்னில் ராஜஸ்தான் ராயல்ஸ் மோசமான ஸ்கோர் எடுத்து தோல்வி அடைந்துள்ளது.

ஆர்சிபிக்கு எதிராக மட்டும் இரு மோசமான ஸ்கோர்களை எடுத்து ராஜஸ்தான் தோற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் ஒரு அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர் ராஜஸ்தான் சேர்த்த 59 ரன்களாகும்.

11வது ஓவரில் 2 விக்கெட், 2வது ஓவரில் 2 விக்கெட் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் களத்துக்கு வருவதும் பெவிலியன் செல்வதுமாக இருந்தனர். ஹெட்மயர், ஜோ ரூட் இருவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் களத்தில் குறைந்தபட்சம் 5 நிமிடங்கள்கூட பேட் செய்யவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபி-க்கு வாய்ப்பு

ஆர்சிபி அணி இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது, நிகர ரன்ரேட்டும் மைனஸில் இருந்து ப்ளசுக்கு மாறிவிட்டது.

ஆர்சிபி அணி இந்த சீசனில் பகலில் ஆடிய 4 போட்டிகளிலும் வென்றுள்ளது.

இரவில் நடந்த 8 லீக் ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் மட்டுமே வென்று, 6 போட்டிகளில் தோற்றுள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி அணி கடைசியாக வெளி மாநிலங்களில் நடந்த 4 ஆட்டங்களில் 3 போட்டியில் தோற்ற நிலையில், இன்றைய வெற்றி அந்த அணிக்குப் பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

ஆர்சிபி அணி இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு முன் ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.345 என்று இருந்தது, வெற்றிக்குப் பின் பிளஸ் 0.166 என உயர்ந்துள்ளது.

ஆர்சிபி அணி அடுத்த இரு ஆட்டங்களிலும் வென்றால் அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெற முடியும், ரன்ரேட்டையும் அதிகமாக வைத்திருப்பதும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல உதவும்.

ராஜஸ்தான் நிலை என்ன

ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இந்தத் தோல்வியால், ராஜஸ்தான் ப்ளே ஆஃப் கனவு முடிந்துவிடவில்லை, அடுத்துவரும் ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால் 14 புள்ளிகளைப் பெற்றலாம்.

இருப்பினும் ப்ளே ஆஃப் வாய்ப்பு குறைவு, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தப் போட்டிக்கு முன், குஜராத்திற்கு அடுத்தாற்போல், ரன்ரேட்டை 0.600 என வைத்து 2வது இடத்தில் இருந்தது. ஆனால், இந்தத் தோல்விக்குப்பின் ராஜஸ்தான் ரன்ரேட், பிளஸ் 0.140 என்று சரி்ந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

உத்வேகம் கிடைத்திருக்கிறது

ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளெசி கூறுகையில், “அற்புதமாக விளையாடினோம், நிகரரன்ரேட்டை உயர்த்த இந்த வெற்றி தேவை. பேட்டிங் செய்வதற்கு இந்த ஆடுகளம் கடினமாக இருந்தது. பவர்ப்ளேவில் பந்து மிகவும் தாழ்வாக ஷாட்களை அடிக்க முடியாததுபோல் வந்தது, இந்த ஆடுகளத்தில் 160 ரன்கள் நல்ல ஸ்கோர்.

இந்த ஸ்கோரை நாங்கள் டிஃபெண்ட் செய்திருக்கிறோம், அனைவரும் பொறுப்பேற்று விளையாடினோம். இது மிகவும் முக்கியம், ஒவ்வொருவரும் வெற்றியைக் கொண்டாடுகிறோம். அடுத்துவரும் 2 ஆட்டங்களிலும் இதே உத்வேகத்தோடு விளையாடுவோம்,” எனத் தெரிவித்தார்.

மேக்ஸ்வெல், டூப்ளெஸ்ஸி அனுஜ் அதிரடி

ஜெய்ப்பூர் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகக் கடினமான ஆடுகளமாகும். இந்த ஆடுகளத்தில் ஆர்சிபி அணியின் கேஜிஎஃப் வீரர்களான மேக்ஸ்வெல், டூப்பிளசிஸ் இருவரின் அரைசதம் பங்களிப்பு, அனுஜ் ராவத்தின் கடைசி நேர கேமியோ ஆகியவை கௌரமான ஸ்கோரை எட்டுவதற்கு உதவின. மற்றவகையில் ஆர்சிபி அணியில் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

குறிப்பாக மேக்ஸ்வெல் 30 பந்துகளில் அடித்த அரைசதம், டூப்ளெஸ்ஸி 41 பந்துகளி்ல் அடித்த அரைசதம் ஆகியவை ராஜஸ்தான் அணிக்கு பெரும் சவாலாக இருந்தது. விராட் கோலி 18 ரன்னில் ஆட்டமிழந்தபின், 2வது விக்கெட்டுக்கு டூப்ப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஜோடி களத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றனர்.

ஆடுகளத்தில் ஷாட்களை ஆடுவது கடினமாக இருந்ததால், 9 ஓவர் முதல் 12 ஓவர்கள் வரை ஆர்சிபி அணியால் எந்த பவுண்டரிகளையும் அடிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டது. அதன்பின் சந்தீப் சர்மா ஓவரில் மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார். மேக்ஸ்வெல், டூப்ளெஸ்ஸி ஜோடி 69 ரன்கள் சேர்த்து அணியைக் கட்டமைத்தனர்.

டூப்ளெஸ்ஸி 44 பந்துகளில் 55 ரன்கள்(2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) சேர்த்து ஆசிஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 33 பந்துகளி்ல் 54 ரன்கள் சேர்த்து(3சிக்ஸர், 5பவுண்டரிகள்), சந்தீப் சர்மா பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின் 16வது ஓவரில் மகிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், ஆர்சிபி சற்று தடுமாறியது. 6 பந்துகளில் 3 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்து திணறியது. ஆனால், அனுஜ் ராவத் கடைசி நேரத்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 11 பந்துகளில் 29 ரன்கள் விளாசி ஸ்கோர் உயர்வுக்கு முக்கியப் பங்காற்றினார்.

டி.கே-வின் மோசமான ஆட்டம்

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு இந்த சீசன் மோசமாக அமைந்துள்ளது. 12 போட்டிகளில் மொத்தம் 140ரன்கள்தான் சேர்த்துள்ளார். இதில் அதிகபட்சமே 30 ரன்கள்தான், ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்கவில்லை.

பல போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கிற்கு திறமையை நிரூபிக்க பேட்டிங் வாய்ப்பு கிடைத்தபோதிலும் அதைப் பயன்படுத்தவில்லை, இன்றைய ஆட்டத்திலும் டிகேயின் மோசமான ஆட்டம் தொடர்ந்தது.

ராஜஸ்தான் சொதப்பல்

ராஜஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியைப் புரட்டி எடுத்து, 150 ரன்களை 12 ஓவர்களில் சேஸிங் செய்து ரன்ரேட்டில் உச்சத்துக்குச் சென்றது. ஆனால், இந்த ஆட்டத்தில் தலைகீழாக மாறி, 59 ரன்னில் சுருண்டு, ரன்ரேட்டை குறைத்துள்ளது தற்கொலை முடிவுபோல் அமைந்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அடித்த ஷாட்டும் யோசித்து அடித்தார்போல் இல்லை, ஆர்சிபி வீரர்களுக்கு ஃபீல்டிங் பயிற்சியும், கேட்ச் பயிற்சியும் அளித்தது போன்று இருந்தது.

குறிப்பாக ஜாஸ் பட்லர் ஆப்சைடில் அடித்த ஷாட் தேவையற்றது, அவ்வாறு அடித்தாலும் தூக்கி கவர் திசையில் தூக்கி அடித்திருக்கலாம். ஆனால் சிராஜுக்கு எந்தவிதமான சிரமும் இன்றி அவரின் கைகளில் பந்துவிழுமாறு பட்லர் ஷாட் அடித்தது வினோதமாக இருந்தது.

கொல்கத்தா அணிக்கு எதிராக மரண அடி அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்த ஜெய்ஸ்வாலுக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இன்றைய ஆட்டம் இருந்தது. 2 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால், சிராஜ் வீசிய முதல் ஓவரில் டக்அவுட்டில் வெளியேறினார்.

பவர்ப்ளே ஓவருக்குள் ராஜஸ்தான் அணி அணி டாப் ஆர்டரில் 5விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பேட்ஸ்மேன்கூட போட்டியை வெல்ல வேண்டும் என்ற இன்டென்ட் இல்லாமல் களத்துக்கு வருவதும், சில நிமிடங்கள் இருந்துவிட்டு ஆட்டமிழந்து பெவிலியன் செல்வதுமாக இருந்தனர்.

கேப்டன் சாம்ஸன் அடித்த ஷாட் பேட்டில் எட்ஜ் எடுத்து கேட்சானது, ஜோ ரூட் முதல் ஆட்டத்தில் களமிறங்கினார், பர்னல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

படிக்கல் ஏமாற்றம்

இம்பாக்ட் ப்ளேயராக வந்த தேவ்தத் படிக்கல் 4 ரன்னில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடந்த இரு சீசன்களாகவே தேவ்தத் சிறப்பாக ஆடவில்லை.

ஆர்சிபி அணியில் இருந்தபோது, ஆடிய வேகம், ரன் குவிப்பு ராஜஸ்தான் அணிக்கு வந்தபின் காணப்படவில்லை, இந்த சீசனில் 12 போட்டியில் விளையாடிய படிக்கல் 210 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

அணியில் ஹெட்மயர் மட்டும் ஆறுதலாக 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 50 ரன்கள் வரை 6 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 9 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபியிடம் சரணடைந்தது.

தோல்வியை நோக்கி பயணிக்கிறோம் என்பது ராஜஸ்தான் அணிக்குத் தெரிந்துவிட்டாலும், எளிதாகத் தோல்வியை ஏற்காமல் கடைசி பந்துவரை சண்டை செய்ய வேண்டும், போராட வேண்டும்.

கடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரஷித் கான் தனி ஒருவனாக கடைசிவரை அணியை எடுத்துச்சென்றார். குஜராத் அணி தோற்றாலும், ரஷித் கான் ஆட்டத்தால் நிகர ரன்ரேட் குறையவில்லை. கடைசிவரை ரஷித் கான் போராட்ட குணத்தை வெளிப்படுத்தி, அணிப் பெருமையை நிலைநாட்டினார்.

ஆனால், இன்று ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம், போட்டியில் வெல்ல வேண்டும் என்ற இன்டென்ட் இல்லாததுபோல் இருந்தது. எந்த பேட்ஸ்மேனும் கடைசிவரை போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும், ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் விளையாடவில்லை.

தோல்விக்குப் பொறுப்பேற்கிறோம்

ஆர்சிபி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் “பவர்ப்ளை ஓவர்களை நாங்கள் நன்றாகப் பயன்படுத்துவோம். ஆனால் இன்று அதுபோல் நடக்கவில்லை.

எங்கள் தவறுகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டும். ஆடுகளம் மெதுவாக இருக்கும்போது, டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளே எதிர்பார்த்த அளவு அமையாது என்பது டி20 போட்டியில் இயல்பு.

ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள். இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தோடு ஆடினர். நாங்கள் பவர்ப்ளேவில் நன்றாக ஸ்கோர் செய்திருந்தால், ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றிருக்கும்.

அடுத்து நடக்கும் தர்மசலா ஆட்டத்தில் வலிமையாக வருவோம், எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். பேட்ஸ்மேன்களை மட்டும் குறைகூற முடியாது, தோல்விக்கு அணியாகப் பொறுப்பேற்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cjqkn9v1g4wo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனி செய்த இமாலய தவறு: நிசப்தமான சேப்பாக்கம் மைதானம் - இடியாப்பச் சிக்கலில் சி.எஸ்.கே.

dhoni

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 15 மே 2023, 02:45 GMT
    புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்

ரிங்கு சிங், நிதிஷ் ராணா இருவரின் நங்கூரம் பாய்ச்சிய ஆட்டம், சிஎஸ்கே அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதில் மிகப்பெரிய பிரேக் போட்டுள்ளது, அதேநேரம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆப் வாய்ப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 61-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி நிர்ணயித்த 144 ரன்களை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சிஎஸ்கே பேட்டிங் சறுக்கல்

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை சொந்த மண்ணில் பேட்டிங்கில் நேற்று கோட்டைவிட்டது. இதுபோன்ற ஆடுகளத்தில் வெற்றியை டிபெண்ட் செய்வதற்கு குறைந்தபட்சம் 180 ரன்களாவது தேவை, ஆனால், 144 ரன்கள் சிஎஸ்கேவுக்கு எந்தவிதத்திலும் போதாது.

அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியில் நேற்று எந்த வீரர்களும் குறிப்பிடத்தகுந்த பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. கடைசி நேரத்தில் ஷிவம் துபே-ஜடேஜா ஜோடி 68 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.

நல்ல தொடக்கம் அளித்தபோதிலும் நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. 7வது ஓவர்கள் முதல் 14 ஓவர்கள் வரை சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் மட்டும்தான் சேர்த்தது.

இதுபோன்ற ஆடுகளங்களில் சிஎஸ்கே நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தங்களை நிலைப்படுத்தியபின் ஷாட்களை ஆட வேண்டும். ஆனால், களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்களை ஆட முயன்று ராயுடு, கெய்க்வாட், மொயின் அலி போன்றோர் விக்கெட்டுகளை இழந்தனர்.

CSK vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

சேப்பாக்கம் மைதானத்தில் பலமுறை கொல்கத்தாவின் வருண் சக்கரவர்த்தி விளையாடி இருப்பதால் சிஎஸ்கே வீரர்களுக்கு எவ்வாறு பந்துவீசுவது என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தார். இதனால் சிஎஸ்கே அணியின் முதல் இரு விக்கெட்டுகளான கெய்க்வாட்(17ரன்கள்) ரஹானே(16) ஆகியோரை தனது கேரம் பால் மூலம் சாய்த்தார்.

சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஷர்துல் தாக்கூர், தன்னால் முடிந்த சேதாரத்தை சிஎஸ்கேவுக்கு அளித்து, கான்வே(30) விக்கெட்டை காலி செய்தார்.

கடந்த 8 போட்டிகளில் பந்துவீசி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்த சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன், நேற்று ஃபார்முக்கு வந்து சிஎஸ்கேவுக்கு தலைவலியாக மாறிவிட்டார். நரேன் பந்துவீச்சில், அம்பதி ராயுடு(4), மொயின் அலி(1) ஆகியோர் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தனர்.

CSK vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

தேவையில்லாத ஷாட்கள்

ராயுடு, மொயின் அலி இருவரும் நரேன் பந்துவீச்சை கணித்து ஆடவில்லை. இருவருக்கும் வீசப்பட்ட பந்துகள் ஒரே மாதிரித்தான் என்றாலும் வேகத்தில் வேறுபாடு இருந்தன. ராயுடு செட்டில் ஆகாத நிலையில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றிருக்க கூடாது, சிஎஸ்கே அணி தடுமாறிவரும்போது விக்கெட்டை நிலைக்க வைக்கவே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதைவிடுத்து ஸ்வீப் ஷாட்டை ஆடியதால், பந்து மெதுவாக வந்து க்ளீன் போல்டாகினார்.

மொயின் அலி, பேக்புட் எடுத்து நரேன் பந்தை ஆட முயன்றார். ஆனால் பந்து மெதுவாக வரும் என நினைத்த மொயின் அலியை ஏமாற்றி சர்ரென வந்ததால், அவரால் சமாளிக்க முடியவில்லை, பந்து ஸ்டெம்பை பதம்பார்த்தது. இருவருமே பந்தை கணித்து ஆடத் தவறி, மோசமான ஷாட்களை ஆடினர்.

இதனால் 72 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. குறிப்பாக 61 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்த சிஎஸ்கே அணி, அடுத்த 11 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

CSK vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

துபே மட்டும் இல்லாவிட்டால்...

ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜடேஜா, துபே ஜோடி சிஎஸ்கே அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஜடேஜா நிதானமாக ஆட, வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் துபே பெரிய ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார்.

கடைசி இரு டெத் ஓவர்களை ராணா சுழற்பந்துவீச்சாளர்கள் வருண், சுயாஸைப் பயன்படுத்தினார். இந்த ஓவர்களைப் பயன்படுத்திய துபே, 31 ரன்களைச் சேர்த்தார். இந்த ஓவர்களை கவனத்துடன் வருண், சுயாஸ் வீசியிருந்தால், சிஎஸ்கே ஸ்கோர் இன்னும் குறைவாக இருந்திருக்கும்.

ஜடேஜா இன்னும் பழைய ஃபார்முக்கு வரவில்லை. சுழற்பந்துவீச்சாளர்களை சமாளித்து ஆடுவதற்கும் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டார். வருண் அரோரா வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தில் ஜடேஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

CSK vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

தோனியின் வருகையும் சேப்பாக்கமும்

ஜடேஜா எப்போது ஆட்டமிழந்தாலும், சேப்பாக்கம் மைதானத்தில் விசில் சத்தம், கரகோஷம், தோனி, தோனி என்ற சத்தம் காதைப் பிளக்கும் அது நேற்றும் இருந்தது.

தோனி களத்துக்கு வந்தாலும் 2 பந்துகளைத் தான் சந்திக்க முடியும். இருப்பினும் அதிகபட்சமாக 2 சிக்ஸர்களைப் பார்க்கலாமே, தோனியின் பேட்டிங்கை பார்க்கலாமே என்ற ரீதியில் ரசிகர்கள் உச்ச சுதியில் கோஷமிட்டனர்.

தோனி சந்தித்த முதல் பந்து வைடாக மாறியது. 5வது பந்தை அரோரா நோபாலாக வீசினார். இதனால் ப்ரீஹிட்டில் தோனியின் சிக்ஸரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

ஆனால், அரோரா வீசிய பந்தில் தோனி க்ளீன் போல்டாகினார். இதைப் பார்த்த சேப்பாக்கம் ரசிகர்கள் அனைவரும் மவுனமாகினர், சில வினாடிகள் சேப்பாக்கம் அரங்கமே மவுனத்தில் மூழ்கியது.

கடைசிப்பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 48 ரன்கள்(3 சிக்ஸர், ஒரு பவுண்டரி) சேர்த்தார்.

CSK vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

ஷாக் அளித்த கொல்கத்தா

கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்துவீசினர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், சுயாஷ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்னமாக இருந்தனர்.

அதிலும் வருண் சக்கரவர்த்தி தொடக்கத்திலேயே சிஎஸ்கேயின் இரு முக்கிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்தி ஷாக் அளித்தார். நடுப்பகுதி ஓவர்களில் இரு விக்கெட்டுகளை சுனில் நரேன் காலி செய்தார். தன்னை ஏலத்தில் கழற்றிவிட்டதற்கு பழிதீர்க்கும் வகையில், ஷர்துல் தாக்கூர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஒருவிக்கெட்டை வீழ்த்தி சிஎஸ்கேவை கட்டிப்போட்டனர்.

பேட்டிங்கில் கொல்கத்தா வீரர்களின் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே குர்பாஸ்(1) ஆட்டமிழந்தார். 3வது ஓவரில் வெங்கடேஷ் (4) ரன்னிலும், 5வது ஓவரில் ஜேஸன் ராய்(12) ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இதனால் மீண்டும் சிஎஸ்கே ஆதிக்கம், ஆட்டத்தை கைக்குள் எடுத்துவிட்டார்களோஎ என்று எண்ணத் தோன்றியது. ஆனால் 4வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங், ராணா கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு பேட் செய்தனர்.

CSK vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

ரிங்கு, ராணா சவால் பேட்டிங்

இருவருமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் ஆப் ஸ்பின்னர்களை தோனி அதிகம் பயன்படுத்தினார். ஆனால், இது ஃபேக்பயராகியது, ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ராணா 157 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதனால் மொயின் அலி பந்துவீச்சை ராணா வெளுத்துவாங்கி பவுண்டரிகளாக விளாசி ரன்ரேட் அழுதத்தைக் குறைத்தார்.

பொதுவாக ரிங்கு சிங் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர். ஆனால், நேற்று மிகவும் நிதானமாக, சுழற்பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டு ஆடி ஒற்றை, இரட்டை ரன்களாகச் சேர்த்து நங்கூரம் பாய்ச்சினார்.

ரிங்கு சிங் 39 பந்துகளிலும், ராணா 38 பந்துகளிலும் அரைசதத்தை நிறைவு செய்தனர். ரிங்கு சிங் 54 ரன்கள் சேர்த்தநிலையில் 18வது ஓவரில் ரன் அவுட் ஆகி விக்கெட்டை இழந்தார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஆனால், ரஸல், ராணா கூட்டணி இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

CSK vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில் “பந்து 2வது இன்னிங்ஸில் எதிர்பார்த்த அளவு டர்ன் ஆகவில்லை என்பது எங்களுக்கு சாதகமானது. எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினர், அவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். நானும், ரிங்குவும் களத்தில் நின்றாலே ஆட்டம் முடிந்துவிடும் என்று எப்போதுமே நினைப்பேன், அதை முடித்துக் கொடுத்துவிட்டோம். நான் நினைத்தது நடந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

ப்ளே ஆப் வாசல் திறந்தே இருக்கு

ஐபிஎல் சீசனில் இதுவரை 61 லீக் ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ளன. இதுவரை டெல்லி கேபிடல்ஸ் மட்டுமே ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. ஆனால், ஒரு அணி கூட ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை.

ஒவ்வொரு அணிக்கு, மற்றொரு அணி சவால் விடுக்கும் வகையில் களத்தில் சண்டை செய்து வருவதால், ஆட்டம் கடைசிப் பந்துவரை, ட்விஸ்ட் நிறைந்ததாகவே இருக்கிறது. வரும் வாரம் ஐபிஎல் சீசனில் மெகா வாரமாக அமையும், ரசிகர்களுக்கு ஒவ்வொரு ஆட்டமும் அதிர்ச்சியும், ஸ்வாரஸ்யத்தையும் வழங்கும் ஆட்டமாக மாறும்.

தொடர் வெற்றிகளைப் பெற்ற அணியைக் கூட புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கும் அணி மண்ணைக் கவ்வ வைக்கலாம், ப்ளே ஆப் சுற்றில் முதலிடத்துக்கு யார் செல்லப் போகிறார்கள், 2வது இடம் யாருக்கு என்பது குறித்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

ஐபிஎல் கதவுகள் இன்னும் 9 அணிகளுக்கும் திறந்தே உள்ளன, எந்த அணிக்கும் ப்ளே ஆப் கதவுகள் அடைக்கப்படவில்லை. ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல பல அணிகளுக்கு நிகர ரன்ரேட் முடிவு செய்யும் சூழல் இருப்பதால், அணிகளுக்கு இடையே போட்டி வரும் வாரம் தீவிரமாக இருக்கும்.

CSK vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

சிஎஸ்கே வென்றிருந்தால்...

சென்னை சேப்பாக்கத்தில் இந்த சீசனில் சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தை நேற்று ஆடியது. சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதையும், ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதையும் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு, ரிங்கு சிங், நிதிஷ் ராணா ஏமாற்றத்தை அளித்து, மவுனத்தை பரிசாக அளித்தனர். சிஎஸ்கேயின் தோல்வியைக் காணச் சகிக்காத ரசிகர்கள் மனதுக்குள் இனம் புரியாத சோகத்துடனே அரங்கை விட்டு வெளியேறினர்.

ஒருவேளை சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருந்தால், ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருக்கும். ஆனால் கொல்கத்தாவிடம் அடைந்த தோல்வியால், சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, ப்ளே ஆப்சுற்றில் முதல் 2 இடங்களில் இடம் பிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

CSK vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

ப்ளே ஆப் ரேஸில் இப்படியெல்லாம் நடக்குமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் 13 ஆட்டங்களில் 6 வெற்றிகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் நீடிக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸில் 0.256 ஆக இருக்கிறது.

கொல்கத்தா அணி இன்னும் ப்ளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறவில்லை, அந்த அணிக் கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகள் பெறும், நல்ல ரன் ரேட்டும் அவசியம். அவ்வாறு 14 புள்ளிகள் பெற்றால், லீக் சுற்று முடியும் வரை மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

அதேசமயம், சிஎஸ்கே அணியை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பாதையை தெளிவாக்கியுள்ளது. இனிமேல் சிஎஸ்கே அணி ஒருஆட்டத்தில் வென்றாலும் 17 புள்ளிகள்தான் பெற முடியும்.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி்க்கு இன்னும் இரு ஆட்டங்கள் உள்ளன, தற்போது 14 புள்ளிகளுடன் உள்ளது. இரு ஆட்டங்களிலும் மும்பை அணி வெல்லும் பட்சத்தில் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றில் 2வது இடத்துக்கு முன்னேற முடியும். கொல்கத்தாவின் வெற்றி, மும்பைக்கு ப்ளே ஆப் சுற்றில் டாப்-2 இடத்தை அடையும் ரூட்டை க்ளியர் செய்துள்ளது.

சிஎஸ்கே தோற்றால் என்னவாகும்?

உண்மையில் டாப்-2 இடத்தை சிஎஸ்கே அடைந்திருக்க வேண்டும், ஆனால், கொல்கத்தாவிடம் ஏற்பட்ட தோல்வியால் சிஎஸ்கே அணி டாப்-2 இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமே தவிர ப்ளேஆப் வாய்ப்பு கிடைக்காமல் போகவாய்ப்பில்லை. மும்பை அணியை லக்னோ அணி வீழ்த்திவிட்டால், சிஎஸ்கேவும் கடைசி லீக் ஆட்டத்தில் வென்றுவிட்டால், சிஎஸ்கே அணி 17புள்ளிகளுடன் டாப்-2 இடத்தை அடையலாம்.

லக்னெள அணி அடுத்த இரு ஆட்டங்களில் ஒன்றில் வென்று, மற்றொன்றில் தோற்றால் 15 புள்ளிகள் பெறும், மும்பை அணி அடுத்த இரு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் தோற்றால், 16 புள்ளிகள்தான் பெறும். அப்போது, 3வது மற்றும் 4வது இடத்துக்கான இடங்கள் தெளிவாகும். ஒருவேளை மும்பை அணி அடுத்த இரு ஆட்டங்களையும் தோற்றால் 4வது இடத்துக்கான போட்டி தீவிரமாக மாறும்.

சிஎஸ்கே அணி 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் 0.381 எனக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸுடன் டெல்லியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில்ல மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய நிலை சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ளது.

CSK vs KKR

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவேளை சிஎஸ்கே அணி டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தால், 15 புள்ளிகள்தான் பெறும், ரன்ரேட்டும் குறைந்துவிடும். டெல்லி அணி பெறும் வெற்றியால் பலன் இல்லை என்றாலும், அந்த வெற்றி சிஎஸ்கே அணியை கடுமையாகப் பாதித்துவிடும்.

அதேநேரம், லக்னெள அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் வென்று ஒன்றில் தோற்றால்கூட 15 புள்ளிகள் பெற்று நல்ல ரன்ரேட்டுக்கு வந்துவிடும். அப்போது சிஎஸ்கே அணியும் கடைசி லீக்கில் தோற்று 15 புள்ளிகளுடன் இருந்தால், லக்னெள 15 புள்ளிகள் பெற்று இருப்பதால் நிகர ரன்ரேட் முடிவு செய்யும்.

இவை ஊகத்தின் அடிப்படையிலான கணக்கீடுதான். இவ்வாறு நடக்கும் நடக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அடுத்த ஆட்டத்தில் தோற்றால், மும்பை அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் வென்றால்கூட 16 புள்ளிகளுடன் டாப்-2 இடத்தைப் பெறும்.

ஆதலால் அடுத்து வரும் ஆட்டங்கள் எந்த அணியும் சந்திக்காத முடிவுகளைக் கொடுக்கலாம், எந்த அணியும் ப்ளே ஆப் சுற்றுக்குள் இடம் பெறலாம் என்பதால் பரபரப்பாக இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c801y5vgr5vo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஷுப்மன் கில்லுடன் இணைந்து அசத்திய தமிழக வீரர்; ப்ளேஆஃப் சுற்றில் குஜராத் அணி, ஆனாலும் காத்திருக்கும் சவால்

SRH vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் டி20 தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. முதல் 2 இடங்களுக்கான போட்டியில் உள்ள அந்த அணிக்கு எந்த இடம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட அந்த அணிக்கு, லீக் சுற்றில் எஞ்சியுள்ள இரு போட்டிகளும் வெறும் சம்பிரதாய போட்டிகளாகவே இருக்கும். ஆனால், அந்த ஆட்டங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற போட்டியிடும் மற்ற அணிகளுக்கு வாழ்வா சாவா ஆட்டங்களாக இருக்கக் கூடும்.

