Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வடபகுதி கடலில் ஆபத்தானவை சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்!

பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன்.

கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது.மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குள் உள்ளே கொண்டு வரக்கூடிய ஒரே சிவில் அமைப்பாக தமிழ் சிவில் சமூக அமையும்தான் காணப்படுகிறது.எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அந்த சந்திப்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும்,சந்திப்புக்கு அழைக்கப்பட்ட கட்சிகளிலும் சிலர் பங்குபற்ற வில்லை.புளொட் இயக்கத்தின் தலைவரும் டெலோ இயக்கத்தின் தலைவரும் அங்கு வந்திருக்கவில்லை. புளொட் இயக்கம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை அனுப்பியிருந்தது. சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவும் வந்திருக்கவில்லை. சுமந்திரன் வந்திருந்தார்.மாவை சேனாதிராஜா வந்திருந்தார். விக்னேஸ்வரன் வரவில்லை, அருந்தவபாலனை அனுப்பியிருந்தார்.சுரேஷ் பிரேமசந்திரன்,ஐங்கரன்நேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வந்திருந்தார்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை தலைவரும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளின் ஆசிரியர்களும் தமிழ் பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளை எழுதுபவர்களும் அங்கே வந்திருந்தார்கள்.

மேற்படி சந்திப்பின் நோக்கம் பேச்சுவார்த்தைகளை இலக்காகக் கொண்டு ஒரு நிபுணர் குழுவை உருவாக்குவது ஆகும்.

பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும்,அக்கட்டமைப்பானது கட்சிகளில் மட்டும் தங்கியிராமல் கட்சிகளுக்கு வெளியே புதுஜீவிகள், கருத்துருவாக்கிகள்,சமூகப் பெரியார்கள், சமயப் பெரியார்கள், செயற்பாட்டாளர்கள் போன்ற பல தரப்புகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.சந்திப்பின் முடிவில் அவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சிகளோ அல்லது கட்சி பிரமுகர்களோ தனி ஓட்டம் ஓடுவதை தடுப்பது மேற்படி சந்திப்பின் உள்நோக்கம் ஆகும். தமிழ் மக்கள் ஒரு தரப்பு என்ற அடிப்படையில் ஒரு தேசம் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும் என்றும், எனவே ஒரு தேசத்துக்குரிய கட்டுமானம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை திட்டமிடவும் ஒழுங்குபடுத்தவும் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.அக்கருத்தை அங்கு கூடியிருந்த பெரும்பாலான அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பதன் பொருள்,தமிழ் தரப்பு இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்கிறது என்பது அல்ல.சுமந்திரன் கூறுவது போல ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களையும் வெளிநாடுகளையும் ஏமாற்றுவதற்காக ஒரு பட்டத்தை வானில் விட முயற்சிக்கிறார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர் பட்டம் விடுகிறாரோ இல்லையோ தமிழ் மக்கள் அதற்காக அண்ணாந்து பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க தேவையில்லை. ரணில் வருவார் போவார் அவரைப் போல எத்தனையோ தலைவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் வந்து போய்விட்டார்கள்.ஆனால் எல்லாத் தலைவர்களும் தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். எனவே அந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் சிங்கள தலைவர்களை எதிர்கொள்ளவும், அவர்கள் விரிக்கும் சூழ்ச்சி வலைகளை அறுத்து எறியவும், அவற்றை அனைத்துலகத்திற்கு அம்பலப்படுத்தவும் தமிழ் மக்களிடம் ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும்.ஒரு தேசம் என்ற அடிப்படையில் தமிழ்மக்கள் அதற்குரிய கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும்.சிங்களத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு விசுவாசமாக இருக்கலாம்,இல்லாமல் விடலாம். ஆனால் தமிழ் மக்கள் வெளி உலகத்துக்கு தாங்கள் பேச்சுவார்த்தைக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் ஒரு கட்டமைப்பை வைத்திருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளும் நிரந்தரமானவர்கள் அல்ல. இன்றைக்கு இருக்கும் மக்கள் பிரதிநிதி நாளை இல்லாமல் போகலாம்.ஆனால் ஒரு தேசமாக தமிழ் மக்கள் தொடர்ந்து இருக்கிறார்கள், இருக்கவும் வேண்டும். எனவே ஒரு தேசம் என்ற அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும். அது அரசியல்வாதிகளில் தங்கியிராமல் சுயாதீனமாக இயங்கும் ஒரு கட்டமைப்பாகவும் இருக்க வேண்டும்.இந்த அடிப்படையில் பேச்சு வார்த்தைகளுக்கான ஒரு சுயாதீனக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கடந்த 11ஆம் திகதி ராஜா கிரீம்ஹவுஸில் நடந்த சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் ஓர் அரசுடைய தரப்பு அல்ல.ஓர் அரசற்ற தரப்பாக இருப்பதனால் தமிழ் மக்களுக்கு ஐநா போன்ற உலகப் பொது மன்றங்களிலும் உரிய அங்கீகாரம் இல்லை.அது மட்டுமல்ல இந்தியா சீனா அமெரிக்கா போன்ற பேரரசுகளும் கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் எப்பொழுதும் கையாளப் பார்க்கும். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் அணுகுமுறை அத்தகையதுதான்.