சுப்மான் கில்லின் அற்புதமான சதம், முகமது ஷமியின் டாப் கிளாஸ் பந்துவீச்சு ஆகியவை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கைகொடுத்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் ஒரு முறை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் தந்தனர். நடராஜன் செய்த தவறால் தப்பிப் பிழைத்த தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்.

கில், சுதர்சன் அபார பார்ட்னர்ஷிப்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பேட்டிங்கில் சுப்மான் கில், சாய் சுதர்சனும், பந்துவீச்சில் ஷமி, மோகித் சர்மா ஆகியோர்தான். ஏறக்குறைய பல போட்டிகளுக்குப்பின் விஜய் சங்கருக்குப் பதிலாக இடம் பெற்ற தமிழக வீரர் சாய் சுதர்ஷன் நேற்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 ரன்கள் சேர்த்தார்.

SRH vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

சுப்மான் கில்- சாய் சுதர்ஷன் இருவரும் சேர்ந்து, 2வது விக்கெட்டுக்கு நேற்று 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இருவரும் அடித்த ஸ்கோர்தான் குஜராத் அணியின் பிரதானமாகும். இருவரும் பெரும்பாலும் சிக்ஸர் அடிக்காமல் பவுண்டரிகளாக விளாசினார்.

கில் 13 பவுண்டரிகளும், சுதர்சன் 6 பவுண்டரிகளும் விளாசினர். குஜராத் அணி தரப்பில் இருந்து முதல் சிக்ஸர் 11வது ஓவரில்தான் அடிக்கப்பட்டது. கில் தனது சதத்தில் ஒரு சிக்ஸரும், சுதர்சன் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்திருந்தனர். இதில் கில் 22 பந்துகளில் அரைசதம் அடித்தபோதுகூட 9 பவுண்டரிகள்தான் இருந்ததேத் தவிர, சிக்ஸர் ஏதும் அடிக்கவில்லை.

இருவரும் தொடக்கத்தில் நிதானமாக ஆடி, பின்னர் ரன்வேகத்தை அதிகப்படுத்தினர். பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்திருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, அடுத்த 4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

சுப்மான் கில் 56 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். அவர் 58 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.

SRH vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

ரஷித் கானும், சன்ரைசர்ஸும்

மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஹர்திக் பாண்டியா(8) மில்லர்(7), திவேட்டியா (3) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். புவனேஷ்குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்தது. இதில் ஒரு ரன் அவுட் தவிர 3 விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார் கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய ஒற்றுமை இருந்தது. 2022ல் குஜராத், சன்ரைசர்ஸ் அணிகள் முதல்முறையாக மோதியபோது, ரஷித் கான் கோல்டன் டக்அவுட் ஆகினார், பந்துவீச்சில் 28 ரன்களைக் கொடுத்திருந்தார். அதேபோல இந்த ஆண்டு சீசனிலும் ரஷித் கான் கோல்டன் டக்அவுட் ஆகி, பந்துவீச்சில் 28 ரன்களை வழங்கியுள்ளார்.

நடராஜனால் தப்பிப் பிழைத்த தமிழ்நாடு வீரர்

12-வது ஓவரில் நடராஜன் வீசிய பந்தை சாய் சுதர்சன் நேரே அடிக்க, கை அருகே வந்த பந்தை கேட்ச் பிடிக்காமல் நடராஜன் கோட்டை விட்டார். இதனால், அவுட்டாவதில் இருந்து தப்பிப் பிழைத்த சாய் சுதர்சன் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார். மேலும் 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், மார்கோ ஜேன்சன் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்திலேயே 47 ரன்களில் சாய் சுதர்சன் அவுட்டாகிவிட்டார். அவர் தூக்கி அடித்த பந்தை ஓடி வந்து அபாரமாக கேட்ச் செய்து, தனது முந்தைய தவறுக்கு நடராஜன் பிரயாச்சித்தம் தேடிக் கொண்டார்.

SRH vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

ஒரே ஓவரில் 4 விக்கெட்

புவனேஷ்வர் குமார் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் சுப்மான் கில்(101) ஆட்டமிழந்தார், 2வது பந்தில் ரஷித் கான் வந்தவேகத்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த ரஷித் கான் இதில் ஏமாற்றம் அளித்தார். அடு்த்து களமிறங்கிய நூர் அகமது ரன்அவுட் ஆகி டக்அவுட் ஆகினார். 5வதுபந்தில் ஷமி ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்தது பேட்டிங் கொலாப்ஸ் என்றுதான் கூற வேண்டும். கில், சுதர்சன் இருவர் சேர்த்த 148ரன்கள், உதரிகள் 13 என 161 ரன்களைத் தவிர்த்துப் பார்த்தால், மற்ற 8 பேட்ஸ்மேன்கள் சேர்த்த ரன்கள் வெறும் 27 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கில், சுதர்சன் அடித்த ஸ்கோரை வைத்தே டிபெண்ட் செய்துவிடலாம் என்று நினைத்தார்களோ எனத் தெரியவில்லை, மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இரட்டை இலக்க ரன்னைக் கூட தொடவில்லை.

மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

SRH vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்மை

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை முகமது ஷமி, மோகித் சர்மா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஷமி, தயால், மோகித் சர்மா ஆகிய 3 பேரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சன்ரைசர்ஸ் அணியில் கிளாசன்(64), புவனேஷ்வர் குமார்(27) மார்கண்டே(18) ஆகியோரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

ஷமி வீசிய முதல் ஓவரில் அன்மோல் பிரீத் சிங் 5 ரன்னில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். யாஷ் தயால் வீசிய 2வது ஓவரில் அபிஷே சர்மா 5 ரன்னில் சாஹாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

ஷமி வீசிய 3வது ஓவரில் திரிபாதி விக்கெட்டை இழந்தார். கேப்டன் மார்க்ரம் 10 ரன்னில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

SRH vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

கிளாசன் கிளாசிக் ஆட்டம்

சன்ரைசர்ஸ் அணியில் ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதும், தனிஒருவனாக கிளாசன் மட்டும் நிலையாக பேட் செய்து தன்னால் முடிந்த பங்களிப்பை அளித்தார். கிளாசன் தனது முதல் 18 பந்துகளில் 23 ரன்களை விளாசிய நிலையில், 35 பந்துகளில் அரைசதம் அடித்து, 44 பந்துகளி்ல் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த சீசன் முழுவதும் சிறப்பாக ஆடிய கிளாசன் 300 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியில் 300 ரன்களைக் கடந்த ஒரே பேட்ஸ்மேன் கிளாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகித் சர்மா வீசிய 7-வது ஓவரில் சன்வீர் சிங்(7), அப்துல் சமது(4)ஆகியோர் ஆட்டமிழந்தும், ஜான்ஸன் 3 ரன்னில் வெளியேறிபின் சன்ரைசர்ஸ் அணியை பெரிய சரிவில் இட்டுச் சென்றது. புவனேஷ்வர் குமார், கிளாசன் இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர், 8-வது விக்கெட்டுக்கு இருவரும் 68 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதன்பின் புவனேஷ்வர், மார்க்கண்டே இருவரும் 9-வது விக்கெட்டுக்கு 20 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கிளாசன், புவனேஷ்வர் இருவரின் கடைசி நேர பொறுப்பான பேட்டிங்கால்தான் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களைக் கடந்தது இல்லாவிட்டால் 100 ரன்களுக்குள் சுருண்டிரிக்கும்

குஜராத் அணி கடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரஷித் கான் ஆட்டத்தால் 8-வது விக்கெட்டுக்குபின் 91 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால், நேற்று சன்ரைசர்ஸ் அணி 95 ரன்கள் சேர்த்தது.

முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மோகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

SRH vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

பேட்ஸ்மேன்கள் ஒத்துழைப்பு இல்லை

தோல்விக்குப்பின் சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ பவர்ப்ளேயில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தாலும் கிளாசன் ஆட்டத்தைப் பார்த்து வென்றுவிடுவோம் என நம்பினோம். எங்களிடம் ஹைகிளாஸ் பந்துவீச்சாளர்கள் இருந்தும், எங்களால் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கில் சிறப்பாக பேட் செய்தார். புவனேஷ்வர் அருமையாகப் பந்துவீசி தனது பங்களிப்பை அளித்தார். கிளாசன் ஆட்டம் சிறப்பாக இருந்தது, அற்புதமான கிரிக்கெட் வீரர். மற்ற வீரர்கள் கிளாசனின் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை. நடராஜனும் சிறப்பாக பந்துவீசினார்” எனத் தெரிவித்தார்.

"பெருமையாக இருக்கிறது"

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையி்ல் “ எங்கள் வீரர்களைப் பார்த்து பெருமையாக இருக்கிறது. கடந்த ஆண்டைவிட பல மாற்றங்கள் நடந்துள்ளன. பல்வேறு தருணங்களில் வீரர்கள் பொறுப்புடன் ஆடி வருகிறார்கள். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியானவர்கள். எங்கள் பயணத்தில் தவறுகள் நடந்திருக்கலாம்.

ஆனால், நேர்மறையான விஷயங்களை அதிகமாகப் பெற்றுள்ளோம். இந்தப் போட்டியில்கூட சில தவறுகளைச்செய்தோம். நாங்கள் நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தியதால்தான் இங்கு வந்திருக்கிறோம். பந்துவீச்சாளர்களுக்கு வெற்றியில் முக்கியப் பங்கு இருக்கிறது.

பேட்ஸ்மேன்கள் அதிகமாக வெற்றிக்கு பெயரைப் பெற்றுவிடுகிறார்களே என சிலநேரம்நினைப்பேன். ஆனால் ஒரு ஆட்டத்துக்கு 2 ஓவர்கள் சரியாக வீசினாலே போதுமானது, ஆட்டம் மாறிவிடும், அந்த வகையில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக தயாராகியுள்ளனர்” எனத் தெரிவித்தார்

இது சுப்மான் கில் ஆண்டு

SRH vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சுப்மான் கில் பெற்றார்.

இந்த ஆண்டே சுப்மான் கில் ஆண்டாக மாறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் டி20 போட்டியில் சதம் அடித்த கில், மார்ச் மாதம் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார், மே மாதம் ஐபிஎல் தொடரில் சதம் அடித்துள்ளார்.

கடந்த 2022 ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து, சுப்மான் கில், வங்கதேசத்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டியில் சதம், இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் சதம், நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதம் மற்றும் இரட்டை சதம், டி20 போட்டியில் சதம், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக தற்போது ஐபிஎல் தொடரில் சதம் ஆகியவற்றை விளாசியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் இரு இந்திய பேட்ஸ்மேன்கள் 550 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளனர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 575 ரன்களும், 2வதாக சுப்மான் கில் 576 ரன்களும் குவித்துள்ளனர்.

குஜராத்துக்கு செக் வைக்கும் மும்பை

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம், 13 போட்டிகளில் 9 வெற்றி, 4 தோல்வி 18 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களுக்கு குஜராத் அணி தகுதி பெற்றுள்ளது. ஆனால், முதல் இரு இடங்களில் எந்த இடம் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

மும்பை மற்றும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு எதிராக நடக்கும் ஆட்டத்தின் முடிவில் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களை யார் பிடிப்பது என்பது முடிவாகும்.

ஒருவேளை மும்பை தனது கடைசி இரு லீக்கில் லக்னோ மற்றும் சன்ரைசர்ஸை வீழ்த்தினால் 18 புள்ளிகள் பெறும். குஜராத் அணியும் கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் 20 புள்ளிகளுடன் ப்ளே ஆப்பில் முதலிடம் பெறும்.

ஒருவேளை கடைசி லீக்கில் குஜராத் அணி தோற்கும் பட்சத்தில் மும்பை அணியும், குஜராத்தும் தலா 18 புள்ளிகள் பெற்றிருக்கும் அப்போது நிகர ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றில் முதல் இரு இடங்கள் முடிவாகும்.

SRH vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

 

இன்று முக்கிய ஆட்டம்

ஒருவேளை மும்பை அணி, இன்றைய ஆட்டத்தில் லக்னெள அணியிடம் தோல்வி அடைந்தாலே, ப்ளே ஆப் சுற்றில் முதல் இடத்துக்கு குஜராத் தகுதி பெற்றுவிடும். மும்பை அணி வென்றால்தான் இந்த கணக்குகள் பொருந்தும்.

அதேசமயம், ப்ளே ஆப் சுற்றில் இருந்து 2வது அணியாக சன்ரைசர்ஸ் அணியும் வெளியேறியது. சன்ரைசர்ஸ் அணி தற்போது 8 புள்ளிகளுடன் உள்ளது, இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன, இதில் இரண்டிலும் வென்றாலும், அதிகபட்சமாக 12 புள்ளிகள்தான் பெற முடியும் இது ப்ளே ஆப்சுற்றுக்கு உதவாது. ஏற்கெனவே டெல்லி கேபிடல்ஸ் அணி வெளியேறியநிலையில் தற்போது சன்ரைசர்ஸ் அணியும் வெளியேறியது.

ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி அடுத்ததாக தான் மோதும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்திலும், ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்திலும் வெல்லும்பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் பெரிய குழப்பம் ஏற்பட்டு ப்ளே ஆப்சுற்றில் அதிரடி மாற்றங்களும் வரலாம். இவை சன்ரைசர்ஸ் வெற்றியின் அடிப்படையில் முடிவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளம் வீரரின் அபார பந்துவீச்சு: எதிர்பாராத முடிவால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிக்கல்

MI vs LSG

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை சாய்த்து, லக்னோ சூப்பர் ஜெயேன்ட்ஸ் அணி பிளேஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடைசிப் பந்து வரை பரபரப்பாக நீடித்த இந்த ஆட்டத்தில் எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவிய மும்பை அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. லக்னோ அணிக்கு ஸ்டாய்னிஸ் பேட்டிங்கில் கைகொடுக்க, இளம் வீரர் மோசின்கான் கடைசி ஓவரை சிக்கனமாக வீசி அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோசின் கான் தோள்பட்டை காயம் காரணமாக 2023 ஐபிஎல் சீசனின் பாதித்தொடர்வரை போட்டியில் பங்கேற்கவில்லை. மோசின்கானை நீக்கிவிடலாம் என லக்னெள தலைமைப் பயிற்சியாளர் ஆன்டி பிளரும் அறிவுறுத்தினார். ஆனால், லக்னெள அணி நிர்வாகம் மோசின் கானை நீக்கவும் இல்லை மாற்றுவீரரை எடுக்கவும் இல்லை. லக்னெள அணி நிர்வாகம் வைத்திருந்த நம்பிக்கையை மோசின் கான் நேற்று காப்பாற்றினார்.

ஸ்டாய்னிஷ் ஆட்டநாயகன்

லக்னெள அணி வலுவான ஸ்கோரைப் பெறவும், அதை டிபெண்ட் செய்யவும் முக்கியக் காரணமாக இருந்தவர் மார்கஸ் ஸ்டாய்னிஷ்தான். நடுவரிசையில் களமிறங்கிய பொறுப்புடன் பேட் செய்த ஸ்டாய்னிஷ் 47 பந்துகளில் 89 ரன்கள்(4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள்) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதிலும் கடைசி 3 ஓவர்களை அவர் வெளுத்து வாங்கினார். 18-வது ஓவரில் மட்டும் இரு சிக்ஸர்கள், 3 பவுண்டர்கள் என 24 ரன்கள், 19-வது ஓவரில் 15 ரன்கள், 20-வது ஓவரில் 15 ரன்கள் என 3 ஓவர்களில் மட்டும் லக்னெள அணி 54 ரன்களைச் சேர்த்தது. 17-வது ஓவர் முடிவில் ஸ்டாய்னிஷ் 35 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்திருந்தார், ஆனால், 20வது ஓவர் முடிவில் 47 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார்.

லக்னெள அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் குர்னல் பாண்டியா, ஸ்டாய்னிஷ் கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். குர்னல் பாண்டியா 42 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்த நிலையில் ரிட்டயர்ஹர்ட் ஆகினார்.

MI vs LSG

பட மூலாதாரம்,BCCI/IPL

ரோஹித், இஷான் நல்ல தொடக்கம்

178 ரன்களை துரத்திச் சென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் நல்ல தொடக்கம் அளித்தனர். லக்னெள பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கிய இருவரும் 10 ரன் ரேட்டில் அணியின் ஸ்கோரை நகர்த்தினர்.

அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் தனது முதல் 12 பந்துகளில் 3பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார். ரோஹித் சர்மா முதல் 3 ஓவர்களில் 4 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையி்ல், அடுத்த ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி, ஸ்கோரை பவர் ப்ளேயில் 58 ரன்களுக்கு உயர்த்தினார். இருவரின் அதிரடியால் ஸ்கோர் உயர்ந்து 10 ஓவர்களில் 90 ரன்களை எட்டியது.

இருவரையும் பிரிக்க லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் கொண்டுவரப்பட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. ரவி பிஸ்னாய் வீசிய முதல் ஓவரில் ரோஹித் சர்மா 37 ரன்னில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

பிஸ்னாய் தனது 2வது ஓவரில் இஷான் கிஷன் (59 ரன்கள்)விக்கெட்டை சாய்த்து இரு செட்டிலான பேட்ஸ்மேன்களை வெளியேற்றியதன் மூலம் லக்னெள அணி்க்கு புத்துயிர் ஊட்டினார்.

MI vs LSG

பட மூலாதாரம்,BCCI/IPL

தேவையற்ற ஷாட் ஆடிய சூர்யகுமார்

அடுத்து வந்த நேஹல் வதேரா, சூர்யகுமார் யாதவ் கூட்டணியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், நேற்று ஸ்கூப் ஷாட்டுக்கு முயன்று போல்டாகினார்.

யாஷ் தாக்கூர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால், தாக்கூர், பந்தை வேகமாக வீசாமல் ஸ்லோவர் பாலாக வீசினார், பந்து சூர்யகுமார் பேட்டில் பட்டு ஸ்டெம்பில் அடித்ததால் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் விக்கெட்டை வீழ்த்தியது லக்னெள அணிக்கு பெரிய நம்பிக்கையை அளித்தது. கடந்த சிலபோட்டிகளாக சிறப்பாக பேட் செய்துவரும் வதேரா 16 ரன்கள் சேர்த்த நிலையில் மோசின்கான் ஓவரில் விக்கெட்டை இழந்தார். விஷ்ணு வினோத்தும் 2 ரன்னில் வெளியேறினார்.

MI vs LSG

பட மூலாதாரம்,BCCI/IPL

கடைசி ஓவர் திக்..திக்..

இரு பெரிய ஹிட்டர்கள் டிம் டேவிட், கேமரூன் கீரீன் களத்தில் இருந்தனர். கடைசி இரு ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. நவீன் உல்ஹக் வீசிய 19வது ஓவரில் டேவிட் இரு சிக்ஸர்கள் உள்ளிட்ட 19 ரன்களைச் சேர்த்தார்.

கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரை யார்கர்களாகவும், வைடு யார்கர்களாகவும் பந்துவீசி டேவிட், கிரீன் ஆகிய இருவரையும் பெரிய ஷாட்களை ஆட விடாமல் செய்தார் மோசின்கான்.

முதல் பந்தில் கீரீன் ரன் எடுக்கவில்லை, 2வது பந்தில் மிட்விக்கெட்டில் தட்டி ஒரு ரன்னை கீரின் எடுத்தார்.

3வது பந்தில் டேவிட் ஒரு ரன் சேர்த்தார். 4வது பந்தில் கிரீன் ரன் ஏதும் எடுக்கவில்லை. 5வது பந்தில் கீரீன் ஒரு ரன்னும், கடைசிப் பந்தில் டேவிட் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணி 5 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய மோசின்கான் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ரவி பிஸ்னாய் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். யாஷ் தாக்கூர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

MI vs LSG

பட மூலாதாரம்,BCCI/IPL

"ஸ்கோர் போர்டை பார்க்கவே இல்லை"

கடைசி ஓவரை சிறப்பாக வீசி 11 ரன்களை டிபெண்ட் செய்த மோசின் கான் கூறுகையில் “ என் தந்தை கடந்த 10 நாட்களாக ஐசியூவில் இருந்து நேற்றுதான் டிஸ்சார்ஜ் ஆகினார், அவருக்காகவே இந்த ஆட்டத்தை ஆடினேன். என் பந்துவீச்சை அவர் நிச்சயம் டிவியில் பார்த்திருப்பார், மகிழ்ச்சி அடைந்திருப்பார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகியவுடன் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டேன். ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாடாதது எனக்கு கடினமான ஆண்டாக இருந்தது.

கடந்த ஆண்டு நான் பந்துவீசியதற்கும், இந்த சீசனில் பந்துவீசயதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நான் பயிற்சியில் எவ்வாறு பந்து வீசினேனோ அதைப்போலவே வீசினேன். கடைசி ஓவரை வீசுகிறாயா என்று குர்னல் பாண்டியா என்னிடம் கேட்டார் நான் துணிந்து சரி என்று முடிவு செய்தேன்.

நான் பந்துவீசும் போது ஸ்கோர் கார்டைப் பார்க்கவில்லை. வெற்றிக்கு எத்தனை ரன்கள் தேவை என்பதுகூட எனக்குத் தெரியாது. 6 பந்துகளையும் சிறப்பாக வீச வேண்டும் என்ற நோக்கில் மட்டும் வீசினேன். ஸ்லோவர் பந்து, யார்கர், வைடு யார்கர் என பல்வேறு பந்துகளை வீசினேன்” எனத் தெரிவித்தார்

மும்பை அணி ஏன் தோற்றது

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் சேர்ந்து நல்ல தொடக்கத்தை அளித்து, வலுவான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர்.

ஆனால், சூர்யகுமார் யாதவ், வதேரா அதைப் பயன்படுத்தத் தவறவிட்டனர். இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தில் 360 டிகிரி வீரர் சூர்யகுமார் தொடக்கத்திலேயே ஸ்கூப் ஷாட்களை அடிக்க முயன்றிருக்க கூடாது. செட்டில் ஆன நிலையில் வித்தியாசமான ஷாட்களுக்கு சூர்ய குமார் முயன்றிருக்கலாம். சூர்ய குமாரின் விக்கெட் வீழ்ச்சி பெரிய திருப்புமுனையாக மாறியது.

மும்பை இந்தியன்ஸ் அணி நடுப்பகுதி ஓவர்களில் ரன் சேர்க்கத் தவறியதும், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாததும் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். அதுமட்டுமல்லாமல் நடுப்பகுதி ஓவர்களில் ரன்கள் பெரிதாக வராததும், பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்கள் ஏதும் அடிக்க முயலாததும் ரன்ரேட்டை மேலும் பலவீனமாக்கி, கடைசி நேரத்தில் நெருக்கடியில் தள்ளியது.

MI vs LSG

பட மூலாதாரம்,BCCI/IPL

வதேரா, விஷ்ணு வினோத்தை விரைவாக களமிறக்கியதற்குப் பதிலாக, இதுபோன்ற பெரியஸ்கோரை சேஸிங் செய்யும்போது கேமரூன் கிரீன், டேவிட் இருவரையும் விரைவாக களமிறக்கி இருக்கலாம். குறிப்பாக நேஹல் வதேரா 20 பந்துகளைச் சந்தித்து 16 ரன்கள் மட்டுமே சேர்த்து மந்தமாக ஆடி ரன்ரேட்டை குறைத்துவிட்டார்.

பந்துவீச்சிலும் பியூஷ் சாவ்லா அற்புதமாக வீசி ஒருவிக்கெட்டை வீழத்தினார். இதேபோல் ஆகாஷ் மத்வால், ஹெரன்டார்ப், ஷோகீன் ஆகியோரும் கட்டுக்கோப்பாக வீசினர். ஆனால், ஜோர்டன் 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 54 ரன்களை மும்பை பந்துவீச்சாளர்கள் வழங்கியது தோல்விக்கான முக்கியக் காரணமாகும்.

நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ நாங்கள் தோற்றுவிட்டோம், வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் வெற்றி பெறாததற்கு சில காரணங்களும் உள்ளன. எங்களிடம் நல்ல பார்ட்னர்ஷிப் நடுப்பகுதி ஓவர்களில் அமையாதது பெரிய துரதிர்ஷ்டம். ஆடுகளத்தின் தன்மையை நன்கு ஆய்வு செய்தோம், பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் வகையில் இருந்தது. கடைசி 3 ஓவர்களில் அதிகமாக ரன்களை வழங்கியது பின்னடைவு. நானும், இஷான் கிஷனும் நன்றாகத் தொடங்கி இலக்கை நோக்கி பயணித்தோம். அதன்பின் அதை மற்ற பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார்

லக்னோவுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்

MI vs LSG

பட மூலாதாரம்,BCCI/IPL

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றியின் மூலம் 13 போட்டிகளி்ல் 15 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. சிஎஸ்கே அணிக்கு இணையாக 15 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே 2வது இடத்திலும், லக்னெள 3வது இடத்திலும் உள்ளன.

லக்னெள அணி அடுத்துவரும் கடைசி லீக் ஆட்டத்திலும் வெல்லும்பட்சத்தில் 17 புள்ளிகளுடன் ப்ளேஆப் சுற்றை உறுதி செய்யும். அதேசமயம், சிஎஸ்கே அணியும் கடைசி லீக்கில் வென்றால் 17 புள்ளிகள் பெறும் இரு அணிகளுக்கும் இடையே நிகர ரன்ரேட் முக்கியத் துருப்புச் சீட்டாக மாறும்.

மும்பை அணியால் அடுத்த போட்டியி்ல் வென்றாலும், 16 புள்ளிகள்வரையில் பெற இயலும். ஆதலால், 2வது இடத்துக்கு மும்பை அணியால் பாதிப்பு வராது. இப்போது 2வது மற்றும் 3வது இடத்துக்கு சிஎஸ்கே அணியா அல்லது லக்னெள அணியா என்பதுதான் முக்கியக் கேள்வியாகும்.

இரு அணிகளுமே தங்களின் கடைசி லீக்கில் வென்று 17 புள்ளிகளுடன் இருந்தால், நிகர ரன் ரேட் அடிப்படையி்ல் முடிவு செய்யப்படும். ஒருவேளை நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே சிறப்பாக இருந்தால் 2வது இடத்திலும் லக்னெள 3வது இடம் பெறும். கடைசி இடத்துக்கு மும்பை, ஆர்சிபி, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் போட்டியிடும்.

ஒருவேளை சிஎஸ்கே அணி கடைசி லீக்கில் வென்று, லக்னெள அணி தோற்றால் 15 புள்ளிகள்தான் பெறும். அப்போது ப்ளேஆப்பில் 3வது மற்றும் 4வது இடம் சிக்கலாக மாறும்.

ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் 16 புள்ளிகள் பெறும்பட்சத்தில் நிகர ரன்ரேட் அடிப்படையில் எந்த அணி சிறப்பாக இருக்கிறதோ அந்த அணிக்கு ப்ளே ஆப்பில் 3வது இடமும், அடுத்த அணிக்கு 4வது இடமும் கிடைக்கும். 15 புள்ளிகள் எடுத்திருக்கும் அணிக்கு இடம் கிடைக்காது.

https://www.bbc.com/tamil/articles/cxrdvxek6l1o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல்: கோடிகளை கொட்டிக் கொடுத்தும் ஏமாற்றம் தரும் நட்சத்திர வீரர்கள் - ஓர் அலசல்

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐ.பி.எல். தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் வெளியேறிவிட்டன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 7 அணிகள் முட்டி மோதுகின்றன.

2 ஆண்டு கொரோனா பேரிடர் கால இடைவெளிக்குப் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் வழக்கமான பாதைக்குத் திரும்பியுள்ளது. அனைத்து அணிகளுமே சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக அனுபவித்து ஆடி வருகின்றன. ஐ.பி.எல். என்றாலே பேட்ஸ்மேன்களின் வாண வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என்ற இலக்கணம் மீறாமல் இம்முறையும் போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்னும் சொல்லப் போனால், வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக நடப்புத் தொடரில் பவுண்டரி, சிக்சர் மழை பொழிகிறது. பேட்ஸ்மேன்கள் கண்ட சதங்களின் எண்ணிக்கை இம்முறை அதிகம். அதிக முறை 200 ரன்களைத் தாண்டியது, 200 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தது என இம்முறை பெரும்பாலான போட்டிகள் ரசிகர்களுக்கு சிறப்பாக விருந்து படைத்தன.

ஒரே ஓவரில் தலைகீழாக மாறிய ஆட்டங்கள், கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நகர்ந்த ஆட்டங்கள் என எல்லாவற்றையும் தாண்டி கடைசிப் பந்தை வீசிய பிறகு வென்றுவிட்டதாக மகிழ்ச்சி ஆரவாரம் செய்த அணி பின்னர் தோற்றுப் போய் தலையை தொங்கவிட்டுச் சென்றது என நடப்பு ஐ.பி.எல். தொடரில் நடந்தேறிய பரபரபுக்கு பஞ்சமே இல்லை.

இம்முறை, சர்வதேச அனுபவம் இல்லாத, உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடிய இந்திய இளம் வீரர்களின் பங்களிப்பு அனைத்து அணிகளுக்குமே பிரதானமாகிவிட்டிருந்தது. சொற்பத் தொகைக்கு அவர்களை வாங்கிப் போட்ட அணிகள், அதனால் மிகப்பெரிய பலனை அடைந்தன. அதேநேரத்தில், கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி, சர்வதேச அளவில் மின்னிய நட்சத்திரங்களை வாங்கியும், சில அணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சின.

 

அந்த நட்சத்திரங்கள் ஐ.பி.எல்.லில் ஜொலிக்காமல் போனது அவர்கள் சார்ந்த அணிக்கே பெரும் பாதகமாக விடிந்தும் இருக்கிறது. பெரிதும் எதிர்பார்த்த அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை பரிசளித்த அத்தகைய வீரர்கள் குறித்த ஓர் அலசல் தொகுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் அனைத்துமே ஐ.பி.எல்.லின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

சாம் கரண் - ரூ.18.25 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 'சுட்டிக் குழந்தை'யாக தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களால் அறியப்பட்ட, இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் வீரரான சாம் கரணை யாருமே வாங்காத அளவுக்கு சாதனை அளவாக ஊதியத்தை அள்ளிக் கொடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. வேகப்பந்துவீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலுமே கலக்கும் இவர், ஆட்டத்தை எந்தவொரு கட்டத்திலும் தங்கள் பக்கம் திருப்புவார் என்று அந்த அணி நம்பியது. நடப்புத் தொடரில் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடியுள்ள சாம் கரண், 216 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 24, அதிகபட்சம் 55, ஸ்டிரைக் ரேட் 129.

பந்துவீச்சில் வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். சிறப்பான செயல்பாடு 31/3. ஒரு ஓவருக்கு சராசரியாக 10.22 ரன்களை இவர் விட்டுக் கொடுத்துள்ளார். வரிசையாக தோல்விகளுடன் சீசனைத் தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியை, தவான் காயத்தால் ஓய்வு எடுக்க அடுத்த இரு போட்டிகளுக்கு தலைமை தாங்கி வெற்றித் தேடித் தந்தார். ஒரு கேப்டனாக, அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினாலும், ஒரு வீரராக தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் சாம் கரண் சாதிக்கவில்லை.

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹாரி புரூக் - ரூ.16.25 கோடி

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் வீரரான ஹாரி புரூக், நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஒரே ஆட்டத்தில் கொண்டாடப்பட்ட வீரராக இருந்து, பின்னர் அந்த அணியாலே நீக்கப்படும் அளவுக்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்காவது வீரராக இறங்கி ஜொலிக்காத இவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தொடக்க வீரராக களமிறக்கியது. தொடக்க வீரராக இரண்டாவது போட்டியிலேயே சதம் கண்டு அசத்திய ஹாரி புரூக், 'அதன் மூலம் சமூக வலைதளங்களில் தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டேன்' என்று நேர்காணலில் பேசியும் விட்டார். இதனால், சமூக வலைதளங்களில் ரசிகர்களாலும், சேவாக் போன்ற முன்னாள் வீரர்களும் அவர் விமர்சனத்தை எதிர்கொண்டார்.

9 போட்டிகளில் 163 ரன்களை எடுத்துள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றி தேடித்தந்த ஹாரி புரூக், வேறு எந்தவொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரது சராசரி 20.38. ஸ்டிரைக் ரேட் 121.64.

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கே.எல். ராகுல் - ரூ.17 கோடி

கே.எல்.ராகுலுக்கு இது போதாத காலம் போல. சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி, ஐ.பி.எல்.லிலும் அவரது மோசமான செயல்பாடு தொடர்கிறது. ஐ.பி.எல். என்றாலே பார்முக்கு வந்து, ஆரஞ்சு தொப்பிக்கு மல்லுக்கட்டும் வீரர்களில் முன்னிலை வகிக்கக் கூடிய கே.எல். ராகுல் இம்முறை துரிதமாக ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டனாக, தொடக்க வீரராக களம் கண்ட அவரது ஆட்டம் சில நேரங்களில் ரசிகர்களால் வெறுக்கப்படக் கூடிய அளவுக்கு மோசமாக இருந்தது. டி20 போட்டிகளுக்கே உரிய வேகம் அவரிடம் இல்லை. முன்னாள் வீரர்கள் சிலர், அவர் சுயநலமாக ஆடுகிறார் என்று கூட விமர்சித்தனர். காயம் காரணமாக லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தில் கே.எல்.ராகுல் ஐ.பி.எல்லை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் அந்த அணியின் கேப்டன் பொறுபை குருணால் பாண்டியா கவனிக்கிறார்.

கே.எல்.ராகுல் 9 போட்டிகளில் விளையாடி, 34.25 ரன் சராசரியுடன், மொத்தம் 274 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 113.22

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பென் ஸ்டோக்ஸ் - 16.25

இங்கிலாந்து அணி முதன் முறையாக உலகக்கோப்பையை கைகளில் ஏந்த காரணமான பென் ஸ்டோக்சுக்கு எந்த விலை கொடுக்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகவே இருந்தது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்படக் கூடிய சர்வதேசத் தரம் வாய்ந்த மிகச் சில வீரர்களில் அவரும் ஒருவர். ஆனால், காயத்தால் அவதிப்பட்ட அவரால் சென்னை அணி எதிர்பார்த்த பங்களிப்பை இம்முறை கொடுக்க முடியவில்லை. முதலிரு போட்டிகளில் விளையாடிய அவர், முறையே 7, 8 ரன்களை மட்டுமே எடுத்தார். முழு உடல் தகுதியுடன் இல்லாத அவருக்கு கேப்டன் தோனி பரீட்சார்த்தமாக ஒரு ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில் 18 ரன்களை எதிரணி குவித்துவிட்டதால் அதன் பிறகு பென் ஸ்டோக்ஸ் பந்துவீசவே இல்லை.

காயம் காரணமாக எஞ்சிய ஆட்டங்களில் ஆடாத பென் ஸ்டோக்ஸ், சென்னை ஆடும் ஆட்டங்களில் வீரர்களுடன் டக் அவுட் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. லீக் ஆட்டங்கள் நிறைவுறும் தருவாயை எட்டிவிட்ட சூழலில், சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலும் கூட, ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக அவர் தாய்நாடு திரும்பிவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆந்த்ரே ரஸ்ஸல் - ரூ. 12 கோடி

கடந்த 2 ஐ.பி.எல். தொடர்களில் அச்சுறுத்தும் வீரராக வலம் வந்த ஆந்த்ரே ரஸ்ஸலின் ஆட்டம் இம்முறை அவ்வளவு பிரமாண்டமானதாக இல்லை. பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் அசத்தக் கூடிய அவர், முழுமையான உடல் தகுதி பெறாததால் முதலில் சில ஆட்டங்களில் பந்துவீசவே அல்லை. பேட்டிங்கில் மிரட்டல் ஆட்டம் இருந்தாலும் கூட, சிடைத்த சில வாய்ப்புகளில் அதனை பெரிய இன்னிங்ஸாக அவரால் மாற்றமுடியவில்லை. இம்முறை அவரிடம் இருந்து ஒரு அரைசதம் கூட வரவில்லை. அவருக்கு முன்னதாக களமிறங்கும் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசியதன் மூலம் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார். அப்படியான, அணியை வெற்றிக்கோட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஆட்டம் ரஸ்ஸலிடம் இருந்து வெளிப்படவில்லை.

இதுவரை 13 ஆட்டங்களில் 220 ரன்கள் சேர்த்துள்ள அவரது சராசரி 22. அதிகபட்சம் 42 ரன். ஸ்டிரைக் ரேட் 150. பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரஸ்ஸலின் சிறப்பான செயல்பாடு 22/3 ஆகும். ஓவருக்கு சராசரியாக 11.29 ரன்களை அவர் கொடுத்துள்ளார்.

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டேவிட் வார்னர் - ரூ.6.25 கோடி

டெல்லி கிங்சுக்காக களமிறங்கிய டேவிட் வார்னர், சாலை விபத்தில் சிக்கி ரிஷப் பந்த் விளையாட முடியாமல் போனதால், அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றார். கேப்டனாக ஜொலிக்க முடியாத அவரால், அந்த அணியை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துவர முடியவில்லை. முதல் அணியாக டெல்லி வாய்ப்பை இழந்து வெளியேறியது. தனிப்பட்ட முறையிலும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை. வார்னரிடம் இருந்து அவரது வழக்கமான அதிரடி இம்முறை வெளிப்படவில்லை. தொடக்க வீரராக களமிறங்கி, அவர் மிகவும் மந்தமாக பேட்டிங் செய்தது களத்திற்கு வெளியேயும் கடும் விமர்சனங்களுக்குள்ளானது.

12 போட்டிகளில் 32 ரன் சராசரியுடன் அவர் மொத்தம் 384 ரன்களை எடுத்திருந்தாலும் கூட, அதற்கான அவர் எதிர்கொண்ட பந்துகள், டி20 போட்டிகளைப் பொருத்தவரை சிறப்பான ஒன்றாக பார்க்கப்படக் கூடியது அல்ல. ஐ.பி.எல்.லில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக, அதிரடியை வெளிப்படுத்தி ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் இருப்பவரான வார்னர் இம்முறை அவரது அணிக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்குமே பெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டார் என்றே சொல்லலாம்.

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷாரூக் கான் - ரூ.9 கோடி

பேட்டிங்கில் கீழ் வரிசையில் களம் கண்டு, முதல் பந்தில் இருந்தே பவுண்டரி, சிக்சர்களை விளாசும் திறன் கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஷாரூக் கானை, சர்வதேச கிரிக்கெட்டில் சாதிக்காதவராக இருந்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக விலை கொடுத்தது. சவால் நிறைந்த டி20 போட்டிகளில் இக்கட்டான தருணங்களில் தனது அதிரடியால் அணிக்கு வெற்றி தேடித் தருவார் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். ஆனால், அந்த நம்பிக்கையை ஷாரூக் கான் காப்பாற்றியிருக்கிறாரா என்பதை பின்வரும் புள்ளிவிவரங்களை வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

12 போட்டிகளில் 109 ரன்களை மட்டுமே எடுத்துள்ள இவரது சராசரி 18 ரன். ஸ்டிரைக் ரேட் 160. லக்னோ சூப்பர் ஜெயேன்ஸ்ட் அணிக்கு எதிராக, சிக்கந்தர் ரசாவுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற போது எடுத்த 23 ரன்களே அவரது அதிகபட்சமாகும். அதுதவிர மற்ற எந்த ஆட்டங்களில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை.

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தீபக் சாஹர் - ரூ.14 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே ஆடி வரும் அவரை, கடந்த ஏலத்திற்கு முன்பாக விடுவித்து, பின்னர் அதிக விலை கொடுத்து அந்த அணி வாங்கியது. தொடக்கத்தில் பவர் பிளே ஓவர்களை சிறப்பாக வீசுவதுடன் விக்கெட்டுகுளையும் வீழ்த்தக்கூடியவரான தீபக் சாஹர் காயம் காரணமாக இந்த தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் விளையாடவே இல்லை. இதனால், பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களை யாரைக் கொண்டு வீச வைப்பது என்று கேப்டன் தோனியே திணறிவிட்டார். அவர் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளின் விளைவாகவே, 'குட்டி மலிங்கா' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மதீஷா பதிரானா வெளியே அடையாளம் காணப்பட்டார்.

ஒரு போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கியது உள்பட மொத்தம் 7 போட்டிகளில் பந்துவீசியுள்ள தீபக் சாஹர் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். சிறப்பான பந்துவீச்சு 27/3. ஒரு ஓவருக்கு சராசரியாக 9.45 ரன்களை அவர் விட்டுக் கொடுத்துள்ளார்.

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரித்வி ஷா - ரூ.7.5 கோடி

14 வயதிலேயே பள்ளி கிரிக்கெட்டில் 546 ரன்களை குவித்து ஒரே நாளில் தேசத்தின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச போட்டிகள் வரை விளையாடிவிட்ட பிரித்வி ஷாவுக்கு இந்த ஐபிஎல் தொடர், நினைவில் நிறுத்தி மகிழக் கூடிய ஒன்றாக இருக்கப் போவதில்லை. தொடக்க வீரராக களம் கண்ட அவர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறுவதே வாடிக்கையாகிப் போனதால், அதிருப்தியடைந்த டெல்லி அணி நிர்வாகம், அவருக்கு அடுத்தபடியாக வாய்ப்பு வழங்கவில்லை. முதல் 6 போட்டிகளில் களமிறங்கிய அவர், வெறும் 47 ரன்களை மட்டுமே எடுத்தார். சராசரி 7.83 ரன், அதிகபட்சம் 15.

பிரித்வி ஷாவின் புட் ஒர்க் முன்னாள் வீரர்களால் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் ஒரே தவறை மீண்டும் மீண்டும் அவர் செய்ததால் முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தினேஷ் கார்த்திக் - ரூ.10.5 கோடி

தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், பேட்டிங் ஆர்டரில் கீழ் வரிசையில் களம் கண்டு அதிரடியாக ரன்களை சேர்க்கக் கூடியவர். இக்கட்டான தருணங்களில் பவுண்டரி, சிக்சர்களை விளாசி அணிக்கு கைகொடுக்கக் கூடியவர். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எதையுமே அவர் இம்முறை பூர்த்தி செய்ய தவறிவிட்டார். பெங்களூரு அணியே பாப் டூப்ளெஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகிய மும்மூர்த்திகளை நம்பியே இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாகவே தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பிற வீரர்களின் செயல்பாடு இருக்கிறது.

இதுவரை 12 ஆட்டங்களில் 140 ரன்களை அவர் சேர்த்துள்ளார். அவரது சராசரி 12.73. ஸ்டிரைக் ரேட் 135.

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

லிவிங்ஸ்டன் - ரூ.11.5 கோடி

இங்கிலாந்தைச் சேர்ந்த லாம் லிவிங்ஸ்டனை அவரது தடாலடி ஆட்டத்தை நம்பி பஞ்சாப் கிங்ஸ் அணி பெரும் விலை கொடுத்து வாங்கியது. அவர் சுழற்பந்துவீச்சிலும் அணிக்கு பங்களிக்கக் கூடியவர். தசைப்பிடிப்பு காரணமாக முதலில் சில ஆட்டங்களை தவறவிட்ட அவர், பிற்பாதி ஆட்டங்களில் களம் கண்டார். இதுவரை மொத்தம் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள லிவிங்ஸ்டன், 176 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 82 ரன்களை எடுத்துள்ள அவரது சராசரி 29.33. ஸ்டிரைக் ரேட் 160.

நட்சத்திர வீரர்களின் செயல்பாடு எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டிரைக் ரேட் சிறப்பாக இருந்தாலும் அவரது அதிரடி ஆட்டம் ஒரு முறை மட்டுமே வெளிப்பட்டது. மற்ற ஆட்டங்களில் அவரது ஆட்டம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரது பந்துவீச்சு எடுபடவே இல்லை. 7 போட்டிகளிலும் சேர்த்து 7 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ள அவர், 2 விக்கெட்டுளை எடுத்துள்ளார். ஓவருக்கு சராசரியாக 13.43 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். லிவிங்ஸ்டனிடம் பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்பார்த்த விஷயம் இதுவல்ல என்பது நிச்சயம்.

https://www.bbc.com/tamil/articles/ce9xddewprxo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ப்ளே ஆஃப் வாய்ப்பை பறித்த டெல்லி: கோட்டைவிட்ட பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் - சென்னைக்கும் சிக்கலா?

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் அந்த அணியின் ப்ளே ஆஃப் கனவை ஏறக்குறைய முடிவுக்கு வர வைத்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இனிமேல் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது என்பது மற்ற அணிகளின் வெற்றி தோல்வியில்தான் இருக்கிறது.

ஆனால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாவதில் இருந்து வெளியேறிய டெல்லி கேபிடல்ஸுக்கு இந்த வெற்றியால் எந்தப் பயனும் இல்லை என்றாலும், பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் பயணத்துக்கு ப்ரேக் போட்டுள்ளது.

ரூஸோவின் அதிரடியான பேட்டிங், பிரித்விஷாவின் அரைசதம் ஆகியவற்றால் தரம்ஷலாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 64-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதல்முறையாக 200 ரன்கள்

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.

தரம்ஷலாவில் கடந்த 10 ஆண்டுகளில் முதல் ஐபிஎல் ஆட்டம் நேற்று நடந்தது. ரம்மியமான சூழலில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம், முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் டெல்லி கேபிடல்ஸ் அணியால் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்ய முடிந்தது.

இந்த ஐபிஎல் சீசனில் முதல்முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியும் 200 ரன்களை அடித்தது. இதற்கு முக்கியக் காரணம் டெல்லி அணியின் வார்னர், பிரித்விஷா, ரூசோ ஆகியோரின அரைசதம்.

ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் பல போட்டிகளில் சொதப்பலாக பேட்டிங் செய்த பிரித்வி ஷாவுக்கு நேற்று வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. தனது வாய்ப்பை இறுகப்பிடித்த பிரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ரிலே ரூஸோ அதிரடியாக பேட் செய்து 37 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து(6சிக்ஸர்,6 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் வார்னர் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களின் பங்களிப்புதான் டெல்லி கேபிடல்ஸ் ஸ்கோர் உயர்வுக்குக் காரணம்.

ஃபார்முக்கு வந்த டெல்லி

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

டெல்லி கேபிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறுவதற்கு முன் இதுபோன்ற பெரிய ஸ்கோரை ஒருமுறைகூட அடித்தது இல்லை. ஆனால், இப்போதுதான் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஃபார்முக்கு வந்துள்ளனர்.

அதேசமயம், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ளே ஆஃப் கனவை உயிர்ப்புடன் வைக்க அந்த அணியின் பேட்ஸ்மேன் லிவிங்ஸ்டோன் கடைசிவரை போராடியும் வீணானது. லிவிங்ஸ்டோன் 48 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தும்(9சிக்ஸர்,5பவுண்டரி) பலன் இல்லை.

ப்ளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் நிலைமை

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 13 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் கடைசி லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது.

ஆனால், சிஎஸ்கே அணியை வீழ்த்தினால், அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதில் சிக்கல் ஏற்படும். ஏற்கெனவே பஞ்சாப் அணியின் வாய்ப்பை பறித்துவிட்ட டெல்லி, சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ப்ளே ஆஃப் ரேஸ் இன்னும் ஸ்வாரஸ்யமாக மாறும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் அதில் பஞ்சாப் அணி வென்றாலும் 14 புள்ளிகள்தான் கிடைக்கும்.

ஆனால் பஞ்சாப் அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 308ல் இருக்கிறது. அதாவது கொல்கத்தா அணியைவிட ரன்ரேட் குறைந்துள்ளது. கடைசி லீக்கில் வென்றாலும் பஞ்சாப் அணியால் ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெறுமா என்பது சந்தேகம்தான். அவ்வாறு வென்று 14 புள்ளிகள் பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுக்காக கடைசிவரை காத்திருக்க வேண்டும்.

மந்தமான தொடக்கம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

214 ரன்கள் எனும் கடினமான இலக்கை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. கலீல் அகமது தனது முதல் ஓவரை மெய்டனாக வீச, இசாந்த் சர்மா வீசிய 2வது ஓவரில் ஷிகர் தவண் கோல்டன் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். கலீல் அகமது தனது 2வது ஓவரையும் மிகுந்த கட்டுக்கோப்பாக வீச பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பிரப்சிம்ரன், அதர்வா ரன் சேர்க்கத் திணறினர்.

அதன்பின் பிரப்சிம்ரன் , அதர்வா அதிரடியில் இறங்கி பவுண்டரிகளாக விளாசத் தொடங்கினர், இதனால் பஞ்சாப் அணியின் ரன்ரேட் உயரத் தொடங்கினாலும், பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள்தான் சேர்த்திருந்தது. ஆனால், தேவைப்படும் ரன்ரேட் ஓவருக்கு 12 ஆக இருந்தநிலையில் பஞ்சாப் அணி மீது தொடர்ந்து நெருக்கடி அதிகரித்தது. இருவரையும் ரன் அவுட் செய்ய பல வாய்ப்புகள் கிடைத்தும் அதை டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் கோட்டை விட்டனர்.

பிரப்சிம்ரன் 22 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு அதர்வாவுடன், லிவிங்ஸ்டோன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகத் தொடங்கி பின்னர் ஷாட்களை ஆடத் தொடங்கினர்.

ஃபீல்டிங் மோசம்

லிவிங்ஸ்டோன் 3 ரன்கள் சேர்த்திருந்தபோது குல்தீப் யதாவ் பந்தில் டீப்மிட் விக்கெட்டில் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க நார்ஜே கோட்டைவிட்டார்.

அடுத்து குல்தீப் வீசிய 2வது ஓவரில் அதர்வா அடித்த ஷாட்டை யாஷ் துல் கேட்ச் பிடிக்கத் தவறினார். இருவருக்கும் கிடைத்த வாயப்புகளை சரியாகப் பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தனர்.

இதில் லிவிங்ஸ்டோன் தனது வழக்கான அதிரடியில் ஷாட்களை அடித்து ஸ்கோரை உயர்த்தினார். குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர்களை அனாசயமாக லிவிங்ஸ்டோன் விளாசினார்.

பேட்ஸ்மேன்கள் ஒத்துழைப்பு இல்லை

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆனால், லிவிங்ஸ்டோன் அளவுக்கு அதர்வா ஷாட்களை ஆடவில்லை, பெரிய ஷாட்களை ஆடுவதற்கு திணறினார். அதர்வா 38 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில், 55 ரன்களில் காயம் காரணமாக ரிட்டயர்ஹர்ட ஆகினார். 3வது விக்கெட்டுக்கு அதர்வா, லிவிங்ஸ்டோன் கூட்டணி 78 ரன்களைச் சேர்த்தநர்.

அதன்பின் களமிறங்கிய எந்த பேட்ஸ்மேனும் லிவிங்ஸ்டோனுக்கு ஒத்துழைத்து பேட் செய்யவில்லை. தனி ஒருவனாக களத்தில் நின்று லிவிங்ஸ்டோன் ஷாட்களை அடித்து ரன்களைச் சேர்த்தார். எந்த பெரிய பார்ட்னர்ஷிப்பும் அமையாதது பஞ்சாப் அணி தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

ஜிதேஷ் சர்மா(0), ரூ.9 கோடிக்கு வாங்கப்பட்ட ஷாருக்கான்(6), ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்ட சாம் கரன்(11) ஹர்பிரீத் பிரார் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இந்த 3 பேட்ஸ்மேன்களில் ஒருவர், லிவிங்ஸ்டோனுக்கு ஒத்துழைப்பு அளித்திருந்தால்கூட அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருப்பார். 180 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அடுத்த 18 ரன்களுக்குள் 3விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசிய 18 –வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்ளிட்ட 21 ரன்களை லிவிங்ஸ்டோன் விளாசினார்.

நார்ஜே 19-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த சாம் கரன், 2வது பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்தவந்த பிரார் ரன்அவுட் ஆகி பெவிலியின் திரும்பினார். இந்த ஓவரில் 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தோல்வியில் பிடியில் இருந்தது.

நார்ஜே வீசிய இந்த ஓவர்தான் திருப்புமுனையாக அமைந்தது. இந்த ஓவரை மட்டும் லிவிங்ஸ்டன் சந்தித்து இருந்தால், ஆட்டத்தின் முடிவு தலைகீழாக மாறியிருக்கும். ஆனால், 2 விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது.

கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. சற்று கடினமான இலக்கு என்றாலும், லிவிங்ஸ்டோன் போராட முடிவு செய்தார். இசாந்த் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை தவறவிட்ட லிவிங்ஸ்டோன் அடுத்த இரு பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார்.

4-வது பந்து நோபால வீசப்பட அதில் சிக்ஸர் விளாசி 7 ரன்கள் கிடைத்தன. அடுத்த 4வது 5-வது பந்துகளிலும் லிவிங்ஸ்டோனால் ரன் சேர்க்க இயலவில்லை, கடைசிப்பந்தில் லாங்ஆனில் படேலிடம் கேட்ச் கொடுத்து லிவிங்ஸ்டோன் 94 ரன்களில்(48பந்து 9சிக்ஸர்,5பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

பவர்ப்ளேவை பயன்படுத்த தவறினோம்

தோல்விக்குப்பின் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவண் கூறுகையில் “இந்தத் தோல்வி வெறுப்பை வரவழைக்கிறது. பவர்ப்ளேவில் நாங்கள் சிறப்பாகப் பந்துவீசவில்லை.

சில விக்கெட்டுகளை பவர்ப்ளேவில் எடுக்கத் தவறிவிட்டோம். லிவிங்ஸ்டோன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் ஹர்பிரீத்தை பந்துவீசச் செய்ய நான் எடுத்த முடிவும் தவறுதான்.

வேகப்பந்துவீச்சாளர்களும் பவர்ப்ளேவில் லென்த்தில் வீசவில்லை, சரியான திட்டம் இருந்தது. அதை வீரர்கள் செயல்படுத்தவில்லை. இது வேதனையாக இருக்கிறது. பவர்ப்ளேவில் 60 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்பது வேதனைதான். பவர்ப்ளே ஓவர்கள்வரை பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பது தெரி்ந்தும், ரிஸ்க் ஏதும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்

பிரித்வி ஷா, ரூஸோ அதிரடி ஆட்டம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

டெல்லி அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க வீரர்கள், வார்னர், பிரித்வி ஷா நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் தொடக்க ஜோடி சேர்த்த அதிபட்சமாகும்.

முதல் 16 பந்துகளில் இருவரும் பவுண்டரிகூட அடிக்கவில்லை, ஆனால், அதன்பின் சாம் கரன் ஓவரில் வார்னர் தொடர்ந்து பவுண்டரிகளும், ரபாடா ஓவரில் இருசிக்ஸர்களையும் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.

பிரித்விஷாவும் தனது பங்கிற்கு ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார். அர்ஷ்தீப் ஓவரில் 2 பவுண்டரி, சிக்ஸர் உள்ளிட்ட 16 ரன்களைச் சேர்த்தார். இருவரின் அதிரடி ஆட்டத்தால் பவர்ப்ளேயில் டெல்லி கேபிடல்ஸ் அணி 61 ரன்கள் சேர்த்தது. வார்னர் 4 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு சாம்கரன் பந்துவீச்சி்ல் ஆட்டமிழந்தார். வார்னர் 39 ரன்கள் சேர்த்திருந்தபோது கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் வீரர்கள் தவறவிட்டனர்.

அடுத்துவந்த ரூஸோ, இந்த சீசனில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். களத்துக்குக்குள் வந்தது முதல், ரூஸோ அதிரடியாக ஆடத் தொடங்கினார். ரூஸோ தான் சந்தித்த முதல் பந்தில் பவுண்டரியும், 3வது பந்தில் பவுண்டரியும் விளாசி ரன்களைக் குவித்தார்.

ரபாடா வீசிய 13-வது ஓவரில் ரூஸோ 2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரிகள் உள்ளிட்ட 17 ரன்களைக் குவித்தார். சாஹர், சாம்கரன் பந்துவீச்சையும் ரூயோ வெளுத்து வாங்கினார். பிரித்வி ஷா 36 பந்துகளில் அரைசதத்தையும், ரூஸோ 25 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர்.

பிரித்வி ஷா 54 ரன்கள் சேர்த்தநிலையில், சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு பிரித்வி ஷா, ரூஸோ கூட்டணி 54 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதன்பின் பில் சால்ட் வந்து, ரூஸோவுடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து பஞ்சாப் பந்துவீச்சை சிதறிடித்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் டெல்லி கேபிடல்ஸ் அணி 50 ரன்களைக் குவி்த்தது.

அதிலும் பிரார் வீசிய கடைசி ஓவரில் ரூஸோ இரு சிக்ஸர்கள், இரு பவுண்டரிகள் என 20 ரன்களை விளாசினார். எல்லீஸ் வீசிய 19-வது ஓவரில் சால்ட் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து துவம்சம் செய்தார்.