அண்மையில்கூட இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல்வாதியான வை.கோபாலசாமி ஒரு கேள்வியை எழுப்பிய பொழுது இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அதை காணலாம். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகள் ஒரு இனத்துக்கு என்று வழங்கப்படவில்லை,இலங்கைக்கு பொதுவாகவே வழங்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் இலங்கையை இந்தியா கொழும்புக்கு ஊடாகத்தான் அணுகுகின்றது. கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் இந்தியா கையாள முயற்சிக்கும். கொழும்பில் உள்ள அரசாங்கம் இந்தியாவின் வழிக்கு வரவில்லை என்றால்,தமிழ் மக்களை ஒரு கருவியாக பயன்படுத்தி, கொழும்பைப் பணியவைப்பார்கள். அதுதான் இந்திய-இலங்கை உடன்படிக்கை.எனவே ஓர் அரற்ற தரப்பாக இருப்பதனால் தமிழ் மக்களிடம் ஒரு தேசமாக இருப்பதற்கு தேவையான கட்டுமானங்கள் அநேகமாக இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு கருநிலை அரசை நிர்வகித்தபொழுது அவர்கள் ஒரு தொகுதி கட்டமைப்புகளை உருவாக்கினார்கள்.ஆனால் 2009க்கு பின் அவ்வாறான கட்டமைப்புகள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.

உதாரணமாக வெளிநாடுகளை அணுகுவதற்கு ஒரு வெளியுறவுக் கொள்கை வேண்டும்.வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு ஒரு சிந்தனைக் குழாம் வேண்டும்.வகுக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்துவதற்கு நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு வெளியுறவுக் கொமிட்டி வேண்டும். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக அப்படிப்பட்ட கட்டமைப்புகள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.கடந்த 13ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் ராஜதந்திரிகளோடும் வெளிநாடுகளோடும் அனைத்துலக நிறுவனங்களோடும் இடையூடாடி வருகின்றன.ஆனால் அவ்வாறான ராஜிய இடையூடாட்டங்களுக்கு பொருத்தமான கட்டமைப்புகள் எவையும் எந்த ஒரு கட்சியிடமும் இல்லை.அரங்கில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளும் தனிநபர்களின் ஆங்கிலப் புலமை,ராஜதந்திரப் புலமை என்பவற்றில்தான் தங்கியிருக்கின்றன. ஆனால் வெளியுறவு நடவடிக்கைகள் எனப்படுகின்றவை அதற்கு பொருத்தமான நிபுணர்களைக் கொண்ட கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட கட்டமைப்புகள் எவையும் தமிழ் கட்சிகளிடம் கிடையாது.அதனால் தான் கட்சிப் பிரமுகர்கள் ராஜதந்திரப்பரப்பில் தனியோட்டம் ஓடுகிறார்கள்.

இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ராஜா கிரீம் கவுஸ் சந்திப்புக்கூட பேச்சுவார்த்தைகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சந்திப்புத்தான். அதுவே தவறு. பேச்சுவார்த்தைக்கான ஒரு நிபுணர் குழுவை உருவாக்குவது என்பது,திடீர் ரசத்தை, அல்லது திடீர் தோசையைப் போன்றது அல்ல. அது தேசநிர்மாணத்தின் ஒரு பகுதி. அப்படி ஒரு கட்டமைப்பு இதுவரையிலும் தமிழ்த் தரப்பில் இல்லை என்பது எதைக் காட்டுகிறது?

ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளுக்கு விசுவாசமாக இருக்கிறாரா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை,தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை என்று வரும்பொழுது கொழும்பையும் அனைத்துலக சமூகத்தையும் எதிர்கொள்வதற்கு வேண்டிய தயாரிப்புகளோடு இருக்கிறதா இல்லையா என்பதே இங்கு பிரச்சனை. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதற்கு தேவையான வெளியுறவு கட்டமைப்பைத் தமிழ்த் தரப்பு கொண்டிருக்கிறதா இல்லையா என்பதே இங்கு கேள்வி.

இந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைகளுக்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கு என்று ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்று கடந்த 11ஆம் திகதி ராஜா க்ரீம் ஹவுஸில் கூடிய கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் உடன்பட்டிருந்தார்கள். பேச்சுவார்த்தைகள் 13ஆம் திகதி ஆரம்பமான பின்,அடுத்தகட்ட நகர்வை முன்னெடுப்பது என்றும் சிந்திக்க பட்டது.பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக கடந்த புதன்கிழமை மேலும் ஒரு சந்திப்பு இடம்பெறவிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த சந்திப்பு சர்ச்சைக்குரியதாக மாறியது. அச்சந்திப்பில் அரச தரப்புடன் சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.அதில் ஒப்புக்கொள்ளப்பட்ட  விடயங்களைப்பற்றி பின்னர் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அச்சந்திப்பில் பங்குபற்றவில்லை. விக்னேஸ்வரனின் கட்சியும் கலந்து கொள்ளவில்லை.உரிய முறைப்படி உரிய நேரத்தில் தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று மேற்படி காட்சிகள் தெரிவித்தன.விக்னேஸ்வரன் அதுதொடர்பாக பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.அது ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு அல்ல என்று அரசுத் தலைவரின் செயலகம் தெரிவித்துள்ளது.வரும் 5ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒரு சந்திப்பு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேச்சுவார்த்தைகள் என்று தொடங்கிய பின் அரசாங்கம் ஒரு கட்சியை மட்டும் அழைத்துச் சந்திப்பது ஒரு நல்ல அறிகுறியல்ல.மேலும் எல்லாக் கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தைகளுக்கென்று ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்று தீர்மானித்துவிட்டு ஒரு கட்சி மட்டும் தனியாகச் சென்று அரசுத் தலைவரை சந்தித்தமையும் நல்ல தொடக்கமல்ல. பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதைத்தான் அது உணர்த்துகின்றது.

https://athavannews.com/2022/1317200

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய கட்டமைப்பு எக்காலத்திற்கும் அவசியம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஏராளன் said:

அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய கட்டமைப்பு எக்காலத்திற்கும் அவசியம்.

உண்மை,  பத்தியெழுத்தர்கள், அரசியல் மற்றும் குமுகாலச் செயற்பாட்டாளர்களெனப் பலராலும்  அண்மைக்காலத்திற் சுட்டுப்படும் விடயமாகத் தமிழர்தொடர்பான அரசியற் தீர்வுவிடயங்கள் பூட்டிய கதவினுள் முடங்கக் கூடாதென்பதாகவே இருந்தவருகிறது. இப்படியானதொரு புலமையாளர் குழு பன்முகத்தரப்பினது ஒருங்கிணைவில் அமைக்கப்படுவது அவசியமானது. காலம் கடந்தாலும் இனிவரும் காலத்திலாவது தனியோட்டங்களையும் சுழித்தோடல்களையும் கட்டுப்படுத்துவதோடு, ஒரு தேசமாகச் சிந்தித்து ஒரு அணியாக நிற்கிறோம் என்பதையும் நாம் இதுபோன்ற கட்டமைப்பின் ஊடாகக் கட்சிகளைக் கடந்து உறுதிப்படுத்தலாம்.