ரூஸோ 82(37பந்துகள், 6சிக்ஸர், 6பவுண்டரி) ரன்களுடனும், சால்ட் 26 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மோசமான ஃபீல்டிங்

டேவிட் வார்னர் கூறுகையில் “ பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டோம், இருப்பினும் வெற்றி கிடைத்துள்ளது. டாஸில் தோற்றாலும், நன்றாக பேட் செய்தோம். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. டெல்லியில் நடக்கும் அடுத்த ஆட்டத்திலும் இதேபோன்று விளையாட வேண்டும். நாங்கள் போதுமான அளவு பங்களிப்பு முழுமையாக அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c13p20310r3o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘கிங்’ கோலி சாதனை சதம்: ஆர்சிபி-யின் வெற்றியால் சிஎஸ்கே, மும்பை பிளேஆஃப் வாய்ப்புக்கு ஆபத்தா?

IPL: RCB vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 19 மே 2023, 02:41 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹைதரபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்திருந்து. 187 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 187ரன்கள் சேர்த்து 8 வி்க்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல கட்டாய வெற்றி தேவை என்ற நெருக்கடியோடு ஆர்சிபி அணி சேஸிங்கில் இறங்கியது. நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும், வெற்றியும் தேவை என்ற தீர்மானத்தில் கேப்டன் டூப்பிளசிஸும், கோலியும் களமாடினர். இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்புக்கு அருகே சென்றுவிட்டது.

விராட் கோலியின் ஆர்ப்பரிப்பான சதம், டூப்பிளசிஸ் அரைசதம் ஆகியவை ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்து ப்ளே ஆப் சுற்றுக்கு அருகே கொண்டு சென்றுள்ளன.

  • நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் சதம் அடிப்பது இதுவே முதல்முறை
  • ஐதராபாத் அணிக்காக ஹென்ரிச் கிளாசன் சதம் அடித்தர்.
  • ஐபிஎல் தொடரில் கிளாசனுக்கு இது முதல் சதம் ஆகும்
  • பெங்களூரு அணிக்காக விராட் கோலி சதம் அடித்தார்
  • இரு வீரர்களுமே சிக்ஸர் அடித்து தங்களின் சதத்தை எட்டினர்
  • ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலியின் 6வது சதம் இதுவாகும்.
  • ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் உடன் கோலி இணைந்துள்ளார்
  • விராட் கோலி - டூப்பிளசிஸ் ஜோடி குவித்த 172 ரன்கள் நடப்பு தொடரில் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது

ஹைதராபாத்தா பெங்களூரா!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடந்ததா அல்லது பெங்களூருவில் நடந்ததா என்று குழம்பிப் போகும் அளவுக்கு மைதானத்தில் பெரும்பாலும் கோலியின் ரசிகர்களும், ஆர்சிபி ரசிகர்களுமே நிரம்பியிருந்தனர். விராட் கோலி சேஸிங்கின்போது அடித்த ஒவ்வொரு ஷாட்டையும் ரசித்த ரசிகர்கள் “கோலி, கோலி” எனவும், “ஆர்சிபி, ஆர்சிபி” எனவும் கோஷமிட்டு உற்சாகப்படுத்தினர். விராட் கோலி சதம் அடித்தவுடன் கோலியின் ரசிகர்கள் அவருக்கு கூட்டமாக தலைவணங்கி வணக்கம் செலுத்தியது அற்புதமான நிகழ்வு.

 
IPL: RCB vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

சாதனை பார்ட்னர்ஷிப்

விராட் கோலி 63 பந்துகளில 100 ரன்கள்(4சிக்ஸர், 12பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். துணையாக ஆடிய டூப்பிளசிஸ் 71 ரன்கள் (41பந்துகள், 2சிக்ஸர், 7பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஆர்சிபியின் வெற்றிக்கு அடித்தளமிட்டுச் சென்றனர்.

அதேபோல சன்ரைசர்ஸ் அணியில் கிளாசனின் சதத்தையும் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திலும் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றும்போது, தனி ஒருவனாக நின்று அணிக்காக பங்களிப்பை கிளாசன் வழங்குகிறார். இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் மட்டும் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகளில் தலா ஒரு வீரர் சதம் அடித்துள்ளார்.

IPL: RCB vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

கோலி, டூப்பிளசிஸ் ராஜ்ஜியம்

இந்த ஆட்டத்தின் ஹீரோக்கள் விராட் கோலி, டூப்பிளிசிஸ் மட்டும்தான். இருவரும் முதல் ஓவரிலிருந்து 18-வது ஓவர்கள் வரை களமாடி சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம், 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பயன் இல்லை. பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி 64 ரன்கள் சேர்த்தது.

பவர்ப்ளே முடிவில் 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்திருந்த கோலி அடுத்த 19 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.

34 பந்துகளில் டூப்பிளசிஸ் அரைசதத்தையும், கோலி 35 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர். 15 ஓவர்களில் ஆர்சிபி அணி 150 ரன்களை எட்டியது.

விராட் கோலி ஃபார்முக்கு வந்து பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கியதும் ஸ்ட்ரைக்கை அவரிடம் வழங்கி அவரின் ஆட்டத்தை டூப்பிளசிஸ் ரசித்தார். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என அனைத்தையும் கோலி துவம்சம் செய்து, கிளாசிக் கோலியாக உருவெடுத்தார்.

IPL: RCB vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

அபாரமாக ஆடிய கோலி 62 பந்துகளில் ஐபிஎல் போட்டியில் 6-வது சதத்தை நிறைவு செய்து 100 ரன்களில் புவனேஷ்வர் குமார் ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு டூப்பிளசிஸ், கோலி கூட்டணி 172 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி வெற்றிக்கு 13 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. நடராஜன் வீசிய 18-வது ஓவரில் பவுண்டரி அடித்த டூப்பிளசிஸ் 71 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் களமிறங்கி அதே ஓவரில் பவுண்டரி விளாசினார்.

கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. கார்த்திக் தியாகி ஒரு வைடு பால் வீச, பிரேஸ்வெல் 2 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

டூப்பிளசிஸுக்கு இரு கேட்ச் வாய்ப்புகளை சன்ரைசர்ஸ் வீரர்கள் நேற்று தவறவிட்டனர். 4வது ஓவரில் டூப்பிளசிஸ் அடித்த ஷாட்டை கார்த்திக் தியாகி கேட்ச் பிடிக்க முயன்று கோட்டைவிட்டார், அதன்பின் கிளென் பிலிப்ஸ் ஒரு கேட்சை தவறவிட்டார். இந்த இரு கேட்சுகளையும் தவறவிட்டதற்கு பெரிய விலையை சன்ரைசர்ஸ் கொடுத்தது.

ஆர்சிபி அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை சிராஜ், பர்னல் இருவரும் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துகளை கிளாசன் வெளுத்து வாங்கினார்.

IPL: RCB vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

கவலைக்குரிய சன்ரைசர்ஸ் பேட்டிங்

இந்த சீசன் முழுவதும் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் கவலைக்குரியதாக மாறியுள்ளது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்புவது இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது

அபிஷேக் குமார்(11) திரிபாதி(15), மார்க்ரம்(18) ஆகியோர் சொர்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிலும் அபிஷேக், திரிபாதி தொடக்கத்திலிருந்தே ஆர்சிபி பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர், ரன் சேர்க்கவும் சிரமப்பட்டனர். இதனால், 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர்.

அதன்பின் வந்த கிளாசன் வழக்கம்போல் பொறுப்பாக பேட் செய்தார். இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஷாட்களை ஆடும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக கிளாசன் திகழ்கிறார். ஆர்சிபி அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் பிரேஸ்வெல், ஷான்பாஸ் அகமது, கரன் சர்மா பந்துவீச்சை அனாசயமாக எதிர்கொண்ட கிளாசன் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார்.

3வது விக்கெட்டுக்கு கிளாசனுக்கு துணையாக ஆடிய மார்க்ரம் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தார். பெரும்பாலான ஸ்ட்ரைக்கை கிளாசன் எடுத்துக்கொண்டு ரன்களைச் சேர்த்தார். 3வது விக்கெட்டுக்கு கிளாசன்,மார்க்ரம் ஜோடி 76ரன்கள் சேர்த்தனர்.

கிளாசன் 24 பந்துகளில் அரைசதத்தையும், 29 பந்துகளில் 70 ரன்களையும் குவித்தார். கிளாசன் 49 பந்துகளில் ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து 104 ரன்னில்(6 சிக்ஸர், 8 பவுண்டரி) ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IPL: RCB vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

சன்ரைசர்ஸ் அணிக்காக இதற்கு முன் வார்னர், பேர்ஸ்டோ, ப்ரூக் ஆகியோர் சதம் அடித்தநிலையில் இப்போது கிளாசனும் சதம் அடித்துள்ளார்.

4-வது விக்கெட்டுக்கு கிளாசன், ப்ரூக் ஜோடி 74 ரன்கள் சேர்த்தனர். ஹேரி ப்ரூக் களமிறங்கினாலும் பெரும்பாலான ஸ்ட்ரைக்கை கிளாசனிடமே வழங்கினார். இதனால்தான் சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. ஹேரி ப்ரூக் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெற்றியாக மாற்றமுடியவில்லை

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ நன்றாக பேட் செய்தோம், ஆனால், அதை தக்கவைக்க முடியவில்லை. பவர்ப்ளேயில் குறைவான ரன்களே சேர்த்தோம். கிளாசன் பேட்டிங் அற்புதமாக இருந்தும் வெல்ல முடியவில்லை. ஆர்சிபி அணிக்கு ரசிகர்கள் ஆதரவு பிரமாதமாக இருந்தது. ஹைதராபாத் ரசிகர்களுக்கு வெற்றியை எங்களால் வழங்க முடியவில்லை, ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தோல்வியை வெறுத்தாலும், புன்னகையுடன் கடந்து அடுத்த போட்டியை சந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஒருவருக்கொருவர் பரிசு

ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ அற்புதமான சேஸிங். அருமையான பேட்டிங் பிட்ச், 200 ரன்கள் இருந்தாலும் சேஸிங் செய்யலாம். நானும், கோலியும் நேர்மறையான எண்ணத்தில்தான் விளையாடினோம். கோலியும், நானும் ஒருவருக்கொருவர் பரிசுஅளித்துக்கொண்டோம். அடுத்ததாக சின்னசாமி அரங்கில் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்

IPL: RCB vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

கோலியின் சாதனைகள்

கடந்த ஆண்டு செப்டம்பரில் டி20 போட்டியில் சிக்ஸர் அடித்து சதத்தை கோலி நிறைவு செய்தார், டிசம்பரில் நடந்த ஒருநாள் போட்டியிலும் சிக்ஸர் அடித்து சதத்தை கோலி நிறைவு செய்தார், ஐபில் தொடரின் நேற்றைய ஆட்டத்திலும் சிக்ஸர் அடித்துதான் கோலி சதமடித்தார்.

இந்த சதம் மூலம் டி20 போட்டிகளில் அதிகமான சதம்(6) அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 6 சதங்கள் அடித்து, கிறிஸ் கெயிலின் சாதனையோடு கோலியும் இணைந்துவிட்டார்.

இந்த சீசனில் விராட் கோலி, டூப்பிளசிஸ் ஜோடி 13 ஆட்டங்களில் களமிறங்கி 854 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இது ஐபிஎல் வரலாற்றிலேயே தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ரன்களாகும்.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் சீசன்களில் 500 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் டேவிட் வார்னர் 5 முறை 500 ரன்களைக் கடந்திருந்தார், அவரோடு தற்போது கோலியும் இணைந்துவிட்டார்.

இந்த ஐபிஎல் சீசன் கோலிக்கு அற்புதமாக அமைந்துள்ளது. 6 அரைசதம், ஒரு சதம் என 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் கோலி இதுவரை 7500 ரன்களை அடித்து சாதனை புரிந்துள்ளார். அதுட்டுமல்லாமல் சேஸிங்கின் போது அதிகமான சதம் அடித்த முதல் இந்திய வீரரும் கோலி என்ற பெருமையைப் பெற்றார்.

ப்ளே ஆப் வாய்ப்பு

ஆர்பிசி அணியின் வெற்றியால் அந்த அணி 13 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டும், 0.180 என பிளஸுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு நெருக்கமாக ஆர்சிபி வந்துள்ளது.

அதேசமயம், மும்பை அணி 14 புள்ளிகளோடு இருந்தாலும், அதன் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸ் 128லேயே இருக்கிறது அந்த அணிக்கு பின்னடைவாகும். ஆர்சிபி அணி கடைசி லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வென்றாலே 16 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றுக்குள் சென்றுவிடும்.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக்கில் வென்று 16 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்ரேட்டில் ஆர்சிபியைவிட குறைவாக இருக்கும்பட்சத்தில் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்லாது.

அதேசமயம், சிஎஸ்கே அணியும், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்போதுதான் இரு அணிகளும் 17 புள்ளிகளோடு ப்ளே ஆப் சுற்றில் நுழைய முடியும். இதில் எந்த அணி தோற்றாலும், ஆர்சிபி 16 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்துவிடும். 15 புள்ளிகளுடன் இருக்கும் அணி 4வது இடமே பெறும்.

ஒரு வேளை சிஎஸ்கே, லக்னெள அணிகள் இரண்டுமே தோற்றால், ஆர்சிபி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆப்பில் 2வது இடத்துக்கு முன்னேறிவிடும். ஆதலால், ஆர்சிபி அணிக்கு ப்ளே ஆப் ரேஸில் நெருக்கடியளிக்க மும்பை அணி, கடைசி லீக்கில் சன்ரைசர்ஸ் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால்தான் ரன்ரேட்டை ப்ளஸுக்கு கொண்டு வர முடியும்.

ஐபிஎல் போட்டியின் கடைசி லீக்கில் ஆர்சிபி விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாகும். ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல ரன்ரேட் எவ்வளவு தேவை, எத்தனை ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைத்துவிடும் என்பதால், ஆர்சிபி அணிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cpr1p3zj54no

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பஞ்சாப் பவுலர்களை வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால், படிக்கல் - ராஜஸ்தானுக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு எப்படி?

RR vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் தன்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ந்து 7வது முறையாக ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறியது.

தரம்ஷலாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 66வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 பந்துகள் மீதம் இருக்கையில் இலக்கை அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தோல்வி

பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவண்(17), பிரப்சிம்ரன் சிங்(2) அதர்வா(19) லிவிங்ஸ்டோன்(9) ஆகியோர் சொதப்பலாக பேட் செய்து ஏமாற்றினர்.

6.3 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ப்ளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவேண்டும் என்ற நோக்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஷாட்களை ஆட முயன்றுதான் விக்கெட்டுகளை தவறவிட்டனர்.

தரம்ஷலா ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றது, இதில் சற்று பொறுமையாக நின்று, நிதானமாக ஆடியிருந்தால், நல்ல ஸ்கோர் செய்திருக்கலாம்.

நடுவரிசையில் களமிறங்கிய ஜிதேஷ் ஷர்மா, சாம் கரன் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த சீசன் முழுவதும் பஞ்சாப் அணிக்கு ஜிதேஷ் சர்மா நல்ல கேமியோ ஆடி ஸ்கோர் செய்துள்ளார். விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் மந்தமாகவே ஆடினர். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வரும்போது இருவரும் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி மட்டுமே அடித்திருந்தனர்.

RR vs PBKS

பட மூலாதாரம்,BCCI/IPL

ஜிதேஷ், கரன், ஷாருக்கான் அதிரடி

அதன்பின் ஆடம் ஸம்பா, சாஹல், சைனி பந்துவீச்சை குறிவைத்து அடிக்கத் தொடங்கினர். சைனி வீசிய 14வது ஓவரில் ஜிதேஷ் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார்.

ஜிதேஷ் 44 ரன்கள் சேர்த்த நிலையில், சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு சாம்கரன், சைனி இருவரும் சேர்ந்து 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

18 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 141 ரன்கள்தான் சேர்த்திருந்தது. ஆனால், கடைசி இரு ஓவர்களில் ஷாருக்கான், சாம் கரன் சேர்ந்து சாஹல், போல்ட் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

சாஹல் வீசிய 19வது ஓவரில் சாம்கரன், ஷாருக்கான் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகளா விளாசி 28 ரன்கள் சேர்த்தனர். டிரன்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரிலும் 18 ரன்களை சேர்த்தனர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் 46 ரன்களை விளாசி அந்த அணி பெரிய ஸ்கோரை எட்ட சாம் கரன், ஷாருக்கான் உதவினர்.

RR vs PBKS

பட மூலாதாரம்,BCCI/IPL

ஜெய்ஸ்வால், படிக்கல் அரைசதம்

ஜெய்ஸ்வாலுக்கு இந்த சீசன் அற்புதமாக மாறிவிட்டது. கடந்த போட்டியில் செய்த தவறுகளைத் திருத்தி, ஷாட்களில் கவனம் செலுத்தியதால், இயல்பான ஆட்டத்துக்கு ஜெய்ஸ்வால் திரும்பினார். பட்லர் தொடக்கத்திலேயே டக்அவுட்டில் வெளியேறினார். இதனால் ஜெய்ஸ்வால், படிக்கல் ஆட்டத்தை வழிநடத்தினர். இருவரும் பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பவர்ப்ளேயில் 57 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி.

8.1 ஓவர்களில் சாம் கரன், ரபாடா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்ந்து 73 ரன்கள் வாரி வழங்கினர். ஜெய்ஸ்வால் நிதானமாக ஷாட்களை ஆட, படிக்கல் சரவெடியாக மாறி, பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்டார். 29 பந்துகளில் படிக்கல் 51 ரன்கள்(3சிக்ஸர்,5பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் சாம்ஸன் 2 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

ஹெட்மயர், ஜெய்ஸ்வால் ஜோடி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். ஜெய்ஸ்வால் 35பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களில் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஹெட்மயர், ரியான் பராக் தலைமீது அணியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு விழுந்தது. கடைசிநேரத்தில் ஹெட்மயர் ஷாட்களை ஆட முயன்றபோது, ஷாட்கள் சரியாக மீட் ஆகவில்லை. கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டன. 19 ஓவருக்குள் சேஸிங் செய்தால் ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட்டைவிட அதிகரிக்கும் என்பதால், ஹெட்மயர் பரபரப்புடன் இருந்தார்.

ரபாடா வீசிய 18-வது ஓவரில் ரியான் பராக் இரு சிக்ஸர்களை விளாசி சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சாம் கரன் வீசிய 19-வது ஓவரில் ஹெட்மயர் இரு பவுண்டரிகளை விளாசி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஜூரேல், போல்ட் களத்தில் இருந்தனர்.

ராகுல் சாஹர் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் ஜூரேல் 2 ரன்களும், 2வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். போல்ட் 3வது பந்தில் ஒரு ரன்எடுத்து ஜூரேலிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். 4வது பந்தில் ஜூரேல் ஸ்ட்ரைட்டில் இறங்கிவந்து சிக்ஸர் விளாச ராஜஸ்தான் அணி வென்றது. ஜூரைல் 10 ரன்களுடனும், போல்ட் ஒரு ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் நன்றாகப் பந்துவீசி ராஜஸ்தானுக்கு நெருக்கடி அளித்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், அதை தொடர்ந்து எடுத்துச் செல்லத் தவறினர். நாதன் எல்லீஸ், சாஹர், இருவரைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் 40 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.

RR vs PBKS

பட மூலாதாரம்,BCCI/IPL

ராஜஸ்தானை காத்த ஹீரோக்கள்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்(51), தேவ்தத் படிக்கலின் கேமியோ(50), சிம்ரன் ஹெட்மயர்(44) ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். ஆட்டநாயகன் விருது தேவ்தத் படிக்கலுக்கு வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் ஒருசீசனில் 600 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார்.

தேசிய அணிக்குத் தேர்வாகாமல் ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷின் 15 ஆண்டுகால சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்தார்.

RR vs PBKS

பட மூலாதாரம்,BCCI/IPL

பட்லரின் டக்அவுட் சாதனை

கேப்டன் சஞ்சு சாம்ஸன், ஜாஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் சொதப்புவது தொடர்கிறது. அதிலும் ஜாஸ் பட்லர் தன்னுடைய 85 இன்னிங்ஸ்களுக்கு பிறகுதான் முதல் டக்அவுட்டை சந்தித்தார்.

ஆனால், தற்போது, ஐபிஎல் தொடரில் கடந்த 10 இன்னிங்ஸில் 5 முறை பட்லர் டக்அவுட் ஆகியுள்ளார்.

RR vs PBKS

பட மூலாதாரம்,BCCI/IPL

“எங்களின் நிலை அதிர்ச்சியாக இருக்கிறது”

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில், “நிகர ரன்ரேட்டை பராமரிக்க வேண்டிய நோக்கில் ஹெட்மயர் ஆட்டம் சிறப்பானது. 19 ஓவருக்குள் இலக்கை அடைந்துவிடுவோம் என நம்பினோம். ஆனால் முடியவில்லை. புள்ளிப்பட்டியலில் எங்கள் அணி இருக்கும் இடம் சற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

கடந்து வந்த பாதையைப் பார்த்தால் ஏராளமான அம்சங்களை ஆலோசிக்க வேண்டியுள்ளது. இளம் வயதில் ஜெய்ஸ்வால் ஆட்டம் பிரமிப்பாக இருக்கிறது, இதேநிலையில் ஜெய்ஸ்வால் ஆடினால் 100 டி20 போட்டிகளில் விளையாடுவார்,” எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தானுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு

ப்ளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் 3 இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் ப்ளே ஆஃப் சுற்று முடிந்துவிடும் நிலையில் அடுத்துவரும் ஒவ்வோர் ஆட்டமும் முக்கியமானவை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் தோல்வியில்தான் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. இதனால், கடைசிவரை ராஜஸ்தான் அணி காத்திருக்க வேண்டும்.

ஆர்சிபி தனது கடைசி லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒருவேளை 181 ரன்கள் சேர்த்திருந்தால், அதை சேஸிங் செய்யும்போது அதற்கு அதிகமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். அவ்வாறு தோற்றால் ஆர்சிபி நிகர ரன்ரேட் தற்போது 0.180 என பிளஸில் இருப்பது குறையும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 0.148 என பிளசில் இருப்பதால், ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமும் தோற்க வேண்டும். ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனஸில் இருப்பதால், தானாகவே போட்டியிலிருந்து வெளியேறும்.

கொல்கத்தா அணி தனது கடைசி லீக்கில் லக்னெள அணிக்கு எதிராக 180 ரன்களுக்கு மேல் சேர்த்து 102 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் பட்சத்தில் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ந்து 7வது முறையாக ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறியது. இதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வெளியேறியுள்ளன.

RR vs PBKS

பட மூலாதாரம்,BCCL/IPL

சிஎஸ்கேவுக்கு கட்டாய வெற்றி

சிஎஸ்கே, லக்னெள அணிகள் தலா 15 புள்ளிகளுடன் சமமாக இருப்பதால், இரு அணிகளுக்கும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

இதில்வெற்றி பெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றில் 2வது இடத்தைப் பெறும். கடைசி போட்டியின் முடிவு வரை 15 புள்ளிகள் எடுத்த அணி காத்திருக்க வேண்டும்.

ஒருவேளை ஆர்சிபி, மும்பை ஆகிய அணிகள் தலா 16 புள்ளிகள் பெறும்பட்சத்தில் 15 புள்ளிகளுடன் இருக்கும் அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும்.

ஆதலால், லக்னெள, சிஎஸ்கே அணிகளுக்கு கட்டாய வெற்றி தேவை. ஒருவேளை சிஎஸ்கே, லக்னெள அணிகள் வென்றால், நிகர ரன்ரேட் பார்க்கப்படும்.

சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றால், லக்னெள முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு மேல் சேர்த்து, கொல்கத்தா அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு நடந்தால், லக்னெள அணியின் நிகர ரன்ரேட் அதிகரித்து, ப்ளே ஆஃப்பில் 2வது இடத்தைப் பிடிக்கலாம்.

அதேநேரம், ஆர்சிபி அணி தோல்வி அடைந்து, மும்பை அணி வென்றால், மும்பைக்கு ப்ளே ஆஃப் சுற்றில் வாய்ப்புக் கிடைக்கும். இரு அணிகளும் வென்றால், நிகர ரன்ரேட் துருப்புச் சீட்டாக மாறும்.

https://www.bbc.com/tamil/articles/cw8n06xq4q5o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனியின் கைகளில் 5வது முறையாக ஐபிஎல் கோப்பை தவழுமா? பிளேஆஃப் கணக்கு என்ன சொல்கிறது?

சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 20 மே 2023, 05:27 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பிளேஆஃப் சுற்றை நோக்கி வேகமாக நடைபோட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக அடைந்த தோல்வியால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

சென்னை அணி சிக்கலின்றி பிளேஆஃப் சுற்றில் நுழையுமா? அல்லது கடைசிப் போட்டி வரை காத்திருந்து மற்ற அணிகளின் முடிவைப் பொறுத்து அந்த வாய்ப்பைப் பெறுமா?

இன்றைய போட்டியில் கிடைக்கும் முடிவைப் பொருத்தது இது தெரிய வரும்.

 

ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இன்னும் 4 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.

13 போட்டிகளில் 9 வெற்றிகள் மூலம் 18 புள்ளிகளைச் சேர்த்துள்ள அந்த அணி முதலிடத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டது. அதேநேரத்தில், டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டன.

பிளேஆஃப் சுற்றில் எஞ்சியுள்ள 3 இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய 6 அணிகள் போட்டியிடுகின்றன.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி மற்றும் லக்னௌவுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் கிடைத்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 15 புள்ளிகள் பெற்றுள்ளது.

லக்னௌ சூப்பர் ஜெயென்ட்ஸ் அணியும் 15 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொருத்தவரை, அடுத்து வரும் போட்டிகளின் முடிவு அடிப்படையில் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது இடத்தைப் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோல்வியடைந்து, மற்ற போட்டிகளின் முடிவுகளும் சாதகமாக அமையாத பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃபுக்கு முன்னேற முடியாமலும் போகலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னுள்ள சாத்தியமான வாய்ப்புகளை விரிவாகப் பார்க்கலாம்.

IPL CSK playoff

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் தகுதிச்சுற்றில் நுழைய...

லீக் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் குஜராத் டைட்டன்சுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெறவேண்டும்.

அதேநேரத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைய வேண்டும். அப்படி நடந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்கலின்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும்.

இரண்டாவதாக, சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னௌ அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் இரு அணிகளுமே 17 புள்ளிகளைப் பெற்றிருக்கும்.

அப்போது ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடம் யாருக்கு என்பது தீர்மானிக்கப்படும். சென்னை அணி தனது ரன் ரேட்டை சிறப்பாகப் பராமரிக்கும் பட்சத்தில் தற்போதுள்ள இரண்டாவது இடத்தில் அப்படியே தொடரலாம்.

லீக் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் பட்சத்தில், இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வரும் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்குச் சந்திக்கலாம்.

இந்தப் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் என்பது சிஎஸ்கே அணிக்குச் சாதகமாக இருக்கும். அதன்மூலம் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவது சி.எஸ்.கே.வுக்கு எளிதாகலாம்.

IPL CSK playoff

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே மூன்றாவது இடம் பிடிக்க...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வென்றாலும், தோற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் மூன்றாவது இடம் பிடிக்க வாய்ப்புகள் உள்ளன. அது எப்படி?

முதலாவது, சென்னை, லக்னௌ அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் வெற்றிபெறும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படையில் பின்தங்க நேரிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் வரும்.

இரண்டாவதாக, சென்னை அணி இன்றைய போட்டியில் தோற்று, லக்னௌ தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் லக்னௌ அணி இரண்டாவது இடத்தைப் பிடிப்பதில் சிக்கல் இருக்காது.

அதேநேரத்தில், ஆர்சிபி, மும்பை அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோற்றால் அந்த அணிகள் 14 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கும். அந்தச் சூழலில் 15 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை அணி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும்.

மூன்றாவதாக, சென்னை, லக்னௌ, மும்பை, ஆர்சபி ஆகிய 4 அணிகளுமே தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடையும் பட்சத்தில், சென்னை, லக்னௌ அணிகள் தலா 15 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்போது ரன் ரேட்டில் பின்தங்கினால் சென்னை அணி மூன்றாவது இடத்திற்கு வரும்.

நான்காவதாக, சென்னை, லக்னௌ அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் தோற்று, ஆர்சிபி அல்லது மும்பை அணிகளில் ஒன்று தனது கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்திலும் இது நடக்கும்.

அதாவது, ஆர்சிபியோ, மும்பையோ கடைசி ஆட்டத்தில் வென்றால் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடிக்கும். 15 புள்ளிகள் பெற்றிருக்கும் சென்னை, லக்னௌ அணிகளில் நிகர ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடம் பிடிக்கும். அந்த வாய்ப்பு சென்னைக்கு கிடைக்கும்.

IPL CSK playoff

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி அணியாக பிளேஆஃபில் நுழைய...

முதலிடம் பிடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தையும் விட்டுவிட்டால் பிளே ஆஃப் செல்ல கடைசியாக ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே எஞ்சியுள்ளது.

அதற்கு மற்ற போட்டிகளின் முடிவுகள் தெரியும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்தச் சூழலை விளக்கமாகப் பார்க்கலாம்.

சென்னை, லக்னௌ அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் தோற்று, ஆர்சிபியும், மும்பை இந்தியன்சும் தங்களது கடைசி ஆட்டத்தில் வெல்வதாக வைத்துக் கொள்வோம்.

அத்தகைய சூழலில், ஆர்.சி.பி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் 16 புள்ளிகளுடன் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்துவிடும். பிளேஆஃபில் நுழைய, எஞ்சியுள்ள ஒரே இடமான நான்காவது இடத்திற்கு 15 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை, லக்னௌ அணிகளுக்கு இடையே போட்டி ஏற்படும்.

அப்போது ரன் ரேட்டில் லக்னௌ சூப்பர் ஜெயென்ட்ஸ் அணியைக் காட்டிலும் மேலாக இருக்கும் பட்சத்தில் சென்னை அணி நான்காவது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறலாம்.

அவ்வாறான சூழலில், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியைக் காட்டிலும் ரன் ரேட்டில் பின்தங்கியிருக்கும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரைவிட்டே வெளியேறும் சூழல் ஏற்படும். சென்னை அணியின் கோப்பைக் கனவும் தகர்ந்துவிடும்.

IPL CSK playoff

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

சிஎஸ்கே 5வது முறையாக கோப்பையை வெல்லுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இணையாக, சென்னை அணியும் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெல்வது சிறப்பான ஒன்றாக அமையும்.

அது நடந்து, புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்தால், இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த மண்ணில் விளையாடலாம். அதில் வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறலாம்.

ருதுராஜ், டெவோன் கான்வே, ரஹானே, ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் கேப்டன் தோனியின் அதிரடியும் ஒன்றுசேரும் அதேநேரத்தில், பந்துவீச்சும் சிறப்பாக அமையும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐ.பிஎல். கோப்பையை உச்சி முகரும்.

கேப்டன் தோனி கைகளில் ஐபிஎல் கோப்பை தவழும்போது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

https://www.bbc.com/tamil/articles/c727yqg4zw8o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘த்ரில்’ வெற்றியால் ப்ளே ஆஃப்பில் லக்னெள: குர்னாலுக்கு மரண பயம் காட்டிய ரிங்கு சிங்

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 21 மே 2023, 03:50 GMT

ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் 3வது அணியாக இடம் பெற்றது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. தொடர்ந்து 2வது ஆண்டாக லக்னெள அணி ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இணையாக 17 புள்ளிகளை லக்னெள எடுத்திருந்தாலும், நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கேவை எட்டுவது கடினம் என்பதால் 3வது இடத்தையே பிடித்தது.

வரும் 24ஆம் தேதி சென்னையில் நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் 4வது இடம் பெறும் அணியுடன் லக்னெள மோதும்.

லக்னெள அணி ஒரு கட்டத்தில் 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் நிகோலஸ் பூரன் அணியை மீட்டெடுத்து 30 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணி வெற்றிக்கு கடைசி இரு ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்டபோது, ரிங்கு சிங் 39 ரன்கள் வரை சேர்த்து போராடித் தோற்றார். இரண்டு அற்புதமான “கம்பேக்” நேற்றைய ஆட்டத்தில் நடந்தபோதும், வெற்றியாளர் ஒருவராகத்தான் இருந்தார்கள்.

 

ரிங்கு சிங் காட்டிய பயம்

கொல்கத்தா பேட்ஸ்மேன் ரிங்கு சிங் களத்தில் இருந்தவரை, லக்னெளவின் ப்ளே ஆஃப் உறுதியாகுமா என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் கடைசிப் பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் அற்புதமான சிக்ஸர் விளாச ஒரு ரன்னில் லக்னெள அணி த்ரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 68வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது.

177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக லக்னெள வீரர் நிகோலஸ் பூரன் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஆட்டத்தின் உண்மையான ஹீரோ ரிங்கு சிங் தான். இந்திய அணிக்கு அருமையான ஃபினிஷராக ரிங்கு சிங் இந்த ஐபிஎல் சீசனில் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

கடைசி இரண்டு ஓவர்கள்

கடைசி இரண்டு ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டன.

நவீன் உல் ஹக் வீசிய 19வது ஓவரை ரிங்கு சிங் எதிர் கொண்டார். முதல் பந்தில் ஷார்ட் தேர்ட் திசையில் பவுண்டரி அடித்த ரிங்கு சிங், 2வது பந்தில் டீப் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரியும், டீப் தேர்டு பகுதியில் 3வது பவுண்டரியையும் அடித்து ரிங்கு ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 4வது பந்தில் 2 ரன்கள் எடுத்த ரிங்கு, 5வது பந்தில் சிக்ஸர் விளாசி 20 ரன்களை குவித்தார்.

கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி கட்ட நெருக்கடியையும் ரிங்கு சிங் அனாசயமாகக் கையாண்டார். கடைசி ஓவரை யாஷ் தாக்கூர் வீச, முதல் பந்தை அரோரா எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தை ரிங்கு எதிர்கொண்டார்.

தாக்கூர் வைடாக வீசவே ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தை பவுன்சராக வீசிய தாக்கூர், 3வது பந்தை டாட் பாலாக வீசினார். 4வது பந்தை மீண்டும் வைடாக வீசி, அதன்பின் வீசிய பந்தில் ரிங்கு ஒரு சிக்ஸர் விளாசினார். 5வது பந்தில் லாங் ஆனில் பவுண்டரி விளாசிய ரிங்கு, கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாச ஒரு ரன்னில் கொல்கத்தா தோல்வி அடைந்தது.

அமர்க்களப்படுத்திய ரிங்கு சிங் 27 பந்துகளில் அரைசதம் அடித்து, 33 பந்துகளில் 63 ரன்களுடன்(6பவுண்டரி, 4சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

நவீனை வெறுப்பேற்றிய ரசிகர்கள்

லக்னெள பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய களத்துக்குள் வந்தபோதும் சரி, அவர் பந்துவீச வந்தபோதும் சரி அரங்கில் இருந்த ரசிகர்கள் “கோலி, கோலி” எனக் கோஷமிட்டு அவரை வெறுப்பேற்றினர்.

இந்த ஆட்டத்துக்கும் விராட் கோலிக்கும் ஆர்சிபி அணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இருப்பினும் கோலியுடன், நவீன் உல் ஹக் மோதியதையடுத்து, அவரை நேற்று போட்டி முழுவதும் "கோலி... கோலி..." என்று கோஷமிட்டு ரசிகர்கள் வெறுப்பேற்றினர்.

கடைசி இடத்துக்கு 3 அணிகள் போட்டி

இந்த வெற்றியின் மூலம் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 17 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கு இணையாக 17 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் லக்னெள பின்தங்கியுள்ளது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் 0.652 ஆக இருக்கும் நிலையில் லக்னெள அணியின் ரன்ரேட் 0.284 ஆகவே இருக்கிறது.

அடுத்ததாக ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்திற்காக ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி தங்களின் கடைசி ஆட்டத்தில் வென்று 16 புள்ளிகளுடன் இருந்தால், நிகர ரன்ரேட்டில் ஏதாவது ஒரு அணி ப்ளே ஆஃப்பில் விளையாடும். அந்த வகையில் மும்பையைவிட ஆர்சிபி அணி நிகர ரன்ரேட்டில் சிறப்பாக இருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

மும்பை, ஆர்சிபி அணிகள் தங்களின் கடைசி லீக்கில் தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். இதில் ஏதாவது ஒரு அணி வென்று, மற்றொரு அணி தோற்றாலும் ராஜஸ்தான் வெளியேறிவிடும்.

ஆர்சிபி அணியைவிட ரன்ரேட்டில் சிறப்பான இடத்தில் இருக்க, சன்ரைசர்ஸ் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெல்ல வேண்டியது அவசியம்.

ஒருவேளை மும்பை அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வென்றால்கூட, கடைசி லீக்கில் ஆர்சிபிதான் விளையாடுகிறது. எவ்வளவு ரன்கள் சேர்த்தால், எத்தனை ரன்கள் சேர்த்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம் என்ற தெளிவான நிலை ஆர்சிபிக்கு கிடைத்துவிடும் நிலையில் ஆர்சிபிக்குதான் நிலைமை சாதகமாக இருக்கிறது.

ஒருவேளை குஜராத் டைட்டன்ஸ் அணயிடம் ஆர்சிபி தோற்றால், மும்பை அணி சாதாரணமாக ஒரு வெற்றியுடன் ப்ளே ஆஃப்பில் இடம் பெறும். ஒருவேளை மும்பை அணியும், ஆர்சிபி அணியும் தோற்கும்பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும்.

எப்படியென்றால், ஆர்சிபி முதலில் பேட் செய்து 180 ரன்கள் சேர்த்து, அதை டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் அல்லது அதற்கு முன்பாக சேஸிங் செய்தால், அல்லது டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீசினால், ஆர்சிபி அணியை 174 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.

இவ்வாறு நடந்தால், ராஜஸ்தான் ராயலஸ் அணியின் ரன் ரேட் ஆர்சிபியைவிட அதிகமாக இருந்து, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும்

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

நம்பிக்கையை இழக்கவில்லை

லக்னெள கேப்டன் குர்னல் பாண்டியா கூறுகையில் “ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது மிக்க மகிழ்ச்சி, நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

கொல்கத்தா அணி 61 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தபோதுகூட, ஏதாவது ஒரு ஓவர் ஆட்டத்தை மாற்றும் என நம்பினோம்.

சுழற்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை வழி நடத்தினர். ரிங்குவுக்கு இது சிறப்பான ஆட்டம், ரிங்கு களத்தில் இருக்கும்வரை ஆட்டத்தை லேசாக எடுக்க முடியாது.

டெத் ஓவர்களில் பந்துவீசியது அதிக அழுத்தத்தை அளித்தது. மோசின் கானுக்கு பதிலாக யாஷ் தாக்கூரை பந்துவீசச் செய்தது எனது துணிச்சலான முடிவு” எனத் தெரிவித்தார்

லக்னெள பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

சிஎஸ்கே அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றதால், சிஎஸ்கே அணியைவிட ரன்ரேட்டில் அதிகமாக முடிப்பது லக்னெளவுக்கு சிக்கலாகவே இருந்தது. கொல்கத்தா அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால்தான் சிஎஸ்கே அணியைவிட ரன்ரேட்டில் உயர்வாக இருக்க முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால், 11வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்திருந்தபோது லக்னெள அணியின் நம்பிக்கை உடைந்திருக்கும். ஆனால், நிகோலஸ் பூரன் களமிறங்கி அணியை மீட்டெடுத்து 30 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து கை கொடுத்தார்.

லக்னெள அணியில் மேயர்ஸுக்கு பதிலாக கரன் சர்மா தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் ராணாவின் பந்துவீச்சில் 3வது ஓவரிலேயே கரன் சர்மா ஆட்டமிழந்தார். அடுந்து வந்த மன்கட், டீகாக்குடன் சேர்ந்து சிறிய கேமியோ ஆடி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் லக்னெள ஒரு விக்கெட்இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்திருந்தது.

அரோரா பந்துவீச்சில் மன்கட்(26) ரன்னிலும், அதே ஓவரில் ஸ்டாய்னிஷ் டக்அவுட்டிலும் வெளியேறினர். 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து லக்னெள தடுமாறியது.

கேப்டன் குர்னல் பாண்டியாவும் நிலைக்காமல் 9 ரன்னில் நரேன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். வருண் சக்கரவர்த்தி சுழலில் டீகாக் 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னெள தடுமாறியது. 55 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த லக்னௌ, அடுத்த 18 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.

6வது விக்கெட்டுக்கு நிகோலஸ் பூரன், பதோனி ஜோடி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பதோனி நிதானமாக ஆட, பூரன் தன்னுடைய வழக்கமான சரவெடியைத் தொடங்கினார்.

வருண் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பூரன் விளாசித் தள்ளினார். சுயாஷ் ஓவரிலும் ஒரு சிக்ஸர், பவுண்டரி என பூரன் வெளுத்து வாங்கினார். அதிரடியாக ஆடிய பூரன் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

பதோனி 25 ரன்களில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். நிகோலஸ் பூரன் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணியின் கைகளே 12வது ஓவர்வரை ஓங்கி இருந்தது. 5 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னெள அணியை தங்கள் கட்டுப்பாட்டில் கொல்கத்தா வைத்திருந்தனர்.

ஆனால், அதன்பின் தொடர்ந்து ஆட்டத்தை எடுத்துச் செல்ல கொல்கத்தா தவறியதும், பூரன், பதோனி ஜோடியை நிலைக்கவிட்டதும் பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த ஜோடியை விரைவாகப் பிரித்திருந்தால், லக்னெள அணியை இன்னும் 30 முதல் 40 ரன்கள் குறைவாகச் சுருட்டியிருக்க முடியும்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

ரிங்குவின் போராட்டம்

கொல்கத்தா அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி மட்டுமல்ல, நிகர ரன்ரேட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அதிகமாக உயர்த்தவேண்டிய கட்டாயத்திலும் களமிறங்கியது. அந்த வகையில் 8.5 ஓவர்களில் 177 ரன்களை சேர்க்க வேண்டும் என்ற சாத்தியமில்லாத இலக்குடன் போராடியது.

ஜேஸன் ராய், வெங்கடேஷ் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். வெங்கடேஷ் முதல் இரு ஓவர்களில் 30 ரன்களை சேர்த்தார். குர்னால் வீசிய ஓவரில் ராய் 3 பவுண்டரிகளை விளாசினார். ஆனால் கிருஷ்ணப்பா கௌதம் வீசிய ஓவரில் வெங்கடேஷ் 24 ரன்னில் பிஸ்னாயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளேவில் கொல்கத்தா ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணி நல்ல ரன்ரேட்டில் வெற்றியை எளிதாகப் பெறும் நோக்கில் நகர்ந்தது.

ஆனால், 78 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்த கொல்கத்தா அணி, அடுத்த 30 ரன்களை சேர்ப்பதற்குள் திடீரென 3 விக்கெட்டுகளை இழந்தது. ராணா(8), குர்பாஸ்(10), ஜேஸன் ராய்(45) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் கொல்கத்தா தடுமாற்றத்துக்குச் சென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

அதன்பின் நம்பிக்கை நாயகன் ரிங்கு சிங் களமிறங்கினார். ரிங்குவுக்கு பக்கபலமாக ஆட எந்த பேட்ஸ்மேனும் இல்லை. ஆந்த்ரே ரஸல் வந்த வேத்தில் ஒரு சிக்ஸர் அடித்து 7 ரன்னில் பிஸ்னாய் பந்துவீச்சில் வெளியேறினார். சர்துல் தாக்கூர் 3 ரன்னில் கேட்ச் பிடிக்கப்பட்டும், நரேன் ஒரு ரன்னில் ரன்அவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர். யாஷ் தாக்கூர் வீசிய 18வது ஓவரில் இருவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டன. ரிங்கு சிங் களத்தில் இருந்து நவீன் உல் ஹக் பந்துவீச்சை எதிர்கொண்டார். ஹாட்ரிக் பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களை விளாசி, 27 பந்துகளில் ரிங்கு சிங் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டன. இருப்பினும் மனம் தளராத ரிங்கு சிங், தாக்கூர் ஓவரை எதிர்கொண்டார்.

கடும் அழுத்தத்தில் பந்துவீசிய தாக்கூர் இரண்டு வைடு பந்துகளை வீசினார். ரிங்கு சிங் கிடைத்த வாய்ப்பில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என விளாசியும் 20 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ரிங்கு சிங் 67 ரன்களுடன் இறுதிவரை போராடியும் தோல்வியில் முடிந்தது.

பேச வார்த்தைகள் இல்லை

கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில், “இந்த முடிவு எங்களுக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும் ஏராளமான நேர்மறையான அம்சங்கள் இருந்தன.

அடுத்த சீசனில் இன்னும் சிறந்த அணியாக வருவோம் என நம்புகிறேன். ஆட்டத்தை ஃபினிஷ் செய்யும் திறமை இருந்தும் என்னால் முடிவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

ரிங்குவின் ஆட்டத்தையும் அர்ப்பணிப்பையும் பேச எனக்கு வார்த்தைகள் இல்லை. இந்தச் சூழலில் ரிங்கு சிங் பேட் செய்த விதம் அவரால் எதையும் செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தியது,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c6p01p9r719o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

MI Vs SRH, ஐபிஎல் 2023: 108 பந்துகளில் 200 ரன்கள் சேஸிங் - வென்றாலும் கொண்டாட முடியாமல் தவிக்கும் மும்பை

MI Vs SRH, ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அற்புதமாக வெற்றி பெற்றாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு தொக்கிக்கொண்டு இருக்கிறது.

வெற்றி நாயகர்கள்

MI Vs SRH, ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் தொடரில் கேமரூன் க்ரீனின் முதல் சதம், ஹிட்மேன் ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு வந்து அரைசதம் அடித்தது போன்ற முத்தாய்ப்பான சம்பவங்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது.

மும்பை வான்ஹடைவில் இன்று நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது.

201 ரன்கள் இலக்கைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 108 பந்துகளில் 2 விக்கெட்டை இழந்து இலக்கை அடைந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கேமரூன் கிரீன் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை 47 பந்துகளில் பதிவு செய்தார். சிக்ஸர் மழை பொழிந்த கேமரூன், 100 ரன்களுடன்(8 சிக்ஸர், 8 பவுண்டரி) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மா இந்த சீசனில் 2வது அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

ஆனாலும் கொண்டாட முடியலேயே..!

மகத்தான வெற்றியாக இருந்தாலும், முழுமையாகக் கொண்டாட முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணியினரும், ரசிகர்களும் தவிக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் மனதுக்குள் ஆர்சிபி-குஜராத் டைட்டன்ஸ் ஆட்டம் உருத்தலாகவே இருந்து வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி லீக் ஆட்டத்தை முடித்த நிலையில் தற்போது 16 புள்ளிகளுடன் இருக்கிறது. மும்பை அணி வெற்றி பெற்றாலும் அதன் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸ் 0.044 என்ற அளவில் இருப்பது ரசிகர்களுக்கு கவலையைத் தருகிறது.

பெங்களூருவில் மழை தொடர்ந்து பெய்து ஆட்டம் ரத்தாகியிருந்தால், மும்பை இந்தியன்ஸ்க்கு கொண்டாட்டமான செய்தியாக மாறும். ஆனால், மழைநின்று ஆர்சிபி-குஜராத் ஆட்டம் தொடங்கிவிட்டது இதில் ஆர்சிபி-க்கு சாதாரண வெற்றிக் கிடைத்தாலே மும்பை இந்தியன்ஸ் வெளியேறிவிடும். ஏனென்றால், ஆர்சிபி நிகர ரன்ரேட்டில் பிளஸ் 0.180 என்று இருப்பதால், வெற்றிபெற்று 16 புள்ளிகள் வந்தாலே ப்ளே ஆப் சுற்றுக்குச் சென்றுவிடும்.

MI Vs SRH, ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

வருணபகவான் உதவி செய்வாரா?

மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது என்பது முழுமையாக அதிர்ஷ்டத்தால் மட்டும்தான் இருக்கும். மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் செல்ல ஆர்சிபி விளையாடக் கூடாது, அல்லது குஜராத்திடம் தோற்க வேண்டும். இந்த சம்பவத்துக்காக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் வருண பகவானிடம் வேண்டுவார்கள்.

அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் வெற்றியால், 14 புள்ளிகளோடு இலவு காத்த கிளியாக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏமாற்றத்தோடு தொடரிலிருந்து வெளியேறியது.

விவ்ராந்த், அகர்வால் அபார பேட்டிங்

அனைகின்ற விளக்கு பிரகாசமாக எரியும் என்பதைப் போல், கடைசி லீக் ஆட்டத்தில்தான் மயங்க் அகர்வால் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தைப் பதிவு செய்தார். அறிமுக வீரரான விவ்ராந்த் அற்புதமான அரைசதம் அடித்தார். இருவரின் பங்களிப்புதான் சன்ரைசர்ஸ் அணி பெரியஸ்கோரை எட்ட காரணமாக அமைந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இருவரும் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை வெளுத்துவாங்கி பதம் பார்த்தனர். பவரப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தனர். ஓவருக்கு 10 ரன்ரேட்டில் சென்ற சன்ரைசர்ஸ் 6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியதால், நல்ல ஸ்கோரை இலக்காக வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பியூஷ் சாவ்லா, கார்த்திகேயா, ஜோர்டான், மத்வால் பந்துவீச்சை இருவரும் துவம் செய்து பவுண்டரி, சிக்ஸர்களாக அனுப்பினர்.

விவ்ராந்த் சர்மா 36 பந்துகளில் அரைசதத்தையும், மயங்க் அகர்வால் 32 பந்துகளில் அரைசதத்தையும் நிறைவு செய்தனர். இருவரின் ஆட்டத்தால் 11 ஓவர்களில் 100 ரன்களை சன்ரைசர்ஸ் எட்டியது. இருவரையும் பிரிக்க ரோஹித் சர்மா பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பலன் இல்லை.

14வது ஓவரில் மத்வால் பந்துவீச்சில் விவ்ராந்த் சர்மா விக்கெட்டை இழந்தார். விவ்ராந்த் சர்மா 47 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து(9பவுண்டரி, 2சிக்ஸர்) ஆட்டமிழந்தார். ஐபிஎல் வரலாற்றில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் அறிமுக ஆட்டத்திலேயே அதிகபட்ச ரன்கள் சேர்த்தது இதுதான் முதல்முறையாகும்.

அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்த இருவரும் முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கிளாசன், அகர்வாலுடன் சேர்ந்து சில பவுண்டரிகளை விளாசினார்.

சதத்தை நோக்கி நகர்ந்த அகர்வால் 83ரன்களில்(46பந்துகள், 4சிக்ஸர்கள், 8பவுண்டரிகல்) மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அகர்வால் ஆட்டமிழந்தபின் அடுத்துவந்த எந்த பேட்ஸ்மேனும் நிலைக்கவில்லை.

MI Vs SRH, ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

ப்ரூக், பிலிப்ஸ் ஏமாற்றம்

கிளென் பிலிப்ஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். இந்த சீசனில் இதுவரை பிலிப்ஸ் ஒருபோட்டியில்கூட உருப்படியான ஸ்கோர் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் நம்பிக்கை நாயகன், ஒன்மேன் ஹீரோ கிளாசன் 18 ரன்னில் மத்வால் பந்துவீச்சில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். ஹேரி ப்ரூக் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஹேரி ப்ரூக்கிற்கு பூஜ்ஜியம் மிகவும் பிடிக்குமா என்பது தெரியவில்லை, இந்த சீசனில் ஒரு சதம் அடித்ததைத் தவிர பெரும்பாலான போட்டிகளில் ப்ரூக் டக்அவுட்டிலேயே ஆட்டமிழந்துள்ளார்.

174 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 26 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சன்ரைசர்ஸ் அணி டெத் ஓவர்களை மோசமாகப் பயன்படுத்தியது.

கடைசி 3 ஓவர்களில் எந்த பவுண்டரியையும் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் அடிக்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 32 ரன்கள் மட்டுமே சேர்த்தது, தொடக்கத்தில் நல்ல ஸ்கோர் செய்திருந்ததால் சன்ரைசர்ஸ் தப்பித்தது. இல்லாவிட்டால் ஸ்கோர் 150 ரன்களுக்குள் இருந்திருக்கும்.களத்தில் அனுபவமிக்கபேட்ஸ்மேன் மார்க்ரம் இருந்தும் பெரிய ஷாட்கள் ஏதும் அடிக்கவில்லை. மார்க்ரம் 13 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

200 ரன்களைக் கடக்க முடியவில்லை

தோல்விக்குப்பின் சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ நல்ல தொடக்கம் அளித்தும் எங்களால் 200 ரன்களைக் கடக்கமுடியவில்லை. எங்கள் வீரர்கள் கடுமையாக வென்றும் இறுதியில் ரன்சேர்ப்பு வேகம் குறைந்தது. எங்களுக்கு இருந்த அழுத்தம் மிகஅதிகம், இந்தத் தொடரில் அதிகமாக கற்றுக்கொண்டோம். விவ்ராந்த் அறிமுகப் போட்டியில் சிறப்பாக ஆடினார். கிளாசன், புவனேஷ்வர் தொடர் முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறப்பு” எனத் தெரிவித்தார்

மும்பை கண்டுபிடித்த ‘முத்து’ மத்வால்

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் சில ஜாக்பாட்களை அடித்துள்ளது. இளம் வீரர்களை மிகக்குறைவாக ரூ.20 லட்சத்துக்கு வாங்கிப் போட்டது, ஆனால், அவர்களின் திறமை ஈட்டிக் கொடுத்த வெற்றி, மும்பையை ப்ளே ஆஃப் சுற்றுவரை அழைத்துவந்துள்ளது.

அதில் நேஹல் வதேரா, ஆகாஷ் மத்வால் ஆகியோரும் ரூ.50லட்சத்துக்கு வாங்கப்பட்ட பியூஷ் சாவ்லாவும் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளனர்.

ஆகாஷ் மத்வாலின் இன்றைய பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. கிளாசனை ஆட்டமிழக்கச் செய்த பந்து பிரமாதமான பந்துவீச்சு. மத்வால் வீசிய பந்து, லேசான இன்ஸ்விங்குடன் கிளாசன் கால் இடுக்கில் புகுந்து ஸ்டெம்பை பதம் பார்த்ததை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

மத்வால் வீசிய 17-வது ஓவரில் 6 ரன்கள் கொடுத்து அகர்வால் விக்கெட்டையும், 19வது ஓவரை வீசிய மத்வால், கிளாசன், ப்ரூக் விக்கெட்டையும் வீழ்த்தினார். இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை மத்வால் கைப்பற்றினார்.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் கண்டுபிடித்த முத்து என்றால் அது மத்வால், வதேராதான். இருவரும் எதிர்காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய சொத்தாக மாறுவார்கள். பிசிசிஐ நிர்வாகத்தாலும் இருவரின் ஆட்டமும் கவனிக்கப்படும்.

ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மா

MI Vs SRH, ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

201 ரன்கள் இலக்கை துரத்தி ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன் 14 ரன்னில் புவனேஷ்வர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மிக முக்கியமான ஆட்டம் என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா மிகுந்த நிதானமாகவும், ஷாட்களை கவனத்துடன் ஆடினார்.

தன்னை நிலைப்படுத்தியபின், ரோஹித் சர்மா பழைய ஹிட்மேனாக உருவெடுத்து, பந்துகளை பவுண்டரி, சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டார். 3வது வீரராகக் களமிறங்கிய கேமரூன் க்ரீன், களத்துக்குவந்தது முதல் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினார். கிரீன் தான் சந்தித்த முதல் 10 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் விளாசி ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை உயர்த்தினார். 20 பந்துகளில் கிரீன் அரைசதம் அடித்தார்.

பவர்ப்ளேயில் மும்பை இந்தியன்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்து 10 ரன்ரேட்டில் நடைபோட்டது. ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய இன்று இரு கேட்ச் வாய்ப்புகள் கிடைத்தும் அதை சன்ரைசர்ஸ் வீரர்கள் கோட்டைவிட்டனர். கேட்சை கோட்டைவிட்டதற்கு மிகப்பெரிய விலையும் சன்ரைசர்ஸ் அணி கொடுத்தது.

ஹிட்மேன் மைல்கல்

ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்துவிட்டால் மதம்பிடித்தயானை என்பதை இன்றைய ஆட்டத்திலும் வெளிப்படுத்தினார். உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி ஓவர்களை வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் 5ஆயிரம் ரன்களை ரோஹித் சர்மா அடித்து மைல்கல்லை எட்டினார்.