நன்றி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, nochchi said:

உண்மை,  பத்தியெழுத்தர்கள், அரசியல் மற்றும் குமுகாலச் செயற்பாட்டாளர்களெனப் பலராலும்  அண்மைக்காலத்திற் சுட்டுப்படும் விடயமாகத் தமிழர்தொடர்பான அரசியற் தீர்வுவிடயங்கள் பூட்டிய கதவினுள் முடங்கக் கூடாதென்பதாகவே இருந்தவருகிறது. இப்படியானதொரு புலமையாளர் குழு பன்முகத்தரப்பினது ஒருங்கிணைவில் அமைக்கப்படுவது அவசியமானது. காலம் கடந்தாலும் இனிவரும் காலத்திலாவது தனியோட்டங்களையும் சுழித்தோடல்களையும் கட்டுப்படுத்துவதோடு, ஒரு தேசமாகச் சிந்தித்து ஒரு அணியாக நிற்கிறோம் என்பதையும் நாம் இதுபோன்ற கட்டமைப்பின் ஊடாகக் கட்சிகளைக் கடந்து உறுதிப்படுத்தலாம்.

நன்றி

கட்டமைப்பு உருவாக்கம் அவ்வளவு இலகுவாக நடக்காது, ஆனாலும் நடந்தே ஆகவேண்டியது. அதன் பின்பும் அதனை செயலிழக்கச் செய்ய முயல்வார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, ஏராளன் said:

கட்டமைப்பு உருவாக்கம் அவ்வளவு இலகுவாக நடக்காது, ஆனாலும் நடந்தே ஆகவேண்டியது. அதன் பின்பும் அதனை செயலிழக்கச் செய்ய முயல்வார்கள்.

நீங்கள் சுட்டியிருப்பது உண்மை. ஆனால், சில விடயங்கள் ஒரு நகர்வில் நடந்துவிடாது. நடக்கவும் விடமாட்டார்கள். குறிப்பாக அரச புலனாய்வு, அயலகப் புலனாய்வு மற்றும் அரச ஒட்டுண்ணிகளெனப் பெரும் தடைதாண்டல்கள் உள்ளன. ஆனால், இவையனைத்தையும் கடந்து இதுபோன்றதொரு கட்டமைப்பு அமையவேண்டியது அவசியம் என்பதை மக்கள் மத்தியிற் பரவலாக்கம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், எம்மினத்தினத்தினுள்ளே தடையாக இருப்போரை வெளிப்படுத்தல் போன்றனவற்றின் ஊடாகச் சாத்தியமாக்க முயலவேண்டும். 35ற்க்கு மேற்பட்ட ஆயுதப்போராட்ட அமைப்புகள் நின்ற ஒரு களத்திலே ஏற்பட்ட மாற்றம்போல் இலகுவாக அடைய முடியாது. இன்று அரசியல் கட்சிகளும் தனிநபர்க் கட்சிகளாகப் எண்ணிக்கையளவில் ஊதிப் பெருகிவரும் சூழலில், என்றுமில்லாதவகையில் ஒரு புலமையாளர் கட்டமைப்பின் தேவையும் அதிகரித்துள்ளதெனலாம்.  
நன்றி
 

  • Like 1
Posted

ஒருங்கிணைப்பவர்கள் நடுநிலையாக செயற்பட்டால் தான் பலரையும் உள்வாங்க முடியும். ஒரே கொள்கையை  கொண்டிராத கட்சிகள் ஆயினும்  ஏதோ ஒரு வகையில் இணைந்து செயற்பட வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அல்லது வேலைத்திட்டங்களை பிரித்து கொடுத்து செயற்பட வைக்கலாம். ஒருங்கிணைப்பவர்கள் அரசியல் கட்சியை சாராதவர்கள் எனில் பல தரப்பட்டவர்களையும் இணைப்பது இலகுவானது.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார சேவைகளின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.