பேட்ஸ்மேன்களின் சொர்க்கம்

MI Vs SRH, ஐபிஎல் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரோஹித் சர்மாவை ஃபார்முக்கு கொண்டுவந்த பெருமை சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களையே சேரும். இந்த சீசன் முழுவதும் ஒருஅரைசதத்தோடு, விரைவாக ஆட்டமிழந்து ஃபார்மில்லாமல் தவித்த ரோஹித் சர்மாவை மீண்டும் உசுப்பேற்றிவிட்டனர்.

பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான வான்ஹடே ஆடுகளத்தில் லைன்,லென்த்தை தவறவிடும் பந்துவீச்சாளர்கள் நிலைமை அதோகதிதான். பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கி, பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துவிடுவார்கள். அதுதான் இன்றைக்கு சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்கும் நேர்ந்தது.

ரோஹித் சர்மாவை(56ரன்கள், 8 பவுண்டரி,ஒருசிக்ஸர்) ஆட்டமிழக்கச் செய்ய போராடிய நிலையில் தாகர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 2வது விக்கெட்டுக்கு கேமரூன், ரோஹித் கூட்டணி 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ், கேமரூனுடன் சேர்ந்தார். ஒரு காலத்தி்ல சச்சின் டெண்டுல்கருக்கு வான்ஹடே மைதானத்தில் இருந்த வரவேற்பைப் போல் சூர்யகுமார் களமிறங்கியபோது, சூர்யா, சூர்யா என்ற கோஷத்தால் அரங்கம் அதிர வரவேற்புக் கிடைத்தது.

கேமரூன் முதல் சதம்

வெற்றிக்கு 30 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. உம்ரான் மாலிக் வீசிய 16-வது ஓவரில் கேமரூன், சூர்யா இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி 20 ரன்களைச் சேர்த்தனர். இதன் மூலம் 24 பந்துகளில் வெற்றிக்கு 21 ரன்களாகக் குறைந்தது.

சூர்யகுமார் வழக்கம்போல் தனது வித்தியாசமான ஷாட்களால் பவுண்டரி விளாசினார். கேமரூன் கிரீன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 47 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். கேமரூன் 100 ரன்களிலும்(8சிக்ஸர்,8பவுண்டரி), சூர்யகுமார் 25ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

நம்பிக்கையோடு இருக்கிறோம்

வெற்றிக்குப்பின் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ வெற்றி பெற வேண்டும் என்ற மனதுடன் களத்துக்கு வந்தோம், என்ன நடந்தாலும் கவலைப்படமாட்டோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்பினோம். எங்களின் சிறப்பான ஆட்டத்துக்கு வீரர்களே காரணம்.

இந்த சீசனில் நாங்கள் தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை, இருப்பினும் கடைசியில் நாங்கள் நினைத்ததுபோல் முடிவுகள் கிடைத்தன. கடந்துவந்த பாதையைத் திருப்பிப் பார்த்தால் பல முக்கிய தருணங்களை இழந்திருப்போம்.

குறிப்பாக பஞ்சாப், லக்னெள அணிக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றியைத் தவறவிட்டோம். இருப்பினும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எது நடந்தாலும் நாங்களே பொறுப்பேற்போம். ப்ளே ஆப் சென்றால் அதற்கு வீரர்களே உரித்தானவர்கள்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c9e38nvm5jjo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மும்பையை ப்ளே ஆஃப் அனுப்பிய குஜராத்; ஆர்சிபி செய்த மோசமான தவறுகள்

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 22 மே 2023, 02:36 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆர்சிபி அணியை நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 10வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஆர்சிபியின் வெற்றியைக் காணக் காத்திருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களின் இதயத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து அரங்கை நிசப்தமாக்கினார் சுப்மன் கில்.

நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி அணியைவிடக் குறைவாக, மைனஸில் இருந்தபோதிலும் 16 புள்ளிகள் பெற்றதால், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது.

சன்ரைசர்ஸ் அணியை வென்றபோதிலும் மும்பை இந்தியன்ஸும், மும்பை ரசிகர்களும் அந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியாமல் இருந்தனர். ஆனால், குஜராத்தின் வெற்றிக்குப் பிறகு மும்பையில் கொண்டாட்டம் தொடங்கியது.

இனிமேல், எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா ஆகியோருக்கு இடையிலான ஆட்டமாக ப்ளே ஆஃப் சுற்று இருக்கப் போகிறது.

மழை காரணமாக பெங்களூரு சின்னசாமி அரங்கில் ஆர்சிபி-குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டம் நடக்குமா, நடக்காதா எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு கிங் கோலியின் ஆர்ப்பரிப்பான 2வது சதம் விருந்தாக அமைந்தது.

பெங்களூருவை மௌனமாக்கிய இளவரசர்

ஆனால், கோலிக்கு பதிலடியாக குஜராத்தின் “இளவரசர்” சுப்மன் கில் அடித்த சதம் ஆர்சிபியை தோல்வியின் பாதையில் இழுத்துச் சென்றது. இதைச் செய்ததன் மூலம், அரங்கில் இருந்த 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பெங்களூருவையும் கில் மௌனமாக்கினார்.

ஆர்சிபி அணியின் ஒவ்வொரு விக்கெட் வீழ்ச்சிக்கும் ஏகோபித்த ஆதரவைத் தந்து, ஊக்கப்படுத்திய ரசிகர்கள் மத்தியில், தோல்வி அடைந்துவுடன், அரங்கத்தில் இனம்புரியாத அமைதி சூழ்ந்தது.

குஜராத் டைட்டன்ஸ் வெற்றியை குஜராத் அணியினர் மட்டுமே கொண்டாடிக்கொண்டிருந்த தனித்துவமான காட்சி மட்டும் அரங்கேறியது. ஆர்சிபி ரசிகர்கள் சோகத்துடன் அரங்கிலிருந்து வெளியேறினர்.

ஆர்சிபி 6-ஆவது இடம்

லீக் சுற்றுகளின் முடிவில், குஜராத் அணி 14 போட்டிகளில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. சிஎஸ்கே அணி 17 புள்ளிகளையும், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 17 புள்ளிகளையும், மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளையும் பெற்றன. மும்பை அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.044 ஆகவே இருந்தது.

இதில் ஆர்சிபி அணி 14 புள்ளிகள் பெற்றாலும் தோல்வியால் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. நிகர ரன்ரேட்டும் பிளஸ் 0.135 ஆகக் குறைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 0.148 ரன்ரேட்டில் 5ஆவது இடத்தைப் பிடித்தது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

சென்னையில் தகுதிச்சுற்று ஆட்டங்கள்

சென்னையில் தகுதிச்சுற்று ஆட்டமும், குவாலிஃபயர் ஆட்டமும் நடக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை(23ஆம்தேதி) நடக்கும் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

வரும் 24ஆம் தேதி சென்னையில் நடக்கும் எலிமினினேட்டர் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது.

கில், விஜய் சங்கர் சாகசம்

மழை காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கினாலும், 20 ஓவர்கள் நடந்தது. முதலில் பேட் செய்த ஆர்பிசி கோலியின் ஆர்ப்பரிப்பான சதத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது.

198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் அற்புதமான சதத்தால் 5 பந்துகள் மீதிம் இருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

52 பந்துகளில் 102 ரன்கள்(8சிக்ஸர்,5பவுண்டரி) அடித்த சுப்மான் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். 35 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த தமிழக வீரர் விஜய் சங்கர் ஆட்டம் ஆகியவை குஜராத் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றின.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

123 ரன்கள் சேர்த்த இருவரின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இருவரையும் தொடக்கத்திலேயே ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பிரிக்கத் தவறியதற்கான விலையை கடைசியில் கொடுத்தனர்.

சுப்மன் கில், விஜய் சங்கர் இருவரும் களத்தில் நங்கூரமிட்ட பிறகு, ஆர்சிபி பந்துவீச்சை வெளுத்துக்கட்டினர். சிராஜ், பர்னல், வைஷாக், பிரேஸ்வெல், சர்மா பந்துவீச்சை பறக்கவிட்டனர்.

பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு ஆடுகளத்தில், ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கை ஓங்குவதற்கு சிறிதுகூட வாய்ப்பு தராமல் கில், சங்கர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஐபிஎல் சீசனில் சுப்மன் கில் 680 ரன்களுடன் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சிஎஸ்கேவின் கான்வே 585 ரன்களுடன் உள்ளனர்.

முதலிடத்தில் டூப்ளெஸ்ஸி 730 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை வைத்திருந்தாலும், போட்டித்தொடரின் முடிவில் ஆரஞ்சு தொப்பியை வாங்க கில்லுக்கு அதிக வாய்ப்புள்ளது.

கோலியின் சாதனைகள்

தோல்வி அடைந்தாலும், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி கிங் கோலி என்பதை நிரூபித்துவிட்டுத்தான் களத்திலிருந்து வெளியேறினார்.

விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த கிறிஸ் கெயிலின் 6 சதத்தை முறியடித்து 7வது சதத்தை கோலி பதிவு செய்தார்.

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆர்சிபி அணியின் “கேஜிஎஃப்” என அழைக்கப்படும் கேப்டன் டூப்ளெஸ்ஸி 730 ரன்கள், விராட் கோலி 639 ரன்கள், மேக்ஸ்வெல் 400 ரன்கள் எடுத்தனர்.

ஆர்சிபியின் நம்பிக்கை பந்துவீச்சாளர் சிராஜ் இந்த சீசனில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சதம் அடித்தவர்களில் 2020இல் ஷிகர் தவண், 2022இல் ஜாஸ் பட்லர் வரிசையில் 2023இல் விராட் கோலியும் இணைந்தார்.

கோலியின் சதமும், கில் சதமும் ஒன்றா?

விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் 2வது சதத்தை 60 பந்துகளில் அடித்தார். அவரின் கணக்கில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கின.

ஆனால் கோலி எடுத்துக்கொண்ட பந்துகளைவிட 8 பந்துகள் குறைவாக சுப்மன் கில் 52 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். இருவரும் சதம் அடித்தாலும், கில் சதம் அடித்த சூழல் வேறு, கோலி சதம் அடித்த சூழல் வேறு.

ஒருபுறம் விக்கெட் வீழ்ச்சி, அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கொண்டு செல்ல பெரிய ஸ்கோரை எட்ட வேண்டும், விக்கெட்டை பறிகொடுத்துவிடக்கூடாது எனப் பல்வேறு நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் சுமந்து கோலி சதம் அடித்தார் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சுப்மன் கில் அடித்த சதம் ரிலாக்ஸாக அடிக்கப்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிட்டது. இந்த ஆட்டத்தில் தோற்றாலும் கவலையில்லை, வென்றாலும் சாதிக்கப்போவதில்லை என்ற சுதந்திரமான மனதுடன் கில் விளையாடினார் என்று பெங்களூரு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.

கோலியின் ஆட்டம் “ஆல்டைம் கிரேட்” என்றுகூறி ரசிகர்கள் அவரது சதத்தை ரசிக்கின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

கோலி-டூப்ளெஸ்ஸி மெகா கூட்டணி

டாஸில் தோற்ற ஆர்சிபி முதலில் பேட் செய்தது. விராட் கோலி, டூப்ளெஸ்ஸி கூட்டணி ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினர். ஷமி வீசிய 3ஆவது ஓவரில் டூப்ளெஸ்ஸி 4 பவுண்டரிகளை விளாசி 16 ரன்கள் சேர்த்தார்.

பதிலடியாக விராட் கோலியும், யாஷ் தயால் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி 17 ரன்கள் குவித்தார். பவர் ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 62 ரன்கள் சேர்த்தது.

இருவரின் அதிரடியைப் பார்த்த ஹர்திக் பாண்டியா 5வது ஓவரிலேயே ரஷித் கான், நூர் அகமதுவை பந்துவீச அழைத்தார். அதற்குப் பலன் கிடைக்கும் விதமாக நூர் அகமது வீசிய 8வது ஓவரில் டூப்ளெஸ்ஸி 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 67 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்த சீசனில் டூப்ளெஸ்ஸி, கோலி ஜோடி மட்டும் 939 ரன்கள் சேர்த்தனர். 2016இல் கோலி, டீவில்லியர்ஸ் ஜோடியும் இதே ரன்களைத்தான் குவித்தது.

அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர், பவுண்டரி என சிறிய கேமியோ ஆடிவிட்டு 11 ரன்னில் ரஷித் கான் பந்தில் போல்டாகி வெளியேறினார். நான்காவதாகக் களமிறங்கிய லாம்ரோர் ரன் ஏதும் எடுக்காமல் நூர் அகமது பந்தில் விக்கெட் கீப்பர் சாஹாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பிரேஸ்வெல், கோலியுடன் சேர்ந்தார். பிரேஸ்வெல் ஸ்ட்ரைக்கை கோலியிடம் வழங்க கோலி ஆட்டத்தைக் கையில் எடுத்தார். அதிரடியாகவும் பொறுப்பாகவும் ஆடிய கோலி, 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். பிரேஸ்வெல் 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஷமி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு கோலி, பிரேஸ்வெல் 47 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

தினேஷ் கார்த்திக்கின் டக்அவுட் சாதனை

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் 17வதுமுறையாக தினேஷ் கார்த்திக் டக்அவுட் ஆகி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் ரோஹித் சர்மா 16 முறை டக்அவுட் ஆகியிருந்தார், அதை டிகே முறியடித்துவிட்டார். இந்த சீசன் முழுவதும் தினேஷ் கார்த்திக்கின் மோசமான ஆட்டம் தொடர்ந்தது. 133 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி தடுமாறியது.

பின்வரிசையில் பெரிய ஹிட் அடிக்க பேட்ஸ்மேன்கள் இல்லாத சூழலில் கோலி மட்டும் களத்தில் பெரிய ஹிட்டராக இருந்தார். அடுத்து வந்த அனுஜ் ராவத், கோலியுடன் சேர்ந்து ஒத்துழைத்து பேட் செய்தார்.

விராட் கோலி அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். ரன் ரேட்டை குறைக்கும் வகையில் ரஷித் கான், நூர் அகமது பந்துவீச்சு, ஆர்சிபி பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலாக இருந்தது.

இத்தனை சவால்களையும் கடந்து கோலி, 25 பந்துகளில் அடுத்த 50 ரன்களை அடித்து ஐபிஎல் தொடரில் 2வது சதத்தை நிறைவு செய்தார். அரைசதம் அடிக்க 35 பந்துகள் எடுத்துக்கொண்ட கோலி, அடுத்த 50 ரன்களை 25 பந்துகளில் எட்டினார். கோலி 101 ரன்களுடனும், ராவத் 23 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

10 ஓவர்கள் முடிவில் 93 ரன்கள் சேர்த்திருந்த ஆர்சிபி, கோலியின் ஆட்டத்தால், அடுத்த 10 ஓவர்களில் 104 ரன்கள் சேர்த்தது. அதிலும் கடைசி 3 ஓவர்களில் மட்டும் 42 ரன்கள் குவிக்கப்பட்டது.

ஆர்சிபி செய்த தவறுகள்

ஆர்சிபி அணி அடித்த 197 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர், சேஸிங் செய்ய சவாலான ஸ்கோர். ஆனால், இந்த ரன்களை டிஃபெண்ட் செய்ய முடியாமல் இருந்தது பந்துவீச்சாளர்களின் தோல்விதான். பர்னர், வைஷாக் இருவரும் ரன்களை வாரிக்கொடுத்தனர்.

ஹர்ஷல் படேல் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசினார். இதுபோன்ற முக்கிய ஆட்டத்தில் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்களை வைத்திருப்பது அவசியம்.

ஹசரங்காவை ஏன் இந்த ஆட்டத்தில் களமிறக்கவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. விக்கெட் டேக்கரான ஹசரங்கா இருந்திருந்தால், நிச்சயம் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கும்.

அதேபோல பேட்டிங்கிலும் நடுவரிசையின் சுமை முழுவதும் கேஜிஎஃப் மீது மட்டுமே சீசன் முழுவதும் இருந்தது. மேக்ஸ்வெல், கோலி, டூப்ளெஸ்ஸி மூவரில் யாரேனும் சிறப்பாகச் செயல்பட்டால்தான் நல்ல ஸ்கோர் கிடைத்தது.

பலவீனமான நடுவரிசை, ஃபினிஷர்கள் இல்லாதது, முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது ஆகியவை ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லத் தடையாக இருந்தன.

“நடுவரிசையில் பேட்ஸ்மேன்கள் இல்லை”

தோல்விக்குப்பின் ஆர்சிபி கேப்டன் டூப்ளெஸ்ஸி கூறுகையில் “உண்மையில் வேதனையாக இருக்கிறது. இன்று நாங்கள் வலிமையான அணியுடன் மோதினோம், கில்லின் ஆட்டம் பிரமாதம். 195 முதல் 200 ரன்கள் நல்ல ஸ்கோர்தான். சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும்.

பேட்டிங்கில் டாப்-4 நன்றாக செயல்பட்டனர், பங்களிப்பு செய்தனர். இந்த சீசன் முழுவதும் சில இடங்களில் மட்டும் ரன்களை விட்டுவிட்டோம்.

குறிப்பாக நடுப்பகுதி ஓவர்களில் பல்வேறு தவறுகள் நடந்தன. நல்ல நடுவரிசை பேட்டிங் எங்களுக்குத் தேவை. கடந்த சீசனில் டிகே இருந்தார், இந்த சீசனில் இல்லை” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

நீடித்திருந்த கில், விஜய் சங்கர்

198 ரன்கள் இலக்கைத் துரத்தி சுப்மன் கில், சாஹா களமிறங்கினர். சாஹாவின் (12 ரன்கள்) விக்கெட்டை தொடக்கத்திலேயே சிராஜ் கைப்பற்றினார். அதன்பின் விஜய் சங்கர் களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். இருவரின் நிதானமான ஆட்டம், நங்கூரம் பாய்ச்சியபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார்கள்.

விஜய் சங்கர் ஆட்டம் நேற்று மிகச் சிறப்பாக இருந்தபோதிலும், அவருக்கு ஏராளமான நல்வாய்ப்புகள் கிடைத்தன. அவரது ஷாட்களில் தெரிந்தது. சங்கர் அடித்த பல ஷாட்கள் பேட்டின் முனையில் பட்டு கேட்ச் ஆகாமல் பவுண்டரி நோக்கிச் சென்றன. இருவரும் சேர்ந்து பவர்ப்ளேவில் 51 ரன்கள் சேர்த்தனர்.

ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பையும் வழங்காத வகையில் விஜய் சங்கர், கில் ஆட்டம் இருந்தது. எந்தவித தவறான ஷாட்களையும் ஆடவில்லை, சுழற்பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆடி கால்காப்பிலும் வாங்கவில்லை. இதனால் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர்.

சுப்மன் கில் 29 பந்துகளிலும், விஜய் சங்கர் 34 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். அதிலும் விஜய் சங்கர் அரைசதத்தை வைஷாக் வீசிய 15வது ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி நிறைவு செய்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அடுத்து வந்த சனகா(0), மில்லர்(6) ஆட்டமிழந்தது ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்தாலும், தூணாக நின்று ஆடிய கில்லை ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தபோதிலும் கில் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

தனி ஒருவன் கில்

18 பந்துகளில் 34 ரன்கள் குஜராத் வெற்றிக்குத் தேவைப்பட்டது. சிராஜ் வீசிய 18வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசி 15 ரன்களை கில் சேர்த்தார்.

ஹர்சல் படேல் வீசிய 19வது ஓவரிலும் சிக்ஸர் உள்ளிட்ட 11 ரன்களை கில் சேர்த்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. பர்னல் இரண்டு வைட் பந்துகளை வீசிய நிலையில், கில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். கில் 52 பந்துகளில் 104 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஸ்பெஷலாக விளையாடுங்கள் எனக் கேட்டதில்லை

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “எங்களின் வெற்றியைத் தொடரவே விரும்பினோம், லீக் சுற்றில் உயர்வாகவே முடிக்க எண்ணிணோம்.

ஒரு பந்துவீச்சாளராக , கில் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பை வழங்கவே இல்லை. கில் பேட்டிங்கை பார்த்து மற்ற பேட்ஸ்மேன்களும் நம்பிக்கை பெற்றனர்.

197 ரன்களை சேஸிங் செய்ய முடியும் என்று நம்பினோம். பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். விராட் கோலியின் ஆட்டம் ஸ்பெஷலாக இருந்தது.

வீரர்களிடம் சிறப்பாகச் செயல்படுங்கள் என்று கேட்டதில்லை. இந்த ஆண்டு சவாலாக இருக்கிறது, அனைத்து வெற்றிகளுக்கும் வீரர்களே உரித்தானவர்கள்,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c2xpjplv83do

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெய்ஸ்வால், சுப்மான் கில்: சச்சின், கோலி வரிசையில் இந்திய அணியின் அடுத்த 'ரன் மெஷின்' யார்?

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

நடப்பு ஐ.பி.எல். தொடர் இரண்டு திறமையான இளம் நட்சத்திரங்களை அடையாளம் காட்டியுள்ளது. ஒருவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், மற்றொருவர் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மான் கில். தொடக்க ஆட்டக்காரர்களான இருவருமே தத்தமது அணிகளுக்காக அதிரடியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தங்களது அணிகளுக்கு பேட்டிங்கில் தூணாக திகழும் அவர்கள் இருவரும் பல போட்டிகளில் தனி ஒருவராகவே எதிரணிகளை கலங்கடித்துள்ளனர். சச்சின், கோலி வரிசையில் அடுத்த இடம்பெறப் போவது யார் என்ற கேள்விக்கு விடையாக இருவரையும் முன்னிறுத்தி இப்போதே பட்டிமன்றங்கள் தொடங்கிவிட்டன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருவரின் செயல்பாடுகளை அலசி ஆய்வு செய்வதுடன், கிரிக்கெட் ஜாம்பவான்கள், நட்சத்திரங்கள், நிபுணர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் என்பதையும் பார்க்கலாம்.

இளம் புயல் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்த ஐ.பி.எல். தொடர் மூலம் இந்திய கிரிக்கெட் அரங்கில் இளம் புயலாக தன்னை அடையாளம் காட்டியுள்ளார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அவர் இடது கை ஆட்டக்காரர். 21 வயதே நிரம்பியவர். ஐ.பி.எல். லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃபுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது. அந்த அணி நடப்பு ஐ.பி.எல்.லை மிகவும் வெற்றிகரமாகவே தொடங்கியது.

லீக் சுற்றில் முதல் பாதி ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே முன்னிலை வகித்தது. ஆனாலும் பிற்பாதியில் அந்த அணி சறுக்கியதால் தற்போது தொடரை விட்டே வெளியேற்றப்பட்டுவிட்டது. ஆனாலும், அந்த அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலின் அச்சமற்ற அதிரடி ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களில் இருந்து அகலாது.

லீக் சுற்றின் 14 போட்டிகளில் 382 பந்துகளை எதிர்கொண்டுள்ள ஜெய்ஸ்வால் 625 ரன்களைக் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 163.61. சராசரி 48.08. ஒரு சதமும், 5 அரை சதங்களும் அடித்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் 82 பவுண்டரிகளையும், 26 சிக்சர்களையும் அவர் விளாசியுள்ளார். ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடாமல், ஒரே ஐ.பி.எல். தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

விராட் கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக மிக சொற்ப ரன்களில் அவர் சதத்தை தவறவிட்டார். அதாவது இரண்டாவது பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதற்குள் இலக்கை அடைந்துவிட்டதால் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார் ஜெய்ஸ்வால். அந்த போட்டியில் வரலாற்றிலேயே உச்சகட்டமாக முதல் ஓவரிலேயே 26 ரன்கள் அடித்து 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்த அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

மும்பை அணிக்கு எதிராக தனி ஆவர்த்தனம் செய்து அதிரடியாக 124 ரன்களைக் குவித்ததே அவரது அதிகபட்ச ரன்களாகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஷாட்டுகள் அனைத்தும் தரமானவை. சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த அனுபவம் மிக்க வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சுழற்பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா ஆகியோரின் பந்துகளில் அவர் சர்வசாதாரணமாக சிக்சர்களை விளாசி அசத்தினார்.

இங்கிலாந்தின் பிரம்மாஸ்திரமாக, எதிரணிகளை கதிகலங்கச் செய்யும் ஜோப்ரா ஆர்ச்சர் ஓவரில் அடுத்த பந்துகளில் மிட் விக்கெட் திசையில் ஜெய்ஸ்வால் சிக்சர்களை விளாசி பிரமிக்க வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றுப் போனாலும் கூட, தனி ஒருவனாக களமாடி சதம் கண்ட ஜெய்ஸ்வாலே அந்த ஆடடத்தில் நாயகனாக ஜொலித்தார்.

ஜெய்ஸ்வாலுக்கு தோனி பாராட்டு

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் பவுண்டரி மழை பொழிந்தார். இதனால், மறுமுனையில் 'ஜோஸ் தி பாஸ்' ஜோஸ் பட்லர் ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதையே பார்வையாளர்கள் மறந்துவிட்டனர். "ஜோஸ் பட்லருடன் பேட்டிங் செய்துகொண்டு, அவரை விட ஆக்ரோஷமாக இருக்கும் பேட்ஸ்மேனை உலக கிரிக்கெட்டில் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால் இந்த இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால் அவ்வாறு செய்துள்ளார்," என்று அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த பீட்டர்சன் தெரிவித்தார்.

அந்தப் போட்டியில் 26 பந்துகளிலேயே அரைசதத்தை பூர்த்தி செய்த ஜெய்ஸ்வால், 43 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். போட்டி முடிந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இன்னிங்ஸைப் பாராட்டி, எட்டுவதற்கு சிரமான இலக்கை ராயல்ஸ் அணி நிர்ணயித்ததே சென்னையின் தோல்விக்குக் காரணம் என்று கூறினார். இன்னிங்ஸின் தொடக்கத்தில் யஷஸ்வி ஆக்ரோஷமான பேட்டிங் செய்த விதம், போட்டியின் திசையை ராஜஸ்தானை நோக்கித் திருப்பியது என்று அவர் கூறினார்.

ஜெய்ஸ்வாலா? சுப்மான் கில்லா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடப்பு ஐபிஎல் போட்டிக்கு முன் சையது முஷ்டாக் அலி போட்டியில் மும்பை அணி கோப்பையை வென்றதில் யஷஸ்விக்கு முக்கிய பங்கு உண்டு. ஒன்பது இன்னிங்ஸ்களில் அவர் 33 ரன் சராசரி மற்றும் 142 ஸ்ட்ரைக் ரேட்டில் 266 ரன்கள் எடுத்தார். மும்பையின் இன்னிங்ஸுக்கு வலுவான அடித்தளம் ஏற்பட இது உதவியது.

இது தவிர அவர் 15 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 1845 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோரான 265 ரன்களும் அடங்கும்.

பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் என்று வர்ணிக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், நடப்பு ஐ.பி.எல். தொடரில் தன்னால் 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்து சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். ஒரு புறம் விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்து கொண்டிருக்கும் போது, எந்தவொரு நெருக்கடிக்கும் இடம் கொடுக்காமல் சரியான பார்ட்னர்ஷிப் இல்லாமலேயே ஜெய்ஸ்வால் தனி ஆவர்த்தனம் செய்ததன் மூலம் இளம் வீரர்களில் தனித்துவம் மிக்க ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

3 வித போட்டிகளிலும் அசத்தும் சுப்மான் கில்

மறுபுறம் கடந்த 3 மாதங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இடம் பிடிப்பதற்கான வலுவான போட்டியாளராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலதுகை தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். கேஎல் ராகுல் காயமடைந்துள்ள நிலையில் ஷிகர் தவான் தடுமாறுவதால் ரோகித் சர்மாவுடன் உலகக் கோப்பையில் களமிறங்கும் அளவுக்கு தனது திறமையை நிரூபித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடி சதம் கடந்த சுப்மான் கில் அதே பார்மை நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் தொடர்கிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக, 14 போட்டிகளில் 446 பந்துகளை எதிர்கொண்டு 680 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் இரண்டு சதமும், 4 அரைசதங்களும் அடங்கும். அவரது சராசரி 56.66. ஸ்டிரைக் ரேட் 152.46. மொத்தம் 62 பவுண்டரிகள், 22 சிக்சர்களை அவர் விளாசியுள்ளார். இருமுறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் செயல்பாட்டை மட்டும் கருத்தில் கொண்டால், ஸ்டிரைக் ரேட்டில் ஜெய்ஸ்வால் மேலானவராக இருக்கிறார். அடித்து நொறுக்க வேண்டிய தொடக்க வரிசையில் ஜெய்ஸ்வாலைக் (166.18) காட்டிலும் சுப்மன் கில்லின் ஸ்டிரைக் ரேட் சற்று குறைவுதான்.

ஜெய்ஸ்வாலா? சுப்மான் கில்லா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் என்றால் சுப்மான் கில் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன். ஜெய்ஸ்வால், சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் கால் பதிக்கவில்லை. ஆனால், சுப்மான் கில்லோ ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று விதமான போட்டிகளிலும் அழுத்தமாக தடம் பதித்துவிட்டார். கடந்த ஜனவரியில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் கடந்து அசத்தினார். 149 பந்துகளைச் சந்தித்த அவர், 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகளுடன் அதனை சாதித்தார். 43-ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 150 ரன்களை எட்டினார். 48 மற்றும் 49-ஆவது ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை அடித்து இரட்டைச் சதத்தை எட்டினார்.

சுப்மன் கில்லின் ஆட்டம் 360 டிகிரி ஆட்டம் என்று கூற முடியாது. ஆனால் எல்லா வகையான கிரிக்கெட் ஷாட்களையும் அவர் ஆடுவதை களத்தில் பார்க்க முடிகிறது. புல் ஷாட்களும், கவர் டிரைவ்களும் ஒரு கிளாசிக் கிரிக்கெட் வீரரை நினைவூட்டக் கூடியவை. இரண்டு ஃபீல்டர்களுக்கு நடுவே குறுகிய இடைவெளியிலும் பந்தை துல்லியமாக பவுண்டரிக்கு அனுப்புவதில் அவர் தேர்ச்சி பெற்றவர்.

ஜெய்ஸ்வாலா? சுப்மான் கில்லா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு நாள் போட்டியில் குறைந்த வயதில் 150 ரன்களை அடித்தவரும், 200 ரன்களை அடித்தவர் என்ற பெருமை சுப்மன் கில்லுக்கு கிடைத்திருக்கிறது. ஜாம்பவான்கள் பலருக்கும் கிடைக்காத பெருமை இது. அதே போல் ஒரு நாள் போட்டியில் அதி வேகமாக 1000 ரன்களை அடித்தவர் என்ற சாதனையையும் கில் படைத்திருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த சூப்பர் ஸ்டாராக சுப்மான் கில் முளைவிடும் நேரத்தில்தான் அவருக்குப் போட்டியாக ஜெய்ஸ்வால் உருவெடுப்பார் என்ற எண்ணத்தை நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தியுள்ளது. எனினும், 21 வயதான யஷஸ்விக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவர் இன்னும் தனது உச்சத்தை எட்டவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகி வரும் வீரராக உள்ளார். விரைவில் அவர் அணியில் இடம்பெறும் வாய்ப்பும் உள்ளது. இதற்கு தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியது போல் அவர் தொடர்ந்து பெரிய இன்னிங்ஸுகளை விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜெய்ஸ்வாலா? சுப்மான் கில்லா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நேரத்தில், ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் வீரரான டாம் மூடியின் கருத்து இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்மான் கில்லும், ஜெய்ஸ்வாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 விதமான ஆட்டங்களிலும் தொடக்க வீரர்களாக களம் காண்பார்கள். இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் உண்டு என்பது அவரது கருத்து.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

அவரது கூற்றுப்படியே, வலது கை ஆட்டக்காரரான சுப்மான் கில்லும் இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வாலும் இணைந்து இந்தியாவின் சிறந்த தொடக்க ஜோடியாக உருவெடுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.

https://www.bbc.com/tamil/articles/crgevzpr52jo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னை விட சிறந்த பந்துவீச்சாளராக மதீசவை மாற்றுவேன் - லசித்மலிங்க

Published By: RAJEEBAN

22 MAY, 2023 | 04:01 PM
image

ஐபிஎல் போட்டிகளின் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்னை நோக்கி திருப்பியுள்ள இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரனவை தன்னை விட சிறந்த பந்து வீச்சாளராக மாற்றுவதே தனது நோக்கம் என வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்

மதீசபத்திரன டெஸ்ட்போட்டிகளிலும் விளையாடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

 

கிரிக்கின்போவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

Lasith-Malinga-coaches-Matheesha-Pathira

 

கேள்வி - மதீசபத்திரன குறித்து நீங்கள் எப்போது கேள்விப்பட்டீர்கள் 

பதில்-

2020 இல் இடம்பெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கிண்ணப்போட்டியின் பின்னர்  எனக்கு மதீசபத்திரன குறித்து தெரியவந்தது.

இலங்கை கிரிக்கெட்டிற்காக ஆலோசகராக பணிபுரிந்துகொண்டிருந்த மகேலஜெயவர்த்தன என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

மல்லி கண்டியிலிருந்து ஒரு பையன் இருக்கின்றான் அவன் உன்னை போல பந்துவீசுகின்றான் வேகமாக பந்துவீசுகின்றான் ஆனால் கட்டுப்பாடு இல்லாமல் இரண்டு பக்கமும் பந்துவீசுவதால் போட்டிகளில் அவனை விளையாடவைப்பது கடினம் கட்டுப்பாடு இல்லை உங்களால் ஏதாவது செய்ய முடியுமா என கேட்டார் என 

ஆகவே அவர் மதீசவை என்னிடம் அனுப்பினார் நாங்கள் கெத்தாராமவில் சந்தித்தோம், அவருக்கு நிறைய அனுபவம் இருக்கவில்லை,ஆனால் அவர் அச்சமற்ற மனஉறுதி மிக்கவர் என அவரை பார்த்தவுடன் நான் அறிந்துகொண்டேன் அது மிகவும் முக்கியம்

நான் அவரிடம் எந்த வகைபோட்டியில் விளையாடுவது என்பது குறித்து தற்போது தீர்மானிக்காதே இலங்கை அணிக்கு எந்தவகை போட்டியில் நீ தேவைப்படுகின்றாயோ அதில் நீ விளையாடவேண்டும் என தெரிவித்தேன் 

நீ காயமடைந்தால் எந்த வகை போட்டியில்  விளையாடவேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்,ஆனால் நீ இந்த பாணியில் பந்துவீசுவதால் அது உனக்கு கடினமாகயிருக்காது என தெரிவித்தேன்.

 

இந்த முறை ஐபிஎல் தொடரில் அவரது பந்து வீச்சு குறித்து உங்கள் கருத்து  என்ன?

பதில்- அவர் ஐபிஎல்லில் சிறப்பாக பந்து வீசுகின்றார்  ஆனால் அவர் சர்வதேச போட்டிகளிற்கு தன்னை இன்னமும் தயார்படுத்தவேண்டும்,சர்வதேச போட்டிகளில் 12 வீரர்கள் ஒரு அணியில் விளையாடுவதில்லை,ஐபிஎல்லில் மாத்திரம் அது சாத்தியம்

ஐபிஎல்லில் இறுதிஓவர்களிற்கே சிஎஸ்கே அவரை பயன்படுத்துகின்றது.

ஆனால் தேசிய அணிக்காக விளையாடினால் நீங்கள் நிச்சயமாக பவர்பிளே ஓவர்களை வீசவேண்டியிருக்கும்.அங்கு அவருக்கு ஸ்விங் தேவையாகயிருக்கும்,அவரால் தற்போது ஸ்விங் பண்ண முடியவில்லை.

சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கான புத்திசாலித்தனம் அவருக்கு வேண்டும்,ஒரு சில போட்டிகளின் பின்னர் உங்களை எப்படி விளையாடவேண்டும் என்பதை எதிரணியினர் அறிந்துகொள்வார்கள்.

அந்தகட்டத்திலிருந்து  தப்பிபிழைத்து எப்படி தொடர்ந்தும் பந்துவீசுவதை என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

அவர் பத்து டெஸ்ட்போட்டிகளிலாவது விளையாடவேண்டும்,இதன் மூலமே பந்து வீசுவதற்கான உடல்தகுதியை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

நான் 30டெஸ்ட்போட்டிகளில்  விளையாடினேன் ஒருநாள் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான உடல்தகுதியை நான் பெற்றுக்கொள்ள அதுவே உதவியது.

நீங்கள் ஒரு இனிங்சில் 20-25 ஓவர்கள் வீசும்போது உங்கள்திறனை தொடர்ந்து தக்கவைத்திருக்கவேண்டும்.

mathessa.jpg

கேள்வி- டோனி அவரை கையாளும் விதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்-மதீச பத்திரனவால் ஆரம்ப ஓவர்களை வீசமுடியாது என்பதை டோனி உணர்ந்துள்ளார்,

மேலும் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாத இந்திய துடுப்பாட்டவீரர்களிற்கு எதிராகவே டோனி மதீசபத்திரனவை பந்து வீசச்சொல்கின்றார்.

அவரது பந்துவீசும் பாணி மற்றும் 145 கிலோமீற்றர் வேகத்தில் அவரை அவர்கள் எதிர்கொள்வது கடினம்.

அது எம்எஸின் 20 வருட அனுபவத்தின் பலன்.அடித்து ஆடும் வீரர்களிற்கு எதிராக மதீச பத்திரன பந்துவீச்சு வேகத்தை குறைக்கவேண்டும் என டோனிஅவரை கேட்டுக்கொள்கின்றார்.

ரோகித்சர்மா மகேலஜெயவர்த்தன விராட்கோலி போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களிற்கு எதிராக பந்துவீச மதீசபத்திரன சிரமப்பபடுவார்.

 

கேள்வி

மதீச பத்திரன டெஸ்ட்போட்டிகளில் விளையாடக்கூடாது என டோனிதெரிவித்துள்ளார்- நீங்கள்அதனை கடுமையாக எதிர்க்கின்றீர்கள்?

பதில்-

டோனி மதீசபத்திரன ஐசிசி போட்டிகளில் விளையாடவேண்டும் என டோனி தெரிவிக்கின்றார்- அவர் வேடிக்கைக்காக இதனை தெரிவிக்கின்றாரா என்பது எனக்கு தெரியவில்லை.( சிரிக்கின்றார்)

தேசிய அணிக்காக விளையாடும்போது ஐசிசி போட்டிகளில் மாத்திரம் விளையாடுவது கடினமான விடயம்.

அவர் டெஸ்ட்போட்டிகளில் விளையாடக்கூடாது என எவராவதுதெரிவிக்கின்றார்கள் என்றால் அவர் காயமடைந்துவிடுவார் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள்அவ்வாறு தெரிவிக்கி;ன்றனர்.

நான் முதலில் டெஸ்ட்போட்டிகளிலேயே விளையாடினேன் என்னை டெஸ்ட்போட்டிகளில் விளையாடவேண்டாம் என எவரும் தெரிவிக்கவில்லை.

Matheesha-Pathirana.jpg

கேள்வி- மதீச பத்திரனவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக எவ்வாறு வளர்த்தெடுக்கவேண்டும்

பதில்-நான் எப்படியாவது மதீசபத்திரனவை என்னை விடசிறந்த பந்துவீச்சாளராக மாற்ற விரும்புகின்றேன்,

அடுத்ததொடரில் நான் எப்படியாவது இலங்கை அணியுடன் இணைந்து அவர் சில ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை  உறுதி செய்ய முயல்வேன்.

https://www.virakesari.lk/article/155878

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 23 மே 2023, 06:13 GMT
    புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்

புள்ளி விவரங்கள் சாதகமாக இல்லை; பலவீனங்கள் தென்படுகின்றன - இவற்றைத் தாண்டி குஜராத் அணியை தோற்கடிக்க சென்னைக்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா?

சென்னை அணி வெற்றி பெற என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன? எந்தெந்த குஜராத் வீரர்கள் சென்னைக்கு முட்டுக்கட்டையாக இருக்கப் போகிறார்கள்?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது 4 முறை சாம்பியன்பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

வரும் 24ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் லக்ளென சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். குவாலிஃபயர் சுற்றில் தோற்கும் அணி 2வது தகுதிச்சுற்றில் விளையாடத் தகுதிபெறும்.

எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி, 2வது தகுதிச்சற்றில், குவாலிஃபயரில் தோற்கும் அணியுடன் விளையாடும். 2வது தகுதிச்சுற்று, இறுதி ஆட்டம் ஆகியவை ஆமதாபாத்தில் நடக்கின்றன.

 

சிஎஸ்கே ‘லைட்’

ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய அதே நுணுக்களைப் பின்பற்றியும், அதைப்போலவே குஜராத் டைட்டன்ஸ் அணியும் செயல்பட்டு வருவதால், ‘சிஎஸ்கே-லைட்’ என்றே குஜராத் டைட்டன்ஸ் அணியை அழைக்கலாம்.

சிஎஸ்கே நிர்வாகத்தைப் போன்று குஜராத் அணி நிர்வாகமும் எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை என்று கூறப்படுவதுண்டு.. பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, கேரி கிரிஸ்டன், விக்ரம் சோலங்கி மட்டுமே சிஎஸ்கே வழியைப் பின்பற்றி அணியை வழி நடத்துகிறார்கள்.

சீனியர் வீரர்கள் சரியாகச் செயல்படாவிட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது, ஜூனியர் வீரர்களை தக்கவைப்பது, அன் கேப்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பது, வீரர்களிடம் தார்மீக நம்பிக்கையை ஊட்டுவது ஆகியவை அணிக்கு கூடுதல் ஊக்கத்தை தரும் இதை இரு அணிகளும் ஒரே மாதிரியாகவே செய்கின்றன.

சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஒரே மாதிரி அணுகுமுறை

ஹர்திக் பாண்டியா, சீனியர் வீரரான விஜய் சங்கரையும், ஜோஷ் லிட்டில், நூர் அகமதுவைக் கையாளும் விதத்தையும், சிஎஸ்கே கேப்டன் தோனி, மூத்த வீரர் ரஹானே, துஷார் தேஷ் பாண்டே, பத்திரணா ஆகியோரைக் கையாள்வதையும் உதாரணமாகக் கொள்ளலாம்.

இதனால்தான் தமிழக வீரர் விஜய் சங்கர் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அருமையாக ஆடி வருகிறார். ஒரு காலத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக இருந்த சங்கர், அவரின் தலைமையின் கீழ் விளையாடுகிறார்.

ரஹானேவிடம் பெரிய ஹிட் அடிக்கும் திறமை இருக்கிறதா என யாருக்கும் தெரியாது. அதை வெளிக்கொண்டு வந்து அவருக்கு மீண்டும் இந்திய அணிக்குள் நுழையஒரு வாழ்வு அளித்தது சிஎஸ்கே அணிதான். பென் ஸ்டோக்ஸ்கிற்கு ஏற்பட்ட காயத்தால் அணிக்குள் உள்ளே வந்த ரஹானேவுக்கு அணியில் கிடைத்த இடம், நடத்தும் விதம் அவரை சிறப்பாகச் செயல்பட வைத்தது.

ஆர்சிபி அணியில் இருந்தவரை ஷிவம் துபேயின் பேட்டிங் நிலையற்ற தன்மையாகஇருந்தநிலையில் அவர் சிஎஸ்கேவுக்கு வந்தபின் அவரின் சிக்ஸர் அடிக்கும் திறமை எதிரணிக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்று வீரர்களை இரு அணிகளும் கையாளும் விஷயத்தில் வேறுபாடு இருந்தாலும் வீரர்களை ஊக்கப்படுத்தி வெற்றி பெறுவதில் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள்.

சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஜூனியர் சிஎஸ்கேவா?

ஆதலால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தனது ஜூனியர் அல்லது தனது மாதிரி அணியான குஜராத்துடன் மோத உள்ளது என்றே கூறலாம்.

இதைக் கூறும்போதே, சிஎஸ்கேஅணிக்கு குஜராத் டைட்டன்ஸ் எவ்வளவு சவாலாக இருக்கும் என்பது தெரிந்திருக்கும். இரு அணிகளும் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சளைத்தவர்கள் இல்லை என்ற வகையில் சிறப்பாகச் செயல்படுகின்றன.

இரு அணிகளிலும் மிரட்டல் ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், நடுவரிசையில் பெரிய ஹிட் அடிக்கும் பேட்ஸ்மேன்கள், பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள், நடுப்பகுதி ஓவர்களில் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளர்கள், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என ரகரகமாய் வீரர்களை வைத்துள்ளனர்.

சுப்மான் கில்லுக்கு இந்த ஐபிஎல் கனவு சீசனாக மாறியுள்ளது. மிரட்டல் ஃபார்மில் இருக்கும் சுப்மான் கில் தனி ஒருவனாக இருந்து ஆர்சிபி அணியை மண்ணைக் கவ்வ வைத்து, தொடர்ந்து 2ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

சுப்மான் கில்லின் பேட்டிங்கைக் கட்டுப்படுத்தும் வகையில் தோனி என்ன புதிய உத்தியை போட்டியில் வைத்திருப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

வரலாறு குஜராத்துக்கு சாதகம்

இந்த சீசனில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவில்லை. முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது குஜராத் அணிக்கு சற்று வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும்.

ஆனால், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கையில், இதுவரை 3 ஆட்டங்களில் குஜராத்துடன் சிஎஸ்கே அணி மோதியிருந்தாலும் ஒருபோட்டியில்கூட சிஎஸ்கே அணி வென்றதில்லை என்ற மோசமான தகவல் இருக்கிறது. இந்த சீசனில் கூட மார்ச் 31ம்தேதி அகமதாபாத்தில் குஜராத் அணியுடன் சிஎஸ்கே அணி மோதி தோல்வி அடைந்தது.

இந்த வரலாற்றை இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி மாற்றி அமைக்குமா, 10-வது முறையாக ஐபிஎல் பைனலில் இடம் பெறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

தோனியின் கேப்டன்ஸி மாடல்

தோனியிடம் இருந்து ஜெர்ஸியை வாங்கி பெயரை, நிறத்தை மாற்றி அணிந்து கொண்டதுபோலவே ஹர்திக் பாண்டியா, நெஹ்ராவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.. இந்த சீசனில் சிஎஸ்கே அணி 9 முறை அணியின் ப்ளேயிங் லெவனை மாற்றாமல் களமிறங்கியுள்ளது. அதற்கு அடுத்தார்போல் குஜராத் அணி 4 முறை ப்ளேயிங் லெவனை மாற்றாமல் களமிறங்கியுள்ளது.

அணியில் அடிக்கடி வீரர்களை மாற்றுவதை தோனி எவ்வாறு தவிர்ப்பாரோ அதேபோன்று, குஜராத் அணியும் வீரர்களை மாற்றுவதில் அதிகமான நம்பிக்கை இல்லாத அணியாகும். இரு போட்டிகளில் வீரர்கள் சொதப்பினாலும்கூட அணியில் மாற்றம் பெரிதும் வரவிரும்பாத அணியாக குஜராத் இருக்கிறது.

அதேபோல மதிப்பின் அடிப்படையில் வீரர்களை சிஎஸ்கே அணி களமிறக்குவதில்லை. வீரர்களின் திறமை அடிப்படையில்தான் முடிவு செய்யும். ரூ.10 கோடிக்கு கிருஷ்ணப்பா கவுதமை வாங்கிவிட்டு இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

அதேபோல குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.6 கோடி கொடுத்து ஏலத்தில் ஷிவம் மாவியை விலைக்கு வாங்கி இதுவரை அவரைப் பயன்படுத்தாமல் மோகித் சர்மாவை களமிறக்குகிறது. இதற்கு காரணம், சூழலுக்கு ஏற்றாற்போல் மோகித் சர்மா பந்துவீச்சு பொருந்துவதைப் போல் மாவி பந்துவீச்சு அமையவில்லை. இருஅணிகளுமே சூழலுக்கு ஏற்ற வீரர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று கருதலாம்.

இதில் முக்கியமாக இரு அணிகளின் கொள்கைகளும் ஒரேமாதிரியாக இருக்கின்றன.. நீண்டகால வாக்குறுதிகள் நிறைவேற்றுவது கடினம் என்பதால், இரு அணிகளும் வாக்குறுதி அளிக்கப்பதில்லை, உடனடியாக செயல்படுத்துவது, வீரர்களின் திறமை அறிந்து அந்தந்த இடங்களில் மட்டும் களமிறக்குகிறது.

இதுபோல் சிஎஸ்கே-வுக்கு இணையாக, மாதிரியாக குஜராத் டைட்டன்ஸ்அணி இருப்பதால், இன்றைய ஆட்டம் மிக அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆடுகளம் எப்படி?

சேப்பாக்கம் ஆடுகளம் இந்த சீசனில் இரு விதங்களில் இருந்தது. ஒரு ஆடுகளம் குறைவான ஸ்கோர் செய்யும் விதத்திலும், சுழற்பந்துவீச்சுக்கும், மிதவேகப்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் விதத்திலும் உள்ளது. மற்றொரு ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், நல்ல ஸ்கோர் செய்யக்கூடிய ஆடுகளமாகவும் இருக்கிறது. இரு ஆடுகளங்களிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது.

இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் 7 போட்டிகளில் டாஸ்வென்று முதலில் பேட் செய்த அணிதான் வென்றுள்ளது, ஒரு போட்டியில் மட்டுமே சேஸிங் அணி வென்றுள்ளது. சென்னை மைதானத்தில் மட்டும் சிஎஸ்கே அணி இந்த சீசனில் 3 தோல்விகளைச் சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் 74 ஆட்டங்கள் நடந்துள்ளன. அதில் 44 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிதான் வென்றுள்ளது, சேஸிங் செய்த அணி 30 முறை வென்றுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி 63 முறை மோதி, அதில் 44 முறை வென்றுள்ளது 18 முறை தோற்றுள்ளது. இதில் 27முறை சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து வென்றுள்ளது, 17 முறை சேஸிங் செய்து வென்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சராசரியாக 150 முதல் 160 ரன்கள் வரை சேர்க்கலாம். அதிகபட்சமாக, 200 ரன்கள் வரைகூட அடிக்க முடியும்.

சேப்பாக்கம் ஆடுகளத்தில் பந்துகள் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வரும் என்பதால், முதல்முறையாக ஆடும் குஜராத் அணிக்கு இந்த ஆடுகளம் சற்று சவாலாகவே இருக்கும். குறிப்பாக பவர்ப்ளேயில் பத்திரனா மற்றும் தீபக் சாஹர் ஓவர்களை சமாளிப்பது குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாகவே இருக்கும்.

சிஎஸ்கே அணியில் இலங்கையைச் சேர்ந்த தீக்சனா, பத்திரனா ஆகியோர் இருப்பதைப் புரிந்து கொண்டு இலங்கை கேப்டன் தசுன் சனகாவை வாங்கி, அவரை குஜராத் டைட்டன்ஸ் களமிறக்குகிறது. ஆல்ரவுண்டரான சனகா பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்படுவார்.

தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

பேட்டிங் வலிமை

குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகளில் பேட்டிங் வலிமை சமமாகவே இருக்கிறது. சிஎஸ்கே அணியில் கெய்க்வாட், டேவிட் கான்வே இருவரும் பல போட்டிகளில் நல்ல தொடக்கத்தை அளித்து வலுவான ஃபார்மில் உள்ளனர்.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் 100 ரன்ளுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிலும் கான்வே இந்த சீசனில் மட்டும் 8 அரை சதங்கள் அடித்து 500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். இருவரும் குஜராத் அணிக்கு பெரிய சவாலாக இருப்பார்கள்.

அதேநேரம், அனுபவ வீரர் ஷமி பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரின் பந்துவீச்சை கான்வே, கெய்க்வாட் இருவரும் சமாளித்து ஆட வேண்டியிருக்கிறது. கான்வே இதுவரை 3 முறை ஷமி பந்துவீச்சைச் சந்தித்து அதில் 2 முறை ஆட்டமிழந்துள்ளார். ஷமி பந்துவீச்சுக்கு எதிராக கெய்க்வாட் ஸ்ட்ரைக்ரேட் 70 மட்டுமே இருப்பதும் கவலைக்குரியது.

சிஎஸ்கே அணியைப் போலவே குஜராத் அணியிலும் தொடக்க வீரர்கள் சுப்மான் கில், சாஹா வலுவாக உள்ளனர். அதிலும் கில் தொடர்ந்து இரு சதங்களை அடித்து வலுவாக உள்ளார். சென்னையில் ஆட்டம் நடப்பதால் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். நடுப்பகுதியில் ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், மில்லர், திவேட்டியா, விஜய் சங்கர், சனகா ஆகியோர் ஃபார்மில் இருப்பது பெரிய பலமாகும். வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் இவர்கள் தங்களின் அணிக்காகப் பங்களிப்பு செய்துள்ளனர். ஆதலால் குஜராத் அணியில் நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங் வலுவாக இருக்கிறது. அதிலும் மும்பை அணிக்கு எதிராக ரஷித் கான் அடித்த ஷாட்களை யாரும் மறந்திருக்க முடியாது.

சிஎஸ்கே அணியில் நடுவரிசையில் களமிறங்க ரஹானே, மொயின் அலி, ஜடேஜா, ராயுடு என வலிமையான பேட்டிங் வரிசை இருக்கிறது. இருப்பினும் இந்த ரஹானே, ராயுடு, ஜடேஜா, மொயின் அலி ஆகிய வீரர்களின் பேட்டிங்கிலும் நிலைத்தன்மை இல்லை.

ரஹானே சில போட்டிகளில் மட்டும் அதிரடியாக ஆடினார் அதன்பின் விளையாடவில்லை. ராயுடு, மொயின்அலி இதுவரை பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், மேம்போக்காகப் பார்த்தால் வலுவான பேட்டிங் வரிசை இருப்பதாகத் தெரியும்.

ஆனால், பேட்டிங்கில் போதிய ஆழமில்லை. கடந்த 14 போட்டிகளிலும் நடுவரிசையில் இருந்து பெரிய அளவு பங்களிப்பு கிடைத்ததாக ஆதாரங்கள் இல்லை. பெரும்பாலான ஸ்கோர்களையும், வெற்றியையும் தொடக்க வீரர்களும், 4வது வரிசை வீரர்களுமே உறுதி செய்துவிட்டனர். ஆதலால், நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு பெரிய வேலையில்லை. ஆனால், இந்த ஆட்டத்தில் நடுவரிசை சிறப்பாகச் செயல்படுவது அவசியமாகும்.

சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

டெத் ஓவர்களில் பிராவோவின் இடத்தை நிரப்புவது யார்?

டெத் ஓவர்கள், அணிக்கு நெருக்கடியான நேரங்களில் பந்துவீச வேண்டுமென்றால், பிராவோவிடம்தான் தோனி பந்தை வழங்குவார். ஆனால், பிராவோ தற்போது அணியில் இல்லாத நிலையில் டெத் ஓவர்கள் வீசுவது யார் என்ற குழப்பம் நிலவுகிறது. டெத் ஓவர்களை வீசும்போது களத்தில் இருக்கும் வீரர்களுக்கு ஏற்ப பிராவோ மைதானத்துக்குள் வந்து ஆலோசனைகளை வழங்கிவிட்டு செல்கிறார்.

ஆனால் குவாலிபயர் போன்ற ஆட்டங்களில் டெத் ஓவர்களை சிறிது தவறாக வீசினாலும், ஆட்டம் கையைவிட்டு சென்றுவிடும். சிஎஸ்கே அணியில் தீபக் சாஹரைத் தவிர தேஷ் பாண்டே, பத்திரணா, முகேஷ் ஆகியோருக்கு போதிய அனுபவம் இல்லை. ஹைபிரஷர் கொண்ட இதுபோன்ற ஆட்டங்களில் டெத் ஓவர்களை எவ்வாறு கையாள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, மோகித் சர்மா, ஜோஷ்வா லிட்டில், அல்சாரி ஜோஸப் என டெத் ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்ட பந்துவீச்சாளர்கள், அனுபவமிக்கவர்கள் உள்ளனர்.

“முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை”

சுழற்பந்துவீச்சில் இரு அணிகளும் வலிமையாக இருப்பதாகத் தெரிந்தாலும், முழுநேர, தொழில்முறை சுழற்பந்துவீச்சாளர்கள் என எடுத்துக்கொண்டால் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மட்டுமே ரஷித் கான், நூர் அகமது உள்ளனர்.

சிஎஸ்கே அணியில் தீக்சனா தவிர, ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் பகுதிநேர பந்துவீச்சாளர்களைத் தவிர தொழில்முறை பந்துவீச்சாளர்கள் இல்லை. சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒருவேளை ஒத்துழைக்கும் பட்சத்தில், சிஎஸ்கே அணியைவிட குஜராத் அணியே கைஓங்கி இருக்கும். தமிழக வீரரும் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோரையும், சாய் சுதர்ஷனை குஜராத் அணி களமிறக்கும் எனத் தெரிகிறது.

சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஹர்திக் பாண்டியா பந்துவீசுவாரா?

ஹர்திக் பாண்டியா கடந்த 3 போட்டிகளாக பந்துவீசவில்லை. கடைசியாக லக்னெள போட்டிக்கு எதிராகப் பந்துவீசினால் அதிலும் முழுமையாக 4 ஓவர்களையும் வீசவில்லை. ஆர்சிபி அணிக்கு எதிராகவும் ஹர்திக் பந்துவீசவில்லை. யாஷ் தயால், மோகித் சர்மா மட்டும்தான் பந்துவீசினர். ஆதலால் இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பந்துவீசினால் அந்த அணிக்கு மேலும் வலு சேர்க்கும். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அல்லது, சுழற்பந்துவீச்சாளரைச் சேர்க்க இயலும்.

நடுங்க வைக்கும் ரஷித் கான், நூர் அகமது சுழல்

ரஷித் கான், நூர் அகமது இருவரும் நடுப்பகுதி ஓவர்களிலும், பவர்ப்ளே ஓவர்கள் முடிந்து வீசும்போது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள். ரஷித் கான் இதுவரை 24 விக்கெட்டுகளையும், நூர் அகமது 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சேப்பாக்கம் போன்ற சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இருவரின் பந்துவீச்சு சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்னமாக இருக்கும். சிஎஸ்கேவின் ரன்ரேட்டை நடுப்பகுதி ஓவர்களில் இழுத்துப் பிடிக்கும் விதத்தில் இருவரின் பந்துவீச்சு அமையும் என்பதால், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேப்பாக்கத்தில் சென்னை வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

உள்ளூர் மைதானம் சாதகம்

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை சொந்த மைதானம், பலமுறை விளையாடிய மைதானம் என்பதால் வீரர்களுக்கு ஆடுகளம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு சிஎஸ்கே அணிக்கு முக்கியமான பலமாக இருக்கும். ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்முறையாக சென்னையில் விளையாடுகிறது. தமிழக வீரர்களே இல்லாத சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்துவரும் நிலையில், விஜய் சங்கர், சாய் கிஷோர், சாய் சுதர்ஷன் போன்ற தமிழக வீரர்களை தாங்கிவரும் குஜராத் அணிக்கும் ரசிகர்களிடம் ஆதரவு இருக்கும் என நம்பலாம்.

சிஎஸ்கே அணி விவரம் (உத்தேச அணி)

டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், மகேஷ் தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரணா

குஜராத் டைட்டன்ஸ் அணி விவரம் (உத்தேச அணி)

சுப்மான் கில், விருதிமான் சாஹா, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், தசுன் சனகா, ராகுல் திவேட்டியா, ரஷித் கான், யாஷ் தயால்அல்லது சாய் கிஷோர், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா

https://www.bbc.com/tamil/articles/cd1rv6ndldlo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விவரமான பதிவுக்கு நன்றி ஏராளன் .......இன்று எதுவாக இருந்தாலும் வென்றுட்டுப் போகட்டும்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்றிரவு எம்எஸ் டோனி அழுதார்- 2018 இன் உருக்கமான தருணம் குறித்து மனம் திறந்தார் ஹர்பஜன் சிங்

Published By: RAJEEBAN

23 MAY, 2023 | 04:53 PM
image

 

கப்டன் கூல் என வர்ணிக்கப்படும் எம்எஸ் டோனியை ரசிகர்கள் தனதுஉணர்வுகளை வெளிப்படுத்தாதவர் மறைப்பவர் என கருதுவதுண்டு.

ஆடுகளத்தில் நிலைமை எவ்வளவு சவாலானதாகயிருந்தாலும் டோனி பொறுமையிழப்பதை பார்ப்பது கடினம், தோனியின் உணர்வுபூர்வமான அசாத்தியமான ஆளுமையே அவரை களத்தில் கணிப்பிட முடியாத கடினமான வீரராக மாற்றுகின்றது.

எனினும் டோனியின் முன்னாள் இந்திய அணி மற்றும் சிஎஸ்கேயின் சகாவான ஹர்பஜன் சிங்  சிஎஸ்கே வீரர்கள் சுற்றியிருக்க டோனி கண்ணீர்விட்டு கலங்கிய ஒரு தருணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் ஆட்டநிர்ணயசதி மோசடி காரணமாக இரண்டுவருடங்கள் தடை செய்யப்பட்ட பின்னர் சிஎஸ்கே மீண்டும் விளையாடத்தொடங்கிய வேளை ( 2018) இந்த சம்பவம் இடம்பெற்றது என  ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

வீடியோவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அணியின் முன்னாள் வீரர் இம்ரான்தாஹிரும் இதனை உறுதி செய்துள்ளார், சென்னை அணியை டோனி எவ்வளவு தூரம் நேசிக்கின்றார் அந்த அணி அவருக்கு எவ்வளவு தூரம் நெருக்கமானது என்பதை அன்றே நான் அறிந்துகொண்டேன் என இம்ரான்தாஹிர் தெரிவித்துள்ளார்.

ஒரு கதையுள்ளது அதனை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்,2018 இல் இரண்டு வருட தடைக்கு பின்னர் சிஎஸ்கே மீண்டும் விளையாடஆரம்பித்தவேளை அணியின் இரவுநேர உணவுக்காக குழுமியிருந்தோம்,

ஆண்கள் அழுவதில்லை என நான் கேள்விப்பட்டிருக்கி;ன்றேன் ,ஆனால் அன்றிரவு டோனிஅழுதார் அவர் உணர்ச்சிவசப்பட்டார்  எவருக்கும் அது தெரியாது நான் சொல்வது சரியா தாஹிர் என ஹர்பஜன் சிங் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஆம் என தெரிவித்துள்ள இம்ரான்தாஹிர் நான் அங்கிருந்தேன் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் அவரை அப்படி பார்த்தபோது சிஎஸ்கே அணி அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் உணர்ந்தேன் அவர் அதனை தனது குடும்பத்தை போல கருதுகின்றார்  அதுமிகவும் உணர்வுபூர்வமான தருணமாக காணப்பட்டது என இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/155978

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குஜராத்தின் ஒவ்வொரு வீரரையும் 'கட்டம் கட்டி தூக்கிய' தோனியின் வியூகம்

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

சேப்பாக்கத்தில் சென்னை பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கப் போகிறார்கள் என்று கருதப்பட்ட சுப்மன் கில், சாஹா, ஹர்திக் பாண்டியா, மில்லர் என ஒவ்வொரு வீரருக்கும் ஒரு வியூகத்தை வகுத்திருந்தார் தோனி. அவர்களும் ஏதோ தோனி எழுதிய ஸ்கிரிப்டுக்கு அடிப்பதைப் போல ஆடி, துல்லியமாக ஆட்டமிழந்து சென்றார்கள்.

ஒவ்வொரு குஜராத் வீரரை ஆட்டமிழக்கச் செய்வதற்கு தோனி செய்திருந்த ஃபீல்டிங் வியூகம் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என்பதை வர்ணனையாளர்கள் புகழ்ந்து கூறினார்கள். அது போன்ற வியூகம் வகுப்பதில் தவறியதால்தான் குஜராத் அணி பல வாய்ப்புகளைத் தவறவிட்டதையும் காண முடிந்தது.

குஜராத் அணியில் இதுவரை சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டுக் கொண்டிருந்த பல வீரர்கள் சேப்பாக்கத்தில் தோனியின் கண்முன்னே வருவதும் போவதுமாகத்தான் இருந்தார்கள். பார்ப்பதற்கு ஏதோ அவர்கள் தோனியின் பேச்சுக்கு ஆடுவது போலத் தெரிந்தது.

குஜராத் அணியை சேப்பாக்கத்தில் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் கோப்பையை முடிவு செய்யும் இறுதிப் போட்டிக்கு 10-வது முறையாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தகுதி பெற்றுள்ளது.

இதுவரை 14 ஐபிஎல் சீசன் நடந்துள்ளதில் அதில் 10-வது முறையாக சிஎஸ்கே இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. இந்த சாதனையை இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியும் செய்தது இல்லை என்பதால் சிஎஸ்கே புதிய வரலாறு படைத்துள்ளது.

 

சிஎஸ்கே என்றால் “கம்-பேக்” கிங்ஸ்

இந்த சீசன் தொடக்கத்தில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கூட ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி என பல்வேறு அணிகளை பைனலுக்கு கணித்தனர்.

ஆனால், சிஎஸ்கே அணியில் இருக்கும் ஜூனியர் வீரர்கள், சர்வதேச அறிமுகம் இல்லாத வீரர்களை வைத்துக்கொண்டு தோனி எவ்வாறு பைனலுக்கு அணியை அழைத்துச் செல்லப்போகிறார் என்ற கடுமையான விமர்சனம் கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது.

ஆனால், அனைத்து விமர்சனங்களையும், கேலிப் பேச்சுகளையும், தவிடுபொடியாக்கி, 2023 ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக சிஎஸ்கே அணி தகுதி பெற்றுள்ளது.

கடந்த சீசனில் 9-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே அணி கேப்டன்ஷி விஷயத்தில் பெரிய குழப்பத்தில் சிக்கியுள்ளதாக பேசப்பட்டது. ஆனால் பேசியவர்களின் வாயை அடைக்கும் வகையில் மிகப்பெரிய “கம்பேக்” சிஎஸ்கே அணி கொடுத்திருக்கிறது.

இதேபோல 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 7-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, 2021ம் ஆண்டில் பெரிய கம்பேக் கொடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. ஒட்டுமொத்தத்தில் “சென்னை சூப்பர் கிங்ஸ்” அல்ல, “சென்னை கம்பேக் கிங்ஸ்” என்றார்கள் வர்ணனையாளர்கள்.

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்முறையாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அப்படியொரு துல்லியமான பீல்டிங் வியூகத்தை சென்னையில் காண முடிந்தது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

சாதனை படைத்து பைனலுக்குச் செல்லும் சிஎஸ்கே

சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதும் மைதானத்தில் இருந்து முதல் ஆளாக டுவைன் பிராவோதான் ஓடிச் சென்றுவீரர்களிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் செல்வதைக் கொண்டாடும் வகையில் மைதானத்தில் பல்வேறு வண்ண வானவேடிக்கைகளையும், பட்டாசுகளும் வெடிக்கப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வெற்றி கொண்டாடப்பட்டது.

2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019, 2021, இப்போது 2023ம் ஆண்டில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் பைனலிலும் தோனி தலைமையில்தான் சிஎஸ்கே பைனலுக்குள் சென்றது, 2023ம் ஆண்டில் நடக்கும் இறுதிப்போட்டியிலும் தோனி தலைமையில்தான் சிஎஸ்கே பைனலுக்குள் நுழைகிறது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆமதாபாத்துக்கு டிக்கெட் போடுங்க!

வரும் 28-ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே விளையாட உள்ளது. நாளை நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி, குஜராத் டைட்டன்ஸுடன் 2வது தகுதிச்சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணியே, சிஎஸ்கேயுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

குஜராத் அணியுடன் இதுவரை 3 முறை மோதியும், அதில் தோல்வியைச் சந்தித்துவந்த சிஎஸ்கே அணி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்து முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.

பேட்டிங்கில் திணறியதா சென்னை?

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ருதுராஜ் கெய்க்வாட்(60ரன்கள்) கான்வே(40) ஆகியோர் சேர்த்த ஸ்கோர்தான் திருப்புமுனையாகும். முக்கிய தருணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் ஆட்டநாயனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கெய்க்வாட் தொடக்கத்தில் ஆட்டமிழந்தபோது அதுநோபாலாக அறிவிக்கப்பட்டதால் மிகப்பெரிய ஸ்கோரை சிஎஸ்கே எட்டியது, இல்லாவிட்டால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும்.

அதேபோல பந்துவீச்சில் ரவிந்திர ஜடேஜா, தீக்சனா இருவரும் 8 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, குஜராத் டைட்டன்ஸ் சரிவுக்கு முக்கியப் பங்காற்றினர்.

அதிலும் ஜடேஜா வீழ்த்திய சனகா, டேவிட் மில்லர்விக்கெட்டுகளும், தீக்சனா வீழ்த்திய, ஹர்திக் பாண்டியா, திவேட்டியா விக்கெட்டுகளும் திருப்புமுனையாகும்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

சிஎஸ்கேவுக்கு சாதகமானவை என்ன?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பனிப்பொழிவைக் காரணம் காட்டி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், சேப்பாக்கம் ஆடுகளத்தில் நினைத்தது போல், பனிப்பொழிவு பெரிதாக இல்லை. பனிப்பொழிவு இருந்தால் பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டிருப்பார்கள், அது குஜராத்துக்கு சாதகமாக இருந்திருக்கும்.

ஆனால், பனிப்பொழிவு இல்லாதது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. பனிப்பொழிவு இல்லாவிட்டால் சேப்பாக்கம் ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாகிவிடும். பந்து மிகவும் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வரும்போது, ஷாட்களை அடிப்பது கடினமாகிவிடும். அந்தநிலையைத்தான் இன்று குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்கள் அனுபவித்தனர்.

சிஎஸ்கே அணியில் கெய்க்வாட், கான்வே தவிர பெரிதாக எந்த பேட்ஸ்மேன்களும் ஸ்கோர் செய்யவில்லை. ஆனால், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிறிய கேமியோவுடன் சென்றதால், ஸ்கோர் 172 ரன்கள் மிக அனாசயமாக வந்துவிட்டது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சம்.

தகுதிச் சுற்றுப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தனது சொந்த மைதானத்தில் நடந்தது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சாதகம். குறிப்பாக ரசிகர்களின் ஆதரவு, வரவேற்பு, உற்சாகப்படுத்துதல் ஆகியவை சிஎஸ்கே வீரர்களுக்கு தார்மீக ரீதியாகவே நம்பிக்கையையும், உற்சாகத்தையும் வழங்கியது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கோட்டை விட்ட குஜராத்- தவறுகள் என்னென்ன?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் பேட்ஸ்மேன்களின் தோல்வி்தான். மிகவும் முக்கியமான ஆட்டத்தில்கூட விருதிமான் சாஹா விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தது, அடுத்துவரும் பேட்ஸ்மேனுக்கு அழுத்தத்தைத் தரும் என்பதை உணரவில்லை. தொடக்க வீரர்கள் வலுவான அடித்தளத்தை அமைத்திருந்தால், நடுவரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் பதற்றமின்றி, ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் விளையாடுவார்கள்.

ஆனால், தொடக்க வீரர் சொதப்பும் பட்சத்தில் அதன் சுமை அடுத்துவரும் வீரர்கள் மீதே கடத்தப்படும். குஜராத் அணியில் ஆழமான பேட்டிங் வரிசை இருந்தபோதிலும் கூட சேப்பாக்கம் போன்ற சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகஇருக்கும், பந்துகள் மெதுவாக வரும் ஆடுகளத்தில் கணித்து ஆடாமல் கோட்டைவிட்டனர்.

ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என குஜராத் பேட்ஸ்மேன்கள் நம்பியதற்கு மாறாக செயல்பட்டது. குஜராத் பேட்ஸ்மேன்கள் தங்கள் விருப்பம் போல் ஸ்வீப் ஷாட், ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்களை ஆட முடியாத அளவுக்கு பந்து ஆடுகளத்தில் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வந்தது. இதனால்தான் விக்கெட்டுகளை விரைவாக குஜராத் பேட்ஸ்மேன்கள் இழந்தனர்.

எந்த வீரர்களுக்கு இடையேயும் பெரிதாக பார்ட்னர்ஷிப் ஏதும் அமைக்காதது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் கில்-விஜய் சங்கர் கூட்டணி வெற்றிக்கு முக்கியமாகத் திகழ்ந்தநிலையில் இந்த ஆட்டத்தில் சொதப்பினர்.

இரு சதங்களை அடித்து முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த சுப்மான் கில் பந்தைக்கணித்து ஆடத் தவறியதால்தான் விக்கெட்டை பறிகொடுத்தார். சுப்மான் கில் களத்தில் கடைசி வரை இருந்தால் ஆட்டத்தை வென்று கொடுத்துவிடுவார் என்று எண்ணிய தோனி, தீக்சனா மூலம் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. தீக்சனா பந்தில் கில் ஆட்டமிழக்காமல், கவனமாக ஆடி தப்பித்தார். இதையடுத்து, தோனி தனது பி பிளானை செயல்படுத்தவே அந்த வலையில் கில் சிக்கினார்.

தீபக் சாஹருக்கு கடைசி ஓவராக இருந்தநிலையில் அதை பொறுமையாக ஆடி கில் கடந்திருக்கலாம் அதைவிடுத்து டீப் ஸ்குயர் லெக்கில் தூக்கி அடித்து கான்வேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு விக்கெட்டை இழந்தார். ஒருவேளை கில் கடைசி வரை களத்தில் இருந்திருந்தால், தோல்விக்கான 15 ரன்களை நிச்சயம் அடித்துக் கொடுத்திருப்பார்.

சீராக விக்கெட்டுகளை இழந்ததும், குஜராத் தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். தொடக்கத்தில் 22 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 72 ரன்களில் இருந்து, 98 ரன்களுக்கு இடையே மட்டும் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது தோல்விக்கு முக்கியக் காரணம். அதிலும் 7வது ஓவர் முதல் 15வது ஓவர்கள்வரை 51 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் அணி.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கில், ரஷித்கான் போராட்டம் ஏன் நீடிக்கவில்லை?

குஜராத் அணியில் தொடக்க வீரர் சுப்மான் கில்(40), ரஷித் கான்(30) ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். மற்ற பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தில்நிலவிய அழுதத்தைத் தாங்க முடியாமல், ஆடுகளத்தின் தன்மையை அறியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

அதிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடிக்கவா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்துடனே ஆப்சைடில் அந்த ஷாட்டை அடித்தார். ஜடேஜாவுக்கு கேட்ச் பயிற்சி அளித்தார்போல் எந்த சிரமமும் இன்றி பாண்டியா அடித்த பந்து அவரின் கைகளில் அமர்ந்து கொண்டது.

ஜடேஜா வீசும் பந்துகள் பெரும்பாலும் டர்ன் ஆகாமல் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் செல்லும். ஆனால் மில்லரை ஆட்டமிழக்கச் செய்த ஜடேஜா வீசிய பந்து, அற்புதமாக டர்ன் ஆகி ஸ்டெம்பை பதம் பார்த்தது. ஜடேஜா வீசும் பந்து டர்ன் ஆகினாலே , ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதாகிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.

மற்றவகையில் விஜய் சங்கர்(14), திவேட்டியா(3), சனகா (17) என நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளிக்கும் வகையில்தான் பேட் செய்தனர். 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி, அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

சுப்மான் கில் ஆட்டமிழந்தபின் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் சிஎஸ்கே எடுத்துக்கொண்டுவிட்டது. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தனித்தனியாக ஸ்கெட்ச் போட்டு பந்துவீசி விக்கெட்டை சாய்த்தனர். அதிலும் நீல்கண்டேவை ரன் அவுட் செய்த சேனாபதி, கில்லுக்கு சொல்லிவைத்தார்போல் பந்துவீசி டீப் ஸ்குயர் லெக்கில் கான்வே பிடித்த கேட்ச், ரஷித் கானுக்கு கான்வே பிடித்த கேட்ச் ஆகியவை தோனியின் கேப்டன்ஷி ஸ்கெட்சுக்கு உதாரணங்கள்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கடைசி போட்டியா, தோனி ஓய்வா?

சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறுகையில் “ ஐபிஎல் மிகப்பெரியது, இது மற்றொரு இறுதி ஆட்டம் என்று கூற முடியாது. 10 அணிகள் பங்கேற்றதால் போட்டிகள் கடினமாக இருந்தன.கடந்த 2 மாதங்களாக கடினமாக உழைத்தோம், எங்களின் வீரர்களின் சிறப்பு தன்மைகள் வெளிப்பட்டன. ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்துள்ளனர். இந்த சீசன் முழுமைக்கும் நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்புகள் பெரும்பகுதி கிடைக்கவில்லை.

ஆட்டம் 30 நிமிடங்களில் எங்கள் பக்கம் திரும்பியது. சேப்பாக்கம் ஆடுகளம் இதுபோன்று இருந்தால் ஜடேஜா பந்துவீச்சை ஆடுவது கடினம். நாங்கள் அணிக்குள் நல்ல சூழலை உருவாக்க முயல்கிறோம், வேகப்பந்துவீச்சாளர்கள் பலத்தை குறித்து அடிக்கடி உணர்த்துகிறோம், அவர்களின் திறமையை மேம்படுத்தவும் உதவுகிறோம். அவர்களின் பந்துவீச்சை சிறப்பாக்க முயற்சிக்கிறோம்.

ஆடுகளம், சூழல் ஆகியவற்றைப் பார்த்து நாம் நம்மை சரி செய்ய வேண்டும். அதனால்தான் பீ்ல்டிங்கை அடிக்கடி மாற்றியமைத்தேன். வீரர்கள் எப்போதும் களத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால்தான், பீல்டர்களிடம் எப்போதும் என்னை நோக்கியே இருங்கள் எனத் தெரிவித்துள்ளேன்

எனக்கு இது கடைசி சீசனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இன்னும் அது குறித்து முடிவு செய்ய 9 மாதங்கள் உள்ளன, அதிக காலம் இருக்கிறது. டிசம்பரில்தான் அடுத்து ஏலம் நடக்கிறது. நான் எப்போதும் சிஎஸ்கேவுடன் வருவேன்” எனத் தெரிவித்தார்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

நம்பிக்கை நாயகன் கெய்க்வாட்

கெய்க்வாட், கான்வே இருவரும் தொடக்கத்திலேயே ஷமி ஓவரை எதிர்கொள்ளத் திணறினர். நல்கண்டே வீசிய 2வது ஓவரில் கெய்க்வாட் 7 ரன்னில் இருந்தபோது அடித்த ஷாட்டை சுப்மான் கில் கேட்ச் பிடிக்கவே குஜராத் வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

ஆனால், இந்த மகிழ்ச்சி சில வினாடிகள்கூட நீடிக்கவில்லை. நல்கண்டே வீசிய அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிர்ச்சியுடன் வெளியேறிய கெய்க்வாட் நிம்மதி பெருமூச்சுடன் பேட்டிங் செய்ய வந்தார். வந்தவுடன் அடுத்த இரு பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி விளாசி கெய்க்வாட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆனால், தனக்குக் கிடைத்த 2வது வாழ்வை சிறப்பாகப் பயன்படுத்திய கெய்க்வாட் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.

கெய்க்வாட் ஒருபுறம் வேகமாக ரன்களைச் சேர்த்தநிலையில், கான்வே மிகவும் மந்தமாக பேட் செய்தார், அவர் அடித்த எந்த ஷாட்டும் அவருக்கு சரியாக அமையவில்லை என்பதால், பெரிய ஷாட்களுக்கு செல்லாமல் தவிர்த்தார்.

5-வது ஓவரிலிருந்தே ரஷித் கான், நூர் அகமதுவை பந்துவீச ஹர்திக் பாண்டியா அழைத்தார். நூர் அகமது பந்துவீச்சை பயன்படுத்திய கெய்க்வாட் சில பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை உயர்த்தி 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்க்வாட் 4முறையும் அரைசதம் அடித்துள்ளார்.

10ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் சேர்த்திருந்தது. சிஎஸ்கே அணியின் ஒருவிக்கெட்டைக் கூட குஜராத் அணியால் வீழ்த்த முடியவில்லை. முதல் 10 ஓவர்கள் சிஎஸ்கே கையில் இருந்தது, அடுத்த 10 ஓவர்களை குஜராத் அணி கையில் எடுத்துக்கொண்டது.

மோகித் சர்மா வீசிய 11வது ஓவரில் லாங்ஆன் திசையில் கெய்க்ட் வாட் அடித்த ஷாட்டை மில்லர் கேட்ச் பிடிக்கவே 60ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கான்வே-கெய்க்வாட் கூட்டணி 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து களத்துக்குள் ஷிவம் துபே வந்தபோது, சிக்ஸர் துபே, சிக்ஸர் துபே என்று ரசிகர்கள் கோஷமிட்டனர்.

கெய்க்வாட் ஆட்டமிழந்தபின், சிஎஸ்கே அணியில் உள்ள நடுவரிசை, கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடி பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிறிய அளவிலான கேமியோ ஆடி ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

3 பந்துகளைச் சந்தித்த துபே, ஒரு ரன் சேர்த்தநிலையில் நூர் அகமது பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பின் வந்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சீராக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

இந்த சீசன் தொடக்கத்தில் கலக்கலாக பேட் செய்த, ரஹானே ஒரு சிக்ஸர் உள்ளிட்ட 17 ரன்கள் சேர்த்து நல்கண்டே ஓவரில் ஆட்டமிழந்தார். தொடக்கத்திலிருந்தே பேட்டிங்கில் தடுமாறிய கான்வே 40 ரன்னில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 87 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த சிஎஸ்கே அணி, அடுத்த, 38 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சீசன் முழுவதும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் இருந்த அம்பதி ராயுடுவும் இதிலும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஒரு சிக்ஸர், பவுண்டரி உள்பட 17 ரன்களுடன் சிறிய கேமியோயுடன் ராயுடு ஆட்டமிழந்து வெளியேறினார்.

15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்திருந்ததால், சிஎஸ்கே அணி 150 ரன்களைத் தாண்டுமா என்ற சந்தேகம் இருந்தது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

ரசிகர்களை ஏமாற்றிய தோனி

ரசிகர்களின் மிகப்பெரிய கரகோஷம், விசில் சத்தம், ஆரவாரத்துக்கு மத்தியில் கேப்டன் தோனி களமிறங்கினார். தோனி களத்துக்கு வந்தபோது சரியாக 2 ஓவர்கள் இருந்ததால், நிச்சயம் சிஸ்கர், பவுண்டரி அடிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். தோனி சந்தித்த முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

மோகித் சர்மா ஓவரில், தோனி ஸ்ட்ரைக்கிற்கு வருவதற்காகவே ஜடேஜா ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை வழங்கினார். ஆனால் மோகித் சர்மா வீசிய ஸ்லோ பந்தில் கவர் திசையில் தோனி தூக்கி அடிக்கவே, ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடித்தார்.

தோனி ஒரு ரன்னில்ஆட்டமிழந்தவுடன் அரங்கு முழுவதும் மிகப்பெரிய அமைதி நிலவியது. தோனியின் சிக்ஸரையும், பவுண்டரிகளையும், ஹெலிகாப்டர் ஷாட்களையும் பார்க்கக் காத்திருந்த ரசிகர்களின் இதயங்களை மோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் நொறுக்கிவிட்டனர்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய மொயின்அலி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 20-வது ஓவரில் மொயின் அலி சிக்ஸர் அடித்து, ஸ்கோர் உயர்வுக்கு உதவினார். கடைசிப் பந்தில் ஜடேஜா போல்டாகி 22 ரன்னில் வெளியேறினார்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

"தோல்வியைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை"

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ அடிப்படையி்ல் சில தவறுகளைச் செய்துவிட்டோம். 15 ரன்களைக் குறைவாக நாங்கள் குறைவாகக் கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். பந்துகள் நல்லவிதத்தில் இருக்கும்போதே, பேட்ஸ்மேன்கள் ரன்களை ஓடி எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடாமல் இருப்பது பின்னடைவு. இந்த தோல்வியைப் பற்றி அதிகமாக நினைக்கவில்லை, அடுத்த வாய்ப்பு இருக்கிறது. 15 ரன்கள் கூடுதலாக வழங்கிவிட்டோம், விக்கெட்டுகளையும் சீராக இழந்தோம் இதுதான் தோல்விக்கான காரணமாக இருக்கும். 2 நாட்கள் இடைவெளயில்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

டாட் பந்துகளுக்கு மரக்கன்று

சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாட் பந்துகள் ஏதேனும் வீரர்கள் வழங்கினால், ஒவ்வொரு டாட் பந்துக்கும் பிசிசிஐ சார்பில் 500 மரங்கள் நடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் 34 டாட் பந்துகளைவிட்டதால், 17ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படஉள்ளது. அதேபோல குஜராத் பேட்ஸ்மேன்கள் 50 டாட்பந்துகளை விட்டுள்ளதால், 25 ஆயிரம் மரக்கன்றுகளை பிசிசிஐ நட இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cw8nz1ywq3jo




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் மேடைகளில் பீத்திக் கொள்ளவும் கவிஞரகள் கவிதை  எழுதவும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் மட்டுமே உதவியது.  உரிய நேரத்தில் புத்திக்கூர்மையான அரசியல் முடிவுகளும் அதையொட்டிய ராஜதந்திரமுமே தமிழ் மக்களை மற்றய இனங்களுக்கு ஈடாக வாழ வைக்கும்  துரதிஷரவசமாகஅதை இதுவரை எவருமே செய்யவில்லை. 
    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.